Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

12805693_1085779478153955_32695758491011

ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை

தண்டனை பெற்றார்...

இது, இது இந்த attitude ஐத்தான் மொக்குத்தனம் என்பது. தலைவனும் தொண்டனும் ஒரே மாதிரி.

  • Replies 103
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது, இது இந்த attitude ஐத்தான் மொக்குத்தனம் என்பது. தலைவனும் தொண்டனும் ஒரே மாதிரி.

The_New_Lady_Justice_LOGO.png

5 minutes ago, goshan_che said:

இது, இது இந்த attitude ஐத்தான் மொக்குத்தனம் என்பது. தலைவனும் தொண்டனும் ஒரே மாதிரி.

நாங்கள் எப்போதோ வைத்த பெயர் அது ,இப்பவும் பொருந்துது .

ஒரு இனத்தின் விடுதலையை எவ்வளவு சில்லறைத்தனாமாக எடைபோட்டுவிட்டார்கள் .இவர்களின் இந்த சிந்தனையாலும் செயற்பாட்டினாலும் தான் மொத்தமாக அழிக்கபடவேண்டியவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பெயர் வைக்க மட்டும் தான் தெரியும். செயற்பாடில்லை........

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

உங்களுக்கு பெயர் வைக்க மட்டும் தான் தெரியும். செயற்பாடில்லை........

விடுங்க

மக்களது ஆதங்கங்களை விருப்பங்களை ஆசாபாசங்களை

களத்தில் நின்றவனே அறிவான்

முடிவெடுப்பான்..

அதை நாங்கள் கூவித்தான் விடியும் என காகங்கள் கூவலாம்

அவ்வளவும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் புலிகளே ஏற்றுக் கொண்டதை ஏனோ சிலர் இப்போதும் ஏற்க மறுக்கின்றனர். 

ஆனால் இப்படி மறுக்கின்றவர்களை நீங்கள் புலிகளாக பார்கின்றமை சரியா???

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

கோசான் புலிகளே ஏற்றுக் கொண்டதை ஏனோ சிலர் இப்போதும் ஏற்க மறுக்கின்றனர். 

ஆனால் இப்படி மறுக்கின்றவர்களை நீங்கள் புலிகளாக பார்கின்றமை சரியா???

நீங்க சீரியசாக நினைக்காதீர்கள்..

அவர் வருவது இதற்காக...

நையாண்டி ......

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 08, 1995:

ராஜீவ் கொலையில் எங்களுக்கு தொடர்பில்லை - பேபி சுப்பிரமணியம்

இந்தியாவின் அவுட்லுக் சஞ்சிகைக்காக ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கு அளித்த நேர்காணலில் சில பகுதிகளை கீழே தமிழ்ப்படுத்தியுள்ளேன்.

Quote

 

கேள்வி: நீங்கள் ஏன் ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்?

பதில்: திரும்பத்திரும்ப கேட்கப்படும் கேள்விக்கு நான் பல தடவைகள் பதில் தந்துள்ளேன். ராஜீவ் காந்தியை "நாங்கள்" கொல்லவில்லை.

 

(நாங்கள் என்றால் உண்மையான புலிகள் என்பது எனது கணிப்பீடு)

Quote

 

கேள்வி: அப்படியானால், ஏன் புலிகள் குறிவைக்கப்படுகிறார்கள்?

பதில்: இதற்குக் கருத்துச் சொல்வது நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும்ங்களுக்கு ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பில்லை.

 

Quote

 

கேள்வி: ஏன் புலிகள் என்றால் இந்தியாவில் அவ்வளவு பயத்தை உருவாக்குகிறது?

பதில்: எங்களது போராட்டம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது எங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது. போராட்டக்குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என்பது அப்போது இந்தியாவின் திட்டமாக இருந்தது. அதற்கு அவர்களுக்கு ஒரு அரசியல் காரணமும் இருந்தது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா காலூன்றுவதைத் தடுப்பதற்கு, சோவியத் யூனியன் பக்கம் சேர வேண்டும் என இந்தியா நினைத்தது. ஆனால் பிற்பாடு ஏற்பட்ட புதிய உலக ஒழுங்கில், இந்தப் பழைய கூட்டணி உடைந்துவிட்டது. ஆகவே ஈழத்தில் போராட்டக்குழுக்கள் தேவையில்லை என்கிற முடிவை இந்தியா எடுத்துவிட்டது.

 

 

Quote

 

கேள்வி: மாத்தையாவுக்கு என்ன நடந்தது?

பதில்: அவர் 1993 இல் கைது செய்யப்பட்டு ஒரு வருட விசாரணைகளின் முடிவில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டார்.

 

 

கூட்டிக்கழித்துப் பாருங்க.. எல்லாம் கணக்கு சரியாக வரும்.

http://www.outlookindia.com/magazine/story/we-did-not-kill-rajiv-gandhi/200167

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை.. ஆதாரங்களுக்கு. அன்ரனும் ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளால் கொல்லப்பட்டார் என்று சொல்லவே இல்லை. அது ஒரு துன்பியல் நிகழ்வாகக் கருதுகிறோம் என்றே சொன்னார். அதனை இப்போது எல்லோரும் சொல்கைம் உட்பட.. தங்கள் சொந்த நலனுக்காக.. புலிகளே கொன்றனர் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஏன் எம்மிலும் சிலர் அப்படித்தான் விளக்கம் கொடுக்கின்றனர். அவர்கள் ஏலவே சொந்த இனத்தையே கருவறுத்த துரோகிகள் என்பது வேறு கதை. 

அட இதெல்லாம் தெரியாமல் இந்தியா சிலருக்கு மரணதண்டனையும் கொடுத்து 

இவ்வளவு அழிவுகளையும் தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டது 

அறியாமல் செய்த பிழைக்கு எதற்கும் ஒருக்கா மன்னிப்பு கேட்க  சொல்லுவம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க அண்ணன் தம்பிய  நம்ப மாட்டம்

அடுத்தவீட்டுக்காறன் அதிலும் கோட் சூட் போட்டவன் சொன்னால் தலையை ஆட்டுவம்...

 

அன்று ஒருவேளை  அந்த 7 இடங்களிலும் விசாரைண மட்டும்  நடாத்தப்பட்டிருந்தால்....

தமிழகத்தின் நிலை  மாறிப்போயிருக்கும்

ஈழத்தமிழரின் நிலை மாறிப்போயிருக்கும்

நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்...

Edited by விசுகு

அண்ணன் தம்பி என்று முதுகில குத்திய எத்தனை பேரை பார்த்துவிட்டம் ,

-ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை

தண்டனை பெற்றார்.

இதையும் நீங்கள் தான் சொல்லுகின்றீர்கள் 

பிறகு ராஜீவை புலிகள் கொலை செய்யவில்லை என்றதற்கும் தலையை ஆட்டுகின்றீர்கள் 

முடிவா என்னதான் சொல்லுகின்றீர்கள் 

புலிகள் கொன்றார்களா ?இல்லையா ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

அண்ணன் தம்பி என்று முதுகில குத்திய எத்தனை பேரை பார்த்துவிட்டம் ,

-ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை

தண்டனை பெற்றார்.

இதையும் நீங்கள் தான் சொல்லுகின்றீர்கள் 

பிறகு ராஜீவை புலிகள் கொலை செய்யவில்லை என்றதற்கும் தலையை ஆட்டுகின்றீர்கள் 

முடிவா என்னதான் சொல்லுகின்றீர்கள் 

புலிகள் கொன்றார்களா ?இல்லையா ?

ராஜீவ் காந்தி  தண்டிக்கப்பபடவேண்டியவர்

கொல்லப்படவேண்டியவர்

இது தான் ஈழத்தமிழரின் நிலை

எவர் கொன்றால் என்ன??

எனக்கு அது தேவையுமில்லை.

 

புலிகள் கொன்றதற்கோ

புலிகள் கொல்லவில்லை என்பதற்கோ 

ஆதரங்களோ சாட்சிகளோ

சரியான விசாரணையே இதுவரை இல்லை

உலகத்திடமே இல்லை.

இது தான் உண்மை.

உலகத்திடமே சாட்சி இல்லை என்பதாலேயே இப்படிப்புலிகளால் மட்டுமே செய்யமுடியும் என நம்பவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்

அதுவும் உண்மைம.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் "சிரிக்க சிறக்க" பகுதிக்குப் போகவே தேவையில்லை! தேசிக்காய்களுக்கு இப்படி நாலு இடியப்பச் சிக்கலைக் குடுத்து அதைக் கையாள விட்டாலே குபீர் சிரிப்பு வரவழைக்கும் பதில்களைத் தான் காண முடிகிறது! (சத்தியமாய், லைசென்ஸ் புதுப்பிக்க லைனில் நின்ற போது யாழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விசுகரின் பதிலைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்து விட்டேன், பக்கத்தில் நின்றவளிடம் மன்னிப்புக் கோரவேண்டியதாகி விட்டது!)

  • கருத்துக்கள உறவுகள்

ராசீவ் காந்தி கொலைபற்றி இதுவரை வெளிவந்த செய்திகளைப் பார்க்கும்போது, அதுபற்றிய உண்மைகள் இந்திய நிர்வாகிகளிடம் இருப்பது சந்தேகமின்றித் தெரிகிறது. பிரபலமானவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் சுயசரிதை எழுதும்போது உண்மைகளை எழுதுவது வழமை. அதுபோன்று இந்த நிர்வாகிகளும் தங்கள் இறுதிக் காலத்தில் சுயசரிதை எழுதும்போது ராசீவ் கொலைபற்றிய உண்மைகள் வெளிவரலாம்.:unsure::rolleyes: 

 

புலிபார்வை பற்றி எனக்கு அக்கறை இல்லை .

 

"ராஜீவ் காந்தி  தண்டிக்கப்பபடவேண்டியவர்

கொல்லப்படவேண்டியவர்

இது தான் ஈழத்தமிழரின் நிலை"

 

இதுதான் எனது நிலை என்று நீங்கள் எழுதினால் ஓகே ,

அதை விட்டு நீங்கள் தான் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை போல "ஈழத்தமிழரின் நிலை " என்று எழுதும் உரிமையை யார் கொடுத்தது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து படம் காட்டுபவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும் .கிழிக்கபடும் போது எப்படியும் திட்டுவார்கள் அது பற்றி எனக்கு எதுவித கவலையும் இல்லை ,

இப்படி எத்தனை பார்த்து விட்டோம் .

 

உங்கள் சிலரின் பார்வை எனக்கு முக்கியமில்லை

நேற்று திண்ணையில் கொழும்பான் எழுதியதை பார்க்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

புலிபார்வை பற்றி எனக்கு அக்கறை இல்லை .

 

"ராஜீவ் காந்தி  தண்டிக்கப்பபடவேண்டியவர்

கொல்லப்படவேண்டியவர்

இது தான் ஈழத்தமிழரின் நிலை"

 

இதுதான் எனது நிலை என்று நீங்கள் எழுதினால் ஓகே ,

அதை விட்டு நீங்கள் தான் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை போல "ஈழத்தமிழரின் நிலை " என்று எழுதும் உரிமையை யார் கொடுத்தது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து படம் காட்டுபவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும் .கிழிக்கபடும் போது எப்படியும் திட்டுவார்கள் அது பற்றி எனக்கு எதுவித கவலையும் இல்லை ,

இப்படி எத்தனை பார்த்து விட்டோம் .

இது தான் அண்ணை உங்களின் பிரச்சினை

நான் என்று எழுதினால் என்ன நான் நான் என்று வருகுது என்பீர்கள்

ஈழத்தமிழர் என்று எழுதினால் அப்படிச்சொல்ல நீங்க யார் என்பீர்கள்

இப்போ இங்கு கருத்து எழுதி பலரும் (கோசான் உட்பட)

அவர் கொல்லப்பட்டது பற்றி ஒரே கருத்தில் தான் எழுதியுள்ளனர்

அதை புலிகள் தவிர்த்திருக்கலாம் என்பது தான் சிலரது  கருத்தாக உள்ளதே தவிர..

இத்துடன் இன்று முடிப்போம் 

சனிக்கிழமையை மனஸ்தாபம் இல்லாமல் இனிமையாக கொண்டாடுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

இத்துடன் இன்று முடிப்போம் 

சனிக்கிழமையை மனஸ்தாபம் இல்லாமல் இனிமையாக கொண்டாடுவோம் 

இது பிடித்திருக்கு

நன்றி வணக்கம்....

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் இறந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. புலிகள் அழிந்து 7 வருடங்கள் ஆகி விட்டது.இப்போது இந்தப் புத்தக வெளியீட்டை இந்து ராம் வெளியிடுவதற்கும் அதற்கு சொல்கைமை அழைத்து இராசீவ் கொலையைப் பற்றி பேச வைத்ததற்கம் காரணம் இருக்காமல் இல்லை.இராசீவ் கொலையின் பின்  குறைந்திருந்த ஈழ ஆதரவு முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் மீண்டும் பெருகி வருவது  தமிழ்த்தேசி எழுச்சி பெறுவது தமித்தேசிய விரோதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதனை முளையிலேயே கிள்ளி விட இப்படிப்பட்ட செய்திகள் தேவை. சொல்கைம் சமாதான பேச்சு வார்ததையின் அனுசரணையாளர். அவர் அந்த வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை.அவர் செய்யவந்தது சமாதனம் ஆனால் அவர் செய்து முடித்தது தமிழ்மக்களின் பேரழிவு.புலிகளளை அழிப்பது அவருடைய வேலையாக இருக்கலாம்.ஒரு இராஜவுக்காகப் பரிதாப்படும் அவர் பல்லாயிரக்கான தமிழ்மக்களின் படுகொலையை பேசாமல் இருப்பது ஏன். சொல்கைம் சொன்னால் அது வேதவாக்காகி விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

போராளி பத்திரிக்கையாளனும் - பொறுக்கி பத்திரிக்கையாளனும்.

ஐ.நாவில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் தனது தொடர் போராட்டத்தினால் ஐ.நாவினுள் இடைக்கால அனுமதிபெற்று தனது பணியை சிறப்பாக செய்கிறார், மேத்யூலீ.

ஐ.நாவில் பணியாற்றியதற்காக தமிழர்களை கடத்தி சித்தரவதை செய்யப்பட்ட ஐ.நா பணியாளர்களை பற்றி பெட்ரி அறிக்கை விவரமாக வெளியிட்டிருந்தது. இவர்களை சித்திரவதை செய்ததைப் பற்றி இதுவரை ஐ.நா எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. அவர்களை பாதுகாக்கவும் முயலவில்லை.

கடந்த வருடம் ஜெனிவா சென்ற பொழுதில் இது குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணையரின் தனிச்செயலாளரிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்து விவரங்களை மே17 இயக்கம் அளித்திருந்தது. அப்பொழுது நடவெடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் ஏதும் எடுக்கவில்லை.

இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி இருக்கிறார் மேத்யூலீ. தினம் தோறும் நிகழும் ஐ.நாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இலங்கையில் ஐ.நாவின் தோல்வி குறித்தும், இலங்கையின் பயங்கரவாதம் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பும் மேத்யூலீயின் போராட்டம் தமிழர்களுக்கு மிக மிக முக்கியமானது.

இதே நேரத்தில், தி இந்து நாளிதழின் என்.ராம் , சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான ஆசியன் ஊடகவியளாலர் பள்ளியில் , நார்வே பேச்சுவார்த்தையின் பின்பான பொழுதில் நேர்மையற்றவராக அறியப்பட்ட எரிக் சோல்ஹேய்ம் தலைமையில் ஈழ விடுதலைக்கு எதிரான பிரச்சார புத்தகத்தினை வெளியிட்டு தேசியத் தலைவர் தோழர்.பிரபாகரனை நேர்மையற்ற முறையிலும், ஆதாரமற்றும் அவதூறு பிரச்சாரத்தினை துவக்கி இருக்கிறார். எரிக் சோல்ஹெய்மும் இதே பிரச்சாரத்தினை சென்னை, தில்லியில் நிகழ்த்துகிறார். இதற்கு பின்னனியில் இருந்து ‘தி இந்து’ செயல்படுகிறது. ஒரு இனப்படுகொலையை பச்சையாக மறைக்கும் பணியை செய்யும் ‘தி இந்து’வில் எழுதி சிலாகிக்கும் தமிழ்ச்சமூகம் எப்படி விடுதலையை பெற்றுவிடமுடியும்? 
என்.ராம் எனும் கொலைகாரனை அங்கீகரிக்கும் எந்த மேடையும் தமிழின விரோத மேடையே...

ஈழப்படுகொலைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் மாத்யூலீ எனும் பத்திரிக்கையாளனுக்கு நிகழ்ந்த அநீதியை கண்டிக்க தமிழர்கள் முன்வரவில்லை.

ஈழத் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் ’தி இந்து’ என்.ராமின் அராஜக்கத்தினை தடுக்கவும் தமிழர்கள் முன்வரவில்லை.

ஈழப்படுகொலைக்கான உங்கள் ஆதரவும், ஆதங்கமும், பஞ்ச் டயலாக்கும் 6 வருடங்களில் கரைந்து போகுமென்றால் தமிழினத்தினை எத்தனை வருடங்களானாலும் எவராலும் காக்க முடியாது.

ஐ.நாவில் மேத்யூ ரசல் லீயால் எழுப்பப்பட்ட கேள்வியின் காணொளி கீழே... 
https://www.youtube.com/watch?v=whyjoeG0qqc

thirumurugan gandhi -facebook

என்னை பொறுத்தவரை நாங்கள் தான் புலிகளை அழித்தோம், ராஜிவ் காந்தியை அழித்தோம்,எங்களை நாங்களே அழித்தோம். அவ்வளவிற்கு உலகத்தில் கெட்ட இனம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

புலிபார்வை பற்றி எனக்கு அக்கறை இல்லை .

 

"ராஜீவ் காந்தி  தண்டிக்கப்பபடவேண்டியவர்

கொல்லப்படவேண்டியவர்

இது தான் ஈழத்தமிழரின் நிலை"

 

இதுதான் எனது நிலை என்று நீங்கள் எழுதினால் ஓகே ,

அதை விட்டு நீங்கள் தான் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை போல "ஈழத்தமிழரின் நிலை " என்று எழுதும் உரிமையை யார் கொடுத்தது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து படம் காட்டுபவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும் .கிழிக்கபடும் போது எப்படியும் திட்டுவார்கள் அது பற்றி எனக்கு எதுவித கவலையும் இல்லை ,

இப்படி எத்தனை பார்த்து விட்டோம் .

 

உங்கள் சிலரின் பார்வை எனக்கு முக்கியமில்லை

நேற்று திண்ணையில் கொழும்பான் எழுதியதை பார்க்கவும் .

இவர் தாய் நாட்டில் இருந்து எழுதுறார் பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

இவர் தாய் நாட்டில் இருந்து எழுதுறார் பாருங்கோ.

அண்ணை இனியும் ஓடிவந்த கோஸ்டியளுக்கு அருவரியிலையிருந்து ரியூசன் எடுக்க மாட்டார். சடப் tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, trinco said:

ஒரு சிலர் யாழிற்கு வருவதே எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று பீலா காட்டுவதற்கும் புலிகளை திட்டி தீர்ப்பதற்கும் தான்.  அந்த வகையில் உங களிக்கும். ஒரே என்ஜொய்தான். வெளுத்து வாங்குங்கள். இப்ப நேரமாச்சு போய்ப் படுங்க. நாளைக்கும் ஏதோ ஒரு தலைப்பு வரும் பீலா காட்டவும் புலிகளை திட்டவும். சேடம் இருக்கும் வரை யாழ் இருக்கிறது வக்கிரத்தை மட்டும் கொட்ட.  ஒரே என்ஜொய்தான். 

 

இது கூடப் பிறந்த பிறவிக்குணம். "தொட்டிலிற் பழக்கம் சுடுகாடுவரை."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.