Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": கம்பவாரிதி ஜெயராஜ் கேள்வி

Featured Replies

இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள்.

"போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் இந்திய பிரதமர் மோடியை அழைக்கவில்லை என்பதை கம்பவாரிதி ஐயா அறிந்த கொள்ளவேண்டும்....கலைஞர்கள் வேறு அரசியல் தலைவர்கள் வேறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை விமர்சிப்பவர்கள் அவர்களிடமிருந்து பெறும் நிதியை முதலிலல் நிராகரிக்க வேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணலை முழுமையாக கேட்ட வரைக்கும் ஜெயராஜ் தனது நிலையில் இருந்து பதிலை கூறியிருக்கின்றார். அதுவும் ஆணவத்தோடு பதில்களை அளித்திருக்கின்றார். கேள்விகள் கேட்கின்ற அறிவிப்பாளர் இன்னும் அவரை மடக்கி கேள்விகள் கேட்டு இருக்கலாம்.

நேர்காணலில் கம்பவாரிதி ஜெயராஜ் என்ன கூற வருகின்றார் எனில், தாங்கள் சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றினால் வெளிநாட்டில் தம்மை புறக்கணிக்குமாறு புலம்பெயர் புலி வால்கள் பிரச்சாரம் செய்வதனை மறைமுகமாக கூற வருகின்றார்.

தான் எழுதிய கட்டுரை காரணமாக இங்கே கனடாவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் பின்னர், தன்னை அழைக்காமல் விட்டுவிட்டனர் என்று நேர்காணலில் குறிப்பிடுகின்றார்.

இந்த இடத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து எனது நண்பர் கூறிய தகவலை உங்களுக்கு அறியத்தருவது நல்லது என நினைக்கின்றேன்.

அண்மையில் அந்த நாட்டில் இருந்து இலங்கையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவுக்கு சென்றிருந்த கம்பன் கழக முக்கியஸ்தர் ஒருவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு திலகமிட்ட விடயத்தினை வைத்துக்கொண்டு அவரை அங்கு உள்ள புலி வாலுகள் நேரடியாக மிரட்டியதோடு மட்டுமல்லாது அவரை பொது நிகழ்வுகளுக்கு அழைப்பதனை தவிர்க்குமாறு அங்குள்ள தமிழ் அமைப்புக்களிடமும் கூறி வருகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாது நிகழ்வுக்கு அழைத்த சில தமிழ் அமைப்புக்களுக்கு தொலைபேசியால் மிரட்டியும் உள்ளனர்.

இங்கே நான் கூறுவது பொய் என வாதிட முனைபவர்கள் தொடர்புபட்டவர்களோடு ஒரு தடவை உரையாடி விட்டு பின்னர் என்னை தூற்றியோ வசைபாடியோ எழுதலாம்.

கம்பவாரிதி ஜெயராஜ் தமிழ் இலக்கியம் சார்ந்த விடயமாகவே சேவை செய்கின்றார். அப்படியானால் இவரை ஏன் புலம்பெயர் நாடுகளுக்கு அழைப்பதனை எதிர்க்கின்றீர்கள்? இவர் அரசியல்வாதி இல்லையே.

பிசினஸ் கிளாசில் ஏறியே இராத இந்திய கலைஞர்களுக்கு எம்மவர்கள் பிசினஸ் கிளாசில் ஆசனம் பதிவு செய்து டிக்கெட் எல்லாம் எடுத்து கொடுத்து வரவேற்பார்கள். ஆனால், எம்மவர்களை மட்டும் அழைத்தால் அவன் இவனின் ஆள், அது இது எனக் கூறி அவர்களை முன்னேறவே விடமாட்டார்கள்.

கம்பவாரிதி ஜெயராஜ் தமிழ் இலக்கியம் சார்ந்த விடயமாகவே சேவை செய்கின்றார். அப்படியானால் இவரை ஏன் புலம்பெயர் நாடுகளுக்கு அழைப்பதனை எதிர்க்கின்றீர்கள்? இவர் அரசியல்வாதி இல்லையே.

மைத்திரியை அழைத்து திலகம் இட்டதும் இலக்கியம் சார்ந்த விடயமா? மைத்திரி ஒரு அரசியல்வாதி இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரிதியாரின் வசைபாடலுக்கு வருவோம் -

1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.

2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.

3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும். 

4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும். 

5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல

கம்பவாரிதியின் கட்டுரையைத் தேடினோன் கிடைக்கவில்லை. கனாடாவுக்கு ஓசியில் சுற்றுலா வந்துவிட்டு அவர்களைப்பற்றி கீழ்த்தரமான விமர்சனத்தை முன் வைத்தார். 

கம்பன் கழகம் இனி அரசியல் பேசும் என்று அவரே சொல்லியிருக்கிறார் அது மட்டுமன்றி பல தமிழகத்து பிரபலங்களையும் நாம் மறுதலித்த நிகழ்வுகள் பல நூறு எனவே அது கம்பவாரியருக்கு மட்டுமல்ல... 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களாகிய உங்களிடம் இரட்டை நிலைப்பாடு இருக்கும் போது ஏன் எம்மிடம் மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள் என்று அவர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றார்.

இந்தியா போருக்கு உதவி செய்தது. அப்படியானால் அந்த நாட்டு மக்களும் அதற்கு உடந்தை என்றுதான் அர்த்தம். அந்த நாட்டு ஊடகங்களும் உடந்தை என்றுதான் அர்த்தம். அப்படியெனில் நாம் அந்த நாட்டு கலைஞர்களை அழைப்பு விடுப்பதனை தவிர்ப்பதே சிறந்தது.

வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவுக்கு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததே அமெரிக்காவின் மக்களும் ஊடகங்களும்தான் காரணம் என்பதனை மறந்து விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போருக்கு நேரடியாக சில நாடுகளும் மறைமுகமாக பல நாடுகளும் உதவி புரிந்துள்ளது. எனவே இலங்கைத்தமிழ் மக்கள் அந்த நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களை புறக்கணிக்க வேண்டும். 

இதற்கு எடுத்துக் காட்டாக ஜெயராஜ் போருக்கு உதவிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை விமர்சிப்பவர்கள் அவர்களிடமிருந்து பெறும் நிதியை முதலிலல் நிராகரிக்க வேண்டும்...!

அப்படிப் போடுங்கோ...அரிவாளை......!:)

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போருக்கு நேரடியாக சில நாடுகளும் மறைமுகமாக பல நாடுகளும் உதவி புரிந்துள்ளது. எனவே இலங்கைத்தமிழ் மக்கள் அந்த நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களை புறக்கணிக்க வேண்டும். 

இதற்கு எடுத்துக் காட்டாக ஜெயராஜ் போருக்கு உதவிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

மீரா..... அடி மடியில், கை வைக்கிறார். SmileysLaughing_lol_dielaughing_crying_100-100

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை விமர்சிப்பவர்கள் அவர்களிடமிருந்து பெறும் நிதியை முதலிலல் நிராகரிக்க வேண்டும்...!

நிதர்சனும்.... அடி மடியில், கை வைக்கிறார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து எனது நண்பர் கூறிய தகவலை உங்களுக்கு அறியத்தருவது நல்லது என நினைக்கின்றேன்.

அண்மையில் அந்த நாட்டில் இருந்து இலங்கையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவுக்கு சென்றிருந்த கம்பன் கழக முக்கியஸ்தர் ஒருவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு திலகமிட்ட விடயத்தினை வைத்துக்கொண்டு அவரை அங்கு உள்ள புலி வாலுகள் நேரடியாக மிரட்டியதோடு மட்டுமல்லாது அவரை பொது நிகழ்வுகளுக்கு அழைப்பதனை தவிர்க்குமாறு அங்குள்ள தமிழ் அமைப்புக்களிடமும் கூறி வருகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாது நிகழ்வுக்கு அழைத்த சில தமிழ் அமைப்புக்களுக்கு தொலைபேசியால் மிரட்டியும் உள்ளனர்.

கம்பன் கழக முக்கியஸ்தர்கள் புலிவாலுகளின் மேடைகளில் புலிவால்களுக்காக முழக்கமிட்டு போட்டு அங்க போய் சிங்கத்தின் வாலில தொங்கினா புலிவால்களுக்கு கோபம் வரும் தானே

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் கழக முக்கியஸ்தர்கள் புலிவாலுகளின் மேடைகளில் புலிவால்களுக்காக முழக்கமிட்டு போட்டு அங்க போய் சிங்கத்தின் வாலில தொங்கினா புலிவால்களுக்கு கோபம் வரும் தானே

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை நான் தீர்மானிக்க முடியாது. அதேபோன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஏனெனில், இது தனிமனித சுதந்திரம் சார்ந்த விடயம்.

மைத்திரிக்கு திலகம் இட்டதனால் எல்லாம் அவர் துரோகி ஆகிவிட முடியாது. அவருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு இருக்கின்றது. அந்த உணர்வினை வன்முறை மூலம் காட்டுபவர்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகளா?

அவுஸ்திரேலியாவில் இருந்து சென்றிருந்தவர், தான் சார்ந்திருந்த கம்பன் கழகத்தின் நிகழ்வுக்குச் சென்றிருந்த வேளை அவர் அதனை செய்திருக்கின்றார். அதனால் எல்லாம் வைத்துக்கொண்டு எப்படி துரோகி ஆக்க முடியும்? அந்த அதிகாரத்தினை புலி வால்களுக்கு கொடுத்தது யார்? எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்கின்ற அடிப்படை அறிவுதானும் இருக்கின்றதா?

புலம்பெயர் நாடுகளில் இன்னும் தாம் புலிகள் என்று நினைத்துக் கொண்டு பலர் செய்கின்ற கூத்துக்களுக்கு விரைவில் முடிவு கட்டியே ஆக வேண்டும். இவ்வாறு தொடர்ந்தால் எதிர்காலச் சந்ததியினர் எமது சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டே செல்வர். ஏலவே, இவ்வாறான குழு மோதல்களை பார்த்து விட்டு தமிழ்ச் சமூகத்தோடு இணையாது பிற சமூகத்தோடு இணைந்து வாழ பழகி விட்டனர்.

எதிர்காலச் சந்ததியினருக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள் பிறரை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் தான் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் ஐனநாயக உரிமையினை மற்றவர்கள் முதலில் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்பன் கழகம் கொழும்போட இருக்க வேண்டியது தானே. பிறகென்ன  வெளிநாட்டு புலிவால் களோடு மோதல்..   போராடும் பொழுது    ஜாலியா கொழும்பில இருந்து கொழுத்துப்போட்டு  இப்ப எல்லாரும் வெளிகிட்டினம்.  போராட போன சுப்பனும் ,கந்தனும் பாவப்பட்ட மக்களாக்கும்..  

தாய் (ஈழ்த்தமிழ்த்தாய்)   சிங்களத்தால் செத்துக்கொண்டுருக்குள்ள   அதை  காப்பாத்த ,உதவி செய்ய வக்கில்லை ,

மேடையில   பேசி ,அழகு பார்த்து தமிழை வளர்க்கினமாம்.

கம்பவாரிதியின் நாயகனே ஒரு வன்முறையாளன்.....கெரில்லா வீரன்....(மறைந்திருந்து யாரையோ தாக்கினவராம்.....யாரை தாக்கினார் என்பது எனக்கு முக்கியமில்லை காரணம் நான் தனிமனித தூதி பாடுபவனல்ல... )
ஜனநாயக உரிமை என்று வரும்பொழுது புலிவால்களுக்கு உரிமையுண்டு "ஏன் அண்ணே  சிங்கத்தின் வாலில் தொங்கினீங்கள்" என்று கேள்வி கேட் பதற்கு ஆனால் உரிமையில்லை துரோகி என முத்திரை குத்துவதற்கு....
எமது எதிர்கால சந்ததியினர் பிற சமுகத்துடன் இணைவதற்கு முக்கிய காரணம் குழு மோதல்கள் அல்ல அவர்களின் நிறமும் அழகும்.....சிலிம் அன்ட் டொல்.....

பெயருக்கும் புகழுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள  புலிகளின் மேடைகளில்( அல்லது தமிழர்களின்)கூவுவதை   நிறுத்தி நான் ஒரு சிங்க வால் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்... 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிர்மலன் உதாரணம் காட்டும் சிட்னியைச் சேர்ந்த கம்பன் கழக முக்க்யஸ்த்தருடன் சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். தாயகத்தில் உள்ள எமது உறவுகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருந்த வேளையில் அவர்களின் குரலாக அவர்களின் அபிலாசைகளை புலம்பெயர்ந்திருந்த நாம் எழுப்பிய அரசியல் வேலையது. 

எமது அரசியல் பணியில் மேற்சொன்ன கம்பன் கழக முக்கியஸ்த்தரே மிகவும் முக்கியமானவராக, அரசியலில் முதிந்தவராக இருந்தார். ஆகவே , அவரின் சொற்படியே பல முடிவுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படிருந்தன. எமது அந்த அரசியல் நடவடிக்கையே தாயகத்தில் பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட எமது உறவுகளுக்காக புலத்தில் எழும்பும் எமது கூக்குரல் என்கிற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

ஆனால் அந்த முக்கியஸ்த்தரின் முக்கியஸ்த்தரான கம்பவாரிதியோ, 'புலத்திலுள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ளோர் சார்பில் அரசியல் பேசும் அருகதை இல்லை, நீங்கள் உங்களின் வேலையைப் பாருங்கள், எங்களைப் பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும்' என்று வீறாப்புப் பேசும்போது சிட்னியின் கம்பன் கழக முக்கியஸ்த்தரும் அருகில் இருந்திருக்கிறார். 

எனது ஆதங்கம் என்னவென்றால், உண்மையான தேசிய உணர்வுள்ள ஒரு தமிழ் அறிஞர், எதற்காக ஒரு பணம் பார்க்கும் இலக்கிய விபச்சாரியோடு சேர்ந்து இன்னமும் இயங்க வேண்டும் என்பதுதான்.

ரகு நீங்கள் சொல்லும் இருவரும் எனது வகுப்புத்தான் .

யாழ் இந்து கனடா கிளை  கம்பவாருதியை கனடாவிற்கு அழைத்தது பதினைந்து வருடங்களுக்கு முதல் .பத்து பிரசங்கங்கள் ஏற்பாடுபண்ணியிருப்போம் அரசியல் ஒரு வரி கூட பேசவில்லை .

இப்போ சில வருடங்களாக அரசியல் பேசியே வருகின்றார் .அவரை பேச வைத்தார்கள் என்றுதான் நினைக்கின்றேன் 

தம்முடன் உடன் பாடாதவர்களை துரோகிகள் ஆக்கி இனத்தை பிரித்தவர்கள் இன்றும் அதையே தொடர்கின்றார்கள் .

இதில் உடன்படாமல் இருப்பது என்று எதைக் கருதுகிறீர்கள்? கம்பவாருதி தனது கடிதத்தில் கொட்டித் தள்ளியது ஒன்றும் எமதினம் சார்ந்த விடயமல்லவே. மாறாக முழுக்க முழுக்க தான் எவ்வளவு உயர்ந்தவர், புலம்பெயர்ந்தவர் எவ்வளவு தாழ்ந்தவர் என்பது பற்றியல்லவா? தன்னை நியாயப்படுத்த தாயகத்திலுள்ளோரை வேணுமென்றே வரிந்து கட்டிக்கொண்டு, தனக்கு பணம் வரும் வழி அடைக்கப்பட்டு விட்டதே என்று புலத்தில் உள்ளோரை கேவலமாக விழித்து எழுதப்படதை எப்படி  இனத்தைப் பிரிக்கும் கைங்கரியம் என்று சொல்லுகிறீர்கள்?

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்களாகிய உங்களிடம் இரட்டை நிலைப்பாடு இருக்கும் போது ஏன் எம்மிடம் மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள் என்று அவர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றார்.

இந்தியா போருக்கு உதவி செய்தது. அப்படியானால் அந்த நாட்டு மக்களும் அதற்கு உடந்தை என்றுதான் அர்த்தம். அந்த நாட்டு ஊடகங்களும் உடந்தை என்றுதான் அர்த்தம். அப்படியெனில் நாம் அந்த நாட்டு கலைஞர்களை அழைப்பு விடுப்பதனை தவிர்ப்பதே சிறந்தது.

வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவுக்கு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததே அமெரிக்காவின் மக்களும் ஊடகங்களும்தான் காரணம் என்பதனை மறந்து விடக்கூடாது.

அந்த நாட்டுக் கலைஞர்கள் ஒரு கட்டத்தில் எமக்கான போராட்டங்களை நடாத்தினார்கள்... கொழும்பிலிருந்த அரசாங்க செல்வாக்கு மிக்கவர்களால் ஓர் அறிக்கையை கூட விட முடியாது போனது ஏனோ?

யார் யாருக்கு உடந்தை? எனபது வெளிப்படையாகவில்லையா?

அடி முடி   தெரியாதவர்கள் தான் இங்கு பலர் .

அழியவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படி அறிக்கை விடுவார்கள் .

அந்த நாட்டுக் கலைஞர்கள் ஒரு கட்டத்தில் எமக்கான போராட்டங்களை நடாத்தினார்கள்--- கொமடி விட கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் கழகம் கொழும்போட இருக்க வேண்டியது தானே. பிறகென்ன  வெளிநாட்டு புலிவால் களோடு மோதல்..   போராடும் பொழுது    ஜாலியா கொழும்பில இருந்து கொழுத்துப்போட்டு  இப்ப எல்லாரும் வெளிகிட்டினம்.  போராட போன சுப்பனும் ,கந்தனும் பாவப்பட்ட மக்களாக்கும்..  

தாய் (ஈழ்த்தமிழ்த்தாய்)   சிங்களத்தால் செத்துக்கொண்டுருக்குள்ள   அதை  காப்பாத்த ,உதவி செய்ய வக்கில்லை ,

மேடையில   பேசி ,அழகு பார்த்து தமிழை வளர்க்கினமாம்.

உண்மை.... நேசன்.
கம்பவாருதி, ஆன்மீகத்தில் மட்டும் ஈடுபடுவதே... சிறந்தது.

(நெடுக்கரை... இந்தத் திரிக்குள், வந்து கருத்து எழுதும் படி... அன்புடன் அழைக்கின்றோம்.) :grin:

தங்களை புகழ்ந்து பாடாவிட்டால் புலிகளுக்கு பிடிக்காது

ஒருவன் கொஞ்சம் பேரும் புகழும் பெற்றால் வாலுகளுக்கு பொறுக்காது .

இதுதான் முழு பிரச்சனைக்கும் காரணம் .

துவக்குடன் நின்றால் யார் வாயை திறப்பான் 

இப்ப எல்லா பக்கத்தாலும் வாங்கி கட்டுகினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஜெயராயிற்கு ஆதரவு தெரிவிக்கும் எல்லோருமே எதிரியின் எதிரி நண்பர் என்ற வகையில் தான். ஆனால் அதை வெளியில் காட்டாமல் எதோ ஜெயராஜ் நல்லவன் மாதிரியும் அவர்அரசியல் கதைத்தாலும் அது யாரோஅவரை வற்புறுத்தி கதைக்க வைத்தார்கள் என்று ஒரு கதை. இப்படியானவர்களுக்கு response பண்ணாவிட்டால் அவர்களாக விலகுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை புகழ்ந்து பாடாவிட்டால் புலிகளுக்கு பிடிக்காது

ஒருவன் கொஞ்சம் பேரும் புகழும் பெற்றால் வாலுகளுக்கு பொறுக்காது .

இதுதான் முழு பிரச்சனைக்கும் காரணம் .

துவக்குடன் நின்றால் யார் வாயை திறப்பான் 

இப்ப எல்லா பக்கத்தாலும் வாங்கி கட்டுகினம் .

கிரிகெட் விளையாட்டில், அரசியலை கலக்கக் கூடாது என்று சொன்னீர்கள்.
ஆன்மீகத்திலும், அரசியலை..... கலக்கலாம், என்று சொல்ல வாறீங்களா?
ஆன்மீகம் என்றால், அந்த வட்டத்துக்குள் இருந்து கொள்ள வேண்டும். அதனை மீறி... வெளியே வந்து, அரசியல் செய்ய வெளிக்கிட்டால்.... ஜெயராஜ் பெயர் கெட்டு விடும். யாழ்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலரும் ஆன்மீகவாதி தான்...  அவரால், புனித கிறிஸ்தவ பைபிளுக்கு கூட அவரால்... தமிழில்  மொழி பெயர்க்க முடிந்தது. ஆனால்.... வெள்ளைக்காரனின்... அரசியலில் கலக்கவில்லை.

இந்த.. வாருதி, செய்யும்... அலப்பரையை பொறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

'கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்' என்ற பாட்டும் சுபேஸின் ஆட்டுத்தலை கறி கன்னியும் தான் நினைவில் வருது, ஒருவேளை கம்பன் நடுத்தர வயது ஆண்டிகளை மலர் எண்டால் ஏமாந்து இருக்கமாட்டானோ என்னவோ!

அது சரி கம்பவாரிதி எப்ப ஆன்மீகவாதியானார்? அவர் இலக்கிய சொற்பொழிவாளர் எல்லோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.