Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

Featured Replies

On 16/03/2016 at 9:56 PM, shanthy said:

சாந்தி
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தனிமடலில் நீங்கள் அனுப்பிய தேன்சிட்டு வங்கி கணக்கில் ரூபாய் 15 000 இன்று வைப்பிலிட்டுள்ளேன். ரசீதில் ஜீவன் சிவாவிற்கு பதிலாக ஜீவன் சில்வா என்றுள்ளது. கிடைத்ததும் உறுதிப்படுத்தவும்.

  • Replies 87
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal மூலமாக கனேடிய பணம் 150 அனுப்பி வைத்துள்ளேன். கிடைத்ததும் உறுதிப்படுத்துங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal மூலமாக கனேடிய பணம் 150 அனுப்பி வைத்துள்ளேன். கிடைத்ததும் உறுதிப்படுத்துங்கள். நன்றி.

இசை உங்கள் உதவி - 99. 36€கிடைத்தது. 

1 hour ago, இசைக்கலைஞன் said:

nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal மூலமாக கனேடிய பணம் 150 அனுப்பி வைத்துள்ளேன். கிடைத்ததும் உறுதிப்படுத்துங்கள். நன்றி.

On 17.3.2016 at 7:36 PM, ஜீவன் சிவா said:

சாந்தி
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தனிமடலில் நீங்கள் அனுப்பிய தேன்சிட்டு வங்கி கணக்கில் ரூபாய் 15 000 இன்று வைப்பிலிட்டுள்ளேன். ரசீதில் ஜீவன் சிவாவிற்கு பதிலாக ஜீவன் சில்வா என்றுள்ளது. கிடைத்ததும் உறுதிப்படுத்தவும்.

கிடைத்ததும் அறியத்தருகிறேன். இன்னும் வங்கிக்கு போகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா, உங்கள் உதவி கிடைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா இத்திட்டம் எந்த அளவில் நிற்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 26.3.2016 at 8:18 PM, MEERA said:

சாந்தி அக்கா இத்திட்டம் எந்த அளவில் நிற்கிறது?

வளர்மதியின் மருத்துவ அறிக்கையும் பிள்ளைகளுக்கான வங்கி கணக்கிலக்கம் மற்றும் வழங்கப்பட்ட 30ஆயிரம் ரூபாவிற்கான நன்றிக்கடிதம் பெறப்படுவதற்காக காத்திருக்கிறோம்.

மருத்துவ அறிக்கையை தர விருப்பப்படாமல் ஒருமுறை நேரடி சந்திப்புக்கு போன களப்பணியாளரை திருப்பியனுப்பியுள்ளார். மருத்துவ அறிக்கை கட்டாயம் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்ட பின்னர் அடுத்தவாரம் வரமாறு கூறியுள்ளார்.

புற்றுநோயென அடையாளம் கண்ட மருத்துவர் யார் பாவித்த மருந்துகள் எவையென்பன போன்ற விடயங்கள் எதுவும் தெரியாதென சொல்கிறார். ஆகவே முழுமையான தகவல்கள் பெறப்பட்ட பின்னரேயே மீதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம். வேறும் சில உதவிகள் கிடைத்திருப்பதாக எமது களப்பணியார் அறியத்தந்தார். எனினும் அவை பற்றிய விபரங்களையும் தர பின்னிற்கிறார்.

வழங்கப்படும் உதவியானது சரியான முறையில் செல்ல வேண்டும். என்பதோடு பல விடயங்கள் வளர்மதியோடு பேசியுள்ளேன். விவரங்கள் கிடைத்ததும்  பதிவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

நன்றி

8 hours ago, shanthy said:

வளர்மதியின் மருத்துவ அறிக்கையும் பிள்ளைகளுக்கான வங்கி கணக்கிலக்கம் மற்றும் வழங்கப்பட்ட 30ஆயிரம் ரூபாவிற்கான நன்றிக்கடிதம் பெறப்படுவதற்காக காத்திருக்கிறோம்.

இங்கு உதவி செய்பவர்களது உதவி சரியானவர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதை உறுதிப் படுத்துவதற்கு நீங்கள் படும் சங்கடங்கள் புரிகிறது சாந்தி. என்னால் நன்றி மட்டும்தான் சொல்லமுடிகிறது - நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, shanthy said:

வளர்மதியின் மருத்துவ அறிக்கையும் பிள்ளைகளுக்கான வங்கி கணக்கிலக்கம் மற்றும் வழங்கப்பட்ட 30ஆயிரம் ரூபாவிற்கான நன்றிக்கடிதம் பெறப்படுவதற்காக காத்திருக்கிறோம்.

மருத்துவ அறிக்கையை தர விருப்பப்படாமல் ஒருமுறை நேரடி சந்திப்புக்கு போன களப்பணியாளரை திருப்பியனுப்பியுள்ளார். மருத்துவ அறிக்கை கட்டாயம் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்ட பின்னர் அடுத்தவாரம் வரமாறு கூறியுள்ளார்.

புற்றுநோயென அடையாளம் கண்ட மருத்துவர் யார் பாவித்த மருந்துகள் எவையென்பன போன்ற விடயங்கள் எதுவும் தெரியாதென சொல்கிறார். ஆகவே முழுமையான தகவல்கள் பெறப்பட்ட பின்னரேயே மீதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம். வேறும் சில உதவிகள் கிடைத்திருப்பதாக எமது களப்பணியார் அறியத்தந்தார். எனினும் அவை பற்றிய விபரங்களையும் தர பின்னிற்கிறார்.

வழங்கப்படும் உதவியானது சரியான முறையில் செல்ல வேண்டும். என்பதோடு பல விடயங்கள் வளர்மதியோடு பேசியுள்ளேன். விவரங்கள் கிடைத்ததும்  பதிவிடுவேன்.

சாந்தி, பிள்ளைகளின் படிப்புக்கான உதவியை எவ்வாறு செயற்படுத்துவதாக திட்டமிட்டுள்ளீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

சாந்தி, பிள்ளைகளின் படிப்புக்கான உதவியை எவ்வாறு செயற்படுத்துவதாக திட்டமிட்டுள்ளீர்கள். 

மாதம் மாதம் பணம் வங்கிக்கு அனுப்பப்படும். மாதம் மாதம் பிள்ளைகள் கடிதம் போட வேண்டும். சொந்தங்கள் பணம் அனுப்பினால் கிடைத்தது என கடிதம் போடுவார்கள் தானே.  அதேபோல தொடர்போடு இருக்க வேண்டும். பிள்ளைகளுடனும் தொலைபேசினேன். விபரம் யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரமாக பின்னர் அறியத்தருகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சியின் பங்களிப்பு 50€ கிடைத்தது.

இதுவரையில் மொத்தம் யூரோவில் 1058,84€. புயசi அனுப்பிய உதவி இலங்கை ரூபாய் 42125,00ரூபாய் கிடைத்துள்ளது. முதல்கட்ட உதவியாக இன்று 30ஆயிரம் ரூபாய் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
siththira_001.jpg
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கலைக்குமரன் (வசந்தரூபன்) மற்றும் வளர்மதி கிருஸ்னாகரன் (நீதியரசி சித்திரா) முள்ளியவளை கணுக்கேணி மகேஸ்வரனின் தந்தை ரத்தினம், உடுப்புக்குளம் சிறுமி லயனர் இரட்ணராசா ஜிவனா ஆகியோர் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் எமது செய்தித்தளத்தினூடாக மக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

புலம்பெயர் அன்பர்கள் மற்றும் உள்ளூர் அன்பர்களும் இணைந்து அவர்களுக்கு தாராளமாக உதவியுள்ளனர். தொடர்ந்து மாதாந்தம் உதவி செய்வதற்கும் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் உதவிபெற்ற அனைவரும் அனைத்து உதவிகளும் தமக்கு கிடைத்துள்ளது என்றும் அத்தோடு, உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழீழ நீதியரசி சித்திரா (வளர்மதி கிருஸ்னாகரன்), தனது வறுமையை போக்கியவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவுடன் உரிமையுடன் கோரியுள்ளார்.

அத்தோடு இவ்வாறு உதவி பெறுபவர்கள் அவர்களுக்கு பதில் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் எதிர்பார்ப்பின்றி பாதிக்கப்பட்டவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த செய்தி நிறுவனத்திற்கு சிறப்பாக நன்றி தெரிவிப்பதோடு இப்பணி தொடர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி-

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

உலகம் அறியாத்துயர்! மகேஸ்வரனின் மனம் தளிர்க்குமா?

valarnathi_letter_001.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வளர்மதியின் உதவித்திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்குமான தகவல் இது.

வளர்மதிக்கான உதவிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு வளர்மதி சார்பான ஒத்துளைப்பும் தேவையானது. ஆனால் எமது முயற்சிகள் எதற்கும் அவர் ஒத்துளைக்க மறுக்கிறார்.

அவர் மதம்மாறியுள்ளார். கர்த்தரின் கிருபையை எங்களுக்கு போதிப்பதில் அதிகம் எமது நேரத்தை எடுத்துக் கொள்கிறார். மருத்துவம் செய்ய வரமாட்டேன் என அடம்பிடிக்கிறார். தனக்கும் தனது குடம்பத்திற்கும் சூனியம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தனது புற்றுநோயை கர்த்தர் குணப்படுத்தியுள்ளதாகவும் எந்தவிதமான மருத்துவத்தையும் செய்ய முடியாதென்ற தனது முடிவினை தெரிவித்துள்ளார்.

வாரக்கணக்காக தொலைபேசினேன் மற்றும் நேரடிகள செயற்பாட்டாளர் ஒருவர் சென்று பேசியும் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லாது உள்ளார். தனது மருத்துவசான்றிதழை காட்டவோ அல்லது தரவோ முடியாதென உறுதியாக கூறியுள்ளார். இவருக்கு புற்றுநோயா என்பது சந்தேகத்தை தோற்றுவிப்பதாக உள்ளது.

நேற்று தொலைபேசி மருத்துவ அறிக்கை மற்றும் உதவிகள் எவ்வளவு கிடைத்தது போன்ற விபரங்கள் வரும் பணியாளரிடம் கொடுத்துவிடுமாறு கேட்டிருந்தேன்.

அவர் எனக்கு சொன்னவை வருமாறு :-

தனக்கு உதவுவதால் உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கும் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் எனவே உதவியை செய்யுங்கள். கர்த்தரை நம்புங்கள் என்கிறார். எ ன்போன்றவர்களுக்கு நீங்கள் ஊழியம் செய்வதால் துன்பங்களிலிருந்து விடுதலையடைவீர்கள் என கூறுகிறார். தபால்மூலம் கடிதத்தொடர்புகளை பேணவோ அல்லது தனது விவரங்களை மாதாந்த அறிக்கையாக எவ்வகையிலும் தரமுடியாதென உறுதியாக சொல்லியுள்ளார்.

இவரோடு மினக்கெட்டு கர்த்தருக்கு ஊழியம் செய்ய எமது பணியாளர்களோ நானோ தயாராக இல்லை.

வளர்மதிக்கான உதவியை தொடர்ந்து செய்வதில் பொறுப்பு நிற்கும் என்னால் தொடர்ந்து நிற்கமுடியாதுள்ளது. கொடுக்கப்படும் பணத்துக்கான கடிதமோ அதற்கான சான்றோ தராமல் விடுவதால் கொடுக்கப்படும் பணம் பற்றி என்மீதான கேள்விகள் வரும். தேவையற்ற சந்தேகங்கள் பழிசுமத்தல்களை ஏற்க வேண்டிய நிலமை வரும்.

உதவிய நண்பர்கள் உங்கள் கருத்துக்களை தாருங்கள். இதுவரை கிடைத்த உதவியை பிள்ளைகளுக்கு பிரித்து சேமிப்பில் போட்டுவிட்டு இத்தோடு விலகிக்கொள்ளுவதே சிறந்ததென்பது எனது கருத்து.

Edited by shanthy

2 hours ago, shanthy said:

வளர்மதியின் உதவித்திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்குமான தகவல் இது.

இங்கு புதிதாக எழுதுவதற்கு எதுவுமில்லை. வளர்மதியின் வாழ்கையை நிர்ணயிக்கும் உரிமை அவருக்குண்டு. அவரது மதமாற்றமோ அல்லது மருத்துவத்திற்கான மறுப்போ அவரை சார்ந்தது. ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது அவர் உரிமை சார்ந்த விடயமன்று. சாந்தி நீங்கள் கூறியபடி பிள்ளைகளின் பெயரில் பணத்தை வைப்பிலிட்டுவிட்டு விலகிவிடலாம்.

இது எனது கருத்து மட்டுமே. மற்றவர்களின் கருத்துக்களையும் பார்த்து முடிவு செய்யுங்கோ. உங்கள் முடிவை நானும் வரவேற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா

இப்பொழுதெல்லாம் உதவுபவர்கள் தான் பலவிடயங்களிலும் விட்டுக்கொடுப்புக்களையும்

கண்டும் காணாதிருப்பதையும் செய்யவேண்டி இருக்கிறது

நானும் இவ்வாறு சிக்கிக்கொண்டதுண்டு

என்னைப்பொறுத்தவரை

வேறு ஒருத்தர் உதவும்

வேறுவகை உதவிகள் கிடைக்கும்

அல்லது உதவிகளுக்கான உத்தரவாதங்களை மீறும் எவருக்கும் உதவிகளை செய்வதில்லை

புலத்தில் இவ்வாறு இரங்கி உதவும் எவரும்

பணத்தை அவ்வளவு இலகுவாக பெறுவதில்லை.

எனவே எனது உதவி இத்திட்டத்துக்கு கிடைக்காது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

இது எனது கருத்து மட்டுமே.

(இதுவரை நான் இதற்கு பணம் அனுப்பவில்லை)

Edited by விசுகு

 சாந்தி நீங்கள் கூறியபடி பிள்ளைகளின் பெயரில் பணத்தை வைப்பிலிட்டுவிட்டு விலகிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான், ஜீவன் சிவா,Gari.கருத்துக்களுக்கு நன்றி.

இன்று எமது பணியாளரை அனுப்புங்கள் மருத்துவ அறிக்கை பிள்ளைகளின் சேமிப்பு வங்கி கணக்கு விபரம் கொடுத்துவிடுவதாக வளர்மதி கூறியிருந்தார். பின்னேரம் நேரில் சென்ற பணியாளருக்க தான் எவ்வித ஆதாரங்களும் தர முடியாதென மறுத்துள்ளதோடு பிள்ளைகளின் சேமிப்பு வங்கி விபரங்களையும் கொடுக்காது திருப்பியனுப்பியுள்ளார். பிள்ளைகளுக்கான பணத்தை கையில் வாங்கவே விரும்புகிறார். தனது தேவைகள் வீடு திருத்தல் முதல் பலவகையான விபரங்களை சொல்கிறார். வளர்மதி ஒரு நிர்வாக அலகின் கீழ் செயற்பட்டவர் போல இல்லை அவரது அணுகுமுறை. கடந்த சில வாங்களுக்குள் 60€மேல் இவருக்கான தொலைபேசி செலவு வந்துள்ளது. பணியாளர் 3தடவைகள் சென்று வந்த செலவுகளே எமக்க அதிகரிக்கிறதே தவிர இவர்களுக்கு இங்கிருந்து ஒவ்வொருவரும் செய்யும் உதவி சரியாக பயன்படும்  என்பதில் நம்பிக்கையீனமே காணப்படுகிறது.

உதவிகளை செய்ய விரும்புவோர் இத்தகைய செய்திகளை நம்பி உதவ முன்வருகிறார்கள். குறித்த இணையங்கள் யாழ் இணையமோ உதவுவோரோ விளம்பரம் செய்ய பயன்படுத்தலை அனுமதிக்க முடியாது.

இவர்களுக்காக சேர்த்த பணத்தை யாழ் இணையம் நிதியத்தில் வைத்து இவர்களையும் விட பாதிப்புற்ற குழந்தைகளுக்கோ அல்லது குடும்பத்திற்கோ கொடுப்பதே சிறந்தது. உண்மையில்லை ஏமாற்றலே இங்கு மிஞ்சியுள்ளது.

உதவியவர்கள் தரும் கருத்துக்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பணத்தை வழங்குவதை முடிவெடுக்க முடியும். மற்றும் இப்படி ஒருவருடன் கதைத்து தொலைபேசி, பயணச்செலவுகளை இழந்து எதுவும் நடைபெறப்போவதில்லை.

லங்காசிறி அல்லது தமிழ்வின்னில் தங்களைப்பற்றி வந்தால் உலகமெல்லாம் உதவ தயாராகவுள்ளார்கள் என்ற மனநிலமையை வளர்க்கின்றவர்களால் நாம் பயன்படுத்தப்படுவது வேதனையானது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே ஏதுமற்று அவதியுறும் மக்களுக்கு உதவமுடியாத நிலமையை அதுவும் நீதியரசியாக இருந்து பண்பட்ட ஒருவர் செய்வது.... நம்பவே மனம் கனக்கிறது. பிள்ளைகளை அவர் வளர்க்கப்போகும் வளர்ப்பிலும் ஐயம் ஏற்படுகிறது. ஆகவே சேர்ந்த நிதி அனைத்தையும் வளர்மதியின் பிள்ளைகளுக்கு அளிப்பதும் உசிதமாகத் தெரியவில்லை. சேர்ந்த நிதியில் ஒரு பகுதியை பிள்ளைகளின் பெயரிலிட்டு, மிகுதியை, அனாதைகள், ஊனமுற்றோரைப் பராமரிக்கும் ஆச்சிரமங்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும் வரவேற்கக் கூடியது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2016 at 5:38 PM, shanthy said:

கோஷான், ஜீவன் சிவா,Gari.கருத்துக்களுக்கு நன்றி.

இன்று எமது பணியாளரை அனுப்புங்கள் மருத்துவ அறிக்கை பிள்ளைகளின் சேமிப்பு வங்கி கணக்கு விபரம் கொடுத்துவிடுவதாக வளர்மதி கூறியிருந்தார். பின்னேரம் நேரில் சென்ற பணியாளருக்க தான் எவ்வித ஆதாரங்களும் தர முடியாதென மறுத்துள்ளதோடு பிள்ளைகளின் சேமிப்பு வங்கி விபரங்களையும் கொடுக்காது திருப்பியனுப்பியுள்ளார். பிள்ளைகளுக்கான பணத்தை கையில் வாங்கவே விரும்புகிறார். தனது தேவைகள் வீடு திருத்தல் முதல் பலவகையான விபரங்களை சொல்கிறார். வளர்மதி ஒரு நிர்வாக அலகின் கீழ் செயற்பட்டவர் போல இல்லை அவரது அணுகுமுறை. கடந்த சில வாங்களுக்குள் 60€மேல் இவருக்கான தொலைபேசி செலவு வந்துள்ளது. பணியாளர் 3தடவைகள் சென்று வந்த செலவுகளே எமக்க அதிகரிக்கிறதே தவிர இவர்களுக்கு இங்கிருந்து ஒவ்வொருவரும் செய்யும் உதவி சரியாக பயன்படும்  என்பதில் நம்பிக்கையீனமே காணப்படுகிறது.

உதவிகளை செய்ய விரும்புவோர் இத்தகைய செய்திகளை நம்பி உதவ முன்வருகிறார்கள். குறித்த இணையங்கள் யாழ் இணையமோ உதவுவோரோ விளம்பரம் செய்ய பயன்படுத்தலை அனுமதிக்க முடியாது.

இவர்களுக்காக சேர்த்த பணத்தை யாழ் இணையம் நிதியத்தில் வைத்து இவர்களையும் விட பாதிப்புற்ற குழந்தைகளுக்கோ அல்லது குடும்பத்திற்கோ கொடுப்பதே சிறந்தது. உண்மையில்லை ஏமாற்றலே இங்கு மிஞ்சியுள்ளது.

உதவியவர்கள் தரும் கருத்துக்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பணத்தை வழங்குவதை முடிவெடுக்க முடியும். மற்றும் இப்படி ஒருவருடன் கதைத்து தொலைபேசி, பயணச்செலவுகளை இழந்து எதுவும் நடைபெறப்போவதில்லை.

லங்காசிறி அல்லது தமிழ்வின்னில் தங்களைப்பற்றி வந்தால் உலகமெல்லாம் உதவ தயாராகவுள்ளார்கள் என்ற மனநிலமையை வளர்க்கின்றவர்களால் நாம் பயன்படுத்தப்படுவது வேதனையானது.

சாந்தி, எனது கவலையெல்லாம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் வருங்கால வாழ்வுமே. இவர்களுக்கு  சொந்தமான இவர்களது நலன்களில் அக்கறையுள்ள இவர்களின் உறவினர் யாரிடமாவது பிள்ளைகளுக்கான படிப்புக்கான செலவைக்கொடுத்து உதவலாமா என்று விசாரிக்க முடியுமா? அப்படியும் முடியாதென்றால் வேறு கஷ்டப்படுபவர்கள் யாருக்காவது தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி உதவ இப்பணத்தை உபயோகிக்கலாம். எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல? பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்,  அது அவரின் பிள்ளைகளின் படிப்பிற்காகவென்றாலும் சரி

தாயாரின் இப்படிப்பட்ட செயல்களால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை எண்ணத்தான் கவலையும் இயலாமையும் ஏற்படுகின்றது. அண்மைக்காலங்களில் உதவ முறப்ட்டு சுவரில் தலையை மோதிய சம்பங்களே நிறைய வருகின்றன

இவருக்கு உதவுவது சரிவராது எனில், சேர்த்த தொகையை இரண்டு மகன்களையும் இழந்து, அரசின் நீதித்துறையால் பந்தாடப்பட்டு தவித்து வாழும் ஜெயகுமாரி அக்காவுக்கு கொடுத்து உதவி செய்வது சரிவருமா? அவரு ஒரு சிறு குடிலில் தானே வாழ்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி அக்கா
nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal ஊடாக 100 € வியாழன் அன்று அனுப்பியிருந்தேன்.
IWAN GERT என்ற பெயரில் வந்திருக்கும்
கள உறவுகளின் ஆலோசனைப்படி எந்தத் திட்டத்திற்காவது
எனது பங்களிப்பையும் சேர்த்து விடுங்கள் .
நன்றி

இந்த நிதி வளர்மதியின் குடும்பத்திற்கு என்று சேகரித்த நிதி ,ஆகவே பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு ,அவருக்கும் தெரியப்படுத்தி பிள்ளைகளின் பெயரில் வைப்பிலிட்டு ,மாதம் மாதம் கிடைக்கும் வட்டிஅவர்களின் கல்விக்கு சிறிதாவது உதவட்டும் இது என்னுடைய கருத்து.

இவர்களுக்கு முடியாவிட்டால் எவருக்கேனும் அவசர உதவி தேவையேற்படின் அவர்களுக்கு பயன்படுத்துங்கள் அக்கா.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, செவ்வந்தி said:

இவர்களுக்கு முடியாவிட்டால் எவருக்கேனும் அவசர உதவி தேவையேற்படின் அவர்களுக்கு பயன்படுத்துங்கள் அக்கா.... 

இப்படியான ஆறப்போடும் காரணங்களினால்தான் நான் யாழ்களத்தின் ஊடாக எவ்வித உதவி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அவசரம் அவசரமாக பணத்தை சேர்த்து விட்டு.......உடனடியாக யாருக்கும் உதவாமல்  பணம் வங்கியில் புளுக்கூடு கட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆயிரம் ஈரோவை வைத்து அறுபத்தெட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.