Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் சுகுமாரன் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Featured Replies

எல்லா புனிதர்களையும் இங்கு ஒன்றாக சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. ..

தேக்காய் கள்ளன், கசிப்பு காச்சியவன் ,காட்டிக்கொடுத்தவன் உயிர்கள் எல்லாம் உங்களை மன்னிக்க ஆமென்.

  • Replies 60
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குற்றத்துக்கு 

இன்னொரு குற்றம் தீர்வாகாது

மதம்

அரசு

சட்டங்கள்...

மனிதனை நல்வழிப்படுத்தவேயன்றி கொல்ல அல்ல..

ஒருவரைக்கொல்வதென்பது  இவற்றின் ஆற்றாமையும் தோல்வியின் வெளிப்பாடுமேயாகும்....

எய்தவர்கள் இருக்க 

அம்பைக்கொல்லும் வேசதாரிகளின் நாடகம் இது....

நாகரீகம் வளர வளர

மனிதப்பண்புகளும் மனிதாபிமானமும்  வளரவேண்டும்

இவ்வாறான கொலைகளை செய்து வந்த ஆதரித்த பல நாடுகள் 

எப்பொழுதோ இவற்றை நிறுத்திவிட்டமைக்கு இந்த மனிதாபிமான வளர்ச்சியும்

முன்னுதாரணமாக இருக்கணும் என்ற பண்பாட்டு வளர்ச்சியுமே காரணம்...

ஒரு  உயிரின் பெறுமதியை எவரும் அறிவர்

அதிலும் ஈழத்தமிழர்கள்.........?? :(  :(  :(

குற்றமற்றவர், குற்றமுள்ளவர், சரி, தவறு என்பதற்கு அப்பால் ஒருவருடைய மரணத்தில் சுய இன்பம் கொள்வது எந்த மாதிரியான மனோபாவம் என்பது விளங்கவில்லை ????

இது முந்தியே இயக்கங்கள் கசிப்புக் காச்சினவங்களை சுட்டு மின் கம்பங்களில தூக்கேக்கை நான் பயத்திலை கேட்காமல் விட்ட கேள்வி!!

இது முந்தியே இயக்கங்கள் கசிப்புக் காச்சினவங்களை சுட்டு மின் கம்பங்களில தூக்கேக்கை நான் பயத்திலை கேட்காமல் விட்ட கேள்வி!!

பிந்தியே கேட்டாலும் இது ஒருநாள் கேட்கப்படவேண்டிய கேள்வி.

மரணம் நிச்சயமான ஒன்றுதான், இருந்தாலும் இழப்பின் வலி என்னவென்பதை தமிழ் உறவுகள் அதன் அடிவரை சென்று உணந்தவர்கள்.

எல்லா புனிதர்களையும் இங்கு ஒன்றாக சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. ..

தேக்காய் கள்ளன், கசிப்பு காச்சியவன் ,காட்டிக்கொடுத்தவன் உயிர்கள் எல்லாம் உங்களை மன்னிக்க ஆமென்.

உங்களை என்று யாரை குறிப்பிடுகிறீர்கள். உங்களைத் தான் அந்த உயிர்கள் மன்னிக்க வேண்டும்.

அந்தந்த நாட்டு தண்டனைகளை  ஏற்றுக்கொள்ளா விட்ட்டாலும்  சுகுமாரன் உண்மையான குற்றவாளியா?   அவர்  இதை செய்தாரா?

போதைப்பொருள் கடத்தி மற்ற உயிர்களின் வாழ்வை பாழாக்குவது  கடும் குற்றம்..  

ஆனால் தண்டணை பெற்றவர்  நிரபராதியாக இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

புனிதப்போரில் இந்த நிகழ்வும் அடங்குகின்றது. இந்த மரண தண்டனைக்குப் பின்னால் பல இஸ்லாமிய நாடுகள் ஒழிந்திருக்கின்றன.

ஆனால் ஐரோப்பிய  நாடுகளில் போதை வஸ்து வினியோகத்தில் வீதிக்கு வீதி  இஸ்லாமியர்களின் கைகளே ஓங்கி நிற்கின்றன.

இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தோனேசிய அதிபர் தான் இஸ்லாமிய சாரிய சட்டத்தை பின்பற்றுவதாக காட்ட இந்த மரணதண்டனை

புலிகள் போதைப்பொருள் கடத்தினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கா..?! அதில் வந்த பணத்தில் தான் ஆயுதம் வாங்கினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்..?!

சும்மா சிங்களவனும் சில வல்லாதிக்க சக்திகளும் தங்களின் பயங்கரவாதக் கோசத்துக்கு வலுச் சேர்க்க சொல்லும் சோடிப்புக் கதைகளை எல்லாம் புலிகள் மீது கட்டக் கூடாது. புலிகளில் எவரும் போதைவஸ்துக் கடத்தி உலக நாடுகளில் சிறை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் புளொட் ஒட்டுக்குழு ஆட்கள் அதில் பிரபல்யமாக இருந்து சிறைகளிலும் இருந்துள்ளனர். அதுபோல் கனடா ஐரோப்பாவிற்கு ஆட்கடத்தலில் (பின்னர் அவர்கள் அகதிகள் என்று சொல்லி தஞ்சம் அடைவது.) ஈடுபட்டதிலும் இந்த ஒட்டுக்குழு ஆட்களுக்கும் பணம் சம்பாதிக்க விரும்பிய பல தமிழர்களுக்கும் தொடர்புள்ளது. தமிழர்கள் என்பதற்காக அவர்கள் புலிகள் என்று எழுந்தமானமாக குற்றம்சுமத்தி விட முடியாது.

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் ஒரு போர்க்கால நிர்வாகம். அங்க எதிரிகளின் ஊடுருவல்கள்.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவல்கள் பல வடிவங்களில் அமைந்திருந்தன. மேலும் சமூகச் சீர்கேடுகள் எதிரிகளின் இலக்குகளை இலகுவாக்க உதவின. அந்த வகையில் புலிகள் சில கடும் குற்றவாளிகளுக்கு பல எச்சரிக்கைகளின் பின் மரண தண்டனைகள் வழங்கி இருக்கின்றனர். அது மரண தண்டனைகளை எதிர்க்கும் எல்லோரினதும் எதிர்ப்பை சந்தித்தே நின்றது தான். புலிகள் அந்த மரண தண்டனைகளின் ஊடாக தங்களின் நிர்வாகத்தில் சமூக நடத்தையை மேம்படுத்தினார்கள். போதைவஸ்து பாவனையை இல்லாமல் செய்தார்கள். மேலும் தாங்களே மக்களின் முன் முன்மாதிரியாக நின்று காட்டினார்கள். மக்கள் அவர்களின் சமூக நன்னடத்தையை பின்பற்ற வேண்டிய சூழலை அவர்களின் நன்னடத்தை மக்களுக்கு இனங்காட்டியது.

புலிகள் ஊழலை இல்லாமல் செய்தார்கள். அரச ஊழியர்களின் நிர்வாக அசமந்தங்களை இல்லாமல் செய்தார்கள். பாடசாலைகளின் பின் கதவு அனுமதிகளை இல்லாமல் செய்தார்கள். சண்டியன் குழுக்களை இல்லாமல் செய்தார்கள். போதைப் பொருள் பாவனையை அடியோடு இல்லாமல் செய்தார்கள். அங்கீகரிக்கப்பட்ட குடிபான பாவனையையும் குறைக்கச் செய்தார்கள். புகைப்பிடித்தலை தாம் நிறுத்திக் கொண்டு மக்களை குறைக்க வலியுறுத்தினார்கள். இப்படி புலிகள் தாம் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து கொண்டு தான் மக்களிடம் சமூக ஒழுங்கை ஒழுக்கத்தை எதிர்பார்த்தார்கள். அப்படி உலகில் எந்த அரசும் இன்று வரை நடந்து கொண்டதில்லை.

இருந்தாலும் புலிகள் வழங்கிய மரண தண்டனைகள்.. மரண தண்டனை எதிர்ப்பாளர்களிடம்.. மனித உரிமை அமைப்புக்களிடம் கடும் கண்டனங்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின் மரண தண்டனைகளின் எண்ணிக்கையை வெகுவாகவே புலிகளும் குறைத்திருந்தனர். மக்கள் புலிகள் இனங்காட்டிய நிர்வாக.. சமூக ஒழுக்கத்தைப் பின்பற்றி இருந்தால்.. தேசத்தை காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால்.. மரண தண்டனைகள் என்பது புலிகளுக்கு செய்ய வேண்டிய ஒன்றாகவே இருந்திருக்காது.

ஏனெனில்... புலிகளின் தலைமையைப் பொறுத்த வரை முதலில் நான் நல்லவனாக நடந்து கொண்டு மற்றவனுக்கு அதனை இயலுமையை இனங்காட்ட வேண்டும் என்பது தான் கொள்கை.

உலகில்.. இந்தக் கொள்கையோடு எந்த நாட்டில் எந்த நிர்வாகம் இன்றுள்ளது..?! இந்தோனிசிய அரச நிர்வாகத்தில் இழைக்கப்படாத குற்றங்களையா இந்த குற்றவாளிகள் இழைத்துவிட்டார்கள்..?! அமெரிக்க ஜனாதிபதிகள் பதவியில் இருந்த போதே பல பொண்டாட்டி வைத்திருந்தார்கள்... திருமணத்துக்கு அப்பால். அவர்கள் செய்த குற்றங்களை விடவா சாமானிய அமெரிக்கன் அதிக குற்றம் செய்துவிட்டான்..?! புலிகளை இவர்களோடு கிட்டவும் ஒப்பிட முடியாது. உங்கள் ஒப்பீட்டின் அடிப்படையே தவறு. :icon_idea:

ஏன் போராட்டத்தையும் புலிகளையும் கொண்டு வந்து இதனுள் கொச்சை படுத்துகிறீர்கள்?  இதுவரை  எந்த ஒரு தமிழனும் போதை பொருள் கடத்தி ஆயுள் தண்டனை யோ ,மரணதண்டனையோ பெற்றதாக நாங்கள் அறியவில்லை.  இதுவே முதல் முறை சுகுமாரன்,  பிறகு எவ்வாறு  சொல்வீர்கள் புலிகளுக்கு போதைப்பொருள் கடத்தினார்கள் என்று.  நாக்கு எதையும் பேசும் .எங்களை நாங்களே கொச்சைப்படுத்தி காட்டினால்  கொஞ்சம் மேதாவித்தனம் தெரியும் என்று பல தமிழர்கள் நினைக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயூரன் கொலை செய்ய பட்ட செய்தி இன்று காலை எழுந்தவுடன் பார்த்த பொழுது மிகவும் வருத்த பட்டேன். கடைசி நேரத்தில் இந்தோனேசியா அதிபர் மனம் மாற மாட்டாரா என்று வேண்டினேன். ஆனால் அது நடக்க வில்லை. இந்த கொலை மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த உயிர்கள் பறிக்க பட்டதால் இனி இந்தோனேசியாவில் போதை மருந்து பழக்கம் குறைந்து விடுமா?. முட்டாள் மனிதர்கள் பதவியில் இருந்தால் தாய் பாலுக்கும், கள்ளி பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் போல. 

எல்லா புனிதர்களையும் இங்கு ஒன்றாக சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. ..

தேக்காய் கள்ளன், கசிப்பு காச்சியவன் ,காட்டிக்கொடுத்தவன் உயிர்கள் எல்லாம் உங்களை மன்னிக்க ஆமென்.

எதிர்வினையாக கருத்து கூறுவதை முற்போக்கு சிந்தனையாகவும் நடுநிலமையாகவும் நினைத்து கொண்டிருக்கிறீரோ தெரியவில்லை. எந்த விடயத்தை எடுத்தாலும் அதை ஆராயாமல் தன்தோன்றிதனமாக முரண்நகையான கருத்துக்களை வைப்பதே உங்கள் வழக்கமாக உள்ளது.

சரி தவறுக்கு அப்பால் புறநிலைகளின்பால் சாரமால் அறத்தின் பால் நின்று வழங்குவதே  நடுனிலையாகும்.

எழுந்த மானத்தில் ஜெசிக்கா விடயத்தில் விபூசிகாவை இழுத்து பேசினீர்,  அதன் பிறகு விபூசிக்காவை மறந்து விட்டீர். நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள மக்கள் ஒன்றியத்தை பற்றி அவதூறு பரப்பினீர், ஏன் என்று வினவும் போது விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று சொன்னிர்கள், 20 தமிழர்கள் கொல்லப்பட்ட போது தப்பு செய்தவனை தானே கொன்றார்கள் என்று கருத்து போட்டீர்கள், நிச்சயமாக தப்பு செய்தவர்கள் தான்  என்றாலும் அதற்குரிய தண்டனையை விசாரித்து வழங்காமல் தன்னிச்சையாக கொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்போதும் உங்களது பதிவுகளானது அவருக்கு (மயூரன் ) தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதே.

ஆக இங்கு மயூரனின்  இறப்பிற்கு எதிராக வாதிடுபவர்கள் யாரும் போதை வஸ்து பழக்கத்தை ஆதரிப்பவர்கள் அல்ல, சக தமிழன் எனும் முறையில் மேலோங்கும் இனமான உணர்வின் அடிப்படையில் தன் தவறை உணர்ந்த அவருக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கலாம் அல்லது அவரது மரண தண்டனையை ரத்து செய்திருக்கலாம் என்பதே. எவரும் இங்கு போதை பொருள் புழக்கத்தில் விடுவது குற்றமில்லை என்றோ அல்லது தமிழன் எது செய்தாலும் கண்ணை முடி கொண்டு ஆதரிப்பவரோ அல்ல. விதி விலக்காக ஒரு சிலர் இருப்பர். ஆனால் அவர்களை கொண்டு பொது சிந்தனையில் உள்ளவரை ஒரே கோட்டில் நீங்கள் பார்கிறீர்கள்.

இங்கு நீங்கள் செய்வது என்னவெனில் முற்று முழுதாக உங்களை சார்ந்த சமூகத்திற்கு எதிர்ப்பட்டு

நிற்கிறீர். அதன்  பிரதிபலனானது உங்களையே சாரும்,  உங்களது செயல்களும் வார்த்தைகளுமே  சமுகத்தில் கடப்பாடுள்ளவராக மாற்றும், நாளை  உங்கள் பிள்ளைகளும் உங்களிடம் இருந்து இத்தகைய பண்புநலன்களையே கற்று கொள்ளவேண்டும்  மாறாக விரோதத்தை அல்ல.  உங்கள் நலனில் அக்கறை உள்ள சகோதரன் என்று முறையில் இதை சொல்கிறேன். தவறாக தோன்றினால் மன்னிக்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயூரன் விஷயம் முற்றும் முழுதாக தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் மறைத்து விட்டன. மயூரனோ அல்லது மற்ற உறவினர்கள்  தமிழில் கோரிக்கை வைத்து இருந்தால் குறைந்த பட்சம் தமிழன் என்பதற்காக  எதாவது செய்து இருப்பார்கள். இப்பொழுது சொல்லி என்ன பயன். 

Edited by kanna123

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பேரறிவாளனுடன் போய் மயூரனை ஒப்பிடுகிறார்கள்!

புலிகளை கொச்சைப் படுத்த வேறு யாரும் தேவையில்லை - நீங்களே போதும்.

உங்களுக்கு ஹாங்காங் வரலாறு தெரிந்திருக்கும். சீனாவை போர் மூலம் வெல்ல முடியாத பிரித்தானியர் ஓப்பியம் கடத்தி - அதன் மூலம் சீன சமூகத்தையே ஆட்டம் காண வைத்தனர். ஓப்பியத்தால் சீனாவின் கட்டமைப்பே சிதைந்த போது - சீனா போருக்குப் போனது. இந்த "ஓப்பியம் யுத்தத்தின்" முடிவில் ஹாங்கங்கை பெற்றுக்கொண்டு ஓப்பிய கடத்தலை நிப்பாட்டினர் பிரித்தானியர்.

ஒரு அரசின் அடிப்படை கடமை தன் குடிகளை காப்பது. போதை வஸ்து கடத்தி ஒரு நாட்டையே சீர்குலைக்கலாம். அந்த வகையில் இவர்களை தண்டிக்க இந்தோநேசியாவுக்கு பூரண உரிமை உண்டு.

மயூரன் நிரபராதி என்று அவர் தாயார் கூட சொல்லவில்லை. மன்னித்து விடுங்கள் என்றே கேட்டார்கள்.

அப்பாவி டெலோ பையன்களை கண்மூடி தனமாய் சுட்டதை சோடா உடைத்து கொடுத்து வரவேற்ற, இதே யாழ் களத்தில் புலிகள் அப்பாவிகளை கொலை செய்ததை "களை எடுத்தல்" "போர்கால அவசியம்" என்றெல்லாம் சப்பை கட்டு கட்டும் பேர்வழிகள் - ஒரு தூள் கடத்திய கேவலமானவனுக்காக கண்ணீர்வடிப்பது - இந்த வருடத்தின் மிகப்பெரும் முரண் நகை.

நீங்கள்தான் ஜேசுநாதர் என்ற எண்ணம் வந்துவிட்டால் ...............
இதோடு நிற்பாட்ட கூடாது.
 
இன்னமும் இழுத்து விட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
 
புலிகள் கொன்றால்?
 அப்பாவிகள் 
 
இந்தோனேசியா கொன்றால் ?
குற்றவாளிகள் 
 
குற்றவாளிகளை கொல்லலாம்.(இந்தோனேசியாவில)
புலிகள் கொல்ல கூடாது. (யாரையும்)
 
இதவிட  இன்னொரு முரண்பாட்டை நான் கண்டதே இல்லை.
 
புலிகளுக்கு இருந்த இக்கட்டு நிலைமையையும் 
இந்தோனேசிய நாட்டிற்கு இருந்த வசதிகளையும் 
புத்திசாலிதனாமாக மறைத்துவிட வேண்டும்.
(இதில் மட்டும் ஜேசுநாதர் சாதாரண மனிதரிலும் கீழாகி நிற்கிறார்) 

இறுதியாக அனைவருக்கும்  ஆனது  பதில் .

‪#‎உனக்கு_உயிர்_பெறுமதி_தெரியுமா‬ .
(பலர் உள்ளே கேட்ட கேள்வி)

ஈழம் என்னும் நாட்டில் போராட தொடங்கிய தமிழர்களின் உயிர்களை செல்களும் ,விமானக்குண்டுக்ளும் சிதைத்து விட்ட போது சதை குவியல்களை கூட்டி அள்ளிய தலைமுறை நாம் ..

போர்களத்தில் குண்டுபட்டு உயிர் போகும் பொழுதுகளில் மடியில் கிடந்தது கொஞ்ச தண்ணி கொடுங்கடா என்று கேட்டவனுக்கு ,தண்ணி கொடுக்காது செய்வதறியாது திகைத்து நின்ற பொழுதுகள் நினைவில் இன்னும் ...

ஒவ்வெரு இரவும் பகலும் நரக வேதனையுடன் கழித்த எத்தினை குடும்பங்கள் நிலை தெரியும் எமக்கு ,புலிகளின் குரல் செய்தி முடிந்து வீரச்சாவு அறிவித்தல் முடியும் வரை ,இதயத்தில் இரத்தம் ஓடாது நிப்பாட்டி பெயர்களை சரியா கேட்ட எத்தனை அம்மாக்களின் மன வலி உங்களுக்கு தெரிந்திருக்கும் ...

குண்டு சத்தம் செல்சத்தம் இரவில் கேட்டால், எழும்பி சென்று சாமி படத்தில் இருக்கும் திருநீறு பூசிவிட்டு , திண்ணையில் வந்து உக்காந்து மவுனமா அழுத எத்தினை அப்பாக்கள் கதை தெரியும் .....

காலை விடிந்து சூரியன் வரமுன் ஓடிச்சென்று ஈழநாதம் பேப்பர் வாங்கி .அவசரமா வீரச்சாவு அறிவித்தல் பார்த்த உடன் பிறந்த அண்ணன் அக்கா நிலை தெரியும் ...

மச்சான் நேற்று நல்ல அடியாம் நூற்றி இருபது ஆமியாம் செத்து என்று சொல்லி ,மகிழத்த தருணத்தில் எல்லாம் அந்த களத்தில் வீழ்த்த மாவீரர் எத்தனை என்று பார்க்க மறந்தவர் அல்லவா நாம் ......

கொழும்பில சக்கையாம் ஆள் பொட்டில போட்டுதாம் என்று சொன்ன போது ,அதில் சிதறி போனவன் எம் சகோதரன் ஒருவன் அல்லவா என்பது எப்படி தெரியாமல் போனது .......

நாங்கள் இருக்கிறோம் என்று புலிக்கொடி பிடித்து வெள்ளி பணத்தை அள்ளி தருகிறோம் அடியுங்கடா என்று சொன்ன புலம்பெயர்த்த ஈழத்தமிழர் எல்லோருக்கும் ,அங்கு சாவது எங்கள் வீட்டு பிள்ளைகள் என்று அப்பொழுது ஏன் தெரியாமல் போனது ....

இன்று குத்தி முறிந்து மனிதநேயம் பேசும் நீங்கள் எல்லாம் அன்று இதை செய்தது இருந்தால் பல லட்சம் உயிர்கள் இன்றும் இருந்திருக்கும் அல்லவா .....

எதுக்காக சாவு ,யாருக்காக சாவு ,ஏன் எங்கள் பிள்ளைகள் சாகனும் வாழட்டும் என்று அன்று நீங்கள் எல்லாம் எதிர்த்து நின்று இருந்தால் இன்று பேசும் மனிதநேயம் பெறுமதியானது ....

எல்லாவற்றியும் உசுப்பேத்தி கொன்று குவித்து விட்டு இன்று எவனோ ஒருவன் சுடபட்டதுக்கு நீங்கள் எல்லாம் வரிசை கட்டி வந்து நியாய தராசை தூக்கி வைத்து ,உங்களுக்கு இதயம் இல்லையா ,மூளை இல்லையா ,மனித மிருகமா என்று யோக்கியன் வேஷம் போடுவதன் நோக்கம் தான் என்ன ............

படுகொலைகளை பார்த்து கைகட்டி சிரித்த நீங்கள் ,அப்படித்தான் அவனை போடு இவனை போடு என்று ஏவி விட்ட நீங்கள் ஆகவே ,இந்த வேற்று சீன் சினிமா விளையாட்டு எல்லாம் விட்டு உலகில் எவனும் யோக்கியன் இல்லை அதில் நீங்களும் அடக்கம் என்று கொள்ளுங்கள் ...

தேவாங்கு சிரித்த கதையா இருக்கு உங்க கேள்விகள் ,முதலில் நீங்கள் மனிதனா இருங்கள் பச்சோந்தி தனம் இல்லது அந்தர் பல்டி அடிக்காது .

புத்தி சொல்லும் புத்திசாலிகளே முடிந்தால் இதுக்கு பதில் தாருங்கள் .

எதிர்வினையாக கருத்து கூறுவதை முற்போக்கு சிந்தனையாகவும் நடுநிலமையாகவும் நினைத்து கொண்டிருக்கிறீரோ தெரியவில்லை. எந்த விடயத்தை எடுத்தாலும் அதை ஆராயாமல் தன்தோன்றிதனமாக முரண்நகையான கருத்துக்களை வைப்பதே உங்கள் வழக்கமாக உள்ளது.

சரி தவறுக்கு அப்பால் புறநிலைகளின்பால் சாரமால் அறத்தின் பால் நின்று வழங்குவதே  நடுனிலையாகும்.

எழுந்த மானத்தில் ஜெசிக்கா விடயத்தில் விபூசிகாவை இழுத்து பேசினீர்,  அதன் பிறகு விபூசிக்காவை மறந்து விட்டீர். நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள மக்கள் ஒன்றியத்தை பற்றி அவதூறு பரப்பினீர், ஏன் என்று வினவும் போது விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று சொன்னிர்கள், 20 தமிழர்கள் கொல்லப்பட்ட போது தப்பு செய்தவனை தானே கொன்றார்கள் என்று கருத்து போட்டீர்கள், நிச்சயமாக தப்பு செய்தவர்கள் தான்  என்றாலும் அதற்குரிய தண்டனையை விசாரித்து வழங்காமல் தன்னிச்சையாக கொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்போதும் உங்களது பதிவுகளானது அவருக்கு (மயூரன் ) தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதே.

ஆக இங்கு மயூரனின்  இறப்பிற்கு எதிராக வாதிடுபவர்கள் யாரும் போதை வஸ்து பழக்கத்தை ஆதரிப்பவர்கள் அல்ல, சக தமிழன் எனும் முறையில் மேலோங்கும் இனமான உணர்வின் அடிப்படையில் தன் தவறை உணர்ந்த அவருக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கலாம் அல்லது அவரது மரண தண்டனையை ரத்து செய்திருக்கலாம் என்பதே. எவரும் இங்கு போதை பொருள் புழக்கத்தில் விடுவது குற்றமில்லை என்றோ அல்லது தமிழன் எது செய்தாலும் கண்ணை முடி கொண்டு ஆதரிப்பவரோ அல்ல. விதி விலக்காக ஒரு சிலர் இருப்பர். ஆனால் அவர்களை கொண்டு பொது சிந்தனையில் உள்ளவரை ஒரே கோட்டில் நீங்கள் பார்கிறீர்கள்.

இங்கு நீங்கள் செய்வது என்னவெனில் முற்று முழுதாக உங்களை சார்ந்த சமூகத்திற்கு எதிர்ப்பட்டு

நிற்கிறீர். அதன்  பிரதிபலனானது உங்களையே சாரும்,  உங்களது செயல்களும் வார்த்தைகளுமே  சமுகத்தில் கடப்பாடுள்ளவராக மாற்றும், நாளை  உங்கள் பிள்ளைகளும் உங்களிடம் இருந்து இத்தகைய பண்புநலன்களையே கற்று கொள்ளவேண்டும்  மாறாக விரோதத்தை அல்ல.  உங்கள் நலனில் அக்கறை உள்ள சகோதரன் என்று முறையில் இதை சொல்கிறேன். தவறாக தோன்றினால் மன்னிக்க...

இங்கு  நியாயம்  பேசுவது  சரி பிழை  பிடிப்பது  அல்ல எம்  கருத்து  தவறா  இருந்தால்  அந்த  இடத்தில்   உடனமே பேசு  என்னும் நிலையிலே  நான்  வளர்த்தேன்  அவர்  கோவிப்பார் இவர்  கோவிப்பார் என்று  முகத்துக்கு அஞ்சி  எதையும்  சொல்லாது  விட்டு  நீங்கள்  சொலவது  எல்லாம்  சரி  என்று  ஆமா  போட்டு  போகும்  நிலையில்  நாம்  வளர்க்கப்படவில்லை ..

மற்றையது  நீங்கள்  ஈழ  நிலையை சரியா புரியாது  இங்கு  எழுதும்  கருத்துக்கள் தான் உண்மை  நிலை  என்று  புரிந்து  கொண்டு இவர்கள்  சொல்வது   எல்லாம்  உண்மை  என்று  நினைத்து  பேசுவதால் சகோ  உங்களுக்கு  நான்  எப்படி  விளக்கம்  கொடுத்தாலும்  சரியாய்  புரிய போவது  இல்லை ..

அடுத்து  அதை  மீறி  நான் அங்கு  அவர்களில்  திருவிளையாடகள்  பதிய  தொடங்கினால்  யாழில்  தடை  செய்ய்படுவேன் என்றும் தெரியும்  ஆக ஒரு  சிறு  கதைக்கே பொங்கி எழுத்தவர்கள்  உண்மை  பேசினால்  சும்மா இருப்பர்களா ...

ஆக கொலை செய்ய படுத்தல்  என்பது  ஈழத்தில்  இன்று  நடப்பது  போல  இவளவுகாலமும் நடக்க வில்லை  என்பது  ஆக  எல்லோரும்  புனிதர்கள்  ஆவது  தான்   நகைப்பு  எனக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனிசியா மயூரனுடன் போர் செய்தது என்று சொல்லவருகிறார்கள் சிலர். போருக்கும்.. ஒரு சாதாரண நிலையில்.. ஒரு குற்றச் செயலுக்கு கைதாகி.. 10 வருடங்கள் சிறையில் இருந்து.. நன்னடத்தையை காண்பித்த பின்னும்.. அவரை கொலை செய்வதற்கும் வித்தியாசம் உணர முடியாதவர்கள் தான் யாழில் இத்தலைப்பில் விதண்டாவாதம் செய்கின்றனர்.

இன்னொருவர் ரெலோ பற்றி எழுதுகிறார். ரெலோ கெற்றப் போலோட நிற்க அவையை யாரோ போய் சுட்டவை. ரெலோ ஆயுதங்களோடு இன்னொரு இயக்கத்தை கட்டுப்படுத்த நினைக்கல்ல.. அப்படி சண்டை.. எழவில்லை என்பது அவர்களின் கற்பனாவாதம்.  அது போர் தொடர்பான நிகழ்வுகள்.

மனித மரணங்கள் எங்கும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய மனித அரசியல்.. பூகோள ஒழுங்கில்.. இவை சாத்தியமில்லை. குறைந்தது.. திருந்தி வாழப் பிரியப்பட்ட.. மயூரன் போன்றவர்களின் மரணங்களையாவது தவிர்க்கலாம்.. என்றால் அதுவும் முடியவில்லை. இதுதான் இந்த உலகில் மனிதரின் நிலை இன்று. இதனை புரிய சிலருக்கு முடியுதில்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

உங்களுக்கு ஹாங்காங் வரலாறு தெரிந்திருக்கும். சீனாவை போர் மூலம் வெல்ல முடியாத பிரித்தானியர் ஓப்பியம் கடத்தி - அதன் மூலம் சீன சமூகத்தையே ஆட்டம் காண வைத்தனர். ஓப்பியத்தால் சீனாவின் கட்டமைப்பே சிதைந்த போது - சீனா போருக்குப் போனது. இந்த "ஓப்பியம் யுத்தத்தின்" முடிவில் ஹாங்கங்கை பெற்றுக்கொண்டு ஓப்பிய கடத்தலை நிப்பாட்டினர் பிரித்தானியர்.

வரலாற்றை சரியாக தெரியாமல் பேசாதீர்கள்.

சீனர்கள் போதைக்கும் சூதுக்கும் அடிமையானவர்கள் எண்டது உலகறிந்த உண்மை. சீனர்களின் தெயிலை ருசி கண்ட பிரித்தானியர்கள் பண்டமாற்றாக கொடுக்க சீனர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. அதனால் இல்லாத பொருளான ஓபியம் பண்ட மாற்றாக கொடுக்க பட்டு அதற்கு பதிலாக தேயிலை கொண்டு வரப்பட்டது. இது சீன அரசுகளோடு செய்யப்பட்ட வர்த்த உடன்படிக்கைகளூடே செய்யப்பட்டது.

அதுவும் இந்தியா, கென்யா, இலங்கை எண்று தெயிலை தோட்டங்களை உருவாக்கும் வரைக்குமே.

இலங்கை சிங்களவனை தோற்கடிச்சு விடுவீங்கள் போல அண்ணை வரலாற்றை மாற்றுறதிலை.

ஒரு அரசின் அடிப்படை கடமை தன் குடிகளை காப்பது. போதை வஸ்து கடத்தி ஒரு நாட்டையே சீர்குலைக்கலாம். அந்த வகையில் இவர்களை தண்டிக்க இந்தோநேசியாவுக்கு பூரண உரிமை உண்டு.

மயூரன் நிரபராதி என்று அவர் தாயார் கூட சொல்லவில்லை. மன்னித்து விடுங்கள் என்றே கேட்டார்கள்.

அப்படி எண்றால் இந்த கொலைகள் மூலம் இனி ஒரு காலமும் போதை பொருள் இந்தோநேசியாவுக்குள் வராமல் தடுக்க பட்டு இருக்கிறது எண்டுறீயள்..?? என்ன ஒரு அறிவு ...

கிட்டத்தட்ட 2000 வருடங்களாக சவுதி அராபியாவில் மரணதண்டனை இஸ்லாமிய சரியத் சட்டம் மூலம் நடை பெறுகிறது.. அதனால் சவுதி அரபியாவில் குற்றங்கள் இல்லாமல் போய்விட்டதா என்ன..? இல்லை மரண தண்டனைதான் தேவை இல்லையா.?

அப்பாவி டெலோ பையன்களை கண்மூடி தனமாய் சுட்டதை சோடா உடைத்து கொடுத்து வரவேற்ற, இதே யாழ் களத்தில் புலிகள் அப்பாவிகளை கொலை செய்ததை "களை எடுத்தல்" "போர்கால அவசியம்" என்றெல்லாம் சப்பை கட்டு கட்டும் பேர்வழிகள் - ஒரு தூள் கடத்திய கேவலமானவனுக்காக கண்ணீர்வடிப்பது - இந்த வருடத்தின் மிகப்பெரும் முரண் நகை.

அப்பாவி ரெலோ பையன்களா..? ஒருவேளை மாறாட்டம் தலைக்கேறிவிட்டதோ.?

கைகளிலை ஆயுதமே இல்லாமல் தோட்ட வேலை செய்த பெடியளை பிடிச்சு சுட்டதாக எல்லோ கதை விடுகிறீர்கள். ஆயுத முனையிலை ரெலோவினர் புலிகள் வைத்து இருந்த பண்ணைகளை உழவி இயந்திரம் விட்டு அழிச்சதை நாங்கள் கண்டு இருக்கிறம். பல்பொருள் அங்காடிகளை கொள்ளை அடிச்சதையும் பாத்து இருக்கிறம்.

போர் எண்டு ஆயுதத்தை தூக்கி எதிர்வினை கூடாது எண்டால் எப்பிடி..

மேலை சொல்லப்பட்ட மயூரனுக்கும் புலிக்கும் தான் என்ன சம்பந்தம்..? தமிழன் என்பதா.? இல்லை குற்றம் செய்த தமிழர் எண்றால் புலியா.?

Edited by காத்து

  • கருத்துக்கள உறவுகள்

மருது ஒரு முரண்பாடுமில்லை.

புலிகள் due process ஐ பின்பற்றி தமது நீதிமன்றில் தண்டனை கொடுத்திருந்தால், ஒரு கண்துடைப்பு விசாரணீயேனும் செய்திருந்தால் அதை சட்டம் எனலாம்.

ஆனால் புலிகள் செய்தது பகிரங்க விசாரணையில்லாத, பகிரங்க summary executions.

இந்தோனேசியாவில் நடந்திருப்பது நீதிமன்ற விசாரணை. அதுவும் 10 வருடங்கள் அவுசின் முழு அரச ஆதரவு குற்றவாளிக்கு இருந்தது.

மறுபடியும் சொல்கிறேன் மயூரன் குற்றவாளியில்லை என அவரின் தாயாரோ ஆசி அராசோ சொல்லவில்லை. புலிகளால் கொல்லப்ப்பட்ட மற்ற இயக்கத்தவரை அப்படிச் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்பவத்தின் தொடர்நிலைகளை அல்லது அதன் பின்னணியைச் சரியாகப் புரிந்து கொள்வதானது.. பல பிழையான வியாக்கியானங்களைத் தவிர்க்கக் கூடும்!

இந்தக் கடத்தல் சம்பவம் பற்றிய தகவலை..அவுஸ்திரேலிய போலிசுக்குகே கொடுத்தவரே, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரின் தந்தையே ஆவார்! ஒரு 'யாழ்ப்பாண வாத்தியாரின்' மன நிலையில் அவர் இதைச் செய்திருந்தாலும், அவுஸ்திரேலிய போலிஸ் இந்தத் தகவலை, இந்தோனேசிய சுங்கப் பிரிவினருக்குத் தெரிவிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை!

இன்று அவரது நேர்மை.. அவரது மகனையே.. மரண தண்டனைக்குக் கொண்டு செல்கின்றது! :o

இது சம்பந்தமான 'செனேட்' விசாரணை'  அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது!

சிங்களத்தின் 'காடைத்தனமான' நடத்தை போன்ற கருத்துக்களும்.. அதாவது 'அகதிகள்' வள்ளங்களை அவுஸ்திரேலியா நோக்கித் திருப்பினால் அவுஸ்திரேலிய அரசு.. இந்தோனேசியாவுக்கு அடி பணிந்து போகும் என்ற கருத்தானது நகைப்புக்கு இடமானது!

இந்தோனேசியாவின் சனத்தொகை , அவுஸின் சனத்தொகையை விடவும் பத்து மடங்கு அதிகமானதுடன் அதனது பொருளாதாரம் அவுஸின் பொருளாதாரத்தின் அரை மடங்கானது!

எனது கணக்குப் படி... அவுசுடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியாவின் பொருளாதார பலம்.. ஐந்து வீதமானது என்று வருகின்றது!

ஒருவர் களவெடுத்து இருந்தால், அவரது கைகள் வெட்டப்பட வேண்டும் எனில்... எனக்கு இப்போது கைகள் இருக்காது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காத்து - தேயிலைக்கு மாற்றாக ஓப்பியத்தை கொடுப்பதை சீனா எதிர்த்த போதே யுத்தம் வந்தது.

அதை ஓப்பியம் வோர் என்பார்களே ஒழிய தேயிலை வோர் என்பதில்லை. நுனிப்புல் மேயாமல் வரலாற்றை கூகிளில் தேடாமல் படித்து பாருங்கள் புரியும்.

இந்தோனேசிய ராணுவ பலத்துடன் அவுசை ஒப்பிட்டால் - அவுஸ் ஒரு சுண்டங்காய்தான். எதோ அண்ணன் தம்பி பலத்தில வெள்ளை கொள்ளையர்கள் கறுப்பு மக்களின் ஊரில், பிராந்தியத்தில் நாட்டாமை செய்யினம்.

இந்தோநேசியா, ஜப்பான் பிலிபைன்சில் ஒரு கடும்போக்கு அரசுகள் வந்தால் - எல்லோரும் ஊரப் பக்கம் கிளம்ப வேண்டியதுதான்.

அபொர்ஜினிகளின், மண்ணை, இருப்பை வளத்தை கொள்ளை அடித்து வாழும் நாட்டில் ஒரு பயலுக்கும் கை இருக்க கூடாது :)

நான் களவு எடுத்ததில்லை, தூளும் கடத்தியதில்ல.

அதனால்தானோ என்னமோ எனக்கு மயூரனின் அப்பா போல் கோபம் வருகிறது.

நீங்கள் சொல்வது உண்மையாயின் சுகுமார் ஒரு இந்தியன் தாத்தா - ஒரு நிஜ வாழ்க்கை ஹீரோ.

மயூரனுக்கு பரிந்து பேசும் கூட்டுக் களவாணிகளுக்கு இந்த உயர்ந்த மனிதர் ஒருபோதும் புரியப்போவதில்லை.

Sugumar is a great human being ! Hats off to him.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான்...!

அவுஸின் பிரச்னையை அவுஸ் பார்த்துக்கொள்ளும்! நீங்கள் ஒண்டும் குத்தி முறியத் தேவையில்லை! அவுஸ் அமெரிக்காவின் வாலில் தொங்குவதே.. தன்னைக் காத்துக்கொள்ளத் தானே! :D

அபோரிஜினது மண்ணை வெள்ளை அபகரித்ததுக்குத் துள்ளுகின்ற நீங்கள்.. ஏன் தமிழனது மண்ணைச் சிங்களம் அபகரிக்கும் போது.. தூக்கிக் குடுக்கிறீர்கள் என்பது தான் எனக்கும் புரியாது உள்ளது!

களவு என்று வரும்போது.. அது ஒரு பென்சில், தேங்காய், அல்லது பனங்காய் என்று எடுத்தாலும் அது களவு தானே! :D

களவு என்று வரும்போது.. அது ஒரு பென்சில், தேங்காய், அல்லது பனங்காய் என்று எடுத்தாலும் அது களவு தானே! :D

புங்கை,

பேனா பென்சில் களவெடுப்பதும் போதைப் பொருள் விற்பனை கூட்டத்தின் தலைவராக இருப்பதையும் (Ring leader) ஒரே தராசில் வைத்தா பார்க்கின்றீர்கள்?

போதைப் பொருள் வியாபாரிகளின் முதலும் முக்கியமுமான இலக்காக அமைவது பதின்ம வயதை அடைந்த  பாடசாலை மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் தான். இவர்களின் இலக்கு அநேக நேரங்களில் இளவயது ஆட்களாகத்தான் அமைகின்றன. தான் மிகவும் செல்வந்தராக வருவதற்கும், ஆடம்பரமாக வாழ்வற்கும் ஒரு சமூகத்தினையே சீரழிக்கின்றவர்களும் சாதாரண திருடர்களும்  உங்கள் கணக்கில் ஒன்றாக வருகின்றனரா?

மரண தண்டனை கூடாது என்றால் பின்வருகின்றவர்களை மன்னித்து கொஞ்ச கால சிறைத்தண்டனையின் பின் சமூக நீரோட்டத்தில் கலக்க வைக்க வேண்டும் என்கின்றீர்களா?

1. இரண்டு மூன்று வயதுக் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்து கொல்கின்றவர்கள்

2.  பாகிஸ்தானில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து குழந்தைகளை இலக்கு வைத்து நூற்றுக்கும் அதிகமான சிறார்களை சிதறடித்தவர்கள் மற்றும் இவ் தாக்குதலை திட்டமிட்டவர்கள்

3. உயிர் ஒன்றுக்காக மற்ற எல்லாவற்றையும் இழந்து சரணாகதி அடைந்தவர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகள்

இப் பட்டியலில் இன்னும் பலரை இணைக்க முடியும். இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது?

என்னைப் பொருத்தவரைக்கும் மன்னிப்பு என்பது மிகவும் புனிதமானது. ஆனால் இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதால் மன்னிப்பு களங்கப்பட்டு விடும் என்று தான் நம்புகின்றேன்

நிழலி.. அது 'கோஷானுக்காக' எழுதியது!

தான் இதுவரையும் ஒரு களவும் செய்ததில்லை என்று எழுதியிருந்தார்! அதனால் தான் அந்த உதாரணத்தைக் காட்டினேன்!

நீங்கள் கூறிய பாரதூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குத் 'திருந்தும் சந்தர்ப்பங்களை' அளித்தும் முன்னேற்றம் எதுவும் இல்லாது விடினும், மன நோய்கள் ஏதும் இல்லாதவிடத்தும், அவர்களை மன்னிப்பதில் பலன் இல்லை என்னும் உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்!

மரண தண்டனையின்றி.. அவர்களை வேறு வகையில் நிரந்தரமாகச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்க வேறு வழிகள் இல்லாதவிடத்து.. மரண தண்டனை பற்றிச் சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன்!

காத்து - தேயிலைக்கு மாற்றாக ஓப்பியத்தை கொடுப்பதை சீனா எதிர்த்த போதே யுத்தம் வந்தது.

அதை ஓப்பியம் வோர் என்பார்களே ஒழிய தேயிலை வோர் என்பதில்லை. நுனிப்புல் மேயாமல் வரலாற்றை கூகிளில் தேடாமல் படித்து பாருங்கள் புரியும்.

ஓபியம் போருக்கு காரணம் ஓபியத்துக்கு சீன அரசு விதிச்ச அதிகப்படியான சுங்கமும் தீர்வையை குறைக்கும் ஒப்பந்ததிலை சீன அரசு கையெழுத்து போடாததாலை துறைமுகத்திலை தரிச்சு நிண்ற கப்பல்களை வெளியிலை கொண்டுவர நிகழ்ந்த போர் எண்டு எல்லோ நான் கேள்விப்பட்டன் நீங்கள் புது வரலாறு சொல்லுறீயள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.