Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

Featured Replies

என் அன்பார்ந்தசகோதரசகோதரிகளே,

நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்புஎன்னஎன்றுபலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறுஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதையதேர்தல் முறைமையின் கீழ் ஒரேகட்சிக்குள்ளேயேவிருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையேமுரண்பாடுகள் எழுவதுஎதிர் பார்க்கப்படுவதொன்றே.
 
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச் சார்பற்றுநடுநிலைவகிக்கவில்லையேஎன்றுஎன் மீதுகுறைபட்டுக் கொண்டனர். நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாகநடந்துகொள்வதாகஎன்னைவிமர்சித்தனர். முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றார்கள்.
 
உண்மையில் இதேமாதிரியானஒருநிலைசுமார் 53 வருடங்களுக்குமுன்னர் நான் கொழும்புசட்டமாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுஎனக்குஏற்பட்டது.

ஒருசாரார் தேர்தலில் எனக்குவாக்களித்துவெற்றிகொள்ளச் செய்தனர்.எனக்கெதிராகவாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகலசட்டமாணவமாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றுஎன்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறுஎன்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமதுநலவுரித்துக்களைமட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள்,கடப்பாடுகள் ஆகியவற்றைஉத்தேசித்துசட்டமாணவனாகநான் இருந்தபோதேஅத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாகநடந்துகொள்வதேஎனதுகடமைஎன்றுமுடிவுசெய்தேன். எனதுதலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்குமத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ,எதுமுறையோஅதையேசெய்தேன்.
 
அதேவிதமானஒருசூழ்நிலைதற்போதுஎன்னைநாடிவந்துள்ளது.

என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாணமுதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதேஎனதுகருத்து.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒருபிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும். கட்சிகளின் நலனை வி டஎமது மக்களின் நலனும்நலவுரித்துக்களுமே முதன்மைபெறவேண்டும் என்பதுஎனதுகருத்து.
 
அண்மையில் இங்கிலாந்தில் ஹரோ என்ற இடத்தில் இம் மாதம் 17ந் திகதிபேசும் போதுநான் கூறியதை இங்கு உங்களுக்கு குறித்துக் கூற ஆசைப்படுகின்றேன்.
 
“ மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

அதனை உணர்ந்துஅவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்குநான் துணையாகநிற்பேன்”என்று கூறினேன்.
 
போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்தநிலையில் எமதுவடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டுசுமார் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டநிலையில் போருக்குப் பின்னரானசூழலில் மூன்றுமுக்கியசவால்களைநாம் யாவரும் எதிர் நோக்கியுள்ளோம்.

முதலாவதாகபோருக்குப் பின்னரானபுனர்நிர்மாண,மீள்குடியேற்ற,அபிவிருத்திப் பணிகள் எமதுமக்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் அறிந்துஅனுசரித்துமுழுமையானநோக்குடன் நடத்தப்படாமல் தான் தோன்றித் தனமாகஅப்போதைக்கப்போதையவாறுநடைபெற்றுவருவதுமனவருத்தத்தைஅளிக்கின்றது.

இரண்டாவதாகஅரசியல் ரீதியாகநிரந்தரத் தீர்வு இன்னமும் எங்கள் கைகளுக்குப் படாமல் விலகிச் செல்வதாகவே இருக்கக் காண்கின்றோம். மூன்றாவதாகபோரினால் பாதிக்கப்பட்டோருக்குநீதிகிடைப்பதும் சேய்மைப் பட்டுக் கொண்டே இருக்கின்றது.
 
இவ்வாறானஒருசூழலிலேயேநீங்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டியஒருகடப்பாட்டில் உள்ளீர்கள். இவ்வாறானசூழலிலே, இங்கிலாந்தில் நான் குறிப்பிட்டதற்கிணங்கவேஎமதுபிரதிநிதிகளைநீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியதுஅத்தியாவசியமென்றுஎனக்குப்படுகிறது. நான் குறிப்பிட்டசவால்களுக்குமுகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துபாராளுமன்றத்திற்குஅனுப்புவதுஉங்கள் தலையாயகடமையாகவிளங்குகின்றது.

தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காகஒருமனதுடன் அரசியல் ரீதியாகஒத்துழைக்கக் கூடியபிரதிநிதிகளையேநீங்கள் தேர்ந்தெடுத்துஅனுப்பவேண்டும்.
 
அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார் புதிதாகஅமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்கமுன்வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானியபிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மானியத் தலைவி அன்ஜெலாமேர்கல் அவர்கள் கூறியதுதான் என் நினைவுக்குவந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் “சிறியகட்சியேஎக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது”என்றார் அவர். எனதுசிங்களநண்பருக்குநான் கூறினேன்- அரசியல் ரீதியானஒருநிரந்தரத் தீர்வுஎ மக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று.

இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமதுமக்களின் கோரிக்கைகள்    காற்றோடுகாற்றாய்ப் பறந்துவிடுவன. எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புஎன்றகொள்கையின் கீழ் எமதுஅமைச்சர்கள் சுதந்திரம் இழந்துவிடுவார்கள். எமதுமக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிடவேண்டியநிலைவரும் என்றேன்.

மேற்கூறியவைபலஎமதுவடமாகாணமக்களுக்குமட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்றுஎண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவானகருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொருசகாப்தத்தைஉருவாக்கமுன்வந்தனர். நல்லாட்சி,நீதி,நியாயம்,சமத்துவம்,சமாதானம்,சகலருக்கும் பாதுகாப்புபோன்றகொள்கைகளைமுன்வைத்துபுதியதொருஎதிர்காலத்தைக் கட்டிஎழுப்பமுன்வந்தார்கள். அந்தவாறானமக்களின் அபிலாஷைகளை,எதிர்பார்ப்புக்களைநடைமுறைப்படுத்தவேண்டியகடப்பாடுசகலஅரசியல் வாதிகளுக்கும்,சகலநிறுவனத் தலைமைத்துவங்களுக்கும்,ஊடகங்களுக்கும்,குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றதுஎன்பதைநாங்கள் மறக்கக் கூடாது. தனிப்பட்டமனிதகுழுக்களின் நன்மைகளுக்காகமட்டும் நடந்துகொள்ளாது,மற்றையமக்கட் கூட்டங்களுக்குக் கெடுதிவிளைவிக்காது,நல்லாட்சியைஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்துஅச்சக்திகளுக்குத் துணையாகநிற்பதற்குவருந்தேர்தலானதுகளம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாகஅமையவேண்டும். அப்படிநடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.
 
எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்தசர்வதேசசமூகமானதுதுணையாகநிற்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
 
எனவேஎனதுசதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்றுஉங்களைவாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்துநாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக!தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக!
 
“அரசாங்கம் ஒருநம்பிக்கைப் பொறுப்பு. அதன் அலுவலர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பும் அதன் பொறுப்பாளர்களும் மக்களுக்காகவேஉருவாக்கப்பட்டுள்ளார்கள்” (ஹென்றிக்ளே–மேம்பட்டஅரசியல்வாதியும் சிறந்தஅமெரிக்கப் பேச்சாளரும்)
இறைதுணைஉங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதாக!
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://www.pathivu.com/news/41911/57//d,article_full.aspx

Edited by sudaravan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனே எதிர்பார்க்காத முடிவா இருக்குது. சம்பந்தன் சுமந்திரனுக்கு வாக்குக் கேட்பார் என்று நினைச்சிருந்திருப்பார். பாவம். :grin:

Edited by nedukkalapoovan

சம் சும் வாலுகள் இப்பவே மொட்டாக்கு போடுவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தவறு....

தான் எல்லோருக்கமான முதலமைச்சராக இருப்பதே உகந்தது என்கிறார்

அவரது முடிவு சாலச்சிறந்தது

அதையே நாமும் சொல்லி நிற்கின்றோம்

மக்களிடம் உண்மையைச்சொல்லுங்கள்

அவர்கள் அதற்கு வாக்களிக்கட்டும்....

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடி பார்த்தால் மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபடக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

பிரான்னைப்பொறுத்தவரை

நான் அறிந்த உலகத்தைப்பொறுத்தவரை

மாகாணத்தின் முதல்வர்களாக இருந்தோர்கள் தான் அடுத்து அந்த நாட்டின் தலைவர்களாக வந்துள்ளனர்

அதேநேரம் அவர்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவர்களோ

அந்தக்கட்சிக்கே வாக்குக்கேட்பது வழமை.

இது தான் உலக ஒழுங்கு...

விக்கி ஐயா அவர்கள் தான் சார்ந்த கட்சியை தான் ஆதரிக்காத காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்

அது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்

தமிழரது அழிவுகளுக்கு நீதி தேடுதல்

சிங்களவர் தரமறுக்கும் நட்டஈடு...

எனவே அவர்  இவற்றை மறுதலிக்கும் கட்சிகளை மட்டுமல்ல

அரசையும் சாடியுள்ளார்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சரி. Originalbild anzeigen விக்னேஸ்வரன் ஐயா.:thanks:
சம் சும்... கோஸ்டி, போற இடமெல்லாம்.... பள்ளமும், திட்டியுமாய் இருக்கு.aetsch
அவர்கள் இப்பவே.... முன்னாள் பா. உ. என்ற பெயர்ப் பலகைக்கு, ஓர்டர் கொடுத்து... வீட்டு வாசலில் மாட்டி வைக்கலாம்.:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு என்று எழுதியது இங்கு பலர் அப்படி இருப்பதால் தானே .

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு என்று எழுதியது இங்கு பலர் அப்படி இருப்பதால் தானே .

கோழி  கூவித்தான் சூரியன் வருகிறது என்று எழுதுவது சரி

அதை நிரூபிக்கத்தான் ஏதாவது வேண்டும்

தொடருங்கள்

கோழி  கூவித்தான் சூரியன் வருகிறது என்று எழுதுவது சரி

அதை நிரூபிக்கத்தான் ஏதாவது வேண்டும்

தொடருங்கள்

கோழி குப்பையை  கிளற வெளிக்கிடும் .

அதாகப்பட்டது உங்கு உலாவும் "நாய்களுக்கு எங்கடித்தாலும் முன்னங்காலைத்தான் தூக்குமாம்" என்பதை விட "என்ன நடந்தாலும் புலி வாந்தி எடுக்கிற நேற்றுவரை ஒட்டுக்கும்பலாக இருந்து இன்று கூத்தமைப்புக்காக முதலைக்கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கும் ஓரிரண்டுகளின் சிந்தனைப்படி ... "உந்த புலத்து புலிவாலுகள், விக்கினேஸ்வரனை மூலைச்சலவை செய்து அனுப்பிப்போட்டார்கள்" அதுதான் .. :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக் கட்சியின் ஒழுங்கு வரம்பை மீறி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் செயற்படுகின்றார் என்று தெரிகின்றது. ஒரு கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் party whip க்குள் இருப்பது அரசியலில் முக்கியம். இல்லாவிட்டால் கட்சியில் இல்லை, சுயேட்சையாக இருக்கின்றேன் என்றல்லவா சொல்லவேண்டும்!

பதிவுக்காரரின் தலையங்கத்தில் உள்ளபடி விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை என்று இந்த அறிக்கையில் சொல்லவில்லை. கூட்டமைப்பு கட்சியில் போட்டியிட்டு முதலமைச்சராக வந்தாலும் தான் பொதுவேட்பாளராகத்தான் நிறுத்தப்பட்டேன் என்று தனது தனித்துவத்தைப் பேணுகின்றார்.

கூட்டமைப்பு கொள்கைரீதியாக ஒரே முகத்தைக் காட்டாத பலரின் கட்சியாக இருப்பதால் கூட்டமைப்புக்குள் அளவுக்கதிகமாக ஜனநாயகம் நிலவுகின்றது என்று ஒரு சாரார் சொல்லலாம். இந்த ஜனநாயகம் சம் சும் இரட்டையரை முகம்கோணாமல் வைக்கும்வரைதான் நீடிக்கும்!

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

உலக அரசியலில் இது பின்பற்றப்படுகின்ற முறையாக இருக்கலாம். ஆனால் இலங்கை அரசியலில் மாகாண அரசியலும் மத்திய அரசியலும் வேறு வேறு அல்ல. 

மத்திய அரசியலு;ககு வருபவர்களில் பெரும்பாலானோர் மாகாண அரசியலினூடாகத் தான் வருகிறார்கள். இதற்கு தென்னிலங்கை அரசியலில் பல உதாரணங்களைச் சொல்லலாம்.  ஏன் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க கூட தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் தான் மத்திய அரசியலுக்கு வந்தார். 

இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலானவர்கள் தற்போது மாகாண சபை உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊவா மாகாண  முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் தேர்தலல் களத்தில் தத்தமது கட்சிக்காக போட்டியில் குதித்துள்ளனர். 

அதிலும் பிரசன்ன ரணதுங்க ஓரிடத்தில் தான் தேர்தலில் போட்டியிடுவது கட்சியின் வாக்குகளை அதிகரிப்பதற்காகவே தவிர தான் பாராளுமன்றம் செல்லாமல் முதலமைச்சராகவே தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதே பொல ஏனைய மாகாண முதலமைச்சர்களும் தேர்தல் மேடைகளில் தத்தமது கட்சியின் வெற்றிக்காக கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் விதிவிலக்காக இருப்பவர் வட மாகாண முதலமைச்சர் மட்டுமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக போட்டியிட்டு முதலமைச்சரான விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவை வழங்க மறுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குச் செய்யும் பாதகமாகும்.

இதற்கு 2 காரணங்கள் இருக்கலாம்.

முதலாவது தனது சந்தர்ப்பவாத அரசியலுக்காக பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் நோக்கில் ஏற்கனவே மனதளவில் ஒரு தீர்மானத்தை எடுத்து விட்டு காலம் வரும் வரை காத்திருக்கும் அவர் கூட்டமைப்பின் மேடைகளைப் புறக்கணிக்க தீர்மானித்திருக்கலாம்.

ஆனால் விக்கினேஸ்வரனின் குறுகிய கால அரசியலை பார்த்தவர்களுக்கு இந்த விடயம் காரணமாக இருக்காது என்பது புரிந்திருக்கும்.

இரண்டாவது காரணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் தொடர்பில் பின்பற்றும் அணுகுமுறையும் அதன் மேல் மட்டத் தலைவர்கள் பதவிக்காக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான அரசியலையும் பார்த்த பின்பும் அந்தக் கட்சிக்காக மேடையேறுவது அவரது மனச்சாட்சிக்கு எதிரானதாக இருந்திருக்கலாம். அதன் காரணமாக தனது எதிர்கால அரசியல் குறித்து கவலைப்படாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேரடியாக ஆதரிக்காமைக்கு இதுவே காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

உலக ஒழுங்கு எப்படியோ அனால் இலங்கையைப் பொறுத்தவரை தத்தமது கட்சிகளின் வெற்றிக்காக ஏனைய முதலமைச்சர்கள் களத்தில் குதித்துள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சர் மட்டும் ஒதுங்கிக் கொள்வது வித்தியாசமானது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பில் அவர் கொண்டுள்ள அதிருப்தியையே காட்டுகிறது.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டிலும் பெரும்பாலானவர்கள் உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டே தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். 

மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியே இந்த அரைகுறைகளின் வாழ்க்கை ஓடுகிறது. 

.

மேற்கூறியவைபலஎமதுவடமாகாணமக்களுக்குமட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்றுஎண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவானகருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொருசகாப்தத்தைஉருவாக்கமுன்வந்தனர். நல்லாட்சி,நீதி,நியாயம்,சமத்துவம்,சமாதானம்,சகலருக்கும் பாதுகாப்புபோன்றகொள்கைகளைமுன்வைத்துபுதியதொருஎதிர்காலத்தைக் கட்டிஎழுப்பமுன்வந்தார்கள். அந்தவாறானமக்களின் அபிலாஷைகளை,எதிர்பார்ப்புக்களைநடைமுறைப்படுத்தவேண்டியகடப்பாடுசகலஅரசியல் வாதிகளுக்கும்,சகலநிறுவனத் தலைமைத்துவங்களுக்கும்,ஊடகங்களுக்கும்,குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றதுஎன்பதைநாங்கள் மறக்கக் கூடாது. தனிப்பட்டமனிதகுழுக்களின் நன்மைகளுக்காகமட்டும் நடந்துகொள்ளாது,மற்றையமக்கட் கூட்டங்களுக்குக் கெடுதிவிளைவிக்காது,நல்லாட்சியைஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்துஅச்சக்திகளுக்குத் துணையாகநிற்பதற்குவருந்தேர்தலானதுகளம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாகஅமையவேண்டும். அப்படிநடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.
 
எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்தசர்வதேசசமூகமானதுதுணையாகநிற்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
 
எனவேஎனதுசதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்றுஉங்களைவாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்துநாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக!தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக!
 
http://www.pathivu.com/news/41911/57//d,article_full.aspx

முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றத்தினை தக்க வைக்குமாறு கேட்டுள்ளார். பதிவு, தன் பங்குக்கு தலைப்பினை திரித்து விட்டுள்ளது

முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றத்தினை தக்க வைக்குமாறு கேட்டுள்ளார். பதிவு, தன் பங்குக்கு தலைப்பினை திரித்து விட்டுள்ளது

ஆட்சி மாற்றத்தை தக்க வைப்பதற்கு வாக்களிப்பதாயின் விஜயகலா மகேஸ்வரனுக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.

பதிவின் தலையங்கம் தேர்தலில் முதலமைச்சர் நடுநிலமை என்றிருந்தால்  முதல்வரின் உரையை முழுமையாய் பிரதிபலிப்பதாய் இருந்திருக்கும். ஆனால்  இந்தத் தாம் சார்ந்த தரப்பிற்கு சார்பாக தலைப்பிடும் தவறை பதிவு செய்தது போலவே ஏனைய ஊடகங்களும் செய்கின்றன.

உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊதுகுழல் ஊடகமொன்று (அது யாழில் தடைசெய்ப்பட்டிருப்பதால்  அதன் பெயரை எழுதவீல்லை)  சில தினங்களிற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் தம்பிராசாவின் மகன் கடத்தப்பட்டார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் பின்னர் அவர் தானே வாகனமேறிச் சென்ற செய்தியை தம்பிராசாவின மகனின் துப்புத் துலங்கியது என்று செய்தி போட்டது. அதிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் என்ற பதம் இருக்கவில்லை. சிறிது நேரத்தின் பின் செய்தியையே காணவில்லை.

அடுத்ததாக விக்கினேஸ்வரனின் உரையின் இந்தப் பகுதியே போதும் மக்கள் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கு என நினைக்கிறேன்.

 மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்."

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு என்று எழுதியது இங்கு பலர் அப்படி இருப்பதால் தானே .

எனக்குப் பெரிதாக உலக அரசியல் தெரியாது விடினும் மூன்று நாடுகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாம்.இவற்றில் இரண்டு நான் வாழ்ந்த வாழ்கிற நாடுகள். நீங்களும் இந்த மூனறு நாடுகளிலும் வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதனால் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்

1. இந்தியா

மத்திய அரசாங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படுகின்ற போது மாநில அரசுகள் குறிப்பாக மாநில முதல்வர்கள் இது மத்திய அரசுத் தேர்தல் நாங்கள் வேறு என்று சும்மா இருப்பதில்லை. மாறாக சு+றாவளிச் சுற்றுப்பிரயாணம் செய்து பிரச்சாரம் செய்வார்கள். 

கடந்த பொதுத் தேர்தலில நாற்பதும் எமதே என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

2. இங்கிலாந்து

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலின் போது  Mayors, Local Councilors  எல்லோருமே தமது கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார்கள். நான் அங்கு வாழ்ந்த நாட்களில் நடந்த பொதுத் தேர்தலில் South Harrow பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக (Garath Thomas என்று நினைக்கிறேன்) ஹறோ உள்ளுராட்சி மன்ற தொழிற்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே பிரச்சாரம் செய்தார்கள்.

இவ்வாறே உள்ளுராட்சிச் சபைகளின் மேயர்கள் கவுன்சிலர்கள் ஆகியோரும் தாம் சார்ந்த கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறாரகள்.

3. கனடா

கனடாவில் மத்தியல் ஆளும் கன்சர்வட்டிவ் கட்சி ஒன்ராறியோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Progressive conservative party என இவற்றின் பெயர்கள் சற்று வேறுபட்டாலும் அவை ஒஒப்பீட்டளவில் ஒரே கொள்கையை பின்பற்றுவதுடன் ஒன்றின் வெற்றிக்காக மற்றொன்று உழைக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். 

அண்மையில் கியுபெக் பிராந்தியத்தில் நடந்த தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த நேரத்தில் சிபி24 என்ற தொலைக்காட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த முடிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதன்போது தோன்றிய  Ontario PC தலைவர்   patric Brown மத்தியில் வரும் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியே வெற்றி பெறும் என்றும் அதற்காக அந்தக் கட்சியின் கொள்கைகள் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் என்பவற்றைச் சுட்டிக் காட்டி பிரச்சாரம் செய்தார். 

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏனைய மாகாண கட்சித் தலைவர்களும் இந்த விதமாகவே நடப்பர்.

எனவே மத்திய அரசாங்கம் தொடர்பிலான தேர்தல்களில் மாநில கட்சிகள் மாநில முதல்வர்கள் வீலகியே இருப்பர் என்ற விவாதம் ஏற்றுக் கொள்வதற்குரிய ஒன்றல்ல.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

அண்ணைக்கு நல்ல அரசியல்  அறிவு....சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி.....இப்ப அண்ணன் பக்கம்தானே சம் ..சும்.....சும்மா பொத்துகிட்டு வந்திட்டுதுகோபம்

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது உங்கு உலாவும் "நாய்களுக்கு எங்கடித்தாலும் முன்னங்காலைத்தான் தூக்குமாம்" என்பதை விட "என்ன நடந்தாலும் புலி வாந்தி எடுக்கிற நேற்றுவரை ஒட்டுக்கும்பலாக இருந்து இன்று கூத்தமைப்புக்காக முதலைக்கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கும் ஓரிரண்டுகளின் சிந்தனைப்படி ... "உந்த புலத்து புலிவாலுகள், விக்கினேஸ்வரனை மூலைச்சலவை செய்து அனுப்பிப்போட்டார்கள்" அதுதான் .. :grin::grin:

இப்பிடி... விக்கி, செய்வார் என்று தெரிந்திருந்தால்..... 
அவரின் வெளிநாட்டுப் பயணத்தை... சம் சும் கும்பல், எப்பாடு பட்டாவது தடுத்திருக்கும்.
புலம் பெயர் தமிழர்களின், பவரை..... சுமந்திரன் இப்பவாவது புரிந்து கொண்டிருப்பார்.SmileySmiley

மிக சரியான முடிவு .

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு புதியவிடயமாக இருக்கலாம் ஆனால் மாகாண அரசியல் வேறு இலங்கைக்கான அரசியல் வேறு என்று தெரிந்தவர்களுக்கு புதிதல்ல .

"விழுந்தும்..... மீசையில் மண் ஒட்டவில்லை." என்ற ரகத்தில்....
அர்ஜுன்.... வாதாடுவது, அப்பட்டமாக தெரிகிறது.Smiley 
"சேம்.... பப்பி.... சேம்...."Smiley

உலக அரசியல் தெரியாதவர்களுக்கு என்று எழுதியது இங்கு பலர் அப்படி இருப்பதால் தானே .

முதலில் உலக அரசியல் என்றால் என்ன என்று இவருக்கு பாடம் எடுக்க வேண்டும் ...எப்பவுமே சத்தி எடுத்து கொண்டு இருக்கின்றார் .... அடடா என்ன தெளிவு .

காலம்காலமாக படித்த அதிமேதாவிதமிழர்களால் எமற்றபடுவது அப்பாவி தமிழர்களுக்கு வழமை ஆகிவிட்டது.

உதாரணம்:

சேர் பொன். இராமநாதன்:

 பெரும்பான்மை ஜனநாயகம் புரியாது   மெத்தப்படித்த பிரதிநிதி என்று தமிழ்மக்களை எமாற்றி முழு இலங்கைக்கும் தலைவராக வலம் வந்து இறுதயில் தங்கள் குடும்பமே ஏமாறிய கதை.

சி.சுந்தரலிங்கம்:

மகாராணிக்கு கணக்கு படிப்பித்தது என்று அப்பாவிவிதமிழ்மகளுக்கு கணக்கு  காட்டி,

தலைவனாகி  படித்தஅதிமேதாவி,  படியாத  தூர  நோக்கு கொண்ட டி. எஸ் .இன்  காலில் விழுந்து , மந்திரி பதவி பெற்று கிழக்கில்   நிலங்களை பறி கொடுத்து அடங்கி, பின்னர் அடங்காத்தமிழர் என பேர் பெற்றார்.

க.கா. பொன்னம்பலம்:

50 க்கு  50 ,  தமிழன் என்று  சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று யாழ்ப்பாணத்தில் கத்தி விடடு  கொழும்பில் போய் மந்திரி பதவி பெற்று மலையக மக்களை நாடற்றவர் ஆக்கி , ஐ.

நா. வில் ஆங்கில மேதாவி தனத்தை காட்டி , தமிழினத்துக்கு வாரிசு அரசியல் அறிமுகபடுத்திய அதிமேதை.

சி, வி. விக்னேஸ்வரன்:

ஆன்மீகவாதியாக, பென்சன்  எடுக்கிற நீதவானாக  தமிழ் மக்களுக்கில் புகுந்து அரசியல்வாதியாக மாறி ,வாக்களிக்கும்முறைகள்  புரியாத மாதிரி ஆன்மீகம் கலந்த சொற்றொடர்கள் கலந்த அறிக்கை விட்டுள்ளார்.

கட்சியை தேர்வு  செய்யாது

நல்லாட்சிக்கு விஜயகலா மகேஸ்வரன்

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கு  சமந்தியினன்  கூட்டமைப்பு அங்கஜனுக்கும் 

விளங்காத தேச மேட்டக்குடி  வாரிசு கஜேந்திரகுமாருக்கும் வாக்களித்து  வாக்கை செல்லுபடியற்றது ஆக்குமாறு  சொல்கிறார்கள்

ஒருசாரார் தேர்தலில் எனக்குவாக்களித்துவெற்றிகொள்ளச் செய்தனர்.எனக்கெதிராகவாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகலசட்டமாணவமாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றுஎன்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறுஎன்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமதுநலவுரித்துக்களைமட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள்,கடப்பாடுகள் ஆகியவற்றைஉத்தேசித்துசட்டமாணவனாகநான் இருந்தபோதேஅத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாகநடந்துகொள்வதேஎனதுகடமைஎன்றுமுடிவுசெய்தேன். எனதுதலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்குமத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ,எதுமுறையோஅதையேசெய்தேன்.
 
அதேவிதமானஒருசூழ்நிலைதற்போதுஎன்னைநாடிவந்துள்ளது.
 
இந்த பந்தியை வாசித்து விளங்காமல் சும்மா தமிழ் சீரியல் மாதிரி கதை வசனம்  எழுதிக்கொண்டு இருகின்றார்கள் .ஏற்கனவே இவர்களின் சீரியல்கள் பல பார்த்தாச்சு . 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவயளிண்ட சீரியல்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு, சிலர் இப்ப சிங்களத்திலையும் எல்லோ சீரியல் காட்ட வெளிக்கிடீனம்:grin:  எல்லா சீரியல்காரர்களிண்ட தீமும் காசு தான். நாங்கள் இப்ப இங்லிஷ் சீரியல்தான் பாக்கிறது! "ரெட்டை வால் குருவி" தமிழில எனக்கு பிடிச்சிருக்கு! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.