Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் நடப்பதென்ன? கூட்டமைப்பு தலைமையிடம் சுரேஸ் கேள்வி!

Featured Replies

வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்துவதாக கூறப்படுவது விந்தையான விடயமாக எமக்கு தெரிகின்றது.

இந்நிலையில் மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.பதிவு இணையம்
 
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்;, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், மற்றும் புலம்பெயர் தமிழர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள்,இணைந்து இங்கிலாந்து நாட்டில் நடத்திவரும் இரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங் களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் சிங்கப்பூர் நாட்டில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது தடவையாக இங்கிலாந்து நாட்டில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படுகின் றது.பதிவு இணையம்

இந்தப் பேச்சுவார்த்தை இரகசியமான முறையில், நடைபெறுவதாகவும் இதில் தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் தொடர்பாகவும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தக் கூட்டம் இரகசியமான முறையில் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகின்றது. நாங்கள் கேட்கின்றோம். தமிழ் மக்களின் உடனடி தேவைகள் தொடர்பாக பேசுவதானால் அது தொடர்பாக வடகிழக்கு மாகாண சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். ஆனால் மாகாணசபையினர் எவரும் இந்தக் கூட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மேலும் தமிழ் மக்களின் உடனடி தேவைகள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். ஆதனை இரகசியமான முறையில் பேசவேண்டிய தேவை என்ன?
மேலும் தேர்தல் தொடர்பாக உள்நாட்டில் பேசவேண்டுமே தவிர வெளிநாட்டில் பேசவேண்டிய தேவை என்ன? எனவே இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ளதாகவே நாங்கள் கருதவேண்டியிருக்கின்றது. ஊடகங்களிலும் மாறுபட்ட விடயங்கள் தொ டர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.பதிவு இணையம்

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இங்கே என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக வெளிப்படுத்தவேண்டும். காரணம் இந்தப் பேச்சுவார்த்தையில் தென்னாபிரிக்கா, சுவிஸ், நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும், புலம்பெயர் தமிழர்களும், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

எனவே இந்த இரகசிய பேச்சுவார்த்தை சர்வதேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களையும், படையினரையும் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஒரு பாகமாக நடைபெறுகின்றதா? என்ற கேள்வியை எம்மிடம் பலர் எழுப்பியிருக்கின்றார்கள். எனவே அந்த அர்த்தத்திலேயே நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை வரும் எனவும் அவர் கேட்டுள்ளார் http://www.pathivu.com/news/40712/57//d,article_full.aspx

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் தொடர்பாக பேசுவதானால் அது தொடர்பாக வடகிழக்கு மாகாண சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். ஆனால் மாகாணசபையினர் எவரும் இந்தக் கூட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மேலும் தமிழ் மக்களின் உடனடி தேவைகள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். ஆதனை இரகசியமான முறையில் பேசவேண்டிய தேவை என்ன?

 

 

"பின் வாசல்" இப்போ அமெரிக்காவின் காலில் வீழ்ந்து விட்ட சிங்களத்துக்கு மாமா வேலை பார்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 

 

"பின் வாசலுக்கு" வரலாறு தெரியாது போல் உள்ளது, 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகளையும்

பிரிவினைகளையும் கொண்டுவரக்கூடிய இது போன்ற செயல்களை 

வேண்டுமென்றே செய்கிறார்களா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் சந்திரிக்காவின் மைத்திரியின் ஏஜென்டுகளாக மாறியுள்ளது கூட்டமைப்பு தமிழரசுக் கட்சிக் கூடார சம் சும் தலைமை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.

 

இவர்களை விட டக்கிளஸ்.. உந்த சோரம் போற விசயத்தில...விண்ணன் எனலாம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பேச்சை கேட்பார் யாருமற்ற நிலைக்கு சுரேசும், புல வாலுகளும் வந்து விட்டார்கள்.

இனி ஒரே புலம்பல்தான்.

புலத்தில் உள்ள யதார்தவாதிகளும், சம்சும் உம், சிங்கள் முற்போக்குவாதிகளும் நாட்டை நல்வழிப் படுத்தி, தமிழரின் உடனடிப் பிரச்சினையை தீர்க்கப் போறாங்களாம்...... விடக்கூடாது!

ஊரில் பிரச்சினை தீந்தால் அப்புறம் நெடியவன் கோஸ்டி, தலமை செயலகம் எல்லாம் பூவாக்கு என்ன செய்யுறது?

சீமான் வேற கனக்க நேரத்தை இன்வெஸ்ட் பண்ணிட்டார்.

தேத வை சொல்லியே சாப்பிட்டு பழகியாச்சு - இனிப் போய் வேலை செய்தா உழைக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

06/08/2015 இனியொரு...

ITI-london-Meeting-300x200.jpg

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட ITI என்ற அமைப்பினதும், சுவிட்சிலாந்து அரசினதும் அனுசரணையுடன் லண்டனில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றும் சந்திப்பில் ஈடுபட்டது.

இன்று லண்டனில் மர்மமான இடம் ஒன்றில் நடத்தப்பட்ட இச் சந்திப்பில் புலம் பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சுரேன் சுரேந்தர் கலந்துகொண்டார். இலங்கை அரசின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னை நாள் நோர்வே அரசின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கையிம், சுவிஸ் வெளிநாட்டமைச்சின் சார்பில் மார்டின் ஸுருசிங்கர், சந்திரிக்கா குமாரணதுங்கவின் பிரதிநிதி ஒருவர், நோர்வேயைச் சேர்ந்த கலாநிதி ரமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னர் சிங்கப்பூரில் இந்த இரு தரப்புகளும் நடத்திய சந்திப்பின் தொடர்ச்சியாகவே லண்டன் ஒன்றுகூடல் இடம்பெற்றதாக ஊடகங்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று கூடலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான சந்திப்பாகவே இது நடைபெறுகிறது என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதே வேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சனைகளை உடனடியாக அணுகுவது தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரண்டு முரண்பட்ட கருத்துக்களை கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த அதே வேளை கூட்டம் நடைபெற்ற இடம் இரகசியமானதாகவே வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் முன்னை நாள் சமாதானத் தூதுவரும் அமெரிக்க அரசின் நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனத்தைச் சார்ந்தவருமான எரிக் சுல்கையிமும் ஒருவர். கடந்த மாதம் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அவர்கள் செயற்படவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதே நேர்காணலில் மேலும் கருத்துத் தெரிவித்த சுல்கையிம் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை செப்டெம்பரில் வெளியாகும் என்றும், இரண்டு தரப்புக்களதும் போர்க்குற்றங்களும் தண்டிக்கபட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எரிக் சுல்கையிமின் இரண்டு கருத்துக்களில் முதலாவது நிறைவிற்கு வந்துள்ளது. புலம்பெயர் அமைப்பு ஒன்றுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அதுவும் திரை மறைவில்!

இரண்டாவது கருத்தின் அடிப்படையில் போர்க்குற்றம் என்ற பெயரில் இலங்கை அரசுடன் உடன்படாதவர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என திரை மறைவில் நடத்தப்பட்ட கூட்டம் சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்பின் உள் நோக்கங்கள் இன்னும் வெளிப்படையாகத் தெரியாவிடினும், போராட்டம் அழிக்கப்பட்ட பின்னரான சுத்திகரிப்பிற்காக இவர்கள் திட்டமிடுகிறார்களா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. மே மாதம் 17 ம் திகதி எரிக் சுல்கையிம் தெரிவித்ததன் அடிப்படையில் எஞ்சியுள்ள போராட்ட சக்திகளைப் போர்க்குற்றம் என்ற தலையங்கத்தில் அழிப்பதற்கான முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன.

இச் சந்திபுத் தொடர்பான எதிர்ப்பு அறிக்கைள் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களால் வெளியிடப்படவில்லை. ஆங்காங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கைப் பேரினவாத அரசின் செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக பிழைப்புவாதப் புலம்பெயர் அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

http://inioru.com/46514/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலம்பெயர் தமிழர்களுக்குள் புலம்பல் தமிழர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா? என்ன கொடுமை எலிஸபெத் மகாராணி? நீங்களாவது சொல்ல மாட்டீங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்


NPC Councillor condemns premature donor-brokering involving Tamil diaspora

[TamilNet, Monday, 08 June 2015, 15:51 GMT]

Tamil diaspora groupings don't need to get locked into any premature donor-brokering process that enables the Sri Lankan regime to claim that a domestic process of so-called reconciliation was being agreed upon by the Tamil diaspora, Northern Provincial Councillor M.K. Shivajilingam told TamilNet on Monday, responding to the news of a premature donor brokering by third parties through a South Africa facilitated twin-track process. All the donor States have their development agencies through which they can assist the resettling people in Valikaamam, Champoor and in other places, Mr Shivajiingam told TamilNet adding that Tamil diaspora should be firm in effecting internationally-guaranteed and internationally-mediated solutions including an international investigation on genocide as demanded by the Northern Provincial Council.



There are development agencies operated by the donor States such as the Switzerland Agency for Development Cooperation (SDC), United States Agency International Development (USAID) and several other organisations attached to other countries such as the United Kingdom, Shivajilingam told TamilNet.

While all of them were prepared to assist in constructing houses for the resettling Eezham Tamils, the former regime of Rajapaksa restricted the housing assistance to the Indian Housing Scheme of 50,000 units alone.

Now, there should be no such restriction and these development agencies should come forward to offer housing schemes, other rehabilitation and development projects to the uprooted people in the North-East, Mr Shivajilingam said adding that each donor State could be assigned the responsibility of assisting a particular district in the North-East.

The Chief Ministers of Northern and Eastern Provincial Councils have the necessary infrastructure to facilitate the housing schemes for the resettled people with foreign agencies until a negotiated settlement is reached, Mr Shivajilingam said.

The Office of the High Commissioner for Human Rights (OHCHR) has postponed its report on the investigations on Sri Lanka (OISL) to September and there are forces seeking to alter the direction of the yet-to-be-released recommendations in that report, the NPC Councillor said.

The NPC has demanded the OISL to either investigate the charge of genocide or to recommend a proper international investigation on genocide in its recommendations.

“We expected an independent international investigation at least in the form of a Commission of Inquiry (CoI). In 2014, the USA came with the resolution. The Geneva process didn't produce a CoI which was independent of the OHCHR. The three-member experts in the OISL have only advisory role,” Mr Shivajilingam observed.

“However, the Tamil people are expecting a reasonable verdict from the OISL process,” he said adding that if the OISL failed to recommend an international investigation into Tamil genocide, the Tamil diaspora, Tamil Nadu and the Tamils in the homeland should be waging a global struggle demanding international justice.

In the meantime, Diaspora Tamils should not be carried away by any premature process that seeks to facilitate their participation in the name of so-called development.

Mr Shivajilingam condemned the actions of M.A. Sumanthiran without explicitly mentioning his name.

A political solution should be arrived through international mediation, he said.

“The model of international facilitation has been already exhausted. We have witnessed how the process of Norway's facilitation ended,” he said adding that the Tamil people were demanding an international mediation in which the State actors, such as the USA, India and the European Union, take part along with non state actors. “The role of non-State actors is important to make sure that no geo-political injustice is committed in the mediation process by the State actors,” Mr Shivajilingam told TamilNet.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37802

 

தங்கள் பேச்சை கேட்பார் யாருமற்ற நிலைக்கு சுரேசும், புல வாலுகளும் வந்து விட்டார்கள்.

இனி ஒரே புலம்பல்தான்.

புலத்தில் உள்ள யதார்தவாதிகளும், சம்சும் உம், சிங்கள் முற்போக்குவாதிகளும் நாட்டை நல்வழிப் படுத்தி, தமிழரின் உடனடிப் பிரச்சினையை தீர்க்கப் போறாங்களாம்...... விடக்கூடாது!

ஊரில் பிரச்சினை தீந்தால் அப்புறம் நெடியவன் கோஸ்டி, தலமை செயலகம் எல்லாம் பூவாக்கு என்ன செய்யுறது?

சீமான் வேற கனக்க நேரத்தை இன்வெஸ்ட் பண்ணிட்டார்.

தேத வை சொல்லியே சாப்பிட்டு பழகியாச்சு - இனிப் போய் வேலை செய்தா உழைக்க முடியும்?

 

இப்ப புலம்பெயர் தமிழர்களுக்குள் புலம்பல் தமிழர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா? என்ன கொடுமை எலிஸபெத் மகாராணி? நீங்களாவது சொல்ல மாட்டீங்களா? :D

 

அண்ணைமாரே கருத்துகளால் பின்னுறீங்களே! இங்கு கேள்வியண்ணாக்களே, புலம்பெயர் புலிகளிடமிருந்தல்ல, கூத்தமைப்பிடமிருந்தே! உங்கள் போன்றோருக்கு "**க்கு எங்கை அடித்தாலும் ஒற்றைக்காலை தான் தூக்குவது போல், உங்கள் போன்றோருக்கு புலிக்காச்சல் பிடித்து சன்னி ஆக்கிப்போட்டுது :icon_mrgreen:  

 

அது கிடக்க, இப்போதெல்லாம் ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் "பின் வாசல்" மாமாவிற்கு ஒரே ஒத்தூதலாம். முகமூடிகளை போட்டபடி! என்ன இனம் இனத்தோடுதான் ஒட்டுமாம் :icon_mrgreen:

http://www.puthinappalakai.net/2015/06/08/news/6850

 

 

http://www.puthinappalakai.net/2015/06/08/news/6841

 

 

 

போர்க்குற்ற விசாரணையைத் தடுப்பதற்கும் இனப்படுகொலை என்ற பதத்தை இல்லாமல் ஒழிப்பதற்கும் சிங்கள அரசுக்கு துணை போகும் ஆங்கிலம் மற்றும் கணனி அறிவுள்ள புலம் பெயர் தமிழ்த்தலைவர்கள்

 

https://www.facebook.com/nammtamillar.London/videos/389151601277450/

வல்வெட்டித்துறை நகரசபையை ஒற்றுமையாக நடத்தத்தெரியாத குவாஜிலிங்கம் ஒற்றுமையைப்பற்றி கதைக்குது இதற்கு சிலதுகள் ஜால்ரா.!!

என்னப்பா சுமந்திரனும் மங்கள சமரவீரவும் உங்களுக்கு என்ன நல்லதைய செய்வார்கள் .... இதற்கு இங்க கொஞ்ச பேர் எதுக்கு எடுத்தாலும் புலிகள் ... 
 
உங்களை தமிழன் என அடையளபபடுதியதே புலிகள் தான் ... உண்மையான வீரர்கள் ... நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம் தமிழன் என்று ....
 
இல்லை நாங்கள் பச்சோந்திகள் , கக்கைவன்னியங்கள் ... ஓட்டுணிகள் ... என்று மார்தட்டும் கொஞ்ச கூட்டம் ....
 
திருந்த மாட்டிங்களா .....
 
  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடிக்க நாயை மூஞ்சையிலே தெரியும் என்பார்கள்? நாடு நாடாய் புலிகளை பயங்கரவாதிகளாக்கிய மங்கள சமர வீர தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் போல தான் கிடக்கு. போதாக்குறைக்கு எரிக் சொல்கைம் வேறை . சொல்லி வேலை இல்லை.இங்கு ஒருவர் சொன்ன மாதிரி தமிழீழத்துக்கு எல்லையை போட வேண்டியது தான் பாக்கி. ஹி ஹிஹி.

தங்கள் பேச்சை கேட்பார் யாருமற்ற நிலைக்கு சுரேசும், புல வாலுகளும் வந்து விட்டார்கள்.

இனி ஒரே புலம்பல்தான்.

புலத்தில் உள்ள யதார்தவாதிகளும், சம்சும் உம், சிங்கள் முற்போக்குவாதிகளும் நாட்டை நல்வழிப் படுத்தி, தமிழரின் உடனடிப் பிரச்சினையை தீர்க்கப் போறாங்களாம்...... விடக்கூடாது!

ஊரில் பிரச்சினை தீந்தால் அப்புறம் நெடியவன் கோஸ்டி, தலமை செயலகம் எல்லாம் பூவாக்கு என்ன செய்யுறது?

சீமான் வேற கனக்க நேரத்தை இன்வெஸ்ட் பண்ணிட்டார்.

தேத வை சொல்லியே சாப்பிட்டு பழகியாச்சு - இனிப் போய் வேலை செய்தா உழைக்க முடியும்?

இப்படி வாயாலே வாய்ப்பன் சுட்ட எத்தனை பேரை பாத்திருக்கிறம்.

இப்ப புலம்பெயர் தமிழர்களுக்குள் புலம்பல் தமிழர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா? என்ன கொடுமை எலிஸபெத் மகாராணி? நீங்களாவது சொல்ல மாட்டீங்களா? :D

இப்படி வாயாலே வாய்ப்பன் சுட்ட எத்தனை பேரை பாத்திருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வொட்டு சுமத்திரனுக்கே.......சுமத்திரனுக்கு எதிரிகள் பொறிமுறை வைக்கவிடில் அவரின் இலட்சியம் வெற்றிபெறும்.... வாழ்த்துக்கள்

கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகளையும்

பிரிவினைகளையும் கொண்டுவரக்கூடிய இது போன்ற செயல்களை 

வேண்டுமென்றே செய்கிறார்களா?? :(

 

ஆமாம் அப்படியும் செய்கிறார்கள் 

 

வெளியிலும் இருந்து வேண்டுமென்றே கிண்டவும்படுகிரார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

திரைமறைவுச் சந்திபுத் தொடர்பாக சுரேன் சுரேந்தர் : விற்பனைக்கு விடப்பட்டுள்ள போராட்டம்

06/10/2015 இனியொரு...

surensurendiran.jpg

உலகத் தமிழர் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே சுவிஸ் அரசின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பும்(Swiss Agency for Development and Cooperation (SDC)) , தென்னாபிரிக்க தன்னார்வ நிறுவனமும்In Transformation Initiative (ITI), எம்.ஏ.சுமந்திரனும் புடைசூழ நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐ.நா இன் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலிருப்பதற்கான முன்னறிவிப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என புலம்பெயர் நாடுகளின் பல்வேறு தரப்புக்கள் கூறுகின்றன.

ஐ.நாவும் அமெரிக்காவும் முன்மொழிந்த போர்க்குற்ற விசாரணை அவர்களின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை முன்னமே தீர்மானித்துவிட்டார்கள். சர்வதேச விசாரணை என மக்களை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இவை தெரியாதவையல்ல. ஐ.நா உம் அமெரிக்காவும் என்ன தீர்மானித்தார்களோ அதையே புலம்பெயர் அமைப்புக்கள் நடைமுறைப்படுத்துகின்றன.

புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தங்களால் தான் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது என்பது முழுவதும் தவறானது. அது இப்போது நிரூபணமாகியுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை வழங்கித் ஆங்காங்கே எழக் கூடிய புதிய போராட்டங்களையும் போராட்ட சக்திகளையும் முடக்கி வைத்தனர். அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் தமது ஏகபோக நலன்களுக்காக நடத்திய நாடகத்தை தமது செயல் திறன் என மக்களை நம்பவைத்துப் பிழைப்பு நடத்தினர். இனியொரு இணையம் உட்பட பலர் மத்தியிலிருந்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கி மோசடி செய்தனர்.

இவை அனைத்தையும் நடத்திவிட்டு எந்த கூச்சமும் அவமான உணர்வும் அற்று இன்றும் மக்கள் மத்தியில் உலாவரும் புலம்பெயர் தலைமைகள் இலங்கை அரசிற்கும் புலம்பெயர் தலைமைகளுக்கும் நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பான தமது கருத்துக்களைக் கூட முன்வைக்கத் தவறிவிட்டனர்.

உலகத் தமிழர் பேரவைக்கு எதிராக பேசுவதற்குரிய தகமையை மக்களை ஏமாற்றியவர்கள் இழந்துள்ளனர் என்பதை அறிவிப்பதற்கான மௌனமாக என்பது தெளிவில்லை. வன்னியில் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட ஆறு வருடங்களில் இத் தலைமைகள் நடத்திய சுத்திகரிப்பில் போராட்டம் பெரும் அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

இவர்கள் நடத்திய அழிப்பு நடவடிக்கையின் மற்றொரு வடிவமே உலகத் தமிழர் பேரவையின் திரை மறைவிலன சந்திப்பு.

தனது சந்திப்புத் தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இப்போது கருத்து வெளிய்ட ஆரம்பித்துள்ளார்.

‘மக்களின் நிலங்களை அரசாங்கம் விடுவித்துவருகிறது; அங்கு வீடுகள் கட்டுவதற்குப் பணம் தேவை; புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டால் அவை இலங்கை சென்று உதவிசெய்யலாம்’ என சுரேன் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்புக்கள் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பணக் கொடுப்பனவுகளை வழங்குபவை. ஆக, சுரேன் சுரேந்திரனின் கருத்துக்கள் பொய்யானவையல்ல.

போர்க்குற்றம் குறித்துப் பேசிய அமைப்புக்கள் இன்று உதவிகள் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். அரசியல் பேசிய மக்கள் கூட்டம் தன்னார்வ அமைப்புக்களின் எடுபிடிகளாக மாற்றப்படுகின்றனர்.

உலகத் தமிழர் பேரவை தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் தமது பங்கை எதிர்பார்த்து மௌனமாகக் காத்திருக்கின்றன எனச் சந்தேகமடைவதில் தவறில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளின் இத் திட்டங்களை நிராகரிக்கின்றவர்கள் துரோகிகளாக்கப்படும் நிலை தோன்றும்.

ஆக, மறைமுகமான மிரட்டல்களுக்கு மத்தியில் போராட்டம் தன்னார்வ நிறுவனங்களின் பணத்தை மையமாகவைத்து விலை பேசப்பட்டுள்ளது. விற்பனை தொடர்கிறது. போதுவாக ஏமாற்றுப் பேர்வளிகளான ஏனைய அமைப்புக்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்பதில் என்ன சந்தேகம்!?

http://inioru.com/suren-surenthar-on-the-meeting-with-mangala-samaaweera/

  • கருத்துக்கள உறவுகள்
போர்க்குற்றம் குறித்துப் பேசிய அமைப்புக்கள் இன்று உதவிகள் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். அரசியல் பேசிய மக்கள் கூட்டம் தன்னார்வ அமைப்புக்களின் எடுபிடிகளாக மாற்றப்படுகின்றனர்
என்னதான் குத்திமுறிஞ்சாலும் அமெரிக்கனும் இந்தியனும்தான் சிரிலங்காவின் தலைவிதியை எழுதிகொண்டிருக்கிறான்....இனியும் தொடர்ந்து எழுதுவான்.....

போருக்கு பின்னரான காலப்பகுதியில் எந்தெந்த மைப்பு என்னத்தை செய்தது என்று பட்டியலிட முடியுமா? 

 

பந்தி பந்தியா அறிக்கைவிட்டதுதான் மிச்சம்.

 

 

 

யுத்தத்தின் முடிவோடு சனந்த்தை கொணந்து நடுத்தெருவில விட்டதோடு மட்டும் மில்லாமல் முல்வேளுக்கு பின்னல் இருந்த சனக்களுக்கு யார் என்ன செய்தார்கள்.

 

திக்கு தெரியாமல் இருந்த தமிழினம் மெல்ல மெல்ல கட்டீளும்பி இப்போது சொல்லக்கூட அளவுக்கு அரசியல் கட்டமைப்போடு இருக்கிறது குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகான சபையை சொல்லாம். இதெல்லாம் சாத்தியமானது நிலத்தில் இருந்து செய்த அரசியலால்தான்.

 

விக்கினேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கும் திட்டத்தையும் சம்பந்தேரே வகுத்தார் அதுக்கும் மேட்டுக்குடி காட்டுகுடி என்று குரல் வந்தது.

 

 

 

ஆளுக்குகால் சாணியடிக்காமல் உதவிசெய்யப்பாருங்கோ. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.