Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

 

 

சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம் - 2

கேள்வி - பதில் தொடரின் இரண்டாம் பகுதி...கேள்வி: பிராமணர்களையும் தமிழர்கள்தான் என்று நீங்கள் அங்கீரிக்கிறீர்கள். ஆனால் சக தமிழர்களையே தீண்டாமை என்ற பெயரில் ஒதுக்கி வைத்ததாக பிராமணர்கள் மீது காலங்காலமாக குற்றச்சாட்டு உள்ளது. தீண்டாமையை அவர்கள் மிகத் தீவிரமாக கடைப்பிடிச்சாங்கன்ற குற்றச்சாட்டுகள் இருக்கே...சீமான்: ஒரு புள்ளி விவரம் எடுங்க. அதிகமா ஆதித் தமிழர்கள் பிராமணப் பெண்களை திருமணம் செஞ்சிருக்காங்களா... அல்லது மாற்று சமூகப் பெண்களை, இங்க தமிழர்கள் என்று சொல்லும் பிற சமூகப் பெண்களைத் திருமணம் செஞ்சிருக்காங்களா? ஒரு புள்ளிவிவரம் எடுங்க பேசுவோம்.என்னையே எடுங்க.. இதுவரை நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்காத ஒரே ஒருத்தன் பிராமணன்தான். நம்ம தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் நீங்க என்ன ஆளு, என்ன சாதின்னு கேட்டிருக்கான்.

அண்ணல் அம்பேத்கர் இரண்டு திருமணங்கள் செய்திருக்கார். இருவருமே பிராமணப் பெண்கள். ராம் விலாஸ் பாஸ்வான் திருமணம் பண்ணது பிராமணப் பெண்ணைத்தான். ஆதித் தமிழர்கள் பெருமளவு பிராமணப் பெண்களைத் திருமணம் செஞ்சிருக்காங்க. அவங்களுக்கு பொருளாதாரத்துல மேம்பட்டிருந்தா பொண்ணைக் கட்டிக் கொடுத்திருவாங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. பிள்ளை ஓடிருச்சின்னு அப்பனாத்தா செத்ததோ, விஷம் வெச்சுக் கொளுத்துனதோ, இந்த கவரவக் கொலை, கருமாதிக் கொலைன்னு பண்ணதோ இல்ல. வேணும்னா ஒரு செய்தியக் காட்டுங்க..?ஆனா இந்த பார்ப்பணீயங்கிற மேலாதிக்கச் சிந்தனை அதிகமா தமிழ்ச் சமூகத்தில்தான் ஊறியிருக்கே.. இதை யார் ஒழிக்கிறது. இதுக்கு திராவிடம் என்ன பண்ணுச்சு?திராவிடத் தத்துவத்தின் பிதாமகனா இருக்கிறவர் தந்தை பெரியார். சாதி கொடிதா, மதம் கொடிதாங்கிறது கேள்வி. மதம் மாறிக் கொள்ளக் கூடியது. சாதி மாற முடியாதது.

அப்ப சாதிதான் கொடிதுங்கிறார். மாறிக் கொள்ளக் கூடிய மதவாதத்துக்கு எதிராகப் பேசுகிற திராவிட ஆட்சியாளர்கள் - ஆனா எல்லாருமே மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவி அனுபவித்தவர்கள்தான் - இன்னிக்கு வரைக்கும் மாற முடியாத கொடிய சாதியவாதத்துக்கு எதிராக இவர்கள் என்ன வேலை செஞ்சிருக்கான்னு நீங்க சிந்திக்கணும். இந்த சாதிய கட்சிகளுக்கு வேரில் வெந்நீர் ஊற்றிச் சாகடிக்காம, தண்ணீர் ஊற்றி உரம்போட்டு வளர்த்தது யார்?தேர்தல்களில் சாதிக்கு சாதி இடம் கொடுத்து இந்த சாதிக்கு பத்து சீட்டு, அந்த சாதிக்கு பத்து சீட்டு, இந்த சாதிக்கு ஏழு அமைச்சர், அந்த சாதிக்கு எட்டு அமைச்சர்னு.. நீங்க நுட்பமா பாத்தீங்கன்னா.. தமிழர்களை டிவைட் அன்ட் ரூல்... பிரித்து ஆள்வது, கொல்வது.. இதுதான் திராவிட ஆட்சி முறை. இப்ப நாம முன் வைக்கிற அரசியல், இணைத்து வாழ்வது.. வெல்வது.இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள் ஏன் சாதியத்தை ஒழிக்கவில்லை. இன்னும் இரட்டைக் குவளை முறையையே ஒழிக்க முடியவில்லையே.திருநாள்கொண்டசேரியில் ஒரு தாழ்த்தப்பட்ட முதியவர் இறந்துட்டார். அவர் பிணத்தை பொது வழியில் கொண்டுபோக முடியவில்லை. ஆதிக்க மனோபாவம் கொண்ட தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் அந்தப் பகுதியினர் பொதுவழியில் அந்தப் பிணத்தை அனுமதிக்கல. சரி, மாவட்ட ஆட்சியர், காவல் துறையினரின் வலிமையோடு பிணத்தை எடுத்துக்கிட்டு ஏன் அந்தப் பொதுவழியில் கொண்டு போய் புதைக்காம, அவசர அவசரமா மாற்று வழியில் கொண்டு போய் அடக்கம் பண்ணுதுன்னா... அடித்தட்டு மக்களுக்கு இருக்கிற தீண்டாமை மனோபாவத்தைத் தாண்டி, அதிகாரத்துக்கு இருக்கிற தீண்டாமை ஆபத்தானதா இல்லையா?

இந்த ஆட்சி அந்த ஆட்சி என்றல்ல... இரண்டு பக்கமுமே இந்த மனோபாவம் இருக்கு.திராவிடம் என்பதே ஆரியத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தத்துவம். ஆரியத்தை திராவிடம் வீழ்த்தியதா? இல்லை. ஆரியத்துக்கு தலைமையேற்றது. மண்டியிட்டால் கூட தாண்டிப் போவது சிரமம். மல்லாக்கப் படுத்திடுச்சி. அவன் ஏறி மிதிச்சுட்டுப்போயிட்டான். அதனால் இதைப் பேசுவதே பயனற்றது. அவங்கதான் வர்ணாசிரம தர்மத்தை வகுத்தாங்கன்றான்... சரி, நீ ஏன் கடைப்பிடிச்சே? அதை உடைக்க என்ன வேலை செஞ்சே? அப்ப எதுக்குத்தான் இந்த அதிகாரம் பயன்பட்டுச்சி?ஆதித் தமிழர் விடுதலை இல்லாது மீதித் தமிழர் விடுதலை வெல்லாதுன்னு நாங்கள் சொல்கிறோம். ஏற்கெனவே 44 தொகுதிகள் இருக்கு. அது போக மேலும் 20 தொகுதிகளை ஆதித் தமிழருக்கு நாம ஒதுக்கியிருக்கோம்னா, அவன் தாழ்த்தப்பட்டவன் என்று இருக்கிறானே ஒழிய தாழ்ந்தவன் இல்லை.

அவனுக்கு இல்லாத முன்னுரிமை எவருக்கும் இல்லை என்பதற்காகத்தான் கொடுக்கிறோம். எடுத்த உடனே இது தெரியாது. சிறுகச் சிறுகத்தான் இந்த மாற்றத்தை நாம கொண்டு வர முடியும். இதை ஏன் இத்தனை ஆண்டு காலமாக இருந்த திராவிட கட்சிகள் செய்யவில்லை.சீர்த்திருத்தத் திருமணங்கள் செய்து வைத்தார்களே.. எத்தனை திருமணங்களில் உயர்ந்த சாதிப் பெண்ணுக்கு தாழ்ந்த சாதிப் பையனையோ, அல்லது தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கு உயர்ந்த சாதிப் பெண்ணையோ கட்டி வைத்தார்கள். ஒரே சமூகத்துக்குள் தாலி இல்லாமல் திருமணம் நடத்தி வச்சாங்க. ஒரே சமூகத்துக்குள் அய்யர் இல்லாமல் கட்டி வைக்கிறது. இது என்ன சீர்த்திருத்தம், புரட்சி இருக்கு? அதனால ஆரியம்தான் கொண்டு வந்தது, திராவிடம் சரி செஞ்சதுங்கிறதை நான் ஏற்கலை.இரண்டாவது நாங்கதான் படிக்க வெச்சோங்கிறாங்க. திராவிடம் வரலேன்னா படிச்சிருக்க முடியாதுங்கறாங்க.

படிக்க வெச்சது காமராஜர். இந்த கேள்வியை நாம கேட்போம். இந்தியாவிலேயே அதிகமா கல்வி அறிவு பெற்ற மாநிலம் கேரளாங்கிறாங்க. ஆனா அங்க எந்த திராவிடம் படிக்க வெச்சது? ஆக இது எத்தனை முரண்?கல்வி, மருத்துவத்தை தன் நாட்டின் மக்களுக்குக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமை. அந்தக் கடமையையே சாதனையாகப் பேசிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அப்புறம் கல்விக்குக் கடன் கொடுத்தேங்கிறது. கடன் வாங்கி படிக்கிற நிலையில் என்னை எவன்டா வெச்சவன்? ஆக தன் கடமையைச் செய்வதையே சாதனையாகக் கருதுவது இந்த ஆட்சி முறை. இது ரொம்ப ஆபத்தானது. அதனால்தான் இதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்கிறோம்.

கேள்வி: அப்படியெனில் எந்த சூழ்நிலையிலும் திராவிடக் கட்சிகளுடன் இணைந்து நீங்கள் அரசியல் செய்ய மாட்டீர்கள் அல்லவா
?சீமான்: அந்த திராவிட தத்துவத்துக்கு எதிராகத்தான் நாம பார்க்கிறோம். திராவிடன் என்பதையே ஏற்கவில்லை, எதிர்க்கிறேன். நான் தமிழன். இந்த நாடு தமிழ்நாடு. இந்த நாட்டில் வாழும் மக்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், தொன்று தொட்ட வேளாண்மை, வளங்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க ஒரு அரசியல் வேண்டும். அது தமிழ் தேசிய அரசியல். இதில் எதற்கு திராவிடம்? நாடு தமிழ் நாடு என்று ஆகிவிட்டது. அப்புறம் எதற்கு திராவிடக் கட்சிகள்? தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்த பிறகு, ஆளும் உரிமையும் அவர்களுக்குத்தானே? அப்புறம் எதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்? யார் திராவிடர்? யாராவது ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கள். திராவிடர்தான் தமிழர், தமிழர்தான் திராவிடர் என்பார்கள். ஏன் தமிழர் திராவிடராக இருக்க வேண்டும். தமிழன் தமிழனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதனால்தான் இவர்களுடன் நான் உடன்படவில்லை.

இவர்களின் மொழிக் கொள்கையிலேயே நான் முரண்படுகிறேன். அண்ணாவின் மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை. இந்தியையும் சேர்த்தால் மும்மொழிக் கொள்கை. அது மோசடிக் கொள்கை என்றார்கள் நம் முன்னோர்கள்.என்னைப் பொருத்தவரை, என் தாய் மொழி தமிழ். என்னுடைய பயிற்று மொழி, கல்வி மொழி தமிழ். ஆங்கிலம் கட்டாயப் பாடம். உலகத்தின் எல்லா மொழியும் - இந்தி உட்பட - எங்கள் விருப்ப மொழி. இதுதான் நமது மொழிக் கொள்கை.கேள்வி: சமீபத்தில் பீகார் தேர்தலில் அந்த மண்ணின் மைந்தர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். அது போல ஒரு வாய்ப்பு தமிழகத்தில் உண்டா? இங்கு உங்கள் தலைமையில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பிருக்கிறதா?சீமான்: அங்கு கடைசியா நிதீஷ்குமார் பீகாரியா பாஹாரியா-ன்னு ஒரு கேள்வியை வைக்கிறாரு. பாஹாரின்னா வெளியாள். அது எல்லா மாநில அரசியல்லயும் வேலை செய்யுது. நம்மைப் பொருத்தவரை, அரை நூற்றாண்டு காலமா திமுக - அதிமுக. இதைவிட்டா வேற மாற்று இல்லைன்ற சூழல். இதுக்குள்ளயேதான் தமிழ் மக்களின் அரசியல் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம முதல் முறையா, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்றுன்னு முன் வைக்கிறோம். தேசியக் கட்சிகளுக்கு மாற்றா வந்தது திராவிடம். மாநில நலனைப் பேசிக் கொண்டு வந்த திராவிடம் மாநில நலனைக் காக்கல.

இப்போ இந்த திராவிடத்துக்கு மாற்றா வரணும்னா, இந்த மண், மக்கள், நலனை முன் வைத்து வருகிற தமிழ் அரசியல் கட்சிகள்தான் எதிர்காலத்தில் வெல்லப் போகுது. அந்த வகையில் இந்த தேர்தலில் நாம் எடுத்து வைப்பது மிகச் சரியான, உறுதியான, அழுத்தமான தொடக்கமாகவும் இருக்கும்.இரண்டு சக்தியும் வேண்டாம் என்று மக்கள் ஒரு புரட்சி போலக் கிளர்ந்து தூக்கி வீசிவிட்டு ஒரு மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கு.இல்ல, இந்த இரண்டு சக்திகளையும் சரித்துவிட்டு, கணிசமான வாக்குகளை மாற்று சக்திக்கு தரவும் இந்த தேர்தலில் வாய்ப்பிருக்கு. நிச்சயமா இந்த நேரத்தில் இந்த இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் உருவாகும் சூழல் வந்திருக்கு. அதனால்தான் இவர்களுக்கு இவ்வளவு நடுக்கமும் பதற்றமும்.இன்றைக்கு இவ்வளவு பெரிய கட்சிகள் விஜயகாந்தைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது, விஜயகாந்தின் பலம் இல்லை. இவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுது.இங்கே தமிழ் தேசிய சக்திகளே இல்லை. இங்கே தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் அய்யா மணியரசன், தியாகு போன்றவர்கள். இவர்கள் தேர்தல் அரசியலை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவேளை தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இவர்களை விட்டால், அய்யா நெடுமாறன். நம்மை ஆதரிப்பதா, தனித்துப் போட்டியா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.என்னைப் பொருத்த வரை இது ஒரு தொடக்கம். இந்த தொடக்கத்தியே நான் நூறு அடிக்கலாம். அல்லது அடுத்த முறை நூறு அடிக்கலாம். நாங்கள் 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதே, எங்கெல்லாம் தமிழர் நிலப்பரப்பில் தமிழ் தேசிய மக்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அரசியல் இருப்பதை நிலை நிறுத்தத்தான். ஒரு பகுதிக் கட்சி, தொகுதிக் கட்சியாக இருந்ததைப் போல, என் முன்னோர்கள் செய்த பிழையை நான் செய்ய விரும்பவில்லை. பத்து சீட்டு, அஞ்சு சீட்டுக்காக இந்த திராவிடக் கட்சிகளிடம் சரணடைந்து வீழ்வதற்கு நான் விரும்பவில்லை.இந்த மண்ணை இந்த இனம், இந்த நிலம் சார்ந்தவனே ஆளணும் என்பதே பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருப்பதால்தான், நீங்க முதல்ல கேட்ட கேள்வியில் சொன்னது போல, எனக்கு இவ்வளவு எதிர்ப்பு. இவன் அடிப்படையிலேயே கைவைக்கிறானே என்பதால்தான் இந்த எதிர்ப்பு வருது. நீண்ட காலமாக அதிகாரம் மறுக்கப்பட்ட பிள்ளைகள், இன்று அதே உரிமையை திரும்பக் கேட்டு ஏறும்போதுதான் அவர்களுக்கு பயம் வருது.தமிழ் தேசிய கட்சிகள், அமைப்பாக உள்ளவர்கள் எல்லாம் இப்போது எங்களை ஆதரிக்க வேண்டும். ஆதரிச்சா நல்லது. இல்லாவிட்டால் மக்களிடம் போகிறோம்.

கேள்வி: தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் உள்ளன. இந்த குறைவான காலகட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் வைத்திருக்கிற வேலைத் திட்டங்கள் என்ன
?சீமான்: நீண்ட காலமாகவே நாங்கள் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தலில் புள்ளியிலிருந்து தொடங்குகிறோம். தேர்தல் அறிக்கையாக தராமல், நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவாகக் கொடுக்கிறோம்.ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களை வைத்துக் கொண்டு அந்த துறை சார்ந்த மாற்றங்களை முன் வைக்கிறோம். வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவித்த பிறகு, இன எழுச்சிப் பெரும்பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம். மக்களை நேரில் சந்தித்து நிதி திரட்டுவது, வாக்கு சேகரிப்பது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்.ஏற்கனவே களத்திலுள்ள வலிமையான கட்சிகள், அதிகார பலம் கொண்டு, பொருளாதார பலம், ஊடக பலம் போன்றவற்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த மூன்றுமே நமக்கில்லாததால், ஒரு போர் மாதிரிதான் இந்தத் தேர்தலைக் கையாள வேண்டியுள்ளது.இது ஒரு பெரும் போர், நீண்ட காலமாக எமது மண்ணை வளத்தை சுரண்டி கொழுத்து நிற்கிற இரண்டு திராவிடப் பூதங்களை எதிர்த்து நிற்கிற போர்.

கேள்வி: இவ்வளவு பெரிய போருக்குத் தயாராகிற உங்களுக்கு
, கூட வருகிற இந்த இளைஞர் பட்டாளத்தின் - பெரும்பாலும் படித்த இளைஞர்கள் - செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும்படி உள்ளதா? இந்தத் தேர்தலுக்கான பயிற்சி, முன்னேற்பாடுகளை எடுத்திருக்கிறார்களா?சீமான்: பிறக்கும்போதே யாரும் தலைவராகப் பிறப்பதில்லை. நான் முன்பே சொன்னது போல, 'வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி.. இது மாற்றத்துக்கான எளிய மக்களின் முயற்சி'. அப்படித்தான் இதை நாம் பார்க்கிறோம். இதைப் பயிற்சியாகக் கூட எடுத்துக்கலாம். பயிற்சி ஆட்டத்திலேயே ஒருத்தன் நூறு அடிப்பதில்லையா? அதுவும் நடந்திடலாம். இந்தப் பிள்ளைகள் அவரவர் பகுதிகளில் தேர்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறார்கள். தேர்தல் முறை தெரியும். அந்தப் பயிற்சியே போதும் என்று நினைக்கிறேன். கற்றறிந்த பிள்ளைகள். தூய உள்ளத்தோடு மண்ணையும் மக்களையும் நேசிக்கிற பிள்ளைகள். என்னிலும் மேலாக லட்சிய வெறியோடு நிற்கிற பிள்ளைகளை நான் பார்க்கிறேன். நான் எதிர்ப்பார்த்ததை விட தேர்ச்சி பெற்று களத்தில் நிற்கிறார்கள். எனவே மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.

கேள்வி: ஒரு கட்சிக்கு மிகப் பெரிய பலமே, கடைசி குக்கிராமம் வரைக்கும் அந்தக் கட்சியின் வேர் பரவியிருக்கணும்னு சொல்வாங்க. நாம் தமிழர் கட்சிக்கு அந்த மாதிரியான கட்டமைப்பு உருவாகி விட்டதா?சீமான்: ஏறக்குறைய 60-70 விழுக்காடு பரவிட்டோம். உண்மையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரே வழி தேர்தலை எதிர்கொள்வதுதான். இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியைத் தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு என் பிள்ளைகள் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவார்கள். இது முதல் வெற்றி.பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும், தேர்தலில் நிற்க முடியும், பணமில்லாதவன் ஒண்ணுமே செய்ய முடியாது.. உண்மையும் எளிமையும் உள்ளவன், மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்தால்கூட வர முடியாது என்ற இழி நிலையை ஒழிப்பார்கள்.மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவை இல்லடா.. நல்ல மனம்தான் தேவை என்பதை நிரூபிப்பார்கள். அப்படிப் பார்த்தால் நாங்கள்தான் இந்தத் தேர்தலில் வெற்றிகளைக் குவிக்கப் போகிறோம். மீண்டும் நவம்பரில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி போகாத இடமில்லைன்னு கொண்டு போய்ச் சேத்துடுவேன். அதுக்கப்புறம் அது கோட்டையா மாறும்.இன்று வாக்குச் செலுத்துமிடத்தில் முகவரை நிறுத்தக்கூட முடியாத கட்சின்னு பேசறாங்க. திமுக தொடங்கும்போது அத்தனை வாக்ககத்திலும் ஆள் நிறுத்தும் வலிமையோடா இருந்தது. அவ்வளவு பெரிய திரைக் கலைஞர் அய்யா எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதும் அதே நிலைதானே.

சிறுகச் சிறுக வளர்ந்தார்கள்.எங்களைப் பொருத்தவரை, கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளில், 2010 மே 18-ல் கட்சி தொடங்கினேன். 2 மாசத்துல சிறைக்குப் போறேன். 6 மாதங்கள் கழித்து வெளியில் வரேன். 2011-ல் தேர்தல். திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வேலை செய்தோம். தொடர்ச்சியா மூன்று பேர் விடுதலை, மீனவர் படுகொலை, அணு உலை.. இந்த போராட்டக் களத்திலேயே நின்றுவிட்டோம். ஊர் ஊரா போய் கட்சியைக் கொண்டு போகிற நிலைமையில் இல்லை. தேர்தல் நேரத்தில்தான் என்ன பேசுகிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்க மக்கள் தயாராவார்கள். இந்த நேரத்தில்தான் மாற்று அரசியலை கருத்தியல் புரட்சி மூலமா விதைக்க முடியும்.கேள்வி: ஒருவேளை ஒரு பெரிய கட்சி அல்லது கூட்டணியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?சீமான்: இனிமேல் என்ன வர்றது. ஏற்கெனவே நிறைய வந்துச்சே. நாங்கள் அப்போதே முடியாது என்று சொல்லிவிட்டோமே. நான் சமரசத்துக்கு ஆட்படாதவன். இல்லாவிட்டால், இந்த வேலையை என் தலைவர் என்னிடம் தந்திருக்க மாட்டார். சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டுச் சாவது மேலானது என்பது நாம் ஏற்றுக் கொண்ட தத்துவம்.எனக்கு 10 சீட்டு, 40 கோடி, 50 கோடி, 40 சீட்டு, 400 கோடின்னு பேசினவங்கெல்லாம் இருக்காங்க. இந்தக் கோடிய வெச்சுக்கிட்டு என்ன பண்றது. நான் தெருக்கோடில கூட நிப்பேன். எனக்கு வேண்டியது நாடும் அதிகாரமும். அடுத்த தலைமுறைக்கான ஒரு தேசமா இதைப் படைக்கணும்னு நினைக்கிறேன்.யாரோடும் சேர மாட்டேன்னு எல்லாரும் என்னை விமர்சிப்பாங்க. நான் யாரோட சேரலாம்னா பதிலில்லை. 'எந்த தேசிய கட்சிகளோடும் திராவிட கட்சிகளோடும் கூட்டில்லை. ஆனா 2016-ல் தனிச்சி போட்டியிடுவோம்'னு நான் முன்பே பேசியிருக்கேன். இந்த 5 ஆண்டுகளில் அதில் ஒரு தடம் கூட மாறாமல் தேர்தலில் நிற்கிறேன்.ஒரு காலத்திலும் தேசிய திராவிட கட்சிகளிடம் நாம் தமிழர் மண்டியிடாது. வேண்டுமானால் அவர்கள் எங்கள் பின்னால் வரலாம். அடிபணிவதும் அஞ்சுவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்பது தலைவர் பிரபாகரன் சொன்னது.சாப்பாட்டில் கூட்டுப் பொரியல்; சண்டையில தனிச்சிதான். என் தத்துவம் சரியாக இருக்கு, பாதை சரியாக இருக்கிறது, பயணம் சரியாக இருக்கிறது.. இந்தப் பிள்ளை போறது சரி என்று ஏற்றுக் கொண்டு எங்களை முன்னிறுத்தி பின்னே யார் வந்தாலும் ஏற்கத் தயார்!-வேள்வி தொடரும்...

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-kelvigalal-oru-velvi-seivom-series-2-248276.html

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

12809758_152135491842000_730931736567072

51 minutes ago, nedukkalapoovan said:

12809758_152135491842000_730931736567072

 

உண்மை!
இவர்கள் காலத்தின் தேவை.
ஆனால் காலத்தின் போக்கை அறிந்து அரசியல் பொருளாதார கொள்கைகளை இவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களின் தேவை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கணக்கை அப்படியே உல்லாவாக்கிப் பார்த்தேன். செம காமெடியா இருந்துச்சு.

 

ஒரு புள்ளிவிவரம் எடுங்க. அதிகமா யாழ்பாணத் தமிழர்கள் சிங்களப் பெண்களை திருமணம்செஞ்சிருக்காங்களா... அல்லது மாற்று சமூகப்பெண்களை, இந்திய, மலேசிய, மலையக, கிழக்கிலங்கை, தென்னாபிரிக்க தமிழர் என்று சொல்லும் பிறசமூகப் தமிழ் பெண்களைத் திருமணம்செஞ்சிருக்காங்களா? ஒரு புள்ளிவிவரம் எடுங்கபேசுவோம்.என்னையே எடுங்க.. இதுவரை நீங்கஎன்ன  சாதி ஆளுங்கன்னு கேட்காத ஒரே ஒருத்தன் சிங்களவந்தான். நம்ம தமிழ்ச் சமூகத்தைச்சேர்ந்தவங்கதான் நீங்க என்ன ஆளு, என்னசாதின்னு கேட்டிருக்கான்.

அண்ணல் நடேசன் ஒரு திருமணம் செய்திருக்கார். அவர் சிங்களப் பெண்.  தமிழர்கள் ஒப்பீட்டளவில் பெருமளவு சிங்களப் பெண்களைத் திருமணம் செஞ்சிருக்காங்க. அவங்களுக்கு பொருளாதாரத்துல மேம்பட்டிருந்தா பொண்ணைக் கட்டிக் கொடுத்திருவாங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. பிள்ளை ஓடிருச்சின்னு அப்பனாத்தா செத்ததோ, விஷம் வெச்சுக் கொளுத்துனதோ, இந்த கவரவக் கொலை, கருமாதிக் கொலைன்னு பண்ணதோ இல்ல. வேணும்னா ஒரு செய்தியக் காட்டுங்க..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 2010 இல் இருந்து தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்று சொல்கிறார். ஆனால் பல நூறாண்டு காலமாக வேற்றித்தவரை மணந்தும், அவர்களைத் தலைமையேற்றும் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். அதன் காரணமாகவே திராவிடத்தையும் தலைமையாக ஏற்றார்கள். பெரியாரை "தந்தை பெரியார்" என அழைத்தபோதும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் அந்தத் திராவிடத்தின் ஆட்சியில் தமிழினம் வீழ்ச்சியுற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, 2009 இன் பின்னர் தமிழக மக்களில் பலர் குறிப்பாக இளைஞர்கள் உறுதியாக இக்கருத்தைக் கொண்டுள்ளார்கள்.

எனது தமிழக வகுப்புத் தோழர்கள் எனது நண்பர்கள் வட்டத்துள் இருக்கின்றார்கள். நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் உனது நாட்டில் என்ன நடக்குது என்றுகூட கேட்டிராதவர்கள். ஆனால் இன்று திராவிடக் கட்சிகளுக்கு முழு எதிரிகளாக உள்ளார்கள். காரணம் என்ன? திராவிடத்தின் சீரழிவை நன்கு அறிந்தவர்கள் அவர்கள்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆளவேண்டும் என்கிற ஒரு கொள்கை பிறக்கிறது. ஐம்பது ஆண்டுகளில் எதனையும் பெற்றுத்தராத, திராவிடம், இந்திய தேசியம், கம்யூனிசம் இனி ஒன்றைப் பெற்றுத்தரும் என நம்ப அவர்கள் தயாராக இல்லை. அதற்காக இதே தத்துவத்தை பப்புவா நியூகினியிலும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. காலச்சூழல் ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு வகையான அரசியலைப் பிரசவிக்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அயலானைத் தலைமையேற்று பாழாய்ப்போன தமிழர் நிலம் அந்தப் பட்டறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. இதனை மக்கள் மனத்தில் விதைப்பதுதான் நம் அனைவரது கடமையும்கூட.

மக்கள் மனங்களில் மாற்றங்களை விதைக்கும் அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி வேட்பாளர், அரவிந்த் குருசாமி..!

 

 

12803179_180392102338833_370949662742398

12801603_180392165672160_758142499292218

12806088_180392252338818_433710460658056

12803021_180392502338793_865523221540907

12799204_180392555672121_177929395833157

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2016 at 9:52 AM, இசைக்கலைஞன் said:

காயம்பட்டவனின் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகத்தான் இருக்கும்.. இதற்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவுச் செல்வனுடனான விவாதத்தில் பேராசிரியர் அருணனின் பண்பாடு.. சீமான் திட்டியது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இதற்கு முன் பல விடயங்கள் உள்ளன.

 

02.03.2016: இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அறிமுகப்படுத்தி ஊடகவியலாளருடன்..

 

 

அண்ணன் சீமான் கூறியதில் ஒரு தவறு...
இந்த ஆள்  அருணன் ... "லூசு மாதிரியில்ல" லுசே தான்.
அதுவும் ஒரு "அரை லூசு".
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1927754_1689384604676342_116117216863243

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர்க்கும் ஒரு வேண்டுகோள்,

நான் கருணாநிதியின் காவடி அல்ல. ஆனால் சும்மா சும்மா நாமே பேஸ்புக்கில் அவர் தெலுங்கர் என்று எழுதுவது செல்லாது.

எம் ஜி ஆறின் பேர்த் சர்டிபிகட் போல கருணாநிதி தெலுங்கர் என்பதுக்கு எதேனும் நம்பக் கூடிய ஆதாரம் உண்டா?

ஏனென்றால் H L D மகிந்தபால என்று ஒரு பச்சை சிங்கள இனவாதி ( சீமானின் பாசையில் சிங்கள இன உணர்வாளர்) அவரும் இப்படித்தான் பிரபாகரன் ஒரு மலையாளி என்று கிளப்பி விட்டுள்ளார். கேட்டால் தேசவழமைச் சட்டமே சொல்லுது யாழ்பாண தமிழர் மலபாரி வழிகளே என்று சொல்கிறார்.

இப்படி நாமும் லூசுத்தனமாய் ( அது தான் இப்போ நல்ல வார்த்தையாச்சே) கதைக்கக்கூடாது அல்லவா?

எனவே கருணாநிதி தெலுங்கர் என்பதுக்கு ஆதாரம் பிளீஸ்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஊர்க்காவலன் said:

12795437_219875171699295_601872809631270

முந்தாநாள் வைக்கோ பேச்சுப் பார்த்தேன். 

1970ம் ஆண்டு 50 வயது கருணாநிதி, 67 வயது காமராஜரை கேட்டாராம், இந்த வயதில் முதல்வர் ஆகத்தான் வேண்டுமா? ஆண்டது போதும் ஓய்வெடுங்கள் என்று.

இன்று 94 வயதில் அவரு நிக்கிறாரு ஆளவேண்டும் என்று... 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எங்கப்பா நிக்கிறாரு?

சக்கரநாக்காலியில குந்தியெல்லோ இருக்கிறாரு?

இதையும் பாருங்கோ - இப்படியும் ஒரு ரூட் ஓடுது

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=161873 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

“…அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் தங்களது பொட்டுக்கட்டிச் சாதியான சின்ன மேளம் என்னும் தெலுங்குச் சாதியினை ‘இசை வேளாளர்’ எனவும் இட்டுக்கட்டி எழுதி மகிழ்கின்றனர்..” (பக் 91)

http://amarx.org/?p=838

சின்ன மேளம் என்கிற சாதியை "இசை வேளாளர்கள்" என்று இடையில் மாற்றியுள்ளார்கள். அந்தச் சாதியின் வழி வந்தவர்கள்தான் கருணாநிதி குடும்பத்தினர்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

இவரும் அதையே சொல்கிறார்..

 

இதுக்குள்ளை இந்தாள் வேறை.. tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அருணனுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது அமோக மரியாதை..! tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை..!

12813919_821524917952883_669039672377761

12805799_821524937952881_374469553053646

12670393_821524981286210_601779747034780

12801383_821525021286206_573914103418815

12798938_821525081286200_877655559200149

12806018_821525121286196_883671090648057

12804638_821525161286192_783749109996333

1662002_817677098337665_7342155568621212

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் சொல்கிறேன், கருணாநிதி தெலுங்கர் என்பதுக்கு நம்பகமான ஆதாரம் இருக்கா?

நாளைக்கே சு சாமி சீமான் மலையாள நாடார் என்பார். ஏற்போமா?

அவரு சொன்னார், இவரு. சொன்னார். அந்த புத்தகத்தில் வந்தது எல்லாம் செல்லுபடியாகாது.

இன்னொரு கேள்வி அண்ணாவின் தாய் தெலுங்கு தந்தை தமிழ் முதலியார். அண்ணாவை ஏன் தமிழராக ஏற்க முடியாது?

ராஜாத்தி அம்மாள் தமிழ் தலித் என நினைக்கிறேன். 

அண்ணா தெலுங்கர் என்றால் ஸ்டாலின் தமிழ் தலித் அல்லவா?

25 minutes ago, இசைக்கலைஞன் said:

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை..!

12813919_821524917952883_669039672377761

12805799_821524937952881_374469553053646

12670393_821524981286210_601779747034780

12801383_821525021286206_573914103418815

12798938_821525081286200_877655559200149

12806018_821525121286196_883671090648057

12804638_821525161286192_783749109996333

1662002_817677098337665_7342155568621212

600 ஆண்டுக்கு முன் குடியேறிய நாயக்க வம்ச வைகோ தமிழனே இல்லை.

400 வருடங்களுக்கு பின் வந்தேறிய மொகலாய, சுல்தானிய, அரேபிய வழித்தோன்றல் அன்வர் பேக் தமிழன்!!!

லொஜிக் உதைக்குதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் சாதிச் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை.. ஆனால் வைகோ அவர்கள் ஒரு தெலுகுவாடு என்கிறது இந்த தெலுங்கு ஊடகம்..!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

மறுபடியும் சொல்கிறேன், கருணாநிதி தெலுங்கர் என்பதுக்கு நம்பகமான ஆதாரம் இருக்கா?

நாளைக்கே சு சாமி சீமான் மலையாள நாடார் என்பார். ஏற்போமா?

அவரு சொன்னார், இவரு. சொன்னார். அந்த புத்தகத்தில் வந்தது எல்லாம் செல்லுபடியாகாது.

இன்னொரு கேள்வி அண்ணாவின் தாய் தெலுங்கு தந்தை தமிழ் முதலியார். அண்ணாவை ஏன் தமிழராக ஏற்க முடியாது?

ராஜாத்தி அம்மாள் தமிழ் தலித் என நினைக்கிறேன். 

அண்ணா தெலுங்கர் என்றால் ஸ்டாலின் தமிழ் தலித் அல்லவா?

600 ஆண்டுக்கு முன் குடியேறிய நாயக்க வம்ச வைகோ தமிழனே இல்லை.

400 வருடங்களுக்கு பின் வந்தேறிய மொகலாய, சுல்தானிய, அரேபிய வழித்தோன்றல் அன்வர் பேக் தமிழன்!!!

லொஜிக் உதைக்குதே?

நாங்கள் ஏற்பது முக்கியமில்லை.. அவர்களே தங்களைத் தமிழர்கள் என ஏற்பதில்லையே.. அப்படி ஏற்றிருந்தால் "நாம் தமிழர்" என்று கட்சியை ஒருவர் தொடங்கும்போது அதை ஆதரித்து.. ஆமாம் நாங்களும் தமிழர்கள் என்று சொல்லியிருப்பார்க. இனவாதம் என்று பேசமாட்டார்கள்.

மாறாக தமிழ் பேசும் முஸ்லீம்களைப் பாருங்கள் (தமிழகத்தில்). நாம் தமிழர் கட்சியில் இணைவதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ நாயக்கர், வீட்டில் தெலுங்கு (உம்) பேசுபவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இங்கே 3 வாதங்களை வைக்கிறேன்

1) வைகோவை தமிழர் இல்லை என்றால் முஸ்லீமும். இன்னும் பல சாதிகளும் தமிழர் இல்லை.

2) கருநாநிதி தெலுங்கர் என்பது வாயால் வடைசுட்டு/மற்றவன் வாயால் சுட்ட வடையை ஆதாரம் என்று காட்டும் வேலை. சாதி சான்றிதழ் கிடைக்கும் மட்டும் அவரை தமிழர் இல்லை எனக் கூற முடியாது.

3) அண்ணா, ஸ்டாலினின் இருவருக்கும் எதோ ஒரு பெற்றார் ஆவது தமிழர். இவர்களை எப்படி தமிழர் இல்லை என்பீர்கள்?

8 minutes ago, இசைக்கலைஞன் said:

நாங்கள் ஏற்பது முக்கியமில்லை.. அவர்களே தங்களைத் தமிழர்கள் என ஏற்பதில்லையே.. அப்படி ஏற்றிருந்தால் "நாம் தமிழர்" என்று கட்சியை ஒருவர் தொடங்கும்போது அதை ஆதரித்து.. ஆமாம் நாங்களும் தமிழர்கள் என்று சொல்லியிருப்பார்க. இனவாதம் என்று பேசமாட்டார்கள்.

மாறாக தமிழ் பேசும் முஸ்லீம்களைப் பாருங்கள் (தமிழகத்தில்). நாம் தமிழர் கட்சியில் இணைவதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

ஆக சீமானின் தலைமையை ஏற்றால் மட்டுமே அவர்கள் தமிழர்!

சீமானின் தலைமையை ஏற்றால் முஸ்லீம் என்ன நாளைக்கு சிங்களவரும் தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

வைகோ நாயக்கர், வீட்டில் தெலுங்கு (உம்) பேசுபவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இங்கே 3 வாதங்களை வைக்கிறேன்

1) வைகோவை தமிழர் இல்லை என்றால் முஸ்லீமும். இன்னும் பல சாதிகளும் தமிழர் இல்லை.

2) கருநாநிதி தெலுங்கர் என்பது வாயால் வடைசுட்டு/மற்றவன் வாயால் சுட்ட வடையை ஆதாரம் என்று காட்டும் வேலை. சாதி சான்றிதழ் கிடைக்கும் மட்டும் அவரை தமிழர் இல்லை எனக் கூற முடியாது.

3) அண்ணா, ஸ்டாலினின் இருவருக்கும் எதோ ஒரு பெற்றார் ஆவது தமிழர். இவர்களை எப்படி தமிழர் இல்லை என்பீர்கள்?

நீங்கள் வையுங்கோ உங்கள் வாதங்களை... அசராமல்...

போரடிச்சா அப்பப்ப வந்து, முதுகில தடவுறோம்..

கோசன் அந்தமாதிரி... விடாமுயற்சி காரர் என்று... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தெலுங்குச் சானல் என்ன சொல்கிறது?

வைகோ தான் ஒரு தெலுங்கு வம்சாவளி என்பதை மறந்து தமிழனென்று ஓவர் சீன் போட்டாராம், இப்போதமிழர்கள் அவருக்கு நல்ல நோஸ்கட் கொடுத்துளனராம் :(

இப்படி வைகோ வை நக்கலடிக்கிறார்கள்.

தேவையில்லாமல் ஈழப்பிரச்சினையில் புலி ஆதரவு நிலை எடுத்து அதை பிரதியுபகாரம் பார்க்காமல் இன்று வரை நேர்மையாக ஆதரிக்கும் வைகோவுக்கு நல்ல நன்றி பாராட்டுதல் செய்துளோம் நாம்.

குறிப்பாக புலி ஆதரவுக் கோஸ்டிகள் இப்போ சீமானை ஏத்துவதிலும் விட வைகோவை தாழ்துவதையே முதல் வேலையாய் செய்கிறார்கள்.

இது புது மனைவியை கண்டதும் தாயை வேசி என்று பழிப்பதற்கு நிகரானது.

ஆனால் ஒன்று வைகோ ஏனைய இனி வரப்போகும் தமிழக தலைவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையாய் அமைவார்.

புலிகளை நேர்மையாக ஆதரிக்கும் எந்த அரசியல் தலைவரும் கடைசியில் எல்லா தரப்பாலும் கைவிடப் படுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வைகோ நாயக்கர், வீட்டில் தெலுங்கு (உம்) பேசுபவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இங்கே 3 வாதங்களை வைக்கிறேன்

1) வைகோவை தமிழர் இல்லை என்றால் முஸ்லீமும். இன்னும் பல சாதிகளும் தமிழர் இல்லை.

2) கருநாநிதி தெலுங்கர் என்பது வாயால் வடைசுட்டு/மற்றவன் வாயால் சுட்ட வடையை ஆதாரம் என்று காட்டும் வேலை. சாதி சான்றிதழ் கிடைக்கும் மட்டும் அவரை தமிழர் இல்லை எனக் கூற முடியாது.

3) அண்ணா, ஸ்டாலினின் இருவருக்கும் எதோ ஒரு பெற்றார் ஆவது தமிழர். இவர்களை எப்படி தமிழர் இல்லை என்பீர்கள்?

 

1) முஸ்லீம்களில் உருதுபேசும் முஸ்லீம்களும் உள்ளார்கள் (தமிழகத்தில்). அவர்களை உருது பேசும் தமிழர்களாக ஏற்க வேண்டியதில்லை.

2) கலைஞரிடமே நீங்கள் தமிழரா என்று கேட்கப்பட்டபோது தமிழரும் திராவிடத்தில் அடங்குவார்கள் எனப் பதில் தந்தார். முன்பு எம்.ஜி.ஆரை மலையாளி என்று கலைஞர் சொன்னபோது, நீங்கள் தெலுங்கர் என எம்.ஜி.ஆர் பதில் தந்தார். அதை கலைஞர் மறுக்கவில்லை.

3) முதலில் ஸ்டாலின் போன்றவர்கள் தங்களை தமிழர் என்று சொல்கிறார்களா? அப்படியென்றால் "நாம் தமிழர்" கட்சியை ஒரு இனவாதக் கட்சி என அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

5 minutes ago, goshan_che said:

புலிகளை நேர்மையாக ஆதரிக்கும் எந்த அரசியல் தலைவரும் கடைசியில் எல்லா தரப்பாலும் கைவிடப் படுவார்.

புலிகளை நேர்மையாக ஆதரிப்பவர்தான்.. ஆனால் அரசியல் என வந்துவிட்டால் அதை விட்டுக்கொடுத்துவிடுவார். அண்மைய உதாரணம், மார்க்சிஸ்ட் கட்சியுடனான குறைந்தபட்ச வேலைத்திட்டம்.

10953297_692657460831725_282368870244988

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

600 ஆண்டுக்கு முன் குடியேறிய நாயக்க வம்ச வைகோ தமிழனே இல்லை.

400 வருடங்களுக்கு பின் வந்தேறிய மொகலாய, சுல்தானிய, அரேபிய வழித்தோன்றல் அன்வர் பேக் தமிழன்!!!

லொஜிக் உதைக்குதே?

இந்த லொஜிக்க இப்படியே ஈழத்தில் உள்ளவைக்கும் அப்பிளை பண்ணிப் பார்த்தால்.. இனச்சுத்திகரிப்பு.. தனி அலகிற்கு அவையள் தகுதியாமோ..?! அப்ப ஏன் இவர் அவைக்கு வக்காளத்து வாங்கிறவர்.

தமிழக  இஸ்லாமிய தமிழர்கள்.. ஈழத்தில் உள்ள மத வெறி முஸ்லீம்களை விட கூடிய தமிழ் தேசியப் பற்றாளர்கள். ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தீக்குளித்து தமிழக இஸ்லாமியன் இறந்திருக்கான்.. ஆனால்.. ஈழத்தில்.... காட்டிக்கொடுத்திருப்பான். இல்ல சிங்களவனோடு கூட நின்று சுட்டிருப்பான்.. வெட்டி இருப்பான். அதுகளுக்கு தனி அலகு வை என்ற எங்கட ஆக்கள்...?! இந்த இஸ்லாமிய தமிழனை...  எப்படி தூர வைக்கிறார்கள். 

தமிழ் மொழி.. இனம்.. தேசம்.. பண்பாடு.. இதை எல்லாம் பொதுப்படையாகக் கொண்ட.. மதத்தால் இஸ்லாமியனாக உள்ள இந்த தமிழகத் தமிழனை தமிழன் எனலாம். ஆனால்.. ஈழத்தில் ஒரே மொழி.. ஒரே தேசத்தில் வாழ்ந்து கொண்டு.. தான் தனி என்று.. மதவெறி கொண்டு காட்டிக்கொடுத்துக் கொண்டு..திரியுதுங்க.. அதுங்களுக்கு இடம்கொடுத்தால்... இருப்பதும் இல்லாது போகும் நிலையே தமிழருக்குத் தோன்றும்.:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2016 at 0:29 PM, tamil paithiyam said:

மாற்று மொழியாளர்களை அதிகாரத்தில் வைக்கவேண்டாம் என கருத்து உருவாக்குவதில் தவறில்லை . அதே நேரம் கட்டாயப்படுத்துதல் என்பது வேறு . மக்கள் மீது அவர்களே ஏற்காத கருத்துக்களை திணிப்பது வேறு . நாம் தமிழர் திணிக்கின்றது . மேலும் மக்கள் ஏதோ முட்டாள் போலவும் இப்போது புத்தி சொல்வது போலவும் தோரணம் கட்டுவது சரியில்லை . இது சரியான கோரிக்கையா என தமிழகம் தீர்மானிக்கும் என நீங்களே கூறிவிட்டதால் நான் கூற எதுவும் இல்லை . தேர்தல் முடிவு வரை காத்திருப்பதே சிறந்தது 

ஏற்கனவே நாம் தமிழர் கொள்கை பலரால் முழங்க பட்டிருந்தாலும் தெளிவான சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகள் உருவாகவில்லை . தமிழர் என்பது திராவிட எதிர்ப்பு அல்ல . இங்கு மிகப்பெரிய முட்டாள்தனம் என்னவெனில் திராவிடத்திற்கு எதிராக தமிழ் கொள்கை கொம்பு சீவப்படுகிறது . தமிழர்கள் திராவிடர்களே . ஆனால் தமிழர் மட்டும் திராவிடர் அல்ல என்பதே பொருத்தமான கொள்கை . அந்த தெளிவு யாரிடமும் இல்லை .  ( தமிழர் இந்தியர் அல்ல என கடந்த பத்து வருடங்கள் நடந்த கதை போல இப்போது தமிழர் திராவிடர் இல்லை என்ற கதை )

வைகோ போன்ற தமிழ் இனத்திற்கு உழைத்த மனிதர்கள் அதிகாரத்திற்கு வருதல் கூடாது என்பது துளியும் ஏற்க தக்கதல்ல . சீமான் இன்று வந்தவர் . ஆனால் ஒரு தெலுங்கராக இருப்பினும், இன்று நாம் தமிழர் கட்சிக்கு ஆயுதமாக இருக்கும் தமிழ் உணர்வுகளை திராவிடத்தில் கரையாமல் கட்டி காத்து  வந்தவர் வைகோ . தமிழன் நன்றி மறவாதவன் . நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் நிராகரிக்க வேண்டியது .

ஈழம் என்பதே வைகோவின் அரசியல் வாழ்வை அஸ்தமனம் ஆக்கிய ஒன்று . தன்னலம் பாராமல் கடைசி வரை ஈழ உணர்வுகளை தட்டி எழுப்பியர் வைகோ . கடைசி காலத்தில் ஒப்பாரி வைக்க வந்தவனெல்லாம் பங்காளி ஆக முடியாது 

ஜாதி பற்றி கூறும்போது தெளிவாக குறைகளை மட்டும் சொல்லி நிரப்பி விட்டீர் . 

1. பிற மாநில ஜாதி ஆயினும் தமிழை தவிர வேறு மொழி பேசாதோர் அல்லது தெரியாதோருக்கு என்ன பதில் ???
2. பிற மாநில ஜாதி அட்டவணையிலேயே இல்லாத அல்லது தமிழ் நாட்டில் மட்டுமே வசிக்கும் பிற மொழி ஜாதி மக்களுக்கு என்ன பதில் ???
3. பூர்வீகமே தெரியாத அல்லது பிற மாநிலத்தோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற பிற மொழி பேசும் ஜாதியினருக்கு என்ன பதில் ???

வன்னியரே ரெட்டியார் , ரெட்டிகளே வன்னியர் . மொழி மட்டுமே வேறு . இவர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா ??? ஜாதி வைத்து மொழி பிரிப்பது என்பது தமிழ் கோட்பாடான தொழிலில் இருந்து ஜாதி வந்தது என்பதை மறுத்து மீண்டும் ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க கூடிய விஷ விதை 

ஆட்சிக்கு வந்துவிட்டு யாருமே தமிழை கொல்ல வில்லை. மொழி இனம் பண்பாடு என்பது வேறு . அரசியல் நிர்வாகம் என்பது வேறு . அனைத்தையும் கலக்க வேண்டாம் . மேலும் முதலில் கோட்பாடுகள் உருவான பின்னர் யோசிக்கலாம் .

முதலாவதாக, தமிழர்கள் திராவிடர்களே என்கிறீர்கள். சரி.. இந்தத் திராவிடம் என்கிற சொல் எங்கிருந்து வந்தது?

Etymology

The Sanskrit word drāviḍa is used to denote the geographical region of South India.

அதெப்படி தமிழர்களையும் குறிக்கும் ஒரு சொல் சமஸ்கிருதத்தில் உள்ளது என்கிற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். கார்டுவெல் அவர்கள் தென்னக மக்கள் வேறு கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்கள் என்கிற அடிப்படையில் வடமொழியில் பயன்படுத்தப்பட்ட திராவிடம் என்கிற சொல்லைப் பயன்படுத்தினார். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒரு மேற்கு நாட்டவர் எம்மை ஒரு இனக்குழுமமாகப் பிரிக்கிறார். நாளை மராத்தியரையும் சேர்த்து அதிதிராவிடர் என்று வரையறுத்தால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும்போல..

சரி.. இவற்றையெல்லாம் விட்டுவிடுவோம்.. ஈழத்தமிழரும்கூட திராவிடர்தானே அப்படிப்பார்த்தால்?! அவர்கள் மட்டும் தமிழர்களாக வகைப்படுத்தப்பட்டிருபது எவ்வாறு? ஆக, இந்த திராவிடம் என்பதே ஒரு அரசியல் என்பது புரிகிறதல்லவா?

1) தமிழ் தெரியாது.. ஆனால் யுகாதி கொண்டாடுபவராக இருந்தால் அவர் என்ன இனம்? வெறும் தமிழைப் பேசினால் மட்டும் போதாது.. இன உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். ப. சிதம்பரம் தமிழராக இருந்தும் தலைவராக இருக்கத் தகுதி இல்லாதவர். இன உணர்வு அற்றவர். ஆகவே, பிற மாநிலத்தவர் தமிழகத்தில் வாழ்ந்து தமிழை மட்டுமே பேசுகிறவராக இருந்தால் அவர்களும் தலைவர்களாக இருக்கலாமே.. மக்கள்பணி செய்யலாமே..

2) மேலே உள்ள பதில்தான்.

3) யாரும் வாழலாம். தமிழர்கள்தான் அதிகாரத்தில் இருப்பார்கள்.

ஆட்சிக்கு வந்து யாரும் தமிழைக் கொல்லவில்லையா? தமிழக அங்காடிகளைப் பார்த்தால் தெரியுமே.. மக்களிடம் பேசிப்பார்த்தால் தெரியுமே.. தமிழை வளர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா? கனடாவுக்கு குடிபெயர்ந்து வருபவர்களிடம் எதற்காக ஆங்கிலம், அல்லது பிரெஞ்ச் தெரிந்திருக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி நாங்க சொல்றது இஸ்லாமியரை தமிழராய் ஏற்பதுபோல் நாயக்கர் சாதியினரையும் ஏற்கணும் என்பதே.

இலங்கை முஸ்லீம்களும் ஒரு சமயம் எம்மோடு இணங்கி வரவிருந்த வாய்ப்புக்களை எல்லாம் இரு பகுதியும் போட்டுடைத்தோம். இப்போ இலங்கையில் முஸ்லீம் தமிழ் உறவு அருகருகே ஆனால் தனியே எனும் அளவுக்கு அந்நியமாய் விட்டது.

இதே போன்றதொரு மொக்குத்தனமே இப்போ தமிழகத்தில், சாதிய அடிப்படையில் நடக்கிறது. இது நாளைக்கு நாயக்கருக்கு தமிழ் நாட்டில் தனி அலகு ( ஆந்திராவுக்குள் புதுவை இருப்பது போல ) கோரும் அளவுக்கு கொண்டு போய் விடவும் கூடும்.

இசை,

1) நான் இப்போ சொல்கிறேன் சீமான் தமிழன் இல்லை. ஜாதி சான்றிதழ் நாடார் என்கிறது. ஆனால் கேரளவிலும் நாடார் உளர். எனவே சீமான் மலையாளி. (விவாதத்துக்குத்தான்).

இல்லை சீமான் தமிழர் என்று நிரூபியுங்கள். இப்படித்தான் நீங்கள் கருணா நிதியை கேட்பது.

2) ஸ்டாலின் - ஏன் நானும்தான், வீரமணியும், சு ப வீயும் தான், இன்னும் பல இரு வழியும் தூய தமிழர்களும் தான் சீமான் கட்சியை இனவாதக் கட்சி என்கிறோம். உங்கள் கணக்குப் படி நாமும் தமிழரில்லையோ?

அப்போ வீரவன்சவை இனவாதி எனும் எந்த சிங்களரும், சிங்களவரில்லை?

ஹிட்லரை இனவாதி என்ற எந்த ஜேர்மனியனும் ஜேர்மன் இல்லை?

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கொள்கை விளக்கத்துக்கும், யார் தமிழர் என்ற வரயறைக்கும், ஞானசார தேரரின் யார் சிங்களவர் என்ற வரையறைக்கும் என்ன வேறு பாடு? ஒன்றுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.