Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'பிரபாகரன் அஞ்சினார்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பகலவன் said:

உண்மையில் கிருபன் இங்கே எழுதப்பட்ட விடயங்கள் பற்றியல்ல எனது ஆதங்கம். இங்கே எழுதப்படாமல் விடுபட்ட விடயங்கள் (தமிழினி அறிந்திருந்தும்). அவை தமிழினியால் எழுதப்படாமல் விட்டவையா அல்லது எழுதி மறைக்கப்பட்டவையா, என்பதில் இந்த அப்புத்தகம் வெளிவருவதன் நோக்கமும் வெளியிடுபவர்களின் நோக்கமும் தங்கி உள்ளது.  

பிழை பிடிபதல்ல எனது நோக்கம். அப்படியாயின் இரண்டாவது பக்கத்தில் தொடங்குகிறது பிழை. தமிழினி 2015 இல் மரணத்தை தழுவி கொண்டார். 2014இல் புற்றுநோயிற்குள்ளாகி மரணமடைந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

தமிழினி இந்த புத்தகங்களில் வரும் சில பகுதிகளை ஏற்கனவே கதையாகவோ நேரடியாகவோ சொல்லியுமுள்ளார். நான் இதை தமிழினி தான் எழுதினாரா என்று கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏன் சிலவற்றை எழுதவில்லை/எழுதி தணிக்கை செயப்பட்டது என்றே ஆராய விரும்புகிறேன். 

இறுதியுத்தத்தை  நேரடியாக அனுபவித்த ஒரு அரசியல்துறை தளபதிக்கு, புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தனக்கு தெரிந்த விதத்தில், தன்னுடைய கருத்தில் சொல்ல தெரிந்தவருக்கு, இராணுவத்தால் ஏற்படுத்தபட்ட இழப்புகள், போர்க்குற்றங்களை எந்த வரியிலும் வாராமல் மறைபதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. புலிகள் தவறிழைக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயமாக தவறிழைத்துள்ளார்கள். 

ஆனாலும் புலிகளின் இராணுவ தாக்குதல்களையும் அவர்களின் இராணுவ வல்லமையையும் தனக்கு தெரிந்த விதத்தில் எடுத்து கூறிய தமிழினி, இராணுவம் அக்கால பகுதியில் தமிழ் பிரதேசங்களில் செய்த எந்த ஒரு படுகொலையையும் வெளிபடுத்தாத/வெளிபடுத்தி மறைக்கப்பட்டத்தில் தான் சந்தேகமே தொடங்குகிறது.

கிளைமோர் தாக்குதலில் புலிகளின் தளபதி சங்கர் அண்ணை கொல்லப்பட்டதை விவரித்த தமிழினி, மன்னார் பண்டிவிரிச்சான் வெள்ளாங்குளம் பகுதியில் பாடசாலை விளையாட்டு போட்டிக்கு சென்று வந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஏற்றி வந்த வண்டிக்கு கிளைமோர் தாக்குதல் நடாத்தி 20 இற்கும் மேற்பட்ட பள்ளிச்சிறார்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்ததை ஏன் சொல்லவில்லை.

மல்லாவி பகுதியில் தமிழினியின் நட்பு வட்டாரத்தில் இருந்த மனித உரிமை கண்காணிப்பகத்தை சேர்ந்த கிளி பாதர் சிங்கள் ராணுவத்தில் கிளைமோரில் கொல்லப்பட்டதை சொல்லவில்லை. கிளிநொச்சி வைத்தியசாலை. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான விமான தாக்குதல்கள், மனித நேய அமைப்புகளின் வெளியேற்றம்இன்னும் எத்தனயோ படுகொலைகள். போர்குற்றங்கள் (எல்லாமே அரசியல் சம்பந்தபட்டவை.) இதெல்லாம் தமிழினி சொல்லவில்லையா அல்லது இதை வெளியிடுபவர்களின் எஜமானர்களால் தணிக்கைக்கு உட்பட்டவையா என்று ஆராயவேண்டும்.

தமிழினி தன்னுடன் சம்பதப்படாத எத்தனையோ இராணுவ வியுகங்களையும், நடவடிக்கைகளையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் செவி வழி கேள்வியாக, தனது பக்கத்தில் இருந்து கூறியிருப்பதால் மட்டும் அவை உண்மையாகிவிடாது.  இராணுவ தாக்குதல் வியுகங்கள் தமிழினிக்கு என்றைக்குமே விளங்குவதில்லை என்பதை, தணிகைச்செல்வியுடன் இருந்த போராளிகளை கேட்டால் தெரியும்.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, ராணுவம் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்த சுதந்திரபுரம், உடையார்கட்டு பகுதிகளில் ஆட்லெறிகளை நிலை நிறுத்தியமை, இராணுவத்திடம் செல்லும் மக்களை கால்களுக்கு கீழே சுடும்படி பணிக்கப்ட்டமை, இன்னும் இன்னோரன்ன போர்குற்றங்களுக்கு சாட்சி சேர்த்த தமிழினி அக்காவா ஒரு சிங்கள் இராணுவ போர்குற்றத்துக்கு கூட சாட்சி தராமல் மறைத்ததை என்னவென்று சொல்லுவது.

(புலிகளின் ஆயுத களஞ்சியங்களும், வெடிபொருள் உற்பத்தி நிலையங்களும் காலம் காலமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதியில் தான் இருந்தன என்பது வன்னியில் சின்ன குழந்தைகளுக்கும் தெரியும். ஆட்டிலேறிகளின் குறுந்தூர-நீண்ட தூர எறிகணை வீச்சு தெரிந்த எந்த ராணுவ ஆய்வாளனும், சுதந்திரபுர-உடையார்கட்டு பகுதியை தான் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பான் என்பதை நீங்களோ விதுஷாவோ அறியாதது எங்களின் துரதிஷ்டம் தான்)

  உண்மையில் மக்களை காப்பாற்றும் எண்ணம் தான் அரசாங்கத்திற்கு இருந்தது என்றால் புலிகள் உடையார்கட்டு சுததிரபுரத்தில் ஆட்டிலெறிகளை வைத்து சண்டையிடும்போது புதுமாத்தளன் ,முள்ளிவாய்க்கால் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து கடலூடகவோ, வட்டுவாகல் ஊடகவோ மக்களை அரசாங்க கட்டுபட்டு பகுதிக்கு எடுத்திருக்க முடியும். இது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும் தெரியும், சர்வதேச இராணுவ மேலாதிக்கத்துக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாமல் விட்டது தான் புலிகளின் அரசியல் வல்லமை என்று இப்போதாவது மக்களுக்கு புரியவேண்டும்.

உடையார்கட்டு பகுதியில் போராளிகளுடன் நின்ற நீங்கள், நிரோசன் விளையாட்டு மைதானத்தினுள் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க வந்த ஐநா பணியாளர்களை (அதில் ஒருவள் பங்களாதேஷ் ஓய்வுபெற்ற ராணுவ கேணல் - ஏன் ஐநா பணியாளராக வந்தவர் என்பதை உங்களிடம் விடுகிறேன்) இராணுவத்தின் எறிகணை வீச்சு தாக்கியதை நேரில் பார்த்த நீங்கள் சொல்லாமல் விட்டது/சொல்லி மறைக்கப்பட்டது  ஏன்.?

உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணை தாக்குதல் நடந்து 50 இற்கும் மேற்பட்ட காயமடைந்த நோயாளிகள் கொல்லப்பட்டதுக்கு யார் காரணம். சின்ன குழந்தைக்கும் தெரியும் புலிகளின் ஆட்டுலேறி எறிகணைகளின் குறுந்தூர வீச்சு. இருப்பினும் ஐநா, சரவதேசம் யார் நடாத்தியது என்று தெரியாது என்று தான் அறிக்கை விடும். அது தான் உலக நியதி. உங்களுக்கு அதுவும் தெரியாதா..?மறைக்கப்பட்டதா.?

உண்மையில் எவ்வளவோ எழுதி கொண்டு போகலாம். ஆனால் எனக்கும் (சிலகாலம் உங்கள் தோழியின் பெயரில் சாம்பவியாக)  பழக்கமான தமிழினி உங்களுக்காக உங்கள் கணவரையும், அதனை வெளியிடுபவ்ர்களையும் மதித்து நான் எழுதாமல் விடுகிறேன். ஆனால் உண்மைகள் அப்படி பழக்கம் பார்ப்பதில்லை. 

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன். உங்களிடம் புதுக்குடியிருப்பு சிவபுரத்தில் பொட்டம்மான் சொன்னது தொடர்பானது. ஆவணங்களை அழித்துவிடுதல் தொடர்பானது.

நாங்கள் மற்றும் நீங்கள், ஒரு விடுதலைக்காக கொள்கை உறுதியுடன் குடும்பங்களை விடுத்து போராட வந்தவர்கள். சாவு நிச்சயம் என்று தெரிந்தும். ஆனாலும் எங்களுக்காக தங்களின் உயிர்களை துச்சமென மதித்து, தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பை கூட துச்சம் என்று மதித்து, நேரடியாக களமாட முடியாத குற்ற உணர்வுகளுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எங்களுக்காக வேலை செய்தவர்களையும் எங்களுடன் சேர்த்து சாகடிக்க கூடாது என்று தான் பொட்டம்மான் ஆவணங்களை எரிக்க சொன்னவர். இன்றும் கொழும்பில், யாழ்பாணத்தில், வவுனியாவில், சிங்களத்தில் எத்தனை பேர்/ எத்தனை குடும்பங்கள்/ எத்தனை வர்த்தக நிறுவனங்கள்/எத்தனை அரசியல்வாதிகள்/ வெளிநாட்டு ராஜதந்திரிகள்  புலிகள் ஆவணங்களை எரித்தமையால் உயிர் வாழ்கிறார்கள் என்று நீங்கள் அறிவீர்களா.? அவர்கள் இன்றும் புலிகளையும் பொட்டம்மானையும் மனசுக்குள்ளே வாழ்த்துவதை நீங்கள் அறிவீர்களா.?(இது உங்கள் எஜமானர்களை கோபபடுத்தி இருக்கலாம்)

இதனை சாட்டாக வைத்து சேர்த்த பணத்தை  பதுக்கிய்வர்களும்/ இயக்க சொத்துகளை தங்களின் பெயர்களின் மாற்றி எழுதியவர்களும், புலிகளின் பினாமியாக, புலிகளின் வாரிசாக தங்களை காட்டுபவர்களும் இருக்கத்தான்  செய்கிறார்கள். ஆவணங்கள் எரிந்துவிட்டன என்ற நம்பிக்கையில்.

என்ன செய்வது பலரை காப்பற்ற எரித்த ஆவணங்கள் சிலர் கொள்ளையடிக்க உதவுகிறது. மழையும் அப்படி தான் நெல்லுக்கு மட்டும் பெய்வதில்லை, களைக்கும்  சேர்த்து தான் பெய்கிறது.

(ஒவ்வொரு ஆவணத்தை சேர்ப்பதற்கும், ஆவணத்திற்கு தேவையான தகவல்களை சேகரிக்க எத்தனை போராளிகளை இழந்திருப்போம். கடைசிவரை அவற்றை எதிரிகளிடம் கொடுக்க கூடாது மட்டுமல்ல, எந்த கட்டத்திலாவது நாங்கள் எதிரிகளை பின்னகர்த்தினால் அநியாயமாக ஆவணங்களை எரித்துவிட்டோமே என்று கலங்க கூடாது என்பதற்காக, தேவிபுரத்தில் ஒரு கட்டடத்தில் கரும்புலிகளை நிறுத்திவைத்து அந்த இடம் இராணுவத்திடம் கைப்பற்றியதை உறுதிசெய்து பொட்டுஅம்மானின் கட்டளையில் வெடிக்கவைத்து அழித்தார்கள். அந்த அழிவு தான் இன்று பலபேருக்கு வாழ்க்கை)

ரதி, 

உண்மையில் அது தான் காரணம் என்றால், ஆட்சேர்ப்பு எங்களின் கொள்கைகளுக்கு விரோதமானது என்று ஒற்றைக்கையுடன் மங்கிய கண்பார்வையுடன் வந்து சொன்ன வெற்றிச்செல்விக்கு, தமிழினியால் என்ன சொல்லப்பட்டது என்பதை இப்போது உயிரோடு இருக்கும் வெற்றிச்செல்வியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நான் இங்கு எழுதியது யாரையும் காயபடுத்தவோ, நியாபடுத்தவோ இல்லை. வரலாறை மாற்றி எழுதுவதும், சொல்லப்பட வேண்டியவற்றை மறைப்பதும் என்பார்வையில் ஒன்று தான்.

இந்த யாழ்களத்தை கூட நான் ஒரு வரலாற்று ஆவணமாக கருதியே  எழுதுகிறேன். தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் / விமர்சனம் இருந்தால் நேரடியாக சொல்லுங்கள் ஏற்று கொள்கிறேன்.

ஏன் என்றால்

உண்மை என்பது எப்பவும் ஒன்று தான். பொய்களுக்கு தான் பல வடிவங்கள் இருக்கும்.- என் அப்பா எனக்கு  சொன்னது. 

பகலவன் அண்ணா,

நீங்கள் தமிழினியின் புத்தகத்தை விமர்சித்து, சுயதணிக்கையுடன் ஏன் ஒரு கைநூலாவது அல்லது இணைய பிரசுரமாவது வெளியிடக்கூடாது?

நான் முன்பே சொன்னதுதான் - உங்கள் போன்றவர்களின் மெளனம் இங்கே பல உண்மைகளை மறைக்கப் பயன்படுவதோடு, மண்மூட்டை அடிக்க கூப்பிட்டவுடன் கொழும்புக்கு பின் லண்டனுக்கு ஓடியந்த ஆக்காள் எல்லாம், தாம்தான் இவ்வினத்தின் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்கவும் துணைபோகிறது.

"கெட்டவர்களின் செயல்களை விட, நல்லவர்களின் மெளனம் ஆபத்தானது" மார்டின் லூதர் கிங்.

  • Replies 95
  • Views 10.6k
  • Created
  • Last Reply

கோசான்,

நீங்கள் குறித்து எழுதிய பின்னர் இந்த பந்தியை சேர்த்தமைக்காக மன்னித்து கொள்ளுங்கள்.

"லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளின் புலானாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டதால் தான் சர்வதேசம் புலிகளை தடை செய்ததை நியாயபடுத்தும் தமிழினி, மனித நேய பணியாளர்களும், நிறுவனங்களும் அரசினால் தாங்கள் செய்யப்போகும் இனப்படுகொலைக்கு சாட்சியமில்லாமல் பண்ணும் நோக்கில் வெளிஏற்றியதை தட்டிகேட்க நாதியற்று உலகம் இருந்ததை ஏன் சொல்லவில்லை.? "

  • கருத்துக்கள உறவுகள்

செகுவாரா விடுதலை எடுத்து கொடுத்த கியூபாவுக்கே அமேரிக்காரன் வந்திட்டு போய்யிட்டான்.....இதில நாங்கள் எம்மாத்திரம்....

7 hours ago, வைரவன் said:

அர்ஜுன் அண்ணருக்கு சண்டமாருதன் அண்ண எழுதினதில்

ஒரு இழவும் விளங்குது இல்லை.

தனக்கு விளங்கவில்லை என்பதால

அவர் எழுதினது மொடேர்ன் ஆர்ட் ஆகிட்டு

(மொடேர்ன் ஆர்ட்டும் அண்ணருக்கு விளங்குது இல்லை)

அப்படி தனக்கு விளங்காததுக்கு மற்ற ஆட்கள்

பச்சை குத்தி இருப்பதால் அவர்களும் விளங்காமல்

சும்மா பம்மாத்துக்கு பச்சை குத்திருக்கினம் என்று ஒரு வியாக்கியானம்

(மெடேர்ன் ஆர்ட்டை புரிந்து கொள்ள உலகில் ஒருவரும் இல்லையாம்,

புரிந்து கொண்டு ரசிப்பது எல்லாம் சும்மாச்சுமாம்)

ஒன்று தனக்கு  விளங்கவில்லை என்பதை புரிபவர் அறிவாளி

தனக்கு புரியாமல் எழுதியவரை மட்டம் தட்டுபவர் ஒரு முட்டாள்

தனக்கு புரியாமல் எழுதியவதை புரிந்து கொண்டவர்களை ஏளமானப் பார்ப்பவர்

கடைந்தெடுத்த படு முட்டாள்

எனக்கு விளங்காமலே இருந்துவிட்டு போகட்டும் விளங்கியவர்கள் சொல்லுங்கள் அவர் என்ன எழுதியிருக்கின்றார் என்று ?

முப்பது வருட போரட்டம் தோற்றபின் தோல்விக்கான காரணங்கள் நாங்கள் விட்ட பிழைகள் பல இருக்க வேறு எதையோ சம்பந்தமில்லாத விடயங்களை புகுத்தி எவர் போராடியிருந்தாலும் இப்படிதான் முடியும் என்று புலிகளை நியாயப்படுத்துகின்றார்கள் ,

மார்க்ஸ்சிசம் ,மாவோயிசம் ,ரோட்கியிசம் பேசுபவர்களை கண்டால் பின் பக்க கதவால் ஓடதொடங்கி பலவருடங்கள் ,லண்டன் இந்தியா கனடா என்று பல பேரை கண்டாச்சு (கிருபன் விரும்பினால் அவர்களுடன் நின்று படம் எடுக்கலாம் நான் அவர்களை கண்டால் ஓடித்தொலைவம் என்று நினைகின்ற ஆள் ,இதை விட புளொட் நடத்திய சமூக விஞ்ஞான பாடசாலையில் மார்சிசம் படித்தும் இருக்கின்றேன்.எம்முடன் இருந்த பிரான்சில் இருக்கும் ஞானாவும் அதியனும் நாலாம் உலகத்திற்கு தான் வேலை செய்கின்றார்கள் தங்களுடன் வேலை செய்யும் படியும் கேட்டார்கள் ,என்னை பொருத்தவரை வேலைக்கு  ஆகாத தத்துவங்கள்  அவை )

இந்த பந்தியை வாசிப்பம் ,

"புலிகள் மீதான குற்றச்சாடு என்பது எமது அகநிலை முரண்பாடுகளை மூடி மறைத்து பூசி மொழுகும் காரியமாகவே இன்றளவும் இருக்கின்றது. இக்காரியம் எம்மை நாமே எப்போதும் ஏமாற்றும் போக்கு. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் இந்த சமூகத்தில் இருந்து உருவானவை. அவற்றின் செயற்பாடு அசைவியக்கத்திற்கான உந்துசக்தி இச் சமூகத்தில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றது. தமிழர்களின் தோல்வி புலிகளின் தோல்வியாக முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிமனிதர்களின் தோழ்களில் இத்தோல்விகளின் காரணங்களை இறக்கிவைக்கவும் முடியாது. ஏனெனில் அனைத்து முரண்பாடுகளையும் நிலுவையில் வைத்துக்கொண்டும் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் அரசோடு அண்டியிருந்துகொண்டும் போரட்டத்தை காரணம்காட்டி புலப்பெயர்வுகளுடாக வாழ்வை மேம்படுத்திக்கொண்டும் புலிமூலம் தமிழீழம கிடைக்கும் என்ற காரணத்தின் விழைவுதான் புலி உட்பட அனைத்து உயர்க்காவுகொடுத்தலும் ஆகும். இந்த ஆட்டத்தில் நான் இல்லை நீ இல்லை நாங்கள் எப்பவும் அப்படிச்சொன்னம் இப்படிச்சொன்னம் இருபது வருசமா சொல்லிக்கொண்டிருக்கிறம் முப்பது வருசமா முக்கிக்கொண்டிருக்கிறம் என்று அந்நியப்பட்டு கத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை. தோல்வியிலும் சாவுகளிலம் எல்லோருக்கும் பங்குண்டு. யாரும் யோக்கியனாக முடியாது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. "

எனக்கு ஒரு வீதமும் உடன்பாடில்லாத விடயங்கள் இவை .பச்சை குற்றிய புண்ணியவான்கள் அவர் என்ன எழுதியிருகின்றார் என்று எனக்கு விளங்கப்படுத்தினால் நல்லது .

எந்த இயக்கம் போரட்டத்தை முன்னெடுத்து போராடியிருந்தாலும் போராட்டம் இப்படிதான் முடியும் என்று சொல்ல வருகின்றாரா ?

எவர் முதன்மை எடுத்திருந்தாலும் விடுதலை போராட்டம் எப்படியும் இறுதியில் பல கொலைகளை செய்து பயங்கரவாத போராட்டம் ஆகியிருக்கும் என்று சொல்ல வாறாரா ?

சரி அப்படிதான் எடுத்துகொண்டாலும் ,

சர்வதேசத்தால் முன்வைக்கப்பட்ட  தீர்வுகளை புலிகள் ஏற்ருகொண்டிருந்தாலும் முடிவு இதுதான் என்கின்றாரா ?

ஏனெனில் எல்லாவறிற்கும் பொதுப்படையாக மேலே நான் இணைத்த பந்திபோல எழுதி புலிகளில் பிழையில்ல அவர்கள் இருந்துவந்த சமூக கட்டமைப்பு அப்படி ,அது இப்படி அகமுரண்பாடுகளை கொண்டிருக்கும் ,அசைவியக்கத்தின் உந்து சக்தி இந்த சமூகதில் இருந்தே ? கிடைக்க பெறுகின்றன .

சிரிப்பாயிருக்கு . 

சமூகம் என்பது முற்றுமுழுதாக கற்றுணர்ந்து போராட்டத்தை நடத்த முன்வரபோவதில்லை போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கமும் தலைமையும் தான் போராட்டத்தை சரியாக முன்னெடுத்து மக்களுக்கு விடுதலையை பெற்றுகொடுக்கவேண்டும் 

ரஷ்யா ,சீனா ,கியூபாவிலும் இருந்த சமூகத்தின் செயற்பட்டாலும் அசைவியக்கத்தின் உந்து சக்தியாலும் போராட்டம் வென்றதா அல்லது போராட்டத்தை நடாத்திய அமைப்புகளினதும் தலைமைகளினதும் செயற்பட்டினாலும் போராட்டம் வென்றதா ?

எனக்கு பதில் முதலில் பைரவனில் இருந்து தொடங்கட்டும் பிறகு சண்டமாருதன்  இருந்து வேண்டாம் பச்சை குத்தியவர்கள் என்ன விளங்கினார்கள் என்று எழுதினால் புண்ணியமாக இருக்கும் .

குறிப்பு - இதற்குள் உடையார் எங்கு எப்படி வந்தார் என்று புரியவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு இனி அரிவரியிலெ இருந்துதான் தொடங்க வேண்டும் போல .......

கிளக்குதீமோர் விடுதலை பெற்றது போராட்ட திறனால் இல்லை.
இந்தோனேசிய தீவு கூட்டத்தில் உள்ள ஒரே ஒரு கிறிஸ்தவ தீவு என்பதால்தான்.

இந்தியா விடுதலை பெற்றது காந்தியால் அல்ல ..
2ஆம் உலகப்போர  சமன்பாடு ஐக்கிய இராச்சியத்தை ஆட்டம் காண வைத்தது 
ஆயுதங்கள் மூன்றாம் உலகை சென்றடைய அது பாலம் போட்டது. 
ஆயதங்களால் ஆக்கிரமிப்பு செய்த காலனி ஆதிக்கம் கேள்விகுறி ஆனது 

கொலம்பஸ் இந்தியாவிட்குதான் புறபட்டான் அமெரிக்காவில் தரை தட்டியபோது 
அதைஇந்தியா என்றுதான் நினைத்திருந்தான். இந்தியர்கள் கருப்பர்கள் ஆதலால்தான் 
அவன் கண்டவர்களை ரெட் இந்தியன் என்று சொன்னான்.
பின்பு ரெட் இந்தியர்களை சுட்டு தள்ளி விட்டு நாட்டை கைபாற்றினார்கள்.

1700இல் அது சாத்தியம் ஆகவில்லை ....
உலக ஒழுங்கு மாறிவிட்டது. 
கொலம்பஸ் ஒருவேளை இந்தியா வந்திருந்தால் இன்றைய அமெரிக்காவாக 
வெள்ளைகார இந்தியா இருந்திருக்கும். 

கொடி கட்டி பறந்த ரோம ராஜ்ஜியம் இப்போ பூஜ்ஜியம் 

எங்கு 
எப்போது 
இவை இரண்டும்தான் உலகில் எல்லா விடயங்களையும் தீர்மானிக்கின்றன.

ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்யும் மேற்கு 
வட கொரியாவுடன் 2015-2016இல் செய்யவில்லை 
1995இல் வட கொரியாவோடு செய்த ஒப்பந்தங்களை ஈரானுடன் செய்யவில்லை.

தற்போதைய மத்திய கிழக்கு சூழ்நிலையில் அடக்கித்தான் வாசிக்க வேண்டும் 
இது ஈரான் தோற்றுவித்த ஒன்றல்ல ..... காலமும்  மத்திய கிழக்கு அரசியல் போக்கும்  
தோற்றுவித்த ஒன்று. 

உமா மகேஸ்வரன் மாலைதீவுக்கு சென்று 
ஈழ விடுதலை போராட்டத்தை சர்வதேச பயங்கரவாத போராக மாற்றாமல் போயிருந்தால் 
80களில் ஒரு வேளை பிரபாகரனால் ஈழம் அமைத்திருக்க முடியும். 

றோவின் திட்டபடி டெலோ புலிகளை அழித்து வெற்றி கண்டிருந்தால் 
சிறிசபாரத்தினத்தின் தலைமயில் குறைந்த பட்சம் மாநில அளவிலான ரீதியாக 
என்றாலும் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து இந்தியா பிரித்திருக்கும்.

2005இல் அமெரிக்காவில் இருந்து கொம்புடரில் ஒரு பொருளை கிளிக் செய்து கிறடி கார்டை இழுத்தால் 
பொருள் சீனாவில் இருந்து புறபாட்டு 2-3 வாரத்திற்குள் கொம்புடரில் கிளிக் செய்த முகவரியை 
அடைய வேண்டும் என்றால் ...............
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடைபட்ட இடங்களில் பல மாற்றம் இன்றி அமையாத ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

உண்மையில் கிருபன் இங்கே எழுதப்பட்ட விடயங்கள் பற்றியல்ல எனது ஆதங்கம். இங்கே எழுதப்படாமல் விடுபட்ட விடயங்கள் (தமிழினி அறிந்திருந்தும்). அவை தமிழினியால் எழுதப்படாமல் விட்டவையா அல்லது எழுதி மறைக்கப்பட்டவையா, என்பதில் இந்த புத்தகம் வெளிவருவதன் நோக்கமும் வெளியிடுபவர்களின் நோக்கமும் தங்கி உள்ளது.  

பிழை பிடிபதல்ல எனது நோக்கம். அப்படியாயின் இரண்டாவது பக்கத்தில் தொடங்குகிறது பிழை. தமிழினி 2015 இல் மரணத்தை தழுவி கொண்டார். 2014இல் புற்றுநோயிற்குள்ளாகி மரணமடைந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

தமிழினி இந்த புத்தகங்களில் வரும் சில பகுதிகளை ஏற்கனவே கதையாகவோ நேரடியாகவோ சொல்லியுமுள்ளார். நான் இதை தமிழினி தான் எழுதினாரா என்று கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏன் சிலவற்றை எழுதவில்லை/எழுதி தணிக்கை செயப்பட்டது என்றே ஆராய விரும்புகிறேன். 

இறுதியுத்தத்தை  நேரடியாக அனுபவித்த ஒரு அரசியல்துறை தளபதிக்கு, புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தனக்கு தெரிந்த விதத்தில், தன்னுடைய கருத்தில் சொல்ல தெரிந்தவருக்கு, இராணுவத்தால் ஏற்படுத்தபட்ட இழப்புகள், போர்க்குற்றங்களை எந்த வரியிலும் வாராமல் மறைபதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. புலிகள் தவறிழைக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயமாக தவறிழைத்துள்ளார்கள். 

ஆனாலும் புலிகளின் இராணுவ தாக்குதல்களையும் அவர்களின் இராணுவ வல்லமையையும் தனக்கு தெரிந்த விதத்தில் எடுத்து கூறிய தமிழினி, சிங்கள இராணுவம் அக்கால பகுதியில் தமிழ் பிரதேசங்களில் செய்த எந்த ஒரு படுகொலையையும் வெளிபடுத்தாத/வெளிபடுத்தி மறைக்கப்பட்டத்தில் தான் சந்தேகமே தொடங்குகிறது.

கிளைமோர் தாக்குதலில் புலிகளின் தளபதி சங்கர் அண்ணை கொல்லப்பட்டதை விவரித்த தமிழினி, மன்னார் பண்டிவிரிச்சான் வெள்ளாங்குளம் பகுதியில் பாடசாலை விளையாட்டு போட்டிக்கு சென்று வந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஏற்றி வந்த வண்டிக்கு கிளைமோர் தாக்குதல் நடாத்தி 20 இற்கும் மேற்பட்ட பள்ளிச்சிறார்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்ததை ஏன் சொல்லவில்லை.

மல்லாவி பகுதியில் தமிழினியின் நட்பு வட்டாரத்தில் இருந்த மனித உரிமை கண்காணிப்பகத்தை சேர்ந்த கிளி பாதர் சிங்கள் ராணுவத்தில் கிளைமோரில் கொல்லப்பட்டதை சொல்லவில்லை. கிளிநொச்சி வைத்தியசாலை. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான விமான தாக்குதல்கள் எறிகணை வீச்சுகள் , மனித நேய அமைப்புகளின் வெளியேற்றம்இன்னும் எத்தனயோ படுகொலைகள். போர்குற்றங்கள் (எல்லாமே அரசியல் சம்பந்தபட்டவை.) இதெல்லாம் தமிழினி சொல்லவில்லையா அல்லது இதை வெளியிடுபவர்களின் எஜமானர்களால் தணிக்கைக்கு உட்பட்டவையா என்று ஆராயவேண்டும்.

தமிழினி தன்னுடன் சம்பதப்படாத எத்தனையோ இராணுவ வியுகங்களையும், நடவடிக்கைகளையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் செவி வழி கேள்வியாக, தனது பக்கத்தில் இருந்து கூறியிருப்பதால் மட்டும் அவை உண்மையாகிவிடாது.  இராணுவ தாக்குதல் வியுகங்கள் தமிழினிக்கு என்றைக்குமே விளங்குவதில்லை என்பதை, தணிகைச்செல்வியுடன் இருந்த போராளிகளை கேட்டால் தெரியும்.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, ராணுவம் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்த சுதந்திரபுரம், உடையார்கட்டு பகுதிகளில் ஆட்லெறிகளை நிலை நிறுத்தியமை, இராணுவத்திடம் செல்லும் மக்களை கால்களுக்கு கீழே சுடும்படி பணிக்கப்ட்டமை, இன்னும் இன்னோரன்ன போர்குற்றங்களுக்கு சாட்சி சேர்த்த தமிழினி ஒரே ஒரு சிங்கள் இராணுவ போர்குற்றத்துக்கு கூட சாட்சி தராமல் மறைத்ததை என்னவென்று சொல்லுவது.

(புலிகளின் ஆயுத களஞ்சியங்களும், வெடிபொருள் உற்பத்தி நிலையங்களும் காலம் காலமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதியில் தான் இருந்தன என்பது வன்னியில் சின்ன குழந்தைகளுக்கும் தெரியும். ஆட்டிலேறிகளின் குறுந்தூர-நீண்ட தூர எறிகணை வீச்சு தெரிந்த எந்த ராணுவ ஆய்வாளனும், சுதந்திரபுர-உடையார்கட்டு பகுதியை தான் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பான் என்பதை நீங்களோ விதுஷாவோ அறியாதது எங்களின் துரதிஷ்டம் தான்)

  உண்மையில் மக்களை காப்பாற்றும் எண்ணம் தான் அரசாங்கத்திற்கு இருந்தது என்றால் புலிகள் உடையார்கட்டு சுததிரபுரத்தில் ஆட்டிலெறிகளை வைத்து சண்டையிடும்போது புதுமாத்தளன் ,முள்ளிவாய்க்கால் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து கடலூடகவோ, வட்டுவாகல் ஊடகவோ மக்களை அரசாங்க கட்டுபட்டு பகுதிக்கு எடுத்திருக்க முடியும். இது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும் தெரியும், சர்வதேச இராணுவ மேலாதிக்கத்துக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாமல் விட்டது தான் புலிகளின் அரசியல் வல்லமை என்று இப்போதாவது மக்களுக்கு புரியவேண்டும்.

உடையார்கட்டு பகுதியில் போராளிகளுடன் நின்ற நீங்கள், நிரோசன் விளையாட்டு மைதானத்தினுள் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க வந்த ஐநா பணியாளர்களை (அதில் ஒருவர் பங்களாதேஷ் ஓய்வுபெற்ற ராணுவ கேணல் - ஏன் ஐநா பணியாளராக வந்தவர் என்பதை உங்களிடம் விடுகிறேன்) இராணுவத்தின் எறிகணை வீச்சு தாக்கியதை நேரில் பார்த்த நீங்கள் சொல்லாமல் விட்டது/சொல்லி மறைக்கப்பட்டது  ஏன்.?

உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணை தாக்குதல் நடந்து 50 இற்கும் மேற்பட்ட காயமடைந்த நோயாளிகள் கொல்லப்பட்டதுக்கு யார் காரணம். சின்ன குழந்தைக்கும் தெரியும் புலிகளின் ஆட்டுலேறி எறிகணைகளின் குறுந்தூர வீச்சு. இருப்பினும் ஐநா, சரவதேசம் யார் நடாத்தியது என்று தெரியாது என்று தான் அறிக்கை விடும். அது தான் உலக நியதி. உங்களுக்கு அதுவும் தெரியாதா..?மறைக்கப்பட்டதா.?

லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளின் புலானாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டதால் தான் சர்வதேசம் புலிகளை தடை செய்ததை நியாயபடுத்தும் தமிழினி, மனித நேய பணியாளர்களும், நிறுவனங்களும் அரசினால் தாங்கள் செய்யப்போகும் இனப்படுகொலைக்கு சாட்சியமில்லாமல் பண்ணும் நோக்கில் வெளிஏற்றியதை தட்டிகேட்க நாதியற்று உலகம் இருந்ததை ஏன் சொல்லவில்லை.? 

உண்மையில் எவ்வளவோ எழுதி கொண்டு போகலாம். ஆனால் எனக்கும் (சிலகாலம் உங்கள் தோழியின் பெயரில் சாம்பவியாக)  பழக்கமான தமிழினி உங்களுக்காக உங்கள் கணவரையும், அதனை வெளியிடுபவ்ர்களையும் மதித்து நான் எழுதாமல் விடுகிறேன். ஆனால் உண்மைகள் அப்படி பழக்கம் பார்ப்பதில்லை. 

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன். உங்களிடம் புதுக்குடியிருப்பு சிவபுரத்தில் பொட்டம்மான் சொன்னது தொடர்பானது. ஆவணங்களை அழித்துவிடுதல் தொடர்பானது.

நாங்கள் மற்றும் நீங்கள், ஒரு விடுதலைக்காக கொள்கை உறுதியுடன் குடும்பங்களை விடுத்து போராட வந்தவர்கள். சாவு நிச்சயம் என்று தெரிந்தும். ஆனாலும் எங்களுக்காக தங்களின் உயிர்களை துச்சமென மதித்து, தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பை கூட துச்சம் என்று மதித்து, நேரடியாக களமாட முடியாத குற்ற உணர்வுகளுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எங்களுக்காக வேலை செய்தவர்களையும் எங்களுடன் சேர்த்து சாகடிக்க கூடாது என்று தான் பொட்டம்மான் ஆவணங்களை எரிக்க சொன்னவர். இன்றும் கொழும்பில், யாழ்பாணத்தில், வவுனியாவில், சிங்களத்தில் எத்தனை பேர்/ எத்தனை குடும்பங்கள்/ எத்தனை வர்த்தக நிறுவனங்கள்/எத்தனை அரசியல்வாதிகள்/ வெளிநாட்டு ராஜதந்திரிகள்  புலிகள் ஆவணங்களை எரித்தமையால் உயிர் வாழ்கிறார்கள் என்று நீங்கள் அறிவீர்களா.? அவர்கள் இன்றும் புலிகளையும் பொட்டம்மானையும் மனசுக்குள்ளே வாழ்த்துவதை நீங்கள் அறிவீர்களா.?(இது உங்கள் எஜமானர்களை கோபபடுத்தி இருக்கலாம்)

இதனை சாட்டாக வைத்து சேர்த்த பணத்தை  பதுக்கிய்வர்களும்/ இயக்க சொத்துகளை தங்களின் பெயர்களின் மாற்றி எழுதியவர்களும், புலிகளின் பினாமியாக, புலிகளின் வாரிசாக தங்களை காட்டுபவர்களும் இருக்கத்தான்  செய்கிறார்கள். ஆவணங்கள் எரிந்துவிட்டன என்ற நம்பிக்கையில்.

என்ன செய்வது பலரை காப்பற்ற எரித்த ஆவணங்கள் சிலர் கொள்ளையடிக்க உதவுகிறது. மழையும் அப்படி தான் நெல்லுக்கு மட்டும் பெய்வதில்லை, களைக்கும்  சேர்த்து தான் பெய்கிறது.

(ஒவ்வொரு ஆவணத்தை சேர்ப்பதற்கும், ஆவணத்திற்கு தேவையான தகவல்களை சேகரிக்க எத்தனை போராளிகளை இழந்திருப்போம். கடைசிவரை அவற்றை எதிரிகளிடம் கொடுக்க கூடாது மட்டுமல்ல, எந்த கட்டத்திலாவது நாங்கள் எதிரிகளை பின்னகர்த்தினால் அநியாயமாக ஆவணங்களை எரித்துவிட்டோமே என்று கலங்க கூடாது என்பதற்காக, தேவிபுரத்தில் ஒரு கட்டடத்தில் கரும்புலிகளை நிறுத்திவைத்து அந்த இடம் இராணுவத்திடம் கைப்பற்றியதை உறுதிசெய்து பொட்டுஅம்மானின் கட்டளையில் வெடிக்கவைத்து அழித்தார்கள். அந்த அழிவு தான் இன்று பலபேருக்கு வாழ்க்கை)

ரதி, 

உண்மையில் அது தான் காரணம் என்றால், ஆட்சேர்ப்பு எங்களின் கொள்கைகளுக்கு விரோதமானது என்று ஒற்றைக்கையுடன் மங்கிய கண்பார்வையுடன் வந்து சொன்ன வெற்றிச்செல்விக்கு, தமிழினியால் என்ன சொல்லப்பட்டது என்பதை இப்போது உயிரோடு இருக்கும் வெற்றிச்செல்வியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நான் இங்கு எழுதியது யாரையும் காயபடுத்தவோ, நியாபடுத்தவோ இல்லை. வரலாறை மாற்றி எழுதுவதும், சொல்லப்பட வேண்டியவற்றை மறைப்பதும் என்பார்வையில் ஒன்று தான்.

இந்த யாழ்களத்தை கூட நான் ஒரு வரலாற்று ஆவணமாக கருதியே  எழுதுகிறேன். தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் / விமர்சனம் இருந்தால் நேரடியாக சொல்லுங்கள் ஏற்று கொள்கிறேன்.

ஏன் என்றால்

உண்மை என்பது எப்பவும் ஒன்று தான். பொய்களுக்கு தான் பல வடிவங்கள் இருக்கும்.- என் அப்பா எனக்கு  சொன்னது. 

பகலவன்

உங்களது விரிவான பதிலையும்

தற்பொழுது எழுதப்படும் புத்தகங்கள் மற்றும் கதைகளையும் பார்க்கும் போது.....

இன்றும் புலிகளும்

அவர்களது கொள்கை கோட்பாடுகளும்

தமிழரின் விடுதலை அவாவும் 

தமிழர்கள்தான் புலிகள்

புலிகள் தான் தமிழர்கள் என்ற நிலையும்

உலகையும் சிறீலங்காவையும் மட்டுமல்ல

எம்மவரையும் 

கிலி கொள்ளும் அளவுக்கும் பெறுமதியானதுமாக உள்ளதா?

அப்படித்தானே பார்க்கணும்

ஒன்றுமில்லாத விடயத்துக்கு

இவ்வளவு பணத்தையும் நேரத்தையும் பொய்களையும் கௌரவங்களையும்  செலவளிப்பார்களா என்ன???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களுக்கும் 2009 இற்குப் பிறகு புலிகள் மீது குற்றஞ் சொல்பவர்களுக்குமான கருத்து இது. இப்போது களத்தில் புலிகள் இல்லை.புலிகiளின் குறை கற்றங்களை விமர்சித்து எழுதப்பட்டதாக சொல்படும் புத்தகத்தை எழுதியதாகக் கூறப்படும் தமிழினியும் உயிருடன் இல்லை. தமிழினி இந்தப் புத்தகத்தை உண்மையிலேயே எழுதியிருந்தால் அவர் உயிருடன் இருக்கம்பொழுதே அதை வெளியிட எந்தத்தடையும் இருந்திருக்கவில்லை.தந்தப் புத்தகத்தை தமிழனிதான் எழுதினார் என்பதற்கு 100 வீதம் ஆதாரம் இல்லை.இப்பொழது இல்லாத புலிகளைப்பற்றி கு;றகூறுவதால் யாருக்கு என்ன இலாபம் இருக்கப் போகிறது. முன்பு தான் புலிகள் தடையாக இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். இப்பொழுதாவது தமிழ்மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள். அல்லாத புலிகள்மீது அவதூறு செய்வதன் நீங்'கள் இதற்கு மட்டும்தான் இலாயக்கு என்பதைத்தான் நிரூபிக்கிறீர்கள். புலிகளின் மீது விமர்சனம் செய்வதால் அதாயம் அடையப்போவது சிங்களதேசமும் அதன்மக்களுமே ஒழிய தமிழி;மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த விடயத்திற்கு உங்கள் நேரத்தைச் செலவழிப்பது. விழலுக்கு நீர் இறைப்பது போலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இது முற்றிலும் தவறான வாதம். மேலே பகலவன் கூறியது போல இந்தப் புத்தகம் ஒரு பக்க நியாயத்தை மட்டுமே பேசுகிறது, ஏன் சில இடங்களில் பொய்யையும் சொல்கிறது என்றால், அதை சுட்டிக்காட்டுவது உண்மை தெரிந்த அத்தனை பேரினதும் கடமை.

கூடவே மாற்றுக் கருத்து கொண்டுள்ள நாமும், புலியை விமர்சிக்கிறது என்பதற்காக இந்த புத்தகத்தை ஏதோ பிரபஞ்ச உண்மை போல கொண்டாடவும் முடியாது.

மாற்றுக் கருத்து என்பது அறிவின் பால் எழும் போது, இந்த புத்தகம் எங்கே, எந்த சூழலில், யாரால் எழுதப்பட்டது என்பதும், உயிரோடு உள்ளவரை எழுதியவர் இதை பற்றி ஏதும் சொல்லவில்லை என்ற கேள்விகள் எழுவது தவிர்கவியலாதது.

தவிரவும் இலங்கையில் இருக்கும் ஒரு முன்னாள் புலியின் புத்தகம், தணிக்கை இன்றி, இலங்கையிலேயே வெளியிட அனுமதிக்கப் படும் என்று யாராகிலும் நம்புவார்களேயாயின், அது ஏற்புடயதன்று.

ஆனால் இதை வைத்து - புலியினை விமர்சிக்காதீர் என்று சொல்ல முடியாது. சரியோ பிழையோ, 30 வருடமாக எம் அரசியலில் எல்லாமாக இருந்தவர்கள் அவர்கள். இன்று எம் அரசியல் தோத்துப் போய் நிக்கிறது.

இனி ஒரு புதிய அரசியல் இதிலின்றும் எழவேண்டுமாயின், கடந்த கால நடைமுறைகள் விமர்சிக்கப் பட்டே ஆகவேண்டும்.

இல்லாத புலியை விமர்சிப்பதால் எதிரிக்கு ஒரு லாபமும் இல்லை. விமர்சியாமல் விட்டால் நட்டம் நமக்குத்தான்.

அதுக்காக புலி செய்தது எல்லாம் பிழை என்றும் ஆகாது. சாதிய மறுப்பு, பிரதேசவாத்தை கட்டுப்படுத்த முயன்றமை, சட்டம் ஒழுங்கு என்று அவர்களில் நல்ல விடயங்களும் இருந்தன. அதை ஏற்கும் பண்பும் விமர்சகர்களுக்கு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கை செய்தது இனபடுகொலை 
இந்த உணமையை உலகறிய செய்வதில் 
எமக்கு நிறையா லாபம் இல்லை விடிவு கூட இருக்கிறது.

விமர்சனம் என்பது ஒன்றை முழுதாக தெரிந்த பின்னர் வைக்க கூடிய ஒன்று.
அரைகுறைகள் வாந்தி மட்டுமே எடுக்க முடியும் அதைதான் எடுக்கிறார்கள்.
அதை பற்றியே புலவர் சொல்கிறார்.

மற்றது எல்லா மார்க்கமும் தர்கத்திட்கு உரியது அவர் அவர் 
மன நிலைப்படி ஒன்று சரியாகிறது இன்னொன்று பிழை ஆகிறது 
புலிகளை எல்லோரும் ஏற்கவேண்டும் அல்லது ஏற்க முடியும் நானோ வேறு யாரோ 
எண்ணுவார்கள் என்று நான் எனுவதில்லை.

கொமினிசியம் பிழை என்று முதளித்துவத்தை ஏற்றுகொண்டால் ...
தற்போதைய அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் முழுதும் 
முதலாளித்துவத்திட்கு எதிரானதாகவே இருக்கிறது.

உலகிற்கு திறந்த சந்தையை சில இடங்களில் அச்சுறுத்தி கூட அறிமுகம் செய்த 
அமெரிக்காவில் இன்று வேலி அடைப்பேன் வெட்டுவேன் கொத்துவேன் என்பவர் 
முதன்மை வேட்பாளராக மக்களால் தெரிவாகி கொண்டு இருக்கிறார்.

அடுத்தவர்களுக்கு தமது பொருட்களை கொட்டிவிட சாதகமாக இருந்த முதளித்துவம் 
அடுத்தவர்களும் பொருள் உற்பத்தியில் இறங்கி இங்கு கொண்டுவந்து கொட்ட கசக்கிறது.

என்னுடைய வாதம் என்னவெனில் ....
காலம் சூழ்நிலை பிராந்திய வல்லாதிக்கம் உலக வல்லாதிக்கம் ஈழ தமிழ் மக்களின் 
பலம் பலவீனம் கலை கலாச்சாரம் மதம் பண்பாடு இயற்கை அழிவுகள் . என்று எல்லாமும் எதோ ஒரு விதத்தில்  புலிகளின் வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் பங்கு எடுத்திருக்கிறது 
இதை முழுமையாக ஒருவன் விமர்சனம் செய்ய முடியும் என்றால் அவன் முதலில் 
இவை பற்றி அறிந்த அரசியல் அறிஞானாக தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.
அதை அடுத்த ஒரு சரியான விமர்சனத்தை வைக்க முடியும். அதில் கூட புலிகளின் இராணுவ மற்றும் புலனாய்வு என்பது மிகவும் ரகசியமானது (இதுக்கு புலிகள் விதிவிலக்கு இல்லை உலகம் பூரா இருக்கும் ஒன்று) இதை தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

மற்றையபடி நானும் நீங்களும் எல்லா ஈழ தமிழ் மக்களும் நேரடியாக ஆயுத போராட்டத்தால் பாதிக்கபட்டவர்கள் எனது மாமாவை புலிகள் ஊரார் பொறாமை பேச்சை கேட்டு கொன்றார்கள்.
என்னை இரண்டுமுறை கைது செய்து வைத்திருந்தார்கள்.
இதில் எனக்கு தனிபட்ட செய்ததை நான் விமர்சிக்கலாம் ...... அது கூட ஒட்டுமொத்த புலிகளின் தலைமையின் 
முடிவாக இல்லை புலியில் இருந்த இன்னொரு தனி நபரின் செயலாகி இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய கண்ணோட்டத்தை பத்தி செய்வது என்பதில் ஒரு முரண்பாடும் இல்லை 
தற்போதைய சூழலில் புலிகளுக்கு எதிரான தமிழ் எழுத்துக்கள் 
ஈழ தமிழருக்கு எந்த நன்மையையும் பயிற்க போவதில்லை 
மாறாக சிங்கள இந்திய உளவு துறைகள் பாரிய பண செலவில் அதை ஏன் செய்கிறார்கள் 
என்று கேள்விக்கு விடை தேடினால் காரணத்தை நான் எழுத தேவை இல்லை.

இனம் சார்ந்து சிந்திக்கும் ஒருவனால் இந்த அசிங்கத்தை இன்றைய சூழலில் செய்ய முடியாது 
தனது தனிபட்ட வருவாய் லாபங்களுக்காக சிலர் அதை இதை செய்கிறார்கள். 

நான் படித்த யுனிவெர்சிடியில் இன படுகொலை சம்மந்தமான ஒரு பிரிவு உண்டு 
யூதர்களின் இனபடுகொலை என்பது யூதர்காளால் அது செய்யபட்டு கொண்டு வந்தது 
இதை நான் சாதகம் ஆக்கி கொஞ்சம் கொசோவா ருவண்டா ஆபிரிக்க கம்போடியா மாணவரை சேர்த்து 
அதில் நாமும் சேர்ந்துகொண்டோம் ஓவரு வருடமும் மூன்று நாட்கள் கண்காட்சி செய்வோம்.

சிங்களவர்கள் தம்மால் முடிந்த எதிர்ப்பை செய்துகொண்டே இருந்தார்கள் 
இவர்கள் பயங்கரவாதிகள் என்று தொடங்கி அதற்கு பொறுப்பானவரிடம் ஒரே சர்ச்சை 
செய்து கொண்டே இருப்பார்கள். இறுதியில் 2012இல் இவர் சொன்னார் நீங்களும் வந்து உங்கள் பக்க 
நியாத்தை சொல்வதாக உங்கள் சார்பில் ஒரு டென்ட் டை (கூடாரம்)  போடுங்கள் என்று.
அவர்கள் எங்கிருந்தோ தேடி பிடித்து இரண்டு முஸ்லீம்களை கொண்டுவந்து புலிகள் தம்மை யாழில் இருந்து 
கலைத்தார்கள் அது இது என்று எழுதி முஸ்லிம்கள் மன்னாரில் (உங்களுக்கு தெரிந்திருக்கும்) அரபிகள் வந்தால் காட்ட 10 குடும்பத்தை மன்னாரில் வைத்திருக்கிறார்கள். அந்த முகாமின் படங்களை போட்டு ஒரு கூடாரம் அமைத்தார்கள். நான் ஒரு முஸ்லிம் பெயரில் ஒரு ஈமெயில் திறந்து அவர்களுடன் தொடர்பு கொண்டேன் இது நல்ல விடயம் நானும் பங்கு எடுக்க போகிறேன் வேறு மாகாணத்தில் இருக்கிறேன் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் ..... சில உரையாடலின் பின்பு 
எனக்கு இலங்கை துதரலயத்தில் இருந்து ஈமெயில் வருகிறது விமான டிக்கெட் செலவு எல்லாம் தாம் செய்கிறோம்  என்னை அங்கு வரும்படி. அப்படி ஒன்றை நான் வசிக்கும் மாகாணத்திலும் செய்ய வேண்டும் என்றார்கள். அது பற்றி விரிவாக உரையாடலாம் என்று 
உங்களுக்கு புரிந்திருக்கும் இங்கு எனக்கு எதிர்கடை எங்கிருந்து வந்தது என்று.

இவற்றை எல்லாம் தண்டி ஈழ இனத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவன் உலகை புரிந்தவன் செய்ய கூடியது 
எமக்கு இலங்கை சிங்கள காடைகள் செய்ததை பரப்புரை செய்வதுதான்.
வலி என்பது எல்லோருக்கும் அதோ ஒரு வடிவில் வந்ததுதான். அந்த விளம்பரத்தில் இனி லாபமில்லை என்பது எனது தனிபட்ட எண்ணம்.
புலிகள் இருக்கும்போது புலிகள் பற்றி விமர்சனம் செய்திருந்தால் அவர்கள் தம்மமை ஒருவேளை திருத்தியோ 
மாற்றியோ அமைத்திருக்கலாம். அவர்களாகவே அதை கேட்டபோது ஒரு சிலரே அதை செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகலவன் said:

உண்மையில் கிருபன் இங்கே எழுதப்பட்ட விடயங்கள் பற்றியல்ல எனது ஆதங்கம். இங்கே எழுதப்படாமல் விடுபட்ட விடயங்கள் (தமிழினி அறிந்திருந்தும்). அவை தமிழினியால் எழுதப்படாமல் விட்டவையா அல்லது எழுதி மறைக்கப்பட்டவையா, என்பதில் இந்த புத்தகம் வெளிவருவதன் நோக்கமும் வெளியிடுபவர்களின் நோக்கமும் தங்கி உள்ளது.  

பகலவன், நீண்ட விளக்கத்திற்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

தமிழினியின் நூலில் சிங்களப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட பல மோசமான தாக்குதல்கள் புத்தகத்தில் சொல்லப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு வலிமையான அரசியல் காரணங்கள் இருக்கும் என்பதை எவரும் இலகுவில் ஊகித்துவிடலாம். ஆனால் முழு நூலையும் வேறு யாரோ எழுதியது என்பது போன்று திரித்து ஒரு சிலர் திரிக்க முயல்வதை மறுதலிக்கவேண்டும்.

வாசித்தளவில், தமிழினி இயக்கத்தின் முடிவெடுக்கும் உள் வட்டத்தில் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. தனக்குப் பணிக்கப்பட்ட விடயங்களை கேள்விகேட்காமல் செய்யும் இரண்டாம் நிலையில்தான் இருந்துள்ளார்.

தமிழினி தனக்குத் தெரிந்தவற்றை குறிப்பாக எழுதி ஆவணப்படுத்த முயன்றிருக்கின்றார் என்றுதான் சொல்லமுடியும். இவற்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், மக்களின் அழிவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கிளிநொச்சியில் புத்தகவெளியீட்டை நடத்துமளவிற்கு "ஜனநாயகமான" சூழல் இருப்பதாகக் காட்டும் அரசியல் தேவைக்காக தமிழினியின் மூலப் பிரதியில் இருந்த பலவிடயங்களை புத்தகத்தின் காப்புரிமையைக் கொண்டுள்ள அவரது கணவன் தவிர்த்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்தில் இடைச்செருகல்கள் உள்ளனவா என்று தமிழினியையும் அவரது கணவனையும் தெரிந்த ஒருவரைக் கேட்டபோது, இலங்கையில் வெளியிட்ட புத்தகத்திற்கும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளிற்கு வந்த புத்தகத்திற்கும் இடையில் சிலவேறுபாடுகள் உள்ளதாகத் தமிழினியின் கணவர் சொன்னதாகச் சொன்னார். ஆனால் நான் இதனை நம்பவில்லை. காலச்சுவடு பதிப்பகம் ஒரே பதிப்பில் இப்படியான தவறுகளைச் செய்யாது. 

எனவே நீங்கள் கூறியது போல இந்தப் புத்தகத்தில் பல உண்மைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றினால் இலாபம் அடையக் கூடியவர்கள் தமிழர்கள் மீண்டும் தமது உரிமைகளுக்காக அரசியல் ரீதியில் கூடப் போராடக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டவர்களாகத்தான் இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2016 at 5:58 AM, நவீனன் said:
'பிரபாகரன் அஞ்சினார்'
 
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார்.

அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.

புத்தகத்தை முழுமையாகப் படித்துமுடித்தும் "ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சினார்" என்ற வரிகளைக்  காணவில்லை. துணிச்சலற்றவராக இருந்தார் என்றுதான் உள்ளது.

புத்தகத்தைப் படித்து அறிந்தது (முன்னரே தெரிந்தவைதான்!)

நூலில் தமிழினி தமிழர்களின் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு தலைவர் பிரபாகரனைத்தான் பொறுப்பாளியாக்குகின்றார். புலிகளின் தலைமை என்பது தனி ஒருவரான தலைவர் பிரபாகரன் மட்டுமே. அங்கு கூட்டுப்பொறுப்பும், கூடி ஆராய்ந்து பலர் சேர்ந்து முடிவெடுக்கும் நிலைமையும் இருக்கவில்லை. தலைவர் பிரபாகரன் சொன்னவற்றை கேள்வி கேட்காமல் செய்யும் இராணுவ மனப்பான்மையிலேயே புலிகள் வளர்க்கப்பட்டிருந்தனர். சில முடிவுகள் தவறானவை என்று தெரிந்தும் அவற்றைச் செயற்படுத்தும் பொறுப்பைப் போராளிகள் விருப்பமில்லாமலேயே மேற்கொண்டிருந்தனர். 2006 இல் கட்டாய ஆட்சேர்ப்பை செயற்படுத்த எடுத்த முடிவே தலைவர் பிரபாகரனது மிகவும் தவறான முடிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பலரும் வியக்கும் போர்த்தந்திரங்களைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றிருந்த தலைவர் பிரபாகரன், சமாதானச் சூழ்நிலையில் அரசியல் இராஜதந்திரத்தின் நுணுக்கங்களை துணிச்சலுடன் பாவித்து தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியால் திணறினார். நம்பியிருந்த மக்களுக்காகத் தனது பிடிவாதத்தைத் தளர்த்தி வெளியில் வரும் துணிச்சலற்றவராக இருந்தார். கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து சிறுகச் சிறுகச் சேர்த்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா அல்லது நம்பியிருந்த மக்களைப் பாதுக்காப்பதா என்ற கேள்விக்கு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முடிவையே எடுத்தார். இந்த ஆயுதங்கள் எவையும் அவரையும் அவரை நம்பி ஒரு தனிச் சமூகமாக உருவாகியிருந்த புலிகள், போராளிக் குடும்பங்கள், யாருமற்ற குழந்தைகள் எவரையுமே இறுதியில் காப்பாற்றவில்லை. 

"300 போர் வீரர்கள்" படத்தைப் பார்த்து தோல்வியைக் கற்பனை செய்தபடிதான் தலைவர் இறுதி யுத்தத்தை ஆரம்பித்தாரோ எனத் தான் அடிக்கடி நினைத்துப் பார்த்ததாக தமிழினி கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கமும் தமிழ் மக்களின் போராட்டமும் தனியொரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படி வழிநடாத்தப்பட்டதால் மோசமான இன அழிவு உண்டானதா என்று கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

On 3/23/2016 at 11:17 AM, பகலவன் said:

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். உங்களுக்கு தெரிந்தவரை தமிழினி (சிவகாமி) எங்கு வைத்து எப்போது கைது செய்யப்பட்டார்/சரணடைந்தார்  என்பதை அவரின் கணவரிடம்/ தெரிந்தவரிடம் விசாரித்து பதில் அளியுங்கள்.

அந்த உண்மையை கூட சொல்ல தெரியாதவர்கள் போராட்டத்தை பற்றிய உண்மைகளை எழுதுவதை, அதை புத்தகமாக்கி வெளியிடுபவர்களையும் , புலிகளை வைத்து புலம்பெயர் சந்தைபடுத்தல், வாணிபம் செய்தவர்களையும் எனக்கு வேறுபடுத்திபார்க்க தெரியவில்லை.

புத்தகத்தில் திகதிவாரியாக சரணடைவும், நடத்தப்பட்ட விசாரணைகளும் உள்ளன. மே 20 அன்று கனகரத்தினம் எம்பியுடன் கொழும்பு நாலாம் மாடிக்கு வவுனியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளது. 

எமது போராட்டம் ஏன் தோற்றது என்பதை ஓரளவு அறிய இப்புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டும் என்றுதான் சொல்வேன்.

ஆனால் இலண்டனில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவில் குறிப்பிடப்பட்ட பின்வரும் விடயத்தையும் மனதிலிருத்திப் படிக்கவேண்டும்.

இதில் சொல்லப்பட்ட விடயங்களை (மக்களில் இருந்து போராட்டம் விலகிச் சென்றது என ) தமிழினி அக்கா என்றைக்குமே தன் போராட்ட காலத்தில் சொல்லவில்லை. இயக்கம் அழிந்து கொண்டிருக்கும் போதும் சொல்லவில்லை. அழிந்தவுடனும் சொல்லவில்லை. ஆனால் தடுப்பு முகாமில், (so-called rehabilitation centre) புனர்வாழ்வு முகாம் என கூறப்படும் முகாமில் இருக்கும் போது CID, TID, SIS போன்ற புலனாய்வு அமைப்புக்களால் கடும் விசாரணைகளை அனுபவித்த பின் போராட்ட சம்பந்தமான எந்தளவு சிறிய விடயத்திற்கும் நான் வரப்போவதில்லையென்றும் குமரன் பத்மனாதனால் வழங்கப்பட்ட நிர்வாகப் பொறுப்பு ஒன்றையும் ஏற்க மறுத்து அம்மாவுடன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்த போதே இவரால் இத் தன் வரலாறானது எழுதப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளி இலங்கை போன்ற நாடுகளில் எவ்வாறு மனம் திறந்து பேச முடியும் என்பதை Amnesty International, Freedom of expression போன்றவற்றைப் பேசும் பல அமைப்புக்கள் கூறும் அறிக்கையிலிருந்து நாம் சிலவற்றைத் தெளிவாக முடிவெடுக்கலாம். ஆகவே தமிழினி அக்கா விமர்சனமாக முன் வைக்கும் தனது போராட்ட வாழ்வை தலைமை மீதான பல விமர்சனக்களை அன்றைய காலத்தில் பேசாமலிருந்தது போல் அன்று பேசியவற்றை இன்று பேசாமல் இருப்பதாகக் கொள்ளலாம். 

இந்த புத்தகத்தை தமிழினி அக்கா

சமூக வாஞ்சையுடன் எழுதினாவா ??

தோல்வி மனப் பான்மையில் எழுதினாவா ???

மன மாற்றத்தினால் எழுதினாவா ??

ஏதேனும் உந்துதல் காரணமாக எழுதினாவா???

உளவியல் தாக்கத்தினால் எழுதினாவா ???

என்ற பல கேள்விகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன

இந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அந்த களத்தில் இருந்து கொண்டு இன விடுதலையை நெஞ்சில் நிறுத்தி இறுதி வரை மண்ணின் விடுதலைக்காய் பாடுபட்ட மக்களிடமும் சக போராளிகளிடமும் நேர்மையான சமூக ஆய்வாளர்களிடமும் தான் பெற முடியும்.

Edited by கிருபன்

நன்றி கிருபன். 

கிருபன் திகதிகளை மட்டும் குறிப்பிட்டுவிட்டால் எல்லாம் உண்மையாகிவிடாது. தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும்  புகைப்படங்கள் பத்திரிகைகளில்  வெளிவந்த திகதி மே 20. கொல்லப்பட்டதாகவும் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட திகதி மே 19. அப்படி இருக்க தமிழினி மே 19 காலை பத்திரிகையில் எப்படி தலைவர் கொல்லப்பட்ட புகைப்படங்களை (காட்சிகளை) பாத்திருப்பார். (ஒரு கூர்வாளின் நிழலில் - பக்கம் 214)

ஓமந்தை சோதனைசாவடியில் வைத்து  மண்ணிற சுடிதாருடன் வரிசையில் காத்திருந்தபோது முன்னாள் அரசியல் துறை போராளி தூயவனால் ( யாழ்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு ராணுவ புலனாய்வாளனாக செயற்பட்ட) தமிழினி அக்கா என்று கூப்பிட்டு எழும்பிய பின்னர் போராளிகளிடம் வரிசையாக உங்களை கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்த்த தமிழினி இவா, உங்களுக்கு கோபம் இருந்தால் அடியுங்கள் என்று படை புலனாய்வாளர்களினால் இருத்தி வைத்திருந்தபோது , எத்தனை கட்டாய ஆட்சேர்ப்பு போராளிகளால் கிடைத்த தண்ணி போத்தல்களால் அடி வாங்கியதை புத்தகத்தில் எழுதாமல் விட்டுவிட்டார்.

அதன் பின்னர் எத்தனை முறை Zone 4 முகாமிற்கு கூட்டிவரப்பட்டு பெண்போராளிகளை காட்டி கொடுத்ததை புத்தகத்தில் மறைத்தாலும், போராளிகள் மனசில் இருந்து அகற்றமுடியாது.

(கண்ணால் கண்ட சாட்சிகள் இன்னும் உயிருடன் இருப்பதை மறந்துவிட்டார் போலும்).

இதை தனியே புலி ஆதரவாளர்களின் காழ்ப்புணர்ச்சி என்று மட்டும் எழுதி தப்பிவிட முடியாது. சில உண்மைகளை புலி ஆதரவாளர்கள் என்ற பொதுவான போர்வைக்குள் அடக்கி ஒளித்துவிட முடியாது.

குமரன் பத்மநாதன் தமிழினியில் விடுதலையில் பெரும் பங்காற்றியவர். அவர் பின்னர் போராட்ட அரசியலுக்கு வரும்படி கேட்கவில்லை, போரினால் பாதிப்படைந்த எத்தனையோ முன்னாள் செஞ்சோலை பெண்பிள்ளைகளை வழிநடாத்தும் காப்பகத்தில் தான் நிர்வாக பொறுப்பை ஏற்கும்படி கேட்டார். இது போரை அரசியல்வழி நியாயபடுத்தியவருக்கும் , கட்டாய ஆட்சேர்ப்பை செய்தவருக்கும், எத்தனையோ பெண் பிள்ளைகளை மூளைசலவை செய்தவருக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

இன்னும் நிறைய சொல்லலாம்.

என்னைபொறுத்தவரை இந்த புத்தகம் தமிழினியின் பார்வையில் போராட்ட வரலாறு என்று மட்டுமே பார்க்கமுடியும். ஆனால் இது தான் உண்மையான வரலாறா என்பதை காலம் பதில் சொல்லட்டும்.  

தமிழினி இந்தபுத்தகத்தை எழுத தொடங்கியபோது தனக்கு புற்றுநோய் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த காலபகுதியில் இந்த புத்தகத்தை எழுத தூண்டியவர்கள், இடையில் விட்டுவிட்டு ஓடியவர்கள் இன்னும் ஏன் மறைந்து திரிகிறார்கள் என்று தான் புரியவில்லை. அவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தேவைபட்டது.

பலிக்கடா தமிழினி.  

நன்றி.

Edited by பகலவன்

1 hour ago, கிருபன் said:

பலரும் வியக்கும் போர்த்தந்திரங்களைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றிருந்த தலைவர் பிரபாகரன், சமாதானச் சூழ்நிலையில் அரசியல் இராஜதந்திரத்தின் நுணுக்கங்களை துணிச்சலுடன் பாவித்து தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியால் திணறினார். நம்பியிருந்த மக்களுக்காகத் தனது பிடிவாதத்தைத் தளர்த்தி வெளியில் வரும் துணிச்சலற்றவராக இருந்தார். கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து சிறுகச் சிறுகச் சேர்த்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா அல்லது நம்பியிருந்த மக்களைப் பாதுக்காப்பதா என்ற கேள்விக்கு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முடிவையே எடுத்தார். இந்த ஆயுதங்கள் எவையும் அவரையும் அவரை நம்பி ஒரு தனிச் சமூகமாக உருவாகியிருந்த புலிகள், போராளிக் குடும்பங்கள், யாருமற்ற குழந்தைகள் எவரையுமே இறுதியில் காப்பாற்றவில்லை. 

கிருபன், 

ஆயுதங்களையும், தான் வளர்த்த புலிகள் இயக்கத்தையும் அவர் காப்பற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் எத்தனையோ வழிகள் திறந்து தான் இருந்தன. எத்தனையோ முறை தலைவரையும் குறிப்பிட்ட சில போராளிகளையும்  பாதுகாப்பாக காட்டுக்குள் அனுப்பிவிட்டு, மிகுதி பேர் இருந்து சண்டைய தொடர தளபதிகளால் திட்டங்கள் வைக்கபட்டிருந்தன. அதை மிகவும் இலகுவாகவும் நடைமுறைபடுத்தியும்  இருக்கலாம். 

மிகவும் பாதுகாப்பான நிலகீழ் அறைகளை கொண்ட காட்டு இருப்பிடங்கள் கூட அமைக்கப்பட்டு உணவுபொருட்களும், ஆயுதங்களும் கூட நகர்த்தப்படிருந்தன. ஆனால் தலைவர் இந்த புலிகள் இயக்கத்தை தன்னுடன் இந்த போர் முடிவில் அழிக்கவே தீர்மானித்து இருந்தார். இதை வழிநடத்த கூடிய தளபதிகளையும் சேர்த்து. அதை அந்த தளபதிகளும் உணர்ந்து தான் கடைசிவரை சண்டை பிடித்து தங்களை மாய்த்தார்கள். 

தப்பவே முடியாது என்ற களத்தில் தான் இறுதிப்போர் நடந்தது. இறுதிபோருக்கான திகதி கூட, காயப்பட்ட போராளிகளை செஞ்சிலுவை சங்க மேற்பார்வையில் ஒப்படைக்கும் திகதிக்காகவே தள்ளிப்போனது. இந்த விடயத்தில் செஞ்சிலுவை சங்கம் ஏமாற்றியது. காயப்பட்ட போராளிகள் போர் விதிமுறையின் படி பொதுமக்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். அவர்களை கையெற்பதாக கூறிய செஞ்சிலுவை சங்கம், மே 15 முதல் மே 17 வரை காயமடைந்த போராளிகளை வட்டுவாகல் வீதி கரையில் காக்க வைத்தது. கடைசி வரை வரவே இல்லை. இதுவெல்லாம் தமிழினிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏன் என்றால் அவர் இயக்கத்துக்குள்ளேயே ஒதுக்கப்பட்டு நிறைய நாட்களாகி இருந்தன. 

கிருபன் நீங்களே சொல்லுங்கள், 

புலிகளிடம் கடைசியில் எஞ்சி இருந்த ஆயுதங்கள் தான் என்ன.? எறிகணைகள் அற்ற ஆட்டிலெறி பீரங்கிகள் (புட்டு அவிக்க கூட பயன்படுத்த முடியாதவை).

காலாவதியான தரை-வான் ஏவுகணைகள், அவற்றை கூட புதுக்குடியிருப்பு யுத்தத்தில் பயன்படுத்தியாகிவிட்டது (உலங்கு வானூர்தி மீது). அவற்றை வைத்து மிரட்ட முடியுமே தவிர விமானங்களை விழுத்த முடியாது.

கடற்கலங்களில் பொருத்தியிருந்த சில கனன் துப்பாக்கிகள். சுடுதிறன் மிக்க சிலவகை தானியங்கி துப்பாக்கிகள், அவற்றுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ரவைகள்.

அப்போ எந்த ஆயுததுக்ககாக மக்களை பணயம் வைத்தார் தலைவர். தலைவர் இந்த இறுதிப்போரில் ஒரு கட்டத்தில் தன்னையும் அழித்து தான் உருவாக்கிய  இந்த புலிகள் இயக்கத்தையும் அழிக்க தீர்மானித்தார்.

அதுவே அவரை நம்பி மாண்ட போராளிகளுக்கு அவர் செய்யும் நன்றி கடனாக நினைத்தார். இதை தவிர அவருக்கு செய்வதற்கு வேற வழியே இருக்கவில்லை.

5 hours ago, பகலவன் said:

பகலவன் உங்களுக்கு தெரிந்த விடயங்களை நீங்கள் ஏன் ஒரு ஆவணமாக எழுத கூடாது? புத்தகமாக இல்லாவிட்டாலும் யாழில் தன்னும் ஒரு தொடராக எழுதலாமே? தமிழினி எழுதிய புத்தகத்தில் எத்தனை வீகிதம் உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களை போன்றவர்களும் உண்மைகளை எழுதினால் பகுத்து அறியும் சந்தர்ப்பமாவது எமக்கு கிடைக்குமே? பொத்தாம் பொதுவில் புலிகள் மீது மட்டும் அல்லது சிங்கள ராணுவத்தின் மீது மட்டும் குற்றம் சுமத்துவதை நான் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. 

அகதிகள் முகாமில் பிடிக்கப்பட்ட தமிழினிக்கு நடந்தது என்ன? – மீள்பார்வை

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தனது உயிருக்கும் மேலாக நேசித்து, முன்னணிக் களப்போராளியாக திகழ்ந்த தமிழினி 1810-2015 இல் மரணமானார். 

அகதிகள் முகாமில் பிடிக்கப்பட்ட தமிழினிக்கு நடந்தது என்ன? – டி.பி.எஸ்.ஜெயராஜ்

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி, வெலிக்கடையிலுள்ள கொழும்பு காவல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு (பி.ஏ.ஆர்.சி) ஜூன் 26ல் மாற்றம் செய்யப்பட்டார்.

கொழும்பு தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி ஜூன் 22 முதல் நடைமுறையாகும் வண்ணம் விடுத்த கட்டளைப் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் பெண் தலைமை அரசியல் பொறுப்பாளரான தமிழினி இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டார்.

ஒரு கூட்டுறவு பயிற்சி மையத்தைப் போலச் செயற்படும் பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்தில்(பி.ஏ.ஆர்.சி) ஒரு குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பெற்றபின்னர் இறுதியில் விடுதலையாகப்போகும் தமிழினியின் இந்த மாற்றல் உத்தரவு ஒரு முன்னோடியான செயற்பாடாக கருதப்படுகிறது.

எல்.ரீ.ரீ.ஈ யில் கேணல் தரத்திலுள்ள பதவி வகித்தவரான 40 வயது நிரம்பிய தமிழினி, தற்போது கைதாகி காவலிலுள்ள புலிகள் அங்கத்தினர்களில் மிகவும் மூத்த பெண் அங்கத்தவராவார்.

தமிழினி, எல்.ரீ.ரீ.ஈயின் மகளிரணி அரசியற் பொறுப்பாளராகவும் மற்றும் புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராக பதவி வகித்த பாலசிங்கம் மகேந்திரன் என்கிற நடேசனின் பெண் உதவியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ யின் இறுதிக்கட்டப் போரில், கந்தையா ஞானபூரணி அல்லது விதுஷா என்று அழைக்கப்படும் மாலதி படையணின் கட்டளை தளபதி, மற்றும் சோதியா படையணியின் கட்டளை தளபதியான துர்கா என்கிற கலைச்செல்வி பொன்னுத்துரை, என்பவர்களுடன் தமிழினியும் சேர்ந்து எல்.ரீ.ரீ.ஈ யின் சிறந்த மூன்று முதல்தர பெண் அங்கத்தவர்களாக விளங்கினார்கள்.

அதேவேளை விதுஷா 1986லும், துர்கா 1989லும், தமிழினி 1991லும் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்திருந்தார்கள்.

பூந்தோட்டத்திலுள்ள மையத்துக்கு மாற்றல் பெறும் தமிழினிதான் முழு சுதந்திரம் பெற்றவர்களில் முன்னோடியாகத் திகழ்கிறார் எனக் கருதப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பூந்தோட்டத்தில், புனர்வாழ்வு பயிற்சி பெறுவதை அவர் எதிர்நோக்கியுள்ளார். அதன்பின்னர் முன்னாள் சுதந்திர பறவைகள் அமைப்பின் அங்கத்தவரான தமிழினி ஒரு சுதந்திரப் பறவையாக விடுதலையாவதற்கு சாத்தியம் உள்ளது.

தமிழினியின் கொழும்பிலிருந்து வவுனியாவுக்கான மாற்றல் உத்தரவு மற்றும் அவர் எதிர்நோக்கியுள்ள விடுதலை என்பன, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விடுதலை பற்றிய முட்கள் நிறைந்த சிக்கலான விடயம் சம்பந்தமாக அரசாங்கத்தின் குறிப்பிடத் தக்க நெகிழ்வான போக்கினை இந்தக் கட்டத்தில் வெளிப்படுத்துவதற்கான அறிகுறியாகவே உள்ளது.

மிகவும் முக்கியமாக இந்த நிகழ்வுகள் இனிவரும் நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ளதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் பலபேர்களின் விடுதலை சம்பந்தமாக நம்பிக்கை கொள்வதை எடுத்துரைக்கும் வாய்ப்பு உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ யில் தமிழினி வகித்த பங்கு, அவரது கைது, தடுத்து வைப்பு, அவரது விடுதலைக்கான எதிர்பார்ப்புடனான மாற்றல் உத்தரவு என்பன, முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தொண்டர்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ளவர்களது தொடரும் தடுப்புக்காவல், மற்றும் சிறைவாசம் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் தற்போதைய விவகாரங்களின் நிலையில் சுவராஸ்யமான ஒரு நுண்ணறிவுள்ள விடயம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழினியின் நிலை, தற்போது நிலவும் சூழ்நிலையின் மனிதாபிமான பரிமாணங்களை எடுத்து விளக்குகிறது. அது தீர்க்கப்பட்டு வருவதிலுள்ள சாதகமான நிலை, உராய்வுள்ள பகுதிகளில் மோதலுக்குப் பதிலாக ஒரு ஒத்துழைப்பு உணர்வு தோன்றியுள்ளதை அடையாளப்படுத்துகிறது.

தமிழினியை சுதந்திரத்தின் வாசலுக்கு அழைத்து வருவதற்கு வழிவகுத்த நடவடிக்கைகள் பற்றி இந்த எழுத்தாளர் வெகு தூரத்திலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறார்.அது அவசியம் சொல்ல வேண்டிய ஒரு கதை.

பரந்தன்

தமிழினியின் இயற்பெயர் சுப்பிரமணியம் சிவகாமி என்பதாகும். அவர் 1972 ஏப்ரல் 23ல் பரந்தனில் பிறந்தார்.அவரது குடும்பம் தனது வேர்களை யாழ்ப்பாணத்தில் கொண்டிருந்தாலும், அது கிளிநொச்சிக்கும் ஆனையிறவுக்கும் இடையில் உள்ள பரந்தனுக்கு இடம் பெயர்ந்தது.

பின்னர் அவரது குடும்பம் கிளிநொச்சி,உதய நகரில், கனகபுரம் வீதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு நகர்ந்தது. அவரது குடும்பத்தின் ஏனைய அங்கத்தினர்கள் அவரது தயாரும் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஆவர், சகோதரிகள் இருவரும் திருமணம் செய்திருந்தனர்.

தாயும் ஒரு சகோதரியும் கிளிநொச்சியில் வசிக்கும் அதேவேளை மற்றைய சகோதரி நோர்வேயில் வசிக்கிறார்.

அவருடைய மற்றொரு சகோதரியும் எல்.ரீ.ரீ.ஈயில் அங்கத்தவராகவிருந்து செப்டம்பர் 1998ல் பரந்தனில் நடைபெற்ற “ஒப்பறேசன் சத்ஜய  2 “ போரின்போது கொல்லப்பட்டார்.

சிவகாமி சுப்பிரமணியம் பரந்தன் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயின்றார். அதன் பின் தனது க.பொ.த உயர்தரக் கல்விக்காக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்தார்.

உயர்தர வகுப்புகளை பின்வற்றிவரும் வேளையில் பாடசாலையில் புலிகளின் ஆட்சேர்ப்பாளர்களினால் நிகழ்த்தப்பட்ட பேச்சுக்களினால் கவரப்பட்டு அவர் எல்.ரீ.ரீ.ஈ யின் மீது மோகம் கொண்டார்.

1991 ஜூலை 27ல் அவர் முறைப்படி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் சேர்ந்து, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் இரண்டு இராணுவ தளங்களான கிளாலி மற்றும் நீர்வேலியில் அவர் தனது இராணுவ பயிற்சியினை மேற்கொண்டார்.

அவர் அடையாள அட்டை இலக்கம் 1736 ன் கீழ், எல்.ரீ.ரீ.ஈ யில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தமிழினி என்கிற இயக்கப் பெயரை சிவகாமி ஏற்றுக் கொண்டார் .குடாநாட்டின் வலிகாமப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அவர் தங்கியிருந்தார்.பின்னர் அவர் கிளிநொச்சி மற்றும் கிளாலி பிரதேசங்களுக்கு நகர்ந்தார்.

ஆரம்பத்தில் தமிழினி எல்.ரீ.ரீ.ஈ யின் போராட்ட அமைப்புகளின் ஒரு அங்கமாகவிருந்து, அநேகமான சிறு சிறு சண்டைகளில் பங்குபற்றியிருந்தார்.

பெரிய போர் ஒன்றில் அவரது அனுபவம் இடம்பெற்றது, செப்ரம்பர் 1993ல் இராணுவம் யானையிறவில் இருந்து முன்னேறி கிளாலியை கைப்பற்ற முனைந்த ‘ஒப்பிறேசன் யாழ்தேவி’நடவடிக்கையின் போதுதான்.

எல்.ரீ.ரீ.ஈ, நவம்பர் 1993ல் பூனறியான் மற்றும் நாகதேவன்துறை முகாம்களை தாக்குவதற்காக‘ஒப்பறேசன் தவளை’ என்கிற குறியீட்டுப் பெயருடன் நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்திய போரிலும் அவர் பங்குபற்றியிருந்தார்.

பூனறியானில் எல்.ரீ.ரீ.ஈ, இராணுவத்தினரது ஒரு ரி  55 யுத்த டாங்கியை இராணுவத்திடமிருந்து கைப்பற்றியிருந்தது.

தமிழினி, எதிர்பாராத விதமான சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டியிருந்த கடமைகள் ஒதுக்கப்பட்டிருந்த படைப்பிரிவின் ஒரு அங்கமாக இருந்தார்.

அவர்கள் அவசர அவசரமாக காட்டு நிலப்பகுதியினூடாக இந்த ரி ௲ 55 யுத்த டாங்கியை துரித போக்கு வரத்து செய்வதற்கு வசதியாக ஒரு பாதையை அமைக்க வேண்டியிருந்தது.

தமிழினியுடன் ஒரு கலந்துரையாடல் நடத்திய எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி அடேல் பாலசிங்கம் ஆகியோர், தமிழினியால் கவரப்பட்டு,அரசியல் பிரிவுக்கு அவரை மாற்றம் செய்வித்தனர்.

பெண்களால் நடத்தப்படும் ஒரு கயிற்றுத் தொழிற்சாலைக்கும் மற்றும் ஒரு பண்ணைக்கும் தமிழினி பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈயின் மகளிர் இதழான சுதந்திரப் பறவைகளின் ஆசிரியர் குழாம் அங்கத்தினர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அடேல் பாலசிங்கத்தினால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்பட்ட தமிழினி ஒரு தீவிர பெண்ணியவாதியாக மாறினார்.

1995 – 96 ல் இராணுவத்தால் நடத்தப்பட்ட ‘ஒப்பறேசன் ரிவிரச’ வின் வெற்றியை தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ முழுதாக வன்னிக்கு இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானது.

தமிழினி தொடர்ந்தும் அரசியல் பிரிவிலேயே கடமையாற்றினார், ஆனால் இராணுவம் வன்னியை திரும்ப கைப்பற்றுவதற்காக 1997 ௲ 98 ல் ‘ஒப்பறேசன் ஜயசிக்குரு’ நடவடிக்கையை ஆரம்பித்தபோது, தமிழினி படைப்பிரிவில் இணையும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்.

அவர் மாங்குளம் பகுதியில் பணியாற்றி மிகவும் சிரமங்களை அனுபவித்தார்.ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சமைத்த உணவுகள் தீர்ந்து போனதால் உயிர்வாழ்வதற்காக காடுகளில் வளரும் பழங்களை நாட்கணக்கில் உண்ணவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

29slide1 வெலிக்கடையிலிருந்து வவுனியா வரை : தமிழினி நடந்து வந்த கதை!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் 29slide1தமிழினி, பாலசிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் தலைவரான சுப்பையா பரமு தமிழ்செல்வன் ஆகியோரிடையே நல்ல அபிப்ராயத்தை பெற்றிருந்தார்.

அது அவரை உயர் பதவிகளில் வேகமாக உயர்த்தி இறுதியில் ஜூன் 2000 ம் ஆண்டளவில் அவரை பெண்கள் பிரிவின் அரசியல் தலைவராக மாற்றியது.

இதை தவிர இராணுவம் 2001ல் ஆனையிறவை திரும்ப கைப்பற்றுவதற்காக ‘ஒப்பறேசன் அக்கினிகில்ல’ நடவடிக்கையை தொடுத்தபோது தமிழினி திரும்பவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று.

கிளிநொச்சி

ஒஸ்லோ அனுசரணையுடனான யுத்த நிறுத்தம் 2002 பெப்ரவரியில் ஏற்பட்ட பின், எல்.ரீ.ரீ.ஈ நிரந்தரமான ஒரு அரசியல் செயலகத்தை கிளிநொச்சியில் ஸ்தாபித்தது.

எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டமைப்புக்குள்ளேயே சமத்துவத்துக்காக போராடி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த தைரியமுள்ள பெண்ணியவாதியாக தமிழினி திகழ்ந்தார்.

முன்னர் பெண்களின் அரசியற் பிரிவு, பிரதான அரசியற் பிரிவின் ஒரு பகுதியாகவே நடத்தப்பட்டு வந்தது. இப்போது தமிழினி சுதந்திரமாக கடமையாற்றுவதற்காக போராடி அதைப் பெற்றிருந்தார்.

அவர் மேலும் தனது பதவிக்கான அந்தஸ்து அடையாளத்தையும் பெற்றிருந்தார்.ஒரு டபிள் காப் வாகனம் அதை தொடரும் வாகன அணி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் என அந்த அந்தஸ்து அடையாளம் கொண்டிருந்தது.

யுத்த நிறுத்த காலமும் ஒரு வழியை விட பல வழிகளிலும் தனது எல்லையை விரிவு படுத்த தமிழினிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

கொழும்பில் நடைபெறும் பெண்ணுரிமை சம்பந்தமான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்காக அவர் எல்.ரீ.ரீ.ஈ பெண் அங்கத்தவர்களை கொண்ட ஒரு குழுவை வழி நடத்தி வந்தார்.

2003 மற்றும் 2005ல் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தூதுக்குழுக்களிலும் அவர் பங்கேற்றார்.

ஐரோப்பாவில் இருந்த வேளையில் தமிழினி அநேக புலம்பெயர் குழுக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.அநேகமான கூட்டங்களில் அவர் உரையாற்றி பார்வையாளர்களிடத்தில் பயங்கரமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார்.

spotlightpic.1 வெலிக்கடையிலிருந்து வவுனியா வரை : தமிழினி நடந்து வந்த கதை!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் spotlightpicஇந்தக் கட்டத்தில்தான் தமிழினிக்கும் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவருக்கும்,அவரை நான் ‘கே’ என்று இங்கு குறிப்பிடுகிறேன், இடையில் ஒருவகையான காதல் உணர்வு அரும்பு விட்டது.

முன்னர் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆண் அங்கத்தவர்களையும் மற்றும் பெண் அங்கத்தவர்களையும் சோடி சேர்த்து அவர்கள் திருமணம் செய்ய அனுமதித்த போது, தமிழினி திருமணம் செய்ய மறுத்திருந்தார்.

இப்போது அவரது வெளிநாட்டு சொற்பகால வாசத்தின்போது, தற்போது ஐரோப்பாவில் குடியேறியிருக்கும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரான ‘கே’ நெருங்கிப் பழக நேர்ந்தது.

அவர்களிடையே ஒரு பரஸ்பர கவர்ச்சி மற்றும் குறைந்தது, ஒரு வகையான காதல் உணர்வு ஏற்பட்டது. ‘கே’ யும் வன்னிக்கு வந்து கிளிநொச்சியில் சிறிதளவு காலம் தங்கியிருந்தார். அவர்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

யுத்த நிறுத்தம் முடிவடைந்து யுத்தம் வெடித்து தீவிரமடையத் தொடங்கியது. மெதுவாக மற்றும் உறுதியாக இராணுவம் முன்னேறி, எல்.ரீ.ரீ.ஈ பின்வாங்கத் தொடங்கியது.

இறுதியாக புலிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் காரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட குறுகிய பட்டை போன்ற நிலப்பரப்புக்குள் அடைபட நேர்ந்தது.

இந்த விளைவு 2009 எப்ரல் 4 ௲ 5 திகதிகளில் நடைபெற்ற ஆனந்தபுரம் யுத்தத்தின் பின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, அந்தச் சமரில் புலிகளின் வட பகுதி தளபதி தீபன் கொல்லப்பட்டிருந்தார்.

77 வெலிக்கடையிலிருந்து வவுனியா வரை : தமிழினி நடந்து வந்த கதை!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் 77பெண் தளபதிகளான விதுஷா மற்றும் துர்காவும் இந்தச் சண்டையில் உயிரிழந்தார்கள். இந்தச் சமரில் பங்குபற்றிய தமிழினியும் இறந்திருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டது,ஆனால் பின்னர் அவர் சிறிய காயங்களுக்கு மட்டும் உள்ளானார் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட காலமாக அவரோடு கைகோர்த்து நின்ற அவரது தோழிகள் விதுஷா மற்றும் துர்காவின் மரணங்கள் தமிழினியை உடைத்து நொறுக்கியது.

தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதை அவரும் உணர்ந்தார்,ஆனால் இயக்கத்தின்மீது தனக்கு இருந்த விசுவாசத்தின் காரணமாக தொடர்ந்தும் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த புதுமாத்தளன் பகுதியிலேயே இருந்தார்.

வவுனியா

முடிவை நெருங்கிக் கொண்டிருந்த 2009 மே மாத மத்தியில், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பு தேடி போய் ஆயுத படைகளிடம் சரணடைய விரும்புபவர்களை போகவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ உயர்பீடம் ஆளானது.

மே மாதம் 15ந் திகதி தமிழினி,அவளது தாயார், மற்றும் சகோதரி, ஆகியோரும் அப்படியே செய்தனர். தமிழினி தனது ஆயுதங்கள், சீருடை,அடையாள அட்டை மற்றும் கதை சொல்லும் சயனைட் குளிகைகள் போன்றவற்றை கைவிட்டு,தனது குடும்ப அங்கத்தினர்களுடன் பெருமளவிலான பொதுமக்கள் உட்புகுதலுக்குள் சங்கமமானார்.

அவர்கள் அனைவரும் எல்.ரீ.ரீ.ஈ யை சேராத குடிமக்கள் என வகைப்படுத்தப்பட்டு,2009 மே 20ல் வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் ஒரு நலன்புரி முகாமுக்குள் அடைக்கப்பட்டார்கள்.

ஆனால் உயர் பதவி வகித்த தமிழினி விரைவிலேயே முகாமிலிருந்தவர்களால் அடையாளம் காணப்பட்டார். அதிகாரிகளுக்கு அது பற்றிய துப்பு வழங்கப்பட்டு,2009 மே 27ல் தமிழினி கைதானார்.

குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சி.ஐ.டி) காவல்துறையினரால் விசாரிக்கப் படுவதற்காக தமிழினி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.

தேசிய மற்றும் இராணுவ உளவுத்துறையினராலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அவசரகால சட்டவிதிகளின்கீழ் அப்போதிருந்த கொழும்பு பிரதம நீதவான் நிசாந்த ஹப்புஆராச்சியின் முன்பாக 2009 ஜூன் 17ல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈயில் அவரது நடவடிக்கை சம்பந்தப்பட்ட கோவை ஒன்றும் அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரைப்பற்றிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டியிருப்பதாக நீதிமன்றத்திடம் கூறப்பட்டது. பிரதம நீதவான் அவர் மீண்டும்2009 ஜூலை 17 ந்திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்பட்டன.

தமிழினியின் சகாப்தத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவது, எல்.ரீ.ரீ.ஈ யின் மகளிரணி அரசியல் தலைவர் ஒரு நியாயமான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார், என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நீதிமன்றம் ஒரு பாராட்டத்தக்க ஆர்வத்தை மேற்கொண்டதுதான்.

தமிழினி நன்றாக உபசரிக்கப்படவேண்டும் மற்றும் மேலதிக விசாரணை உண்மையிலேயே அவசியமானால் மட்டுமே அவர் மேலும் தடுப்புக் காவலில் வைக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் ஒரு ஆராய்ந்தறிய வேண்டிய குறிப்பினை தெரிவித்திருந்தது.

முன்னாள் கொழும்பு தலைமை நீதவான் ஹப்புஆராச்சி,விசாரணைக்காக மேலும் திகதி வழங்குவதற்கு முன்னர் அவசரகால விதிகளின் கீழுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சி.ஐ.டி தலைமையகத்துக்கு 2009 ஆகஸ்ட் 5ல் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டார்.

அவரும் தற்பொழுது கொழும்பு தலைமை நீதவானாகவுள்ள ரஷ்மி சிங்கப்புலியும், சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் விசாரணையை நடத்துவதற்காக குறுகிய கால அவகாசத்தையே வழங்கி வந்ததின் மூலம் தமிழினியை நீடித்த காவல்துறை தடுப்புக்காவலில் வைக்கும் போக்கினை தடுத்து வந்தார்கள்.

விசாரணைகள் முடிவடைந்ததின் பின்னர் தமிழினியின் விடயக்கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்றது,அவர் கைதாகி காவலில் வைக்கப்பட்டார்.

தமிழினியின் வழக்கு மற்றும் பலருடைய வழக்குகளைப்போல முடிவில்லாத நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றம் தொடர்ந்தும் குறுகிய கால தவணைகளையே வழங்கி வந்தது.

அவர் ஒரு டசன் தடவைகளுக்கும் அதிகமாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.சட்டமா அதிபரின் திணைக்களம் தொடர்ந்தும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.அதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பு நிறுவனங்களின் பக்கமிருந்து தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை குறைவாக இருந்ததே ஆகும்.

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விசாரணைகளை கண்காணித்து வந்த பாதுகாப்பு அமைச்சகம் அவர்களை கையாள்வதில் இரட்டை தன்மையான கொள்கையை கடைப்பிடித்து வந்தது.

ஒவ்வொரு வழக்கும் அதன் தனிப்பட்ட தகுதி மற்றும் பரிசீலனை அடிப்படையிலேயே நடைமுறை படுத்தப்பட்டு வந்தது.

அதன்படி அவை கடினமானவை மற்றும் மென்மையானவை என தரப்படுத்தப்பட்டன. பச்சாத்தாபத்துக்கு உட்படுத்த முடியாதவர்கள்,கரும்புலிகளின் தற்கொலை வாக்குறுதிகளை மேற்கொண்டவர்கள், மற்றும் கொடூரமான பயங்கரவாத செயல்களில் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டவர்கள், ஆகியோர்கள் கடின வகையாக தரம் பிரிக்கப்பட்டார்கள்.

நேரடியாக யுத்தத்தில் போராடியவர்கள் உட்பட மற்றவர்கள் மென்மை வகையாக கருதப்பட்டார்கள்.

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் 1235 பேர்கள் ஆரம்பத்தில் கடும் போக்கானவாகளாக வகைப்படுத்தப்பட்டு பூசா உள்ளிட்ட மூன்று வௌவேறு தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்பட்டார்கள்.

11,989 பேர்கள் மென் போக்காளர்களாக தரம் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையம்(பி.ஏ.ஆர்.சி) என பெயர் கொண்ட பதினெட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு தளர்த்தப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

மேலும் மேலும் ஆட்கள் விடுதலையாகிச் செல்வதால் மென் போக்காளர்களது நலன்புரி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

புனர்வாழ்வு அமைச்சிலுள்ளோரின் தகவலின்படி,தற்பொழுது மருதமடு,கண்டக்காடு,வெலிகந்த,மற்றும் பூந்தோட்டம் ஆகிய நான்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் (பி.ஏ.ஆர்.சி) 635 ஆட்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழினியின் தனித்துவமான விடயம் பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் ஒரு குழப்பமான எண்ணத்தையே தோற்றுவித்தது.

தமிழினி மோதலில் பங்கெடுத்திருந்தாலும்,எந்தவிதமான பயங்கரவாத சூழ்நிலையுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

எல்.ரீ.ரீ.ஈ யினால் கொழும்பிலோ அல்லது தென் மாகாணங்களிலோ மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கும் மேலாக தமிழினி, எல்.ரீ.ரீ.ஈயின் மகளிரணி அரசியற் பிரிவின் பிரபலமான தலைவர், மற்றும் காவலில் இருக்கும் மிகவும் உயர் பதவியிலுள்ள பெண்புலி அல்லது முன்னாள் பெண்புலி என்பதை கருதாது, ஒரு இராணுவ போராளி என்பதிலும் பார்க்க அவரை அரசியல் செயற்பாட்டாளர் எனக் கணிப்பதற்ககே அதிகம் வாய்ப்பு உள்ளது.

அந்தப் பின்புலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் பக்கமிருந்து தமிழினியை இலக்கு வைத்து தண்டிக்க வேண்டும் என்கிற கட்டாயமோ அல்லது அவசியமோ கிடையாது.

அவரது உயர் தரத்திலான பதவி மூப்பினையும் கருதாது, அவரை குற்றம் சுமத்தி நீதிமன்றின் முன் நிறுத்தி நீண்டகால சிறைத்தண்டனை வழங்கி அவரை தண்டிக்க வேண்டும் என பாதுகாப்பு நிறுவனத்தில் உள்ள மிகச் சிலரே விரும்புகிறார்கள்.

மிக மோசமான பொதுமக்கள் படுகொலையில், ஒரு மூத்த அரசியல் தலைவரின் படுகொலையில்,அல்லது வெடி பொருள் தாக்குதல் மூலம் கணக்கற்ற மரணங்களை விளைவித்த சம்பவத்தில் தமிழினி சம்பந்தப்பட்டிருந்தால் அப்போது நிலமை வேறு விதமாக இருந்திருக்கும்.

ஆனால் அவை தொடர்பாக அவரது கரங்கள் சுத்தமாக உள்ளன எனவே அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென்ற அளவுக்கு மீறிய ஆவல் எதுவும் இருக்காது.

எனினும் அவரை காவலில் இருந்து விடுவிப்பதில் ஒரு உறுத்தலும் இருக்கிறது. அந்தப் பிரச்சினை தமிழினியின் கடந்த காலத்தில் இல்லை, ஆனால் வருங்காலத்தில் அவரது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதில்தான் அது தங்கியுள்ளது.

அவரது விடுதலைக்குப் பின்னர் அவர் என்ன செய்யப் போகிறார்? எல்.ரீ.ரீ.ஈயில் அவர் ஒரு உயர் பதவி வகித்த உயர் தகுதிகளைக் கொண்ட தலைவராக இருந்திருக்கிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு உலகத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் அவரை பயன்படுத்திக் கொள்ளுமா?

அவர் வெளிநாடு செல்ல நேர்ந்தால், வெளிநாட்டிலுள்ள ஆர்வலர்கள் அவரை ஒரு பிரச்சார இயந்திரமாக பயன்படுத்திக் கொள்ளுவார்களா? ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் அரசியற்கட்சிகளிலுள்ள கடும்போக்காளர்கள்,மோதல் போக்கான அரசியலில் தங்கள் நிலைகளையும் தரங்களையும் மேலுயுயர்த்த அவரை சேர்த்துக் கொள்வார்களா?

அதிகாரிகள்

மறுபக்கத்தில் தமிழினியை காலவரையறையற்ற காவலில் வைத்திருக்க முடியாது என்பதையும் பாதுகாப்பு அதிகாரிகள் நன்கறிவார்கள்.

ஏற்கனவே தொடர்ச்சியான இடைவெளிகளில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்திய நிகழ்ச்சி அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள்மீது எதிர்மறையான ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழினிமீது வழக்கு தொடாந்து நீண்டகால சிறைத்தண்டனையை அவருக்கு பெற்றுக் கொடுப்பதுகூட விரும்பத் தக்கதல்ல, ஏனெனில் அரசியற் பிரிவு தலைவர் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்குவது, ஆட்சியினரை பற்றிய தவறான பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

இவைகளைத் தவிர தனது கடந்தகால எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் பற்றி தமிழினி மிகவும் வெளிப்படையான முறையில் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியிருப்பதும் மற்றும் அவரது தற்போதைய இக்கட்டான நிலைமையும் அவர்மீது அளவற்ற அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மிகச் சிலரே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள்.

அதிகாரிகள் தமிழினியின் நிலைகண்டு வேதனை அடைந்தார்கள். தமிழினியின் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு சிரேட்ட பாதுகாப்பு அதிகாரி நேர்மையாக ஒப்புக்கொண்டது “அவரை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை என்று நான் சொன்னால் என்னை நம்புங்கள்.

தமிழினியை விடுதலை செய்யவே நாங்கள் விரும்புகிறோம், ஆனால் எங்கள் கவலையெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான பின்விளைவுகளைப் பற்றியதே.

அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்மறையான செயற்பாடுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதை நாங்கள் எப்படி உறுதிப்படுத்துவது?”

அப்போ தமிழினி பற்றி பாதுகாப்பு நிறுவனம் எதிர்நோக்கும் பிரச்சினை இதுதான் எனினும் இந்தப் பிரச்சினை “கடவுளின் இயந்திரம்” எனும் உபகரணத்தை பயன்படுத்துவதன் மூலம் தீர்க்க முடியும்.

கடவுளின் இயந்திரம் எனும் அர்த்தமுடையது டியுஸ் ‘எக்ஸ் மக்கீனா’ எனும் இலத்தீன் சொற்றொடராகும்.

“இது ஒரு கதைக்கருவில் வரும் உபகரணம், தீர்க்க முடியாத பிரச்சினைகள், சில புதிய நிகழ்வு, தன்மை, திறன்,அல்லது பொருள் என்பனவற்றின், திட்டமிடுதல் மற்றும் எதிர்பாராத தலையீடு காரணமாக திடீரென முற்றிலும் மாறுபட்ட வகையில் தீர்க்கப்படுவதை காணலாம்” அதன் மூலக்கருவை பழைய கிரேக்க நாடகங்களில் காணலாம், அங்கு மேடையில் கடவுள் பாத்திரத்தை நடிப்பவர்களை மேலுயுயர்த்தவும் கீழிறக்கவும் ஒரு பாரந்தூக்கி பயன்படுகிறது.

கிரேக்க நாடகங்களில் சோக கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலமான ஈயுரிபிடியஸ் இந்த கடவுளின் இயந்திரத்தை கதைக்கரு மற்றும் ஆதாரம் ஆகிய இருவழிகளிலும் பயன்படுத்துவதில் மிகவும் பிரபல்யமானவர்.

தமிழினியின் நவீன கால துன்பியல் கதாபாத்திரத்தில் யார் அல்லது எது கடவுளின் இயந்திரமாக இருக்கப் போகிறது?

டி.பி.எஸ்.ஜெயராஜ்

http://www.asrilanka.com/2016/03/25/31751

  • கருத்துக்கள உறவுகள்

Quote

தமிழினி, எல்.ரீ.ரீ.ஈயின் மகளிரணி அரசியற் பொறுப்பாளராகவும் மற்றும் புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராக பதவி வகித்த பாலசிங்கம் மகேந்திரன் என்கிற நடேசனின் பெண் உதவியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்
On 24 March 2016 at 5:58 PM, Maruthankerny said:

இலங்கை செய்தது இனபடுகொலை 
இந்த உணமையை உலகறிய செய்வதில் 
எமக்கு நிறையா லாபம் இல்லை விடிவு கூட இருக்கிறது.

விமர்சனம் என்பது ஒன்றை முழுதாக தெரிந்த பின்னர் வைக்க கூடிய ஒன்று.
அரைகுறைகள் வாந்தி மட்டுமே எடுக்க முடியும் அதைதான் எடுக்கிறார்கள்.
அதை பற்றியே புலவர் சொல்கிறார்.

மற்றது எல்லா மார்க்கமும் தர்கத்திட்கு உரியது அவர் அவர் 
மன நிலைப்படி ஒன்று சரியாகிறது இன்னொன்று பிழை ஆகிறது 
புலிகளை எல்லோரும் ஏற்கவேண்டும் அல்லது ஏற்க முடியும் நானோ வேறு யாரோ 
எண்ணுவார்கள் என்று நான் எனுவதில்லை.

கொமினிசியம் பிழை என்று முதளித்துவத்தை ஏற்றுகொண்டால் ...
தற்போதைய அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் முழுதும் 
முதலாளித்துவத்திட்கு எதிரானதாகவே இருக்கிறது.

உலகிற்கு திறந்த சந்தையை சில இடங்களில் அச்சுறுத்தி கூட அறிமுகம் செய்த 
அமெரிக்காவில் இன்று வேலி அடைப்பேன் வெட்டுவேன் கொத்துவேன் என்பவர் 
முதன்மை வேட்பாளராக மக்களால் தெரிவாகி கொண்டு இருக்கிறார்.

அடுத்தவர்களுக்கு தமது பொருட்களை கொட்டிவிட சாதகமாக இருந்த முதளித்துவம் 
அடுத்தவர்களும் பொருள் உற்பத்தியில் இறங்கி இங்கு கொண்டுவந்து கொட்ட கசக்கிறது.

என்னுடைய வாதம் என்னவெனில் ....
காலம் சூழ்நிலை பிராந்திய வல்லாதிக்கம் உலக வல்லாதிக்கம் ஈழ தமிழ் மக்களின் 
பலம் பலவீனம் கலை கலாச்சாரம் மதம் பண்பாடு இயற்கை அழிவுகள் . என்று எல்லாமும் எதோ ஒரு விதத்தில்  புலிகளின் வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் பங்கு எடுத்திருக்கிறது 
இதை முழுமையாக ஒருவன் விமர்சனம் செய்ய முடியும் என்றால் அவன் முதலில் 
இவை பற்றி அறிந்த அரசியல் அறிஞானாக தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.
அதை அடுத்த ஒரு சரியான விமர்சனத்தை வைக்க முடியும். அதில் கூட புலிகளின் இராணுவ மற்றும் புலனாய்வு என்பது மிகவும் ரகசியமானது (இதுக்கு புலிகள் விதிவிலக்கு இல்லை உலகம் பூரா இருக்கும் ஒன்று) இதை தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

மற்றையபடி நானும் நீங்களும் எல்லா ஈழ தமிழ் மக்களும் நேரடியாக ஆயுத போராட்டத்தால் பாதிக்கபட்டவர்கள் எனது மாமாவை புலிகள் ஊரார் பொறாமை பேச்சை கேட்டு கொன்றார்கள்.
என்னை இரண்டுமுறை கைது செய்து வைத்திருந்தார்கள்.
இதில் எனக்கு தனிபட்ட செய்ததை நான் விமர்சிக்கலாம் ...... அது கூட ஒட்டுமொத்த புலிகளின் தலைமையின் 
முடிவாக இல்லை புலியில் இருந்த இன்னொரு தனி நபரின் செயலாகி இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய கண்ணோட்டத்தை பத்தி செய்வது என்பதில் ஒரு முரண்பாடும் இல்லை 
தற்போதைய சூழலில் புலிகளுக்கு எதிரான தமிழ் எழுத்துக்கள் 
ஈழ தமிழருக்கு எந்த நன்மையையும் பயிற்க போவதில்லை 
மாறாக சிங்கள இந்திய உளவு துறைகள் பாரிய பண செலவில் அதை ஏன் செய்கிறார்கள் 
என்று கேள்விக்கு விடை தேடினால் காரணத்தை நான் எழுத தேவை இல்லை.

இனம் சார்ந்து சிந்திக்கும் ஒருவனால் இந்த அசிங்கத்தை இன்றைய சூழலில் செய்ய முடியாது 
தனது தனிபட்ட வருவாய் லாபங்களுக்காக சிலர் அதை இதை செய்கிறார்கள். 

நான் படித்த யுனிவெர்சிடியில் இன படுகொலை சம்மந்தமான ஒரு பிரிவு உண்டு 
யூதர்களின் இனபடுகொலை என்பது யூதர்காளால் அது செய்யபட்டு கொண்டு வந்தது 
இதை நான் சாதகம் ஆக்கி கொஞ்சம் கொசோவா ருவண்டா ஆபிரிக்க கம்போடியா மாணவரை சேர்த்து 
அதில் நாமும் சேர்ந்துகொண்டோம் ஓவரு வருடமும் மூன்று நாட்கள் கண்காட்சி செய்வோம்.

சிங்களவர்கள் தம்மால் முடிந்த எதிர்ப்பை செய்துகொண்டே இருந்தார்கள் 
இவர்கள் பயங்கரவாதிகள் என்று தொடங்கி அதற்கு பொறுப்பானவரிடம் ஒரே சர்ச்சை 
செய்து கொண்டே இருப்பார்கள். இறுதியில் 2012இல் இவர் சொன்னார் நீங்களும் வந்து உங்கள் பக்க 
நியாத்தை சொல்வதாக உங்கள் சார்பில் ஒரு டென்ட் டை (கூடாரம்)  போடுங்கள் என்று.
அவர்கள் எங்கிருந்தோ தேடி பிடித்து இரண்டு முஸ்லீம்களை கொண்டுவந்து புலிகள் தம்மை யாழில் இருந்து 
கலைத்தார்கள் அது இது என்று எழுதி முஸ்லிம்கள் மன்னாரில் (உங்களுக்கு தெரிந்திருக்கும்) அரபிகள் வந்தால் காட்ட 10 குடும்பத்தை மன்னாரில் வைத்திருக்கிறார்கள். அந்த முகாமின் படங்களை போட்டு ஒரு கூடாரம் அமைத்தார்கள். நான் ஒரு முஸ்லிம் பெயரில் ஒரு ஈமெயில் திறந்து அவர்களுடன் தொடர்பு கொண்டேன் இது நல்ல விடயம் நானும் பங்கு எடுக்க போகிறேன் வேறு மாகாணத்தில் இருக்கிறேன் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் ..... சில உரையாடலின் பின்பு 
எனக்கு இலங்கை துதரலயத்தில் இருந்து ஈமெயில் வருகிறது விமான டிக்கெட் செலவு எல்லாம் தாம் செய்கிறோம்  என்னை அங்கு வரும்படி. அப்படி ஒன்றை நான் வசிக்கும் மாகாணத்திலும் செய்ய வேண்டும் என்றார்கள். அது பற்றி விரிவாக உரையாடலாம் என்று 
உங்களுக்கு புரிந்திருக்கும் இங்கு எனக்கு எதிர்கடை எங்கிருந்து வந்தது என்று.

இவற்றை எல்லாம் தண்டி ஈழ இனத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவன் உலகை புரிந்தவன் செய்ய கூடியது 
எமக்கு இலங்கை சிங்கள காடைகள் செய்ததை பரப்புரை செய்வதுதான்.
வலி என்பது எல்லோருக்கும் அதோ ஒரு வடிவில் வந்ததுதான். அந்த விளம்பரத்தில் இனி லாபமில்லை என்பது எனது தனிபட்ட எண்ணம்.
புலிகள் இருக்கும்போது புலிகள் பற்றி விமர்சனம் செய்திருந்தால் அவர்கள் தம்மமை ஒருவேளை திருத்தியோ 
மாற்றியோ அமைத்திருக்கலாம். அவர்களாகவே அதை கேட்டபோது ஒரு சிலரே அதை செய்தார்கள்.

புலியை துதிபாடிக்கொண்டு, புலியை இம்மியளவும் விமர்சிக்காமல் இனப்படுகொலை, போர்குற்றம் என்ன சொன்னாலும் அதை யாரும் சட்டை செய்யப்போவதில்லை.

09-16 வரையான அனுபவங்களில் இருந்து இது தானியக்கமாய் உணரப்படவேண்டும்.

எனவே புலியை பேசளவில் ஏனும் விமர்சிப்பது புதிய தலைமையாய் வரப்போகிறவர்களுக்கு அவசியமாகிறது. 

புதிய தலைமுறைத் தலைமையானது புலிகளின் பிழைகளுக்கு பொறுப்புக் கூற தேவையற்ற முறையில் ஒரு புலி-நீக்கத்தலைமையாக அமையும் போது புலியின் பாவங்களை அவர்கள்தலையில் கட்டி, அதன்மூலம் தமிழரை முடக்குவது சுலபமாயிராது.

உதாரணத்துக்கு சம்பந்தனை இன்று வரைக்கும் புலிப் புரொக்சி (proxy) என்று சொல்லி மட்டம் தட்டுவது போல்   சீவி சுமந்திரனை செய்ய முடிவதில்லை. காரணம் அவர்கள் புலிச்சாயம் குறைவானவர்கள்.

சீவி தானாகவே சில செயல், அறிக்கைகள் மூலம் தன்மேல் புலிச்சாயம் விழுமாறு பார்த்துக்கொள்கிறார். இதனாலேயே அவர் சொல்லும் பல காத்திரமான விடயங்கள் கவனத்தை ஈர்க்காமல் போகிறன. முன்பு இருந்தது போல் ராஜதந்திரிகள் கலந்து பேசும் அளவுக்கு சீவிக்கு இப்போ விரும்பபடுவராக இல்லை.

இந்த இன்புளுவன்சை அவர் இழந்ததால் தமிழர் உரிமைப் பயணம் பின்னடைவை சந்தித்ததா? நிச்சயமாகா ஆம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சுயநிர்ணய உரிமை,இராணுவ வெளியேற்றம்,காணி பொலிஸ் அதிகாரங்கள்,வட‌க்குகிழக்கு இணைப்பு ,போர்குற்ற விசாரணை இவையாவும் புலிசாயம் பூசியவையாகத்தான் சிங்கள மக்களாலும்,சிங்கள அரசியல் தலைவர்களாலும் நோக்கப்படுகிறது...சி.வி இதுகளைபற்றிதான் அதிகம் பேசினார்....ஈழத்துக்காக அவர் குரல் கொடுக்கவில்லை இருந்தும் அவருக்கு புலிசாயம் பூசப்படுவது ஏன்?.........இன்று உரிமைக்காக குரல் கொடுத்தாலே புலிசாயம்தான் பூசப்படும்....

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இவற்றை எல்லாம் சீவி சொல்லும் போது அவர்கள் உடனடியாக கொண்டுவந்து முன்வைப்பது என்ன? 

தனது புலியாதரவு நிலைப்பாட்டை, குறிப்பாக கடந்த தேர்தலில் ததேமமு வை ஆதரித்தமையை தவிர்த்து, இவற்றை சிவி சொல்லி இருந்தால் அவரின் கருத்தை இதே போல் தட்டிக் கழித்திருக்க முடியுமா?

அண்மையில் சீவி எதிர்கொள்ளும் சர்வதேச புறக்கணிப்பு, அவரின் அமேரிக்க பிரயாணத்தின் பின்னான அரசியலின் நேரடி விளைவே.

இதில் இருந்து அவர் பாடம் கற்கிறாரோ இல்லையோ, புலிவாலைப் பிடித்தால் என்ன அங்கீகாரம் சர்வதேசத்திடம் கிடைக்கும் என்று எமக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

//ரதி,

உண்மையில் அது தான் காரணம் என்றால், ஆட்சேர்ப்பு எங்களின் கொள்கைகளுக்கு விரோதமானது என்று ஒற்றைக்கையுடன் மங்கிய கண்பார்வையுடன் வந்து சொன்ன வெற்றிச்செல்விக்கு, தமிழினியால் என்ன சொல்லப்பட்டது என்பதை இப்போது உயிரோடு இருக்கும் வெற்றிச்செல்வியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.//

பகலவன்,வெற்றிச்செல்வியிடம்,தமிழினி அந்த நேரம் கட்டாய ஆட்சேர்ப்பு முக்கியம் என்று சொல்லி இருக்கலாம்.அது தமிழினியில் முடிவு இல்லையே. தலைமையின் முடிவுக்கு தமிழினி கீழ் பணிந்திருக்கலாம்...ஆனால் தமிழினியிடம் இப்ப கேட்டால் மன சாட்சிக்கு விருப்பமில்லாமல்,தலைமைக்காக கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டேன் என்று சொல்லுவார்...அப்படித் தானே நூலில் எழுதியிருக்கிறார்...தவிர கட்டாய ஆள் சேர்ப்புக்கு தமிழினியை மட்டும் குற்றம் சொல்லுவதும் தப்புத் தானே!

12 hours ago, MEERA said:

சூப்பர்

ஏன் சூப்பர் என்று சொன்னால் நானும் எனது பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே. 

@@@

ஜெயராஜ் இப்போதும் எழுதுகின்றாரா? 

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,ஜெயராஜின் கட்டுரை சரி என்று நினைக்கிறீங்களா அல்லது அதை ஆதரிக்கிறீங்களா?

ஜெயராஜின் கட்டுரையை நான் சரி, பிழை என்று நினைத்தோ அல்லது ஆதரித்தோ, ஆதரிக்காமல் விட்டோ என்ன நடக்கப்போகின்றது. எழுதியதை வாசித்தேன், உண்மை, பொய், சரி, பிழையை ஆராயவில்லை. இவற்றுக்கு அப்பால் சில தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது (அவை வெறும் சிந்தனைகள், எண்ணக்கருக்களாகக்கூட அமையலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கலைஞன் said:

ஜெயராஜ் இப்போதும் எழுதுகின்றாரா? 

நீங்கள் ஊட்டினால் அவர் எழுதுவார். 

உண்மைகள் உறங்காது என்பதற்கு பகலவனின்  உண்மையான கருத்துகளே போதும் அர்ஜுன் போன்றவர்களின் கண்மூடித்தனமான கருத்துகளுக்கு பதிலாக ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.