Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் அனுபவப் பகிா்வும் நன்றாக உள்ளன. படங்களைப் பாா்க்க அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. மிகுதியைத் தொடருங்கள்

  • Replies 104
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியர் துனீசியாவில் "ஹர்த்தால்" நடக்கும் போது சுற்றுலா போனீர்களா??
சந்து சனத்தையே காணவில்லையே..
என்னென்றாலும் உங்கள் துணிவுக்கு பாராட்டுகள்..
அராபிய கடற்கரை மணலில் உங்கள் "தமிழ்" பிடித்திருக்கிறது.
பெல்லி டான்சை / (டான்சரை) இன்னும் கொஞ்சம் வெவரமா, வெளா வாரியா சொல்ல மாட்டீங்களா ?
நீங்கள் எடுத்த சாப்பாட்டு படங்கள் எங்கே ? குடித்த பீர் எங்கே ? புகைத்த "சிஸா" எங்கே? உங்கள் ரூமை துப்பரவு செய்த அந்த "அழகிய லைலாவின்" போட்டோ தான் எங்கே????

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் அனைவருக்கும் ஒன்றாகவே கல்லூரி விடுமுறை வருவதால் அதனைப் பயன்படுத்திச் சுற்றுலா செய்ய எண்ணித் தேடியபோது மிகவும் மலிவாகத் துனீசியா சென்றுவரப் பயணச்சீட்டு கிடைத்தது, அதனை வாங்கிவிட்டேன் என்று தமிழ் சிறி அவர்கள் தெரிவித்தபோது ஆடித்தான் போய்விட்டோம். ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 35 க்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியின் ஈரம் காய்வதற்குள்.....  கலக்கத்துடன் கூகுளில் துனீசியாவைத் தேடினேன். மனம் ஆறுதலடைந்தது. 


மேன்மைதங்கிய தமிழ் சிறி குடும்பத்தினரின் வருகையையொட்டி அவர்களுக்கான காவல்துறைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு சிறப்புற மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

150704160628_tunisia_police_512x288_epa.

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நல்லா இருக்கு ....
கடற்கரை காட்சிகள் ஆதாரம் இல்லாமல் அநாதரவாக இருக்கிறது.

கொஞ்சம் குளிர்ச்சியா இணையுங்கள். 

ஒவ்வொரு நாளும் காலை 5:30 மணிக்கு..... சூரிய உதயத்தை காண்பதற்காகவும், அதிகாலையில்  நடப்பதற்காகவும் செல்லும் போது எடுத்த படங்கள் என்பதால்.... கடற்கரை ஆளரவமற்று இருக்கின்றது. 

தமிழ் சிறியர் துனீசியாவில் "ஹர்த்தால்" நடக்கும் போது சுற்றுலா போனீர்களா??
சந்து சனத்தையே காணவில்லையே..
என்னென்றாலும் உங்கள் துணிவுக்கு பாராட்டுகள்..
அராபிய கடற்கரை மணலில் உங்கள் "தமிழ்" பிடித்திருக்கிறது.
பெல்லி டான்சை / (டான்சரை) இன்னும் கொஞ்சம் வெவரமா, வெளா வாரியா சொல்ல மாட்டீங்களா ?
நீங்கள் எடுத்த சாப்பாட்டு படங்கள் எங்கே ? குடித்த பீர் எங்கே ? புகைத்த "சிஸா" எங்கே? உங்கள் ரூமை துப்பரவு செய்த அந்த "அழகிய லைலாவின்" போட்டோ தான் எங்கே????

கடை வீதியிலும், நகரத்திலும்  எடுத்த பெரும்பாலான படங்கள், கடந்த வியாழக் கிழமை அவர்களின் பெருநாள் விடுமுறையின் போது எடுத்தது. இங்கு நத்தார் விடுமுறை மாதிரி... வீதியில் மிகக் குறைந்த சன நடமாட்டமே இருந்தது. பெல்லி டான்ஸ் ஆட்டத்தை வீடியோவில் எடுத்ததால்.... கமெராவை கையில் தூக்க, மெய்  மறந்து விட்டேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kamz5t.jpg

2cxybnp.jpg

nb85cn.jpg

2a9d6wh.jpg

பல சரக்குக் கடையில்... மிளகாய்த் தூள்.

bdl5s.jpg

இந்த தரை விரிப்பு கடைக்காரன் பெரிய பம்மாத்துக்காரன். இவரைப் பற்றி... பின்னர் கட்டுரையில் விரிவாக எழுதுகின்றேன்.:rolleyes:

264n804.jpg

1llpx.jpg

அழகிய லைலா... கொடுத்த "ரிப்ஸ்சுக்கு" துவாயில் அன்னம் செய்து, போர்வையில்.... நீரலை போல் செய்து, நன்றி தெரிவித்துள்ளார்.:)

2val7vk.jpg

கடற் கரையில், அதிகாலை நடந்து செல்லும் போது.... நரி அல்லது ஓநாயின் காலடித் தடம் போல் உள்ளது. அருகில்... குதிரையின் காலடித் தடம்.

2cd8xgh.jpg

மாட்டிறைச்சி கடை வாசலில், அன்று வெட்டிய மாட்டின் தலையை வெட்டி தொங்க விட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வியாபார தந்திரம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

துனிசியர்கள் கடல் உணவு ருசியாக சமைப்பார்களா ??

நல்ல மீன்கள் இருக்கிறது.
கிரீஸில் நல்ல மீன் சாப்பாடுகள் மிகவும் ருசியாக சமைப்பார்கள். 
அதுக்கென்றே போகலாம் .....

  • கருத்துக்கள உறவுகள்

துனிசியா பெல்லி டான்சை வீடியோவில் பதிய மறந்த செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும் தந்து  கருத்துக்களையும் பகிர்ந்த.... யாயினி, பாஞ்ச் அண்ணை, அன்புத்தம்பி, தமிழினி, சுவி, நேசன், சேர்வயர், வாத்தியார், நந்தன்,  மருதங் கேணி, காவலூர் கண்மணி அக்கா, அபராஜிதன், சசி வர்ணம், சுவைப்பிரியன் ஆகியோருக்கு நன்றி.:)

முதல் நாள் கடலில் காலையும், மாலையும் ஆசை தீர குளித்தததால்.... அடுத்த நாள் நாம் பதிவு செய்திருந்த ஒட்டகச் சவாரிக்கு காலை 9 மணிக்கு ஹோட்டல் வாசலிருந்து பஸ் ஏற்றிக் கொண்டு போக வரும் ஆயத்தமாக நிற்கும் படி கூறியிருந்தமையால், எட்டு மணிக்கு காலை உணவை முடித்துக் கொண்டு, ஹோட்டல் வாசலில் காத்திருக்க ரஷ்யன் தம்பதியினரும், பிரான்ஸ் தம்பதியினரும், எம்முடன் பஸ்ஸில் வர இணைந்து  கொண்டார்கள். அத்துடன் ஜெர்மனில் வசிக்கும் 55 வயது மதிக்கத் தக்க  ஆப்கானிஸ்தான் மனிதரும் எம்முடன் இணைந்து கொண்டார். அவர் துனிசியாவுக்கு வந்து 5 நாட்கள் என்பதால், (பழைய காய்....grin.png) அங்குள்ள சில விடயங்கள் தெரிந்திருக்கும் என்பதால் கதையை கொடுத்து, சில விடயங்களை அறிந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில்... எமது பஸ்சும் வேறு ஹோட்டலில்  உள்ள சிலரை ஏற்றிக் கொண்டு, எம்மை ஏற்ற வந்தது. அதில் கூடுதலாக அல்ஜீரிய நாட்டு இளைஞர்கள்  இருந்தார்கள். பிரான்ஸ் தமிழர்கள்  இவர்களை "அடையார்கள்" என்று சொல்வதை, மனதில் நினைத்து சிரித்துக் கொண்டேன். நான் படம் எடுத்த படி கடைசியாக ஏறியதால்.... எனக்கு பஸ் சாரதிக்கு அருகில் இடம் கிடைத்தது.. இன்னும் வசதியாக போய் விட்டது. பஸ் சாரதி நன்றாக ஆங்கிலமும், ஜெர்மன் மொழியும் கதைத்தார். குண்டு வெடிப்பின் பின்... உல்லாச பிரயாணிகளின் வீழ்ச்சியால்.. பல ஹோட்டல்கள் மூடி, பலரின் வேலை பறி போய்விட்டது என்று கவலைப் பட்டார். 

எமது  பஸ் ஒரு மணித்தியாலம் அளவில் உள்ளுர் வீதிகளின் ஊடாக ஓடும் போது... பல கிராமங்களை பார்த்துச் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. வசதியான வீடுகளில்..... எமது ஊரில் வளரும் குண்டு மல்லிகை, முல்லை, சிதம்பரத்தை, வாதராணி, வாழை போன்ற மரங்களை தோட்டத்தில்  நட்டு அழகு படுத்தியிருந்தார்கள். ஒட்டகம்   ஓடும் இடத்திற்கு எமது  பஸ் வந்து விட்டதாக கூறி... பஸ்ஸை சாரதி நிற்பாட்டி விட்டு, ஒட்டகத்தின் உரிமையாளரை தேடினால்.... அவர் வேறு அலுவலாக எங்கோ போய் விட்டதாகவும், அவரை தேடிப் பிடிக்க... அருகில் விசாரித்தும் தகவல் இல்லாததால்... அவர்  கைத்தொலை பேசியின் மூலம் முயற்சித்துக் கொண்டு இருக்க... அரை மணித்தியாலம் ஆகிவிட்டது. நாம்... அந்தச் சூழலை ரசித்துக் கொண்டிருக்க... அல்ஜீரிய இளைஞர்கள் பொறுமை இழந்து, பஸ் சாரதியை அரபு மொழியில்  திட்டிக் கொண்டு இருக்க..... ஒட்டகக்காரர்  வந்து விட்டார். அல்ஜீரியரிடம் வாங்கிய பேச்சை, இப்போ... பஸ் சாரதி, ஓட்டக் காரருக்கு பரிமாற்றம் செய்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். grin.png

அங்கு நிற்கின்ற ஒட்டகம் எட்டு. நாங்கள் பதினைந்து பேர். ஒரு ஒட்டகத்தில் இருவர் பயணம் செய்ய வேண்டும் என்று... ஒட்டகக்காரர் சொன்னது எமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. அல்ஜீரியன் தங்களுக்கு தனித்தனியே.... பயணம் செய்ய ஒட்டகம் வேணும் என்று.... அடுத்த பிரச்சினையை கிளப்பி... பஸ் சாரதியுடனும், ஒட்டகக் காரரிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். பின்பு... அவர்கள் போகும் போது குதிரை வண்டிலில் வருவதாகவும், திரும்பி வரும் போது... தனியே, தாங்கள் ஒரு ஒட்டகத்தில் வர வழி செய்ய வேண்டும் என்று, ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் அரபு மொழியில் சண்டை பிடிப்பதை... அவ்வப் போது, பஸ் சாரதி எனக்கு மெல்லிய குரலில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்ததால்.... சண்டை சுவாரசியமாக இருந்ததுgrin.png.அல்ஜீரியன்.... எல்லாரும், நெடுக பிரச்சினை பண்ணுவார்களாம். மற்றவர்களை சமாளித்தாலும், அவர்களை திருப்திப் படுத்துவது கஸ்ரம் என்று, சாரதி சொன்னார்.

இப்போ... ஒட்டகத்தில் ஏறி பயணத்தை ஆரம்பித்த போது... மற்றவர்கள் ஜாலியாக வந்தாலும், நான் ஏறிய ஒட்டகத்தின் முதுகில் இருந்த கட்டையோ, அதன் எலும்போ தெரியாது... எனது காலுக்கு இடையில் குத்திக் கொண்டு பெரிய அவஸ்தையாக இருந்தது. ஏனடா.... இதிலை ஏறினம் என்ற மாதிரி போய் விட்டது. ஒட்டகம் மணலில் ஆடி ஆடிப் போக  ஒரு  கையில் வீடியோ கமெராவும், மற்றக் கையால்.... ஒட்டகத்தையும் பிடித்திருப்பது சிரமமாக் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதிரி அரை மணித்தியாலம் சமாளித்த பின்... நான் குதிரை வண்டிக்கு மாறி விட்டேன். ஒட்டகம் போகும் வழி எங்கும் "ஒலிவ்" தோட்டங்களும், பேரீச்சை மரங்களும் நிறைந்திருந்தன. ஒலிவ் மரங்களை  அவர்கள் சொட்டு நீர்ப் பாசன  முறையில், வளர்ப்பதாக அங்குள்ள பதித்திருந்த கறுப்புக் குழாய்கள் காட்டியது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2cd8xgh.jpg

மாட்டிறைச்சி கடை வாசலில், அன்று வெட்டிய மாட்டின் தலையை வெட்டி தொங்க விட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வியாபார தந்திரம். 

இருந்தாலும் மறி ஆட்டுக்கு...கிடாய் ஆட்டின்ர ஒரு பகுதியைக் கட்டித்தூக்கி விக்கிற நம்மட ஆக்களின்ர வியாபாரத் தந்திரத்துக்குக் கிட்ட வராது! :mellow:

 

தொடருங்கள்.. தமிழ் சிறி...!

 

நீங்கள் வலு உயரமான ஆளாய் இருப்பீங்கள் போல கிடக்குது..!

சப்பாத்து யூறோ சைஸ் 43.

இப்ப எல்லாமே வெளிக்குது....!:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் மறி ஆட்டுக்கு...கிடாய் ஆட்டின்ர ஒரு பகுதியைக் கட்டித்தூக்கி விக்கிற நம்மட ஆக்களின்ர வியாபாரத் தந்திரத்துக்குக் கிட்ட வராது! :mellow:

தொடருங்கள்.. தமிழ் சிறி...!

நீங்கள் வலு உயரமான ஆளாய் இருப்பீங்கள் போல கிடக்குது..!

சப்பாத்து யூறோ சைஸ் 43.

இப்ப எல்லாமே வெளிக்குது....!:cool:

எதனை வைத்து, உயரமான ஆள் என்று கணித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது, புங்கையூரான். grin.png

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படத்தில் உள்ள நிழல், கடற்கரை கால்தடம் 

எதனை வைத்து, உயரமான ஆள் என்று கணித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது, புங்கையூரான். grin.png

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டகத்தில் ஏறி   அமர்வதானால் சும்மாவா நல்ல உயரமானவர்கள் தான் ஒட்டகத்தில் இலகுவாக ஏற முடியும்.

  ஆனாலும் ஒட்டகத்துடன் ஒரு படத்தைப் போட்டால்த்தான் நாங்கள் நம்புவோம்

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

விடுமுறையை எது வித பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக நாடு திரும்பியமைக்கு சந்தோசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படத்தில் உள்ள நிழல், கடற்கரை கால்தடம் 

புங்கை சொன்னமாதிரி, சப்பாத்து 43´ம் இலக்கம் தான்... ஆனால், வலு உயரமான ஆள் இல்லை. சாதாரண தமிழனின் உயரம் தான். 
காலைச் சூரியனின், கதிர்களால் நிழல் நீளமாக தெரிகின்றது மீரா.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை சொன்னமாதிரி, சப்பாத்து 43´ம் இலக்கம் தான்... ஆனால், வலு உயரமான ஆள் இல்லை. சாதாரண தமிழனின் உயரம் தான். 
காலைச் சூரியனின், கதிர்களால் நிழல் நீளமாக தெரிகின்றது மீரா.

அப்படியானால்... வீட்டுக்குள்ள உயரமான மனுஷன் போல கிடக்குது...தமிழ் சிறி!:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டகத்தில் ஏறி   அமர்வதானால் சும்மாவா நல்ல உயரமானவர்கள் தான் ஒட்டகத்தில் இலகுவாக ஏற முடியும்.

  ஆனாலும் ஒட்டகத்துடன் ஒரு படத்தைப் போட்டால்த்தான் நாங்கள் நம்புவோம்

ஒட்டகத்தில் ஏற்றியும், இறக்கியும் விட... அங்கு இரு உதவியாளர்கள் நிற்கிறார்கள்.
உங்களை,  நேரில் சந்தித்த பின்பும்... உயரமான ஆள் என்று சொல்லக் கூடாது.
வாத்தியார், வேறு படங்கள்... பார்க்க, பிளான் போடுறார் என்று மட்டும் தெரியுது.grin.png

அப்படியானால்... வீட்டுக்குள்ள உயரமான மனுஷன் போல கிடக்குது...தமிழ் சிறி!:cool:

வீட்டுக்குள், மகன் தான்... என்னை விட  உயரம்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ.... இங்கு வேலை ஆரம்பித்து விட்டதால், இந்தப் பயண அனுபவங்களை விரைவில் முடிப்போம் என்று எண்ணிய போதும்.... உங்களின் ஆர்வமும், ஊக்கமும்... என்னை அப்படிச் செய்ய விடாமல் தடுக்கின்றது. அதற்காகத் தன்னும் கூடிய வரை தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.
அன்புத்தம்பி, அர்ஜூன், தமிழினி, நந்தன், யாயினி, நுணாவிலான்,  மீரா, வாத்தியார், ஈழப்பிரியன், புங்கையூரான் ஆகியோருக்கு நன்றி.:)

எமது ஒட்டகப் பயணம் முடிந்த பின்பு.... 5 நிமிடமளவில் கால்நடையாக நடந்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றோம். அங்கு துனிசிய முறைப்படி ரொட்டி தயாரிக்கும் முறையை ஒரு பெண் மணி செய்து காட்டினார். அந்த ரொட்டியில் ஒரு துண்டை, சலாட்டுடன் சாப்பிட்டு விட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் பஸ் சாரதியின் நகைச்சுவையும், அவரின்  அபரிதமான அறிவும் எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவர் எம்மை ஹோட்டல் வாசலில் இறக்கியவுடன் அவருக்கு அன்பளிப்பாக சிறிது பணத்தை கொடுத்த போது... மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

இப்போ.... இரண்டு மணி ஆகி விட்டதால், அங்கு சாப்பிட்ட ரொட்டி திருப்தி அளிக்காததால்.... நேராக ஹோட்டல் உணவகத்துக்குச் சென்று, மீன் வகைகளில் செய்யப் பட்ட உணவுகளை சாப்பிட ஆரம்பித்தோம். மனைவி... செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி போன்ற நாட்களில் மரக்கறி உணவையே..... எடுத்துக் கொண்டார். சுற்றுலா வந்த இடத்தில்... இதுகள் எல்லாம் பார்க்கக் கூடாது என்ற போதும்... அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.உமக்கு கொடுத்து வைச்சது... கத்தரிக்காயும், பூசனிக்காயும்  தான் என்று விட்டு, நாம் எமது உணவுகளை வயிறார ஒரு பிடி பிடித்தோம்.

உணவு முடிந்த பின், அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு, கடற்கரையை நோக்கி கிளம்பினோம். அங்கு குளிப்பதும், கரைக்கு  வந்து, கண்ணை மூடிக் கொண்டு  சூரியக் குளியல் எடுப்பது மிக இதமாக இருந்தது. எமது தோலின் நிறமும்... மெல்ல மாறத் தொடங்கியிருந்ததை அவதானித்தோம். மாலை ஆறு மணி நெருங்க... வெள்ளைக்காரர்களும் ஹோட்டலுக்கு புறப்பட ஆயத்தமானார்கள். பலரும் பாதுகாப்பு கருதி அங்கு இருப்பதை விரும்பவில்ல. நாமும் எமது ஹோட்டலுக்குச் சென்று... மேலில் பட்ட உப்பு போக, நல்ல தண்ணீரில் குளித்து விட்டு, இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, திறந்த வெளி மேடைக்குச் சென்று அங்கு நடக்க இருக்கும் மந்திர வித்தை நிகழ்ச்சியை காண ஆயத்தமானோம். அப்போது....

  • கருத்துக்கள உறவுகள்

tourist-emoticon.gif

உலகம் இன்று கதை, கட்டுரை என்று எழுதுவோரால் நிரம்பி வழிந்தாலும், வாசகர்களை அந்தக் கதைகட்டுரைகளில் வரும் பாத்திரங்களாகவே மாற்றிவிடும் திறனை  ஒருசிலரிடம் மட்டுமே காணமுடியும். தமிழ் சிறி அவர்களுடைய பயணக் கட்டுரையும் வாசகர்களைப் பயணச் செலவுகள் எதுவுமின்றித் துனிசீயாவிற்கு அழைத்துச் சென்று சுற்றுலாச் செய்ய வைத்துள்ளது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ்யமாக பயண அனுபவங்களை தொகுத்து தருவது வாசிக்க இலகுவாக இருக்கின்றது.

துனிசியாவுக்கு போகவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்வுகளுடன், ஊக்கமும் தந்த.... பாஞ்ச் அண்ணை, கிருபன், ஆதவன், ரதி, அபராஜிதன், புங்கையூரான், நந்தன், கிருபன் ஆகியோருக்கு நன்றி.:)

திறந்த வெளி அரங்கில் நடக்க இருக்கும், மந்திர வித்தை நிகழ்ச்சியை காண ஆயத்தமான போது... ஒரு துனீசியர் அருகில் வந்து, தான் எம்மை நகரத்தில் உள்ள கடை, சந்தை போன்றவற்றை தனது மினி பஸ்ஸில் கூட்டிச் சென்று சுற்றிக் காட்டுவதாகவும், அத்துடன் தரை விரிப்பு தயாரிக்கும் இடத்தையும் பார்வையிடலாம் என்றும், தனக்கு போக, வர 20 தினார் (அண்ணளவாக 10 €) தந்தால் போதும் என்றார். எமக்கும்  நகரப் பகுதியை பார்க்கும் ஆவல் இருந்ததாலும் பணமும் அவர் பெரிதாக கேட்கவில்லை என்பதால் நாம் வருவதாக சொல்லி விட்டு அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தோம். 

அந்த நிகழ்ச்சி பாராட்டும் படியான பெரிய வித்தைகள் அல்லாமல்.... ஆணியில் படுப்பது, நெருப்பு கக்குவது போன்ற சாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும் எமது பின் மாலைப் பொழுதை  போக்குவதற்கு அது பிரயோசனமாக இருந்தது. ஆணியில் படுக்கும் போது... எமது பிள்ளைகளை வந்து அவரின் வயிற்றின் மேல் ஏறி நிற்க, அவரின் பெண் உதவியாளர் அழைத்துச் சென்றார். இடையிடையே... நடக்கும்  காட்சி மாற்றங்களின் போது.... மாலை நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான நபர், அவர்களுடன் சேர்ந்து நடனமாடி, பிள்ளைகளையும் அதில் இணைத்துக் கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில்... ஹோட்டேல் பாரில், இலவசமாக மதுபானங்கள், குளிர் பானங்கள், கோப்பி போன்றவற்றை எவ்வளவும் வாங்கிக் குடிக்கலாம். எனக்கு பியர் குடிக்கும் மூட் வராததால்.... குளிர் பானத்தை மட்டுமே வாங்கிக் குடித்தேன்.(சத்தியமாக நம்புங்கgrin.png) நிகழ்ச்சி முடிந்த பின் அசதியாக இருந்ததால். படுக்கைக்கு சென்று விட்டோம்.

வீட்டிலேயே அதிகாலை நான்கு மணிக்கு எழும்பும் நான்.... அங்கும் அப்படி அதிகாலையில் எழும்பி, முகத்தை கழுவி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தொலைக்காட்சியை போட... மனைவி தனது நித்திரை குழம்பிய ஆத்திரத்தில், என்ன இழவுக்கு.... இப்ப எழும்பி இருக்கிறியள்? என்று என்னை திட்டி விட்டு, சுருண்டு படுத்து விட்டார். மற்றவர்களின் நித்திரையை குழப்பினால்... பாவம் என்று விட்டு, நான் தொலைக்காட்சியை அணைத்து விட்டு. கால் சட்டையை போட்டுக் கொண்டு பல்கனியில் இருக்க, கிழக்கு வானம் சிவந்து... சூரியன் வரும் அறிகுறி தெரிந்தது, உடனே.... கமெராவை தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு கிளம்பிச் செல்ல வெளியே வந்தபோது... வரவேற்பாளர் அரைத் தூக்கத்தில் இருந்தார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லி, கடற்கரைக்குப் போகின்றேன் என்று சொல்லி விட்டு வெளி வாசலுக்கு வந்த போது அங்கிருந்த வாசல் காவலாளி, கதவைப் பூட்டி விட்டு... தனது சிறிய அறையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். அவரையும் பெரிய குரலில், காலை வணக்கம் சொல்லி எழுப்பி, கதவை திறக்க வைத்து வெளியே வந்தேன். இன்று மூன்று பேரின்... நித்திரையை குழப்பிய 20.gif பாவத்தை சுமந்து கொண்டு கடற்கரையை நோக்கி சென்றேன்.

கடற்கரை ஆளரவமற்று... சிறிய அலைகள் அடிக்கும் சத்தத்துடன் மிக அமைதியாக இருந்ததை அந்த மணலில் நின்று ராசிக்குக் கொண்டெ இருந்தேன். சரியாக 6:05 மணி போல கிழக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சூரியன் வரத் தொடங்கினான். அந்த ஒவ்வொரு கணங்களையும் ரசித்து, எனது கமராவில் பதிவு செய்து கொண்டேன். சரியாக ஐந்து நிமிடத்தில் முழுச் சூரியனும் வெளியே  14.gif வந்து கடல் தங்க நிறம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது. அப்படியே.... எனது செருப்பை ஓரமாக வைத்து விட்டு, வெறுங்காலுடன் மணலில் கடற்கரையோரமாக நீண்ட தூரம் நடந்து செல்ல, நல்ல இதமாக இருந்தது. இரவு முழுக்க அலையால் கரைக்கு அடித்து வரப் பட்ட, சில வித்தியாசமான சிப்பிகளை பொறுக்கி, பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டேன். மக்கள் நடமாட்டம்  ஏற்பட்ட பிறகு இந்தச் சிப்பிகளை காணக் கிடைக்காது. நல்ல நடையுடன்,  அழகிய காட்சிகளையும் கண்ட திருப்தியுடன் எட்டு மணி போல் ஹோட்டலுக்கு திரும்ப மற்றவர்களும் எழும்பி, காலை உணவுக்குப் போக என்னை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலேயே அதிகாலை நான்கு மணிக்கு எழும்பும் நான்.... அங்கும் அப்படி அதிகாலையில் எழும்பி, முகத்தை கழுவி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தொலைக்காட்சியை போட... மனைவி தனது நித்திரை குழம்பிய ஆத்திரத்தில், என்ன இழவுக்கு.... இப்ப எழும்பி இருக்கிறியள்? 

இது எல்லாருக்குமே வயது போகப் போக வாற பிரச்சனை தான்...!tw_dissapointed_relieved:

அது ஏன் உங்களுக்கு வருகுது எண்டு தான் விளங்குதில்லை!tw_dizzy:

தொடர்ந்து எழுதுங்கள்...அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கை , அவருக்கும் வயது போய்க் கொண்டுதானே இருக்குது...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னது  சிறியருக்கு வயசு போட்டுதா tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.