Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா வருகிறார் - உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்

Featured Replies

பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா வருகிறார்.உணர்ச்சி பாவலர்  காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை :

இலண்டனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவரது பாட்டு கச்சேரி பற்றி எதையும் நான் சொல்லப்போவதில்லை.

ஆனால் என்னைக் களங்கப்படுத்தும் வகையில் இந்தப் பாட்டுக் கூட்டமும், கச்சேரி ஏற்பாட்டாளர்களும் பேசி வருவதாக அறிந்து வருந்துகிறேன்.

1960 ஆம் ஆண்டு நான் ஆதித்தனார் ஐயா தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தில் இயங்கிய நாட்களில் எனது தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடத்தொடங்கியவர் செல்லப்பா. இன்று வரை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எனது பாடல்களை பாடியே அவர் மக்கள் முன் அறிமுகமானார். அதனாலேயே "செல்வந்தர்" செல்லப்பா ஆனார். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் சிங்கள வெறிப்படையால் தேடப்பட்டு தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு நானும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரே படகில் தமிழ்நாட்டிற்கு கடல் தாண்டி வந்தோம். அப்போதுதான் ஆதித்தனார் அவர்களின் பழைய தொண்டர்கள் சிலரை சென்னையில் ஒரு சின்னஞ்சிறிய அறையில் பூட்டி தலைவருக்கு நான் அறிமுகம் செய்துவைத்தேன். செல்லப்பா அவர்களில் ஒருவராக இருந்தார். தலைவருக்கு செல்லப்பாவை நான் தான் அறிமுகம் செய்துவைத்தேன்.

பின்னாளில் தலைவரோடு பேசி செல்லப்பா தமிழீழம் செல்லவும், பாடவும், உலகெல்லாம் சுற்றவும், பாடவும் ஏற்பாடு செய்தேன். அவரை எமது விடுதலை இயக்கத்திற்காக பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தேனே தவிர வேறில்லை.

பாட்டுக்கார செல்லப்பாவிற்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்ததற்கான காரணத்தை இதுவரை பாரறிய பறைசாற்றியதில்லை. இன்று நான் களங்கப்படுத்தப்படுவதால் ஏன் அவரோடு கருத்துவேறுபாடு கொண்டேன் என்பதைச் சொல்லியாகவேண்டும். 17 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பா “என்னுடைய மருமகன் வறுமையில் இருக்கிறார் கடை வைத்துப் பிழைக்க உதவுங்கள் – காப்பாற்றுங்கள்” என்று என் முன் கண்ணீரோடு வந்து நின்றார். சென்னையில் வாழ்ந்த எனக்குத் தெரிந்த தமிழீழ அகதிகள் சிலரிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் நான் கொடுத்தேன்.

இன்று அந்தப் பணத்தின் பெறுமதி ஏறத்தாழ 50 இலட்சம் ரூபா. அகதிகளுக்கு அந்தப் பணம் தேவைப்பட்டபொழுது அவரிடம் அதனைக் கேட்டேன். “தரமுடியாது” என்று மறுத்தார். ஐயா பழ நெடுமாறன் அவர்களிடம் முறையிட்டும் பயனற்றுப்போனது. அந்தக் கடனை திருப்பியடைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

பாட்டுக்கார செல்லப்பாவின் பொய்யான கண்ணீரை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

தமிழீழ அகதிகள் பணத்தை திருடிக்கொண்டு அவர் தமிழீழ விடுதலைப் பணியில் ஈடுபடுவது தவறாக எனக்குப் பட்டது தள்ளியிருங்கள் என்று உறவைத் துண்டித்துக்கொண்டேன். இன்று காசி ஆனந்தனோ அவர் எழுதும் பாடல்களுக்கு பணம் வாங்குகிறவர்தான் என்று இலண்டனில் பாட்டுக்கார செல்லப்பாவின் கூட்டாளிகள் சிலர் என் மீது வசைபாடுவதாக அறிந்தேன் இதனை மறுக்கவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு என்பதாலேயே இந்த அறிக்கையை விடுகிறேன். இல்லையென்றால் வாய் மூடி இருந்திருப்பேன்.

எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்கு முன்பு 1975 இல் என்று நினைக்கின்றேன் சென்னையில் தலைவரும் புலிகளும் வறுமையில் இருந்த காலத்தில் எனது முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டு சேர்த்த பணம் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த முதல் நிதி என்பதையும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இளங்குமரன் (பேபி) செயற்பட்ட காலத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு சிற்றூர்களில் பொதுக்கூட்டங்களை நடாத்தி நான் சேர்த்த பணமே புலிகளின் தொடக்க கால நிதித் ‘திரட்டு’ என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

புலிகளின் பணத்தில் பாட்டுக்கார செல்லப்பா உலகச் சுற்றுலா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அவர் போகாத நாடுகளே இல்லை எனலாம். எல்லா நாடுகளிலும் எனது பாட்டையே பாடினார்.

எந்த நாட்டிலுள்ளவர்களாவது நான் எழுதிய பாடல்களுக்கு எனக்குப் பணம் தந்தார்களா? என்றைக்காவது நாட்டு விடுதலைக்காக எழுதிய பாடல்களுக்கு நான் பணம் வாங்கினேன் என்று யாராவது சொல்வார்களா?

என்னைக் களங்கப்படுத்தாதீர்கள்.

ஆதித்தனார் ஐயா காலத்தில் ஒரு குடிசை கூட இல்லாது வாழ்ந்த பாட்டுக்கார செல்லப்பா விடுதலைப்புலிகளுக்காக நடத்திய உலகச்சுற்றுலாவில் இதுவரை சேர்த்த பணத்தில் சென்னையில் பலகோடி பெறுமதியான மூன்று வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.  அவருடைய குடும்பத்தில் இன்று இரண்டு கார்கள். ஒரு தமிழ்ப் பாடகர் பொருளாதார நிலையில் முயற்சி பெற்று வளர்ச்சி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் மட்டக்களப்பில் என் சொந்த வீட்டில் வாழ முடியாதவனாக வாழ்ந்த வீட்டையும்  இழந்து, நாட்டையும் இழந்து சென்னை வந்து கடவுச்சீட்டு (Passport) பறிக்கப்பட்டவனாய் காவல் சிறையில் வாழ்பவன் போல் நொந்து கிடக்கும் என்னைக் களங்கப்படுத்தாதீர்கள்.

எங்கோ ஓர் இடத்தில் இந்தப் பாட்டுக்கூட்டம் “பாட்டு எழுதுவதில் என்ன இருக்கிறது பாடுகிறவன் தான் பாட்டுக்கு உயிர் கொடுக்கிறான்” என்று கூறியிருப்பதாகக் கூட அறிந்தேன்.

நான் என்னைப் பாரதியோடோ இல்லை பாரதிதாசனோடோ ஒப்பிடுவதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டுக்காக சொல்லுகிறேன் பாரதியாரை விட அவர் பாட்டைப் பாடிய சௌந்தரராஜன் உயர்ந்தவன், பாரதிதாசனை விட அவர் பாட்டைப் பாடிய சுசீலா உயர்ந்தவள் என்கிறவர்களா இவர்கள். சௌந்தரராஜனும், சுசீலாவும் சிறந்த பாடகர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பாரதியையும், பாரதிதாசனையும் விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்றால் அவர்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

 

http://www.pathivu.com/news/39432/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ அந்தக் காலத்தில் இருந்து புலிகள் காலம் வரை... புலவர்கள்.. பாவலர்கள்.. கவிஞர்கள்.. காசுக்கு.. முன்னர் பொற்காசுக்கு பாட்டுப்பாடினது தான் அதிகம்.

 

காசே தான் கடவுள்.

 

குற்றம் பார்க்கில் சுற்றமில்லை.. பெரிய மனசு பண்ணி விடுங்க காசி. அவனவன்.. காட்டிக்கொடுத்து.. கோடி கோடியா கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கான்.. மக்களுக்கு உரிமை பெற்றுத் தாறம் என்று கொண்டு இப்பவும்.. இவர் குறைஞ்சது தன் பாட்டால்.. நாலு பேரை விழிப்புணர்வு படுத்தியற்கு பரிசிலாக அவரின் பொருண்மிய முன்னேற்ற அமையட்டும். நிச்சயம் மக்கள் அதனை வெறுக்கமாட்டார்கள். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே உங்களை வெறுத்து அவர் உங்கள் பாடல்களைப் பாடாமல் இருக்க வில்லை.இவை வெளியில் சொல்லப்பட வேண்டிய விடயங்களே அல்ல. அவர் குடும்பம் தமிழீழ விடுதலைக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் விடுதலைத்தாகம் அணைந்து விடாமல் வைத்திருக்கின்றது. அதற்குக் கூலியாக வைத்திருக்கட்டுமே.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா காசி,

உங்க ரெண்டு பெண்களும் இப்போ லண்டனில் டாக்டர்கள்.

படித்தது இந்தியாவில்.

அவர்களுக்கு மெடிக்கல் சீட் எடுக்க ரோ எப்படி உதவியது என்பதையும், அதுக்கு நீங்கள் கொடுத்த கைமாறையும் சொல்லி விடுங்களேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில் இருவருமே உத்தமர்கள் இல்லை. முன்னர் இவர்கள் தொடர்பில் நாம் கூறியது சபைக்கு ஏறவில்லை. தற்போது தங்கள் தங்கள் வாயாலலேயே கூறுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் காலத்திலேயே இருவரையும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் தான் புதுவை இரத்தினதுரையின் பாடல்களுக்கு விடுதலைப் புலிகள் முக்கியம் கொடுத்தனர்.

என்னைப் பொறுத்த வரை இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளோடு இருந்த நிலையில் அவரது நிலை என்ன என்று தெரியாமலேயே அவரது குடும்பம் வாடிக் கொண்டு இருக்கின்றது.

இவ்வாறான தியாகம் செய்த புதுவை எங்கே? தமிழ்நாட்டில் சொகுசாக இருந்து கொண்டு தம்மையும் தமது குடும்பங்களையும் வளப்படுத்திய இவர்கள் எங்கே?

தற்போது என்ன என்றால் தங்களில் யார் உத்தமர்கள் என்று பறை சாற்ற தமக்கு உரிய ஊடகங்களை பாவிக்கின்றனர்.

பிரச்சினை என்ன எனில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி தொடங்கி இருக்கின்றது. தமிழ்த் தேசியவாதிகளின் கைகளை விட்டு பிறிதொரு வியாபாரியிடம் சென்று இருக்கின்றது.

இது தமிழ்த் தேசியத்தினை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு உள்ளவர்களால் பொறுக்க முடியவில்லை. அந்த தொலைக்காட்சியின் தொடக்க நிகழ்வுக்கு தேனிசை செல்லப்பா வந்ததுதான் பிரச்சினையே.

நகைச்சுவை என்ன எனில் காசி ஆனந்தனின் கட்டுரைகளை தாங்கி வந்த இணையத் தளங்களைப் பார்த்தால் அனைத்துமே புலம்பெயர் புலிகளின் ஆதரவு இணையத் தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குள்ளை கதை கூட்டமைப்பு எம்.பி மார் சிலரை தெரியும். ஒருவரின் மகள் ஏ லெவல் ஓல் எவ். அண்ணை மகளை சட்டு புட்டென இந்தியாவுக்கு அனுப்பி அவர் பெரிய டாக்டராம் ஐரோப்பாவில் என கேள்வி. நாவலர் தனது மகனை ஏட்டிக்கு வைத்து ஏட்டிக்கு போட்டியாக இயக்கம் தொடங்கியது பலருக்கு தெரியாமல் இல்லை.நிறைய சொத்துள்ள ஒரு எம்.பியின் மகன் வவுனியாவையே வறுகி சாப்பிட்டவர். இப்படி நிறைய வரலாறுகள் எழுதலாம். யோ.கர்ணன் என்றவர் கட்டுரை எழுதும் போது இத்தகவல்களையும் (வேறு திரி எனினும்) மறக்காமல் சேர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பாட்டுக்கார செல்லப்பா"

 

"உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்"

 

http://www.pathivu.c...ticle_full.aspx

 

:D

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அநேக எம்பிகளின் பிள்ளைகளும் இந்தியாவில், அநேகமாக டாக்டருக்கு படித்திருப்பார்கள். எல்லாம் றோ ஸ்பான்சர்.

பிரபாவையும் சீவீயையும் தவிர இங்கு எவருக்கும் கை சுத்தமில்லை. இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி வுடுவதுக்கும் நேரம் காலம் தேவை கோசன் பிரபாவையும்  சீவீயையும் ஒரே தட்டில் வைப்பதுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 சீவீ வரும் தேர்தலின் ட்ரம்கார்ட் அதுக்கு என டிராமா போட வைக்கப்பட்டவர் .சீவீ யின் முகத்திரை தண்ணி பிரச்சினையில் கழுவுபட்டுவிட்டது . 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதும் கருத்துக்களைப்பார்த்தால் புரியும்...

இயக்கத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நின்றார்கள் என்று....

 

 

ஒரே சொல்

கிட்டுவே சொன்னது

நாங்கள் ஒன்றும் கடவுள் அன்று...

எல்லாக்குறையும் எமக்குமுண்டு...

 

இதை வைத்துக்கொண்டு தான் போராட்டம்

இவர்களுக்காகத்தான்

இதனூடு தான் போராட்டம்...

 

இப்ப இதை வைத்து கதை எழுதலாம்

இயக்கத்திலிருந்து தள்ளி இருந்தவனுக்கு விடுப்புக்காட்டலாம்

வேறு எதுவுமில்லை

 

இவற்றையெல்லாம் தெரிந்தும் தான் மக்கள் பின்னால் நின்றனர்

உதவினர்

பங்களித்தனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி பிரச்சினையில் கழுவுப்பட்டது உங்கள் தோழர் டக்கியின் 4 ம் தர அரசியல்தான்.

போராடியவர்கள் யாரென்பதும், சீவியை தரக்குறைவாய் நடத்தி அவகாசம் தரமாட்டோம் என அவமானம் செய்தனுப்பி விட்டு,

அடுத்த நாளே பாளிககார வந்தவுடன் 2 நாள் கூட்டி அவகாசம் கொடுத்து, உங்கள் ஆக்கள் செய்த அரசியல் புரியாதோர் மக்களில்லை.

இன்னும் தண்ணீர் பிரச்சினை அப்படியேதான் இருக்கு எங்கே உங்கள் மாணவச் செல்வங்கள்?

எல்லாம் ஒரு போத்தல் பியருக்கு விலை போகும் கூட்டம்.

வடக்கில் பிரபாவுக்கு அடுத்த படியாக மக்கள் ஆதரவு உள்ள தனிப்பெரும் தலைவர் சீவியே!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்படும் கருத்தக்களை விக்கி  அவர்கள் படிக்காமல் இருக்கக்கடவது...

 

ஒன்றில் வெட்கித்தலைகுனிவார்

அல்லது தலைக்கனம் வந்துவிடும்...... :(

 

  • கருத்துக்கள உறவுகள்

பயப் படாதேங்கோ விசுகர்,

சீ வீ, பிள்ளைகள் internship இள வேலைக்குள் போறது,சாரணர் பாசறைக்கு போறது, சுவரில் கிறுக்கியதற்கெல்லாம் யாழில் திரி தொடங்கும் பந்தா பேர்வழியில்லை. எனவே அவர் தலை கனக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தேனிசை செல்லப்பா இப்ப பாட்டுக்காரச் செல்லப்பாஆகிவிட்டார். உணர்ச்சிக் கவிஞர் இப்பவும் தமிழீழம் என்று உசுப்பும் வேலையோடதான் இருக்கின்றார்.

தமிழீழமும், தமிழ்த் தேசியமும் என்று சொல்லி வியாபாரத்திற்கும், பங்கு பிரிப்புக்கும், துரோக முத்திரை குத்துவதற்கும், பிடிக்காதவர்களை அவதூறு செய்வதற்கும் ஒரு கூட்டம் இப்போதும் இருக்கின்றது. இதில் பதிவுதான் முன்னுக்கு நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்துக்காக அழிந்தவர்கள் பலர்.

தமிழ் ஈழம் வாழ வைத்தவர்கள் சிலர்.

இப்போ இந்த சிலர் அந்த பலரை வைத்து, இல்லை விற்றுப், பிழைக்கும் காலம்.

நல்லவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள்,

வாய்ப்பேச்சில், வியாபாரத்தில் வல்லவர்கள் இன்னும் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவை ஏற்படும் போது ஒருவனை 'உயர்த்துவதும்' .... அவனது தேவை அற்றுப்போகும் போது அவனைத் தாழ்த்துவதும்.. தமிழனின் 'சொறிக் குணங்களில்' ஒன்று! :wub:

 

இரத்த உறவுகள் கூட இதற்கு விதி விலக்கில்லை! :icon_mrgreen:

 

நாங்கள் எல்லா மனிதரையும் 'மகாத்மாக்கள்' என நினைப்பது.. எமது தவறேயன்றி.. அவர்களது தவறு அல்லவே!

 

கண்ணதாசனின் வரிகள் மிகவும் அருமையாக... இந்தச் சொறிக்குணத்தைப் பற்றிச் சொல்லுகின்றன!

 

நீ உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டால்.. உலகம் உன்னை மதிக்கும்!

 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் .. உன் நிழலும் கூட மிதிக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அநேக எம்பிகளின் பிள்ளைகளும் இந்தியாவில், அநேகமாக டாக்டருக்கு படித்திருப்பார்கள். எல்லாம் றோ ஸ்பான்சர்.

பிரபாவையும் சீவீயையும் தவிர இங்கு எவருக்கும் கை சுத்தமில்லை. இதுதான் உண்மை.

இத அடிக்கடி மறக்க கூடாது .....
பின்பு நான் சுட்டிகாட்ட நேரிடும்.
அப்போது தொல்லையாக எண்ணாவிட்டால் சரி!
  • கருத்துக்கள உறவுகள்

பயப் படாதேங்கோ விசுகர்,

சீ வீ, பிள்ளைகள் internship இள வேலைக்குள் போறது,சாரணர் பாசறைக்கு போறது, சுவரில் கிறுக்கியதற்கெல்லாம் யாழில் திரி தொடங்கும் பந்தா பேர்வழியில்லை. எனவே அவர் தலை கனக்காது.

 

 

எமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்தால்....

நாங்க இவ்வாறு சொறியும் குணம் உடையவர்கள் என்று சொன்னால் நாங்க விலத்திடுவம்

யாழையும் விட்டு..

 

களவிதிகள்...(எங்களுக்கு மட்டும்)

தனி நபர் தாக்குதல் கூடாது

சக உறுப்பினரை சீண்டுதல் தூண்டுதல் கூடாது

குடும்ப உறுப்பினர்களை திரிகளில் இழுக்கக்கூடாது

நாற்சந்தியில் பதிந்தவற்றை வேறு திரிகளுக்கு கொண்டு திரியக்கூடாது

(கள உறவுகளுக்குள் பகிரப்படும் விடயங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.