Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

DEC 25, 2015 

sumanthiran.jpg

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் எவ்வித எழுத்து மூலமான ஒப்பந்தமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது ஏன்?

பதில்: பல எழுத்து மூல ஒப்பந்தங்கள் எமது வரலாற்றில் மீறப்பட்டிருக்கின்றன. இறுதியில், எழுத்து மூல ஒப்பந்தம் சிறிசேனவின் தோல்விக்கே வழிகோலியிருக்கும். அப்படியான ஒரு ஒப்பந்தத்தில் பயனில்லை. எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு ராஜபக்சவின் ஆட்சி எரியும் வீட்டிற்குள் இருப்பதைப் போன்றதோர் அனுபவம். அவ் எரியும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியதற்கு ஆனதைச் செய்தோம். வெற்றியும் கண்டோம்.

கேள்வி: அரசியற் கைதிகள் விடுதலை போனறதோர் சிறிய காரியத்தைக் கூட உங்களால் செய்யவிக்க முடியவில்லை. அப்படியிருக்க, இந்த அரசாங்கத்தின் மீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்: அரசியற் கைதிகள் விடயத்தில் போதுமானளவு முன்னேற்றமில்லை என்பது உண்மை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டிருக்கின்றது என்பதும் உண்மை. இதை நான் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். ஆனால் 39 பேர் பிணையில் வெளிவந்திருக்கிறார்கள். ஆகவே முன்னேற்றமிருக்கிறது. கடந்த அரசின் கீழ் 6 வருடங்களில் இது துப்பரவாக நடைபெறவில்லை.

பொதுவாக நிலைமைகளில் முன்னேற்றம் இருக்கின்றது என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். என்னை விடத் தமிழ் மக்கள் அதில் தெளிவாக இருக்கின்றனர்.

எனது நம்பிக்கை ரணில் மீதானதோ, சிறிசேன மீதானதோ அல்ல. மாறாக வந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தின் மீதானதே. மூன்று மாதங்களில் எல்லாம் முடிந்து விடுவதில்லை. நிச்சயமாக இன்னும் இந்த அரசியற் சந்தர்ப்பத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: உங்களை கதிர்காமருடன் ஒப்பிடுகின்றனரே. இதற்கு உங்கள் பதில் என்ன. இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

பதில்: சிலர் என்னைக் கதிர்காமருடன் ஒப்பிடுகின்றனர். சிலர் என்னை நீலன் திருச்செல்வம் என்கின்றனர். ஆனால் இவ் ஒப்பீடுகளூடாக சூட்சுமமாக இவர்கள் சொல்ல முனைவது நான் ஒரு தமிழ் இனத் துரோகி என்பதையே.

ஆனால் நான் எனது நிலைப்பாடுகளைத் தெளிவாகவே முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டேன். இன்று சொன்ன கருத்துக்களை நான் நீண்ட நாட்களாகவே சொல்லி வந்திருக்கின்றேன். இந்தக் கொள்கைகளை மக்கள் நிராகரிக்கும் பட்சத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகச் சொல்லியே கடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தேன். அவ்வாறு சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டும் தான். மக்கள் வலிமையான ஆணையை எனக்குத் தந்தார்கள். ஆகவே எனது போக்கும் மக்களது நிலைப்பாடுகளும் வேறுபட்டவை என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது.

இன்று இந்தக் கோஷங்களின் பின்னால் இருப்பவர்கள் மக்களால் தேர்தலில் அடியோடு நிராகரிக்கப்பட்டவர்கள். தங்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் துளியேனும் மக்களது ஆதரவை வென்றிருக்கவில்லை. இந்தத் தோல்வியின் வெளிப்பாடே இந்தச் செயற்பாடுகள் – பிறிதொன்றுமில்லை.

கேள்வி: அவுஸ்திரேலியாவில் உங்களுக்கு நடந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இதை நான் தனிமைப்படுத்தப்பட்டதோர் சம்பவமாகக் கருதவில்லை. ஜெனிவாவில், பேர்ன் நகரில், ஒஸ்லோவில், கனடாவில் வைத்து எனக்கும், சுவிட்ஸர்லாந்தில் வைத்து மாவை அண்ணைக்கும், பரீஸ் நகரில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிற்கும் எனக்கு அவுஸ்திரேலியாவில் நடந்தவை போன்ற வேறு பல சம்பவங்கள் நடந்தன. தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களுள் இவை யாவும் நடந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து ஒருவராவது தெரிவு செய்யப்பட்டிருந்தால் இவை நடந்திருக்காது.

கேள்வி: வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக்கியதில் உங்களுக்கு கணிசமான பங்கிருந்தது. அவரைத் தெரிவு செய்ததன் காரணமென்ன?

பதில்: நாம் வட மாகாண சபைத் தேர்தலை வெறுமனே மற்றொரு தேர்தலாகக் கருதிப் போட்டியிடவில்லை. நாம் வென்று ஆட்சியமைக்கக் கூடியதோர் தேர்தல் என்பதால் அதற்குத் தலைமை வேட்பாளராக யாவரும் மதிக்கக் கூடிய தகமையைப் பெற்ற, யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நபரை நியமித்தோம்.

கேள்வி: வட மாகாண சபை முதல்வராக விக்கினேஸ்வரன் தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கின்றாரா?

பதில்: நான் இது தொடர்பில் கட்சிக் கூட்டத்தில் பேசியதை பகிரங்கமாகப் பேசியதற்காக கட்சித் தலைமையால் கண்டிக்கப்பட்டிருக்கின்றேன். நான் இது மட்டில் கட்சித் தலைமையின் விதிப் படி, அதற்குக் கட்டுப்பட்டே நடக்க விரும்புகின்றேன்.

கேள்வி: அவரை விலக்குமாறு பகிரங்கமாகக் கேட்டிருந்தீர்களே?

பதில்: இல்லை. நடந்தது வேறு. தேர்தல் முடிந்து ஒரு மாத காலமாக முதலமைச்சர் தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பலர் என்னிடம் கேட்ட போதும் நான் மௌனம் சாதித்தேன். செப்டம்பர் 11 நடந்த கட்சிக் கூட்டத்திலே தான் நான் எனது நிலைப்பாட்டைச் சொன்னேன். அதை அங்கிருந்த யாவரும் ஏற்றுக் கொண்டனர். யாரும் மறுக்கவில்லை. ஆனால், இந்த விடயத்தை நிதானமாகக் கையாளும் பொறுப்பை நாம் சம்பந்தன் ஐயாவின் கைகளில் கொடுத்தோம். கூட்டம் முடிவதற்குள் நான் பேசிய விடயம் ஊடகங்களில் கசிந்துவிட்டது. அதன் பின்னர் இப்படிச் சொன்னீர்களா என என்னிடம் வினவியவர்களிடம் நான் அதை மறுக்க முடியாது. அப்படி நான் அவுஸ்திரேலியாவில் சொன்ன பதிலே புயலாக உருவெடுத்தது. கட்சிக் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு பூரண உரிமை உண்டு.

கேள்வி: வட மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: நிர்வாகத்தின் மீது நிறையவே அதிருப்தி உண்டு. இவை தொடர்பில் முதலமைச்சருடன் இணைந்தும் தனித்தும் பல கட்சிக் கூட்டங்களில் நாம் பேசியிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வட மாகாண சபையின் மீது எமக்குப் பொறுப்பு உண்டு. நாம் நினைத்தது போன்று சபை திறம்பட இயங்கவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த உண்மை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையின்றி இருப்பதால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தெரிந்தும் நீங்கள் ஒற்றுமையாக உழைக்காமல் இருப்பதேன்?

பதில்: மாற்றுக் கருத்துக்கள் ஒரு கட்சிக்குள்ளேயே இருக்கும். பல கட்சிகளின் சேர்க்கையான கூட்டமைப்புக்குள் வேற்றுமைகள் தவிர்க்கப்பட முடியாதவை. இவற்றைத் தாண்டி நாம் ஒன்றாக இயங்குவதற்கு மக்கள் தான் காரணம். எம்மை அப்படி இயங்க வைப்பது தமிழ் மக்கள் தான். இது நல்ல விடயம். மக்கள் ஒற்றுமையை எந்தளவிற்கு விரும்புகின்றனர் என்பதற்கு இது அத்தாட்சி.

ஒற்றுமை போதாது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்குவதால் தான் சர்வதேச சமூகத்திடம் நாம் ஒரே குரலாகப் பேச முடிந்திருக்கின்றது. இதனால் தான் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் உட்பட – வீட்டுத் திட்டம், காணி விடுவிப்பு என்பன – பல விடயங்கள் சர்வதேச தலையீடு, அனுசரனையுடன் தீர்க்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி: இந்த அரசாங்கம் புதியதோர் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தப் போவதாகச் சொல்லி வருகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தரப்பின் உள்ளீடு என்ன?

பதில்: தேர்தல் முறையிலோ, ஜனாதிபதி முறைமையிலோ மாற்றத்தை ஏற்படுத்த புதிய அரசியலமைப்பு அவசியமல்ல. அரசியலமைப்பின் சில அடிப்படைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கும், அரசாங்கத்திற்கும் புரிதல் இருக்கின்றது. இந்த அரசியலமைப்பு வரைபில் எமது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

இது வரை அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், எவ்வாறு இந்த அரசியலமைப்பினை நிறுவுவது என்பது தொடர்பில் திட்டங்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கென steering committee ஒன்று உருவாக்கப்படும். அந்தக் குழு தான் வரைபினை முன்னெடுக்கும். வரும் ஜனவரி தொடங்கி 6 – 12 மாத கால இடைவெளியில் இந்தச் செயன்முறை பூர்த்தியாக்கப்படும்.

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே. நாம், முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காரியம் கை கூடும். நாம் யதார்த்த பூர்வமாக நடக்க வேண்டும். சில சொற்பதங்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எவரும் பீதியைக் கிளப்புவதற்கு இடமளிக்கக் கூடாது. யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்.

வரவிருக்கின்ற அரசியலமைப்பு மக்கள் முன் வைக்கப்பட்டு வெகுஜன வாக்கெடுப்பு மூலம் அனைத்து மக்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதை நாங்களே கோரியிருக்கின்றோம். எமது நிலைப்பாடுகள் நாட்டில் நிச்சயம் பேசப்பட வேண்டும். ஏற்ற காலத்தில், ஏற்ற விதத்தில் வெளிப்படையாகவே பேசப்பட வேண்டும்.

http://www.puthinappalakai.net/2015/12/25/news/12247

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

"ஆனால் நான் எனது நிலைப்பாடுகளைத் தெளிவாகவே முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டேன். இன்று சொன்ன கருத்துக்களை நான் நீண்ட நாட்களாகவே சொல்லி வந்திருக்கின்றேன்."

அப்படியாயின் கூட்டமைபுக்கென்ற கொள்கையோடு போட்டியிடவில்லை. தனநபர்கொள்கைகளை முன்வைத்து வென்றவரா?

6 hours ago, கிருபன் said:

"வரவிருக்கின்ற அரசியலமைப்பு மக்கள் முன் வைக்கப்பட்டு வெகுஜன வாக்கெடுப்பு மூலம் அனைத்து மக்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதை நாங்களே கோரியிருக்கின்றோம்.

சிங்களவரைப் பெரும்பான்மையாகவும் தமிழருக்கு எதிராக எப்போதும் செயற்படும்  கணிசாமான முஸ்லிம்களையும் கொண்ட இலங்கைத்தீவில் இது சாத்தியமா?

http://www.puthinappalakai.net/2015/12/25/news/12247

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

சிங்களவரைப் பெரும்பான்மையாகவும் தமிழருக்கு எதிராக எப்போதும் செயற்படும்  கணிசாமான முஸ்லிம்களையும் கொண்ட இலங்கைத்தீவில் இது சாத்தியமா?

ஒரு போதும் இல்லை

இதனால் தான் ஆயுதப்போராட்டமே ஆரம்பமானது.

அதனைத்தொடர்ந்து போர்க்குற்றம் இனஅழிப்பு என  குற்றங்கள் முன் வைக்கப்பட்டு 

அழுத்தங்கள் மூலமாக ஒரு தீர்வை பெற முயலப்பட்டது

ஆனால் அவை அனைத்தும் காணாமல் செய்யப்பட்டு

இப்பொழுது சிங்களவர்கள் 

திருந்தி 

மனம் வருந்தி 

மனமுகர்ந்து

தமிழருக்கான தீர்வை தாங்களாகவே வைக்கப்போகிறார்கள் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது

நிர்க்கதியாகியுள்ள தமிழினம் 

தன் சுயத்தை இழந்து சிங்களத்துடன் ஐக்கியமாகவதற்கு

எதற்கு பேச்சுவார்த்தை?

தேர்தல்கள்:?

பிரதிநிதிகள்...???

மீண்டும் சுமந்திரன் தன்னை ஒரு யதார்த்தமாக சிந்திப்பவராக இந்த பேட்டியின் மூலம் நிரூபித்துள்ளார் .

எல்லாமே அவரர் அறிவின் அடிப்படையிலும் சிந்திக்கும் விதத்திலும் தான் தங்கியுள்ளது .

சுமந்திரன் பேட்டியில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை விளங்கமுடியாதவர்களுக்கு இனி விளங்கபடுத்துவது கஷ்டம் .

நாட்டில் உள்ள மக்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு அதனால் தான் சம்பந்தர் சீறிலங்கா கொடியை தூக்கிய பின்னரும் வெல்லவைத்தார்கள் ஆனால் ஓடிவந்தர்களின் சொல்லுக்கு ஆடிய கஜேந்திரகுமாருக்கு டக்கிளசிலும் வாக்குகள் குறையவே கிடைத்தது ஆனால் இப்பவும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று ஓடிவந்தவர்கள் குத்தி முறிவது ஏன் என்றுதான் புரியவில்லை .

நல்லதொரு பேட்டி. 30 வருடம் உயிர்களையும் உடமைகளையும் இழந்தும் எதுவும் பெறாமல் இருந்த போது கேள்வி கேட்காதவர்கள் இப்ப 3 மாதத்தில கொண்டு வா தீர்வை என்று கேட்கிறார்கள். 
பாராளுமன்ற தெர்தலில ஓட்டை சைக்கிள் ஓட்ட போய் விழுந்தவர்கள் இப்ப மறுபடியும் அதே உடைஞ்ச சைக்கிளுக்கு பேரவை வர்ணம் அடிச்சு ஓட்ட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் அங்கு ஒரு அசாதாரண சூழல் நிலவினால் இவர்களுக்கு திருப்தி.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சூதையும் சுத்துமாத்தையும் சமாளிப்புக்களையும் காலமும் மக்களும் கடந்து போவார்கள். அதுதான் நியதி. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இவரை விட மிகச்சிறந்த பேச்சாளர்களை தமிழ் மக்கள் கண்டுள்ளார்கள். தமிழ் மக்களின் தற்போதைய தேர்வு இவராக இருக்கலாம். மற்றது சிங்கள கட்சிகள், ஒட்டுக்குழுக்களுக்கு தமிழ் மக்கள் வாக்கு போட தயாரில்லை என்பதை தான் காட்டியுள்ளார்கள்.சிங்கள கட்சிகளின் சுத்துமாத்துகள் தமிழ் மக்களுக்கு தெரியாதது இல்லை. கூட்டமைப்பும்  ஒரு கட்டத்துக்கு மேல் போக முடியாது என்பதும் (அரசை வற்புறுத்தும்) மக்களுக்கு தெரியும். மொத்தத்தில் கூட்டமைப்பு எனும் கட்சிக்கே அன்றும் இன்றும் வாக்களிக்கிறார்கள்.

இதை விட மற்றவர்களுக்கு வாசிக்க தெரியாது என்பவர்களின் கருத்து வறட்சியையும் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது.
 
36 minutes ago, nunavilan said:

ஒரு டவுட்டு..புலம்பெயர் தேசிய வாலுகளின் ஆசியோடு களம் இறங்கிய கஜே கோஷ்டி ஒட்டு குழு லிஸ்டில வருமா இல்லை சிங்கள கட்சிகள் லிஸ்ட்டா? 

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வாய்ச்சவடால் விடும் தமிழரசுக்கட்சியினர் கூட்டமைப்பை விட்டு விலகி தமிழரசுக்கட்சியில் தேர்தலில் நின்று பார்க்கட்டும். புலிகளை ஏற்றுக் கொள்ளாத மாற்றுக்கருத்தாளர்களும் புலிகளை ஏற்றுக்கொள்ளாத சம்சும் கோஸ்டிகளும் ஏன் புலிகளால் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்!!!

எத்தனையோ சந்தர்ப்பங்கள்பண்டா செல்வா ஒப்பந்தம்,டட்லி செல்வா ஒப்பந்தம்.இந்தோ சிறிலங்கா ஒப்பந்தம்,ரணில் பிரபா ஒப்பந்தம் எல்லாம் இறுதியில் என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். குறைந்த பட்சம் இந்தச் சந்தர்பத்தைப் பாவித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

57 minutes ago, புலவர் said:

இந்தப் பொய்யை இன்னும் எத்தனை தடவைகள் சொல்லப் போகின்றார்கள்? இப்படி தொடர்ந்து சொல்லிக் கொள்வதால் வரலாறு இதை நம்பிவிடும் என்று நினைக்காதீர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழக புத்திசீவிகளினதும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர்கள் மற்றும் மதகுருக்களினதும் முயற்சியினால் உருவாக்கப்பட்டு பின் புலிகளினால் அரவணைக்கப்பட்ட அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி விரிவான ஒரு நூல் வெளிவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.

1 hour ago, புலவர் said:

2004 ம் ஆண்டுவரை புலிகள் தேர்தல்களை புறக்கணித்ததன் விளைவுதான் டக்கியின் எழுச்சி ,இப்பவும் தமிழரசு சின்னத்தில் தானே கேட்கின்றார்கள் ,ஆனந்தசங்கரி உதயசூரியனை தன்னுடன் கொண்டு போனவேளை ஏன் புலிகள் காங்கிரசின் சைக்கிளை பயன்படுத்தவில்லை ,2001-2009வரை புலிகளின் காலத்தில் ஏன் எவரும் TNA யை பதியச் சொல்லி கேட்கவில்லை .பிறகு உள்ளதும் இல்லாமல் போய்விடும் என்ற பயததிலை சுரேஷ் கோஸ்டி கமுக்கமா இருந்தவர்கள் .

TNA உ ஒரு கட்சியாக பதிந்து ஒரு பொதுச்சபையை உருவாக்கி அவர்கள் கூடி முடிவுகள். எடுப்பது தானே ஜனநாயகம். சம்பந்தர், சுமந்திர கும்பலுக்கு ஏன் அது பிடிக்கவில்லை. ஒரு ஜனநாயக அரசியலிலேயே  இவ்வளவு சர்வாதிகாரிகளாக இருக்க விரும்பும் சம்பந்தன் ஆயுத போராட்டம் நடத்தி இருந்தால் எவ்வளவு மோசமான சர்வாதிகாரியாக இருந்திருப்பார். அப்பாடி நல்ல காலம் . 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

இந்தப் பொய்யை இன்னும் எத்தனை தடவைகள் சொல்லப் போகின்றார்கள்? இப்படி தொடர்ந்து சொல்லிக் கொள்வதால் வரலாறு இதை நம்பிவிடும் என்று நினைக்காதீர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழக புத்திசீவிகளினதும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர்கள் மற்றும் மதகுருக்களினதும் முயற்சியினால் உருவாக்கப்பட்டு பின் புலிகளினால் அரவணைக்கப்பட்ட அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி விரிவான ஒரு நூல் வெளிவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.

அண்ணன் அரியநேந்திரனை விட... உங்களுக்கு அதிகம் உட்சூட்சுமம் தெரியும் என்பது எங்களுக்கு இப்ப தான் தெரியும். நீங்கள் தான் கூட்டமைப்பின் முன்னோடி போல. அண்மையில் கிழக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சொன்ன கூட்டமைப்பு வரலாற்றை ஒரு தடவை படிச்சுப் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறம்.

சரி.. புலிகள் உருவாக்கல்ல.. என்று ஒரு பேச்சுக்கு வைச்சுக்குவமே.. தமிழரசுக் கட்சியை மக்கள் முழுமையா ஆதரிக்கினம் என்றால்.. பிறகெதற்கு.. சும்மா உதார் கட்சிகளோட கூட்டு வைச்சுக்கிட்டு ரைத்தை வேஸ்ட் பண்ணனும். தனிய நின்று தமிழரசுக் கட்சியின் பலத்தை காட்டலாமில்ல..! அதுக்கும் புலிக்கும் சம்பந்தமில்லை தானே...???! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழு;த்தேசியக் கூட்டமைப்பு புலிகளால்  அங்கீகரிகப்பட்ட கூட்டமைப்பு புலிகள் அதனை ஆதரிக்கா விட்டால்  அது புஸ்வாணமாகப் போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு: தேசிய தலைமை..ஓகே சொல்லேல்லைன்னை.. அது அரவணைக்கல்லைன்னா.. இன்று கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு வாய்ப்பும் இருந்திருக்காது.. மக்களின் ஏகோபித்த ஆதரவும் அதுக்கென்று அமைச்சிருக்காது. புலி என்பது... தேசிய தலைவரை மையப்படுத்தியது.. என்பதை தெரிந்து கொண்டிருப்பது நல்லம். சும்மா வால் பிடிகள் எல்லாம் புலிகளும் அல்ல.. மக்கள் அவர்களை ஆதரிக்கிறதாகவும் கொள்ள முடியாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சுது நெடுக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தெனாலி said:

நல்லதொரு பேட்டி. 30 வருடம் உயிர்களையும் உடமைகளையும் இழந்தும் எதுவும் பெறாமல் இருந்த போது கேள்வி கேட்காதவர்கள் இப்ப 3 மாதத்தில கொண்டு வா தீர்வை என்று கேட்கிறார்கள். 
பாராளுமன்ற தெர்தலில ஓட்டை சைக்கிள் ஓட்ட போய் விழுந்தவர்கள் இப்ப மறுபடியும் அதே உடைஞ்ச சைக்கிளுக்கு பேரவை வர்ணம் அடிச்சு ஓட்ட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் அங்கு ஒரு அசாதாரண சூழல் நிலவினால் இவர்களுக்கு திருப்தி.

மைத்திரி அரசு பதவிக்கு வந்து ஜனவரியோடை ஒரு வருடம் ஆகப்போகிறது. எல்லோரும் கிறிஸ்துமஸ் பார்ட்டி மப்பிலதான் கருத்து எழுதீனம் போல கிடக்கு.

30 வருட போராட்டத்துக்கு முதலும் இதே தமிழரசு கட்சிதான் சிங்கள பேரினவாத அரசுகளோடை மாறிமாறி  பேச்சுவார்த்தை நடத்தி  களைச்சுப்போய்  பின்பு பொடியன்களை  உசுப்பேத்தி விட்டது.

சரி புலிகள் தான் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்று வைத்தாலும் இப்போ நிலைமை தலைகீழ் .புலிகளின் முக்கியபுள்ளிகளை பிடித்து வெளியில் விட்டு விட்டு சித்தர் ,சுமந்திரனை எல்லாம் உள்ளே இழுத்துவிட்டார்கள் .

ஒரு சுய இன்பத்திற்கு புலிகள் வைத்த பெயரால் தான் மக்கள் வாக்கு போடுகின்றார்கள் என்று சந்தோசப்பட்டு கொள்ளலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன்.. அனந்தி.. பிரபாகரன் எங்கள் மன்னன் என்று பேசிய விக்கி ஐயா.. பெற்ற வாக்குகள் சாட்சியம் சொல்லும்.. மக்கள் எந்தப் பெயரின் பின்னால் நிற்கினம் என்று. சுய இன்பத்துக்கு புலிகளை திட்டித்திரியுறவைக்கு உதுகள் கசகத்தான் செய்யும். சம் சும் உட்பட்ட கும்பலுக்கும். :rolleyes:

சம் + சும் < விக்கி ஐயா < சிறிதரன் + அனந்தி (வாக்குகள்)tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தெனாலி said:

ஒரு டவுட்டு..புலம்பெயர் தேசிய வாலுகளின் ஆசியோடு களம் இறங்கிய கஜே கோஷ்டி ஒட்டு குழு லிஸ்டில வருமா இல்லை சிங்கள கட்சிகள் லிஸ்ட்டா? 

எனக்கும் அதே டவுட்டு தான்.அதாவது ஹோல் எடுத்து சம்பந்தர். சுமந்திரன் ஆட்களுக்கு காசு சேர்த்ததும் அதே தேசிய வாலுகளா அல்லது அவர்களுக்கு உங்களிடம் வேறிஉ பெயர் உண்டா?
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

எனக்கும் அதே டவுட்டு தான்.அதாவது ஹோல் எடுத்து சம்பந்தர். சுமந்திரன் ஆட்களுக்கு காசு சேர்த்ததும் அதே தேசிய வாலுகளா அல்லது அவர்களுக்கு உங்களிடம் வேறிஉ பெயர் உண்டா?

விடுங்க நுணா..

இதுகளுக்கு பதில் எழுதுவது நேரவிரயம்..

ஒருத்தர் அறிவைப்பற்றி பேசுவார்

இன்னொருவர் புலம்பெயர் வாலுகளைப்பற்றி பேசுவார்

அடுத்தது சைக்கிள் பற்றி...

எங்கு போனாலும் புலத்துவாலுகள்  புலத்துவாலுகள் என்று  கத்துவதன் காரணத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் புரியும்

இவர்கள் சொல்லை எவரும் இங்கு கேட்பதில்லை

ஏன் எதையுமே புலத்தில் இவர்களால் உருவாக்கவோ

செயற்படுத்தவோ

முடியாது.

பலதடவை முயன்றும் ஒருத்தரும் திரும்பிப்பார்க்காத அந்த பகை

ஒவ்வொரு எழுத்திலும் இருப்பதை பார்க்கலாம்

வெறும் வசை தான் இப்ப...

On 12/25/2015 at 2:36 PM, arjun said:

மீண்டும் சுமந்திரன் தன்னை ஒரு யதார்த்தமாக சிந்திப்பவராக இந்த பேட்டியின் மூலம் நிரூபித்துள்ளார் .

எல்லாமே அவரர் அறிவின் அடிப்படையிலும் சிந்திக்கும் விதத்திலும் தான் தங்கியுள்ளது .

சுமந்திரன் பேட்டியில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை விளங்கமுடியாதவர்களுக்கு இனி விளங்கபடுத்துவது கஷ்டம் .

நாட்டில் உள்ள மக்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு அதனால் தான் சம்பந்தர் சீறிலங்கா கொடியை தூக்கிய பின்னரும் வெல்லவைத்தார்கள் ஆனால் ஓடிவந்தர்களின் சொல்லுக்கு ஆடிய கஜேந்திரகுமாருக்கு டக்கிளசிலும் வாக்குகள் குறையவே கிடைத்தது ஆனால் இப்பவும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று ஓடிவந்தவர்கள் குத்தி முறிவது ஏன் என்றுதான் புரியவில்லை .

எனக்கு விளங்கவில்லை ஏன் இவர்கள் எல்லாம் போராட போனார்கள் அல்லது சும்மா இருந்த மக்களை குழப்பினார்கள், இப்ப தப்பி வந்து உல்லாச வாழ்க்கையில் அந்த மக்களை அடிமைகளாகவே  இருக்கவே விரும்புகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நேசன் said:

எனக்கு விளங்கவில்லை ஏன் இவர்கள் எல்லாம் போராட போனார்கள் அல்லது சும்மா இருந்த மக்களை குழப்பினார்கள், இப்ப தப்பி வந்து உல்லாச வாழ்க்கையில் அந்த மக்களை அடிமைகளாகவே  இருக்கவே விரும்புகிறார்கள்

அதொன்னுமில்ல.. பெரிய பள்ளிக்கூடம் போயும் படிப்பு சரிவரல்ல... இப்படி ஒரு சந்தர்ப்பம் மீள வராது வெளிநாடு போவதற்கு.. (அதாவது சும் பாசையில் சொன்னால்..இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினம்).. அதுவும் மத்திய கிழக்கு என்று போய் வெயில் காய ஏலாது.. கூலான நாடுகளுக்கு போய் கூலா இருக்கனுன்னா.. படிப்பு வேணும்.. அதுதான் வாய்க்கல்ல.. அகதியா ஏறனுன்னா.. துவக்கைத் தூக்கனும்.. பாதில அதை தூக்கி வீசனும்.. பிளைட் ஏறிடனும்.. அப்பதான் மிச்சம் எல்லாம் வசப்படும்.

இன்று சும் சிங்கள அரசவையில் அமைச்சர் பதவிக்கு என்னத்தை மெல்லுறாரோ இதே தான் இவைக்கு அப்ப தேவைப்பட்டது. மக்கள் சுதந்திரம் தனி நாடு என்று ஆயுதம் தூக்கினவன் எல்லாம் மாவீரர் ஆகிட்டாங்கள். இதுங்கள்.. இப்ப.. பாப் கோன் சாப்பிட்டுக்கிட்டு.. கமோன் சும்.. கமோன் சம்.. என்று பழைய பள்ளிக்கூடக் கால விசில் அடியில நிற்குதுகள்.

அதுகளுக்கு அடிமை வாழ்வென்ன.. ஆக்கிரமிப்பு என்ன.. படிப்பு சரிவராட்டிலும் வெளிநாட்டில் வாழ்க்கை வசப்பட்டிட்டு எல்லோ.. எனி எதுவும் பேசலாம் என்ற தெளிவோட அதுகள்.. விசிலடிக்குதுகள் அவ்வளவே. இதைத்தான் இவர்களிடம் அதிகபட்சமா எதிர்பார்க்கவும் வேண்டும்.. முடியும். :rolleyes:tw_angry:tw_blush:

Edited by nedukkalapoovan

8 minutes ago, நேசன் said:

எனக்கு விளங்கவில்லை ஏன் இவர்கள் எல்லாம் போராட போனார்கள் அல்லது சும்மா இருந்த மக்களை குழப்பினார்கள், இப்ப தப்பி வந்து உல்லாச வாழ்க்கையில் அந்த மக்களை அடிமைகளாகவே  இருக்கவே விரும்புகிறார்கள்

இவர் தமிழ் ஈழத்தை பொக்கெட்டுக்குள் வைத்திருக்கின்றார் நாங்கள் தான் வெளியில் எடுக்க விடுகின்றமில்லை .

4 minutes ago, arjun said:

இவர் தமிழ் ஈழத்தை பொக்கெட்டுக்குள் வைத்திருக்கின்றார் நாங்கள் தான் வெளியில் எடுக்க விடுகின்றமில்லை .

தயவு செய்து ஒன்றை புரிய வையுங்கள்  ஆயுதம், தூக்கிய போது அல்லது போராட போன போது உங்கள் நோக்கம் என்னவாய் இருந்தது?சுனாமியால் 40,000 இழந்தோம்  இயற்கை அழித்தது என்று மனம் தேற்றினோம், முள்ளி வாய்க்காலில் இனவாத ஒரு இனம்  சுனாமியை விட பல மடங்கு அழித்தது,  மீண்டும் அதே இனத்துடன்  எந்தவித  தீர்வும் இல்லாமல்  அடங்கி வாழ் என்று வெளிநாட்டில் இருந்து பிரச்சாரம் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.