Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்குள் இன்னொரு தேசத்துக்கு இடமில்லை: ரணில்

Featured Replies

இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/152498#sthash.4jgyTIV0.dpuf

சயிக்கிள் காரர் தப்பிட்டார்கள். பாவம் இந்த தமிழர் விடுதலைக்கூட்டணி

  • கருத்துக்கள உறவுகள்

சயிக்கிள் காரர் தப்பிட்டார்கள். பாவம் இந்த தமிழர் விடுதலைக்கூட்டணி

சைக்கிள்காரர்கள் மட்டுமல்ல  மற்றவர்களும் தப்பவில்லை

மக்கள் அவர்களைப்பாதுகாத்துள்ளனர்...

தேவை வரும் போது........:rolleyes:

சாதாரணமாக செய்வது தான்

கனக்க கதைப்பவர்களை 

அறிக்கை விடுபவர்களை முக்கிய பதவியில் இருத்திவிடுவது...

அது தான் இப்ப கூடடமைப்புக்கு நடந்திருக்கு...

யாழிலும் கனபேருக்கு இனித்தான் தெரியும்

மக்கள் தீர்ப்பின் சுமை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்ஹாங்கில் உள்ளதை உலகம் நினைச்சால்.. சொறீலங்காவுக்குள் கொண்டு வரலாம். இவர் ரணில் அப்ப என்ன பண்ணுவார். சிங்களவனோடு இதயத்தால் பின்னி பிணைஞ்சு தீர்வு அடையவே முடியாது. அடையக் கூடிய ஒரு மார்க்கம் சர்வதேசத்தின் மனச்சாட்சியை தமிழர்கள் தமது பக்கம் ஆக்கிக் கொள்வதும்.. சர்வதேசம் நீடித்த இலாபம் அடையக் கூடிய பூகோள அரசியல் நலனை மையப்படுத்தி.. தமிழர்களுக்கு ஒரு தீர்வை சர்வதேசத்தின் தலையீட்டோட்டு உருவாக்கிக் கொள்வதும் தான். இதில் மேற்குலகை.. இந்தியாவை.. சீனாவை தனித்து நம்பிக் கொண்டிருப்பதிலும் இவற்றுடன் ஒரு இசைவு அரசியலை நகர்த்திச் சென்று சிங்களத்துக்கு செக் வைப்பதில் தான் தமிழர்களின் திறமை இருக்க வேண்டும்.

அதற்கு தாயகம்.. புகலிடம்.. உலகம் என்றுள்ள அனைத்து தமிழர்களும் ஒற்றுமையுடன் ஒத்த திசையில் இயங்க வேண்டிய தருணத்தில் இயங்கி திசைகள் மாறும் போது வழிகாட்டிகளாக இயங்கி உழைப்பதே நல்லது. 

சிங்களத்துடன்.. இணக்க அரசியல்.. இணைவு அரசியல் எல்லாம் சரியவராது. அப்படி சரி வந்திருந்தால்.. இன்று மலையக மக்கள் மாடமாளிகைகளில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் லயங்களில் தான் வாழ்கிறார்கள். tw_angry:

2016க்கு பின்னர் அவர்களே இதைச்சொல்லட்டும்

சொல்வார்கள்...

ரணில் இல்லை கூட்டமமைப்பும் அதைதான் சொன்னது நாங்களும் அதையே தான் சொல்லுகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சோத்துப் பார்சல் வாங்க தமிழீழம் என்பீர்கள்... லண்டனில் அசைலம் அடிக்க மாநில சுயாட்சி என்பீர்கள்.. கனடாவில் செற்றிலான பின் ஐக்கிய இலங்கை என்பீர்கள்.. ஆனால்.. தமிழ் மக்களுக்கு என்று ஒரு வரலாறும்.. நிலமும் உள்ளதை இலங்கைத் தீவில் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

கூட்டமைப்பின் இறுதி குளறல்.. சமஷ்டி.. சுயநிர்ணயம்.. சம உரிமை.. இதன் அடிப்படையே.. ஒரு நாடு பல இனங்கள்.. பிரதேசங்கள் என்பது தான். அமெரிக்கா.. கூட யூனியனாகத் தான் உள்ளது. கனடா அப்படி. பிரிட்டன் அப்படி. இந்தியா அப்படி. சீனா ஹொங்காங் அப்படி. ஏன் உலகில் சிங்களவர்கள் போல ஒரு இனமாக உள்ள இஸ்ரேலியர்கள் கூட பலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறார்கள். ஆனால்.. சொறிலங்காவுக்கு (சிங்களவர்களுக்கு) மட்டும் எல்லாம் அலேர்ஜி. அதன் அலேர்ஜிக்கு ஏற்ப எங்கட பச்சோந்தி அரசியல் நகருமாக இருந்தால்.. அடையப்படுவது சூனிய வெளியாகவே இருக்கும். தமிழ் மக்களுக்கான உரிமையாக இருக்காது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இல்லை கூட்டமமைப்பும் அதைதான் சொன்னது நாங்களும் அதையே தான் சொல்லுகின்றோம் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதிலேயே "தமிழ் தேசியம்" அடங்கியிருக்கு.. அவர்களது கட்சியின் பெயரையே அவர்கள் எதிர்க்கிறார்களா?

இல்லை என்பதுதான் பதில். அரசியலில் உள்ளவர்கள் தேர்தலுக்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள். ஆனால் பெயரில் உள்ள விடயம் தமிழ் மக்களை தமது பக்கம் வைத்திருக்க மட்டுமே..

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஒன்றையும் புதுசா சொல்லவில்லை. மீண்டும் இலங்கைத் தீவுக்குள் ஒரு பிரிவினைக்கு இடமளிக்கப்படாது என்ற உறுதிப்பாட்டை சிங்கள மக்களுக்கு உறுதியளிப்பதன் மூலமே தீர்வுக்கான அடுத்த படியில் முன்னெறமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவு சிங்களவர்களுக்கானது என்ற புனைவு மாயை தகர்க்கப்படும் வரை இலங்கைத் தீவில் பிரச்சனைக்கு முடிவே வராது. ரணில் என்ன அணில் வந்தாலும் முடியாது. இலங்கைத் தீவு இரு பெரும் தேசிய இனங்களின் தேசம் என்ற அடிப்படை உள்வாங்கப்படுவதும்... அதன் அடிப்படையில் மக்கள் சிந்திக்கச் செய்யப்படுவதும் அவசியம். மாறாக தவறான வரலாற்று மாயைக்குள் சிங்களவர்களை கட்டி வைச்சுக் கொண்டு தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்படும் என்பது தேர்தல் அரசியலாக மட்டுமே இருக்க முடியும். நிச்சயமா நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே எப்போதும் இருக்கும் என்பதற்கு கடந்த கால சிங்களத்தினுடனான ஒப்பந்தங்கள்.. பேச்சுக்கள்.. இணக்கப்பாடுகளுக்கு நடந்த கதி  சொல்லும் சேதி போதுமானதாக இருக்கும்.

சிங்கள மக்கள் இலங்கைத் தீவு தமிழர்களினதும் பூர்வீக தேசம் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சிங்கள அரசியல்.. சமூகத் தலைமைகள்.. ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில்... அமையும் தீர்வுகள் மட்டுமே இலங்கைத் தீவில் சம உரிமையோடு எல்லாம் மக்களும் தமக்குரிய அரசியல்.. பொருண்மிய.. சமூக உரிமையோடு அமைதியாக வாழும் சூழலை தோற்றுவிக்கும்.

மாறாக பெரும்பான்மை சிங்களவர்களை திருப்திப்படுத்தும் வகையில் தான் தமிழர்கள் உரிமை பெற முடியும் என்பது எந்த வெளிப்படையான விருப்பையும் கொண்ட ஆக்க பூர்வமான தீர்வுகளை எட்ட உதவாது. இலங்கைத் தீவு தொடர்ந்து சர்ச்சை தீவாகவே இருக்கும். அந்த வகையில்.. சிங்களவர்களிடம் இந்த புரிதலுக்கான ஆரம்பத்தை சர்வதேசமும் இணைந்து அழுத்தம் கொடுத்து கொண்டு வரச் செய்வது மிக அவசியம். அதுமட்டுமன்றி சிங்கள மக்கள் தமிழர்கள் மீது இழைத்த பெரும் மனிதக் கொடுமைகளுக்கு பரிகாரம் தேடும் மனநிலைக்கு அவர்களைக் கொண்டு வரவும் சர்வதேசம் தன்னால் இயன்ற அழுத்தங்களைக் கொடுக்க தமிழர்கள் சர்வதேசத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். 

இன்றைய சூழலில்.. இதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. அவற்றை தமிழர்கள் பாவிக்காது.. இதயத்தால் இணைந்தோம்.. உடலால் பிணைந்தோம்.. இணக்கமே எமது குறிக்கோள்.. ஒற்றைச் சிறீலங்கா ஓகே.. இதெல்லாம் சிங்களவர்களை மகிழ்வித்து தமிழர்களுக்கு உரிமை பெற்றும் தரும் என்று கருதினால்.. அந்த உரிமை எப்பவும் அபாயகரமானதாகவும்.. சாத்தியாப்பாடற்றதாகவுமே இருக்கும். சிங்களவர்களிடம் சரியான புரிந்துணர்வின்றி.. வரலாற்றை திரிபின்றி ஏற்கும் பக்குவம் அவர்களுக்கு வராமல் தமிழர்கள் விரும்பக் கூடிய தீர்வை இலங்கைத் தீவில் எட்டுவது சாத்தியமில்லை. 

Edited by nedukkalapoovan

புலிகளையும் வாளுகளையும் மொக்கு கூட்டங்கள் என்று ஏன்எல்லோரும் அழைக்க வெளிட்டார்கள் .

அடிப்படை அரசியல் அறிவே கிடையாத படியால்தான் .

முள்ளிவாய்கால் முடிவும் தேர்தல் முடிவுகளும் அதை இப்போ முழுமையாக இப்போ நிருபித்துவிட்டது .

தேசியம் வேறு தேசம் வேறு .

அருவரி பாடம் நடத்த வேண்டிக்கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு தேசியம்.. தேசம் என்றாலே பிரித்துப் படிக்க பொறுமை இல்லைப் போல. மொக்குக் கூட்டம் என்றவை.. 1984 இல் இருந்து சாதித்தது சொந்த ஒட்டுக்குழு பெயரில் தேர்தலில் நிற்க முடியாது.. சுய நிர்ணயம்.. சமஷ்டி.. சம உரிமை கூச்சலோடு தமிழ் தேசிய அடையாளத்துக்குள்.. பதுங்கி தேர்தலை சந்திக்கும் கேடுகெட்ட குள்ளநரித்தனத்தை மட்டுமே. இதெல்லாம் சிலருக்கு அறிவுசார் அம்சங்கள். ஏனெனில் அவர்களுக்கு அறிவுக்கும் பச்சோந்தி வாழ்க்கைக்கும் வேறுபாடு தெரியாத அறிவுதான் உள்ளது. பாவங்கள் அதுகளின் படிப்பளவு அப்படி. tw_angry:tw_blush:

சிங்க கொடி பிடித்த சம்பந்தரும் வெற்றி கூட்டமைப்பும் வெற்றி .

சிறிலங்காவிற்குள் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்வு அது இன்னொரு நாட்டின் அரசியல் அமைப்பு மாதிரி இருக்க தேவையில்லை .

கனடா ,ஜெர்மனி ,இந்தியா இவைகள் எல்லாம் வெறும் உதாரணங்களே .

சிங்க கொடியுடன் தான் நாங்கள் இனி கிரிக்கெட் மாட்ச் பார்க்க போகின்றோம் .நாட்டிலும் உள்ள மக்கள் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் இடையில் ------- கிடந்து சும்மா ஏன் துடிக்கினம் என்று விழங்கவில்லை .

அர்ஜுன்  உங்களுக்கு புலிகளை இழுக்காமல் இப்போது கூட கருத்து வைக்க முடியலையா. 

மற்றவர்களை முட்டாள்  கூட்டம் என்று  சொல்லும் உங்களின்  உயர் qualification என்ன ? அல்லது என்ன qualification உள்ளவர்கள் யாழில் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் .

அபராஜிதன் ,

யாழில்  பலருக்கு இருக்கும் பிரச்சனையே இதுதான் . மற்றவர்களை தாங்கள் எப்படியும் நோகடிக்கலாம் .எப்படியும் எழுதலாம் ஆனால் தங்கள் மடியில்  கை வைக்ககூடாது .இந்த திரியையே முதலில் இருந்து பார்க்கவும் .

எந்த திரியை எடுத்து பார்த்தாலும் இந்த உண்மை விளங்கும் .ஆயிரம் உதாரணங்கள் காட்டலாம் ஆனால் மற்றவர்களை நோகடிப்பது பலர் கண்ணுக்கு தெரியாமல் போகின்றது .

யாழ் ஆரோக்கியமாக போகவேண்டும் என்றால் அதைத்தான் நானும் நீங்களும் செய்ய வேண்டும் . 

நெடுக்கர் முதலில் வந்து அப்படி ஒரு கருத்து எழுதும் போது  அதை சுட்டிக்காட்ட உங்களால் ஏன் முடியாமல் போனது .காலம் காலமாக இதுதான் இங்கு நடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடியை ஆட்டியதற்காக மட்டுமல்ல.. பிரபாகரனை உச்சரிச்சாலும் கைதட்டி வரவேற்று.. அவரே எங்கள் தேசிய தலைவர் என்று கூச்சல் போட்டு..  வாக்குப் போடும் மக்களும் தான் தாயகத்தில் இருக்கினம். ஆக மக்கள் ஒன்றும் தெளிந்த அரசியல் ஞானத்தோடு வாக்களிக்கவில்லை. தமிழ் தேசிய அடையாளத்துக்குள் அடக்கும் எல்லாத்தையும் மக்கள் வெள்ளாந்தியா பார்க்கிறார்கள்.. மிக மோசமானவர்களும் அதனால் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் சில சந்தர்ப்பங்களில். அதில் சித்தார்த்தன் அடக்கம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு வாக்களிப்பு என்பது தற்போதையநிலையில்

மக்களுக்கிருந்த ஒருவழிப்பாதை மட்டுமே

அது தான் பாதை என  நீங்கள் சொல்வது எந்த வரலாற்றுப்படிப்பும்

தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொள்ளாததுமாகும்.....

மக்களின் இருண்டநிலையைப்பாவிக்கலாம்

ஆனால் அது நிரந்தரமன்று..

சிங்க கொடி பிடித்த சம்பந்தரும் வெற்றி கூட்டமைப்பும் வெற்றி .

சிறிலங்காவிற்குள் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்வு அது இன்னொரு நாட்டின் அரசியல் அமைப்பு மாதிரி இருக்க தேவையில்லை .

கனடா ,ஜெர்மனி ,இந்தியா இவைகள் எல்லாம் வெறும் உதாரணங்களே .

சிங்க கொடியுடன் தான் நாங்கள் இனி கிரிக்கெட் மாட்ச் பார்க்க போகின்றோம் .நாட்டிலும் உள்ள மக்கள் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் இடையில் ------- கிடந்து சும்மா ஏன் துடிக்கினம் என்று விழங்கவில்லை .

இவ்வளவு விளக்கம் சொல்லும் தாங்கள் இன்னும் எதற்கு சித்தரின் கட்சியில் தமிழீழமக்கள்விடுதலைக்கழகம் என்றிருக்கிறது என்பதற்காவது பதில் தரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதிலேயே "தமிழ் தேசியம்" அடங்கியிருக்கு.. அவர்களது கட்சியின் பெயரையே அவர்கள் எதிர்க்கிறார்களா?

இல்லை என்பதுதான் பதில். அரசியலில் உள்ளவர்கள் தேர்தலுக்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள். ஆனால் பெயரில் உள்ள விடயம் தமிழ் மக்களை தமது பக்கம் வைத்திருக்க மட்டுமே..

என்னையா இது எல்லாக்கட்சிகளும் ஈழம் என்ற பெயரை தங்கள் பெரில் வைத்திருக்கின்றனவே. அதுபோல் தமிழ்த் தேசியம்>தமிழரசு எல்லாம் சும்மா சுத்துமாத்துக்கு

சிங்களவரை ஆத்திரப் படுத்தாமல் கூலாக வைத்திருக்க பிரிக்கப்படதா ஒன்றுபட்ட நாட்டை ஆதரிக்கும்கட்சிகள்  தங்கள் கட்சிகளில் தமிழ்.ஈழம்ஈதமிழ்த்தேசியம் என்ற பெயர்களில் கட்சிகள் வைத்திருக்கக் கூடாது. என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/152498#sthash.4jgyTIV0.dpuf

சூராவளியின் சந்தோஷத்தை அவர் இணைத்த செய்தியிலிருந்து காணக்கூடியதாக உள்ளது. எனி புலிகளின் இலட்சியம் ஒருபோதும் நிறைவேறாது என்று அர்ஜுன். மற்றும் சிலர் சந்தோஷப்படலாம். 

சபாஷ் அபராஜிதன் அப்படி நச்சேன்று  கேட்டாலும் அர்ஜுனுக்கு விழங்காது, ஏனெனில் புலித்துவேஷம் காதை செவிடாக்கி விட்டிருக்கும். இதே அர்ஜுனும் அவர் பரிவாரங்களும், ஒருவேளை சுமந்திரன் மற்றும் சம்பந்தர் தமிழரின் நன்மை கருதி  சமஷ்டி,  இரு நாடு , இரு தேசம் என்று தம் கொள்கைகளை மாற்றினால் முதல்வரை அவமதித்தது போல சம்பந்தர், சுமந்திரனைஅவமதிக்க்கும் காலம் வெகு தூரத்திலில்லை

Wait and see

கூட்டமைப்புக்கு வாக்களிப்பு என்பது தற்போதையநிலையில்

மக்களுக்கிருந்த ஒருவழிப்பாதை மட்டுமே

அது தான் பாதை என  நீங்கள் சொல்வது எந்த வரலாற்றுப்படிப்பும்

தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொள்ளாததுமாகும்.....

மக்களின் இருண்டநிலையைப்பாவிக்கலாம்

ஆனால் அது நிரந்தரமன்று..

இவ்வளவு விளக்கம் சொல்லும் தாங்கள் இன்னும் எதற்கு சித்தரின் கட்சியில் தமிழீழமக்கள்விடுதலைக்கழகம் என்றிருக்கிறது என்பதற்காவது பதில் தரலாம்

யாழில் கேள்வி -பதில் பகுதி ஒன்று ஆரம்பித்தால் நல்லது என்று நினைக்கின்றேன் .

80 களின் இறுதிலேயே புளொட் அரசியல் கட்சியாக பதிவு செய்து பேரை வேறு மாற்றிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளியின் சந்தோஷத்தை அவர் இணைத்த செய்தியிலிருந்து காணக்கூடியதாக உள்ளது. எனி புலிகளின் இலட்சியம் ஒருபோதும் நிறைவேறாது என்று அர்ஜுன். மற்றும் சிலர் சந்தோஷப்படலாம். 

உண்மையை... இரண்டு வரியில், பளிச்சென்று... சுட்டிக் காட்டிய, அழகான வசனம் ராகா.
பல ஒட்டுக் குழுக்கள்,  இப்போ... தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் தமிழரசுக் கட்சி என்னும் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால்.... இவர்கள், எடுக்கும் வாந்தி... அப்பவும், இப்பவும் ஒன்று தான்...
இவர்கள் எடுக்கும், வாந்தியின்... குமட்டல் மணத்தைப் பார்த்தே... இவர்கள் யார், என்பதை... இலகுவில் கண்டு பிடித்து விடலாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதிலேயே "தமிழ் தேசியம்" அடங்கியிருக்கு.. அவர்களது கட்சியின் பெயரையே அவர்கள் எதிர்க்கிறார்களா?

இல்லை என்பதுதான் பதில். அரசியலில் உள்ளவர்கள் தேர்தலுக்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள். ஆனால் பெயரில் உள்ள விடயம் தமிழ் மக்களை தமது பக்கம் வைத்திருக்க மட்டுமே..

தே என்பது வேறு 
சி என்பது வேறு 
ய என்பது வேறு 
 
இந்த சின்ன மாட்டரே இன்னும் உங்களுக்கு புரியல்ல.

National வேறு 
Nationalism வேறு 

இஸ்பெலிங்க சரியா செக் பண்ணிபருங்க.
அவங்க மொக்கு  என்பதில் என்ன பிழை இருக்கு ?

விசில் அடிக்கும் அரசியல் வேறு யதார்த்த அரசியல் வேறு .

காலம் காலமாக விசில் அடித்தவர்களை பார்த்து நாம் சொல்லிவந்து இதுதான் தனிய விசில் உடனேயே உங்கள் போராட்டம் முடிந்துவிடும் அப்போ தான் யாதார்த்தை உணர்வீர்கள் என்று .

நாட்டில் மக்கள் இப்போ அதை உணர்ந்துவிட்டார்கள் ஆனால் புலம் பெயர்ந்த சிலர் மட்டும் இப்பவும் விசிலுடன்  ஆனால் இவர்கள்  சொந்த வாழ்க்கையில் பேய்காய்கள் அரசியலில் மட்டும்தான் விசில் வாழ்க்கையில் மிக யதார்த்தம் .வீடு கார் பிள்ளைகள் விடுமுறை என்று சொல்லி வேலையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சின்ன மாட்டரே புரியல்லே ....

இனி நாம்  மனிதர்கள் இல்லாதா ..... (மனிதர்கள் அடங்காத )
மனித நேயம் பற்றி பேசுற அடுத்த கட்டத்ததிட்கு நகர போகிறோம் 
அதை எப்படித்தான் புரிய போறீங்களோ ? 

கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..!

கூட்டமைப்பிற்கு இலங்கை தேசிய அரசில் .......?

ஒரு  நாட்டுக்குள் 
ஒரு தேசம் 

இதை சிங்களவன் குட்டுபோட்டு அப்ப அப்ப தெளிவா சொல்லிவாறான். 
குண்டுபோட்டு சொல்லியே புரியல்ல ....
இனி சான்சே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

PLOTE's political wing is known as the Democratic People's Liberation Front

https://en.m.wikipedia.org/wiki/People's_Liberation_Organisation_of_Tamil_Eelam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.