Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் கட்சிக்கே வாக்களியுங்கள் – விக்கினேஸ்வரன்

Featured Replies

77இல் எப்படி தமக்கு எதிரானவர்களை தாம் துரோகி என்று கை காட்டுபவர்களை போட்டுத் தள்ள ஒரு ஆயுதம் தாங்கிய இளைஞர் கூட்டம் தேவைப்பட்டதோ அதே போல தற்பொதைய நிலையில் தாம் செய்யும் அரசியல் தகிடுதத்தம்களை ஆமாம் போட்டு ஆதரிப்பதற்கு ஒரு கல்விமான் தேவப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரனை கூத்தமைப்பு களமிறக்கியது. 

ஆனாலும் களம் இறக்கப்பட்ட விக்கினேஸ்வரன் தானாகச் சிந்தித்து சில செயற்திட்டங்களை மேற்கொண்ட போது அதனைப் பொறுக்க மாட்டாத சம் சும் இரட்டையர்கள் அவரது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் நிலைப்பாட்டை எடுத்தனர். விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேரடியாக ஆதரிக்க முடியாத நிலைக்கு முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிந்ததும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் விக்கினேஸ்வரனை பதவியிறக்கி ஒரு 'பன்னீர்ச்செல்வத்தை' முதலமைச்சராக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அப்படி என்ன செயல்திட்டங்களை செயல் படுத்தியவர் என்று நீங்கள் பட்டியல் இடுவீர்களா ?

காமெடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டதா?:grin:

அதுக்குத்தானே அமெரிக்காவுக்கு அழைத்து வந்தவர் .:)

காமெடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டதா?:grin:

பலருக்கு புல்லரிக்க வைத்த அவர்கள் ஆய்வுகள் அப்பவே எமக்கு கொமடிதான்.

tviயில்  மடிக்கணனியுடன் தமிழ்பிரியன் செய்தி கண்ணோட்டம் என்று மூன்று  பேருடன் ஆய்விற்கு வருவார் .அநேகம் திருசெல்வம் ,குகதாசன் ,நவம் போன்றோர் வருவார்கள் .அப்பவே பலர் அந்த நிகழ்சியை "கொமடி டைம் " என்றுதான் அழைப்பார்கள் .இவர்களின் அவியல் அப்பவே தெரியும் தாங்கள் அவிக்கிறம் என்று அவர்களுக்கும் தெரியும் அதுதான் பெரும்கொடுமை .ஆனால் தாங்கள் போராட்டதிற்கு உத்வேகம் கொடிக்கினம் என்று சொல்லிவினம் .

எல்லாவற்றையும் அழித்து தொலைத்துவிட்டு இப்பவும் அந்த கோஸ்டி நாடு  பிடிப்பம் என்றுதான்  திரியினம் .

எது சாத்தியம் ,நடக்கும் நடக்காது பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை டி வியில் படம் வந்தால் ,வானொலியில் குரல் வந்தால் பத்திரிகையில் கட்டுரை வந்தால் காணும் என்ற  உன்னத நிலைப்பாடு தான் காரணம் .

பின்னர் எப்படி இவ்வளவு ஓசி பத்திரிகைகளை நிரப்புவதாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை

நாங்க எதைப்பேசினாலும் ஊரில் உள்ளவர்கள் அதிலும் படித்தவர்கள்  சொல்லட்டும் என்று அழும் தாங்கள் இப்ப எதற்கு.....??

அந்த மக்களின் அதி உட்ச விருப்பு வாக்ககளைப்பெற்றவர்  சொல்வதில் கூட உடன்பாடில்லாதிருக்கலாம்

ஆனால் வகுப்பெடுக்கப்படாது

ஒரு அறிக்கையுடன் துரோகியா?

இப்ப புரிகிறதா  எவர் துரோகிப்பட்டியலைக்காவித்திரிகிறீர்கள் என்று....

Edited by விசுகு

முதலில் அர்ஜுனை கொமெடி பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கோ ...அரசியல் சூனியம் ..... 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் பலரிடம் இருந்து பெற்றுக் கொண்ட மோசமான பாடம்  எவரையும் முழுமையாக நம்பவேண்டாம் என்பதே

விக்கி ஐயா மீது எனக்கு நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.

மகிந்த மாத்தையா இருக்கும் வரைக்கும் அவருக்கு நல்லெண்ண சமிஞ்சைகளை தொடர்ந்து விட்டுக் கொண்டு இருந்தார். வடக்கு மாகாணசபையில் மகிந்த இருக்கும் போது கொண்டு வர எத்தனித்த இனப்படுகொலை தீர்மானத்தினை பற்றி மெளனம்காத்தார்.
மகிந்த இருக்கும் வரைக்கும் மகிந்த முன்னின்று நிகழ்த்திய இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் வடக்கு மாகாண சபையில் விவாதத்துக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தேர்தலில் மகிந்த தோற்கின்றார், ரணில் வருகின்றார்.

மகிந்தவை அப்புச்சி உறவு கொண்டாடும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் ரணிலை படிப்பதில்லை. அவரின் மருமகன் விக்கி ஐயா அவர்களுக்கும் ரணிலை பிடிப்பதில்லை

ரணிலுடன் முதல் நாளில் இருந்து முரண்படுகின்றார். அவசர அவசரமாக இனப்படுகொலை தீர்மானத்தினைக் கொண்டு வருகின்றார். மகிந்தவுக்கு சங்கடத்தினை கொண்டு வரும் என்பதற்காக எதற்காக மெளனம் காத்தாரோ  அதை அவரே முன்னின்று, உடல் நிலை சரியில்லாத போதும் முன்னின்று கொண்டு வருகின்றார்

வடக்கு தேர்தலின் போதும் சரி, சனாதிபதி தேர்தலின் போதும் சரி தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை போன்றவற்றை பற்றி காத்திரமாக உச்சரிக்காத விக்கி ஐயா அவர்கள், 6 மாதங்களில் திடீரென, பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே உச்சரிக்கத் தொடங்குகின்றார்

தமிழ் தேசிய கூத்தமைப்பு  பற்றி கடுமையாக விமர்சிக்கின்றார், கஜேந்திரன் கோஷ்டி பற்றிய அவர் ஆதரவு நிலை அவர்கள் தேர்தலில் பங்கு கொள்ளப் போகின்றேன் என்று அறிவித்த நாளில் இருந்து புல்லப்படத் தொடங்குகின்றது.

தன்னை நடுநிலைவாதியாக  காட்டிக் கொண்டே முழு பக்கச்சார்பாக கஜே கோஷ்டிக்கு ஆதரவு கொடுக்கின்றார். அது வரைக்கும் தன்னை புலம்பெயர் மக்களுடன் ஓட்டியவராக காட்டாதவர் திடீரென புலம்பெயர் மக்களின் நிகழ்வுக்கு செல்கின்றார்.

 இவரது ரணில் மீதான எதிர்ப்புத் தான் கஜே அணியினரை ஆதரிக்க வைக்கின்றதா என்று இங்கு தான்  என் சந்தேகம் எழுகின்றது

விக்கி ஐயா அவர்கள் நேரடியாக இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று சொல்லி இருந்தால் அவர் மீதான, அவர் நேர்மை மீதான என் சந்தேகம் நியாயமற்று இருக்கும்

ஆனால் தன்னை நடுநிலை வாதியாக காட்டிக் கொண்டே  ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கின்றாரா என்றும், அதற்காகத்தான் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களுக்கு உயிர் துடிப்பாக இருக்கும் விடயங்களை தன்  சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக மலினப்படுத்துகின்றார என்றும் சந்தேகம்  எனக்கு எழுகின்றது

கூட்டமைப்பை மறுத்து அறிக்கை விடும்வரை

அவரது அத்தனை செய்கைகளையும் மிகவும் உற்சாகமாக வரவேற்றவர் தாங்கள் (இனப்படுகொலைத்தீர்மானம் உட்பட)

ஒரே ஒரு அறிக்கை

அதுவும் உங்களது நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றவுடன்...

இத்தனை சந்தேகங்கள்

முன்னருக்கு முரணாக.....

இப்ப எனக்கும் ஒரு சந்தேகம் வருகிறது நிழலி

நீங்க நல்லவரா?

கெட்டவரா??

அதிக பட்ச வாக்குகள் அவர்  கூட்டமைப்பு சார்பில்  கேட்டததால்  தான்  கிடைத்தது .விக்கி என்ற தனி மனிதருக்கு அல்ல .

இரண்டாவது விக்கியர் பற்றி வரும் செய்திகள் பல ஊதி பெருப்பிக்கபட்டவை .இந்த செய்தி உட்பட .

ஊரில் உள்ளவர்கள்  சொல்லும் செய்தி இன்னும் சில நாட்களில் தெரியும் .

என்னது கூட்டமைப்பு என்ற காரணத்தால் தான் அவருக்கு வாக்கு கிடைத்ததா அப்படியென்றால் ஏன் சங்கரியார் தோற்றார் .....உண்மையில் அரி வரி படித்தீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

என்னது கூட்டமைப்பு என்ற காரணத்தால் தான் அவருக்கு வாக்கு கிடைத்ததா அப்படியென்றால் ஏன் சங்கரியார் தோற்றார் .....உண்மையில் அரி வரி படித்தீர்களா ?

இப்படியெல்லாம் நியாயங்களை ஆதாரங்களுடன் பேசப்படாது....

ஓடி விடுவம்........

இப்படியெல்லாம் நியாயங்களை ஆதாரங்களுடன் பேசப்படாது....

ஓடி விடுவம்........

விக்கி ,சங்கரி ,கூட்டமைப்பு  ,அதி கூடிய வாக்கு தலையை சுற்றுது .  ஒரு சம்பந்தமும் இல்லையே .

இவ்வளவு தான்  உங்கள் அறிவும் என்றால் ( அவரை விடுங்கோ பெயரே  சொல்லுது செய்தி )  தொடராமல்  விடுவது  நல்லது .

கூட்டமைப்பை மறுத்து அறிக்கை விடும்வரை

அவரது அத்தனை செய்கைகளையும் மிகவும் உற்சாகமாக வரவேற்றவர் தாங்கள் (இனப்படுகொலைத்தீர்மானம் உட்பட)

ஒரே ஒரு அறிக்கை

அதுவும் உங்களது நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றவுடன்...

இத்தனை சந்தேகங்கள்

முன்னருக்கு முரணாக.....

இப்ப எனக்கும் ஒரு சந்தேகம் வருகிறது நிழலி

நீங்க நல்லவரா?

கெட்டவரா??

ஒருவரை அவரவர் செயற்பாடுகளை வைத்து தான் விமர்சித்து வருகின்றேன்.  இன்று அவரை ஆதரித்து எழுதுகின்றவர்களை விட அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுகின்றார் என்பதை அறிந்த உடனேயே ஆதரித்து எழுதியுள்ளேன் . ஒருவரை தொடர்ந்து ஆதரிப்பதா இல்லையா என்பது அவரவர் தொடர் செயற்பாடுகளில் தங்கியுள்ளது

விக்கியரின் இனப்படுகொலை தீர்மானம் முக்கியமான ஒன்று. காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று . ஆனால் அவரது இன்றைய செயற்பாடுகள் அவர் அத் தீர்மானம் கொண்டுவந்தமைக்கு கூட தமிழ் மக்களின் நலங்களுக்கானது அன்றி  உள் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதா என சந்தேகப்பட வைக்கின்றது.

மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக விக்கி ஐயா  போராடிக் கொண்டு இருந்தார். பல கோணங்களில் இருந்தும் அதற்கான அழுத்தங்களை கொடுத்துக் கொண்டு இருந்தார். அவற்றைப் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக பலவாறு முயன்று கொண்டு இருந்தார்.

ஆனால் ரணிலின் வருகையுடன் அது பற்றி அவர் எடுத்த காத்திரமான முயற்சிகள் என்று எதுவும் இல்லை. வெளிப்படையாகவே ரணிலுடன் மோதும் போக்கைத் தான் கடைப்பிடித்து வந்தார்.

மாகாண அரசுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை பெறுவதற்காக என்று  மகிந்தவிற்கு தொடர்ந்து' நல்லெண்ண சமிஞ்சைகளை வெளிப்படுத்தி வந்தவர் ரணில் வந்தவுடன் மோதல் போக்கிற்கு தன்னை உட்படுத்தினார்

இதனால் தான் விக்கி  ஐயாவின் நோக்கம் வெறுமனே ரணில் எதிர்ப்பு என்ற ரீயிலில் அமைந்ததா என்று சந்தேகப்பட வைக்கின்றது. வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியாக வேறு இவர் இருக்கின்றார் என்பது ஒரு கூட்ட்டு முயற்சியின் அடிப்படையில் நிகழ்கின்றதா என்று எண்ண வைக்கின்றது

சனவரி 8 வரைக்கும் விக்கி ஐயா கூத்தமைப்பை பற்றி கடுமையாக விமர்சிக்கவில்லை என்பதும், ரணிலுடன் கூத்தமைப்பு இணக்கமாக போவதன் பின் தான் விமர்சிக்க தொடங்கியமையும் என்னை சந்தேகப்பட வைக்கின்றது

வடக்கு தேர்தலிலும்,  பின் சனாதிபதித் தேர்தலிலும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை பற்றி எதுவும் சொல்லாமல் இப்ப திடீரெனச் சொல்வதும், ஆகக்குறைந்தது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள தலைவருக்கு சனாதிபதித் தேர்தலில் வாக்களியுங்கள்  என்று கேட்கக் கூட இல்லை என்பதும்  என்னை சந்தேகம் கொள்ளச் செய்கின்றது

நிங்கள்  நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை என்னிடம்  கேட்பதை விட விக்கி ஐயாவிடம் கேளுங்கள். நான் கெட்டவனாகவே இருந்து விட்டு போனாலும் என்னால் தமிழ் சமூகத்து நேரும் பாதிப்புகளை விட விக்கி ஐயா கெட்டவராக இருந்து விட்டால் நேரும் பாதிப்புகள் தான் மிக அதிகம் . ஆகக் குறைந்தது தனை  நடுநிலையாளராக படம்  காட்டிக் கொண்டு படு பக்கச் சார்பாக சுற்றி வளைத்து அறிக்கை விடும் அளவுக்கு நேர்மைத் துணிவு அற்றவரா என்றாவது கேளுங்கள்

உங்கள் பதில்கள் நிழலிக்கான  பதில்களாக இல்லாமல் நிழலியின்  சந்தேகங்களை  ஒட்டிய பதில்களாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றேன்

----
மொபைலில் இருந்து தமிழில் எழுதுவதால் நேரும் எழுத்து / வசனப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

Edited by நிழலி
எழுத்து / வசனப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா படித்தவர் என்று அவர் கூட்டமைப்பில் இணையும் போது சொன்னவர்களின் தாளங்கள்  படிப்படியாக மாறுவது ஏன்? 

கூட்டமைப்பின் குறைகளை  சுட்டிக்காட்டுபவர்  எதிரியாக பார்க்கப்படுகிறாரா?? 

கூட்டமைப்பின் குறைகளை  சுட்டிக்காட்டுபவர்  எதிரியாக பார்க்கப்படுகிறாரா?? கூட்டமைப்பின் தகிடுதத்தங்கள் தை 8க்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டதால் கட்சியில் உள்ள ஒருவர் எதிர்த்து கதைத்து இருக்கிறார். வேறு கட்சியில் இருந்து பலமுறை தேற்று கூட்டமைப்பில் சேர்ந்தால் தான் வெற்றி என்ற நிலையில் உள்ள சித்த்தாத்தன் போற்ற உம்மாண்டிகள் வாயை திறப்பார்கள் என்பது மடமை.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் பலரிடம் இருந்து பெற்றுக் கொண்ட மோசமான பாடம்  எவரையும் முழுமையாக நம்பவேண்டாம் என்பதே

விக்கி ஐயா மீது எனக்கு நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.

மகிந்த மாத்தையா இருக்கும் வரைக்கும் அவருக்கு நல்லெண்ண சமிஞ்சைகளை தொடர்ந்து விட்டுக் கொண்டு இருந்தார். வடக்கு மாகாணசபையில் மகிந்த இருக்கும் போது கொண்டு வர எத்தனித்த இனப்படுகொலை தீர்மானத்தினை பற்றி மெளனம்காத்தார்.
மகிந்த இருக்கும் வரைக்கும் மகிந்த முன்னின்று நிகழ்த்திய இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் வடக்கு மாகாண சபையில் விவாதத்துக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தேர்தலில் மகிந்த தோற்கின்றார், ரணில் வருகின்றார்.

மகிந்தவை அப்புச்சி உறவு கொண்டாடும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் ரணிலை படிப்பதில்லை. அவரின் மருமகன் விக்கி ஐயா அவர்களுக்கும் ரணிலை பிடிப்பதில்லை

ரணிலுடன் முதல் நாளில் இருந்து முரண்படுகின்றார். அவசர அவசரமாக இனப்படுகொலை தீர்மானத்தினைக் கொண்டு வருகின்றார். மகிந்தவுக்கு சங்கடத்தினை கொண்டு வரும் என்பதற்காக எதற்காக மெளனம் காத்தாரோ  அதை அவரே முன்னின்று, உடல் நிலை சரியில்லாத போதும் முன்னின்று கொண்டு வருகின்றார்

வடக்கு தேர்தலின் போதும் சரி, சனாதிபதி தேர்தலின் போதும் சரி தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை போன்றவற்றை பற்றி காத்திரமாக உச்சரிக்காத விக்கி ஐயா அவர்கள், 6 மாதங்களில் திடீரென, பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே உச்சரிக்கத் தொடங்குகின்றார்

தமிழ் தேசிய கூத்தமைப்பு  பற்றி கடுமையாக விமர்சிக்கின்றார், கஜேந்திரன் கோஷ்டி பற்றிய அவர் ஆதரவு நிலை அவர்கள் தேர்தலில் பங்கு கொள்ளப் போகின்றேன் என்று அறிவித்த நாளில் இருந்து புல்லப்படத் தொடங்குகின்றது.

தன்னை நடுநிலைவாதியாக  காட்டிக் கொண்டே முழு பக்கச்சார்பாக கஜே கோஷ்டிக்கு ஆதரவு கொடுக்கின்றார். அது வரைக்கும் தன்னை புலம்பெயர் மக்களுடன் ஓட்டியவராக காட்டாதவர் திடீரென புலம்பெயர் மக்களின் நிகழ்வுக்கு செல்கின்றார்.

 இவரது ரணில் மீதான எதிர்ப்புத் தான் கஜே அணியினரை ஆதரிக்க வைக்கின்றதா என்று இங்கு தான்  என் சந்தேகம் எழுகின்றது

விக்கி ஐயா அவர்கள் நேரடியாக இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று சொல்லி இருந்தால் அவர் மீதான, அவர் நேர்மை மீதான என் சந்தேகம் நியாயமற்று இருக்கும்

ஆனால் தன்னை நடுநிலை வாதியாக காட்டிக் கொண்டே  ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கின்றாரா என்றும், அதற்காகத்தான் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களுக்கு உயிர் துடிப்பாக இருக்கும் விடயங்களை தன்  சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக மலினப்படுத்துகின்றார என்றும் சந்தேகம்  எனக்கு எழுகின்றது.

நண்பரே,

விக்கி அவர்கள் வெறும் சொந்தப் பிரச்சினைக்காகவும், தனது கோப தாபங்களுக்காகவும் தான் சார்ந்திருக்கும் இனத்தின் எதிர்காலத்தையே அடகுவைப்பார் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா? 

நண்பரே,

விக்கி அவர்கள் வெறும் சொந்தப் பிரச்சினைக்காகவும், தனது கோப தாபங்களுக்காகவும் தான் சார்ந்திருக்கும் இனத்தின் எதிர்காலத்தையே அடகுவைப்பார் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா? 

நண்பரே,

விக்கியான விக்கி இப்படிச் செய்ய மாட்டவே மாட்டார் என்று நம்புவதற்கான அடிப்படை எதுவும் இல்லை. தனிமனிதர்களை சந்தேகத்துக்கு அப்பால் வைத்து நான் பார்ப்பதும் இல்லை. 2015 ஆகஸ்ட் 8 இற்கு முன் இருந்த விக்கிக்கும் இன்று இருக்கும் விக்கிக்கும் இடையில் பல வேறுபாடுகள் எனக்குத் தெரிகின்றன.

இராமநாதனில் இருந்து, அமிதர்தலிங்கத்தில் இருந்து, சம்பந்தன் வரைக்கும் புத்திசீவிகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதற்கும் எம்மிடம் நிறைய வரலாற்றுப்பாடங்கள் இருக்கின்றன. தம் அதி கூர்மையான புத்தியால் எதிரியை வெல்வதை விட தம் மக்களை ஏமாற்றுவதற்கே துணை நின்றனர். ஒவ்வொரு தடவையும் இவர்களை நம்பி ஏமாறுவது மட்டுமே எம் வழக்கமாக தொடர்கின்றது

வாஸ்த்தவம்தான், ஒத்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் யாரும் தங்கள் கருத்துக்களை மாற்ற விரும்புவதில்லை என்பது எழுதாத விதியாக உள்ளபோது கேள்விகள்தான் வெறுமனே எஞ்சுமே தவிர புரிதல்கள் அல்ல .

இணையத்தில் முதலில் சொன்னார்கள் கஜேந்திரகுமார் குழுவை இயக்குவது புலம்பெயர்ந்த, புலிகளுக்கு சார்பானவர்கள் என்று . பின்னர் சிறிது சிறிதாக பிரச்சனை இங்கிருந்துதான்-தமிழர் தாயகத்தில் இருந்துதான் வருகிறது புலத்தில் இருந்து அல்ல  என்று சிலர் "உணர " தொடக்கி உள்ளார்கள் . 

இனி விக்கினேஸ்வரனின் கருத்துக்கு வந்தால்:

இணையத்திலும் ஒரு குருப், இவர் ஒன்றும் செய்கிறார் இல்லை, ரணில் உடன் சண்டை போடுகிறாரே தவிர மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லுகிறார்கள்.

இப்போது, இந்த கூட்டமைப்புக்கு எதிரான நிலை :

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வந்தாலும், அவர் பல தனித்துவமான செயல்களை செய்துள்ளார் . இனப்படுகொலை தீர்மானம் கட்சியின் முழு எதிர்பிற்கும் இடையில் செய்தவர் . இதை கட்சி மேலிடம் எதிர்பார்க்கவே இல்லை .இந்திய விசுவாசிகளாக இருக்கும் கட்சி மேலிடத்திற்கு இது ஒரு திரிசங்கட நிலை . உண்மையை மறைக்கவும் முடியாது மெல்லவும் முடியாமல் இருக்கிறார்கள்.

இந்த தீர்மானத்தை, சிவாஜிலிங்கமும், அனந்தியும் கொண்டுவர வெளிகிட்டபோது சட்ட சிக்கல்வரும் என்று பூச்சாண்டி காட்டியவர்களுக்கு தலைமை நீதிபதி தீர்மானம் இயற்றிய போது ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இதன் தொடர்ச்சியாக ரணிலும் முதல்வரும் மோதல் நிலைக்கு போய்விடார்கள். இந்த இடைவெளியை பாவித்து , மாவையும் எனைவர்களும் ரணிலுடன் சேர்ந்து முதல்வரை ஒரு செல்லாகாசு நிலைக்கு கொண்டுவர முயன்றார்கள்,இப்பவவும் முயலுகிறார்கள் . அதனுடைய தொடர்ச்சிதான், மாவையின் விசுபிசுத்த்து போன பத்திரிகையாளர் மகாநாடு...அதை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்...முதல்வர்  தங்கலோடுதான் இருக்கிறார், தங்களுக்கா வந்து பிரச்சாரம் செய்வார்...இப்படி ஆயிரத்து எட்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டவர் ....ஆனால் அது எல்லாம் பச்சை பொய் என்று இப்போது விளங்கி இருக்கும் 

முதலவர் கேட்பது எல்லாம் , இருக்கிற மாகாண சபைக்கு அதிகாரம்களை தா, அதைத்தவிர நிலையான தீர்வுக்கு ஒரு ஒரு பாதை. ஆனால், துரதிஷ்ட வசமாக அதை முன்னெடுத்து செல்ல  இன்றைய கூட்டமைப்பில் யாரும் இல்லை.

சம் சும் குழு ஒரு நேர்மையான அரசியலுக்கு விரும்பாமல் தன்னிச்சையாக , தங்களது பதவி , பட்டத்த்க்கும் இந்திய எஜமானர்களுக்காயும் இயங்குவதால் , செய்ய வேண்டிய காரியம் எதுவும் செய்யாமல், முதல்வருடன் மோதல் போக்கை பேணுகிறார்கள்.

அவர்களுக்கு உண்மை பேசி அரசியல் செய்ய முடியாதால், அவர்களை களத்தில் இருந்து அகற்ற மக்கள், முக்கியமாக படித்த  நடுத்தரவர்க்கம் முயல்கிறது அதற்க்கு முதல்வரும் துணையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் , நல்லவரை  தெரிவு செய்யுங்கோ,வல்லவரை தெரிவு செய்யுங்கோ என்று   சொன்ன போது;  படித்தவர்களே , அவர் மறைமுகமாக கூட்டமைப்பையே அப்படி சொல்லுகிறார் என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். அவரும், பொறுத்து பொறுத்து பார்த்த பின்பே இப்படி ஒரு முழுமையாக இன்னும் கொஞ்ச பேருக்கு விளங்க கூடிய வகையில் சொல்லியிருகிறார். அதையும் விமர்சிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் :(

அதற்க்கு இடையில் அவரை நீக்கவும் நீசர்கள் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்...அது இப்போது " தற்காலிகமாக " கைவிடபட்டு இருக்கிறது 

நான் முந்தியும் சொன்னது போல, இந்த தேர்தல் யாழ்பாணத்தின்,  தமிழரின் உண்மையான "எழுத்தறிவை " காட்டும் தேர்தலாக அமைய போகிறது .  நாலுபேரோ-நாற்பதினாயிரம் பேரோ, இணையத்தில் சொல்லுவது எந்தளவு தூரம் சாதாரண மக்களை அடைகிறது என்பதுதான் இந்த தேர்தலின் வெற்றி தோல்வி ...என்னெனில் யாழ்பாணத்தின் ஊடகங்கள் இன்னும் மாபியாக்களில் கைகளிலேயே உள்ளது ...சொல்லுவது முன்னாள் ஊடக மாபிய தலைவர் :(

இன்று ஒவ்வொரு இணையமும் தான் தான் நினைத்தபடி பொய்களை அள்ளி கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மை மக்களை அடைந்தால் கூட்டமைபிற்கு ஒரு பெரும் தோல்வி காத்திருக்கிறது.

லங்கா ஸ்ரீ பேட்டியை பார்க்கும் போது:

சம்பந்தர் நன்றாகவே ஆடிப்போய்விட்டார்  என்பது தெளிவாக தெரிகிறது . இப்பவே தோல்வியை ஏற்றுக்கொண்டது போல இருக்கிறது. தேர்தல் முடிய (பின்கதவால் வந்த ) உண்ணிகள் எல்லாம் கழற , அடுத்தமுறை கஜேந்திரகுமார் கூட்டமைப்பை பொறுப்பு எடுக்க சரி. ..சுபம் சுபம் . 

தேர்தல் முடிவுகளின் பின்...தொடருவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் சிலருக்கு பழைய கிழவி மன்னிக்கவும் :grin: பழைய குருடி கதவத் திறடி நிலைமை தான். :cool: முடிவு வந்துதான் கஜே கோஸ்டி என்ன கிழிக்கப் போகினம்! 

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர் என்பதும் சுதந்திர கட்சியின் ஆதரவாளர் என்பதும் தெளிவானது. ஆனால் அவர் கூட்டமைப்புக்கு எதிர்கட்சி வேண்டும் என்று நினைப்பது மக்கள் மீது கொண்டுள்ள பற்றினாலேயே என்றே நினைக்கிறேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியையும் ரணிலையும் துளி அளவும் நம்பவில்லை என்பதும் அமெரிக்க அரசின் ஆதரவுடன் ரணில் அசைக்க முடியாத சக்தியை பெறும் நிலையில், தனக்கு ஆதரவான தமிழ் அரசியல் கட்சியை முதலமைச்சர்  பாராளுமன்றம் அனுப்ப முயற்சிக்கிறார் என்றும் தெரிகிறது. சுதந்திர கட்சி ஒருவேளை மட்டு மட்டான வாக்குகளுடன் கூட்ட்மைக்க சிறிய கட்சிகளை தேடும் நிலை உருவானால் முதலமைச்சர்   ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் செய்து தனக்கு ஆதரவான கட்சியின் கூட்டை ஏற்படுத்தி கொடுக்க  முயற்சிக்க கூடும். இந்த ஒப்பந்தத்துக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையாக அமையுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை அவரவர் செயற்பாடுகளை வைத்து தான் விமர்சித்து வருகின்றேன்.  இன்று அவரை ஆதரித்து எழுதுகின்றவர்களை விட அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுகின்றார் என்பதை அறிந்த உடனேயே ஆதரித்து எழுதியுள்ளேன் . ஒருவரை தொடர்ந்து ஆதரிப்பதா இல்லையா என்பது அவரவர் தொடர் செயற்பாடுகளில் தங்கியுள்ளது

விக்கியரின் இனப்படுகொலை தீர்மானம் முக்கியமான ஒன்று. காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று . ஆனால் அவரது இன்றைய செயற்பாடுகள் அவர் அத் தீர்மானம் கொண்டுவந்தமைக்கு கூட தமிழ் மக்களின் நலங்களுக்கானது அன்றி  உள் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதா என சந்தேகப்பட வைக்கின்றது.

மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக விக்கி ஐயா  போராடிக் கொண்டு இருந்தார். பல கோணங்களில் இருந்தும் அதற்கான அழுத்தங்களை கொடுத்துக் கொண்டு இருந்தார். அவற்றைப் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக பலவாறு முயன்று கொண்டு இருந்தார்.

ஆனால் ரணிலின் வருகையுடன் அது பற்றி அவர் எடுத்த காத்திரமான முயற்சிகள் என்று எதுவும் இல்லை. வெளிப்படையாகவே ரணிலுடன் மோதும் போக்கைத் தான் கடைப்பிடித்து வந்தார்.

மாகாண அரசுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை பெறுவதற்காக என்று  மகிந்தவிற்கு தொடர்ந்து' நல்லெண்ண சமிஞ்சைகளை வெளிப்படுத்தி வந்தவர் ரணில் வந்தவுடன் மோதல் போக்கிற்கு தன்னை உட்படுத்தினார்

இதனால் தான் விக்கி  ஐயாவின் நோக்கம் வெறுமனே ரணில் எதிர்ப்பு என்ற ரீயிலில் அமைந்ததா என்று சந்தேகப்பட வைக்கின்றது. வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியாக வேறு இவர் இருக்கின்றார் என்பது ஒரு கூட்ட்டு முயற்சியின் அடிப்படையில் நிகழ்கின்றதா என்று எண்ண வைக்கின்றது

சனவரி 8 வரைக்கும் விக்கி ஐயா கூத்தமைப்பை பற்றி கடுமையாக விமர்சிக்கவில்லை என்பதும், ரணிலுடன் கூத்தமைப்பு இணக்கமாக போவதன் பின் தான் விமர்சிக்க தொடங்கியமையும் என்னை சந்தேகப்பட வைக்கின்றது

வடக்கு தேர்தலிலும்,  பின் சனாதிபதித் தேர்தலிலும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை பற்றி எதுவும் சொல்லாமல் இப்ப திடீரெனச் சொல்வதும், ஆகக்குறைந்தது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள தலைவருக்கு சனாதிபதித் தேர்தலில் வாக்களியுங்கள்  என்று கேட்கக் கூட இல்லை என்பதும்  என்னை சந்தேகம் கொள்ளச் செய்கின்றது

நிங்கள்  நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை என்னிடம்  கேட்பதை விட விக்கி ஐயாவிடம் கேளுங்கள். நான் கெட்டவனாகவே இருந்து விட்டு போனாலும் என்னால் தமிழ் சமூகத்து நேரும் பாதிப்புகளை விட விக்கி ஐயா கெட்டவராக இருந்து விட்டால் நேரும் பாதிப்புகள் தான் மிக அதிகம் . ஆகக் குறைந்தது தனை  நடுநிலையாளராக படம்  காட்டிக் கொண்டு படு பக்கச் சார்பாக சுற்றி வளைத்து அறிக்கை விடும் அளவுக்கு நேர்மைத் துணிவு அற்றவரா என்றாவது கேளுங்கள்

உங்கள் பதில்கள் நிழலிக்கான  பதில்களாக இல்லாமல் நிழலியின்  சந்தேகங்களை  ஒட்டிய பதில்களாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றேன்

----
மொபைலில் இருந்து தமிழில் எழுதுவதால் நேரும் எழுத்து / வசனப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

நன்றி  நிழலி விரிவான பதிலுக்கு (சந்தேகங்களுக்கு)

உங்களது பதிலிலேயே நான் எழுதவேண்டிய பதிலுண்டு..

முதலாவது வரிகளே போதுமானது..

ஒருவருடைய செயல்கள்..

மனத்தைத்தொட்டுச்சொல்லுங்கள்

கூட்டமைப்பினரின் செயல்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போம் என்று

முக்கியமாக சிறீதரன் போன்றவர்களை.

ஆதரிக்க நான் தயார்.

வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கின்றீர்கள்

அதைச்சொல்ல கூட்டமைப்புக்கோ அதன் தலைமைப்பீடத்துக்கோ தகுதியுண்டா??

சிங்கக்கொடி பிடித்தல்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் பங்கெடுத்தல்

கூட்டமைப்பின் முடிவா?

வெளிப்படைத்தன்மையானதா?

இப்பவும் ஒன்றும் குறைந்துவிடவில்லை

உங்களைப்போன்ற இளைஞர்கள் உத்தரவாதம் தாருங்கள்

கூட்டமைப்பை வழி நடாத்துவோம்

அவர்களது வழியை செம்மையிடுவோம்

அவகாசம்  தாருங்கள் என.

அப்ப நம்பவோம் கூட்டமைப்பை...

அதைவிடுத்து ஒற்றுமை என்கின்ற பதத்துக்குள் ஒழிய முடியாது.

அதற்கும் கூட்டமைப்புக்கும் ஒரு துளியும் சம்பந்தம் கிடையாது.

மற்றும்படி விக்கி ஐயா சொல்வது அத்தனையும் உண்மை

கூட்டமைப்பிடமுள்ள குறைகளைத்தான் சொல்கிறார்

நமக்கு குறைகளைச்சுட்டிக்காட்டுபவர் மேல்   சந்தேகம் வரும் என்றால்....??

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்களின் போக்கில் மாற்றம் என்னும் நிழலியின் கருத்தை யோசித்துப்பார்ப்பது நல்லது.

மகிந்தர் போனபின்பு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார் என்பது நிழலியின் கருத்து. இதில் உண்மையும் உள்ளதாகவே படுகிறது. அதேநேரத்தில், மகிந்தர் போன பின்பு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் தெளிந்தது என்பதுகூட உண்மையானதுதானே.. மகிந்தர் இருந்திருந்தால் இனக்கொலை தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க முடியுமா?

இரண்டாவதாக, அதே இனப்படுகொலை தீர்மானத்தை எடுத்துக் கொண்டால் இதனால் அதிக அதிருப்தி அடைந்திருக்கக்கூடிய வர்க்கம் இந்தியா என்பது கண்கூடு. அப்படியான ஒரு செயற்பாட்டுக்கு விக்னேஸ்வரன் அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். இது கத்திமீது நடக்கும் வேலையல்லவா?

இந்த இனப்படுகொலைத் தீர்மானம் மட்டுமே, இவர் மகிந்தர் / இந்திய அணியின் கைப்பாவை இல்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது (எனக்கு :unsure: )‌.

இதையும் அவர்தான் சொல்லியிருக்கிறார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே "இனப்படுகொலை" தீர்மானம்- விக்னேஸ்வரன்

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/02/150212_wigneswaran

  • கருத்துக்கள உறவுகள்

வோல்கனோ,

, இந்த தேர்தல் யாழ்பாணத்தின்,  தமிழரின் உண்மையான "எழுத்தறிவை " காட்டும் தேர்தலாக அமைய போகிறது .  

அப்போ கிழக்கில் முண்ணணி தோற்றால் - அவர்கள் எல்லாம் எழுத்தறிவற்றவர்களா?

எப்படி கஸ்டப்பட்டு தேசியப் பைக்குள் போட்டுக் கட்டினாலும், மையவாதப் பூனை வெளிவருவதை தவிர்க்க முடியாது :)

விக்கினேஸ்வரன் எதற்காக இப்படி ஒளிவு மறைவாக அறிக்கை விடுகிறார்?

ஒருநாளைக்கு தான் ஊமை என்கிறார் இன்னொருநாள் குழப்பமான அறிக்கை விடுகிறார். இது வாக்காளர்களை குழப்பும் தன்மை கொண்டது என்பது அவருக்கு தெரியாதா?

தேர்தலுக்கு பிறகு சரியான விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.