Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை! - என்கிறது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா  தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா  அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

   

அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக கருணா வெளியிட்ட கருத்தை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார். குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகவும் தற்போது ராணுவ அதிகாரிகள் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் தொடர்பாக கருணா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், இந்தியப் படையினர் ஒருபோதும் வவுனியாவில் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராணுவத்தினரை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139889&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • Replies 74
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...தமிழரசு! நலம் தானா?

இந்தியா மஞ்சள் வேட்டிக்கு 'நீலம்' போட வேண்டிய நேரம் சரியா அமைஞ்சிட்டுது!

நாங்களும் நெத்தியில நாமம் போட வேண்டிய  நேரமும் வந்திட்டுது!:love:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் செவ்வியை கேட்கவில்லை. ஆனால் இரசாயன ஆயுதத்தை நேரடியாகவோ அல்லது பின்னிருந்தோ களத்தில் நின்று செய்தது இந்திய இராணுவமே என்பது ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். மகிந்தவுக்கு அடிக்கடி மின்சார நாற்காலியைப் பற்றி பேசும் தைரியத்தை வழங்குவதும் போரில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு என்கிற விடயம்தான். 

இப்போது ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் போகிறது. ஆகவே பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் படத்தில் 'குருசேத்திரப் போர்க்களத்தில்' கர்ணன் இறந்து விட .....அர்ச்சுனன் கர்ணனைத் தான் கொன்று விட்டதாகப் புலம்புகின்றார்!

அப்போது.. கிருஷ்ணன் கூறுகின்றான்!

அர்ஜுன , தனியொருவனாக  உன்னால் அவனைக் கொன்றிருக்க முடியுமா?

உனக்கு முன்னே பல பேர் அவனைக் கொன்று விட்டார்கள்!

நீ செத்த பாம்பை அடித்து விட்டு... நான் தான் கொன்றேன்..நான் தான் கொன்றேன் என்று வீணே அரற்றுகிறாய்!

இலங்கை இராணுவமும் அந்த அர்ஜுனனைப் போலத் தான் !<_<

புலிகளின் வெற்றியே இப்படி ஒரு விம்பத்தை தம்மை பற்றி கட்டிஎழுப்பினதுமாத்திரம் அல்லாமல் மக்களையும் நம்பவைத்து கடைசியில் தாங்களும் அந்த விம்பத்தை நம்ப தொடங்கிவிட்டார்கள் .

பாவம் அப்பாவி மக்கள் கடைசியில் அவர்கள் தான் இதனால்  பலியானார்கள் .

மகிந்த அரசு என்ன செய்தது என்று போர் பற்றி தெரிந்தவர்களுக்கு விளங்கும் .

அத்திவாரம் இல்லாத அந்த கோட்டை நாலு தட்டுடன் உடைந்துவிழும் என்று பலருக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வெற்றியே இப்படி ஒரு விம்பத்தை தம்மை பற்றி கட்டிஎழுப்பினதுமாத்திரம் அல்லாமல் மக்களையும் நம்பவைத்து கடைசியில் தாங்களும் அந்த விம்பத்தை நம்ப தொடங்கிவிட்டார்கள் .

பாவம் அப்பாவி மக்கள் கடைசியில் அவர்கள் தான் இதனால்  பலியானார்கள் .

மகிந்த அரசு என்ன செய்தது என்று போர் பற்றி தெரிந்தவர்களுக்கு விளங்கும் .

அப்போ  முரளிதரனுக்கு ஒன்றும் தெரியாதா??

அவர் சொல்வதை நீங்களே நம்பாவிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்??

அப்போ  முரளிதரனுக்கு ஒன்றும் தெரியாதா??

அவர் சொல்வதை நீங்களே நம்பாவிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்??

எந்த புலியும் உண்மை சொன்னதாக சரித்திரம் இல்லை .ஒன்றும் தெரியாத வாலுகளும் அதை நம்பி ஒற்றைகாலில் நிற்பது அதை பிட வேடிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்

எந்த புலியும் உண்மை சொன்னதாக சரித்திரம் இல்லை .ஒன்றும் தெரியாத வாலுகளும் அதை நம்பி ஒற்றைகாலில் நிற்பது அதை பிட வேடிக்கை .

சரி  நீங்க  சொல்லுங்க  அரிச்சந்திரரே..

இந்திய ராணுவம் பங்கெடுத்ததா? இல்லையா?

அரிச்சந்திரன் பக்கத்த வீடு மட்டும் தான் என்று சொல்லப்படாது....tw_dizzy:

நான் அறிந்த வரையில் வேறு எந்த நாட்டு இராணுவமும் போரில் நேரடியாக பங்குபற்றவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரை இந்திய இராணுவம் போரில் நேரடியாக பங்குபற்றியுள்ளது.

நான் 80 களில் வெளிநாட்டிற்கு ஓடிவரவில்லை, 

போர் முடிவிற்கு சில நாட்களின் முதல் நடேசன்  தமிழ் நெற் இற்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார் .

அப்பவும் இந்தா பார் அடியை என்பது போலதான் அவர் பேட்டி இருந்தது .LTTE பிறகு என்று ஒரு கேள்விக்கே இடம் இல்லையென்றார் .இதே போல இளந்திரையனும் இராணுவம் மன்னார் வந்தால் நாம் மடுவில் நிற்போம் என்றார் .கடைசி நாள் சூசை கத்தியது இப்பவும் காதில் கேட்குது .பிறகு வெள்ளை கொடி பிடித்ததும் அனைவரும் அறிந்தது .

போரின் மற்ற பக்கம் அறியாமல் இருந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது தலைவரால் அவரவர் முடிவை எடுங்கள், "சண்டைபிடிக்கிறதெண்டால் சண்டை பிடியுங்கோ  சரண்டைகிறதெண்டால் சரண்டையுங்கோ" என்று சொல்லப்பட்டதோ அன்றே புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. 

அதன் பிறகு நடைபெற்றதெல்லாம் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட முடிவு. 

இதுதான் எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் வேறு எந்த நாட்டு இராணுவமும் போரில் நேரடியாக பங்குபற்றவில்லை .

ஐயா

இப்ப கூட இல்லை என்று உங்களால் சொல்லமுடியவில்லை

ஒரு பாதுகாப்புக்கு நானறிந்தவரையில் என்று தான் எழுதுகின்றீர்கள்

அப்படியென்றால் அது நிச்சயமற்றது

இதையே நானறிந்தவரையில் இந்தியராணுவம் பங்கு பற்றியது என நான் எழுதினால்

பொய்

புரட்டு

கற்பனை

பிம்பம்

வாலுகள் என்கிறீர்கள்..

எந்த அடிப்படையில்....?

உங்களது நானறிந்தவரையில் என்ற உத்தரவாதத்திலா.......??

இது எவ்வளவு காதில் பூச்சுற்றல்....

Edited by விசுகு

எழுதும் போது கொஞ்சம் அறிவு பூர்வமாக எழுதிவந்தால் பிரச்சனை வராது .யாழில் பிரச்சனயே அதுதான் .அநேகம் கொமடி பீசுகள் உலாவும் இடம் .இப்ப கூட இடையில் ஒருவர் வந்து போகின்றார் .

இந்திய இராணுவம் நேரிடியாக வந்தது என்றால் அதை சொல்லும் நீங்கள் தான் அதற்கு ஆதாரத்தை நீங்கள் தான் வைக்கவேண்டும் .அதைவிட்டு வராததற்கு ஆதாரம் கேட்டால் ? 

என்ன எழுதுகின்றேன் என்று தெரிந்து எழுதுங்கள் இல்லாவிட்டால் நேரம் சுத்த வேஸ்ட் .

  • கருத்துக்கள உறவுகள்

Lankan News Photo From : LTTE targeted the Indra II Radar system at the airbase

இந்த படம் கிளிநொச்சில் எடுக்கபட்டது 
இலங்கை இரணுவ தளத்தில் இருந்து என்னால் எடுக்க பட்டது.

இது என்ன ?
இது என்ன ஒப்பந்த அடிப்படையில் வெளியில் போகும் ?

என்பதெல்லாம் சாதாரண  ஆறு அறிவு இருப்பவர்களுக்கு புரிய கூடியது. 

இது இந்திரா 2 
இந்திர 1 வவுனியாவில் வைத்து கரும்புலிகளால் தாக்கபட்டது. 

(தயவு செய்து ஆறறிவும் செயற்பாட்டில் இல்லாதவர்கள் இது பற்றி மேற்கொண்டு (எனது கருத்து பற்றி) விவாதிக்காதீர்கள். நீலத்திட்கும் சிகப்ப்பிட்கும் உள்ள வித்தியாசத்தை நாய்களுக்கு விளங்க படுத்த கூடிய அறிவு மட்டும் எனக்கு இருந்தால் .... நான் உலகு அறிந்த மிருக வைத்தியராக இருப்பேன். அப்படி இல்லை எனும்போதே எனது அறிவு பற்றாகுறை புரிய வேண்டும். பெரிய மனது பண்ணி எனது கருத்து பற்றி விவாதிக்காதீர்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்

வுனியாவில் தாக்கபட்டதும் இந்திரா 2 தான் ...
நான் எதோ வேறு ஞாபகத்தில் 1 என்று எழுதிவிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்..ஐநா பணியாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட எறிகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்கள். அதனை புலிகளே செய்திருக்க முடியாது என்பது உலகத்திற்கு வெளிச்சம். அந்த வகையில்.. கருணா கும்மான் எடுத்து விட்ட குற்றச்சாட்டு என்பது இந்திய படைகளின் மீதான குற்றச்சாட்டாக அமையின் அது போர்க்குற்றமாக நிரூபணமாகும். ஆக.. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று போனால் அசோகச் சக்கரத்தின் அசிங்கம் மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் பிரதிபலிக்கும். வெறுமனவே சிங்கள வாளேந்திய சிங்கம் மட்டுமன்றி அசோகச் சக்கரமும் சேர்ந்து அசிங்கப்படும் நிலையில்.. ஹிந்திய ஆளும் வர்க்கம் சர்வதேச விசாரணை.. போர்க்குற்ற விசாரணை என்பதை.. கடும் தொனியில் எதிர்க்க வகை செய்யும் முறையில் தான் கருணாவை குளற வைத்துள்ளது சிங்களம். 

ஏலவே புகழ்விரும்பி.. ஊடகமாக உள்ள புதிய தலைமுறை புகழ் தேடி..சிங்களத்தின் ஊது குழலாக மாறி இருக்கும் நிலையில்.. கருணா கும்மான் அதன் முன்னால் ஆஜராக்கப்பட்டமை காலம் கணித்து நகர்த்தப்பட்ட சிங்களத்தின் ஓர் நகர்வாகும். 

போர்க்களத்தில் நின்று புலம்பெயர்ந்துள்ள போராளிகளே நேரடியாக இந்திய இராணுவ பிரசன்னைத்தை உறுதி செய்துள்ள நிலையில்.. இது ஒன்று தற்செயலான குற்றச்சாட்டல்ல. இந்திய இராணுவத்தை காப்பது போல அறிக்கை விட்டு.. இந்தியா மீது கருணா கும்மானை கொண்டு செலுத்தப்பட்ட அழுத்தத்தை சிறீலங்கா.. சமாளிக்க ஒரு அறிக்கையை இப்படி விட்டுக் கொள்கிறது. மேலும் யுத்த வெற்றியும் முழு பெருமையையும் அது தனதாக்கி சிங்கள மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை குறைக்காமலும் பார்த்துக் கொள்ள விரும்புகிறது. அவ்வளவும் தான் இங்குள்ள இராணுவ அரசியல். tw_anguished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிஸ்டர் மண்மோகன் சிங் சிலோனுக்கு போகேக்கை தன்ரை பாதுகாப்புக்கெண்டு 1500 ஆமியையும் கூட்டிக்கொண்டு போவவரல்லோ.....அந்த ஆமியளை திருப்பி கூட்டிக்கொண்டு போகேல்லை எண்டொரு கதையும் அப்ப அடிபட்டதெல்லோ!!!!!! 

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையில் நின்று அடிபட்டவன் சொல்லுறான் தான் கண்டேன் என, இவை 30 வருசமாய் வெளிநாட்டில் கொட்டை போட்டு விதைச்சுப் போட்டு இல்லை என்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு செய்தவனே பல தரம் சொல்லிப்போட்டான்  ராசா பாகிஸ்தான், சீனா இவ்வாறு பல நாடுகளின் உதவியுடன் தான்,  தன் போரை வெற்றி கொள்ள முடிந்தது  என்று. சிங்களவனை பாராட்டவும், தமிழனை தூற்றவும் சிலர் அவசரம் காட்டுகினம் . அப்படியே சிங்களவன்தான் கெட்டிக்காரன் என்றால் ஏன் இவ்வளவு காலம் போர் நீண்டது. எப்பவோ வெற்றியை அடைந்திருக்கலாமே? ஏன் தொண்டர் நிறுவனங்களை வெளிய அனுபினவை?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமே பங்கு பற்றவில்லை......புலிகள் தங்களுக்குள் அடிபட்டதனால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தது என அறிக்கை விட்டாலும் நாம் நம்பவேணும்....

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தி எடுப்போரும், மாற்றுக் கருத்தாளர்களும், புலிப்பினாமிகளும் எழுதும் தமிழைக் கண்டு மயங்கியதுண்டு. பெரும் அறிஞர்களாக அவர்களை எண்ணியதும் உண்டு. அவர்களை ஏனையோர் சீண்டும்போதுதான் அவர்கள் சினத்தினால் தங்களை அறியாமலே தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். கூழ்ப்பானைக்குள் வீழ்ந்து மிதக்கும் பல்லிகள். 

அடி அந்த மாதிரி என்ன செய்வது .

செவ்வாயில் இருந்து வேற்றுகிரகவாசிகள் தான் வந்தார்கள் என்று கதை போகும்.

எந்த தமிழன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான் .இன்று சுரேசை பார்த்தாலே அது விளங்கும் . 

சீனாவின் உதவியில்லாமல் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் வெற்றிப்பெற்றிருக்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.

 இலங்கையில் நடந்த சில குற்றங்களுக்கு இங்கே இருந்து ஊக்கம் கொடுக்கப்பட்டதோ என்கின்ற சந்தேகம் இருக்கின்றது என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவி தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இது எல்லாம் என்ன   என்ற  என்ரை வெண்ணை 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சவனும் சொல்லுறான் அடிவாங்கினவனும் சொல்லுறான், இவை 30 வருசமாய் வெளிநாட்டில் கொட்டை போட்டு விதைச்சுப் போட்டு, விடுப்பு பார்த்திட்டு  இல்லை என்டினம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.