Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்….?? குழப்பும் கருணா.

Featured Replies

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்….?? குழப்பும் கருணா.

கருணா விற்கு பொதுஜனஐக்கியமுன்னணி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காது விட்டவுடன் ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று கருணாவைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கருணா.

தனது ஆதங்கங்களைத் தெரிவித்து கவலைப்பட்டுள்ளான். அப்போது அவன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ

எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார்.

சுமந்திரனும் தமிழர்களுக்காக சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றார்.

ஆனால் அதனை இல்லாது செய்வதற்கு புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சிலர் முயன்று கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை நான் சொல்லுவதால் நான் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் கதைப்பவன் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

கூட்டமைப்பின் தலைவரிடம மகிந்தவும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது எனக்கத் தெரியும். சம்மந்தனுக்கு புலிகளைக் கண்டேலே அலர்ஜி.

இருந்தும் புலிகளின் ஆயுதத்தால் தனக்கும் ஏனைய மென்போக்கு அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றே புலிகள் சொல்வதைக் அவர் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு அப்போதே தெரியும்.

புலிகள் அழித்தொழிக்கபபட்டதால் தற்போது தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். இறுதியுத்தத்தில் பிரபாகரனைப் படையினர் உயிருடன் பிடித்தது நுாறுவீதமான உண்மை.

ஆனால் பிரபாகரன் எவ்வாறு உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் என்னைக் கொண்டு சென்று காட்டினார்கள்.

பிரபாகரன் கடுமையான சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. பிரபாகரன் இறந்ததை நம்பாத சுரேஸ்பிரேமச்சந்திரனும் இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களும் என்னை அனுகி ‘அச் சம்பவம் உண்மையா‘ எனக் கேட்ட போது எனக்கு சிரிப்பாக இருந்தது.

பிரபாகரனின் உடலைப் பார்த்தவுடன் எனக்கு தாங்கமுடியாத அழுகை ஏற்பட்டது. இருந்தும் அடக்கிக் கொண்டேன். சிறிது நேரத்திலேயே நான் நோமல் நிலைக்கு வந்துவிட்டேன்.

ஏனெனில் இனிமேல் தமிழ்ச் சனம் அமைதியான முறையில் இருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே.

பிரபாகரனை உடலாகப் பார்த்த ஓரிரு நாட்களின் பின்னர், பிரபாகரனை உயிருடன் மகிந்தராஜபக்சவிடம் இழுத்துக் கொண்டு வந்ததாகவும் மகிந்த பிரபாகரன் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் முக்கிய சிங்கள அமைச்சர்கள் இருவரால் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

நான் இது தொடர்பாக ஒரு சமயம் மகிந்தவிடம் நேரடியாகவே கேட்டேன். மகிந்த ஒரு புன்முறுவலை மாத்திரம் அதற்குப் பதிலாகத் தந்துவிட்டு வேறு விடயங்களுக்கு கதையை மாற்றியதால் நான் அதன் பின்னர் இது பற்றிக் கேட்கவில்லை.

பிரபாகரன் தனது மனைவியையும் மகளையும் உயிருடன் படையினரிடம் அகப்பட வைத்தது அவரது முழு முட்டாள்தனம்.

பிரபாகரன் மனைவியையும் பிள்ளையையும் இறுதி யுத்தத்தின் போது தன்னுடன் வைத்திருந்துள்ளதை நானே நம்பவில்லை.பின்னரே எனக்கு எல்லாம் தெரிந்தது.

சரணடைந்த முக்கிய தளபதிகள் நாய்க்குட்டிகள் போல எங்கள் கால்களின் கீழ் உயிருடன் கிடந்தார்கள் என முக்கிய படையதிகாரி தெரிவித்த போது எனக்கு குறித்த சரணடைந்த தளபதிகள் மீது கடும் கோபம் ஏற்பட்டது.

என்னைத் துரோகியாக கூறியவர்களே படையினரிம் இவ்வாறு சரணடந்தவர்கள் எனத் தெரி்ந்ததால் அவர்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

http://www.jvpnews.com/srilanka/117403.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எதுவென்று சொல்லாமல் ஜேவிபி இப்படியான கதைகளைத் திரிக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை உடலாகப் பார்த்த ஓரிரு நாட்களின் பின்னர், பிரபாகரனை உயிருடன் மகிந்தராஜபக்சவிடம் இழுத்துக் கொண்டு வந்ததாகவும் மகிந்த பிரபாகரன் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் முக்கிய சிங்கள அமைச்சர்கள் இருவரால் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இவர் சுய நினைவுடன் தான் பேசுகிறாரா. தானே முன் சொன்னதை பின்னால் மறுதளிப்பது போல் உள்ளது. அல்லது சிங்கள சார்ப்பு தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை இன்னும் பிரபாகரனின் நாமம் கொண்டு கடுப்பேற்ற.. எடுத்து விடுங்கின்றனவா. :grin:

ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை .

அடிச்சு பிடிச்சு பதிலை எழுதி பின்னர் மொட்டாக்குடன் திரியவேண்டி வரும் என்று நினைகின்றார்கள் போல .

  • கருத்துக்கள உறவுகள்

what_does_the_fox_say_by_spunkypoptart-d

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை .

அடிச்சு பிடிச்சு பதிலை எழுதி பின்னர் மொட்டாக்குடன் திரியவேண்டி வரும் என்று நினைகின்றார்கள் போல .

தயவு செய்து தமிழனாக வேண்டாம் மனிதனாகவாவது  சிந்தியுங்கள்

கருத்துவேற்றுமைகள் இருக்கலாம்

ஆனால் பிரபாகரன் என்கின்ற போராளி

எதைச்செய்தாலும் அதில் தமிழர் நலனே முன்னின்றது

அதன் பின் போர்முனைத்தோல்விகள்

களத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் 

அவரின் மேல் உள்ள இந்த மேன்மைநிலையை எதுவும் செய்யாது...

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் பிரபாகரன் யாருடைய மரணம்.. சரணடைவையும் எள்ளி நகையாடியது கிடையாது. அது எதிரி சிங்கள இராணுவமாக இருக்கட்டும்.. இந்திய இராணுவமாக இருக்கட்டும்.. ஒட்டுக்குழுக்களாக இருக்கட்டும். ஆனால் கருணா கும்மான் போன்ற சில்லறைகள்.. சொந்த வக்கிர வங்குரோத்து அரசியலுக்காக எந்தப் பொல்லாப்பையும் பேசிப் பிழைக்கக் கூடிய இழி நிலையை அடைந்துள்ளன.

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க? தலவர் உயிருடன் பிடிபட்டாரா இல்லை சரண் அடைந்தாரா 

கருநாய் இன்னும் சிலநாட்களில் தெருநாய்.... அந்த நாயின் கதையை ஒருகதையா என்று கணக்கெடுக்காமல் விட்டா.....

ஒருசிலர் தமது வக்கிரபுத்தியை காட்டுகிறார்கள்....

அண்ணன் பிரபாகரன் இருக்குறாரோ இல்லையோ வேற கதை... ஆனால் பெயரைக்கேட்டாலே நடுங்குதெல்லே..... அதுதான் முக்கியம் 

பொன்சேகாவுடன் நின்று விளக்கு பிடித்தமாதிரித்தான் கதை போகுது

Edited by Surveyor

ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை .

அடிச்சு பிடிச்சு பதிலை எழுதி பின்னர் மொட்டாக்குடன் திரியவேண்டி வரும் என்று நினைகின்றார்கள் போல .

வீரனை இன்னொரு வீரனுக்கு தான் புரிந்து கொள்வது முடியும் ...வெஞ்சின காரர்களால் இப்படிதான் ..சொல்ல முடியும் ... 

தலைவரை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை ...அவர் செயல்களே பேசும் ...

புண்ணாக்குகள் இதனை விளங்க வேண்டிய அவசியமில்லா ...சித்தருக்கு கழுவ ஆட்கள் இல்லையாம் ....

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க? தலவர் உயிருடன் பிடிபட்டாரா இல்லை சரண் அடைந்தாரா 

ஏனப்பு இல்லாட்டி போகாதோ .....

வீரனை இன்னொரு வீரனுக்கு தான் புரிந்து கொள்வது முடியும் ...வெஞ்சின காரர்களால் இப்படிதான் ..சொல்ல முடியும் ... 

தலைவரை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை ...அவர் செயல்களே பேசும் ...

புண்ணாக்குகள் இதனை விளங்க வேண்டிய அவசியமில்லா ...சித்தருக்கு கழுவ ஆட்கள் இல்லையாம் ....

ஏனப்பு இல்லாட்டி போகாதோ .....

போகுதோ போகேல்லயோ அது வேற. உங்களுக்கு உண்மை தெரிஞ்சா சொல்லுங்க

தலைவர் பிரபாகரனைப் பொறுத்த வரை அவரது இறுதிக் கணங்கள் என்பது பலருக்கும் புதிராகவே இருக்கின்றது. இந்த நிலையில் அவர் இராணுவத்திடம் சரணடைந்தார் அல்லது பிடிபட்டார் என்பதை நூறு வீதம் மறுதலிப்பதற்கு முடியாது.

அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக இருக்கும் சிங்களப் பொறியியலாளராக இருக்கும் சிங்களவர் ஒருவர் தனது சகோதரன் பனாகொடை இராணுவ முகாமில்  உயர் பதவியில் இருக்கிறார் எனவும் யுத்தத்தின் இறுதி நாட்களி;ல பிரபாகரன் அங்கு கொண்டுவரப்பட்டார் எனவும் கூறியதாகவும் எனது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவரது கூற்று 100 வீதம் உண்மையாக இருக்கும் எனக் கூற முடியாது தான் என்றாலும் இதனை 100 வீதம் பொய் யென்று ஒதுக்கிவிடுவதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் இல்லை.

என்னை பொறுத்தவரை தலைவர் சரண்டைந்திருக்க மாட்டார் . நச்சுக்குண்டு மற்றும் காட்டிக்கொடுப்புக்களால் உயிருடன் பிடிபட்டிருக்கலாம்.

ஆனால் கேவலம் அதையும் பார்த்து இரசித்து கைகொட்டி சிரிக்க  

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆமியிடம் மாட்டக் கூடாதேனே பெட்ரோல் கலனுடன் திரிஞ்ச மனுசன், சிங்களவனிடம் சரணா?

அவர் அடித்தாராம், இவர் கேட்டாராம், அவர் சிரித்தாராம்... சும்மா, அவிச்சு இருக்கிறார் அம்மான்.

முதலாவது, பிரபாகரன் பிடிபட்டு இருந்தால், காலி முகத்திடலில் கட்டித் தூக்கி ஒரு களியாட்டக் கண்காட்சியே நடத்தி இருப்பார்கள். 

சவூதி போல, கட்டி வைத்து கல் எறிய என்று ஒரு கூட்டமே வந்து இருக்கும். பிரான்சின் 16ம் லூயிக்கும்,  இத்தாலிய மூசொலினிக்கும், ரொமேனியா நிகோலஸ்க்கும், லிபிய   கடாபிக்கும் நடந்தது தான் நடந்து இருக்கும்.

அட போங்க அம்மான். மப்பு இறங்க முன்னம், இன்னு மொரு கிளாசை அடிக்கிறது... என்னகிறீங்க ?

Edited by Nathamuni

நாதமுனியின் கருத்துடன், உடன் படுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சொல்வது 100% யதார்தம்.

வணக்கம் கோசான் அண்ணை,

எங்கை அண்ணை சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்திட்டியல்

நாதமுனி சொல்வது 100% யதார்தம்.

ம்ம் நாதம் சொல்வதே யதார்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன உவங்கள் இவ்வளவு காலமும் இருந்து போட்டு புதுப்புதக் கதையெல்லாம் விடுறாங்கள்.  எலக்ஸன் கிட்டுதெல்லே. அதான்

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன உவங்கள் இவ்வளவு காலமும் இருந்து போட்டு புதுப்புதக் கதையெல்லாம் விடுறாங்கள்.  எலக்ஸன் கிட்டுதெல்லே. அதான்

ஓமோம்

கேட்க காதுகள் இல்லையாம்

கொடுக்கப்போறியளே.....

நல்லா காது கிழிய ஓதுவினம்...

ஊரில் சொல்வார்கள்

சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு.........??

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான், கிடைக்கப் போற MP பென்சனோட ஒதுக்கிப் போகாம மாத்தறை மகிந்த ஊர்வலத்தில தலை காட்டும் போதே நினைத்தேன், இவருக்கு பெண் தவளையை அழைப்பதாக சத்தம் இட்டு பாம்பினை வரவழைக்கும் மாரித்தவளை நிலை தான் வரப் போகுது என்று.

அங்க ஒன்றும் தேறவில்லை என்றவுடன், ரணில் பக்கம் பாயலாமா எண்டு பார்க்கிறார்.

துரோகிகளை யாரும் நம்பப் போவதிலையே. பாம்பு 600 பொலிசார் கொலை என்ற கோணத்தில் வரலாம்.  :shocked:

Edited by Nathamuni

அம்மான், கிடைக்கப் போற MP பென்சனோட ஒதுக்கிப் போகாம மாத்தறை மகிந்த ஊர்வலத்தில தலை காட்டும் போதே நினைத்தேன், இவர் பெண்ணை அழைப்பதாக சத்தம் இட்டு பாம்பினை வரவழைக்கும் மாரித்தவளை நிலை தான் வரப் போகுது என்று.

அங்க ஒன்றும் தேறவில்லை என்றவுடன், ரணில் பக்கம் பாயலாமா எண்டு பார்க்கிறார்.

துரோகிகளை யாரும் நம்பப் போவதிலையே. பாம்பு 600 பொலிசார் கொலை என்ற கோணத்தில் வரலாம்.  :shocked:

அண்ணை உந்தப்பென்சன் அவருக்கு ஒருநாள் செலவுக்கு காணுமோ தெரியாது

அவர் அங்கை இருக்கேக்கையே செல்வாக்கா இருந்தவர்....

ஆள் கலதாரி கிளப்பில தான் வாழ்கையே ஓட்டுறவர்...அவருக்கு நிறைய காசு தேவை அண்ணை

எப்படி இருந்தாலும் கருணா சொல்வதை ஏற்க என்னாலும் முடியவில்லை. பிரபாகரன் பற்றிய எனது கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் அவர் தமிழ் ஈழத்திற்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்த சுத்த வீரன் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. நிச்சயமாக அவர் உயிருடன் பிடிபட சந்தர்ப்பமில்லை.

நன்றி  சகோதரா..

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை இப்போ கிள்ளி விடுவதே மகிந்ததான்.

பார்த்தாயா எங்கள் மெதமுலான வீரனின் சூரத்தை என்று சிங்கள மக்களை உசுப்பேத்த.

கூடவே சம்பந்தனுக்கு புலி எண்டால் அலர்ஜி என்பதன் மூலம் கூட்டமைப்பின் பக்கம் தீவிர தமிழ் வாக்குகள் போகாமலும் ஒரு கவர்.

சிவாஜி லிங்கம், குதிரை கஜன், கருணா இவர்கள் எல்லாம் துணிவாக சிலதை சொல்லும் போது பேசும் போது தெரியோணும் ஆக்கள் மகிந்தவின் ஆக்கள் என்பது.

இந்த சூட்சுமம் புலவாலுகளுக்கு பிடிபட கொஞ்சம் நேரம் எடுக்கும்.

வணக்கம் சேவயர்,

ஊர்பக்கம் போய் சுமந்திரனுக்கு ரெண்டு கூல் முட்டை அடித்ததில பிசியாயிட்டேன் :) :) 

கருணாவை விடுங்கள் அவரும் முன்னாள் புலிதானே உண்மையா சொல்ல போகின்றார் .

ஆனால் இந்த கதை அப்ப இருந்து அடிபடுகின்றது .கடவுளுக்குத்தான் வெளிச்சம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.