Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனது விருப்பம் நிராகரிப்பு - அனந்தி சசிதரன்

Featured Replies

130920122022_jaffna_violence_624x351_bbc

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் அனந்தி சசிதரன்

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.
தனித்துப் போட்டியிடுவதா- இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன.

வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைக் களமிறக்குவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவர், விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவி.
போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுவதாக அனந்தி சசிசதரன் கூறினார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150705_anandi_elections

  • Replies 62
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிழட்டு கட்சியை நம்பிக்கொண்டிராமல் அனந்தி புதிதாய் முளைத்துள்ள ஜனநாயகத்துக்கான சிலுவைப் போராளிகள்  கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும்.

பாராளுமன்றத்துக்கு போட்டி போடமுன் மாகாண சபையில் இருந்து ராஜினாமா செய்யோணும் என நினைக்கிறேன். அங்க இருக்கு அக்காக்கு செக்மேற்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான முடிவை தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது.  மக்கள் ஆதரவு தனக்கு இருக்கும் என்றால் அனந்தி ததேமு இல் இணைந்து கேட்கலாம். இல்லாவிட்டால் இவரைப் போன்றவர்களுக்கே என தொடக்கப்பட்டிருக்கும் "ஜனநாயக போராளிகள்" கடையில் இணைந்து போட்டியிடலாம். மேலும் சொல்லப்போனால் வீணை சின்னத்தில் கூட போட்டியிடலாம்!

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு பிழை எனக் கூற முடியாது , ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் த.தே.கூ வின் முடிவுக்கு மாறாக நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்ற ஒன்றைத்தொடங்கி பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியது உச்சக் கட்ட அநாகரிகம், அன்று நீங்கள் அமைதியாக இருந்திருக்கலாம் . 

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த தமிழினப் படுகொலையையும் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி கிழடுகளிடமும் சம் சும் சட்டாம்பிக்கும்பலிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கொலைக்கும்பல்களிடமும் ஒட்டுக்குழுக்களிடமும்.. நீங்கள் அதிகம் எதிர்பார்த்து விட்டீர்கள்.

அதுகள் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் சவடால் விடுவதும் பின் தேர்தலில் வென்ற பின் வாக்குப் போட்ட மக்களை ஏமாற்றி சிங்களத்தின் பதவிக் கதிரைகளை அலங்கரிப்பதும்.. தான் சன நாய் அகமாக எண்ணி செய்து வருகின்றனர். சிங்களமும் ஹிந்தியாவும் சர்வதேசமும் அதில் ஆதாயம் அல்லது எந்த பாதிப்பையும் அடையாததால் அவற்றை ஊக்கு விக்கின்றன.. அல்லது விட்டு வைக்கின்றன.. சன நாய் அக முலாம் அதற்கு.

இதனால் காலம் காலமாக பாதிக்கப்பட்டது எமது மக்கள் மட்டுமன்றி எதிரிக்கு எதிராக வெடிக்க வேண்டிய துப்பாக்கிகளும் குண்டுகளும் இவர்களை நோக்கியும் திரும்ப வேண்டி வந்தததை நீங்கள் மறந்தது மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும் என்ற ரீதியில் அமைந்திருந்தாலும்..

இந்த சோரம் போகக் கூடிய கூட்டம் திருந்தாது. திருத்த வேண்டிய கடப்பாடு மக்களுக்கு இல்லை. ஒரேயடியா இதுகளை அரசியலில் இருந்து விரட்டனும்.. அதை விடுத்து.. இவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி தமிழ் மக்களுக்கு சன நாய் அகம் காட்டத் தேவையில்லை. தமிழ் மக்கள் சன நாய் அகம் கேட்டு அல்ல.. இத்தனை உயிர் தியாகங்களை செய்தார்கள். தமிழ் மக்கள் கேட்டது ஆட்சி உரிமை. நில உரிமை. அதனை தாரைவார்க்கத் துணிந்த கூட்டத்திற்கு துணை போவதிலும் இருக்கும் மக்கள் ஆணையை பாதுகாத்து அதன் மூலம் ஆற்றக் கூடிய பணியைச் செய்யுங்கள்.

காலம் உங்களுக்கு இன்னும் தெளிவான ஆணையை மக்களிடம் இருந்து பெற்றுத் தரும் போது அதில் நீங்கள் அங்கம் வகிப்பதே நல்லது. சிங்கள பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மூலம் இவர்கள் சாதித்தது வாக்குப் போட்ட மக்களை சாவு கொள்ளும் ஆக்கிரமிக்கும் சட்டங்களை நிறைவேற்ற வேடிக்கை பார்த்ததும்.. மாதா மாதம் அதனை நீட்டி அதில் குளிர் காய்ந்த சிங்களத்தை பாதுகாத்ததும் தான்.

அப்படிப்பட்ட ஒரு பிரதிநிதித்துவம் உங்களுக்கு அவசியமா..! சிந்தியுங்கள். ஏலவே கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து செயற்படுங்கள். மக்கள் உங்களை இருத்த வேண்டிய இடத்தில் இருத்துவார்கள். மக்களை ஏய்ப்பவர்கள் தொடர்ந்து அதனைச் செய்ய முடியாது.அவர்கள்.. தூக்கி எறியப்பட அதிக நேரம் மக்களுக்கு அவசியமில்லை.  மக்கள் அதனை உணர வழி செய்வது தான் இன்றைய அவசியம். தொடர்ந்து மக்களும் மண்ணும் ஏமாற்றப்பட அனுமதிக்க முடியாது தானே. !!

Edited by nedukkalapoovan
கூடிய கருத்து விளக்கத்துக்காக + பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நாடளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு ஒன்று செய்ய முடியாது உண்மையிலயே மக்களுக்கு சேவை செய்ய நினைத்தால் தொடர்ந்து மாகாணசபையில் சேவைசெய்து ......மாகாணசபையை தமிழ்மக்களின் ஆட்சி மையம் ஆக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை போல சம்பந்தருக்கு  ஜால்ரா போடாவிட்டால் கட்சிக்குள் இருக்க முடியாது. உட்கட்சி போராட்டம் என்பது ஜனநாயகத்தின் சிறப்பு பகுதி. அதனை கூட்டமைப்பு ஏற்கனவே இழந்து விட்டது என நினைக்கிறேன். இது அனந்திக்கு மட்டுமல்ல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி கூட்டமைப்பில் அதிகப்படியான வாக்குகளை பெற்றவர்கள் கட்சியின் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமல் பின் தள்ளப்பட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள்? கொலைக்குழுக்களில் வந்தவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு உறுப்பினராக்கப்பட்டது மட்டுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடம் கட்சியில் கேள்வி கேட்டவர்களுக்கு இல்லையா? அனந்தி பிழை விட்டிருந்தால் கட்சியின் தலைமைப்பீடம் கண்டிக்க வேண்டும். ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். சங்கரியருக்கு எவ்வகையில் கடந்த முறை தேர்த்தலில்  போட்டியிட வைக்கப்பட்டார்? இன்று கூட்டமைப்பு, தமிழரசு கட்சியை காறி துப்புகிறார். இப்படியான ஆட்கள் தான் சம்பந்தர் தேடும் ஆட்களா? ஏதோ கட்சிக்காக மக்கள் வாக்கு போடுகிறார்கள் என்பதற்காக உள்ள சப்பு சவருகளை கொண்டு வந்து கட்சியில் இணைப்பதன் மர்மம் என்ன? இந்தியா பின்னணியில் இருந்து மகுடி ஊதுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற ஆசனம் ஒன்றிற்காக எதையும் இழக்கலாமோ???

விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய விடுதலை இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று கோசம் எழுப்பியவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதற்கே அவர்களுக்கு அருகதை இல்லை என்றவர்கள்... இணையங்களிலும், சமூக வலைத் தளங்களிலும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இப்போ பாராளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக அவர்களை நாடினால், அவர்கள் மீது முன்பு வாரியிறைத்த குற்றங்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் கழுவப் பட்டு விடுமா????? அப்போ தமிழ்த் தேசிய அரசியலிலுக்கும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற, பாராளுமன்ற அரசிலின் பொதுத் தத்துவம் பொருந்துமோ????? ஒன்றுமே புரியலை!

 

885594_1655845104652984_2546304039209218
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்ற ஆசனம் ஒன்றிற்காக எதையும் இழக்கலாமோ???

விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய விடுதலை இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று கோசம் எழுப்பியவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதற்கே அவர்களுக்கு அருகதை இல்லை என்றவர்கள்... இணையங்களிலும், சமூக வலைத் தளங்களிலும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இப்போ பாராளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக அவர்களை நாடினால், அவர்கள் மீது முன்பு வாரியிறைத்த குற்றங்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் கழுவப் பட்டு விடுமா????? அப்போ தமிழ்த் தேசிய அரசியலிலுக்கும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற, பாராளுமன்ற அரசிலின் பொதுத் தத்துவம் பொருந்துமோ????? ஒன்றுமே புரியலை!

 

885594_1655845104652984_2546304039209218

முள்ளிவாய்க்கால் தோல்வி என்பது , அடிமுடி தேடின கதைபோல எல்லாப் பக்கங்களாலும் எல்லாத்திசைகலாலும் பரந்து விரிந்து செல்கிறது . 

நடேசன் தனது இறப்புக்கு முன் , bbc இலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ சொல்லும் போது  விடுதலைபுலிகளுக்கு பிந்திய என்றொரு காலம் இல்லை என்று சொன்னவர்.

அந்த காலத்தில், பலரைப்போல நானும் அது ஒரு முட்டாள் தனமான கருத்து என்று நினைத்திருந்தேன் அதை சில இடங்களில் சொல்லியும் இருக்கிறேன் .  

ஆனால் இன்று, 

அது பாடசாலை மாணவர்களுக்கு மதன மோதகம் வித்தால் என்ன , குடிதண்ணீரில் கழிவு ஆயில் கலந்தால் என்ன , 9-10 பேர் சேர்ந்து பாடசாலை மாணவியை கொலை செய்தால் என்ன, புலிகளின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்து பாராளுமன்றம் போனதன் பின் அங்கே எங்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றால் என்ன, அவர்களின் கொலைப்பட்டியலில் எனது பெயர்தான் முதலில் இருந்தது என்று சொன்னால் என்ன , என ஒரு கட்டுபாடற்ற ஒழுங்கற்ற சமுதாயமாக உருவாகி வருகிறது .

சமூகமே வன்முறையாளர்கள்  ஆகவும் , பொறுப்பற்றவராகவும் மாறும் போது சமூகத்திற்கு வேண்டிய மற்றம் நடப்பது என்பது கல்லில் நார் உரிபதர்ற்கு சமம் . 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அங்கினை இங்கினை நிண்டு விசர்க் கதை கதைக்கிறதை விட்டிட்டு "ஜனநாயகப் போராளிகளின்" லையின்ல போய் நிக்கச் சொல்லுங்கோ! அதுதான் சொல்லீட்டம் அல்லோ சீட் கூட்டமைப்பில தரமாட்டம் எண்டு. போராளிகளிண்ட கட்சியிலை நிண்டா பதி பிடிச்ச பிள்ளைகளுக்கு பதில் சொல்லலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணைக்கு ஏனுங்கோ பின்னடிக்கிறீர்கள். விசாரணைக்கு வந்தால் பாலசந்திரனை கொன்றதில் இருந்து கணக்கு காட்டுவமில்ல. அறளை பெயர்ந்ததுகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எடுத்து தந்த மாதிரி தான்

அடிச்ச கணக்கு காட்டுவீ ங்களோ 

  • கருத்துக்கள உறவுகள்

உமா LA  டாக்டரிடம் வாங்கிய 2 மில்லியன் டொலர்கள்.. எதுக்கு எண்டு கேட்கேல்லை.முழு இலங்கையையும் பிடிக்கவாம். எங்கை போய் முட்ட..அந்த கணக்கையும் கையோடை ஒருக்கால் காட்டிடுங்கோ அண்ணை பெரிய புண்ணியமாய் போகும். நிச்சயமாய் உங்களுக்கு தெரியாமல் போகாது. உமாவோடை டோழோடு டோழ் கொடுத்த ஆளல்லோ நீங்கள்

அடிச்ச கணக்கு காட்டுவீ ங்களோ 

என்ன அண்ணருக்கும் பங்கு கிடைக்க வில்லை என்றா மனக்கொதிப்பா ? அடிச்சவர்கள் சிலர் தான் .. அதற்காக எப்படி புலிகள் எல்லாரையும் தப்பு சொல்வீர்கள் அறிவாளி ஐயா ? . அடிச்சவர்கள் எத்தனை நாளைக்கு தப்ப முடியும் ... 

அதற்காக ஏனப்பு உங்களுக்கு எப்பவுமே ஒட்டு மொத்த புலிகள் மீது காச்சல் ... இல்லாட்டி டாக்கியர் மாதிரி எதர்ப்பு கதை கதைத்து நீங்களும் அறிவாளிகளில் ஒருவர் என்ற நப்பாசையா ? .

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ... பார்ப்பம் எத்தனை நாளைக்கு இந்த வண்டி என்று 

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலமாய் உப்பிடி தானே உந்த வண்டில் ஓடுது.ஹி ஹி.

இந்த கிழட்டு கட்சியை நம்பிக்கொண்டிராமல் அனந்தி புதிதாய் முளைத்துள்ள ஜனநாயகத்துக்கான சிலுவைப் போராளிகள்  கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும்.

பாராளுமன்றத்துக்கு போட்டி போடமுன் மாகாண சபையில் இருந்து ராஜினாமா செய்யோணும் என நினைக்கிறேன். அங்க இருக்கு அக்காக்கு செக்மேற்.

 

அவிங்கதான் தெளிவா சொல்லிட்டாங்களே அது முன்னாள் போராளிகளின் கூட்டமைப்பாம் முன்னால் போராளிகளின் மனவியர் கூட்டமைப்பு இனித்தானாம் வரும்.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் ஒவ்வொரு குரூப் கிளப்பிக்கொண்டு வெளிக்கிடும்.

உண்மையில் புதிய கட்சிகள் உருவாவது நல்லதல்ல ..முன்னால் போராளிகள் யார் இவர்களை இயக்குவது யார் அரசங்கம அல்லது தெளிவான ஒரு தலைமையா இப்படியான நிலைமையில் அவர்கள் தேர்தல் கேட்பது இப்போதைக்கு நல்லதல்ல ... அவர்களை பற்றிய ஒரு தெளிவு மக்கள் முன் வரவேண்டும் ... அதன் பின்னர் தான் வாக்களிப்பது நல்லம் ..அல்லது அவர்களில் இருந்து சிறந்த தலைவர்களை கூட்டமைப்பு அல்லது தேசிய முன்னணி கட்சிகள் இடம் கொடுத்து அவர்களுக்கான ஒரு பாதையை உருவாக்கலாம் ...

தற்போதைய நிலையில் வாக்குகள் சிதறடிப்பது நல்லதல்ல ... .. சம்பந்தன் சுமந்திரன் அவர்கள் காட்டாயம் தங்களது தான் தோன்றி தனமான அரசியலை கைவிட்டு மாவீரகளின் உண்மையான கனவை நனவாக்க அரசியல் செய்ய வேண்டும் இல்லாது விடில் மக்கள் வெளியேற்றுவார்கள் ...

போராளிகள் கட்சி மக்கள் முன் வெளி வந்து தமது அரசியலை தெளிவாக முன் கொண்டு வரவேண்டும் .. அவர்களின் நடவடிக்கைகள் நோக்கங்கள் நன்றாக இருக்கும் பொது மக்களின் தெரிவு அவர்கள் தான் இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை ... ஆனால் தற்போது இவர்களின் உண்மைத்தன்மை எப்படி என்று அறிவது கஷ்டம் ..அதனால் இவர்கள் விரைந்து மக்கள் முன் வரவேண்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது சரிபிழை கதைக்க வக்கில்ல இப்ப வந்திட்டினம்.........

 
இதைத் தானே நான் பலமுறை யாழ் களத்தில் கேட்டுவிட்டேன் ,ஆனால் நான் திருகோணமலையில் புலிகள் செய்த தவறுகளை கேட்டுமிருக்கின்றேன் ,அதற்குரிய தீர்வுகளை பெற்றுமிருக்கின்றேன் .முன்னாள் அரசியல் பொறுப்பாளர் ரூபனை ,ரூபனுக்கு முன்னாலேயே யோகியிடம் அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றேன் .
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது சரிபிழை கதைக்க வக்கில்ல இப்ப வந்திட்டினம்.........

வெட்கம் கெட்ட, வாக்குப் பொறுக்கி.... அரசியல்வாதிகளான.... 
சம்பந்தனையும், சுமந்திரனையும்.... அரசியல் களத்திலிருந்து, நீக்க வேண்டிய கால கட்டம் நெருங்கிக் கொண்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து திரியும் அனந்தி

Published on July 6, 2015-10:03 am   ·   No Comments

ananthiவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து வருகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து புகழ் பெற்ற அனந்தி தமிழரசுக்கட்சியிடம் தன்னை வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு வேண்டிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயற்சித்த போதிலும் அது முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அனந்தியை தனது கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனந்தியை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் முயற்சி செய்ததற்கு பல காரணங்கள் உண்டு.

அனந்தி சசிதரன் தன்னை புலி இயக்க பெண் என சமூகத்தில் அறிமுகப்படுத்தி கொண்டாலும் அவர் தீவிர ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க குடும்பத்தை சேர்ந்தவராகும். அனந்தியின் சகோதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்;தில் இருந்து யாழ்ப்பாணத்தில் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் என பல சமூகவிரோத செயல்களை செய்தவர். இதனால் இவருக்கு விடுதலைப்புலிகள் மரணதண்டனை வழங்கினர். இதன் பின்னர் எழிலலை திருமணம் முடிந்தபின்னரே அவர் தன்னை புலி பெண்ணாக மாற்றிக்கொண்டார். எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் தொடர்பை துண்டித்து கொள்ளவில்லை. தன்னுடைய இயக்கத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது முன்னையை இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தியும் விரும்பி இருந்தனர்.

அனந்தியை தனது இயக்கத்தின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொண்டால் அனந்திக்கு வாக்களிப்பவர்கள் தனது இலக்கத்திற்கும் வாக்களிப்பார்கள் இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெறுபவர்களில் அதிக விருப்பு வாக்கு தனக்கு கிடைக்கும் என சுரேஷ் நம்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைக்காது என அறிந்து கொண்ட அனந்தி தற்போது கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அவர்களை நாடியுள்ளார். அவர்கள் அனந்தியை சேர்த்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் தேர்தல் பிரசாரங்கள் கொடும்பாவி எரிப்பாகவும் பொய் புரட்டுக்கள் நிறைந்ததாகவும் மாறும் என நம்பபடுகிறது.

தனிநாடு கோரமாட்டோம், பிரிவினைக்கு ஆதரவாக செயல்படமாட்டோம், ஒற்றைஆட்சியின் கீழ் சிறிலங்கா ஜனநாயக குடியரசிற்கு விசுவாசமாக செயல்படுவோம் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு இவர்கள் எதனை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரப் போகிறார்கள்?

http://www.thinakkathir.com/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் சொன்னா விளங்காதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் தரமாட்டம்! 

  • கருத்துக்கள உறவுகள்

"தினக்குரல்" எடுத்த, வாந்தி.... ஹரிக்கும், வாலிக்கும் தொற்றி விட்டது. 

ஹி.. ஹீ..... கீய்.................

புலிகள் இருக்கும் போது சரிபிழை கதைக்க வக்கில்ல இப்ப வந்திட்டினம்.........

சொன்னாலும் விளங்ககூடியவர்களா அவர்கள் .

எத்தனை பேர்கள் எத்தனை விதமாக சொல்லிப்பார்த்தார்கள் .மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது .

அதுதான் முடிவு அப்படி வந்தது .

சொன்னாலும் விளங்ககூடியவர்களா அவர்கள் .

எத்தனை பேர்கள் எத்தனை விதமாக சொல்லிப்பார்த்தார்கள் .மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது .

அதுதான் முடிவு அப்படி வந்தது .

2002 வரை அவர்கள் பெற்ற பெரு வெற்றிகளின் போது எங்கே இருந்தீர்கள் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.