Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

28வது ஆண்டு கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

Featured Replies

  • தொடங்கியவர்

சுய இன்பதற்கு என்ன ஊளையும் இடலாம் ,இனி நீங்கள் எழுதலாம் ,உந்த கதையெல்லாம் இனி எந்த சந்தையிலும் விற்க முடியாது .

கொலையில் தொடங்கிய போராட்டம் கொலைகளுடன் முடிந்தது .அனைத்து இயக்கங்களும் கொலைக்கார்கள் தான் ஆனால் ஆனால் புலிகளை அடிக்க ஆட்கள் இல்லை .  

அங்கால வியாபாரம் இங்கால புழுகு மற்ற பக்கம் தேசியம் .

இப்படியே பிழைப்பு போகுது .

  • கருத்துக்கள உறவுகள்

:D தலை இடிக்குது மருது வாசிச்சு! மேலே கோசான் கூறியிருக்கும் ஒப்பீட்டைப் பார்த்தீர்களா? புலிகளின் மற்றைய தண்டனைகளைக் கருத்தில் எடுத்தால் அருணாவுக்குக் கிடைத்தது மயிலிறகால் அடிப்பது போல இல்லையா? சில சமயங்களில் தவறுகளை ஏற்றுக் கொள்வது தான் நாற்பதினாயிரம் பேருக்குச் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்!

அருனாஇட்கு கிடைத்த தண்டனை போதுமானது என்று நான் எழுதினேனா ?
 
அதை மாற்றி மாற்றி மாற்றி கதைத்துக்கொண்டு இருக்கலாம் என்றுதானே சொன்னேன்.
அருணாவை சுட்டிருக்கலாம் ...?
அது இறந்தவர்களை மீட்டிருக்குமா ..?
இறந்தவர்களை மீட்காது என்பதானால் அருனாவிட்கு தண்டனை தேவை இல்லை 
என்பது எனது வாதிமில்லை.
காலம் சூழ்நிலை அனுபவன்ம்தான் சட்டங்களை நீதி நியாயங்களை உருவாக்குகின்றது.
ஒடுமொத்த உலகில் இது நடிமுரையாக இருக்கும்போது 
புலிகள் மட்டும் எப்படி மாறுபட்டு இருக்க முடியும் ...??
 
அதே போன்ற கொலைகள் மீண்டும் நடந்திருப்பின் ...
தனி நபர் முடிவு இப்படி ஒரு முடிவை கொடுப்பதை புலிகள் 
தட்டி கேளாது விட்டிருப்பின் 
அதுதான் குற்றம்.
புலிகளே எதிர்பாராது நடந்த ஒன்றை 
அவர்கள் எதிர்கொண்டார்கள் ...
அதில் இருந்துதாம் நாம் சிந்திக்க வேண்டும்.  
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனிதாபிமானம் இதைவிட அதிகமானது.

எத்தனை இராணுவ முகாம்களை புலிகள் தாக்கினார்கள். ஆனால் அதில் எத்தனை சிங்கள இராணுவத்தினர் தமிழர் எவரையும் கொல்லாமலே இறந்து போயிருப்பர்?! வெறும் கூலிக்காக வந்த இவர்களையும் நாம் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை. இதற்கும் புலிகள் வருத்தம் தெரிவித்திருப்பார்கள் என நம்புகிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் வதை முகாம் நடத்தி வகை வகையாக சொந்த மக்களைக் கொன்று குவித்த சித்தார்த்தனுக்கு என்ன தண்டனை..?!

இந்தியப் படைகள் காலத்தில் சகட்டு மேனிக்கு மக்களைச் சுட்டுக்கொன்ற.. மண்டையன் குழு நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை..?!

ஏன் சமீபத்தில் கூட பாடசாலை தண்ணீரில் விசம் கலந்த ஈபிடிபி நடத்திறவைக்கு என்ன தண்டனை..?!

போர்ச்சூழலில் பழிவாங்கலில் எல்லா தரப்பும் ஈடுபடுவது சகஜம்.

அமெரிக்கப் படைகள் எத்தனையோ பழிவாங்கல் தாக்குதல்களில் பொது மக்களை கொன்று குவித்துள்ளது.. அமெரிக்காவின் எந்த தலைவர் அதற்காக தண்டிப்பட்டார்..?!

பிரிட்டன் படைகள்.. அர்ஜின்ரைனாவில்.. போர் செய்த போது பொதுமக்களைக் கொன்றது.. இன்றும் சர்ச்சையாக உள்ளது. அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்..?!

விடுதலைப்புலிகள்.. குறைந்த பட்சம்.. சில சம்பவங்களுக்கு தம்மால் இயன்ற அளவு உள்ளக விசாரணையும்.. தண்டனையும் வழங்கியே வந்துள்ளனர்.

எத்தனையோ மாற்றுக்குழு கொலைகார ஆயுதக் கும்பல்களில் இருந்து படுகொலைகளை நடத்தியவர்கள் இன்று வெளி நாடுகளில் அதை மறைத்து உலாச வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களை யார் தண்டிப்பது..?! 

எப்பவும்.. எல்லாம்.. புலிகளால் தான் கடைப்பிடிக்கப்படனும் என்று எதிர்பார்ப்பது பெரும் அபந்தம். போர்க்கள தவறுகள் நடந்துள்ளதை புலிகளே ஏற்றுக் கொண்டு தான் உள்ளனர். எத்தனை மாற்றுக்குழுக்கள் அதனை ஏற்று மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளன..?!  :icon_idea:

  • தொடங்கியவர்

கந்தன் கருணைப் படுகொலை
1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலை இடம்பெற்றது. இதனைக் ‘கந்தன் கருணைப் படுகொலை’ என்று அழைப்பதுண்டு. ‘கந்தன் கருணை’ என்பது ஒரு காரணப் பெயர். . யாழ்ப்பாணத்தில் ‘அரஸ்கோ’ முதலாளி என்பவரின் ஆடம்பர வீடு நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அரசரட்ணம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது இந்த வீடு. நல்லூர் கோவில் வீதியிலும் ‘கந்தன் கருணை’ என்று பெயரிடப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. இந்த வீடுகள் ஒரு காலத்தில் புலிகளின் அலுவலககமாகப் பாவிக்கப்பட்டு வந்தன. ஆனால் படுகொலைகள் நடைபெற்றது இந்த வீடுகளிலல்ல.இப் படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. அப்போது சிந்தியா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி..ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். அன்றைய தினம் காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவர் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவரே. கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அருணா கொதித்தெழுந்தார். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டார் . ஆனால் கிட்டு மீது குண்டு எறிந்தவர்கள் தீப்பொறி குழுவினர் என்பது பின்னரே தெரியவந்தது

சாத்திரி 

  • கருத்துக்கள உறவுகள்

அருணா அப்போது எந்த முக்கிய பொறுப்பிலும் இருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் கோவிக்காம ஒருக்கா விளங்கப் படுத்தோணும். இந்த தீப்பொறிக் குழுவினர் யார்?

கிட்டுவுக்கு கிரனைட் எறிஞ்சது மாத்தையா குரூப் என்று அரை கழுசான் காலத்தில காதில விழுந்ததா நியாபகம்?

அருணாவுக்கான தண்டனை - நான் நினைக்கிறேன் குழு மனநிலையில் (group mentality) இருந்து பார்பதால்தான் நமக்கு எம் பிழைகளே பிழையாக தெரியாமல் அல்லது எல்லோரும் செய்ததுதான் என்று சொல்ல வைக்கிறது என்று.

இசை கந்தன் கருணையில் கைதிகளாய் இருந்தவர்களை போருக்கு என்று வந்து முகாமில் இருந்து ஆயுதங்களுடன் சண்டையிட்ட ஆமியோடு ஒப்பிடுறார். ஜெனிவா பிரகடனம் கூட போரில் கொல்வதை குற்றம் எனச் சொல்லவில்லை. சரணைவோரை கொல்லுவதையே தடுக்கிறது.

மருது - புலிகள் நீதியை நிலை நிறுத்தினார்களா என்ற கேள்விக்கு, இல்லை அருணா என்ற மகனை காப்பாற்ற புலி என்றதாய் பக்கச் சார்பாக நடந்தது சரிதான் என்று வாதிடுகிறார். தாயே ஆனாலும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்ப்ட்டே இருக்கும் என்பதை மறந்து விட்டார்.

நெடுக்கு - வழமைபோல் எல்லோரும் செய்ததுதான், போரில் இதெல்லாம் சகஜம் என்கிறார். புளொட்டை போல், மண்டையன் குழுவைப்போல், இலங்கை ராணுவத்தைப் போல், கட்டுப்பாடற்ற கொசப்புக் கூட்டமா புலிகளும்? இல்லையே. அவர்கள் ஒரு விடுதலை இயக்கம் அல்லவா? ஒரு நிழல் அரசாங்கம், தன் வலுக்கு ஏற்ற வகையில் கூட நீதியை நிலைநாட்டவில்லை என்றால். அதுவும் ஒரு காட்டாச்சி (anarchy) ஆகத்தானே இருந்திருக்கிறது.

உங்களுக்கே தெரியும், அமைபுச் சாராதவன்நான். இலங்கை பிரச்சினையில் நான் தமிழர் சார்பு நிலை எடுப்பதற்கு நான் தமிழன் என்பது காரணமில்லை. கூட்ட்டிக்கழித்து பார்த்தால் தமிழர் பக்கம் நியாயம் இருப்பதாய் படுவதே நான் இந்த நிலையை எடுக்க காரணம். ஒரு சிங்களவனாய் நான் பிறந்திருந்தாலும் இதே நிலைபாட்டையே எடுத்திருப்பேன் என நம்புகிறேன்.

இந்த புள்ளியில் நிண்டு பார்க்கும் போது - அருணாவால் கொல்லப் பட்டவர்களுக்கும், வெள்ளைகொடி வழக்கில் கொல்லப்பட்டவர்களுக்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இராண்டுமே போர்க்குற்றம். இராண்டுமே ஜெனிவா விதி மீறல். இரண்டையும் தடுக்காத, தண்டிக்காத தலைமைகள் விமர்சனத்துக்கு உரியோரே.

ஆக இப்படி ஒரு தவறை நாம் இழைத்தோம் என்பதை எம்மளவில் ஆவது ஏற்றுக்கொள்வது - நாம் எம்மை நாமே ஏமாற்றாமல் இருக்க உதவும்.

இதை தம்பட்டம் அடித்து வெளி உலகுக்கு சொல்லாமல் இருப்பதில் உள்ள அரசியல் எனக்குப் புரிகிறது. ஆனால் நமக்குள் உரையாடும் போதாவது இதயசுத்தியோடு இருப்போமே.

இந்த திரியை சீராக வைத்திருக்க முயல்வோம். புலிகள், நரிகள், ஓநாய்கள், பூச்சிகள் மண்புழுக்கள் எல்லாம் சேர்ந்ததுதான் காடு. ஒநாய்களே ஆனாலும் அவர்களுக்கும் பேசுரிமை உண்டல்லவா?

தவிர சிதாலேபவும் கையிருப்பு முடிந்து விட்டது :)

  • கருத்துக்கள உறவுகள்

aruna.jpg

aruna-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் கோவிக்காம ஒருக்கா விளங்கப் படுத்தோணும். இந்த தீப்பொறிக் குழுவினர் யார்?

கிட்டுவுக்கு கிரனைட் எறிஞ்சது மாத்தையா குரூப் என்று அரை கழுசான் காலத்தில காதில விழுந்ததா நியாபகம்?

அருணாவுக்கான தண்டனை - நான் நினைக்கிறேன் குழு மனநிலையில் (group mentality) இருந்து பார்பதால்தான் நமக்கு எம் பிழைகளே பிழையாக தெரியாமல் அல்லது எல்லோரும் செய்ததுதான் என்று சொல்ல வைக்கிறது என்று.

இசை கந்தன் கருணையில் கைதிகளாய் இருந்தவர்களை போருக்கு என்று வந்து முகாமில் இருந்து ஆயுதங்களுடன் சண்டையிட்ட ஆமியோடு ஒப்பிடுறார். ஜெனிவா பிரகடனம் கூட போரில் கொல்வதை குற்றம் எனச் சொல்லவில்லை. சரணைவோரை கொல்லுவதையே தடுக்கிறது.

மருது - புலிகள் நீதியை நிலை நிறுத்தினார்களா என்ற கேள்விக்கு, இல்லை அருணா என்ற மகனை காப்பாற்ற புலி என்றதாய் பக்கச் சார்பாக நடந்தது சரிதான் என்று வாதிடுகிறார். தாயே ஆனாலும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்ப்ட்டே இருக்கும் என்பதை மறந்து விட்டார்.

நெடுக்கு - வழமைபோல் எல்லோரும் செய்ததுதான், போரில் இதெல்லாம் சகஜம் என்கிறார். புளொட்டை போல், மண்டையன் குழுவைப்போல், இலங்கை ராணுவத்தைப் போல், கட்டுப்பாடற்ற கொசப்புக் கூட்டமா புலிகளும்? இல்லையே. அவர்கள் ஒரு விடுதலை இயக்கம் அல்லவா? ஒரு நிழல் அரசாங்கம், தன் வலுக்கு ஏற்ற வகையில் கூட நீதியை நிலைநாட்டவில்லை என்றால். அதுவும் ஒரு காட்டாச்சி (anarchy) ஆகத்தானே இருந்திருக்கிறது.

உங்களுக்கே தெரியும், அமைபுச் சாராதவன்நான். இலங்கை பிரச்சினையில் நான் தமிழர் சார்பு நிலை எடுப்பதற்கு நான் தமிழன் என்பது காரணமில்லை. கூட்ட்டிக்கழித்து பார்த்தால் தமிழர் பக்கம் நியாயம் இருப்பதாய் படுவதே நான் இந்த நிலையை எடுக்க காரணம். ஒரு சிங்களவனாய் நான் பிறந்திருந்தாலும் இதே நிலைபாட்டையே எடுத்திருப்பேன் என நம்புகிறேன்.

இந்த புள்ளியில் நிண்டு பார்க்கும் போது - அருணாவால் கொல்லப் பட்டவர்களுக்கும், வெள்ளைகொடி வழக்கில் கொல்லப்பட்டவர்களுக்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இராண்டுமே போர்க்குற்றம். இராண்டுமே ஜெனிவா விதி மீறல். இரண்டையும் தடுக்காத, தண்டிக்காத தலைமைகள் விமர்சனத்துக்கு உரியோரே.

ஆக இப்படி ஒரு தவறை நாம் இழைத்தோம் என்பதை எம்மளவில் ஆவது ஏற்றுக்கொள்வது - நாம் எம்மை நாமே ஏமாற்றாமல் இருக்க உதவும்.

இதை தம்பட்டம் அடித்து வெளி உலகுக்கு சொல்லாமல் இருப்பதில் உள்ள அரசியல் எனக்குப் புரிகிறது. ஆனால் நமக்குள் உரையாடும் போதாவது இதயசுத்தியோடு இருப்போமே.

இந்த திரியை சீராக வைத்திருக்க முயல்வோம். புலிகள், நரிகள், ஓநாய்கள், பூச்சிகள் மண்புழுக்கள் எல்லாம் சேர்ந்ததுதான் காடு. ஒநாய்களே ஆனாலும் அவர்களுக்கும் பேசுரிமை உண்டல்லவா?

தவிர சிதாலேபவும் கையிருப்பு முடிந்து விட்டது :)

அருனாஇட்கு கிடைத்த தண்டனை போதுமானது என்று நான் எழுதினேனா ?
 
அதை மாற்றி மாற்றி மாற்றி கதைத்துக்கொண்டு இருக்கலாம் என்றுதானே சொன்னேன்.
அருணாவை சுட்டிருக்கலாம் ...?
அது இறந்தவர்களை மீட்டிருக்குமா ..?
இறந்தவர்களை மீட்காது என்பதானால் அருனாவிட்கு தண்டனை தேவை இல்லை 
என்பது எனது வாதிமில்லை.
காலம் சூழ்நிலை அனுபவன்ம்தான் சட்டங்களை நீதி நியாயங்களை உருவாக்குகின்றது.
ஒடுமொத்த உலகில் இது நடிமுரையாக இருக்கும்போது 
புலிகள் மட்டும் எப்படி மாறுபட்டு இருக்க முடியும் ...??
 
அதே போன்ற கொலைகள் மீண்டும் நடந்திருப்பின் ...
தனி நபர் முடிவு இப்படி ஒரு முடிவை கொடுப்பதை புலிகள் 
தட்டி கேளாது விட்டிருப்பின் 
அதுதான் குற்றம்.
புலிகளே எதிர்பாராது நடந்த ஒன்றை 
அவர்கள் எதிர்கொண்டார்கள் ...
அதில் இருந்துதாம் நாம் சிந்திக்க வேண்டும்.  

அருணா புலிகளால் தண்டிக்கபட்டார் தளபதி நிலையில் இருந்தவரை போராளியே இல்லாது ஆக்கினார்கள்.
அருணா மாவீரர் பட்டியலிலேயே சேர்க்க படவில்லை.
அவரையும் சுட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறலாம் ....
ஆம் சுடிருக்கலாம் ....... உங்களை எப்போதும் உங்கள் அம்மா பாதுகாக்கத்தான் செய்வார்.
 
இதை மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
 
அங்கே 28 பேர் இருந்தார்கள் எனபதை புலிகள்தான் வெளிபடுத்தினார்கள்.
அது ஒரு அவாமான செயல் என்பது புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
 
ஓநாய்களின் ஊளையிடுவது .....
இதுதான் முதல் தடவை அல்ல 
அவர்களுக்கு இவர்கள் உயிர் முக்கியமல்ல .... இவர்கள் உயிரை மதித்திருந்தால் இந்திய இராணுவத்துடன் வந்து அப்பாவி இளைஞர்களை 
கேவலாமாக கொன்று இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்காக் கடந்த 28 வருடத்தில் இந்த ஓநாய்கள் செய்தது என்ன ?
 
இந்த ஓநாய்களின் கவனம் எல்லாம் மாவீரர் நாளில்தான் 
அதை எய்த்துபோக செய்து ஒரு விஷ நாளை உருவாக்க வேண்டும் என்பதுதான் 
ஓநாய்களின் நீலி கண்ணீர்.
கார்த்திகை 27இல் தாயக கனவுடன் இறந்த அனைத்து போராளிகளையும் மக்களையும் நினைவு கூறிய தமிழன் வருகிறான்.
1989இல் தலைவர் யாவருக்குமகவே பொதுநாளாக அதை அறிவித்து மாவீரர் அறிக்கையும் விட்டார்.
எனது சகோதரர் ஒருவரின் (டெலோ) நினைவாகவே நான் மாவீரர் நாளுக்கு செல்வதுண்டு 
பின்பு போர்தொடர பல உறவுகள் ஒன்றாக படித்த நண்பர்கள் என்று இப்போ பல நூறு பேர்கள். 
 
முதலில் ஓநாய்கள் ......
உமாமகேஷ்வரன் தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்களை தாட்டவர்கள் 
எல்லோருக்குமாக முதலில் ஒரு பொது அஞ்சலியை செய்ய சொல்லுங்கள்.
அந்த பட்டியலை முதலில் வெளியிட்டு பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள்.
மற்றதை மக்கள் செய்வார்கள்.
 
மக்களுக்கு நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியும்.
மக்கள் சோபா சுத்தியின் புத்தகம் படித்து தெரிந்துகொள்ள தேவையில்லை 
எல்லாம் அவர்கள் கண்முன்தான் நடந்தது.
புலிகள் விட்ட பிழைகள் காரணங்கள் மக்களுக்கு தெரியும் 
ஓநாய்கள் ஊளையிட்டு யாரும் ஏதும் அறிந்ததாக 30 வருடத்தில் ஒன்றும் இல்லை.
 
நாளைக்கு இன்னொரு திரியில் ஓநாய்கள் வந்து எழுதும் ...
மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் மக்கள் முடிவெடுப்பார்கள் என்று.
அப்ப பொத்திக்கொண்டு இருக்கலாமே ......?
மக்கள் முடிவு எடுப்பர்கள்தானே.
 
40 ஆயிரம் தன்னலமற்ற தமிழ் உயிர்கள் தங்கள் உதிரத்தால் வரைந்த 
புலிக்கொடியையும் ........
அவர்கள் நினவு நாளையும் இல்லாது போக செய்ய இந்த ஓநாய்கள் ஊளையிடுவது.
உங்களுக்கு புரியாமல் இருப்பது வேடிக்கை.
 
இந்த ஓநாய்களை நாங்கள் பக்கத்தில் படுத்திருந்து பார்த்தவர்கள்.
ஊளை இடுவது  தமிழனிடம் சுட்டு பறிப்பது தவிர்த்து 
இதுவரை செய்தது என்று ஏதும் இல்லை.
வவுனியா மண்ணில் தமிழின் இரத்த வாசம் இன்னமும் உறைந்து கிடக்கிறது. 

மிகவும் தெளிவான அற்புதமான கருத்து. மிக்க நன்றி மருதங்கேணி. 
நான் சொல்ல நினைத்ததை மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

இனி வாறமாதம் ரஜனி தினகரனவை கொண்டுவந்து வாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பார்கள்.

(யார் சுட்டது என்பது உலகிற்கே தெரியும். ஆமியின் கக்குசுக்குள் இருந்தவர்களுக்கு ஊரில் நடந்தது தெரிய வாய்ப்பில்லை)

அதுமுடிய 2மாதம் போக இன்னொரு ...... ....

புலிகள் கொண்டுபோகாவிட்டல் கம்பஸ் மாணவர்களே சரிகட்டி இருப்பார்கள்.

அதை வைச்சு இழுப்பார்கள்.

இந்த மூன்றும்தான் 30 வருட போரில்

........ தெரிந்தது.

என்ன மனித நேயம்

என்ன நீதி ...

உடம்பெல்லாம் கூசுது !

நியானி: சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

யார் செய்தாலும் தவறு தவறுதான். நெற்றிகண்ணை காட்டினாலும் குற்றம் குற்றம்தான். 
புலிகள் தவறே செய்யாத மஹான்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். தவறுகள் செய்தார்கள்தான். 
ஆனால் புலிகள் இயலுமானவரையில் நேர்மையாக நடந்து கொண்டார்கள். புளொட்டில் இருந்தவர்களுக்கு 
புலிகளின் பெயரை உச்சரிக்கும் தகுதியே கிடையாது. நெடுக்கர் சொன்ன மாதிரி புளொட் செய்த அநியாயங்களை 
பட்டியலிட்டால் ஒவ்வொரு நாளும் நினைவு நாள் அனுஷ்டிக்க வேண்டிவரும். 
 
ஒரு முறை ஒரு காதல் விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்திய புலிகளின் குணபால் சம்பந்தப்பட்ட அந்த பொடியனை 
சுடப்போவதாக வெருட்ட அவன் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கில் தூங்கி தற்கொலை செய்துவிட்டான். 
உடனடியாக விசாரணை நடத்திய புலிகள் குணபாலை இயக்கத்திலிருந்து விலத்தி பணிஸ்மென்ற் காம்புக்கு பண்ணை வேலை 
செய்ய அனுப்பினார்கள். தண்டனை காலம் முடிந்த பின் வீடு திரும்பிய குணபால் தனது காதலியை கர்ப்பமாக்கியது தொடர்பாக 
புலிகள் விசாரணைக்கு அழைக்க குணபால் கொழும்புக்கு தப்பியோடி வெளிநாடு செல்ல முயல ஒரு லொட்ஜில் வைத்தது குணபாலை மடக்கிய அரச புலனாய்வு துறை குணபாலை தலையாட்டியாக வைத்து பல புலிகளை தலை நகரில் அமுக்கியது
(எனது புலி நண்பர் உட்பட).
 
ஆனால் புலிகளுக்கு பெரும் பணதட்டுபாடு நிலவியதால் பெரும்பாலும் புலிகளுக்கு பெரும் பண உதவி புரியும் செல்வந்தர்கள் செய்யும் சிறு தவறுகளை புலிகள் கண்டும் காணாமல் விட்டதுண்டு (பெண்கள் தொடர்பான மைனர் விளையாட்டுகள், பண கொடுக்கல் வாங்கல்கள், காணி பிரச்சினைகள், பாஸ் கொடுக்கும் விடயம்). உதாரணமாக ஷப்றா யூனிக்கோ என்கிற பெயரில் யாழ் மக்களின் பணத்தை கொள்ளையிட்ட உதயன் சரவணபவன் கோஷ்டியை பெரும் தொகை பணம் பெற்ற பின் புலிகள் அந்த விடயத்தை கண்டு கொள்ளாமல் விட்டார்கள். பணம் கொடுத்தவர்களுக்கு வயது கட்டுப்பாட்டை மீறி பாஸ் கொடுத்தார்கள். இதெல்லாம் போராட்டத்தின் தீவிரத்துடன் ஒப்பிடும்போது பெரிய விடயங்களா என்பது விவாதத்திற்குரியது. இதையெல்லாம் விமர்சிக்கும் அருகதை நிச்சயமாக புளொட்டுக்கு கிடையாது.  :D  :icon_idea:

அருணா அப்போது எந்த முக்கிய பொறுப்பிலும் இருக்கவில்லை

இல்லை நந்தன். நீங்கள் சொல்வது தவறு. :o
புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த சாத்திரியார் அருணா முக்கிய பொறுப்பில் இருந்ததாக சொல்வதால் நீங்கள் அதை நம்பிதான் ஆகவேண்டும். :D
இங்கு சாத்திரியார் சொல்வது தான் வேத வாக்கு.  :lol:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தலைப்புக்களின் உண்மை நோக்கம் நினைவுக்கூறுதல் அல்ல.

பழையதை கிளறி விட்டு.. புலிகளை பற்றிய தங்கள் வாந்தி எடுப்பை.. தொடர்ந்து நகர்த்திக் கொண்டு... சுய இன்பம் காண்பதே.

எல்லா அமைப்புக்களை காட்டிலும் தவறுகளுக்காக அதிகம் நீதியை நிலைநாட்ட முற்பட்ட இயக்கம் விடுதலைப்புலிகள் தான். அது தேசிய தலைவரின் கொள்கையும் கூட. 

இயக்கத்தை விட்டு ஓடினதுக்கள்.. வெளியேற்றப்பட்டதுகள் தான்.. இப்ப வெளிநாட்டில வந்திருந்து கொண்டு.. இயக்க வரலாறு என்று எதை எதையோ எழுதி சுய விளம்பரம் செய்து கொண்டிருக்குதுகள். அதுகளுக்கு தெரியும் எப்படி எழுதினால்.. மாற்றுக்குழுவும் சேர்ந்து கைதட்டும் என்று. 

காத்து வாக்கு கதைகளை வைச்சு வரலாறு எழுதுபவர்களே இங்கு அதிகம்.  :lol:  :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலி காசை வாங்கிக் கொண்டு சில விடயங்களில் நெகிழ்வை காட்டியதற்கு காரணம் தமது உறுப்பினர்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊடுருவ, செயற்படவே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நியாயம் பேசுவோம்

தப்பை  ஏற்போம் என்போருக்கு...

புலிகளைப்பயங்கரவாதிகள்

அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள்

முள்ளிவாய்க்காலில் நாம் நினைத்ததை நடாத்திமுடித்தோம்

இது தான் அவர்களுக்கான சரியான தீர்ப்பு என அர்யூன் அண்ணா தொடர்ந்து எழுதிவருகிறார்

இதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

ஏற்றுக்கொள்ளாது விடில்

அவற்றை அவர் இங்கு ஒவ்வொருமுறையும்எழுதும் போதும்

நியாயம் தர்மம் பக்கசார்பு பார்த்து இங்கு நீங்கள் ஏன் எதுவும் எழுதவில்லை.

இவருடைய இது போன்ற கருத்துக்களை  நீங்கள் ஏற்காதுவிடின் என்னைப்போல

ஒரே ஒரு காரணம் தான்

இது போன்ற கந்தன் கருணைக்கொலை

ராகிணி கொலை என அர்யூன் அண்ணை 40 வருடமாகக்கொண்டு திரிவதற்கு காரணம்

வெறும் பழிவாங்கல் உணர்வு மட்டுமே.

அதன் உள் நோக்கம் புலிகளைப்பயங்கரவாதி என தான் கூறித்திரிவது சரி என உலகமெல்லாம் நிறுவ மட்டுமே....

இதற்கு ஒரு போதும்  நான் உடந்தையாக இருக்கமாட்டேன்.

நீங்க....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அருனாஇட்கு கிடைத்த தண்டனை போதுமானது என்று நான் எழுதினேனா ?

அதை மாற்றி மாற்றி மாற்றி கதைத்துக்கொண்டு இருக்கலாம் என்றுதானே சொன்னேன்.

அருணாவை சுட்டிருக்கலாம் ...?

அது இறந்தவர்களை மீட்டிருக்குமா ..?

இறந்தவர்களை மீட்காது என்பதானால் அருனாவிட்கு தண்டனை தேவை இல்லை 

என்பது எனது வாதிமில்லை.

காலம் சூழ்நிலை அனுபவன்ம்தான் சட்டங்களை நீதி நியாயங்களை உருவாக்குகின்றது.

ஒடுமொத்த உலகில் இது நடிமுரையாக இருக்கும்போது 

புலிகள் மட்டும் எப்படி மாறுபட்டு இருக்க முடியும் ...??

அதே போன்ற கொலைகள் மீண்டும் நடந்திருப்பின் ...

தனி நபர் முடிவு இப்படி ஒரு முடிவை கொடுப்பதை புலிகள் 

தட்டி கேளாது விட்டிருப்பின் 

அதுதான் குற்றம்.

புலிகளே எதிர்பாராது நடந்த ஒன்றை 

அவர்கள் எதிர்கொண்டார்கள் ...

அதில் இருந்துதாம் நாம் சிந்திக்க வேண்டும்.

அருணாவை விசாரித்துத் தண்டனை பொதுவெளியில் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் இது நடந்த காலத்தில் புலிகள் கரந்தடிப்படையாகவே இருந்தார்கள். நிர்வாகக் கட்டமைப்பு முளைவிடத் தொடங்கியிருந்தாலும் முழுமை பெற்றிருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்த காலத்தில் பல மின்கம்ப மரணதண்டனைகள் உள்ளூர் புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சரியான விசாரணையின்றி நிறைவேற்றப்பட்ட சில மின்கம்ப மரணதண்டனைகளால் குற்றம் செய்யாதவர்களும் கொல்லப்பட்டிருந்தனர். இவை பற்றி காரசாரமான விவாதங்களும், கேள்விகளும் நடந்ததை அறிந்திருக்கின்றேன்.

புலிகள் சிவில் நிர்வாக நடைமுறைகளைக் கையாண்ட தொண்ணூறுகளில் வன்னியிலிருந்து வவுனியாவுக்குச் செல்லக் காத்திருந்த ஒருவரின் மரணத்திற்குக் காரணமான புலிப் போராளியை பொதுமக்களின் முன்னிலையே சுட்டுத் தண்டனை கொடுத்தார்கள் என்று அறிந்தேன். வரிசையில் நின்றவர்களை ஒழுங்காக நிற்கச் செய்ய மிரட்டும் பாணியில் தடியால் இந்தப் போராளி அடித்திருக்கின்றார். அடிவிழுந்ததாலோ அல்லது வேறு உடல்கோளாறு காரணமாகவோ அடிவாங்கிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். விசாரணை முடிந்து ஒரு வாரத்தின் பின்னர் அப்போராளிக்கு மக்கள் முன்னினையில் தண்டனை கொடுத்தனர். இதன் பின்னர் அரசியல்துறைப் போராளிகள் பொதுமக்கள் மேல் கைவைக்கவே பயந்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நியாயம் பேசுவோம்

தப்பை  ஏற்போம் என்போருக்கு...

புலிகளைப்பயங்கரவாதிகள்

அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள்

முள்ளிவாய்க்காலில் நாம் நினைத்ததை நடாத்திமுடித்தோம்

இது தான் அவர்களுக்கான சரியான தீர்ப்பு என அர்யூன் அண்ணா தொடர்ந்து எழுதிவருகிறார்

இதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

ஏற்றுக்கொள்ளாது விடில்

அவற்றை அவர் இங்கு ஒவ்வொருமுறையும்எழுதும் போதும்

நியாயம் தர்மம் பக்கசார்பு பார்த்து இங்கு நீங்கள் ஏன் எதுவும் எழுதவில்லை.

இவருடைய இது போன்ற கருத்துக்களை  நீங்கள் ஏற்காதுவிடின் என்னைப்போல

ஒரே ஒரு காரணம் தான்

இது போன்ற கந்தன் கருணைக்கொலை

ராகிணி கொலை என அர்யூன் அண்ணை 40 வருடமாகக்கொண்டு திரிவதற்கு காரணம்

வெறும் பழிவாங்கல் உணர்வு மட்டுமே.

அதன் உள் நோக்கம் புலிகளைப்பயங்கரவாதி என தான் கூறித்திரிவது சரி என உலகமெல்லாம் நிறுவ மட்டுமே....

இதற்கு ஒரு போதும்  நான் உடந்தையாக இருக்கமாட்டேன்.

நீங்க....

இது என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம். இவை தான் பதில்கள் :D :

1. அர்ஜூன் சொல்வது போல புலிகள் அழிக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள் அல்ல! அவர்கள் எங்களுக்காகப் போராடிய விடுதலைப் போராளிகள்! பயங்கரவாதிகள் அல்ல! அவர்களின் அழிவு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

2. நான் அர்ஜூனின் மிகையான புலி எதிர்ப்புக்கு நேரம் இருந்த வேளைகளில் எல்லாம் எதிர்த்துக் கருத்துச் சொல்லியிருக்கிறேன். எல்லாக் கருத்துகளுக்கும் பதில் தராமல் இருந்திருக்கலாம், அது நான் காணாததால் இருந்திருக்கலாம், கள்ள மௌனம் அல்ல!

இதெல்லாம் தாண்டி, ஒரு தவறை எங்களுக்கிடையே பேசும் போதாவது சரியா தவறா என்று தீர்மானிக்கும் நேர்மை எங்களுக்கு இருக்க வேண்டும்! அது இல்லா விட்டால், ராஜபக்ஷக்கள் தவறே செய்யவில்லை என்று வாதிடும் சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்! நான் அந்தச் சிங்களவனாக மாறப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் சிறி அண்ணை கருத்து வைக்கவில்லை.. ஆனால் இன்னொரு திரியில் இதுக்குப் பொருத்தமான ஒரு கருத்தை வைத்துள்ளார்.. :rolleyes:

http://www.yarl.com/forum3/index.php?/topic/155227-வேதாகமத்தில்-வரலாற்று-முரண்பா/#entry1097546

Spoiler
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்

:D தலை இடிக்குது மருது வாசிச்சு! மேலே கோசான் கூறியிருக்கும் ஒப்பீட்டைப் பார்த்தீர்களா? புலிகளின் மற்றைய தண்டனைகளைக் கருத்தில் எடுத்தால் அருணாவுக்குக் கிடைத்தது மயிலிறகால் அடிப்பது போல இல்லையா? சில சமயங்களில் தவறுகளை ஏற்றுக் கொள்வது தான் நாற்பதினாயிரம் பேருக்குச் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்!

இதைத்தானே மனுசர் காலம் காலமாக சொல்கின்றோம் .

தவறு எவர் விட்டாலும் தவறுதான், அதை உணராமல் தாம் செய்ததவறுகள் அத்தைனையம் நியாயப்படித்திக்கொண்டு வாழ முனைகின்றோம் .

சிறிதோ பெரிதோ மாற்று இயக்கங்களில் இருந்தவர்கள் தாம் விட்ட பிழைகளை என்றோ ஒப்புக்கொண்டுவிட்டார்கள் .வெளியில் தெரியாத பல விடயங்களை அவர்களே கொண்டுவந்தும் இருக்கின்றார்கள் .

அந்த மனப்பாங்கு புலிகளுக்கோ  புலி ஆதரவாளர்களுக்கோ  இருக்கவில்லை வெளியில் இருந்தவர்கள் அதை எடுத்து சொல்லியிருந்தால் சிலவேளை புலி அவற்றை நிறுத்தி அழிவில் இருந்து தப்பி கூட இருக்கலாம் .ஆதரவாளர்கள் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிஞ்சிஞ்சா போட்டு தமது வயிற்றை வளர்த்தவர்கள் . 

கந்தன் கருணை படுகொலை மட்டும் அல்ல அமிர், ரஜனி, நீலன்,கேதிஸ் கொலைகள் ,முஸ்லீம்கள் வெளியேற்றம் என்று ஒவ்வொரு வருடமும் புலிகள் செய்த அராஜகங்கள் நினைவு கூரப்படவேண்டும் .யாழில் இல்லாவிடாலும் எங்காவது நினைவு கூரப்படும் 

--------------

நியானி: சீண்டும் கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

1) இல்லை. புலிகள் எம் பிள்ளைகள், சகோதர்கள்,சகோதரிகள். எம்விடுதலைக்காக கடைசிவரை போராடினார்கள். அவர்களின் நோக்கமும் 75% செயல்பாடும் ஒரு விடுதலை இயக்கத்துக்குரியது. ஆனால் அவர்களின் 25% செயல்பாடு ஒரு பயங்கரவாத அமைப்புக்குரியது.

2)அர்யூன் அண்ணா வை எதிர்தும் எழுதியுள்ளேன். ஏன் எப்போதும் எழுதுவதில்லை ? காரணம் அவர் ஒரு திசை மாறிய இயக்கதில் முன்பு இருந்தாலும் - தனிபட்ட ஆளாக, புளொட் வழி தவறிய போது அதை தடுக்க முனைந்தார் என்று தெரிகிறது. புலிகள் பற்றிய கருத்துக்களில் அவரின் கோபத்தை நீக்கிப் பார்தால் ( என்னால் அது முடிகிறது ) பல நியாயங்கள் இருக்கிறன. எல்லாவற்றுக்கும் மேலாக புளொட்டை அவரே விமர்சிக்கிறார்.

3) நம்மை தவிர புலியை உலகம் முழுதும் பயங்கரவாதி என்றே நம்புகிறது. இதை அர்ஜூன் யாழில் எழுதி உலகம் அறிய வேண்டியதில்லை. இது பழிவாங்கும் உணர்வு என்றால். மாவீரர் தினமும், கறுப்பு ஜூலையும், சத்துருக்கொண்டான் படுகொலையும் இன்னும் நாம் நினைவுகூறும் எல்லாம் சிங்களவன் மீதான பழிவாங்கும் உணர்வா? இல்லை. இப்படி எம்மத்தியில் இருந்து இறந்தவர்களையே - அவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்தும், அருணா செய்தது பிழை எனத்தெரிந்தும் - செத்தவத்வர்கள் எல்லம் கொள்ளையர்கள் என்று அபாண்டம் சொல்லி, அவர்களை நினைவு கூறுவதையே தடுக்கும் நாங்கதான் - மாவீரரை நினைவு கூற விடாமல் தடுப்பது அநியாயம் என்று சொல்கிறோம்.

நியாயம் எல்லோருக்கும் எபோதும் ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.