Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப வலய நாடுகளில் இத்தகைய குற்றங்கள் நடப்பது அதிகம் என்றே நினைக்கிறேன். அமெரிக்க கண்டத்திலும் இதனைக் காணலாம். மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகளில் காணப்படும் வன்முறை அளவு கனடாவில் காணப்படுவதில்லை.

இவ்வளவு ஏன்.. ஐக்கிய அமெரிக்காவின் மேற்கில் (சற்று வெப்பமான காலநிைலயைக் கொண்டது) காணப்பட்ட வன்முறை குளிரான பகுதிகளில் காணப்படவில்லை இந்த மேற்குப் பகுதியை wild west என்று அழைத்தார்கள். இதன் காரணமாகவே நெவாடா, அரிசோனா போன்ற மாநிலங்களில் இன்றும் மரணதண்டனை முறை உள்ளது.

ஆகையால் இதற்கு நோர்வேயில் உள்ள தீர்வு சரிவராது. அப்படியென்றால் முழத்திற்கு முழம் காவல்துறை நிற்கவேண்டும்.

முன்பு சமூகம் சார்ந்த ஒரு பாதுகாப்பு இருந்தது. போருக்குப்பின் அது இல்லாமல் போய்விட்டது. இதை மீளக் கட்டியெழுப்பினால் மட்டுமே இத்தகைய குற்றங்களைக் குறைக்க முடியும்.

அப்படிச் சொல்ல முடியாது இசை. வெப்ப வலய நாடாக இருந்தும்.. 1990 - 95 வரை இப்படியான சம்பவங்கள் வெகு சிலவே நடந்திருந்தன. அந்தக் காலப்பகுதி குற்றவியல் புள்ளிவிபரங்கள்.. ஆங்கில இதழான HOT SPRING இல் வெளி வரும். நாங்கள் அவற்றை நூல்நிலையங்களில் கிரமமாக படிப்பதுண்டு. விடுதலைப்புலிகள்.. தமிழீழ காவல்துறை உட்பட பலரிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்த புள்ளி விபரங்கள்.. வெளி வரும். அந்த ஏடு விடுதலைப்புலிகளின் ஆங்கில ஏடு என்றே சொல்ல வேண்டும். ஆனால் திறமையாக சமூக அக்கறையோடு..வடிவமைப்பட்ட ஒரு ஏடு.

ஏலவே சாத்தியமான ஒன்றை ஏன் சாத்தியமில்லை என்று கருத வேண்டும். :icon_idea::rolleyes:

  • Replies 169
  • Views 17k
  • Created
  • Last Reply

முன்னர் சமூகம் சார்ந்த பாதுகாப்பு இருந்தது. இப்போது இருப்பது எமதினத்தை அழிக்கக் காத்திருக்கும் ஆக்கிரமிப்பு மட்டுமே. இந்த ஆக்கிரமிப்பிற்கு எமது சமூகம் சீரழிந்து சின்னாபின்னமாகி, தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழந்து முற்றாக அழிந்து போக வேண்டுமென்பதே விருப்பம். இதுவரை நேரடியாக இதை செய்துவந்த ஆக்கிரமிப்பு, இப்போது எமதினத்திற்குள்ளேயே கோடரிக் கம்புகளை உருவாக்கி உள்ளிருந்தே அழிக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறது.

நீங்களும் நானும் எதிர்பார்க்கும் அந்தக் காலம் திரும்பி வரபோவதில்லை. இனி மெதுவாக நாம் அழிந்துபோவதை நாமே சாட்சியங்களாகவிருந்து பார்ப்பதுதான் நடக்கப்போகிறது !

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சொல்ல முடியாது இசை. வெப்ப வலய நாடாக இருந்தும்.. 1990 - 95 வரை இப்படியான சம்பவங்கள் வெகு சிலவே நடந்திருந்தன. அந்தக் காலப்பகுதி குற்றவியல் புள்ளிவிபரங்கள்.. ஆங்கில இதழான HOT SPRING இல் வெளி வரும். நாங்கள் அவற்றை நூல்நிலையங்களில் கிரமமாக படிப்பதுண்டு. விடுதலைப்புலிகள்.. தமிழீழ காவல்துறை உட்பட பலரிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்த புள்ளி விபரங்கள்.. வெளி வரும். அந்த ஏடு விடுதலைப்புலிகளின் ஆங்கில ஏடு என்றே சொல்ல வேண்டும். ஆனால் திறமையாக சமூக அக்கறையோடு..வடிவமைப்பட்ட ஒரு ஏடு.

ஏலவே சாத்தியமான ஒன்றை ஏன் சாத்தியமில்லை என்று கருத வேண்டும். :icon_idea::rolleyes:

நெடுக்ஸ்.. அப்போது அது சாத்தியமாகக் காரணம் அப்போது இருந்த தண்டனை முறைகள். அவற்ரில் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் வெப்பவலய நாடுகளில் பாரிய குற்றங்களுக்கு அத்தகைய தண்டனை முறை ஒரு தீர்வு.. அல்லது

1) சமூகம் சார்ந்த கட்டமைப்பு.

2) முழத்திற்கு முழம் காவல்துறை.

இவற்றில் ஒன்றிரண்டு சரியாக வரும்.

அதனால்தான் நோர்வேயை குறிப்பிட வேண்டி வந்தது. அங்கு ஒரு பூங்காவில் பலரைச் சுட்டுக் கொன்ற பிரேவிக்கிற்கு ஆகக் கூடிய தண்டனை ஆயுள்தண்டனைதான். அதுவும் மன நிலை சரியில்லை என்றால் வேறு கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை தொடர்வதற்கு ஆக்கிரமிப்பாளன் மட்டும் காரணமல்ல.

உண்மையான சமூக நல்நோக்கம் கொண்ட அரசியல் தலைமைத்துவமின்மையும் ஒரு காரணம்.

அத்தோடு சமூக ஆர்வலர்கள் செயற்திறன் அற்ற நிலையில் இருப்பதும் இன்னொரு காரணம்.

சிறீலங்கா காவல்துறையை நம்பி இருந்தால்.. இப்படியான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது.

வடக்குக் கிழக்கு மாகாண சபைகளின் கீழ் காவல்துறை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு மாகாண காவல்துறை சர்வதே நிபுணத்துவ உதவியுடன் அமைக்கப்பட வேண்டும். மேலும் தனியார் பாதுகாப்புக்கு துறையினர் கொண்டு ஊர்கள்.. கிராமங்கள் கண்காணிக்கப்படுவதும்.. குற்றவாளிகளை.. சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யவும் நீதி முன் நிறுத்தவும் செய்ய வேண்டும்.

அல்லது தற்காலிக முயற்சியாக..........

வெளிநாடுகளில் உள்ளது போல்.. சந்தேகிக்கப்படும்... ஆட்கள் உலாவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகன ரோந்து அணிகளை அனுப்பி.. சந்தேகத்துக்கு இடமானவர்களை தடுத்து நிறுத்தி சோதிக்கும் அதிகாரத்துடன் கூடிய.. உள்ளூர் மக்களைக் கொண்ட தொண்டர் பொலிஸ் துணைப்படை ஒன்றை மாகாண சபை நிறுவிக் கொள்வது நல்லது. அதில் முன்னாள் போராளிகளையும் உள்வாங்கி மதிப்புக்குரிய ஊதியத்துடன் அவர்களை பணிக்கு அமர்த்துவதோடு... சமூகம் தேசம் பற்றி உண்மையான அக்கறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக சமூக பீடங்கள்.. சும்மா வெட்டிக்கு இருப்பதிலும்.. சமூக ஆய்வுகளை மேற்கொண்டு.. மாகாண அரசுக்கும்.. காவல்துறைக்கும்.. தனியார் பாதுகாப்பு துறையினருக்கும்... சிவில் அமைப்புக்களுக்கும்.. சமூக நிலை குறித்தும்.. எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரேரிக்க கிரமமாகச் செயற்பட வேண்டும்.

தொண்டு அடிப்படையில் உள்ளூர் மக்களைக் கொண்ட பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைத்து.. மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் மொபைல் ரோந்து அணிகளை உருவாக்கி.. மாணவிகள்.. இளம் பெண்கள்.. சிறுவர்கள்.. சிறுமிகள்.. மீதான கவனிப்பையும் பாதுகாப்பையும் கூட்ட வேண்டும். அவர்களுக்கு காவல்துறையோடு.. தனியார் பாதுகாப்பு.. மாகாண தொண்டர் பாதுகாப்பு காவல்துறையோடு.. நேரடித் தொடர்புக்கும் வழி சமைக்க வேண்டும்.

ஆபத்தான இடங்களினூடு பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்குகளை செய்யவும்.. அபாய எச்சரிக்கை சாதனங்களை வழங்கவும் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தப்படுவதோடு அதற்கான நிதி உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு கமராக்கள் அடங்கிய ரோந்து வாகனங்களை பாடசாலை நேரங்களில் அபாய வீதிகளில் பயன்படுத்தி சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுதல் அவசியம்.

பாழடைந்த கட்டங்கள்.. பாவனைக்குட்படாத பயணப் பாதைகள் தொடர்பில் மக்களை எச்சரிக்கும் எச்சரிக்கை குறியீடுகள்.. வைக்கப்பட்டு.. மக்கள் அவ்விடங்களை பாவிக்க தடுப்பதோடு.. அவ்வாறான.. கட்டிடங்கள் தொடர்பில் மாகாண அமைச்சு.. ஒரு முழுமையான விசாரணை மேற்கொண்டு.. அவ்வளங்களை மக்கள் பாவிக்க பகிர்ந்து அளிக்க வேண்டும்.

மேலும்.. போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத மதுபாவனை.. விபச்சாரம் போன்றவை குறித்து.. அனைத்து வழிமுறைகளும் ஆராய்ந்து தடுக்க நடவடிக்கைகள்.. இதய சுத்தியோடு மேற்கொள்ளப்படுவதோடு.. நீதித்துறை.. காவல்துறை.. சமூகப் பாதுகாப்பில்..  சிங்கள இராணுவப் பிரிவுகளின் தடையீட்டை முற்றாக தவிர்க்க அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் சிறீலங்கா அரசுக்கு கொடுக்கப்பட செய்ய வேண்டும்.

இராணுவம் சிவில்.. ஜனநாயகச் சூழலை தமிழ் மக்கள் ருசிப்பதை தடுக்கிறது என்பதை இனங்காட்டும்... சரியான பிரச்சாரங்கள் சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படுவதோடு.. வடக்குக் கிழக்கிற்கு விஜயம் செய்யும் தூதுவர்களுக்கு சரியான ஆதாரங்களோடு இவை அறிக்கைகளாகக் கையளிக்கப்பட்டு.. சர்வதேச அழுத்தப் பொறிமுறை ஒன்றுக்குள் சிங்கள இராணுவத்தையும் அரசையும் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சமூக அநியாயங்களை தமிழ் மக்களே தடுத்து நிறுத்தும் நிலையை தோற்றுவிக்கலாம்.

வாள்.. கத்தி.. மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனைக்கு தனியார் பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும். அவை இன்றி வைத்திருக்கப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உலோக மீள் சுழற்சிக்கு அனுப்படுதல் அவசியம்.

இதெல்லாம்... உண்மையில் சமூக அக்கறை இனப்பற்றிருந்தால்.. இன்றில் இருந்தே சாத்தியமாக்கலாம். புலிகளும் தேவையில்லை.. மைத்திரியின்.. நல்லாட்சியும் தேவையில்லை. :icon_idea::rolleyes:

இன்று தீவுப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறீலங்கா அரசின் கபடநாடகமே காரணம்...

முள்ளிவாய்க்காலுக்குப்பின்னர்

முகாமை வந்தடைந்த மக்களை அவர்களது வாழ்இடங்களில்

முக்கியமாக வன்னியில்  குடியமர்த்த விரும்பாத சிங்களஅரசு

ஒரு நரித்தந்திரம் செய்தது

அதாவது அவர்களது பூர்வீகம்  என்ன எனக்கேட்டு

அங்கு அனுப்பிவைத்தது

அந்தவகையில் எமது ஊரையே அறியாத ஒரு சமுதாயம் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் எமது கிராமத்தை வந்தடைந்தனர்.

இவர்களுக்கு ஊரையோ சொந்த பந்தங்களையோ 

அங்குள்ள சமூக அமைப்புக்கள் பற்றியோ தெரியாது

இது பெரும் சமூகப்பிரச்சினையாக தற்பொழுதும் உள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அப்போது அது சாத்தியமாகக் காரணம் அப்போது இருந்த தண்டனை முறைகள். அவற்ரில் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் வெப்பவலய நாடுகளில் பாரிய குற்றங்களுக்கு அத்தகைய தண்டனை முறை ஒரு தீர்வு.. அல்லது

1) சமூகம் சார்ந்த கட்டமைப்பு.

2) முழத்திற்கு முழம் காவல்துறை.

இவற்றில் ஒன்றிரண்டு சரியாக வரும்.

அதனால்தான் நோர்வேயை குறிப்பிட வேண்டி வந்தது. அங்கு ஒரு பூங்காவில் பலரைச் சுட்டுக் கொன்ற பிரேவிக்கிற்கு ஆகக் கூடிய தண்டனை ஆயுள்தண்டனைதான். அதுவும் மன நிலை சரியில்லை என்றால் வேறு கதை.

இப்ப எல்லாம் காவல்துறையின் கண்களை விட CCTV கமராக்களின் கண்களே அதிகம் நேர்மையோடு குற்றங்களை பதிவு செய்கின்றன.

அந்த வகையில்.. ஆபத்தான இடங்களில் வடக்கு மாகாண சபை இவற்றை பொருந்தி மக்களை பாதுகாக்கலாம் தானே. பள்ளி நிர்வாகங்கள் கண்காணிப்பு கமராக்கள் அடங்கிய முச்சக்கர வண்டிகளை பாவித்து பாடசாலை ஆரம்பிக்கும்.. விடும் நேரங்களில் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை கொண்டு வரலாம். மற்றும் அதிக ஆபத்தான இடங்களை தவிர்க்க மக்களை விழிப்பூட்டும்.. குறியீடுகளை பொருத்திவிடலாம். 

இவை கூடிய அளவு உடனடிச் சாத்தியமானவை தானே..!  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் காவல்துறையின் கண்களை விட CCTV கமராக்களின் கண்களே அதிகம் நேர்மையோடு குற்றங்களை பதிவு செய்கின்றன.

அந்த வகையில்.. ஆபத்தான இடங்களில் வடக்கு மாகாண சபை இவற்றை பொருந்தி மக்களை பாதுகாக்கலாம் தானே. பள்ளி நிர்வாகங்கள் கண்காணிப்பு கமராக்கள் அடங்கிய முச்சக்கர வண்டிகளை பாவித்து பாடசாலை ஆரம்பிக்கும்.. விடும் நேரங்களில் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை கொண்டு வரலாம். மற்றும் அதிக ஆபத்தான இடங்களை தவிர்க்க மக்களை விழிப்பூட்டு.. குறியீடுகளை பொருத்திவிடலாம். 

இவை கூடிய அளவு உடனடிச் சாத்தியமானவை தானே..!  :icon_idea:

இலங்கையில?? :rolleyes: சிசிடிவி?? :rolleyes:

கள்ளுமுட்டியையே விட்டு வைக்கிறாங்களில்ல..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில?? :rolleyes: சிசிடிவி?? :rolleyes:

கள்ளுமுட்டியையே விட்டு வைக்கிறாங்களில்ல..

வேலை செய்யுது. 

அங்குள்ள எங்கள் உறவினர்களின் வீட்டுக்கு தினமும் கல்லெறி. (இராணுவ நிலைக்கு கிட்ட இருந்தும்) கண்ணாடிகளுக்கு கல்லெறி. கல்லெறிவது இராணுவத்தோடு கூடிக் கூத்தடிக்கும் கூட்டமாம். இராணுவத்துக்கு சில இடங்களில் மக்கள் குடியேறுவதில் இஸ்டமில்லை. தங்களின் கள்ளச் செயற்பாடுகளை பாதிக்கும் என்று. அவர்களே தூண்டி விட்டுத்தான் கல்லெறி)

நாய் வேண்டி வளர்த்தார்கள்.. நாயை தூக்கிட்டு போட்டாங்கள்.

என்ன செய்யலாம்.. என்றிட்டு.. வீட்டுக் கூரையை ஒட்டி கமராக்களைப் பொருத்தி விட்டார்கள். அதன் பின் கல்லெறி முற்றாக இல்லையாம். கமரா பொருந்திய பின்.. இதுவரை அப்படி கல்லெறி என்று தகவல் வரவில்லை. 

அதனால்.. வேலை செய்யும். சரியான வடிவில்.. முகாமைத்துவத்தோடு கண்காணிப்போடு அவற்றை பொருத்தி வைத்தால்..!  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவில் மாணவி கொடூரமாக பாலியல் வன்புணர்வு  - கொலையாளிகள் அடையாளம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 15 மே, 2015

81f7477cc2c885d2ae5db90acea11a0f.jpg

புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

நேற்றையதினம் பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில்த்தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், அந்த சமயத்தில் இதனை யாரும் பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

முறையிட சென்ற தந்தையை எகத்தாளமாக பார்த்த பொலிசார், காதலித்த பொடியனுடன் ஓடியிருப்பாள். காலமை வந்திடுவாள் என கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிசாரின் இந்த பொறுப்பற்ற நடத்தையும் கொலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதென்பதே மக்களின் கொதிப்பாக உள்ளது.

மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். இந்த சமயத்தில்த்தான், அவர்களது வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலிருந்த காட்டுபகுதியில் கொல்லப்பட்ட மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர்.

விடயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த அலரிமரத்தில் மாணவியின் கால்கள் அகலமாகக் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன.

அங்கு மாணவி பலமணிநேரமாக கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கிறதென கூறுகிறார்.

மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளைகளான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளையான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, கைது செய்யப்பட்டு அவனை “விசாரிக்க வேண்டிய முறையில்” பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் செந்தில் என்பவரும் , அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

a26bcbf6ca230699e49188ef37c2c3ce.jpg

a1bef53076360a9e618d40d8ad4bb47d.jpg

2c91a1dc7d0f6d66a373eaafa3438ef5.jpg

65d14630247af0ac66600c2d1c1e1dc1.jpg

8cd5fdd9ddb43469a287178e94e7b1f7.jpg

c14966180a1ea79f4235d941692f77af.jpg

c2a896c8e4eff74fed74bcf432337d8a.jpg

8e46257f20ddac8124b0aceb021a4db6.jpg

- See more at: http://paasam.com/news/364.html#sthash.zLM6EAhe.dpuf

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆறுதல் சொல்லுவதற்கு முடியவில்லை சகோ ,வார்த்தைகளும் வரவில்லை .

சகோதரியின் ஆன்மா இறைவனுள் நித்தியமாய் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் .

[களைகள் வேரோடு பிடுங்கப்பட வேண்டும் ] :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கு நல்ல திறமையான சட்டத்தரணியால் நடாத்தப்பட்டு அதிகூடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

ஈனர்கள் இச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கி ஒரு முறை கொன்றார்கள்

தமிழ் மீடியாக்கள் 'க ற் ப ழி ப் பு ' என்று குறிப்பிட்டு பல முறை கொல்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் தர்சினி என்ற இந்த சகோதரியும் சிங்களக் கொலைவெறியர்களால்.. இதே புங்குடுதீவில் பாலியல் சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டு கல்லோடு கட்டி கிணற்றில் போடப்பட்டிருந்தார்.

darsini.0.jpg

அவருக்காக.. யாழ் கள உறவுகளில் ஒருவர் எழுதிய கவிதை இது.... அன்று இவற்றை தடுப்பவர்கள் தடுத்திருந்தால்.. இன்று இது மீளாதிருந்திருக்கும். எனியும் மீளாது என்பதற்கு உத்தரவாதமில்லாமல்.. இருப்பது எம் மக்களுக்கு பாதுகாப்பில்லை. இதுவும் தான் இப்போது இங்கு சிந்திக்கப்பட வேண்டியது.

அக்கா கிருசாந்தி
தங்கை தர்சினி
அவலங்கள் தொடர்கின்றன
பட்டியலும் நீள்கிறது..!

காமத்தீயில் வெந்து
வெற்றுடலாய் போனார்கள்
சோதரிகள்
உடல் விட்டுப்போனது
உயிர்.!

திண்டு திமிரெடுத்த
சிங்கள சிப்பாய்கள்
சில்மிசத்தில்
நசுங்கிப்போவது
எங்கள் சகோதரிகளா..?

தெரு நாய்கள்
காமப்பசியில்
கசங்கிப்போவது
எம் தேசத்து பெண்களா.?
கடும் துயரம் கொண்டு
காற்றோடு கரைவது
தமிழிச்சி உயிரா?

மூர்க்கம் செய்யும்
மூட முரடர்கள் கையில்
சிக்கி சின்னாபின்னமாகி
சிதைந்து போவது
எம் தேசக்கன்னிகளா.

சில நிமிட வெறியாட்டத்தில்
சீரழிக்கிறார் கன்னியரை
பறித்தெடுக்கிறார் உயிர்களை
சிந்தையின்றி
சகோதரிகளை
சீரழிப்பவன் சீரழியட்டும்..!

வன் புணர்வில்
வீரியம் காட்டும்
காட்டு மீராண்டிகள்
ஆண்மையற்றுப் போகட்டும்.
அரக்க மனம் கொண்ட
அட்டூழியக்காரர்
அழிந்து போகட்டும்..!

http://www.tamilini.blogspot.co.uk/

Edited by nedukkalapoovan

இவன்கள நாயை சுடுற மாதிரி சுடனும் முதல்ல அதை வெட்டி இரத்தம் ஓட ஓட கதற கதற வெடி வைக்கணும் .அதுதான் இவங்களுக்கு பொருத்தமான தண்டனை ...........அதற்கு பிறகு .அங்குள்ள காவாளிகள் மூத்த அடிக்க கூட கொஞ்சம் ஜோசிக்கணும் ...

  • கருத்துக்கள உறவுகள்

aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af

Edited by nunavilan

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

கவுணாவத்தையில்  வாய்பேசாத மிருகங்களை பலியிடுவதை நிறுத்தி இப்படியானவர்களை கொண்டுசென்று அந்த உறுப்பை களைந்து விடவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை: - யேர்மனி தமிழ் பெண்கள் அமைப்பு கண்டனம்

[Friday 2015-05-15 20:00]
germany-women-wings-300-seithy.jpg

புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில் இன்னமும் தொடர்கின்றன. தமிழீழப் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகள் ஓரு இனஅழிப்பின் வடிவமாகவே பார்க்க வேண்டும் என்று கடந்த 09.05.2015 அன்று யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

போரின் பின்பான காலத்தில் கூட சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட ரீதியில் தமிழ்ப் பெண்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பாலியல்வன்புணர்வுக்கு பாடசாலை மாணவி உள்ளாக்கி கொலை செய்யப்பட்டதை யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பாகிய நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் . மனித உரிமை நிறுவனங்கள், பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்கள்,உலகநாட்டு பெண்கள் அமைப்புக்களின் பார்வைக்கு பாடசாலை மாணவிக்கு நடந்த அநியாயத்தைக் முன்னிலைப் படுத்துகின்றோம். சர்வதேசரீதியாக எடுத்துரைப்போம்.

பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழின அழிப்புக்கு காரணமான சிறீலங்கா அரசுமீது ஒர் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தி தண்டணை வழங்கவேண்டும்.தமிழ்ப் பெண்களாகிய எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியதாகவே இருக்கின்றது என்ற உண்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம்.

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி

http://www.seithy.com/breifNews.php?newsID=132132&category=TamilNews&language=tamil

அஞ்சரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழந்த இரங்கல்கள்!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
பிரசுரிக்கப்பட்ட நாள் : 15 மே, 2015

81f7477cc2c885d2ae5db90acea11a0f.jpg

புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

நேற்றையதினம் பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில்த்தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், அந்த சமயத்தில் இதனை யாரும் பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

முறையிட சென்ற தந்தையை எகத்தாளமாக பார்த்த பொலிசார், காதலித்த பொடியனுடன் ஓடியிருப்பாள். காலமை வந்திடுவாள் என கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிசாரின் இந்த பொறுப்பற்ற நடத்தையும் கொலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதென்பதே மக்களின் கொதிப்பாக உள்ளது.

மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். இந்த சமயத்தில்த்தான், அவர்களது வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலிருந்த காட்டுபகுதியில் கொல்லப்பட்ட மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர்.

விடயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த அலரிமரத்தில் மாணவியின் கால்கள் அகலமாகக் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன.

அங்கு மாணவி பலமணிநேரமாக கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கிறதென கூறுகிறார்.

மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளைகளான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளையான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, கைது செய்யப்பட்டு அவனை “விசாரிக்க வேண்டிய முறையில்” பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் செந்தில் என்பவரும் , அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

a26bcbf6ca230699e49188ef37c2c3ce.jpg

a1bef53076360a9e618d40d8ad4bb47d.jpg

2c91a1dc7d0f6d66a373eaafa3438ef5.jpg

65d14630247af0ac66600c2d1c1e1dc1.jpg

8cd5fdd9ddb43469a287178e94e7b1f7.jpg

c14966180a1ea79f4235d941692f77af.jpg

c2a896c8e4eff74fed74bcf432337d8a.jpg

8e46257f20ddac8124b0aceb021a4db6.jpg

http://paasam.com/news/364.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவங்களை ஏறி உளக்கிட்டு போகனும்... :wub:

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நெடுக்ஸ், வாத்தியார், இசைக்கலைஞன், ரகுநாதன் விசுகு உங்கள் பதிவுகளும் எடுத்துக் கொண்ட நேரமும் எங்கள் மக்கள் மீதான அக்கறையைப் பிரதிபலிக்கின்றது.
 
நெடுக்ஸின் கருத்துக்களில்  பல தீர்வுகள் இன்றைய யதார்த்தத்தினை கருத்தில் எடுத்ததாகவே  உள்ளது. இவை யாவுமே செயற்படுத்தப் படக்கூடியவையே. இப்போதுள்ள கேள்வி எவ்வாறு புலம்பெயரந்த நாங்கள் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதே. எவ்வாறு கூட்டமைப்பிற்கும், மாகாணசபைக்கும், அரசாங்கத்திற்கும் இவற்றை செயற்படுத்துவதற்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதும் முக்கியமானது. இவற்றை செயற்படுத்த பணம் தேவையில்லை ஆனால் மனம் வேண்டும்.
 
சிலர் இவ்வாறான மரணங்களை பகிரங்கப்படுத்துவது பிழை என்ற கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றிற்கு நாம் முக்கியத்துவத்தைக் கொடுப்பதனால் இன்னுமொரு வித்யாவைக் காப்பாற்ற முடியுமெனின் அதில் தவறென்ன உள்ளது.
 
நெடுக்ஸ் உங்கள் காணொளி பார்த்தேன். இந்த தீப்பொறி எமது தாயகமெங்கும் பரவ வேண்டும். இம்மாணவர்களிற்கு தேவையான பாதுகாப்பை அவர்களே உறுதி செய்ய வேண்டும். நாம் எம்மாலான உதவிகளை வழங்கலாம் [அது என்ன என்பது தெரியாது]. தாயகத்திலுள்ள பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் முன்நின்று இப்போராட்டத்தை நடத்தலாம்.
 
இது வித்யாவுடன் நிறுத்தப்பட வேண்டியது.

அந்நியனிடம் எமது மண்ணின் பாதுகாப்பு இருக்குவரை இது நடந்து கொண்டே இருக்கும்....

(இது எனது சொந்த அனுபவமும் படிப்பும்)

ஒரு தனிமனித வாழ்கையில் கூட ....

ஒரு 5-10 வருட காலம் கனவில் கூட எதிர்பார்த்திருக்க முடியாத

ஒரு உயர்நிலையை எட்டும்

இந்த கால பகுதியில்

நான் எங்கிருந்து வந்தேன்

என்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் யார்

(கடவுளை நம்புவர்கள் என்னை இப்படி உயர்த்திய கடவுளின் எதிர்பார்ப்பு என்ன ?)

நனமைகளை விதைத்தல் எவளவு அறுவடை வருகிறது

போன்றவற்றை மறந்தவர்கள்

அப்படியே கீழ் இறங்கி கொண்டே போவார்கள்

பின்பு எக்காலத்திலும் மீளுவதை நான் கண்டதில்லை.

20 ஆயிரம் வரையான இளைஞரும் யுவதிகளும்

தமது இளமையை உயிரை கொடுத்து கட்டிய வேலியை பற்றியும்

அவர்களது அற்பணிப்பு பற்றியும்

எண்ண 15 வருடங்கள் முன்பு தமிழன் மறந்துவிட்டான்.

அதற்கான வினையை

இனி இப்படிதான் அறுவடை செய்ய முடியும்.

(இதை ஊரில் இருக்கும் நாலு காவாலிகள் கூட செய்திருக்கலாம் இந்த எண்ணமும் சிந்தனயும்

அவர்களுக்கு எங்கிருந்து வந்தது எப்போது வந்தது என்று தேடுவதும் முக்கியம்)

ஒரு இளைய உயிர்

இப்படி சின்ன பின்னாமாகி கிடக்கையில் நெஞ்சு பொறுக்கவில்லை

தமிழனின் நிலை கண்டு கலங்க துளியளவும் நெஞ்சில் ஈரம் இல்லை

எப்போதோ எல்லாம் காய்ந்து விட்டது.

அவருடைய ஆத்மா என்றாலும் சாந்தி அடையட்டும்.

வணக்கம்

நீங்கள் கூறுங்கள் வீறு யாரிடம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நீங்கள் கூறுங்கள் வீறு யாரிடம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்?

உங்கள் பாதுகாப்பு உங்களால் நிர்ணயிக்கபட்டு இருக்க வேண்டும்.

விட்டுகொடுப்பு அரசியல் 
என்று அரசியல் தலைவர்கள் 
விபச்சாரம் செய்துகொண்டு இருந்தால்.
 
மண்ணில் விளைச்சல் என்று 
இவற்றைத்தான் மக்கள் அறுவடை செய்ய முடியும்.
 
இப்படி ஒரு கொடுரம் நடந்து இருக்கிறது 
அந்த நாதாரி கூட்டம் எங்கே ?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.