Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1454594529409

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vidiyalaithedi.com/2016/02/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/

  • Replies 59
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை அரபிக்கிலும் பாடிடுங்க... .......... .......... tw_angry:

Edited by நியானி
இழிவான பதம் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

அடுத்த முறை அரபிக்கிலும் பாடிடுங்க... ....... .............. tw_angry:

இவயட கதையள் எப்படி முடியுமெண்டால்:

அரபில மட்டும் தான் பாடோனும். அப்பத்தான் நாட்டு மேல அல்லாட காவல் இருக்கும்.

மண்டைக்கு வெளியால மாதிரியே, உள்ளுக்கையும் ஒன்னுமே, அல்லா கொடுக்கேல்ல...

Edited by நியானி
மேற்கோள் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இவயட கதையள் எப்படி முடியுமெண்டால்:

அரபில மட்டும் தான் பாடோனும். அப்பத்தான் நாட்டு மேல அல்லாட காவல் இருக்கும்.

மண்டைக்கு வெளியால மாதிரியே, உள்ளுக்கையும் ஒன்னுமே, அல்லா கொடுக்கேல்ல...

பக்கத்துக்கு வயல் காறரை சண்டைக்குள் இழுத்து விட்டு... இடையால பூந்து அறுவடையை அள்ளிக்கொண்டு போறது தானே.. இவையின்ர வழக்கம்!தேசீய கீதம் பாடின குறூப்பில மூண்டு, நாலு தொப்பியளும் தெரிஞ்ச மாதிரிக் கிடக்கு!

சிங்களவன் கவனத்தில் எடுக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பாடப் பட்டதோ இலங்கையின் தேசிய கீதம். தமிழரின் தேசிய கீதம் கூடக் கிடையாது. அப்படியிருக்க அது பிரிவினைவாதத்தைத் தூண்டுமென்றால் சிங்களவரின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்போது தேசியகீதம் தமிழில் பாடக் கூடாது என்கிறார்கள், சிறிதுநாள் போனால் தமிழில் யாரும் பேசக் கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

சுதந்திரம் அடைந்த போது தமிழில் முதல்முறையாகப் பாடப்பட்ட தேசிய கீதம் 69 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரண்டாவது முறையாகப் பாடப் பட்டிருக்கிறது.

1947 ஆண்டு அரசியலமைப்பின்படி தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று சரத்து இருந்தாலும்கூட, இன்று அது பிரிவினைவாதாமாகப் பார்க்கப்படுமளவிற்கு சிங்களவரின் இனவெறி கூடியிருக்கிறது.

ஒரு சிங்களவன் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுவான், மற்றைய சிங்களவன் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள், கொடுக்க விடமாட்டேன் என்று சொல்லுவான். இப்படியே தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருவதே வரலாறு.

சேனநாயக்க, பண்டா, சிறிமா, ஜே. ஆர், பிரேமா, சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரி என்று எல்லாச் சிங்களத் தலைவர்களும் சரித்திரத்தின் ஏதோ ஒரு பகுதியில் தமிழருக்குக் கொடுக்கப் போவதாகவோ அல்லது மற்றையவர் கொடுக்கவிருப்பதைத் தடுத்து நிறுத்தியதாகவோ தான் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் தொடரும். 

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

  • கருத்துக்கள உறவுகள்

இவயளுக்கு என்ன செய்யவேண்டுமென்றால் ....இவர்களுக்கு அரபியை தேசிய மொழியாக்கி இவர்கள் எல்லோருடனும் அரபியில் தான் கதைக்க வேண்டும் எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும் மீறி வேற மொழியில் கதைத்தால் கடும் தண்டனை என்று அமுல்படுத்தி 
இவங்களுக்கு மட்டும் சரியா சட்டத்தையும் அமுல் படுத்த வேண்டும் பிறகு தெரியும் செய்தி ....தொப்பிய களற்றி குப்பையில் போட்டுவிட்டு பின்னங்கால் பிடரியிலடிபட ஓடுவினம் ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

பாடப் பட்டதோ இலங்கையின் தேசிய கீதம். தமிழரின் தேசிய கீதம் கூடக் கிடையாது. அப்படியிருக்க அது பிரிவினைவாதத்தைத் தூண்டுமென்றால் சிங்களவரின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்போது தேசியகீதம் தமிழில் பாடக் கூடாது என்கிறார்கள், சிறிதுநாள் போனால் தமிழில் யாரும் பேசக் கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

ஒரு சிங்களவன் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுவான், மற்றைய சிங்களவன் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள், கொடுக்க விடமாட்டேன் என்று சொல்லுவான். இப்படியே தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருவதே வரலாறு.

சேனநாயக்க, பண்டா, சிறிமா, ஜே. ஆர், பிரேமா, சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரி என்று எல்லாச் சிங்களத் தலைவர்களும் சரித்திரத்தின் ஏதோ ஒரு பகுதியில் தமிழருக்குக் கொடுக்கப் போவதாகவோ அல்லது மற்றையவர் கொடுக்கவிருப்பதைத் தடுத்து நிறுத்தியதாகவோ தான் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் தொடரும். 

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

சிங்களத்துக்கு நாம் தமிழர்

நமக்குத்தான் அதைத்தவிர வேறு பேதங்கள்

இப்பொழுது கூட இது புலிவாலின் எழுத்தாகத்தான் பார்க்கப்படும் இங்கு....

ஆனால் நாங்கள் படிக்கப்போவதில்லை. சிங்களவன் நல்லவன், தமிழருக்குத் தருவான் என்கிற பொய்யான கற்பனை உலகை விட்டு வரப்போவதில்லை.

ஒன்றில் பேய்த்தனமாக சிங்களவனை நம்பி ஏமாறுகிறோம் அல்லது பேய்த்தனமாக அவனுடன் மோதி அழிகிறோம். என்னவோ அழிவு என்பதோ எமக்கு மட்டும்தான் !

சிங்களவன் தருவான் என்று நான் எவர் சொல்லியும் கேட்டதில்லை ,சிங்களவன் தருவான் என்றால் ஏன் எமது தலைவர்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் ஓடுகிறார்கள் .

மூளையை பாவிக்காமல் பேய்தனமாக மோதியது உண்மைதான் .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, arjun said:

உங்கள் தலைவர்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் ஓடுவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு தாங்களும் எதோ செய்கிறோம் எண்டு காட்டத்தான். இல்லாட்டி அவன் ஒற்றை ஆட்சிக்குள்ளதான் தீர்வு என்டபிறகும் ஸ்காட்லாந்துக்கு ஓடுவினமே.

முட்டாள் தனமான கருத்துக்களை பார்க்க கவலையாக இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணியின் அபிப்பிராயத்தை முஸ்லீம்களின் கருத்தாக கொண்டு அபிபிராயம் சொல்லும் அளவுக்கு இனவாத புரையேறி யிருப்பது  அருவருப்பானது. அங்கஜனின் கருத்தை முழு தமிழர்களின் கருத்தாக கொள்ளலாமா. எங்கே இனவாதத்தை கக்கிவிடலாம் என்று தேடித் திரிகிறீர்களா 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, hasan said:

ஐயா ஹசன் ......மீண்டும் பழைய காயத்தை கிளற வேண்டாமே ....இது இனவாதமல்ல  முன்னெச்சரிக்கை 
இன்னும் ஒரே மொழியை பேசும் முஸ்லிம்கள்  தமிழருடன் கனெக்சன் கொடுப்பதை விட்டுவிட்டு அரபியுடன் கனெக்சன் கொடுக்க தான் ஆசைப்படுகிறீர்கள் 
யாராலும் விளங்கப்படுத்தமுடியாத முஸ்லிம் எனும் ஒரு இனத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் ஏன் அணிசேரா கொள்கை .....
அப்படி கொள்கை கொண்ட நீங்கள் அப்படியே நேர்மையாக  இருந்திருக்க வேண்டும்  .....இங்கே எழுதுபவர்கள் போன்று 
நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

இப்போது விளைவுகள் விபரீதமாகி எல்லாமே முடிந்து போய்  விட்டது .....நடந்தவை மறக்கும் விடயங்களுமல்ல...மன்னிக்கும் விடயங்களுமல்ல  ...சும்மா பம்மாத்திட்கு நடந்தவற்றை மறப்போம் என்று கூவலாம் ......உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம் சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, hasan said:

அங்கஜனாக இருந்தால் என்ன, அகமதுவாக இருந்தால் என்ன, தமது தாய்மொழியையே மதிக்காவிடில், பிறகு என்ன அரசியல் தேவை?

இதுவா இனவாதம்? இது மொழிவாதமாக தெரியவில்லையா?

உங்கள் பெயரல்ல, நீங்கள் எழுதும் தமிழ் தான் உங்களை யார் என்று சொல்கிறது. 

உங்கள் தாய்நாட்டில், உங்கள் தாய்மொழியில் தேசியகீதம் வேண்டாமே என்று நம்மொழியே பேசும் ஒருவர் சொல்வது ஏற்புடையதா?

Edited by Nathamuni

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதே வசனத்தை யாழ்பாணிகளுக்கும் சொன்னநீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். கடைசியில் நீங்கள் ஒருவரையும் நம்பப்போவதில்லை. உங்களையும் ஒருவரும் நம்பப்போவதில்லை. 
பாரம்பரியமாக சிங்களப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை வீட்டில் பேசுவது முஸ்லீம்கள் தான். சிங்கள  பகுதிகளில் வாழும்  பல தமிழர்களுக்கு தமிழ் பேசவே தெரியாது. இவ்வாறு ஒருசில தமிழர்களை நான் பல்கலைகழகத்தில் சந்தித்துள்ளேன். மொழி பற்றையும் மொழி அரசியலையும் கலக்காதீர்கள்.  

23 minutes ago, hasan said:

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதை சொன்னவரும் தான் இலங்கையிலிருப்பதாக சொல்கிறார்.

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

ஒருவேளை யாழ்ப்பாணியா இருப்பாரோ!

நீங்கள் எங்கள் சகோதரமாயின் உங்கள் கருத்துக்களை தொடருங்கள். நாங்கள் இவர்களை ஒறுத்து உண்மையான சமூகத்தை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, hasan said:

'உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம்சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை '

இதே வசனத்தை யாழ்பாணிகளுக்கும் சொன்னநீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். கடைசியில் நீங்கள் ஒருவரையும் நம்பப்போவதில்லை. உங்களையும் ஒருவரும் நம்பப்போவதில்லை. 
பாரம்பரியமாக சிங்களப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை வீட்டில் பேசுவது முஸ்லீம்கள் தான். சிங்கள  பகுதிகளில் வாழும்  பல தமிழர்களுக்கு தமிழ் பேசவே தெரியாது. இவ்வாறு ஒருசில தமிழர்களை நான் பல்கலைகழகத்தில் சந்தித்துள்ளேன். மொழி பற்றையும் மொழி அரசியலையும் கலக்காதீர்கள்.  

யாழ்பாணியோ ......என்ன பிரதேசவாதமா.......?
ஒழுங்காக இருக்கும் களத்தை கிண்டி கிழங்கெடுக்கபோறியளா.......இந்த மாய்மாலத்தை JM தளத்தில் போய் காட்டுங்கள் 
நிறைய ஜிங் ஜாக் கிடைக்கும் .... மேலே ஒருவர் உண்மையான சமூகத்தை காணப்போகிறாராம் ....நம்பி வாங்கிக் கட்டியது காணாதா .....இப்பதானே நாட்டிற்கு வந்திருக்கியல் ....கொஞ்ச நாள் போகட்டும் தானாகவே தெரிந்து கொள்வீர்கள் ....நல்லிணக்க ,மன்னிப்பு வகுப்பெடுப்பவர்கள் எல்லாம் ஐரோப்பாகண்டத்திலும்  ,அமெரிக்காவிலும் இருந்து வகுப்பெடுக்காமல் முதலில்  இங்கே வந்து செயல் வீரராகி காட்டுங்கள் ......

8 hours ago, ஜீவன் சிவா said:

ஒருவேளை யாழ்ப்பாணியா இருப்பாரோ!

புட்டும் தேங்காய்ப்பூவுக்கும்   யாழ்ப்பாணம் உதாரணம் அல்ல .....கிழக்கு மாகாணமே சிறந்த உதாரணம்.....முஸ்லிம்களின் உண்மை முகமும் நன்றாக அறிந்த மாகாணம் .....

ஒரு இனவாதம் என்னொரு இனவாதத்துக்கு எதிரானதல்ல. ஒன்றை  ஒன்று பலப்படுத்தும். தமிழ் இனவாதம் சிங்கள முஸ்லீம் இனவாதத்திற்கு உரமிடும். அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார். பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனால்தான் உங்களில்  சீரிய தமிழ் மரபின்  கூறுகள்  எதையும் காணமுடியவில்லை. பரவாயில்லை அக்னியஷ்த்ரா.  இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும். தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, hasan said:

அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார்.

வாவ் ...இப்படி பேசி என்னபலன் குடியிருக்கிறதுக்கு ஒரு துண்டு நிலத்திற்கே பிச்சை எடுக்கிறான் ......ஆயிரம் வருசத்திற்க்கு முன்பு அப்படி இருந்தோம் ,இப்படி இருந்தோம் ,கப்பல் ஓட்டினோம் ,குப்பை பொறுக்கினோம் என்று பீத்திக்கொண்டு இருக்கவேண்டியது தான் .....தான் என்று தன் இனமென்று இருந்திருந்தால் இப்படி ஏதிலிகளாக வந்திருக்க வேண்டியதில்லை....வந்தவனை எல்லாம் தம்மை ஆள விட்டான் ...இன்று சிங்கி அடிக்கிறான்  

5 hours ago, hasan said:

 இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும்.

இருந்து ....ஊரானை வாழவைத்து நான் அழியவா .....? ஒலகத்தில் எந்த அழிவுக்கும் தமிழன் கண்ணீர் சிந்தினான் அதுதான் ஒலகமே சேர்ந்து நின்று அழித்ததோ .....?....அதாவது பரவாயில்லை வேஷம் போடும் சகோதரன் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை கட்டிபிடித்து கிரிபத் சாபிட்டேல்லோ மகிழ்ந்தான்.....  தமிழனுக்கு மட்டும் தான் மரபு  ...மத்த இனத்திற்கு அரபு ...

6 hours ago, hasan said:

தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம்

 .இவ்வளவு பாடத்திற்கு பிறகும் இன்னும் தமிழன் திருந்தவில்லை என்றால் ....இந்த தமிழ் இனம் இதை விட அதிகமாக கேவலப்பட்டு  அவமானப்பட்டு அசிங்கப்படட்டும் .....நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல பிள்ளைக்கு ஒரு சொல்லு....

5 hours ago, hasan said:

பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம்.

இருந்து விட்டுபோகிரேன் அதுக்காக மொழியால் அடையாளப்படுத்தப்படாத எனது  சுய நலத்திற்காக,பதவிக்காக ,அண்டிப்பிழைப்பதற்காக    தமிழ் பேசும் சிங்களவன் என்று ஒரு Hybrid இனத்தை உருவாக்கவும் மாட்டேன் அதுக்கு விஜயனையும் புத்தரையும்  கனெக்சன் கொடுக்க மாட்டேன் 

..இது இனவாதம் இல்லை
முன்னெச்சரிக்கை   

10 hours ago, hasan said:

ஒரு இனவாதம் என்னொரு இனவாதத்துக்கு எதிரானதல்ல. ஒன்றை  ஒன்று பலப்படுத்தும். தமிழ் இனவாதம் சிங்கள முஸ்லீம் இனவாதத்திற்கு உரமிடும். அதுபோலவே ஒவ்வொரு இனவாதமும். அப்துல் கலாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொன்னான் என பேசியுள்ளார். பல நூறு வருடங்களாக தென்னிந்தியர்களின் ஆட்சியால் தமிழராக மாறிய சிங்களவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனால்தான் உங்களில்  சீரிய தமிழ் மரபின்  கூறுகள்  எதையும் காணமுடியவில்லை. பரவாயில்லை அக்னியஷ்த்ரா.  இனியாவது  தமிழ் மரபை கற்று உண்மையான தமிழனாக இருக்க முயலவும். தயவுசெய்து தமிழரையும் தமிழையும்  அவமானப்படுத்த வேண்டாம். அசிங்கப்படுத்த வேண்டாம். 

நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது. உங்கள் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரராக உங்களை அடையாளம் காட்டுகிறது. இங்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி கருத்தாடுவதே நினைத்துப் பார்க்க முடியாத விடயம். மாற்றம் ஒன்றே மாறாதது. தொடர்ந்து பகிருங்கள், சேர்ந்து பயணிப்போம். 

தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் - நாம் எமது உள்ளத்தில் இருப்பவற்றை எமது சந்ததியின் எதிர்காலத்திற்காக பகிர்வோம். 

Edited by ஜீவன் சிவா

On 06/02/2016 at 2:46 AM, அக்னியஷ்த்ரா said:

ஐயா ஹசன் ......மீண்டும் பழைய காயத்தை கிளற வேண்டாமே ....இது இனவாதமல்ல  முன்னெச்சரிக்கை 
இன்னும் ஒரே மொழியை பேசும் முஸ்லிம்கள்  தமிழருடன் கனெக்சன் கொடுப்பதை விட்டுவிட்டு அரபியுடன் கனெக்சன் கொடுக்க தான் ஆசைப்படுகிறீர்கள் 
யாராலும் விளங்கப்படுத்தமுடியாத முஸ்லிம் எனும் ஒரு இனத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் ஏன் அணிசேரா கொள்கை .....
அப்படி கொள்கை கொண்ட நீங்கள் அப்படியே நேர்மையாக  இருந்திருக்க வேண்டும்  .....இங்கே எழுதுபவர்கள் போன்று 
நான் வெளிநாட்டிலிருந்து கொண்டு நல்லிணக்க பாடம் எடுப்பவனல்ல .....தாயகத்திலிருந்தே எழுதுபவன் .....புட்டும் தேங்காய்ப்பூவும் ஏரியாக்காரன்  

இப்போது விளைவுகள் விபரீதமாகி எல்லாமே முடிந்து போய்  விட்டது .....நடந்தவை மறக்கும் விடயங்களுமல்ல...மன்னிக்கும் விடயங்களுமல்ல  ...சும்மா பம்மாத்திட்கு நடந்தவற்றை மறப்போம் என்று கூவலாம் ......உண்மை நிலைமை நான் ஒரு முஸ்லிம் சகோதரனை நம்பி எனது தெருச் சந்தியில் இருக்கும் முனைக்கடை வரை கூட போகமாட்டேன் .....மீண்டும் கூறுகிறேன் இது இனவாதமல்ல, துவேசமல்ல....... முன்னெச்சரிக்கை  

இலங்கை இவ்வளவு அழிவை சந்தித்தமைக்கு முதன்மை காரணம் இரண்டு இனங்களிலும் இருந்த இவர்களை போன்றவர்கள் தான். இரண்டு தரப்பு இனவாதிகளையும் தமிழரும் சிங்களவரும் புறம் தள்ளுகிறார்களோ அன்று தான் அந்த தீவில் அமைதி பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தெனாலி said:

இரண்டு தரப்பு இனவாதிகளையும் தமிழரும் சிங்களவரும் புறம் தள்ளுகிறார்களோ அன்று தான் அந்த தீவில் அமைதி பிறக்கும். 

தெனாலி முஸ்லிம்களை விட்டுவிட்டீர்கள் .....ஓ அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் என்று விட்டுவீட்டீர்களா .....இல்லை வசதியாக மறைத்து விட்டீர்களா ......யாழை விட்டு வெளியேற்றினார்கள் என்று புலிகளை கழுவி கழுவி ஊற்றும் கூட்டம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ததாக முரசறைந்த  கூட்டம் .....கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம் காடையர்கள் தனியாக இராணுவத்துடன் இணைந்து ...ஊர்காவற்படை என்ற பெயரில்  செய்த அநியாயங்களுக்காக  இன்றுவரை ஒரு அறிக்கை,ஒரு மன்னிப்பு  , ஏன் அதனை ஏற்றுகொள்ளாதவர்களுக்கு வாங்கும் வக்காளத்தில் உடல் சிலிர்க்கிறது ......எனக்கு என்னவோ இவர்களை விட செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட புலிப்பயங்கரவாதிகள் பெரிதாகத்தான் தெரிகிறார்கள் ......இல்லை ஒரு சிலவேளை நண்பர் ஹசன் கூறியவாறு  யாழ்பாணி யாக மட்டும் யோசிக்கிறீர்களோ  

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

1892,638 முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கிறார்கள் என்று 2011 கணக்கெடுப்பு கூறுகின்றது. அத்தனை பேரும் தமிழருக்கு தீங்கு இழைத்திருந்தால் நீங்கள் கூறுவது நியாயம். இல்லாவிடில் நீங்கள் கக்குவது இனவாதமே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தெனாலி said:

1892,638 முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கிறார்கள் என்று 2011 கணக்கெடுப்பு கூறுகின்றது. அத்தனை பேரும் தமிழருக்கு தீங்கு இழைத்திருந்தால் நீங்கள் கூறுவது நியாயம். இல்லாவிடில் நீங்கள் கக்குவது இனவாதமே. 

இதனையே சிங்களவன் இராணுவத்தை வைத்து சாதாரண மக்களை போட்டு தள்ளினான்.....சிங்கள சனத்தொகையில் இராணுவம் எத்தனை வீதம் அண்ணை ......?  ஒரு 1% ஆவது வருமா ...அப்ப அந்த மக்களை போட்டு தள்ளியது உங்கள் லாஜிக்இன் படி சிங்களவன் என்று சொன்னால் கக்குவது  இனவாதம் 
அப்ப யார் என்று சொல்வதென்று நீங்களே சொல்லித்தாங்கோ .....?    ஓ அதுதான் புலிகள் போட்டு தள்ளினார்கள் என்று மாற்றிவிட்டீர்களா...உங்கட லாஜிக் அப்பா ....அப்பா .....எங்கேயண்ணே இருக்கிறீகள் சிரிப்படக்க முடியவில்லை  காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருக்கிறது 

8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக இனவாதமே. எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல அது சிங்கள பேரினவாத்தத்திற்கு எதிரானது என்று தலிவர் கூறியதும் உங்கட லாஜிக் படி காமடி போலிருக்கிறது. 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதனையே சிங்களவன் இராணுவத்தை வைத்து சாதாரண மக்களை போட்டு தள்ளினான்.....சிங்கள சனத்தொகையில் இராணுவம் எத்தனை வீதம் அண்ணை ......?  ஒரு 1% ஆவது வருமா ...அப்ப அந்த மக்களை போட்டு தள்ளியது உங்கள் லாஜிக்இன் படி சிங்களவன் என்று சொன்னால் கக்குவது  இனவாதம் 

என்ன கேட்கப் போகின்றேன் என்று நிச்சயமாக உங்களுக்கு புரியும். 

இவர்கள் ஏகப்பிரதிநிதிகளா அல்லது வெறும் குழுவா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

என்ன கேட்கப் போகின்றேன் என்று நிச்சயமாக உங்களுக்கு புரியும். 

இவர்கள் ஏகப்பிரதிநிதிகளா அல்லது வெறும் குழுவா?

நானும் என்ன கேட்கப்போகிறேன் என்று உங்களுக்கும் புரியும் 

ஒரு 30 பேர் கூட தேறாத கூத்தமைப்பு ஏகப்பிரதிநிதிகளா அல்லது குழுவா இவர்களிடம் முழுத் தமிழரின்  இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு ...?

கூத்தமைப்பு மக்களால் வாக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் என்றால் இராணுவம் அரசாங்கத்தால் தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விட வாக்களிப்பின்றி தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் .....இப்படி நானும் கூறலாம் ...அதுசரி ஒரு குழு மீது நடவடிக்கை எடுக்க ஏன் முழு சிங்களவனும்  எதிர்க்கிறான் .....?  அவனுக்கு இனவாதம் இல்லை நமக்கு தான் அதிகம் இருக்கு போல 

நல்லெண்ண சமிங்க்சை ,விட்டுக்கொடுப்பு , எல்லாம் இரண்டு பக்கமும் இருக்கவேண்டும் ....நாம் மட்டும் 100 வீத விட்டுக்கொடுப்புடன் ,நல்லெண்ணம் 
காட்டும்போது நமக்கேதோ நம்மை பார்க்கும் போது பெரிய மகானை போலத்தான் தோன்றும் ...எதிர் பக்கத்திலிருப்பவனுக்கு அரை அல்லது முழு பைத்தியமாக மட்டுமே தெரிவோம்.....நன்றாக குனிய வைத்து குதிரை ஏறுவார்கள் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.