Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! - நாடாளுமன்றில் மாவை எச்சரிக்கை ..

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! - நாடாளுமன்றில் மாவை எச்சரிக்கை

"மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்'' என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் காணி மீட்டுப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என எச்சரித்த அவர், காணி விடுவிப்பு விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில், "வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக மக்களின் வாக்குகளினால்தான் இந்தச் சபையில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இதனை மறந்துவிடக்கூடாது. அமைச்சர் சுவாமிநாதனிடம்தான் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சு ஒப்படைக்கப்படவேண்டும் என நாம் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தோம். அத்துடன், அமைச்சர் சுவாமிநாதனுடன் 100இற்கு 200வீதம் ஒத்துழைத்து செயற்படவும் நாம் தயாராக இருந்தோம். ஆனால், சுவாமிநாதனோ இன்று எம்மை அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி, தன்னிச்சையாகச் செயற்படுவதுடன், வடக்கு, கிழக்கு விடயங்களில் தனித்துப் பயணிக்கவும் முற்படுகின்றார்.

வடக்கைப் பொறுத்தவரை பனைவளம் மிக முக்கியமானதாக உள்ளது. பனைவளத்துடன் தொடர்புடைய பல தொழில்முயற்சிகளும், பெருமளவு மக்களும் இங்கு உள்ளனர். எனவே, வடக்கிலுள்ள பனை அபிவிருத்தி அதிகாரசபையை சிறப்பாகச் செயற்பட வைப்பதற்காக அதன் தலைவராக அந்தச் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பனைவளம் தொடர்பில் ஆழமான அறிவுகொண்ட பேராசிரியர் மோகனதாஸை நியமிக்குமாறு சிபார்சு செய்திருந்தோம். ஆனால், அதனைப் புறக் கணித்த அமைச்சர் தன்னிச்சையாக, பனைவளங்களுடன் தொடர்புபடாத அது தொடர்பான அறிக்கை கொண்டிராத ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபைத் தலைவராக நியமித்துள்ளார். இது குறித்து நாம் கவலையடைகின்றோம். இதுபற்றி மக்கள் எம்மிடம் கேள்வி கேட்கின்றனர். எனவே, நாம் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஒவ்வொரு அபிவிருத்தியிலும், எந்தவொரு நடவடிக்கைகளிலும் எம்முடன் பேசப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம். இதேவேளை, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயப்படுத்தி அதன்மூலம் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி பௌத்தமயமாக்கி, தமிழர்களுக்குப் பூர்வீக இடங்கள் இல்லையெனக் காட்டி தமிழர் அரசியல் எதிர்காலத்தை அழிப்பதே மஹிந்த சிந்தனையின் இலக்கு. இந்நிலையில், தமது சொந்த இடத்தில் வாழும் உரிமை வேண்டும் என்பதற்காகவே ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கான உறுதிமொழிகளை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கியிருந்தனர். ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. யாழ். குடாநாட்டில் 11 அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் 2 இலட்சம் பேர் இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள 155 அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேர் அகதிகளாகவுள்ளனர். இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் சொந்த வீடுகளிலே வாழவே விரும்புகின்றனர். ஆனால், இந்த மக்களின் காணிகள், வீடுகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மக்களின் அகதிவாழ்க்கை அப்படியே தொடர்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றோம். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் எமக்குக் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மஹிந்த அரசுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல மீண்டும் காணி மீட்புப் போராட்டத்தில் இறங்குவோம். இதேவேளை, இராணுவத்தினரிடம் காணிகளைப் பறித்துக்கொடுத்த பலர் யுத்த சூழ்நிலைகளால் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர். இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி, எமது தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தச் சபையில் வலியுறுத்துகின்றேன்'' என்றார். - 

http://www.malarum.com/

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் எமக்குக் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மஹிந்த அரசுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல மீண்டும் காணி மீட்புப் போராட்டத்தில் இறங்குவோம்.

http://www.malarum.com/

என்னது மகிந்தவின் காலத்தில் போராடியது மாதிரியா??
சிரிப்பு அடக்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பொடி வைச்சுப் பேசுறதில கில்லாடி. என்ன போராட்டம் என்று கேளுங்க.. மதில் மேல் குந்தி இருப்பது என்று சொல்லுவார். tw_blush::rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மாவை ஐயா! 
நீங்கள் போராட்டம் வெடிக்கும் எண்டுறியள்!!!! 
இஞ்சை இருக்கிற பெரிய ஆக்கள்  அங்கை சுமுகமான நிலைக்கு வந்து கொண்டிருக்கெண்டு சொல்லீனம்.....
றோட்டுகள் எல்லாம் போடுறாங்கள் எண்டு சொல்லீனம் 
ஆமி புடிச்சு வைச்சிருக்கிற பிரதேசம் கொஞ்சத்தாலை விடுவாங்கள் எண்டு சொல்லீனம் புலியளாலை வந்த பிரச்சனையை சிலோவாய்த்தான் தீர்க்கலாம் எண்டு சொல்லீனம் ஆமியளிட்டை ஆயுத இல்லை எண்டு சொல்லீனம்  
சிங்களத்தோடை ஒற்றுமையாய் வாழோணும் எண்டு சொல்லீனம் 
மைத்திரி நல்லவர் எண்டு சொல்லீனம் 
மகிந்த துலைஞ்சது நல்லதெண்டு சொல்லீனம் 
அமெரிக்கா நல்லது செய்யப்போகுதெண்டு சொல்லீனம்  
இனவாதம் கதைக்கிறவனை உள்ளுக்கை போடப்போறாங்கள் எண்டு சொல்லீனம் 
ஓடி வந்தவைக்கு சொந்தமண்ணை பற்றி கதைக்க உரிமை இல்லை எண்டு சொல்லீனம் கதைச்சால் வடலி கேஸ் எண்டு சொல்லீனம் 
எதிர்கட்சி தலிவர் பதவி பொன்னானது எண்டு சொல்லீனம்  
ஐநா கூட்டத்தொடர் வெற்றி எண்டு சொல்லீனம்  
ஏன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை  எண்டு முற்றுப்புள்ளியும் வைக்கினம்.
நீங்கள் என்னடாவெண்டால் வெடிக்கும் எண்டுறியள்!!!!!!  explosion_e0.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய வில்லங்கமா இருக்கு. நிர்வாகம் ஒரு திரியை ஆதாரமில்லை எண்டு நீக்க. அதையே முகவரியில்லாத இணையம் ஒன்றில் செய்தியாகப் போட்டு பிறகு இங்க ஆதாரமா இணைக்கவேண்டிய கையறு நிலை வந்திட்டுது. இதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதாரமில்லாத செய்திகளை இணைப்பதற்கு இது துணை போய்விடக்கூடும். 

சரி இந்தச் செய்தி தொடர்பாக, மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்கள் தமது உரிமைகளை போராடிப் பெற்றுக் கொள்ளுவது வழமை. போராட்டம் எண்டதும் எங்களுக்கு துவக்காலை சுடுறதும், குண்டு வைக்கிறதும், மண்டையில போடுறதும் தான் நினைவுக்கு வருவதில் தப்பில்லை. ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் இனச்சுதிகரிப்பும் பயங்கரவாதமும் இலைங்கையில் பேயாட்டம் ஆடின. அந்தத் தாக்கத்தில் இருந்து உடனடியாக மீண்டுவரமுடியாது. இங்கு மாவை குறிப்பிட்டது ஜனநாயக வழியிலான போராட்டத்தை என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

சரி வாலி சார்

மகிந்தவின் காலத்தில் மாவை அண்ணை ஜனநாயக வழியில் செய்த போராட்டங்களை ஒருக்கா எடுத்து விடுங்கள் பார்ப்போம்... கேட்போம்... வாசிப்போம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, வாலி said:

தமிழர்விடுதலைக்கூட்டணி ஜனநாயகரீதியாக போராட்டம் என்று சொன்னவுடன் சிங்கள அரசின் உதவியுடன் தமிழர்களை விரட்டியடித்த காடைத்தனமான இனக்கலவரங்கள் மறந்து விட்டதா?

யாழ் நோக்கி வந்த புகையிரதங்களையும் இதர போக்குவரத்து வாகனங்களையும் இடைநிறுத்தி இனப்படுகொலை செய்ததையும் நினைவிழந்து விட்டீர்களா?

அல்லது தமிழினம் சிறுபான்மை இனம் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

சில சிங்கள விசுவாச அரசியல் குருடர்களுக்கு கடந்த 67 வருடமாக தொடரும் சிங்கள அரச பயங்கரவாதமும்..ஒடுக்குமுறையும் இனப்படுகொலையும்.. சிங்கள ஆக்கிரமிப்பும்.. முஸ்லீம் மதப்பயங்கரவாதமும்.. முஸ்லீம் ஆக்கிரமிப்பும்.. ஞாபகம் இல்லை.. தமிழ் மக்களின் அகிம்சை.. மற்றும் ஆயுதப் போராட்டம் தான் பிரச்சனையா இருந்திருக்குது.

மாவையர்.. மதில் மேல் குந்தி இருந்து கடந்த 40.. 50 வருசமா அரைக்கும் இந்த மாவை அரைக்கத்தான் லாய்க்கு. கஜேந்திரகுமார் குலாமும் கைவிட்டுள்ள நிலையில் மாவை என்னத்தை போராடிறது. கூடக் கூச்சல் போட சம் சும் கும்பல் கூட வராது. இப்படி அறிக்கையில தான் போராட வேண்டும். ஒருத்தரும் கண்டுக்கமாட்டாங்க இவரை எனி. tw_blush::rolleyes:

jaffna-arppaddam-4.jpg

எனி இந்தக் காட்சியளுக்கும் வக்கில்ல. tw_blush:

protest_tna_tnfp_jaffna_010.jpg

protest_tna_tnfp_jaffna_0161.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாத்தியார் said:

சரி வாலி சார்

மகிந்தவின் காலத்தில் மாவை அண்ணை ஜனநாயக வழியில் செய்த போராட்டங்களை ஒருக்கா எடுத்து விடுங்கள் பார்ப்போம்... கேட்போம்... வாசிப்போம்....

அதுதான் முன்னுக்குச் சொல்லியிருகிறன் இனச்சுச்திகரிப்பும் பயங்கரவாதமும் இலைங்கையில் பேயாட்டம் ஆடின எண்டு. கடந்த 2015 ஜனவரி 08 வரை இந்த நிலைமையே காணப்பட்டது. இப்ப ஜனநாயகம் மீண்டும் மலர்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்க,

  • கருத்துக்கள உறவுகள்

July212015_1.jpg

எனி இதுக்கும் வக்கில்ல...! பிறகு மகிந்தவை பக்கத்தில வைச்சுக் கொண்டு தான் ரணில் மைத்திரி சந்திரிக்காவுக்கு எதிரா குந்தனும். நடக்கிற காரியமா அது. அண்ணனுன்னு எனி அரசியல் சகுனப்பிழை தான். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

இதென்ன பெரிய வில்லங்கமா இருக்கு. நிர்வாகம் ஒரு திரியை ஆதாரமில்லை எண்டு நீக்க. அதையே முகவரியில்லாத இணையம் ஒன்றில் செய்தியாகப் போட்டு பிறகு இங்க ஆதாரமா இணைக்கவேண்டிய கையறு நிலை வந்திட்டுது. இதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதாரமில்லாத செய்திகளை இணைப்பதற்கு இது துணை போய்விடக்கூடும். 

முதல் இணைத்த செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடவில்லை அது ஒன்றுதான் பிழை .

மற்றபடி மாவை வெடி செய்தி  கிளப்பினது உண்மைதான் .எனக்கு புரியவில்லை முகவரி உள்ள இணையம் முகவரி அற்ற இணையம் ,சமீபத்தில் முகவரி உள்ள இணயம் தமிழ்வின் லண்டனின் 70வீத பணக்காரர்கள் தமிழர் என்று உளறிகொட்டி மொக்கை அடி வேண்டுது .

உங்களை பொறுத்தவரை ஒரு செய்தி 10 tamil இணையத்தில் வந்தால்தான் உண்மையாக்கும்.கூட்டமைப்பின் போர்வைக்குள் உள்ள தமிழரசு கட்சியின் எத்தினை வண்டவாள செய்திகள் கடந்த இரு வருடங்களில் தமிழ் மக்களின் நன்மைக்கென அமுக்கபட்டன.பொது வெளியில் இன்று மக்களை உசுபேத்த கதைப்பதை அடுத்த மாதம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று சம்,சும்,மாவை நினைப்பது அவர்களின் அறியாமை இப்பதான் இணையம் எல்லா தரவுகளையும் நுனி விரலில் வைத்திருகின்றது புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாலி said:

இதென்ன பெரிய வில்லங்கமா இருக்கு. நிர்வாகம் ஒரு திரியை ஆதாரமில்லை எண்டு நீக்க. அதையே முகவரியில்லாத இணையம் ஒன்றில் செய்தியாகப் போட்டு பிறகு இங்க ஆதாரமா இணைக்கவேண்டிய கையறு நிலை வந்திட்டுது. இதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதாரமில்லாத செய்திகளை இணைப்பதற்கு இது துணை போய்விடக்கூடும். 

சரி இந்தச் செய்தி தொடர்பாக, மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்கள் தமது உரிமைகளை போராடிப் பெற்றுக் கொள்ளுவது வழமை. போராட்டம் எண்டதும் எங்களுக்கு துவக்காலை சுடுறதும், குண்டு வைக்கிறதும், மண்டையில போடுறதும் தான் நினைவுக்கு வருவதில் தப்பில்லை. ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் இனச்சுதிகரிப்பும் பயங்கரவாதமும் இலைங்கையில் பேயாட்டம் ஆடின. அந்தத் தாக்கத்தில் இருந்து உடனடியாக மீண்டுவரமுடியாது. இங்கு மாவை குறிப்பிட்டது ஜனநாயக வழியிலான போராட்டத்தை என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 

இதுக்குள்ள ஏன் மண்டையில போடுறதயும் இனச்சுத்திகரிப்பையும் இழுக்கிறியள். ஆரோ சொன்ன மாதிரி சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும். அறிக்கை விட்ட அவரே என போராட்டம் என்று தெளிவா சொல்லலாமே. 

இலங்கையில மக்கள் என்ன போராட்டம் செய்து தங்கள் உரிமைகளை பெறமுடியும் என்று ஒருக்கா சொல்லுங்கோவன்.

வாலி கடந்த முப்பது வருடத்தில் மட்டுமா பயங்கரவாதம் இருந்தது. அப்ப 1977 ல் சம்பந்தர் தமிழர்களை சிங்கள பயங்கரவாத அரசு கொடுமைப்படுத்துகிறது என்று புலுடா விட்டு மக்களை உசுப்பேத்தியது ஏன்? சிங்கள அரசை ஆதரிப்பவர்கள் இயற்கை மரணமடைய மாட்டார்கள் என்று சம்பந்தரின் கட்சித் தேர்தல் மேடையில்  தமிழரசு தூண்கள் பேசியது,  மண்டையில் போட ஊக்குவித்த செயல் இல்லாமல் வேறு என்ன? இப்ப குங்கும பொட்டு போடும். சம்பந்தரின் தேர்தல் மேடையில் இரத்த பொட்டு போட்டது உங்களுக்கு தெரியுமா? தமிழரசுக்கட்சி ஒன்றும் பரிசுத்தமான கட்சியல்ல. ஆயுத போராட்டத்தை ஊக்குவித்த வெறிப்  பேச்சுக்களை 1977 வரை 20 வருடங்களாக செய்த இரத்தக்கறை உள்ள கட்சிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இலங்கையில மக்கள் என்ன போராட்டம் செய்து தங்கள் உரிமைகளை பெறமுடியும் என்று ஒருக்கா சொல்லுங்கோவன்.

சுமந்திரனும் பொறுமை இழந்து விட்டோம் என்கிறார்

மாவையும்  தெளிவாக சொல்கிறார்.

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்!

என்ன 35 வருடத்துக்கு முதல் இவர்கள் சொல்லைக்கேட்டு 

தனியே விடப்பட்ட அனுபவத்தால

எவரும் இவர்கள் சொற்கேட்டு முன்னுக்கு போகப்போவதில்லை

இவர்களும் போராடப்போவதில்லை

சும்மா உசுப்பேத்தல் என்பது தமிழருக்கும் தெரியும்

அதைவிட சிங்களத்துக்கு புரியும்..

Edited by விசுகு

2 hours ago, விசுகு said:

சுமந்திரனும் பொறுமை இழந்து விட்டோம் என்கிறார்

மாவையும்  தெளிவாக சொல்கிறார்.

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்!

என்ன 35 வருடத்துக்கு முதல் இவர்கள் சொல்லைக்கேட்டு 

தனியே விடப்பட்ட அனுபவத்தால

எவரும் இவர்கள் சொற்கேட்டு முன்னுக்கு போகப்போவதில்லை

இவர்களும் போராடப்போவதில்லை

சும்மா உசுப்பேத்தல் என்பது தமிழருக்கும் தெரியும்

அதைவிட சிங்களத்துக்கு புரியும்..

தமிழரசுகட்சியின் ஏவல் நாய்களாக தாம் கைகாட்டியவர்களை மட்டும் மண்டையில் போடுபவர்களாக  இருப்பார்கள் என்ற எதிர்பரா்ப்புடன்  தமிழரசுகட்சி அரசில்வாதிகளால் வன்முறை தூண்டி வளர்தெடுக்கபட்ட இளைஞர்பேரவை  பல்வேறு ஆயுத போராட்ட இயங்கங்களாக மாறியது வரலாறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, பெருமாள் said:

முதல் இணைத்த செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடவில்லை அது ஒன்றுதான் பிழை .

மற்றபடி மாவை வெடி செய்தி  கிளப்பினது உண்மைதான் .எனக்கு புரியவில்லை முகவரி உள்ள இணையம் முகவரி அற்ற இணையம் ,சமீபத்தில் முகவரி உள்ள இணயம் தமிழ்வின் லண்டனின் 70வீத பணக்காரர்கள் தமிழர் என்று உளறிகொட்டி மொக்கை அடி வேண்டுது .

உங்களை பொறுத்தவரை ஒரு செய்தி 10 tamil இணையத்தில் வந்தால்தான் உண்மையாக்கும்.கூட்டமைப்பின் போர்வைக்குள் உள்ள தமிழரசு கட்சியின் எத்தினை வண்டவாள செய்திகள் கடந்த இரு வருடங்களில் தமிழ் மக்களின் நன்மைக்கென அமுக்கபட்டன.பொது வெளியில் இன்று மக்களை உசுபேத்த கதைப்பதை அடுத்த மாதம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று சம்,சும்,மாவை நினைப்பது அவர்களின் அறியாமை இப்பதான் இணையம் எல்லா தரவுகளையும் நுனி விரலில் வைத்திருகின்றது புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

On 16.12.2015 at 11:51 PM, nedukkalapoovan said:

சில சிங்கள விசுவாச அரசியல் குருடர்களுக்கு கடந்த 67 வருடமாக தொடரும் சிங்கள அரச பயங்கரவாதமும்..ஒடுக்குமுறையும் இனப்படுகொலையும்.. சிங்கள ஆக்கிரமிப்பும்.. முஸ்லீம் மதப்பயங்கரவாதமும்.. முஸ்லீம் ஆக்கிரமிப்பும்.. ஞாபகம் இல்லை.. தமிழ் மக்களின் அகிம்சை.. மற்றும் ஆயுதப் போராட்டம் தான் பிரச்சனையா இருந்திருக்குது.

மாவையர்.. மதில் மேல் குந்தி இருந்து கடந்த 40.. 50 வருசமா அரைக்கும் இந்த மாவை அரைக்கத்தான் லாய்க்கு. கஜேந்திரகுமார் குலாமும் கைவிட்டுள்ள நிலையில் மாவை என்னத்தை போராடிறது. கூடக் கூச்சல் போட சம் சும் கும்பல் கூட வராது. இப்படி அறிக்கையில தான் போராட வேண்டும். ஒருத்தரும் கண்டுக்கமாட்டாங்க இவரை எனி. tw_blush::rolleyes:

jaffna-arppaddam-4.jpg

எனி இந்தக் காட்சியளுக்கும் வக்கில்ல. tw_blush:

protest_tna_tnfp_jaffna_010.jpg

protest_tna_tnfp_jaffna_0161.jpg

9 hours ago, Eppothum Thamizhan said:

இதுக்குள்ள ஏன் மண்டையில போடுறதயும் இனச்சுத்திகரிப்பையும் இழுக்கிறியள். ஆரோ சொன்ன மாதிரி சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும். அறிக்கை விட்ட அவரே என போராட்டம் என்று தெளிவா சொல்லலாமே. 

இலங்கையில மக்கள் என்ன போராட்டம் செய்து தங்கள் உரிமைகளை பெறமுடியும் என்று ஒருக்கா சொல்லுங்கோவன்.

9 hours ago, trinco said:

வாலி கடந்த முப்பது வருடத்தில் மட்டுமா பயங்கரவாதம் இருந்தது. அப்ப 1977 ல் சம்பந்தர் தமிழர்களை சிங்கள பயங்கரவாத அரசு கொடுமைப்படுத்துகிறது என்று புலுடா விட்டு மக்களை உசுப்பேத்தியது ஏன்? சிங்கள அரசை ஆதரிப்பவர்கள் இயற்கை மரணமடைய மாட்டார்கள் என்று சம்பந்தரின் கட்சித் தேர்தல் மேடையில்  தமிழரசு தூண்கள் பேசியது,  மண்டையில் போட ஊக்குவித்த செயல் இல்லாமல் வேறு என்ன? இப்ப குங்கும பொட்டு போடும். சம்பந்தரின் தேர்தல் மேடையில் இரத்த பொட்டு போட்டது உங்களுக்கு தெரியுமா? தமிழரசுக்கட்சி ஒன்றும் பரிசுத்தமான கட்சியல்ல. ஆயுத போராட்டத்தை ஊக்குவித்த வெறிப்  பேச்சுக்களை 1977 வரை 20 வருடங்களாக செய்த இரத்தக்கறை உள்ள கட்சிதான். 

7 hours ago, விசுகு said:

சுமந்திரனும் பொறுமை இழந்து விட்டோம் என்கிறார்

மாவையும்  தெளிவாக சொல்கிறார்.

மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்!

என்ன 35 வருடத்துக்கு முதல் இவர்கள் சொல்லைக்கேட்டு 

தனியே விடப்பட்ட அனுபவத்தால

எவரும் இவர்கள் சொற்கேட்டு முன்னுக்கு போகப்போவதில்லை

இவர்களும் போராடப்போவதில்லை

சும்மா உசுப்பேத்தல் என்பது தமிழருக்கும் தெரியும்

அதைவிட சிங்களத்துக்கு புரியும்..

நாம் சரி பிழைகளை சிந்திக்கின்றோம். சிந்திக்கும் மனப்பான்மை எம்மிடம் தாராளமாக இருக்கின்றது.
ஆனால்....
எதிர்க்கருத்து சொல்பவர்கள் எவ்வித சிந்தனைகளும் இல்லாமல்...... 
எந்தவொரு நல்வழிகருத்துக்கும் எதிர்ப்பாட்டு பாடுபவர்களாகவே இருக்கின்றார்கள்.
இங்கு வந்து நற்கருத்து கூறியவர்களுக்கு நன்றி சொல்லவில்லை. இது உங்கள் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2015 at 4:40 AM, வாலி said:

அதுதான் முன்னுக்குச் சொல்லியிருகிறன் இனச்சுச்திகரிப்பும் பயங்கரவாதமும் இலைங்கையில் பேயாட்டம் ஆடின எண்டு. கடந்த 2015 ஜனவரி 08 வரை இந்த நிலைமையே காணப்பட்டது.

வாவ் .......புலிகள் தானே இனச்சுத்திகரிப்பு செஞ்சவைகள் .....அவர்கள் 2009 ஓட காலி, அதுக்குப்பிறகு இனச்சுத்திகரிப்பு செஞ்சது ஆரு .....அதாவது 2009 இலிருந்து  2015 வரை சுத்திகரிச்சது யாரெண்டு தெரிஞ்சாகணும் ....இப்படி ஒரு குற்றம் சுமத்த உங்களிடம்  ஆதாரம் இருக்கா ......?
உங்கட தலயே ஆதாரமில்லாமல் இந்த வசனத்தை உச்சரிக்க முடியாது என்று சொல்லும்போது ....நீங்கள் எப்படி ஆதாரமில்லாமல் அசால்டாக இப்படி சொல்லலாம்.....?......நாம என்ன எழுதினோம் என்பதை நாமே ஞாபகம் வைத்திருப்பது நல்லது .....அத விட்டுப்போட்டு இப்படி உளறப்படாது ..
 
Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மைத்திரி யாழ் வந்த போது இவர் போய் பதுங்கிட்டார். ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தி மீள்குடியேற்ற தாமதங்கள் காணி விடிவிப்பில் உள்ள அசமத்தனங்கள் பற்றி ஒரு ஊடக கவனத்தை ஈர்த்திருக்கலாம். அதன் மூலம் மைத்திரி அரசுக்கு ஒரு சின்ன நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கலாம். குறிப்பாக சர்வதேச சமூகத்திற்கும் இனங்காட்டி இருக்கலாம். ஆனால்.. மைத்திரி வந்து படங்காட்ட அனுமதித்துவிட்டு இன்னும் 6 மாதத்துக்கு காத்திருக்கப் போகிறார்கள்.

காணி விடிவிப்பு... மீள்குடியேற்றம்.. அரசியல் கைதிகள் விடுதலை.. இனப்பிரச்சனை தீர்வு... இராணுவ விலக்கல்.. பாராளுமன்ற தேர்தல் அரசியல் என்ற நிலையை தாண்டி எனி உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் என்று வந்து நிற்கப் போகிறது. இது தொடர்கதையாக இருக்கப் போகிறது. இதை வைச்சுத்தான் சிங்களவர்களும் எம்மவர்களும் எம் மக்கள் மீது சன நாய் அகத்தை கட்டவிழ்த்து விடப்போகிறார்கள். இதற்கான முஸ்தீபுதான் மைத்திரியின் வருகையும் செயற்பாடுகளும்.

வித்தியா படுகொலையின் போதும் இதே தான் நடந்தது. இந்தா விரைந்து நீதி கிடைக்கச் செய்கிறேன் என்று போனார் மைத்திரி. எம்மவர்களில் ஒரு கூட்டம் மைத்திரி வருகையை வித்தியா குடும்பச் சந்திப்பை.. கண்டு நெகிழ்ந்தது. வியந்தது. நயந்தது. ஆனால்.. இன்னும் வித்தியா படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. விசேட நீதிவிசாரணையும் இல்லை. மாறாக படுகொலையாளர்களுக்கு வசதிகள் தான் செய்யப்படுகின்றன.

எம் மக்களின் துயருக்கு கண்மூடித்தனமான சிங்கள விசுவாசமும்.. எம் அரசியல்வாதிகளின் வாய் வடை சுடுதல்களும் தான் முக்கிய காரணம். காத்திரமான செயற்பாடுகளோ.. ஒரு நீண்ட கால குறுகிய கால இலக்குகள் கொண்ட அரசியல் செயற்பாடுகளோ கிடையாது. பாவம் இந்தத் தமிழ் மக்கள்... இன்னும் எவ்வளவு காலம் தான் ஏமாற்றப்படப் போகிறார்களோ..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நேற்று மைத்திரி யாழ் வந்த போது இவர் போய் பதுங்கிட்டார். ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தி மீள்குடியேற்ற தாமதங்கள் காணி விடிவிப்பில் உள்ள அசமத்தனங்கள் பற்றி ஒரு ஊடக கவனத்தை ஈர்த்திருக்கலாம். அதன் மூலம் மைத்திரி அரசுக்கு ஒரு சின்ன நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கலாம். குறிப்பாக சர்வதேச சமூகத்திற்கும் இனங்காட்டி இருக்கலாம். ஆனால்.. மைத்திரி வந்து படங்காட்ட அனுமதித்துவிட்டு இன்னும் 6 மாதத்துக்கு காத்திருக்கப் போகிறார்கள்.

நீங்க வேற..

அவர் வெடிக்கும் என்று ஓலமிட்டு பயப்படுத்த

சிங்களம் அமைதியாக இருந்தபடி அவரது கூட்டமைப்பையே ஒவ்வொரு பக்கத்தால்

உடைச்சுக்கொண்டு   போகச்செய்யுது..

கடைசியில தனிய நிற்கப்போவதை உணராமல் ..

மாவையார் ஆச்சே

கிட்டத்தட்ட 50 வருட பாய்ச்சல் அனுபவம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.