Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

 

para-anna-aபிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார்.

இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

பிரான்சில் மீண்டும் சிங்களத்தின் கோழைக்கரங்கள் – சுப்ரமணியம் பரமேஸ்வரன் கண்டனம்!

 

12301594_பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் மீது சிங்களக் கைக்கூலிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சிக்கு அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சங்கதி-24 இணையத்தளத்திற்கு கருத்துரைத்த பரமேஸ்வரன், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களின் வீச்சை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே இவ்வாறான கோழைத்தனமான செயல்களில் சிங்களம் இறங்கியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும் இவ்வாறான படுகொலை முயற்சிகளால் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை ஒரு பொழுதும் மழுங்கடிக்க முடியாது என்றும் பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilarul.com

Edited by colomban

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Where are you Mr.Visuku?

வணக்கம்  அண்ணா

இது அவர்கள் முடித்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை.

போன கிழமை சந்தித்தபோதும் இவற்றை முடிவுக்குள் கொண்டு வாருங்கள்

மக்களுக்கு உண்மைகளை கூறுங்கள் என சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

வாற மாதம் அதற்கான ஒரு சர்வதேச ஒன்றுகூடல் நடப்பதாகவும்

அத்துடன் பல சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்றார்கள்

அதற்குள்.......??

 

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் படுகாயம்!
[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 02:41.28 PM GMT ]
182.jpg
பிரான்சில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு ஐரோப்பிய நேரம் 11 மணியளவில் பரமலிங்கம் அவர்களின் வர்த்தநிலையத்திற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டில் பரமலிங்கள் அவர்கள் கையில் படுகாயமடைந்துள்ளார்.

வர்த்தக நிலையத்தைப் பூட்டிவிட்டு வீடு செல்வதற்காக வீதிக்கு இறங்கிய போது முகமூடி அணிந்தபடி காரில் வந்த இருவரே துப்பாக்கிக்கிச் சூட்டை நடத்தியதாக பிரான்ஸிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

paramalingam_1.gif

http://www.tamilwin.com/show-RUmuyCScSWft2H.html

இதிலிருந்து தெரிகிறது விளக்கம் இல்லாமல் அடுத்தவன் மீது பழிபோட்டுவிட்டு  கொலைக்கான  காரணியை மறைககாதீர்கள்/.,,,,,,,,,,,,,,,,,

Don Vito Corleone Vs     Virgil Sollozzo  தொடருது 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவையும் இப்படி நடக்கும் போது எம்மவர்களே ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கச் செய்து விடுகிறார்கள். இதன் மூலம் எதிரிகள் தங்கள் ஏஜென்டுகளை பாதுகாத்துக் கொள்வதோடு அவர்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் தமது நோக்கங்களை பயமின்றி.. நீதி நியாயத்துக்கு இடமின்றி செய்து முடிக்கின்றனர்.

இதில் முன்னாள் ஒட்டுக்குழு ஆக்களும் பக்க துணையாக எதிரிக்கு உதவியாக இருந்து வருவதை தொடர்ந்து அவதானிக்கையில் தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் அரசாங்கமும் காவல்துறையும் கையால் ஆகாத ஒன்றாக இருப்பது.. இங்கு மீண்டும் வெளிப்படுகிறது. இதனால் தான் உலகில் உள்ள எல்லா வன்முறை அரசுகளும் அரசு ஏஜென்டுகளும் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களும் பிரான்ஸை ஐரோப்பாவில் இலகுவாக இலக்கு வைக்கிறார்கள்.

இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரான்ஸ் அரசினதும் காவல்துறையினதும் ஆகும்.

அண்மையில் கூட குத்துவெட்டில் ஒரு தமிழர் பலியாகி இருந்தார். பிரான்ஸில் ஒட்டுக்குழுக்கள்.. போட்டிக்குழுக்கள்.. சிங்கள ஏஜென்டுகள்.. ஆதிக்கம் பெருகி இன்று அது அந்த நாட்டுக்கே பாதகமாகி வருகிறது. ஒரு காலத்தில் கனடாவில் இப்படி இருந்தது. குறிப்பாக ரொரன்டோவில். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஒவ்வொரு தடவையும் இப்படி நடக்கும் போது எம்மவர்களே ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கச் செய்து விடுகிறார்கள். இதன் மூலம் எதிரிகள் தங்கள் ஏஜென்டுகளை பாதுகாத்துக் கொள்வதோடு அவர்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் தமது நோக்கங்களை பயமின்றி.. நீதி நியாயத்துக்கு இடமின்றி செய்து முடிக்கின்றனர்.

இதில் முன்னாள் ஒட்டுக்குழு ஆக்களும் பக்க துணையாக எதிரிக்கு உதவியாக இருந்து வருவதை தொடர்ந்து அவதானிக்கையில் தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் அரசாங்கமும் காவல்துறையும் கையால் ஆகாத ஒன்றாக இருப்பது.. இங்கு மீண்டும் வெளிப்படுகிறது. இதனால் தான் உலகில் உள்ள எல்லா வன்முறை அரசுகளும் அரசு ஏஜென்டுகளும் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களும் பிரான்ஸை ஐரோப்பாவில் இலகுவாக இலக்கு வைக்கிறார்கள்.

இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரான்ஸ் அரசினதும் காவல்துறையினதும் ஆகும்.

அண்மையில் கூட குத்துவெட்டில் ஒரு தமிழர் பலியாகி இருந்தார். பிரான்ஸில் ஒட்டுக்குழுக்கள்.. போட்டிக்குழுக்கள்.. சிங்கள ஏஜென்டுகள்.. ஆதிக்கம் பெருகி இன்று அது அந்த நாட்டுக்கே பாதகமாகி வருகிறது. ஒரு காலத்தில் கனடாவில் இப்படி இருந்தது. குறிப்பாக ரொரன்டோவில். :rolleyes:tw_angry:

ஊர் இரண்டு பட்டால்.....??

இங்கயும் சிலர் அதுக்குத்தான் திரியினம்..

புலிகளில் அக்கறையா என்ன???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கத்தின் செயற்பாடுகள் எப்படியானவை அவர்பற்றி மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன என்பதுபற்றி அவரை நன்றாக அறிந்தவர்கள் வெளியிட்டால் அனைவருக்கும் உண்மை துலங்கலாம். யேர்மனியில் செயற்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள முக்கிய பெறுப்பாளர்கள் சிலரின்மீது யேர்மன்வாழ் தமிழ்மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.  

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் இது பழமொழி 

கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம் இது புதுமொழி 

10 minutes ago, arjun said:

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் இது பழமொழி 

கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம் இது புதுமொழி 

அதில் அப்படி என்ன சந்தோசம் ....ஒட்டு குழுவாக இருந்து செய்த பாவங்களை .....இதில ஊருக்கு உபதேசமோ ?

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் உண்டியல் பிரச்சனை முடியவில்லை 

அதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, arjun said:

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் உண்டியல் பிரச்சனை முடியவில்லை 

அதுதான் உண்மை .

:grin:

மற்ற எல்லா இடங்களிலும் பாகப்பிரிவினை எப்பவோ கமுக்கமா முடிஞ்சுட்டுது.

பிரான்சில மட்டும் அடிபாடாக்கிடக்குது.

இருந்தாலும் ஐ.எஸ் பிரச்சனையால, பொலீஸ் விசாரணை கடுமையாயிருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் இது பழமொழி 

கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம் இது புதுமொழி 

ஊரும் கூத்தாடிகளும் ஒன்றுபட்டால் என்ன! இரண்டுபட்டால் என்ன! உறவுகளை இரண்டு மூன்றாக உடைக்கும் முயற்சியில் விக்கிரமாதித்தன் கதைமட்டும் தொடரட்டும்!!.  

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மட்டும் ஊரை அடித்த காசு ஒரு பில்லியன் யூரோக்கள் மட்டில் உள்ளதாம்.

அதை பங்கு பிரிப்பதில்தானாம் இந்தப் புடுங்குப்பாடு.

ஏலவே அடித்தது போக இன்னும் இருப்பதை பிரிக்கத்தானாம் அடிபாடு.

இதில் இவர்கள் சர்வதேச கூட்டம் போடுறார்களாம்.

அடிப்பது கொள்ளை கதை மட்டும் சுபாஸ் சந்திரபோஸ் ரேஞ்சுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

பிரான்சில் மட்டும் ஊரை அடித்த காசு ஒரு பில்லியன் யூரோக்கள் மட்டில் உள்ளதாம்.

அதை பங்கு பிரிப்பதில்தானாம் இந்தப் புடுங்குப்பாடு.

ஏலவே அடித்தது போக இன்னும் இருப்பதை பிரிக்கத்தானாம் அடிபாடு.

இதில் இவர்கள் சர்வதேச கூட்டம் போடுறார்களாம்.

அடிப்பது கொள்ளை கதை மட்டும் சுபாஸ் சந்திரபோஸ் ரேஞ்சுக்கு.

சும்மா இருங்கப்பு! ஏற்கனவே நீங்கள் பொதுவாக எறிஞ்ச தொப்பியை ஒருவர் லபக்கெண்டு கட்ச் பிடிசூப் போட்டுக் கொண்டார்! இதையும் தூக்கிப் போட்டுக் கொண்டு பிறகு வார்னிங் குடுப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜஸ்டீன்.

நான் பேச்சுவாக்கில் ஒரு தொப்பியையோ பாவாடையையோ தூக்கி எறிஞ்சாலும் அதை லபக் எண்டு பிடிச்சுக் கொண்டு. என்னைத்தான் என்னைத்தான் எண்டு சாதிக்கிறார்களப்பா.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான் ஜஸ்டீன்.

நான் பேச்சுவாக்கில் ஒரு தொப்பியையோ பாவாடையையோ தூக்கி எறிஞ்சாலும் அதை லபக் எண்டு பிடிச்சுக் கொண்டு. என்னைத்தான் என்னைத்தான் எண்டு சாதிக்கிறார்களப்பா.

 

ஆனால் உண்மையிலேயே நீங்களொரு அப்பாவி 
என்பது எங்கள் இரண்டொருவருக்குதான் தெரியும் !

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலும் திரி சார்ந்து மிகுந்த கடப்பாடுடன் எழுதியிருக்கின்றேன்

இந்தத்திரியிலும் தற்பொழுது நடக்கும் நகைப்புக்களுக்கும்  சீண்டுதல்களுக்கும்

ஏனைய திரிகளில் முடிந்த பிரச்சினைகளை காவுதலுக்கும் என்னிடம் காட்டமான பதில்கள் உண்டு

ஆனால் யாழை தற்போதைய  நிலை இவ்வாறு தொடர்வதில் துளியும் விருப்பமில்லை.

யாழ் என்பது உறவுகளை இணைக்கும் இடமாக

பாலமாக இருக்கணும்

அதற்காகவே இங்கே வருகின்றேன்.

எனது நேரத்தை செலவளிக்கின்றேன்.

யாழின் நிர்வாகம் தற்பொழுது எடுக்கும் முடிவுகளுக்கு அடிபணிந்து எனது கருத்துக்களை எழுதாது தவிர்த்துக்கொள்கின்றேன்.

அகதியாக புலம்பெயர்ந்து தனது வாழ்க்கையையும் ஊரில் இருக்கும் சொந்தங்கள் வாழ்க்கைகளையும் காப்பாற்ற ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது அதை வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும். அப்படியானவர்கள் கூட போராட்ட நிதி என்று வரும் போது தமது சக்திக்கு மீறி கொடுத்திருக்கிறார்கள். கனடாவில் வீட்டை கூட மீள் அடமானம் வைத்து நிதி வழங்கியவர்கள் இருக்கிறார்கள். இவர்களை தவிற இந்த காசு சேர்த்த கூட்டம் வெருட்டி காசு கொடுத்தவர்கள் வேறு இருக்கிறார்கள். அவ்வாறு சேர்த்த காசை கொள்ளையடித்த இந்த கூட்டத்திற்கு மன்னிப்பே கிடையாது. அந்த பாவம் கொள்ளையடித்தவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் எப்பவும் துரத்திக்கொண்டே இருக்கும். 

சிங்களமும் உலகமும் இப்பவும் தமிழரின் பலத்தினை அழிப்பதில் இன்னும் முழு மூச்சுடன் இயங்குகின்றது ..ஆனால் பாலாய் போன எங்கள் தமிழன் இன்னும் காக்கை வன்னியனகவே இருக்கின்றான் ...இந்த கேவலம் கெட்ட தமிழனுக்கு தனி நாடு ஏன் ...சிங்களத்தின் காலை நக்கி வாழ தான் சரி ....இப்ப உள்ள அரசியல் அதனை தானே தெளிவாக காட்டுகின்றது ....சிங்களவன் ஒன்றாக தமிழனை எதிர்க்கிறான் ..ஆனால் எங்களில் தான் இப்ப தர்மவான்களும் , நீதியாளர்களும் , எங்களுக்கே குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் ...

ஒருவருடம் ஆகியும் வித்தியாவின் கொலைக்கு தண்டனை கிடைக்காத இந்த நிலை தான் ...இங்க கொஞ்ச பேருக்கு மக்கள் சந்தோசமாக உள்ளார்களாம் .....இது மட்டும் புலிகள் காலம் என்றால் ....சில தினங்களில் தண்டனை முடிந்திருக்கும் ....
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TCC பிரான்ஸ் கிளையின் ஒருங்கிணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

paramalingam 58eeதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. பரமலிங்கம் மீதான கொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளமை இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பரமலிங்கம் ஒரு தடவை கத்திக்குத்திற்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமீழீழ விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் அதன் தொடர்ச்சி தாமே எனக் கூறிக்கொள்ளும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தின் பெருந்தொகையான சொத்துக்களுக்கு இதுவரை பொறுப்புக் கூறியதில்லை. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் முதலிடப்பட்ட பெருந்தொகையான சொத்துக்கள் தனி நபர்களின் கைகளில் முடங்கியுள்ளது.

வீடுகள், வியாபார நிறுவனங்கள், நிதிவளம் போன்றன புலிகளின் அழிவுடன் காணாமல் போய்விட்டன. புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என்றும் தமிழர்களின் புதிய தலைமை தாமே என்றும் கூறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புக்கள் புலிகளின் சொத்துக்கள் தொடர்பாக மட்டும் வாய்திறப்பதில்லை. இறுதிக்கட்டப் போரின் போது சேகரிக்கப்பட்ட பெர்ந்தொகையான பணம் தொடர்பான அனைத்துத் தரவுகளுன் மூடி மறைக்கப்படுகின்றன.

ஏனைய அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பதாகக் கூறும் ரீ.சீ.சீ பணம் தொடர்பாக மட்டும் எந்தத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கவில்லை எனக் கூறுவது கேலிக்கூத்தாகும்.

இதனால் மக்கள் மத்தியில் ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்கள் மீதான சந்தேகங்கள் தோன்றின. ஈழத்தில் தமிழர்களின் அவலங்களுக்காகப் போராடுவதாகக் கூறும் ரீ.சீ.சீ, மக்கள் பாதிக்கப்படும் போது எந்தப் போராட்டங்களையும் நடத்தியதில்லை. நடத்தப்பட்ட சில பொதுவான போராட்டங்களிலும் இலங்கை அரசிற்கு எதிரானதும், ஏகபோக அரசுகளுக்கு எதிரானதுமான சுலோகங்கள் முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக ‘எமது தலைவர் பிரபாகரன், எமது மண் தமிழீழம்’ என சுலோகம் மட்டுமே முன்வைக்கபடும்.

மக்களை விரக்திக்குள் தள்ளிய இந்த அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்களில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்வதில்லை.

இவ்வாறு போராட்டங்களை அழித்து மக்களை விரக்தி நிலைக்குள் தள்ளிய இந்த அமைப்புக்களின் ஒரே குறி பணம் மட்டுமே. மாவீரர் தின நிகழ்வை வியாபார உக்திகளோடு நடத்தும் இந்த அமைப்புக்கள், மரணிக்காமல் வாழும் போராளிகளின் அவலங்களைக் கண்டுகொள்வதில்லை.

மூடி மறைக்கப்பட்ட பணத்தின் மீதான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளே ரீசீசீ அமைப்பின் உறுப்பினர்களின் துப்பாக்கி மோதல்களின் பின் புதைந்துள்ள காரணம் என சந்தேகிப்பதற்கான அத்தனை நியாயங்களும் எம் மத்தியிலுள்ளன.

தாங்கள் வழங்கிய பணத்திற்கு என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அதனை மறைப்பதற்கு ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தமது முழு நடவடிக்கைகளையும் சுய விமர்சனம் செய்துகொண்டு புதிய அரசியலை புலம்பெயர் அமைப்புக்கள் முன்வைக்கத் தவறினால் ஆயுத மோதல்கள் மேலும் வலுவடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

இனப்படுகொலை நடத்திய அதே நபர்களால் ஆளப்படும் அரசு இன்று ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து வட-கிழக்கின் தேசிய இனச் செறிவைச் சிதைத்துவருகிறது. முழு இலங்கையையும் ஏகாதிபத்திய நாடுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவருகிறது. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது இன்றைய தவிர்க்க முடியாத முன் தேவையாக உள்ளது. இந்த நிலையில் நேர்மையும் இதயசுத்தியுமுள்ள மக்கள் சார்ந்த அமைப்புக்கள் அவசியமானது மட்டுமல்ல வியாபாரிகள் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும் என்பதும் தேவையானது.

 

www.inioru.com

 

  • கருத்துக்கள உறவுகள்

பழி ஓரிடம் பாவம் ஒரிடம். 


கொழும்பான் அவர்களின் இணைப்பு உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. 


எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பதுபோல் எல்லாப்பழியும் தலைவனையே சேரும் என்ற உண்மையையும் இதனால் வெளிப்படுகிறது. 


தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளில் வெளிப்படையான தன்மை வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா எங்கட வீட்டில குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவனை திட்டி என்ன பயன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.