Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறி உங்களை நீங்களே திட்ட ஆரம்பித்து விட்டீர்கள் போல இருக்கு! அல்லது நீங்கள் அமெரிக்காவில் இருந்து virtual reality இல் உயிரைக் மற்றவர்களுக்காக கொடுத்தீர்களோ தெரியாது! முதலே சொன்னேனே, உங்கள் ranting மொட்டை பிளேட்டால் என் கழுத்தை நானே அறுத்துக் கொள்வது போல இருக்கு!  tw_cry:

இங்கு சில வேடதாரிகளைபோல் 
தனக்கு தானே வெள்ளை அடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

நான் சுத்த சுயநலவாதி 
அதற்காக நாட்டுக்கு போராடியவனை 
காட்டிகொடுக்கும் கள்ள புத்தி எனக்கு இல்லை.

நாளையும் அமெரிக்காவில் ஓர் போர்வந்தால் ...
முடிந்தால் நான் கனடாவிற்கு ஓடிவிடுவேன் 
அதற்காக கட்டாயமாக பிடிக்கவந்தார்கள் என்று நாடகம் ஆடமாட்டேன். 
குற்றவாளி நானே தவிர 
அமெரிக்க அரசு கிடையாது.

முடிந்தால் கருத்தோடு மோதுங்கள் ....

நான் எழுதியவற்றில் இருக்கும் தவறுகளை சுட்டி காட்டுங்கள் 

உங்கள் பக்க நியாயங்களை எழுதுங்கள் 
புலிகள் செய்தவற்றில் தவறு என்று நீங்கள் நினைப்பதை 
எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தெரியாதை தெரிந்து கொள்ள வாய்ப்பாகும். 

ஏன் சிலேடை பேசுகிறீர்கள் ?

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்

இவ்வளவு அழிவுகளுக்குப்பின்னாலும் அவர்கள் கேட்பது ஒரு தீர்வு தான்

நிம்மதியான கௌரவமான வாழ்வு தான்

அதனால் கூட்டமைப்புக்கான ஆதரவு

இந்த அறிக்கை சார்ந்து வரவேற்ற எந்ததலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்

உங்கள் போல் புலிகளை விசாரியுங்கள்

அவர்களும் தப்புச்செய்தார்கள் என்று எவரும் சொல்லவில்லை.

இங்கு நீங்கள் மட்டும்........

இங்கே விசாரியுங்கள் என்று யார் சொன்னது? ஏற்றுக்கொள்ளுங்கள் புலிகள் தவறு செய்தார்கள், அவர்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும் என்று தான் சொல்லப் படுகிறது! நீங்களோ புலிகள் தவறு செய்தார்கள் என்று வன்னியில் இருந்து உங்களுடன் கதைத்த யாரும் சொல்லவில்லை என்கிறீர்கள்? அதனால் நீங்களும் நம்பவில்லை என்கிறீர்கள்! உங்களுக்கு வேண்டுமானால் சில பாதிக்கப் பட்ட நபர்களை அறிமுகம் செய்து வைக்கவா? 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவர்களுக்கு நடந்தது பொய் என்கிறீர்களா?

2 நாட்கள் முன்பு 
ஒபாமா ரஷ்யாவை எச்சரித்து இருந்தார் 
ரசியா சிரியாவிற்கு உதவுகிறதாம் 
அசாத் அதை தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் நிலைமை இருக்கிறதாம்.

ரசியா சிரியாவிற்கு உதவியதை நீங்கள் பொய் என்பீர்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் புலிகளால் பாதிக்கப்பட்டதாக நீங்கள்கூறும் மக்களே புலிகள் இல்லையென கவலைப்பட நீங்கள் முதலைக்கண்ணீர் வடிப்பது போல் உள்ளது.

தமிழர்கள் ஆகிய நீங்கள் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்குறீர்களே.......புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பிய புலிகளையும் அவர்களது குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்....விசாரணை என்றபெயரில் அவர்களை தான் அரசாங்கம் வதைக்கப்போகின்றது என்பதை அதிகப்பிரசங்கியல் ஆகிய நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். 

சரி Justin அண்ணாவின் கேள்விக்குவந்தால்.

புலிகளை ஒருபயங்கரவாத இயக்கம் என்று கூறித்தான் எல்லாநாடுகளும் இணைந்து அழித்ததை Justin அண்ணா விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவே பயங்கரவாதிகளை ஒருதரப்பாக ஐநா எடுத்திருப்பது மகா தப்பு. அவர்கள் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட உங்களுக்கெல்லாம் 2009 may 19 நியாயம் கிடைத்து விட்டது. பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று செயல்பட்டவர்கள் நடத்திய நாசகரச்செயல்பாடுகளுக்கே மக்கள் நியாயம் கேட்கிறார்கள். 

இப்ப என்னத்திற்கு திரும்பவும் பயங்கரவாதிகளை இங்கு இழுக்குறீர்கள்?

சிங்களவனிட்கு ......களா?

சேவையர்!

புலிகளைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஒரு பக்கம் பலகாலமாக முயற்சி!

பிறகு யுத்தகாலத்தில் தமிழ்மக்கள் புலிகளால் நேரடியாகப் பாதிக்கப் பட்ட பின்னர் "நாங்கள் பயங்கரவாதிகள், பிறகேன் எங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை?" என்ற கேள்வி!

பார்த்தீபனிடம் பயிற்சி எடுத்து விட்டுக் கிளம்பியிருக்கிறீர்களா? :rolleyes:

நாட்டில் என்ன நடந்தது நடக்கபோவதா இப்ப முக்கியம் ?

எனக்குதான் சர்வதேச அரசியல் தெரியும் 
நான்தான் நடுநிலைவாதி 
நான் அச்சா பிள்ளை !

இதைதான் பலரும் இங்கே பதிகிறார்கள் 
வார்த்தைகள் கொஞ்சம் வித்தியாசம் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே விசாரியுங்கள் என்று யார் சொன்னது? ஏற்றுக்கொள்ளுங்கள் புலிகள் தவறு செய்தார்கள், அவர்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும் என்று தான் சொல்லப் படுகிறது! நீங்களோ புலிகள் தவறு செய்தார்கள் என்று வன்னியில் இருந்து உங்களுடன் கதைத்த யாரும் சொல்லவில்லை என்கிறீர்கள்? அதனால் நீங்களும் நம்பவில்லை என்கிறீர்கள்! உங்களுக்கு வேண்டுமானால் சில பாதிக்கப் பட்ட நபர்களை அறிமுகம் செய்து வைக்கவா? 

பார்த்தீர்களா 

மீண்டும் மீண்டும் உங்கள் கற்பனையில் வைத்தே எழுதுகின்றீர்கள்

புலிகள் பிழைவிடவில்லை என்று மக்கள் சொல்லவில்லை என்று எங்கு எழுதினேன்??

தமதும்

தமது  பிள்ளைகளின் தியாகத்தினூடாக ஒரு தீர்வை எடுத்துவிடணும் என்றே சொல்கிறார்கள்

அதைத்தான் இங்கு எழுதுகின்றேன்

புலிகளை விசாரிக்கவேண்டாம் என்றோ

புலிகளைப்பற்றி ஐநா சொல்வது தவறு என்றோ எங்கும் எழுதவில்லை

உங்கள் கருத்துக்கு ஆமாப்போடவில்லை என்பதற்காக கண்டபடி எழுதக்கூடாது வைத்தியர்

நன்றி  வணக்கம்

சேவையர்!

புலிகளைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஒரு பக்கம் பலகாலமாக முயற்சி!

பிறகு யுத்தகாலத்தில் தமிழ்மக்கள் புலிகளால் நேரடியாகப் பாதிக்கப் பட்ட பின்னர் "நாங்கள் பயங்கரவாதிகள், பிறகேன் எங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை?" என்ற கேள்வி!

பார்த்தீபனிடம் பயிற்சி எடுத்து விட்டுக் கிளம்பியிருக்கிறீர்களா? :rolleyes:

அண்ணா இப்ப கதைக்கிறது ஐநா தீர்மானம் பற்டி....நீங்கள் வேறுகதையெடுத்து நழுவமுயல்வது தெளிவாக விளங்குகின்றது. 

நீங்கள் நடுநிலையாளன் எனக்கூறிக்கொண்டு சாதிக்க முனைவது உங்கள் தலையிலே நீங்களே மண்ணைப்போடுவதற்கு சமனானது என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பக்க நியாயங்களை எழுதுங்கள் 
புலிகள் செய்தவற்றில் தவறு என்று நீங்கள் நினைப்பதை 
எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தெரியாதை தெரிந்து கொள்ள வாய்ப்பாகும். 

இறுதி யுத்த காலத்தில் புலிகள் வலுக்கட்டாயமாக ஆட்களை, அனேகமாக இளம் வயதினரைப் பிடித்து இரண்டு நாள் பயிற்சியோடு முன்னணிக்கு அனுப்பினார்கள். இதைத் தடுக்க முயன்ற பெற்றோர் பச்சை மட்டை முதற்கொண்டு துவக்குப் பிடி வரை பாவித்துத் தாக்கப் பட்டார்கள்.

மக்கள் அனைவரும் நீங்கள் நினைப்பது போல தாங்களாக புலிகளுடன் முள்ளிவாய்க்கால் வரை போகவில்லை! வவுனியாவின் திசையில் போக புலிகள் அனுமதிக்காமையால் கிழக்கு நோக்கிப் போனார்கள். திருட்டுப் பாதைகளும் அதற்காக விலைகளும் இருந்தன. சில புலி உறுப்பினர்களே திருட்டுப் பாதை வழிகாட்டிகளாகவும் வேலை செய்தார்கள். இந்தப் பாதைகள் இடையிடையே புலிகளால் கண்காணிக்கப் பட்டு, தப்ப முனைந்த மக்கள் சுடப் பட்டார்கள்.

காயப் பட்ட மக்களை ஏற்றிச் செல்ல கப்பல் வரும். கப்பலுக்குச் செல்லப் படகில் ஏறும் காயப் பட்ட மக்களுக்கும் பாஸ் தேவை. முழங்காலுக்கு மேலே கால் இல்லையானால் போகலாம், முழங்காலுக்குக் கீழே கால் சிதைந்திருந்தால் போக அனுமதி இல்லை! (இரத்தப்போக்கிலும் உயிர் ஆபத்திலும் இரண்டு வகையிலும் பெரிய வேறுபாடு இல்லை என்பது மருத்துவ அறிவுள்ளோருக்குத் தெரியும்!)

இவையெல்லாம் அடுத்த டாகுமென்ரரிக்கு நான் எழுதிய கதை அல்ல! சாட்சிகள் உண்டு, பாதிக்கப் பட்டவர்களை நேரில் கண்டு அறிந்த உண்மைகள் இவை! நீங்கள் வந்து வீடியோ ஆதாரம் கேட்கக் கூடும்! மற்றைய கள உறவுகள் வந்து மேலும் சொல்வார்கள்!

அண்ணா இப்ப கதைக்கிறது ஐநா தீர்மானம் பற்டி....நீங்கள் வேறுகதையெடுத்து நழுவமுயல்வது தெளிவாக விளங்குகின்றது. 

நீங்கள் நடுநிலையாளன் எனக்கூறிக்கொண்டு சாதிக்க முனைவது உங்கள் தலையிலே நீங்களே மண்ணைப்போடுவதற்கு சமனானது என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள்

நான் நடுநிலையாளன் அல்ல! கீழே எழுதி இருக்கிறேன் பாருங்கள்! இவையெல்லாம் நடக்கவேயில்லை என்று இங்கே சத்தியம் செய்து சொல்லி விட்டு இரவில் நன்கு தூங்க உங்களால் முடியும்! என்னால் முடியாது! அவ்வளவே உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறு பாடு!

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்த காலத்தில் புலிகள் வலுக்கட்டாயமாக ஆட்களை, அனேகமாக இளம் வயதினரைப் பிடித்து இரண்டு நாள் பயிற்சியோடு முன்னணிக்கு அனுப்பினார்கள். இதைத் தடுக்க முயன்ற பெற்றோர் பச்சை மட்டை முதற்கொண்டு துவக்குப் பிடி வரை பாவித்துத் தாக்கப் பட்டார்கள்.

மக்கள் அனைவரும் நீங்கள் நினைப்பது போல தாங்களாக புலிகளுடன் முள்ளிவாய்க்கால் வரை போகவில்லை! வவுனியாவின் திசையில் போக புலிகள் அனுமதிக்காமையால் கிழக்கு நோக்கிப் போனார்கள். திருட்டுப் பாதைகளும் அதற்காக விலைகளும் இருந்தன. சில புலி உறுப்பினர்களே திருட்டுப் பாதை வழிகாட்டிகளாகவும் வேலை செய்தார்கள். இந்தப் பாதைகள் இடையிடையே புலிகளால் கண்காணிக்கப் பட்டு, தப்ப முனைந்த மக்கள் சுடப் பட்டார்கள்.

காயப் பட்ட மக்களை ஏற்றிச் செல்ல கப்பல் வரும். கப்பலுக்குச் செல்லப் படகில் ஏறும் காயப் பட்ட மக்களுக்கும் பாஸ் தேவை. முழங்காலுக்கு மேலே கால் இல்லையானால் போகலாம், முழங்காலுக்குக் கீழே கால் சிதைந்திருந்தால் போக அனுமதி இல்லை! (இரத்தப்போக்கிலும் உயிர் ஆபத்திலும் இரண்டு வகையிலும் பெரிய வேறுபாடு இல்லை என்பது மருத்துவ அறிவுள்ளோருக்குத் தெரியும்!)

இவையெல்லாம் அடுத்த டாகுமென்ரரிக்கு நான் எழுதிய கதை அல்ல! சாட்சிகள் உண்டு, பாதிக்கப் பட்டவர்களை நேரில் கண்டு அறிந்த உண்மைகள் இவை! நீங்கள் வந்து வீடியோ ஆதாரம் கேட்கக் கூடும்! மற்றைய கள உறவுகள் வந்து மேலும் சொல்வார்கள்!

இதையெல்லாம் யார் மறுக்கிறார் ?
எனது உறவுகளுக்கு நடந்த 1%ம் கூட இதில் இல்லை 

எந்த இடத்தில் இது தொடங்குகிறது ....?
இவற்றுக்கு பிளையார் சுழிபோல ஆரம்ப புள்ளி எங்கு தொடங்கியது ?

இப்போ ஒரு இன குழுமம் 
ஒடுமொத்த இன அழிப்புக்குள் சிக்கிவிடுகிறது 

அதற்குள் இருந்து எப்படி போராடி தப்ப முடியும் என்றுதான் 
ஒரு போராளி போராடுவான்.

எல்லாம் முடிய தனி குடும்ப கதைகளை வைத்து 
சிலர் செய்வதுபோல் புத்தக வியாபாரம்தான் செய்யமுடியும்.

இந்த இடத்தில் புலிகளை கொண்டு சென்ற விட்ட தமிழரின் 
சரி/ தவறு என்ன ? 

தனியாக ஓடியவர்களில் பெண்கள் தனியாக பிரிக்கபட்டு காணமல் போய்விட்டிருக்கிறார்கள் 
இவர்களை நீங்கள் கண்டுபிடித்து கொடுப்பீர்களா ?

கூட்டமாக எதுவும் செய்ய முடியாது பிரிந்து ஓட வேண்டும் என்றுதானே 
எதிரி குண்டுகளை வீசினான் ...
எப்படி ஒரு போராளியால் பிரிந்து ஓடுவதை தடுக்காது விட முடியும் ?

இன்றும் போர்குற்றம் என்று ஐ நா கூட முள்ளி வாய்க்காலில்தான் நிற்கிறது 
வாகரையில் நடந்தது உங்களுக்கே  தெரிந்திருக்காது.

புலிகள் போராடியது பிழை என்று சொல்லுங்கள் ஒத்துகொள்கிறேன்.
சுப்பண்ணை யின் காணிக்குள் குண்டு வீழுந்த பழியை தூக்கி அவர்கள் மேல் போடாதீர்கள் 
தமிழராக இருந்துகொண்டு அதை செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். 

புல்லரிக்கிறது மருதர்! இதையெல்லாம் சுப்பண்ணையின் தனிப் பட்ட பிரச்சினைகளாகப் பார்க்காமல் விட்டால் நான் தமிழன் இல்லை, அப்படியா? சரி நான் இனித் தமிழன் இல்லை. அதனால் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோஹரா...
சிங்களவரில் இருவர் தங்களுக்குள் இப்படி பேசிக்கொண்டு அடிபடுவார்களாயின்.....  

ஒருவர்: இராணுவம் செய்தது மிகப் பெரும் தவறு, தமிழர்களை கொன்றது மிகப் பெரும் தவறு......

மற்றையவர்: இல்லை இல்லை அவர்கள் எம் நாட்டுக்காக, பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்கள்...

அப்படியாயின்,
இந்த கூற்றுகளில் எது சரி... எது பிழை...?

அவர்கள் இந்த விடயத்தில் எங்களை போல கருத்து பேதமில்லாமல் "தமிழன் அழிவது நன்மை" என்ற மனநிலையில் (பெரும் பான்மையில்) தான் இருப்பார்கள் என்று நினைக்கிறன்.

அப்படி இல்லாதிருந்தால் .. முன்னைய அரசாங்கம் தமிழர்களை கூட்டம் கூட்டமாக பஸ்சுகளில் ஏற்றி வடக்கு நோக்கி "துரத்தி அடித்ததிற்கு" அவர்கள் வீதியில் வந்து போராடி இருப்பார்கள்.

நம் குறை ... 
நிதம் உரைக்கும் 
நாம் தமிழர் .... 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் "மகாபாரதத்தை" மேற்கோள் காட்டக் கிளிக்கினேன்! வெற்றுப் பெட்டி தான் வருகிறது! யாழை இயக்கும் மென்பொருளுக்கே சகிக்கவில்லை உங்கள் மொட்டை பிளேட் அறுவை! மனிதர்கள் எப்படித் தாங்குவர்?:rolleyes:  தமிழர்களை விடுங்கள், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பிடித்து ஆயுதம் கொடுத்து சண்டையில் விடுவதும் அதை இன்னொரு மனிதன்  பிழை என்று சொல்ல மாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதும் சரியா? இது தான் என் கேள்வி! இதற்குப் பதில் சொல்ல மனிதத் தன்மை போதும்! உங்கள் கீறல் விழுந்த தமிழ் தேசிய பக்தி rhetoric அவசியமேயில்லை!

சமநிலை என்கிற கோணத்தில் இருந்து அணுகும் ஜஸ்டினின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. இறுதிப்போரில் புலிகள் வலுக்கட்டாயமாக இளைஞர்களைச் சேர்த்தார்கள் என்பது பொதுவில் அறிந்த ஒன்று. இது வருத்தத்திற்கு உரியதும், கண்டனத்திற்கு உரியதும் ஆகும். அதே நேரத்தில் வலுக்கட்டாயமாக இளைஞர்களைப் பிடித்து இராணுவப் பயிற்சி தரும் சிங்கப்பூரையும்  நாம் கண்டிப்பதற்குப் பின்னிற்கக்கூடாது.

என்ன விந்தையா இருக்கா? இந்த உலகமே இப்படித்தான். அது ஒரு சமநிலையற்ற பிரதேசம். சிரியாவில் கலவரத்தைத் தூண்டி லட்சக்கணக்கான உயிரிழப்புக்களையும், அகதிகளையும் உருவாக்கிய மேலை நாட்டவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று நம்பப்பட்டு வருகிறது.

பேரழிவு ஆயுதத்தை வைத்திருந்ததாகச் சொல்லி சதாமை தூக்கில் போட்டவர்கள் அமெரிக்கர்கள். இந்த அநியாயங்களைப் பற்றி நாம் யோசிக்கலாம். ஆனால் பேசுபொருளாக, ஒரு அரசியல் கருவாக முன்னெடுக்க மாட்டோம்.

நேற்று கனடாவின் ஒரு சிறு நகரத்தில் பேரூந்தில் பயணம் செய்ய நேரிட்டது. ஓட்டுநர் இன்னொருவருடன் பேசிக்கொண்டு வந்தார். 14 வயது இளைஞன் பாப்பரசரை குண்டு வைத்து கொலை செய்ய இருந்தான் என்றும் பிடிபட்டுவிட்டான் என்றும் சொன்னார். அப்போதுதான் அதைப்பற்றி கேள்விப்பட்டேன்.

இன்று செய்தியைப் பார்த்தால் அந்தப் பெடியன் மின்னணு கடிகாரம் தயாரித்ததாக செய்தி உள்ளது. அந்த இஸ்லாமிய சிறுவனும் சமநிலையற்ற உலகில்தான் வாழ்கிறான்.

ஆக, எங்கள் பக்கத்திலும் பிழைகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே.. ஆனால் அரசியல் என்று வரும்போது எமது தேவையை மட்டுமே முன்னகர்த்திச் செல்ல வேண்டும். எமது பிரச்சினைகள் தீர்ந்தவுடன் மீதி. காரணம் சமநிலையற்ற இந்த உலகில் சமநிலையைத் தேடுவது எமது புதைகுழியை நாமே தோண்டுவதற்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள இசை, வளர்ந்த நாடுகளில் இருக்கும் draft ஐயும் புலிகள் இறுதி நாட்களில் ஆட்களைக் கட்டாயமாகப் பிடித்து முன்னணியில் விட்டதையும் பலர் ஒப்பிட்டாகி விட்டது! அமெரிக்காவில் இருந்தது என்றோரும், பிரான்சில் என் மகன் கூட கட்டாயமாக பயிற்சி பெற்றான் என்றோரும் இப்படி பலர் வந்து சொல்லி விட்டுப் போனாலும் அவர்களின் கூகிள் தேடல் அறிவில் conscientious objectors  என்றால் என்ன என்பதும், எவ்வாறு விதிவிலக்குகள் இலகுவாக அளிக்கப் படுகின்றன என்பதும் பதியவில்லை. மேலும் cannon fodder ஆக இல்லாமல் முறையான பயிற்சியும் ஆயுதமும் கொடுத்துத்தான் நாடுகள் கட்டாய சேவையில் இருப்போரை அனுப்புகின்றன என்பதும் அவர்களின் அறிவுக்கு எட்டாத விடயம். இந்தப் பலத்த வேறு பாடுகள் உங்களுக்கும் புரியாமல் போனது விந்தை! 

(கொசுறு: மேலும் நீங்கள் கேள்விப்பட்ட போப்புக்கு பால்ய வயது மாணவன் அச்சுறுத்தல் விடுத்த விடயம் உண்மை தான்: இதோ இணைப்பு:  http://www.cbsnews.com/news/pope-francis-threat-arrest-secret-service-new-jersey/ இது கடிகாரம் கொண்டு வந்த மாணவன் அல்ல!). 

Edited by Justin
வேலை செய்யும் இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தேவ தூதர்கள் அதிகரித்து விட்டனர்.நாம் சாத்தான்களாகவே இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல நாங்கதான் சாத்தான்கள், நீங்களெல்லாம் தேவதூதர்கள்! பரிசுத்தவான்கள்!

ஆரோஹரா...
சிங்களவரில் இருவர் தங்களுக்குள் இப்படி பேசிக்கொண்டு அடிபடுவார்களாயின்.....  

ஒருவர்: இராணுவம் செய்தது மிகப் பெரும் தவறு, தமிழர்களை கொன்றது மிகப் பெரும் தவறு......

மற்றையவர்: இல்லை இல்லை அவர்கள் எம் நாட்டுக்காக, பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்கள்...

அப்படியாயின்,
இந்த கூற்றுகளில் எது சரி... எது பிழை...?

அவர்கள் இந்த விடயத்தில் எங்களை போல கருத்து பேதமில்லாமல் "தமிழன் அழிவது நன்மை" என்ற மனநிலையில் (பெரும் பான்மையில்) தான் இருப்பார்கள் என்று நினைக்கிறன்.

அப்படி இல்லாதிருந்தால் .. முன்னைய அரசாங்கம் தமிழர்களை கூட்டம் கூட்டமாக பஸ்சுகளில் ஏற்றி வடக்கு நோக்கி "துரத்தி அடித்ததிற்கு" அவர்கள் வீதியில் வந்து போராடி இருப்பார்கள்.

நம் குறை ... 
நிதம் உரைக்கும் 
நாம் தமிழர் .... 

சசி,

இதே சிங்களவரிடம் போய்க் கேளுங்கள் ஜேவிபி காலத்தில் சிங்கள இராணுவம் அட்டூழியம் புரிந்ததா இல்லையா என. இளைஞர்களை ரயர் போட்டுக் கொழுத்தினார்களா இல்லையா என. ஜேவிபி யில் இணைந்து பணியாற்றிய பெண்களை காட்டுக்குள் வைத்து வல்லுறவு புரிந்தார்களா இல்லையா என. சில வருடங்களுக்கு முன்னர் வெலிவேரியாவில் வைத்து குடிநீர் மாசுபடுவதற்கு எதிராக திரண்ட  சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமாக இராணுவம் சுட்டதா இல்லையா என. சிங்களவர்களில் அநேகம் பேர் ஓம் என்று தான் சொல்வார்கள். ஜேவிபி காலத்தில் இராணுவத்தினரதும் பிரேமதாசாவின் அரசின் மீது கடுமையான விமர்சனம் வைத்து அதற்காகவே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் காணமல் போக்கடிக்கப்பட்ட சிங்கள ஊடவியலாளர்கள் மட்டும் 50 பேருக்கும் மேல் . அதே போன்று அதற்கு எதிராக குரல் கொடுத்த இலக்கியவாதிகளையும் கொன்றழித்தார்கள்.  எப்பவும் தமக்காக இருக்குன்றவர்கள் என்று நினைப்பவர்கள் தமக்கு எதிராகவே வன்முறையை ஏவும் போது அதை எதிர்க்க பின் நிற்க மாட்டார்கள் (எம்மில் அநேகரைத் தவிர). இதே சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களைத் தான் மறுத்து அல்லது நியாயப்படுத்தி பதில் தருவார்கள்.

இங்கு புலிகளும் குற்றம் இழைத்தவர்கள் என்று சொல்கின்ற எவரும் சிங்கள இராணுவத்துக்கு எதிரான, சிங்கள அரசுக்கு எதிரான தாக்குதல்களையோ நடவடிக்கைகளையோ பிழை என்று சொல்லவில்லை.  ஐ.நா மனிதவுரிமை அறிக்கையிலும் கூட சிங்கள இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை புலிகள் செய்த குற்றங்களாக வரிசைப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் தம் சொந்த இனத்துக்கு எதிராக, முக்கியாமாக 2007 இன் பின்னரான காலப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தான் விமர்சிக்கின்றனர். ஏனெனில் எந்த அநியாயங்கள் தமக்கு எதிரியால் நிகழ்த்தப்படும் போது காப்பாற்றி கரை சேர்ப்பார்கள் என்று நம்பினார்களோ அவர்களே இறுதியில் எதிரியைப் போன்று நடந்ததைத்தான் குற்றம் என்கின்றனர்.  இந்தக் குற்றங்கள் குற்றங்களாக ஏற்கப்பட வேண்டும்.

இன்றும் ஏதோ ஒரு விதத்தில் போராடினால் மட்டுமே குறைந்தபட்ச தீர்வொன்று சிங்களத்திடம் இருந்து பெறக் கூடிய சூழ்நிலையி இருக்கும் போது எதிர்கால போராட்டமாவது (அது எந்த வடிவிலாயினும்) இவ்வாறான குறைகளும் குற்றங்களும் இல்லாமல் சரியாக அமையவேண்டும்.

Edited by நிழலி
எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் யுத்த காலத்தில் அமெரிக்காவில் இராணுவத்துக்கு இளையவர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டார்கள். இன்றும் அமெரிக்காவில் பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் தேசிய சேவைக்கு பதிவு செய்து கொல்ல வேண்டும். சீனா, சிங்கபூர், கிரேக்க நாடு இப்படி பலநாடுகளில் இராணுவ சேவையும் பயிற்சியும் கட்டாயமானது. போர்க்காலத்தில் இந்த கட்டாயசேவை கடுமையாக அமுல்படுத்த படுகிறது. 

இலங்கையில் விடுதலை புலிகளே தமது ஆட்சியில் முதன்முதலாக இந்த கட்டாய இராணுவ சேவையை அறிமுக படுத்தினார்கள். பின்னர் கோத்தபாய இலங்கை அரசுக்கும் இதனை அறிமுகம் செய்தார். 

எல்லா நாடுகளிலும் கட்டாய இராணுவ சேவையை மறுப்பவர்கள் தண்டிக்க பட்டார்கள். இந்த தண்டனைகளுள் மரண தண்டனையும் அடங்கி இருந்தது. 

ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை அறிக்கையில் இடம் பெற செய்ததற்கு முக்கிய காரணம் இலங்கை அரசின் கோரிக்கைகள் ஆகும். இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களை மட்டும் ஏன் ஐக்கிய நாடுகள் விசாரிக்கிறது? என்ற கேள்விக்கு பதிலாகவே இந்த அறிக்கையில்  விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்களும் இடம் பெற்றுள்ளன. விடுதலை புலிகளுக்கு தண்டனை கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை வரை போக வேண்டிய அவசியம் இன்று இல்லை என்பதை இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் பாதிக்க பட்ட மக்களும் நன்கு அறிவார்கள். இலங்கை அரசின் போலிஸ் இராணுவம் மற்றும் நீதி மன்றங்களே போதுமானவை. ஆனால்  இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை நடுநிலையாக செயற்படுகிறது என்று காட்டவே இந்த அறிக்கையில்  விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்களும் இடம் பெற்றுள்ளன. குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை தண்டிக்க இவ்வாறான நடுநிலையான அறிக்கை தேவையானது. அப்படி அறிக்கை அமையாவிட்டால் நீதி மன்றங்கள் இராணுவ அதிகாரிகளை விசாரிக்கும் போது அவர்கள் நடுநிலை தவறிய அறிக்கையை காரணம் காட்டி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நவநீதம்பிள்ளை சரியான அத்திவாரத்தை போட்டு சரியான பாதையில் ஐ. நா. மனிதஉரிமைகள் அமைப்பை இலங்கை தமிழருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு தயார் படுத்தி இருக்கிறார். 

சசி,

இன்று சனல் நான்கு வெளியிடும் காணொளிகள் எல்லாம் சிங்களவர்கள் எடுத்ததுதான் .தமிழர் பெரும்பான்மை போலத்தான் சிங்கள பெரும்பான்மையும் .பி பி சி மாணிக்கவாசகரை உள்ளே பிடித்து போட்டபோது தன்னை வெளியெடுக்க சிங்கள பத்திரிகையாளர்கள் தான் என்று வெளிப்படியாக சொல்லியிருந்தார் .

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லை நம்பி ஆடுபவர்கள் தான் அதிகம் ஆனால் உண்மைக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கும் மனிதர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் அதற்காக உயிரை விட்டவர்களும் பலர் .

அந்த பட்டியலில் இருக்கத்தான் எனக்கும் விருப்பம் அதிகாரத்தில் இருப்பவனின் வாலை பிடித்து ஆடிக்கொண்டு இருக்க விரும்பவில்லை ..

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள இசை, வளர்ந்த நாடுகளில் இருக்கும் draft ஐயும் புலிகள் இறுதி நாட்களில் ஆட்களைக் கட்டாயமாகப் பிடித்து முன்னணியில் விட்டதையும் பலர் ஒப்பிட்டாகி விட்டது! அமெரிக்காவில் இருந்தது என்றோரும், பிரான்சில் என் மகன் கூட கட்டாயமாக பயிற்சி பெற்றான் என்றோரும் இப்படி பலர் வந்து சொல்லி விட்டுப் போனாலும் அவர்களின் கூகிள் தேடல் அறிவில் conscientious objectors  என்றால் என்ன என்பதும், எவ்வாறு விதிவிலக்குகள் இலகுவாக அளிக்கப் படுகின்றன என்பதும் பதியவில்லை. மேலும் cannon fodder ஆக இல்லாமல் முறையான பயிற்சியும் ஆயுதமும் கொடுத்துத்தான் நாடுகள் கட்டாய சேவையில் இருப்போரை அனுப்புகின்றன என்பதும் அவர்களின் அறிவுக்கு எட்டாத விடயம். இந்தப் பலத்த வேறு பாடுகள் உங்களுக்கும் புரியாமல் போனது விந்தை! 

(கொசுறு: மேலும் நீங்கள் கேள்விப்பட்ட போப்புக்கு பால்ய வயது மாணவன் அச்சுறுத்தல் விடுத்த விடயம் உண்மை தான்: இதோ இணைப்பு:  http://www.cbsnews.com/news/pope-francis-threat-arrest-secret-service-new-jersey/ இது கடிகாரம் கொண்டு வந்த மாணவன் அல்ல!). 

கடைசித் தகவல் பிழையாக இருப்பதற்கு வருந்துகிறேன்.

முதல் பகுதிக்கு வருகிறேன். நான் எதிர்பார்த்த விடயம் எதுவெனில் நீதி நியாயம் என்று பேசும் போது அதை சம அளவில் பிரயோகிப்பீர்களா என்பதை அறியவே. ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள்.. நானும் அறிவேன்.

விதிவிலக்குகள் குறித்துப் பேசியிருந்தீர்கள். அவ்வளவெல்லாம் தேவையில்லை. உயிர்போகக்கூடிய ஒரு இடத்திற்கு ஒருவரை பயிற்சி கொடுத்து அனுப்பினாலும், அனுப்பாவிட்டாலும் போகும் உயிர் போய்த்தான் ஆகும். நாடுகள் அளவில் இதனைச் செய்யும்போது அதற்கு சாக்குகளும், வாதங்களும் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம் என்கிற விடயத்துக்கு வரவே அந்த விடயத்தை எழுதவேண்டி வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா சர்வதேச விசாரணைகளையும் மீறி புலிகள்மீது வஞ்சனை தீர்ப்பதிலேயே நம்மவர் குறியாக உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

Compulsory Military Service

Conscription

Compulsory Military Service (Conscription). As a result of the falling off of enlistments in Canada, the government of Sir Robert Borden introduced into parliament on June 11, 1917, the Military Service Act, which conscripted the services of unmarried men of military age. Despite the opposition of a wing of the Liberal party, the measure passed both houses by substantial majorities; and in the general elections of 1917 it was emphatically endorsed by the electors, except in the province of Quebec. In operation, the Act was not an unqualified success. It yielded at first a disappointing number of recruits; and in some parts of the country the exemptions granted were out of proportion to those granted in other parts of the country. But eventually over 100,000 recruits were obtained under the Act; and these served the purpose of keeping up what was regarded as a sufficient flow of reinforcements at the front.

[This article was written for the edition of 1935 and repeated, in toto, in the 1948 edition. Hence, it does not discuss the application of conscription in the Second World War. The validity, and accuracy, of several statements made above have been challenged by some historians.]

Source : W. Stewart WALLACE, ed., The Encyclopedia of Canada, Vol. II, Toronto, University Associates of Canada, 1948, 411p., p. 114.

சிறிது தேடுதல் செய்து பார்த்தபோது 1917 இல் சட்டம் போட்டே கனடாவில் ஆள் பிடித்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. இவர்களில் எத்தனை பேர் இரண்டாம் உலகப்போரில் நோர்மண்டியில் தரையிறங்கி ஜேர்மன் துப்பாக்கி இரவைகளுக்கு மேலோகம் சென்றார்களோ தெரியவில்லை. tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசித் தகவல் பிழையாக இருப்பதற்கு வருந்துகிறேன்.

முதல் பகுதிக்கு வருகிறேன். நான் எதிர்பார்த்த விடயம் எதுவெனில் நீதி நியாயம் என்று பேசும் போது அதை சம அளவில் பிரயோகிப்பீர்களா என்பதை அறியவே. ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள்.. நானும் அறிவேன்.

விதிவிலக்குகள் குறித்துப் பேசியிருந்தீர்கள். அவ்வளவெல்லாம் தேவையில்லை. உயிர்போகக்கூடிய ஒரு இடத்திற்கு ஒருவரை பயிற்சி கொடுத்து அனுப்பினாலும், அனுப்பாவிட்டாலும் போகும் உயிர் போய்த்தான் ஆகும். நாடுகள் அளவில் இதனைச் செய்யும்போது அதற்கு சாக்குகளும், வாதங்களும் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம் என்கிற விடயத்துக்கு வரவே அந்த விடயத்தை எழுதவேண்டி வந்தது.

நாடுகள் அளவில் செய்யப் படும் போது சாக்குகள் காரணங்கள் அல்ல, அந்த நாடுகளின் அரசியலமைப்பு என்ற வரம்புக்குள் கட்டுப் படவேண்டிய தேவையே போதும், வேறெதுவும் தேவையில்லை. அதிலும் உடன்பாடில்லாமல் போருக்குப் போகாமல் இருப்போரை துவக்கு முனையில் நாடுகள் இழுத்துச் செல்வதில்லை என்பதையும் சௌகரியமாகப் புறக்கணித்து விட்டீர்கள்! புலிகளின் ஆட்சேர்ப்பு ஆயுத முனையில் தப்ப வழி இல்லாமல் இருந்த சிவிலியன்களைக் குறி வைத்து நடந்தது. இதை சிரியா , எரித்திரியா போன்ற தோல்வி அடைந்த நாடுகளில் மட்டுமே காணலாம். புலிகளின் நிர்வாகமும் தோல்வி நிலைக்கு வந்து விட்டதால் அப்படி ஆனது எனலாம்! 

இதை எங்கிருந்து எடுத்தீர்கள்? நான் தேடுதல் செய்து பார்த்தபோது இஸ்ரேலில் சிறைக்குச் சென்றவர்களின் கதைகளாக வருகிறது.

Canadian gets three months in jail for not serving in Israeli army

yanagorelik.jpeg.size.xxlarge.letterbox.

http://www.thestar.com/news/world/2012/09/27/canadian_gets_three_months_in_jail_for_not_serving_in_israeli_army.html

ஆக, அரசியலமைப்பைக் காரணம் காட்டி ஒருவரின் சாவுக்கு காரணமாகலாம். இது எந்த வகையில் நீதியாகும் என்று தெரியவில்லை. Moral High Ground என்கிற நிலையில் இருந்து வாதங்களை வைக்கும்போது இது சற்று இடறலாக இருக்கிறது.

Edited by இசைக்கலைஞன்

சிங்கள இனவாதிகள் : அமெரிக்கா ஈராக்கில் போர்க்குற்றம் புரிந்தது, பிரித்தானியா ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் செய்தது. நாங்கள் செய்ததை மட்டும் ஏன் பிழை என்கிறீர்கள்?

தமிழ் இனவாதிகள்: சிங்கப்பூர் ஆள் பிடிச்சது, கனடா பிடிச்சது புலிகள் பிடிச்சதை மட்டும் ஏன் குறை கூறுகின்றீர்கள்?

ஆகமொத்தம் இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். 

இங்கு எவரும் சிங்களம் செய்த இனப்படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அரசு செய்த படுகொலைகளுக்கு தண்டனை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் புலிகள் செய்த தவறுகளை நாம் ஏற்றுக்கொள்வது. அதை விடுத்து தலையை சுற்றி மூக்கை தொடுவது போல‌ குஞ்சு குருமனை பிடிச்சு ராணுவத்திற்கு முன்னால் நிக்க வைத்த கொடுமையை நாடுகள் ராணுவ ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்பிட்டு நியாயப்படுத்துவது கேவலத்திலும் கேவலம். 

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சு குருமனை பிடிச்சு ராணுவத்திற்கு முன்னால் நிக்க வைத்த கொடுமையை நாடுகள் ராணுவ ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்பிட்டு நியாயப்படுத்துவது கேவலத்திலும் கேவலம். 

நாடுகள் ராணுவ ஆட்சேர்ப்பு செய்வதும் கேவலத்திலும் கேவலம். அந்த நாடுகளும் கட்டாயமாக பள்ளி பராயத்து குஞ்சு குருமனை (அமெரிக்காவில் பதினேழில் பிடிக்கிறார்கள்) பிடித்து ராணுவத்திற்கு முன்னால் நிக்க வைக்கும் கொடுமையை செய்கிறார்கள். எனது ஊரில் அமெரிக்காவில் எத்தனை மரண வீடுகள் இந்த குஞ்சு குருமனுக்கு? ஆப்கானிஸ்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் பெட்டியில் அடைத்து அனுப்புகிறார்கள். போர் கேவலத்திலும் கேவலம். சமாதானமாக விட்டுகொடுத்து மற்றவர்களுடன் வாழும் வழியே மேலானது. நாடுகளின் ராணுவ ஆட்சேர்ப்பை புலிகளின் ஆட்சேர்ப்பிலும் பார்க்க மேலானது என்று காட்டி நாடுகளின் போர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாதீர்கள். ஐக்கிய நாடுகள் சபையே அதை செய்யவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.