Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு! வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

Featured Replies

sampoor%20444.jpg

 

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால கையெழுத்திட்டார் என்று சுமந்திரன் எம். பி.மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, திருகோணமலை சம்பூர் பகுதியில் அமைந்துள்ள விதுர கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்படை வசமிருக்கும் 237 ஏக்கர் காணியை விடுவித்து அதனைப் பொது மக்களுக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அரச திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் வேறு இடங்களில் மிகவும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பாதுகாப்பற்ற வீடு, கல்வி கற்பதற்கு பொருத்தமற்ற சூழல், சுகாதாரமற்ற வாழ்க்கை என பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த பத்து வருடங்களாக இத்தகைய துன்பங்களுக்கு இம்மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசு பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளது. 237 ஏக்கர் காணிகளை விடுவித்து அதனைப் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
இந்நிலையில், குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 579 குடும்பங்கள் மீள்குடியேற முடியும். குறித்த மீள்குடியேற்றத்தை ஆறு மாதத்துக்குள் செய்து முடிப்பதற்கு எண்ணியுள்ளோம். இதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 120 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சினி குறிப்பிட்டிருந்தார். மேலும், மீள்குடியேறவுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வளத்தைக் கட்டியெழுப்பவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். நன்கொடையாளர்கள், விவசாய அமைச்சு, மீன்பிடி அமைச்சு மற்றும் வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளை நாடியிருக்கின்றோம். எனவே, கூடிய விரைவில் சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் வாழுவதற்கான சூழ்நிலை உருவாகும் என்றார்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலுக்கு வீசப்படும் எலும்பு துண்டுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

579 குடும்பங்களின் மீள்குடியேற்றம் என்பது நல்லதொரு செய்தி! தேவையற்ற குரைப்புக்களைக் கணக்கில் எடுக்காது செயலாற்றுவது வரவேற்கத் தக்க விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதியை மைத்திரி காப்பாற்றுகிறாரா என பார்க்கலாம். இவர் வாக்குறுதியை காப்பாற்றுவாராயின் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராவார். 

மைத்திரி என்ற தனி ஆள் ஒரு சிறந்த மனிதனாகத்தான் தெரிகின்றார் ஆனால் அவர்களின் கூட்டு நல்லமில்லை .. ரணில் ஒரு நரி .... அதனால் தான் கவலையாக உள்ளது ...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ்மக்கள், தங்கள் நாட்டு அரசுகளுக்கு கொடுத்த.... அழுத்தத்தின் வெற்றி இது.

தங்களின் ராஜதந்திரம் என்று, உள்ளுர் அரசியல் வாதிகள் பினாத்தப் பார்ப்பார்கள் கவனம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்படும் : கிழக்கு ஆளுநர்

 

sampoor-300x136.jpg

 

சம்பூர் விதுர கடற்படை பயிற்சி முகாமை வேறு இடத்துக்கு மாற்றி அங்குள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்தார்.

 
237 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விதுர கடற்படை பயிற்சி முகாமை 180 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
விதுர கடற்படை முகாம் அமைந்திருக்கும் பகுதியில் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவேண்டியுள்ளது. எனவே அங்குள்ள முகாமை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை பொதுமக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். ஆறு மாத காலத்துக்குள் முகாமை வேறு இடத்துக்கு மாற்றமுடியும்.
 
“வெளிநாட்டு அழுத்தத்தின் பெயரில் முகாம் அகற்றப்படுவதாகவும், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புலிகளுக்கு நாட்டை விற்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண ஆளுநர், சம்பூர் பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவித்து மக்களை மீளக்குடியமர்த்துவது என்பது புதிய அரசாங்கத்தின் திட்டம் அல்ல. கடந்த அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதி. முன்னைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியையே தாம் நிறைவேற்ற முயல்வதாகவும் கூறினார்.
 
இந்த நடவடிக்கையின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. கடற்படைமுகாம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலும் திருகோணமலை கடற்படை முகாமின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கும்.
 
“பல ஆண்டுகளாக சம்பூரில் உள்ள மக்கள் தகரக் கொட்டகைகளுக்குள் மழைக்குள்ளும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடாதா?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
 
இந்த மக்களை மீள்குடியேற்றிய பின்னர் அவர்களுக்கு உதவ புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் முன்வரவேண்டும் என தான் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.
 

புலம்பெயர் தமிழ்மக்கள், தங்கள் நாட்டு அரசுகளுக்கு கொடுத்த.... அழுத்தத்தின் வெற்றி இது.

தங்களின் ராஜதந்திரம் என்று, உள்ளுர் அரசியல் வாதிகள் பினாத்தப் பார்ப்பார்கள் கவனம்.

அப்படியே அழுத்தத்தை கொடுத்து ஐ .நா விசாரணை அறிக்கையையும் வெளிவரச்செய்திருக்கலாமே  :)  :icon_idea:

வரும் தேர்தலுக்கு வீசப்படும் எலும்பு துண்டுகள் .

டக்கி யிடம் பொறுக்கி முடிந்து ,இப்ப விஜயகலா  வீசுறாவாம் பொறுக்குங்கோ  :icon_idea:

டக்கி யிடம் பொறுக்கி முடிந்து ,இப்ப விஜயகலா  வீசுறாவாம் பொறுக்குங்கோ  :icon_idea:

எங்கட சம்பந்தனும் சுமந்திரனும் அந்த அரசியலை தானே இப்ப பின் பற்ற சொல்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

அந்த மக்களின் சீரழிந்த வாழ்வுக்கு கிடைத்த பெரும் ஒத்தடம்...

எவர் மூலம் செய்யப்பட்டிருந்தாலும்....

அரிசியானால் சரி..

செய்தவர்கள்  போற்றப்படவேண்டியவர்களே..

நன்றி ஐயாக்களே...

வாழ்க  வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி யிடம் பொறுக்கி முடிந்து ,இப்ப விஜயகலா  வீசுறாவாம் பொறுக்குங்கோ  :icon_idea:

கருத்துக்கு கருத்து வைச்சு பழகணும் முக்தி அடைய நீண்ட காலம் இருக்கு உங்களுக்கும் உங்கள் குருநாதர்களுக்கும் :D  :icon_idea: இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலை சம்பூருக்கு விடுதலை ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்குது புதிய சொறிலங்கா அரசு. நீங்க என்னடா என்றால் தமிழீழமே கிடைச்ச மாதிரி சௌண்டு குடுக்கிறது, முதலில் அவ்விடத்து மக்களுக்கு நின்மதி கிடைத்தது சந்தோசமே .இதே சம்பந்தன் நல்லது செய்தால் நானே லண்டனில் காவடி எடுப்பன். அது நடக்காத விடயம் அந்த துணிவில் துல்லுகின்றன் .  :D

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

சம்பூர் காணிக்கான உடன்படிக்கை ஜனாதிபதியால் இரத்து

 

article_1431086698-98.jpg

 
முதலீட்டு சபையினால் முதலீட்டு திட்டம் ஒன்றுக்காக கையகப்படுத்தப்பட்டிருந்த சம்பூரில் உள்ள காணிப்பகுதிக்கான உடன்படிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரத்துச்செய்யப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி பத்திரத்தில் ஜனாதிபதி நேற்று மாலை கைச்சாத்திட்டார்.
இதனையடுத்து குறித்து காணி இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

அந்த மக்களின் சீரழிந்த வாழ்வுக்கு கிடைத்த பெரும் ஒத்தடம்...

எவர் மூலம் செய்யப்பட்டிருந்தாலும்....

அரிசியானால் சரி..

செய்தவர்கள்  போற்றப்படவேண்டியவர்களே..

நன்றி ஐயாக்களே...

வாழ்க  வளமுடன்.

ஊமி தேவைக்காகவும் சிலர் இப்போ குத்துகிறார்கள் 
அவர்கள் எறிந்துவிட்டு போகும் மீதியை 
நாம் அரிசி என்று துள்ளி குதிக்கிறோம்.
 
நாம் இருக்கும் நிலையில் இதை விட்டால் 
துள்ள வேறு ஏதும் இல்லை.
இது குத்துபவர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கு. 

கருத்துக்கு கருத்து வைச்சு பழகணும் முக்தி அடைய நீண்ட காலம் இருக்கு உங்களுக்கும் உங்கள் குருநாதர்களுக்கும் :D  :icon_idea: இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலை சம்பூருக்கு விடுதலை ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்குது புதிய சொறிலங்கா அரசு. நீங்க என்னடா என்றால் தமிழீழமே கிடைச்ச மாதிரி சௌண்டு குடுக்கிறது, முதலில் அவ்விடத்து மக்களுக்கு நின்மதி கிடைத்தது சந்தோசமே .இதே சம்பந்தன் நல்லது செய்தால் நானே லண்டனில் காவடி எடுப்பன். அது நடக்காத விடயம் அந்த துணிவில் துல்லுகின்றன் .  :D

எனக்கு எப்பொழுதும் நானே தான் எஜமான் :D  நீங்கள் பண்பாக கருத்தெழுதினால் நாங்களும் எழுதுவம் ,எப்பொழுது பரந்தன் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததோ அப்பொழுதே தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் .உங்களைப்போன்றவர்கள் தான் இப்பொழுது தேசம் எடுத்து தாறவர்களின் பேச்சிலை மயங்கி என்னென்னவோ பிதற்றுகின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

 

ஊமி தேவைக்காகவும் சிலர் இப்போ குத்துகிறார்கள் 
அவர்கள் எறிந்துவிட்டு போகும் மீதியை 
நாம் அரிசி என்று துள்ளி குதிக்கிறோம்.
 
நாம் இருக்கும் நிலையில் இதை விட்டால் 
துள்ள வேறு ஏதும் இல்லை.
இது குத்துபவர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கு

 

 

3 விடயங்கள் இருக்கு  கவனத்தில் எடுக்க..

 

ஒன்று - எமது குறி

இரண்டு- நாம் கொடுத்தவிலை

மூன்றாவது  - இன்றைய களநிலை..

 

கருத்துக்களத்தில் முதல் இரண்டிற்கும்

மூன்றாவதுக்கும் தான் இழுபறி..

எனக்கு அதில் எந்த  இழுபறியும் இல்லை

களம் பற்றிய தெளிவான தகவல் இருப்பதால்..

பாளுங்கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் எனது உறவுகளுக்கு 

ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் நல்ல செய்தி என்பேன்..

அதற்காக இது ஒரு படிக்கல் என்றெல்லாம் சொல்லமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பு எல்லாம் அமோகமாத்தான் இருக்குது. ஆனால்.. நியத்தில எதுவும் நடந்ததா தெரியல்லையே. இதுவும் நல்லாட்சியின் புஸ்வாணம் தானா...?! :lol::D:icon_idea:


இதுகளை மறைக்கிற விதத்தைப் பார்த்தா.. உந்த அறிவுப்புகளுக்குள்  உள்நோக்கம் இருக்கும் போல..

 

SL Minister, backed by CBK, appropriates Tamils’ lands in Batticaloa

 

[TamilNet, Thursday, 07 May 2015, 22:56 GMT]

 

Sri Lankan Deputy Minister of Housing and Samurdhi Amir Ali Sahabdeen, who became a minister during the regime of Chandrika Bandaranaike Kumaratunga (CBK) in 2004, is again stepping up the appropriation of lands at Kirimichchi, located 62 km north of Batticaloa. The lands belong to Eezham Tamils who are still uprooted and refused access to these lands, civil sources at Koara’laip-pattu North (Vaakarai) division of Batticaloa told TamilNet on Thursday. The land grab, schemed under CBK regime, aims to annex more lands to the Muslim-dominated division of Koara’laip-pattu Central (Vaazhaich-cheanai) by involving a section of wealthy businessmen from Kaaththaan-kudi, Oadda-maavadi and Ea’raavoor after Amir Ali became a non-cabinet minister in the ‘new’ regime with the backing of CBK, the sources further said.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37762

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு அழுத்தங்களினாலும் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. எது எப்படியோ இது ஒரு நல்ல செய்தி.எமது மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற விட்டால் போதும். பலம்பெயர்ந்தவர்களின் உதவிகளை நீங்கள் கேட்டு அவர்கள் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவுவார்கள். ஆனால் வெளிநாட்டு உதவிகளில் நீங்கள் ஆட்டையைப் போட்டு விடாதீர்கள்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.