Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து 'ஜனநாயகப் போராளிகள்' கட்சி உதயம்

Featured Replies

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து 'ஜனநாயகப் போராளிகள்' கட்சி உதயம்!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த நல்லூர் கோயில் வீதியில், இன்று நண்பகல் ஒன்றுகூடி தியானம் அனுஷ்டித்த அவர்கள், அதற்கு முன்னதாகத் தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கியப்பட்டுச் செயற்படுவது என்று அங்கு பிரதிக்ஞையும் செய்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து 'ஜனநாயகப் போராளிகள்' (Crusaders for Democracy) கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. ஈடுபாடுடைய பேராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது. அதுவரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.

* தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை நோக்கமாகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.

* தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது.

* கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.

* நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் பங்களிப்பதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது. இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

http://www.malarum.com/article/tam/2015/07/03/10831/முன்னாள்-போராளிகள்-ஒன்றிணைந்து-ஜனநாயகப்-போராளிகள்-கட்சி-உதயம்-.html#sthash.5PptdYS3.dpuf

  • Replies 53
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

இந்த சர்வதேசநிலையைப்பயன்படுத்திக்கொண்டு

சர்வதேச அளவில்

ஒரு முகம் காட்டுதலாக

ஒரு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக

ஐனநாயகவழிகளில் பேசப்போகின்றோம் என்ற ரீதியில்

இவர்கள் அறிமுகமாவதும் தமக்கான பதிவுகளை மேற்கொள்வதும்

ஆபத்துக்களை தவிர்க்கவும்

வழமைக்கு இவர்களது வாழ்வு திரும்பவும்

இது வழிவகுக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான முன்னாள் போராளிகளின் குரலாகத் தெரியவில்லை.
யாரோ அவர்களை முன் தள்ளிப் பின்னால் நின்று பேரம் பேசுவது போலத்தான் தெரிகின்றது.

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் புலிவால்களின் ஓரு கைங்காரியமே! இவர்களை கட்டுக்காசு இல்லாமல் துரத்தியடிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்ல நோக்கம். ஆனால் தொடங்கியது/ தொடங்குகிறது வித்தி என்பதும் , இவர்களை கூட்டமைப்பில் இணைய / இணைக்க வேண்டும் என்பதும்தான் யோசிக்க வைக்கிறது . கூட்டமைப்பை தொடக்கியவர்கள் என்கிற உரிமை அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் அது போகும் பாதை யோசிக்க வைக்கிறது. அந்த நேரத்தில் இவர்களையும் இணைய சொல்லுவது ....:(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. இதனை போட்டி அரசியல் என்று ஆக்காமல்.. தமிழ் தேசிய இன தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சரியான மக்கள் தெரிவை ஏற்படுத்தும் வகைக்கு முன்னகர்த்தி வருவது அவசியம்.

முன்னாள் போராளிகள் என்ற அடைமொழிக்கு அப்பால் இவர்களை சிங்கள பேரினவாத பெருந்தேசியத்தை.. உலகம் உச்சரிக்கும்..சனநாயக நடைமுறைகளின் கீழ் எவ்வாறு அரசியல் ராஜதந்திரத்தோடு எதிர்கொள்வது என்பது குறித்து அரசியல் அறிவு ரீதியாகவும் பலப்படுத்த வேண்டும்.

சும்மா கோட்டுக்கு போற கோட்டுச் சூட்டுப் போட்ட சட்டாம்பிகள் அரசியல் நடத்தி தமிழ் மக்களின் அரசியல் என்பது கோட் கேஸ் அரசியலாக மாறிவருவதால் தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

கோட் சூட் ஆசாமிகள்  இதன் மூலம் தம்மை தமது இருப்பை வருவாயை புகழை அதிகரிக்கச் செய்து தம்மை தமது சுற்றத்தைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.. தமிழ் மக்களை அவர்களின் உரிமை ரீதியாக..நட்டாற்றில் விட்டுவிடுகின்றனர். இந்த நிலை தொடர அனுமதிப்பது நல்லதல்ல.

அந்த வகையில்.. வித்தியின் இந்த முயற்சி போட்டி அரசியல் அல்லாமல் தமிழ் தேசிய இன அபிலாசைகளை பலப்படுத்தும் வகைக்கு தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்தாத வகைக்கு அமையின் வரவேற்பதில்.. எந்த இடர்பாடும் இருக்க முடியாது.

Edited by nedukkalapoovan
கூடிய கருத்துத் தெளிவுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த "தமிழ் தேசிய மக்கள் முன்னணி" இந்த தேர்தலில் கூட்டமைப்பிற்கு தலையிடியாக இருப்பது போல்

"ஜனநாயகப் போராளிகள்" உம் இந்த தேர்தலில் பெரிதாக எடுபடாமல் விடினும் அடுத்த தேர்தலில் நிச்சயம் இரு கட்சிகளுக்குமே தலையிடியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

வந்தது யார் என்று கூட பார்க்க நெஞ்சில்லாத வாந்திகள் தான் இப்ப அதிகம்.......... 

  • கருத்துக்கள உறவுகள்

வந்தது யார் என்று கூட பார்க்க நெஞ்சில்லாத வாந்திகள் தான் இப்ப அதிகம்.......... 

வாந்தி, வியாதி.... ஒரு தொற்று நோய்.
நல்ல காலத்திற்கு, யாழ் களத்தில் மூன்று பேருக்கு மட்டுமே.... வாந்தி வியாதி   உள்ளதால், கவலைப் படத் தேவையில்லை.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர்க்கும் தம் அரசியலை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப் பட வேண்டும்.

இது வரவேற்க்கப் பட வேண்டிய நகர்வே. தம் கடந்த கால பாதையின் தவறுகளை உணர்ந்து ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வை தேட முயன்றால் இவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை.

மாறாக ததேமு வைப் போல காசி ஆனந்தன் ஸ்டைல் உணர்சி அரசியல் செய்தால் மக்களே இவர்களை நிராகரிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சிகள் இருப்பது கட்சிகளின் அராஜகம்,தான் தோன்றித்தனத்தை குறைக்கும். கவலையான விடயம் தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவது.

ஒரு ஜனநாயக அமைப்பில் எவரும் கட்சி தொடங்கலாம் தேர்தலில் போட்டியும் இடலாம் வென்றால் பாராளுமன்றம் செல்லலாம் முடிந்தால் ஆட்சியும் அமைக்கலாம் .இதில் யாரும் விதி விலக்கில்லை.

மக்கள் தீர்ப்பை மதிக்கத்தான் வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர்க்கும் தம் அரசியலை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப் பட வேண்டும்.

இது வரவேற்க்கப் பட வேண்டிய நகர்வே. தம் கடந்த கால பாதையின் தவறுகளை உணர்ந்து ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வை தேட முயன்றால் இவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை.

மாறாக ததேமு வைப் போல காசி ஆனந்தன் ஸ்டைல் உணர்சி அரசியல் செய்தால் மக்களே இவர்களை நிராகரிப்பர்.இவர

இவர்களுக்கு இவ்வாறு ஐனநாயகம் 

ஒன்றுபட்ட இலங்கை எனச்சொல்லும் தாங்கள்

அங்குள்ள ஏன் கூட்டமைப்பிலுள்ள பல கட்சிகள்

தமிழர்விடுதலை

தமிழீழ விடுதலை என தங்களது கட்சியின் பெயர்களில் இன்றும் வைத்துள்ளனரே 

அது பற்றி மௌனம் ஏன்...?

புலிகள் சொல்லக்கூடாது

புலிகளுக்கு கட்டளைகள்

புலிகளுக்கு வரம்பு

புலிகளுக்கு புனருத்தாரணம்.....??

நயவஞ்சகம் இங்கே தான் உள்ளது

புரிந்து கொள்வோம்....

வாந்தி, வியாதி.... ஒரு தொற்று நோய்.
நல்ல காலத்திற்கு, யாழ் களத்தில் மூன்று பேருக்கு மட்டுமே.... வாந்தி வியாதி   உள்ளதால், கவலைப் படத் தேவையில்லை.:lol:

இரு நூறு மாணவர்களுக்கு மூன்று நாலு ஆசிரியர்கள் .இப்படிதான் நான் பார்ப்பது அதானால் கோவம் பெரிதாக வருவதில்லை ஆனால்  இடைக்கிடை பிரம்பும் எடுக்க வேண்டிக்கிடக்கு .மற்றவர்களுக்கு தெரியாததை சொல்லிக்கொடுப்பதில் தப்பில்லை எத்தனை பேருக்கு அறிவை ஊட்டியிருக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர்க்கும் தம் அரசியலை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப் பட வேண்டும்.

இது வரவேற்க்கப் பட வேண்டிய நகர்வே. தம் கடந்த கால பாதையின் தவறுகளை உணர்ந்து ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வை தேட முயன்றால் இவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை.

மாறாக ததேமு வைப் போல காசி ஆனந்தன் ஸ்டைல் உணர்சி அரசியல் செய்தால் மக்களே இவர்களை நிராகரிப்பர்.

:lol:ஜனநாயகத்தில் "நிபந்தனையுடனான ஜனநாயகம்" என்றும் ஒன்று இருக்கா? ஒன்று பட்ட இலங்கையைத் தாண்டி சுயாட்சியுள்ள ஒரு நிலத்திற்காக ஆயுதம் இரத்தம் இல்லாமல் முயன்றால் தவறா? சிறி லங்காவின் ஆறாவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டு தான் அரசியல் செய்யலாம் என்பது சிறி லங்காவின் சட்டம் கோசான், அது என்ன கல்லில் செதுக்கிய biblical truth ஆ தமிழ் மக்களும் அரசியல் வாதிகளும் மனதாரப் பின்பற்ற?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலை வேறு, தனித்தமிழ் ஈழம் வேறு.

இரண்டாமாவதை கேட்பது முதலாவதை குழிதோண்டிப் புதைக்கும்.

இவர்களை யாரும் கட்டளை இட்டு கட்டுப் படுத்தவில்லை. மக்கள் நிராகரிப்பர் என்றே எழுதினேன்.

தாம் ஏன் "முன்னாள்" போராளிகள் ஆகினோம்? அதில் உள்ள வரலாற்றுப் படிப்பினையை உள்வாங்கிச்செயல் பட்டால், நானே ஆதரிப்பேன்.

வாக்குக்குகள் பிரியும் என்பதுக்காக ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து சர்வாதிகாரத்துக்கு சலாம் போட முடியாது.

கூட்டமைப்பை தூக்கி அடிப்பது என்று மக்கள் முடிவு செய்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது.

எனது கணிப்பில் இந்த முறை யாழில் ஒரு சீட் கஜேந்திர குமாருக்குப் போகலாம். ஒரு சீட் டக்ளஸ், மிகுதி சீட் 5 கூட்டமைபுக்கு. ஏனைய மாவட்டங்களில்  ததேமு க்கு கட்டுக்காசு தேறினால் அதிசயம்.

ஜஸ்டின்,

ஜனநாயகத்துக்கு எப்போதும் கட்டுப் பாடுகள் உண்டு. நாட்டுக்கு நாடு வேறு படும். தலை கீழாய் நிண்டாலும் ஆர்னோல்ட் உங்கள் நாட்டில் ஜனாதிபதியாக முடியாது.

ராணிக்கு விசுவாசமாய் பிரமாணம் எடுக்காவிடில் சின்பெயின் எம்பிகள் யூகே பாராளுமன்றில் பேச முடியாது.

அது போலத்தான் 6 ம் சட்டதிருத்தமும். இலங்கையில் தேர்தல் அரசியல், ஏன் கட்சியாய் பதியவே பிரிவினை எதிர்ப்பு பிரமாணம் எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் மக்கள் முண்ண்னி உட்பட.

ஆக 6ம் திருத்தத்தை தாண்டி தீர்வு கோருபவர்கள் பாராளுமன்றம் போக ஆசைப்படக்கூடாது.

வன்முறை அற்ற முறையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து அதுக்கு மக்கள் ஆதரவிருந்தால் வெற்றியும் பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செத்த கிளிக்குச் சிங்காரம் செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். பலனளிக்கப் போவதில்லை. 

உண்மையில் இன்று கூட்டமைப்புக்குத் தலைமை தாங்க வேண்டியவர் திரு. வித்தியாதரன்.  சரவணபவன் என்ற பெருச்சாளிக்காக மேலும் சொல்லப்போனால் தனது தங்கையின் கணவர் என்பதற்காக மிக முக்கியமான நேரத்தில் ஒதுங்கியவர் அவர்.  (இதை அவரே என்னுடன் நேரில் பேசும்போது சொல்லியிருக்கிறார்) அதைவிட சம்பந்தன் போன்றோருக்கு முன்னால் பம்மிக்கொண்டு இருந்துவிட்டு, இப்போது முன்னாள் போராளிகளை வைத்து கூட்டமைப்பைச் சிதைக்கும் பணியில் வித்தி ஈடுபட்டிருக்கின்றார் என எண்ணத் தோன்றுகின்றது. தமிழ் இளைஞர்களின் போராட்டத்துக்கு துணிந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுத்தவர் அவர், ஈற்றில் மைத்துனருக்காக மட்டுமே தன் இனத்தின் மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியவர். கூட்டமைப்புக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கு தலைமை தாங்க அவருக்கு தார்மீக கடமை கூட உண்டு. கூட்டமைப்புக்குள் சரவணபவன் இடத்தில் வித்தி இருந்திருந்தால் சம்பந்தன் தரப்பு பலவிடயங்களில் இறங்கி வந்திருக்கும். அது மட்டுமல்ல அவர் கிழக்கின் திருமலையைச் சார்ந்தவர் என்பது இன்னும் பலம் சேர்க்கும். வித்தியவர்கள் கூட்ட்மைப்புக்குள் இருக்கவேண்டியவர்! 

  • கருத்துக்கள உறவுகள்

இரு நூறு மாணவர்களுக்கு மூன்று நாலு ஆசிரியர்கள் .இப்படிதான் நான் பார்ப்பது அதானால் கோவம் பெரிதாக வருவதில்லை ஆனால்  இடைக்கிடை பிரம்பும் எடுக்க வேண்டிக்கிடக்கு .மற்றவர்களுக்கு தெரியாததை சொல்லிக்கொடுப்பதில் தப்பில்லை எத்தனை பேருக்கு அறிவை ஊட்டியிருக்கின்றோம் .

எனக்கு என்ர பழைய வர்த்தகவகுப்பு ஆசிரியரின் ஞாபகம் வருகுது

ஒரே புத்தகத்தை வாசிக்கத்தந்துவிட்டு நித்திரை கொண்டுவிடுவார்....

இப்ப விழங்குது

எதற்கு தாயகத்திலும் பிரித்தானியாவிலும் கனடாவிலும் மாணவர்கள் ரியூசனுக்கு அலைகிறார்கள் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆசிரியர்கள் என்று சொல்பவர்களிலும் பார்க்க மாணவர்கள்   "விவேகம்" கூடியவர்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்  இருந்தாலும்

வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் தான்....

அதை கூட்டமைப்பே நன்றாக உணர்ந்துள்ளது....

தமிழர் விடுதலை வேறு, தனித்தமிழ் ஈழம் வேறு.

இரண்டாமாவதை கேட்பது முதலாவதை குழிதோண்டிப் புதைக்கும்.

இவர்களை யாரும் கட்டளை இட்டு கட்டுப் படுத்தவில்லை. மக்கள் நிராகரிப்பர் என்றே எழுதினேன்.

தாம் ஏன் "முன்னாள்" போராளிகள் ஆகினோம்? அதில் உள்ள வரலாற்றுப் படிப்பினையை உள்வாங்கிச்செயல் பட்டால், நானே ஆதரிப்பேன்.

வாக்குக்குகள் பிரியும் என்பதுக்காக ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து சர்வாதிகாரத்துக்கு சலாம் போட முடியாது.

கூட்டமைப்பை தூக்கி அடிப்பது என்று மக்கள் முடிவு செய்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது.

எனது கணிப்பில் இந்த முறை யாழில் ஒரு சீட் கஜேந்திர குமாருக்குப் போகலாம். ஒரு சீட் டக்ளஸ், மிகுதி சீட் 5 கூட்டமைபுக்கு. ஏனைய மாவட்டங்களில்  ததேமு க்கு கட்டுக்காசு தேறினால் அதிசயம்.

கயேந்திரகுமாருக்கு ஒரு சீற் வரும் என்பது தாயகத்தை புரியத்தொடங்கியுள்ளதன் அடுத்தகட்டம்.

உங்கள் எழுத்தில் பெரும் மாற்றம் இது.

இன்னும் வரும்...

ஆனால் அதை தள்ளுவது அதே கூட்டமைப்புத்தான்

கயேந்திரகுமார் அல்ல.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள்  இருந்தாலும்

வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் தான்....

அதை கூட்டமைப்பே நன்றாக உணர்ந்துள்ளது....

கயேந்திரகுமாருக்கு ஒரு சீற் வரும் என்பது தாயகத்தை புரியத்தொடங்கியுள்ளதன் அடுத்தகட்டம்.

உங்கள் எழுத்தில் பெரும் மாற்றம் இது.

இன்னும் வரும்...

ஆனால் அதை தள்ளுவது அதே கூட்டமைப்புத்தான்

கயேந்திரகுமார் அல்ல.....

இது அவருக்கு மட்டுமல்ல,  நாலு எழுத்து வாசிக்க தெரிந்த, நாலு பேரோடு கதைக்க தெரிந்த யாருக்கும் தெரியும். அதை இன்னும் நாலு பேருக்கு தெரியாமல் செய்வதற்க்குதான், ஒரு தண்ட சீற்றை சராவிற்க்கு ராஜதந்திரம் தாரை வாத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு incumbency factor பற்றி தெரியுமோ நான் அறியேன். தேர்தல்களில் இது ஒரு சிறிய அளவில் பாதிப்பேற்படுத்தும் காரணி. தொடர்ந்து வோட்டுப் போடும் ஒரு கட்சி அல்லது நபருக்கு வோட்டுப் போட சலிப்பு ஏற்பட்டு மாற்றிப் போடுவது. கூட்டமைப்பு 2001 இல் இருந்து வென்று வருவதால் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கும்.

ஆனாலும் ஒரு சீட் அளவுக்கத்தான் இருக்கும்.

விசுகர், 

கீழே உள்ளதை தெளிவாக விளங்குங்கள். விளங்காவிட்டால் மீண்டும் மீண்டும் விளங்கும் வரை படியுங்கள்.

1) என் அரசியல் போக்கு - சம்சும் பாதை சரி என்பது.

2) என் கணிப்பு கஜேந்திரக்குமார் மட்டும் வெல்லக் கூடும் என்பது.

உங்களைப் போலல்லாது என் கணிப்பில் என் அரசியல் தாக்கம் செலுத்துவதில்லை. கணிப்பு என்பது நாம் நடக்க இருப்பதை சொல்வது. நாம் நடக்க விரும்புவதைச் சொல்வதல்ல.

இன்னுமொன்றையும் சொல்கிறேன் கேளுங்கள்.

மக்கள் சம்சும் உட்பட கூட்டமைப்பினரை பெருவாரியாக தோற்கடிதால் மக்களும் தற்கொலை அரசியலையே விரும்புகிறனர் என விட்டு விட வேண்டியதுதான்.

உங்களைப் போல் மக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி என் கொள்கைதான் சரி என வாதிடேன்.

உதயனை நம்பி மக்கள் வாக்குப் போடுகிறனர் என்பது மக்களை எம்மைப் போல் அறிவிலிகளாய் எண்ணுவதன் வெளிப்பாடே.

நாங்கள் விக்கிப்பீடியாவை தப்பும் தவறுமாய் படித்து விட்டு சுமந்திரன் ஓன்லைன் டிகிரி செய்தார் என கருத்து எழுதுவது போல் மக்கள் வாக்களிப்பதில்லை.

ஐயா

நேற்றவரை உங்கள் கருத்துப்படியும்

எழுத்துப்படியும்

கயேந்திரகுமார் போன்றவர்களக்கு கட்டுக்காசே மிஞ்சாது என்பது போன்று தான் இருந்தது

இன்று 2001 இலிருந்து கூட்டமைப்பு அரசோச்சுவதால்

ஒரு மாற்றத்துக்கு கயேந்திரகுமார் என்கிறீர்கள்

அதேநேரம் கயேந்திரகுமாரின் கொள்கையை தாயக மக்கள் முற்றாக நிராகரிக்கின்றனர் என்றும் சொல்கிறீர்கள்

மேலும் 

உங்களது சிறீலங்காக்கொள்கையை முன்வைக்கும் மேலும் பல கட்சிகள் அங்கிருந்தும் 

அடத்த தெரிவு கயேந்திரகுமார் என்கிறீர்கள்??

முரண்பாடு  தெரியிலையா?

அல்லது மறுக்கின்றீர்களா??

எனக்கு எந்தத்திணிப்பும் கிடையாது

கூட்டமைப்பு முடங்கினால் ததேமுண்ணணி தான் மக்களின் தெரிவாக இருக்கும் என்பதே

ததேமுண்ணணி தொடங்கிய காலத்திலிருந்தே எனது கணிப்பு....

ஆனால் அது தற்பொழுது வேண்டாம்

அதற்கு கூட்டமைப்பு தவறு செய்யக்கூடாது என்பதே வேண்டுகோள்..

1977 இல்  கூட்டணிவிட்ட தவறை கூட்டமைப்பு விடக்கூடாது என்பதே பிரார்த்தனை....

கூட்டமைப்பு மேல் தாயகத்தமிழருக்கு வெறுப்ப வரக்காரணங்கள் பல..

அவர்களுடன் பேசியதிலிருந்து...

1- சம்பந்தர் ஐயா மற்றும் சுமேந்திரனின் தனி முடிவுகள்

2- விக்கி ஐயாவின் மாகாணசபை ஊடாக நடாத்திக்காட்டிய தமிழர் சார்ந்த விடயங்களைக்கூட இவர்கள் இதுவரை செய்யாதது 

3- இவற்றை வைத்து விக்கி ஐயாவுடனான முரண்பாடுகள்

4- மகாணசபையை  வளர்க்ககிடைத்த சந்தர்ப்பங்களை இவர்களே பயன்படுத்தாது தாமே அரசிடமிருந்து பணம் பெற்றமை

5- தமிழர்களை முட்டாளாக்கும் இரட்டை வேட அரசியல்

6- பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் சுயநலப்போக்குகள் (மக்களுக்காக எதுவும் செய்யாமை)

இப்படிப்பல....

உங்களுக்கு incumbency factor பற்றி தெரியுமோ நான் அறியேன். தேர்தல்களில் இது ஒரு சிறிய அளவில் பாதிப்பேற்படுத்தும் காரணி. தொடர்ந்து வோட்டுப் போடும் ஒரு கட்சி அல்லது நபருக்கு வோட்டுப் போட சலிப்பு ஏற்பட்டு மாற்றிப் போடுவது. கூட்டமைப்பு 2001 இல் இருந்து வென்று வருவதால் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கும்.

ஆனாலும் ஒரு சீட் அளவுக்கத்தான் இருக்கும்.

விசுகர், 

கீழே உள்ளதை தெளிவாக விளங்குங்கள். விளங்காவிட்டால் மீண்டும் மீண்டும் விளங்கும் வரை படியுங்கள்.

1) என் அரசியல் போக்கு - சம்சும் பாதை சரி என்பது.

2) என் கணிப்பு கஜேந்திரக்குமார் மட்டும் வெல்லக் கூடும் என்பது.

உங்களைப் போலல்லாது என் கணிப்பில் என் அரசியல் தாக்கம் செலுத்துவதில்லை. கணிப்பு என்பது நாம் நடக்க இருப்பதை சொல்வது. நாம் நடக்க விரும்புவதைச் சொல்வதல்ல.

இன்னுமொன்றையும் சொல்கிறேன் கேளுங்கள்.

மக்கள் சம்சும் உட்பட கூட்டமைப்பினரை பெருவாரியாக தோற்கடிதால் மக்களும் தற்கொலை அரசியலையே விரும்புகிறனர் என விட்டு விட வேண்டியதுதான்.

உங்களைப் போல் மக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி என் கொள்கைதான் சரி என வாதிடேன்.

உதயனை நம்பி மக்கள் வாக்குப் போடுகிறனர் என்பது மக்களை எம்மைப் போல் அறிவிலிகளாய் எண்ணுவதன் வெளிப்பாடே.

நாங்கள் விக்கிப்பீடியாவை தப்பும் தவறுமாய் படித்து விட்டு சுமந்திரன் ஓன்லைன் டிகிரி செய்தார் என கருத்து எழுதுவது போல் மக்கள் வாக்களிப்பதில்லை.

இதற்குத்தானே பொறுமையாக வகுப்பு எடுக்கின்றோம் .நாங்கள் என்னவோ சொல்ல அவர்கள் ஏதோ பதில் போடுவார்கள் இருந்தாலும் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் நாங்கள் பொறுமையை இழக்க கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

குறிக்கோள்கள் சரியானபடி முன்னெடுக்க நிச்சயமாக முன்னாள்போராளிகள் முனைவார்கள். இன்றைய நிலையில் இந்த அமைப்பு அவசியமாக தோன்றுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.