Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றத்திற்கு தயாராகுங்கள்! கஜேந்திரகுமார் அழைப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் கணிப்பு

கூட்டமைப்பு 10 ( வடக்கில் 5, கிழக்கில் 5) ( யாழ் 3, வன்னி 2, திருமலை 1, மட்டு 3, அம்பாறை1).

ததேமு 1

ததேமமு வின் தயாவால்

ரிசாத், வீணை, யானை, வெற்றிலை, மரம் எல்லாம் கூடுதல் ஆசனங்களை வெல்லும். 

இப்படி தமிழர்களிடம் இருந்து அநியாயமாக எடுத்த எம்பி சீட்டுகளை வைத்தே தமிழ் மக்களுக்கு எல்லா துறைகளிலும் ஓரவஞ்சகம் செய்வார்கள். படிப்படியாக எங்கள் இருப்பை வடக்கிலும் சிறுபான்மை ஆக்குவார்கள்.

பொன்னம்பலத்துக்கு கவலை இல்லை. கொழும்பு 7 இல் விசாலமான வீடு. 20 ற்கு மேற்பட்ட பென்ஸ் கார். மலேசியாவில் காப்பித்தோட்டம் என கன சோலி இருக்கு.

புலவாலுகள் புலியின் காசை ஒன்றுக்கு பத்தாக்கி, பிள்ளைகளை படிப்பித்து பெரிய அளவில் வருவார்கள்.

ஊரில் தமிழ்மக்கள் வழமைபோல் நடுத்தெருவில்த்தான்.

இந்த தேர்தலோடு ரிசாத்தை தமிழர்களே தலைவராய் தேரும் நிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg
 

யாழ்களத்தின் அன்பான உறவு கோ சான் அவர்களை கனநாட்களாகக் காணவில்லை என நினைச்சனான், ஆனால் அவர் புலிவால்களது பெண்டாட்டிமாரில் யார் யார் அடிச்சகாசில் தங்கள் அந்தரங்கங்களை மறைச்சிருக்கினம் எண்டு கணக்கெடுக்கப்போயிருக்கிறார் என இப்பதான் தெரியுது.

இப்படியான உள்ளாடைகளில் கவனமெடுக்கும் சிலரை அழைக்க ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கு மறந்துபோயிட்டன். பரவாயில்லை யாழ்களம் பல்வேறுதரப்பட்ட உறவுகளை தன்னகத்தே உள்ளடக்கி புதிய வரலாறுபடைக்கின்றது.

 

மனிதசமுதாயம் மிகவும் முன்னேறிக்கொண்டு வருகுதையா நாங்களும் கொஞ்சமாவது மாறமுயற்சிக்கவேண்டும் என என்னை நானே நுள்ளிவிட்டிச் சொல்லுறன் உங்களுக்குச் சொல்லவில்லை.

கிருபன்,

அப்போ, கஜேந்திரகுமார் குழுவுக்கு எதுவித பாராளுமன்ற ஆசனமும் கிடைக்கவில்லை என்றால் எதிர்ப்பரசியல், தாயக அரசியலில் ஈடுபடும் மற்றும் புலிவால்கள் உட்பட்ட புலம்பெயர்தேசத்தவர்கள் அனைவரும் களத்திலிருந்து வெளியேறுவது நல்லம்தானே.

அப்படியாகில் உங்களது எந்தவகையான உதவியும் தேவையில்லை நீங்கள் அங்கினைக்க கழுவிக்கொண்டு இருங்கோ என புலத்துத் தமிழர்கள் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளலாமா?

நிச்சயமாக இப்படி ஒரு நிலை வரும். புலத்தில் இருந்து ஒண்டும் புடுங்கேலாது என்பது யதார்த்தமாக போயிற்று. வீணாக பிரளயத்தை உண்டுபன்ணாமல் இருந்தால் போதும் என்றளவுக்கு இந்த தேர்தலில் அசிங்கம் வெளிப்பட்டுவிட்டது.

இதை சுருக்கமாக பிச்சை வேண்ட்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு ஒப்பிடலாம்.

 

ஊருக்கு கொலிடேக்கு போனால் விறுமர் கோயிலில் வேள்வி மடைவைத்து பொங்கி போடுவார்கள் நக்கி திண்டுவிட்டு நடையை கட்டவேன்டியான்.

 

வயித்தை கட்டி வாயை கட்டி வெளிநாட்டுக்கு அனுப்பிவர்களுக்கு முடிந்தால் அப்பப்ப காசு அனுப்புங்கோ. அதுக்காக அரசியல் முடியை நீங்கள் எடுக்கேலாது.

 

என் கணிப்பு

கூட்டமைப்பு 10 ( வடக்கில் 5, கிழக்கில் 5) ( யாழ் 3, வன்னி 2, திருமலை 1, மட்டு 3, அம்பாறை1).

ததேமு 1

ததேமமு வின் தயாவால்

ரிசாத், வீணை, யானை, வெற்றிலை, மரம் எல்லாம் கூடுதல் ஆசனங்களை வெல்லும். 

இப்படி தமிழர்களிடம் இருந்து அநியாயமாக எடுத்த எம்பி சீட்டுகளை வைத்தே தமிழ் மக்களுக்கு எல்லா துறைகளிலும் ஓரவஞ்சகம் செய்வார்கள். படிப்படியாக எங்கள் இருப்பை வடக்கிலும் சிறுபான்மை ஆக்குவார்கள்.

பொன்னம்பலத்துக்கு கவலை இல்லை. கொழும்பு 7 இல் விசாலமான வீடு. 20 ற்கு மேற்பட்ட பென்ஸ் கார். மலேசியாவில் காப்பித்தோட்டம் என கன சோலி இருக்கு.

புலவாலுகள் புலியின் காசை ஒன்றுக்கு பத்தாக்கி, பிள்ளைகளை படிப்பித்து பெரிய அளவில் வருவார்கள்.

ஊரில் தமிழ்மக்கள் வழமைபோல் நடுத்தெருவில்த்தான்.

இந்த தேர்தலோடு ரிசாத்தை தமிழர்களே தலைவராய் தேரும் நிலை வரும்.

என்னுடைய கணிப்பின்படி 13 - 14 தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் முடிவை புலம் பெயர்ந்தவை எடுக்கலாம் என்று சுமந்திரன் தினக்குரல் பத்திரிகையில் அறிவித்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

விறுமர் கோவிலில விழுந்ததை நக்க என்ன நாங்கள் சாமானியமான ஆக்களோ புலிக்கொடிக்குப்பதிலாகச் சிங்கக்கொடியைத் தூக்கினமெண்டால் இருக்கிற இடத்திலையே "எங்கட" அரசாங்கமோ "எங்கட" சிங்களச் சகோதரங்களோ தருவினம் சிங்கக்கொடியைத் தூக்கிப்பிடிக்க சம்பந்தர் ஐயா ஏற்கனவே எங்களுக்கு காட்டித்தந்திருக்கிறார்.

கடந்த காலங்களில் லண்டனில ஜெயா அண்ணருக்கு மட்டும் அன்ரன் பாலசிங்கத்தார் செய்த அரசியலை கூட்டமைப்பு புலம்பெயர்தமிழர்கள்மீது ஏவிவிட்டுள்ளது கடைசியில முக்கேனப்பட்டது புலிகள்தான் என்பதை மறந்திடாதையுங்கோ.

அடிச்சவன் கை சுரண்டினவன் கை சும்மா இராது மேலும் மேலும் சுரண்டப்பாப்பான் பக்காவா பிளான்பண்ணி அப்போ உங்கட இருப்புக்கும் பாதிப்பு வரும். கவனம்தம்பிகளா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு 13 ஆசனங்களை வென்றால் தமிழ் மக்கள் இதுவரை நம்பிவந்த எதிர்ப்பு அரசியலில் இருந்து மாறி இணக்க அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றார்கள் என்றுதான் அர்த்தம். கஜேந்திரகுமார் கட்சியில் உள்ளவர்கள் ஒரு ஆசனத்தை வென்றால் கூட எதிர்ப்பு அரசியல் மீது மக்கள் இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர் என்றுதான் கருதவேண்டும். 

இப்படியான கருத்தியல் மாற்றங்களை உருவாக்க விவாதங்களையும் விளக்கங்களையும் பாவிக்காமல் வெறும் சேறடிப்புக்களையும், character assassination களையும் பாவிக்கின்றார்கள். புலம்பெயர்நாடுகளில் இருந்துகொண்டு தாயக மக்கள் சுதந்திரமான, ஜனநாயக ரீதியில் முடிவெடுக்கும் நிலையில் குழப்பத்தை உண்டுபண்ணப் பலர் முயற்சிக்கின்றனர். அதனால்தான் பல அநாமேதய துண்டுப்பிரசுரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

70-80 களில் அரசியல் விழிப்புணர்வுள்ள இளைஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் பலருக்கு வாக்களிக்கும் வயதுகூட இல்லை. ஆனால் அதே வயதில் தாயகத்தில் உள்ளவர்கள் இன்று அரசியலில் அக்கறையற்றுப் போயுள்ளனர். இந்த நிலை மாறும்வரை ஒரு சரியான தலைமை தமிழர்களுக்குக் கிட்டாது. அதுவரை கிழடுகளின் கலாட்டா நடந்துகொண்டிருக்கும். நாமும் கூயாய், மாயாய் என்று கூச்சல் போடுவோம்!

16 ஆசனங்களை கூட்டமைப்பினர் வென்றிருக்கிறார்கள். எனவே தமிழர்கள் எதிர்ப்பு அரசியலில் இருந்து மாறி இணக்க அரசியலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்கள். கஜே கோஸ்டி படுதோல்வி அடைந்திருக்கிறார்கள் எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என கிருபன் சாரின் கருத்திலிருந்து நாம் கூறலாம்.  

இன்றைய BBC கேட்டால் தெரியும் மக்கள் அதையேதான் அடித்து சொல்லுகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

16 ஆசனங்களை கூட்டமைப்பினர் வென்றிருக்கிறார்கள். எனவே தமிழர்கள் எதிர்ப்பு அரசியலில் இருந்து மாறி இணக்க அரசியலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்கள். கஜே கோஸ்டி படுதோல்வி அடைந்திருக்கிறார்கள் எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என கிருபன் சாரின் கருத்திலிருந்து நாம் கூறலாம்.  

எதிர்ப்பு அரசியலில் இருந்து தாயகத்தில் தமிழர்கள் தடம் மாறிவிட்டார்கள் என்பதுதான், கூட்டமைப்பு, ஈபிடிபி, ஐ.தே.க., ஐ.சு.ம.மு. (அங்கயன்) எல்லோருக்கும் பின்னால் தேர்தலில் வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலையில் இருந்து அறியமுடிகின்றது.

இது நல்லதா, கெட்டதா என்பதை அடுத்த தேர்தலில் அறிந்துகொள்ளலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பென்று வியாக்கியானம் கொடுப்பவர்கள் மக்கள் நினைக்காததையும் நினைத்ததாகக் காட்ட விளைகின்றனர் போலும்.

மக்கள் கூட்டமைப்பை.. ஒரு அரசியல் ஒருங்கிணைந்த சக்தி.. தமிழர்களின் வாக்கு பலத்தைக் காட்டக் கூடிய சக்தி.. என்று தேசிய தலைமை வகுத்ததின் படி.. இன்றும் பார்க்கிறார்களே தவிர.. மக்கள்.. எதிர்ப்பு அரசியலை விட்டு இணக்க அரசியலுக்கு தயார் என்றிருந்தால்.. ஐ தே க.. ஐ.சு.ம.மு ன்னணிக்கும்..ஈபிடிபிக்கும் பெருவாரியாக வாக்களித்து கூட்டமைப்பையும் ஓரங்கட்டி இருப்பார்கள். 

மக்கள் ரணில்.. மகிந்த பகிரங்கமாக சாத்தியமில்லை என்று அறிவித்த பின்னும்.. கூட்டமைப்பின் சமஷ்டி.. சுயநிர்ணய உரிமை..  சம உரிமை போன்ற பதங்களுக்கு வாக்களித்திருப்பதானது வெளிப்படையாக எதிர்ப்பரசியலை ஆதரித்ததை இனங்காட்டுகிறது.

அதுமட்டுமன்றி சிறீதரனுக்கு அளிக்கப்பட்ட அதி உச்ச விருப்பு வாக்கு (சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை.. இவர்களின் அரசியல் இருப்பு அனுபவம் எதுவுமே இல்லாத சிறீதரனுக்கு) மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக இனங்காட்டுகிறது. 

மேலும் கஜேந்திரன் அணியின் வாக்கு வங்கி வளர்ச்சி என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

ஆனால்.. சிலர் மக்கள் இதுதான் விரும்பினம் என்று தங்களின் சொந்த விருப்பு வெறுப்பை மக்கள் மீதி திணித்து அரசியல் சுய இன்பம் அடைந்து கொள்கிறார்கள்... அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அணியினரின் வாக்கு வளர்ந்ததா அல்லது தேய்ந்ததா?

முன்னாள் எம்பிக்களாக இருந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சிகளுக்குப் பின்னால் வந்துள்ளனர். மற்றைய மாவட்டங்களில் கிடைத்த வாக்குகளை இலகுவாகப் பொறுக்கி எண்ணலாம் (குருநாகலில் சிவாஜிக்குக் கிடைத்த வாக்குகள் கூட ஒரு சில மாவட்டங்களில் கிடைக்கவில்லை!)

அத்தோடு கூட்டமைப்பை புலிகளினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகளின் தியாகங்களையும், மாவீரர்களையும் மதிக்கும் மக்கள், அவர்கள் முன்னெடுத்த அரசியல் தோல்வியடைந்துவிட்டது என்று கருதியதால்தான் புலிகளின் சாயத்தோடும், புலம்பெயர் அமைப்புக்களின் பணபலத்தோடும், பின்பலத்தோடும் தேர்தலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் புறக்கணித்தனர்.

தாயக மக்கள் ஈபிடிபி, ஐ.தே.க,. அங்கயன் கோஸ்டிக்கு  ஒருபோதும் பெருமளவில் ஆதரவளிக்கமாட்டார்கள். அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கின்றனர். இணக்க அரசியலைக் கூட கூட்டமைப்பு ஊடாகச் செய்யத் தயார் ஆனால் சிங்கள தேசியக் கட்சிகளுக்கு வால் பிடிப்பவர்களூடாக இணக்க அரசியல் செய்யமுடியாது என்பதுதான் அவர்கள் கொடுத்துள்ள செய்தி.

தாயக மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அது சரியான பாதையா இல்லையா என்பதையும் ஆராயவேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்பின் இரட்டைத்தனமானதும், தெளிவற்றதுமான அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பார்கள் என்பதில் துளியளவும் நம்பிக்கையில்லை. ஏனெனில் பெருமளவு சிங்களவர்கள் இன்னமும் தமிழர்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்க ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை. ஐ.தே.க.வுடன் கூட்டணி அமைத்த பல கட்சிகளும், இனவாதக் கடும்போக்கான ஐ.சு.ம.கூ. எம்பிக்களும் ஒரு நியாயமான தீர்வை தமிழர்களுக்குக் கொடுக்க விடவேமாட்டார்கள்.

இந்த நிலையை மாற்றக்கூடிய அரசியல் அழுத்தம் கூட்டமைப்பின் 16 எம்பிக்களாலும் முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அணியினரின் வாக்கு வளர்ந்ததா அல்லது தேய்ந்ததா?

 

7500 இல் இருந்து 19,000  க்கு போய்விட்டது (ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றதை விட அதிக வாக்குகள்). 0.09% இருந்து 0.17% ஆகி இருக்குது.  tw_blush: வளர்ச்சியா தேய்வான்னு பார்த்துக்குங்க. 

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. த.தே.ம.மு ஒரு நாடு இரு தேசத்தை முன்னிறுத்த வெளிக்கிடத்தான்.. ஒற்றையாட்சி என்று முணுமுணுத்த கூட்டமைப்பு சம் சும் கும்பல்.. உடன பல்டி அடிச்சு.. சமஷ்டி.. சுயநிர்ணய உரிமை.. சம அந்தஸ்து என்று பேச.. எழுத வெளிக்கிட்டவை. இல்ல இப்ப ஒற்றையாட்சிக்குள்ள.. சிங்களவரோடு தமிழர்களை இனக்கலப்பு செய்து முடிச்சிருப்பார்கள்.. சிங்கக் கொடி தூக்கி ஆட்டியோர். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய BBC கேட்டால் தெரியும் மக்கள் அதையேதான் அடித்து சொல்லுகின்றார்கள் .

எப்ப பாத்தாலும் பிபிசி பிபிசி உங்களுக்கு வேறை வேலையே இல்லையா?

மக்களோடு மக்களாக மக்களுடன் உறவாடிப்பாருங்கள் உண்மைகள் தெரியும். innocent.png

பிபிசி சிஎன்என்  மட்டுமல்ல ஏனைய ஊடங்களும் தங்களுக்கு சார்ந்த சார்பான செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். இது சர்வதேச ஊடக நியதி.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாத்தாலும் பிபிசி பிபிசி உங்களுக்கு வேறை வேலையே இல்லையா?

மக்களோடு மக்களாக மக்களுடன் உறவாடிப்பாருங்கள் உண்மைகள் தெரியும். innocent.png

பிபிசி சிஎன்என்  மட்டுமல்ல ஏனைய ஊடங்களும் தங்களுக்கு சார்ந்த சார்பான செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். இது சர்வதேச ஊடக நியதி.:cool:

கு.சா, பி.பி.சிக்கு என்ன தேவைக்காக இப்படி செய்தி போடுகிறார்கள்? 

நிச்சயமாக இப்படி ஒரு நிலை வரும். புலத்தில் இருந்து ஒண்டும் புடுங்கேலாது என்பது யதார்த்தமாக போயிற்று. வீணாக பிரளயத்தை உண்டுபன்ணாமல் இருந்தால் போதும் என்றளவுக்கு இந்த தேர்தலில் அசிங்கம் வெளிப்பட்டுவிட்டது.

இதை சுருக்கமாக பிச்சை வேண்ட்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு ஒப்பிடலாம்.

 

ஊருக்கு கொலிடேக்கு போனால் விறுமர் கோயிலில் வேள்வி மடைவைத்து பொங்கி போடுவார்கள் நக்கி திண்டுவிட்டு நடையை கட்டவேன்டியான்.

 

வயித்தை கட்டி வாயை கட்டி வெளிநாட்டுக்கு அனுப்பிவர்களுக்கு முடிந்தால் அப்பப்ப காசு அனுப்புங்கோ. அதுக்காக அரசியல் முடியை நீங்கள் எடுக்கேலாது.

 

என்னுடைய கணிப்பின்படி 13 - 14 தான்.

கலா அக்காவுக்கும் , அத்தியடி குத்திக்கும்  ஒரு ஆசனம் எப்பவும் உண்டு.ரிசாதுக்கு 3 இருந்து 1 ஆக குறைத்து உள்ளது. அப்படி இருக்கும் பொது எப்படி கஜன் ஆசனம் குறைய காரணம் ஆனார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா, பி.பி.சிக்கு என்ன தேவைக்காக இப்படி செய்தி போடுகிறார்கள்? 

உங்களுக்கு முன்னாள் பிபிசி தமிழோசை ஆனந்தியை தெரியுமா?

தெரிந்தால் வரலாறுகள் தெரியும். innocent.png

தெரியாவிட்டால் மன்னிக்கவும்.:cool:

 

பி பி சி இன்று யாழ் மக்களை பேட்டி எடுத்தது அது பற்றிதான் சொன்னேன் .பிபிசி கேட்காமல் உலக தமிழாரின் வானொலி கேட்டவர்கள் தான்  இன்னமும் கோமாவில் அலைகின்றார்கள் .

நாட்டில் தேர்தல் முடிவு அதை துல்லியமாக் காட்டிவிட்டது .

பி பி சி ஆனந்தி அக்கா மட்டும் அல்ல அவர் மகளையும் தெரியும் . இந்திராகாந்திக்கு நாங்கள் வைத்த அஞ்சலி கூட்டத்தில் அவரும் ஒரு பேச்சாளர் .

ராஜேஷ் அக்காவுடன் பி பி சி நிலையத்திற்கு சென்று 83 கலவரம் பற்றிய ஆவண படத்திற்கு குரல் வேறு கொடுத்தோம் .

நாங்கள் அப்பவே அப்படி அண்ணை . எழுத வெளிக்கிட்டால் பக்கம் பக்கமாக எழுதலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

குசா. அண்ணே, பிளீஸ்..... அர்ஜூனின், வாயை கிளறாதீர்கள்.
பிறகு..  அவர் பக்கம் பக்கமாக எழுதினால், நம்மால் தாங்க முடியாதப்பா..... SmileysLaughing_lol_dielaughing_crying_100-100

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குரல் மட்டும் தான் கொடுப்பார். 

 

இதெல்லாம் நகைச்சுவைப் பகுதியில் எழுதப்படவேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.