Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி ; மட்டக்களப்பின் மனதை உருக்கும் கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வேடம் எடுக்கவில்லை நர வேட்டையாடினார்கள். அப்பாவித் தமிழர் மீது. 

வ்வுனியாவில் தோல்வி மேல் தோல்வியடைந்து அரசியலில் லாயக்கற்று இருந்தவரை புலிகளால் கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு கொடுத்த சந்தர்ப்பத்தால் வந்த பலன்.

தமிழர் மீது யார்தான் அரசியல் செய்யவில்லை. 

  • Replies 54
  • Views 21.2k
  • Created
  • Last Reply
21 minutes ago, arjun said:

புலிகளை அழிக்க எந்த வேடம் எடுத்தாலும் நானும் அதற்கு ஆதரவுதான் , அதைதான் சித்தரும் சொல்லுகின்றார் .

அதன் பலன் தான் இப்போ இரண்டு உறுப்பினர்கள் அடுத்து நாலாக உருவாகும் .

நாங்கள் தான் இனி நாட்டில் அரசியல் செய்ய போகின்றோம் அடித்தளம் அந்த அளவு இருக்கு ஆயுதம் இனி வேலை செய்யாது .

விதியானது வலியது .

புலிகளை அழிப்பதற்கு சொந்த பந்தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை?
சிங்களவனை நக்கியென்றாலும் பிழைப்பு நடத்தலாம்? இதே நீங்கள் தான் முன்பு ஒரு தி
திரியில் சொன்னீர்கள் சித் ஒரு நண்பன் ஆனா அவரின் அரசியல் சரியல்ல என்று
இப்ப எப்படி அவர் செய்வது எல்லாம் சரி? நிலையான கொள்கை உங்களிடமில்லையா?
உங்களின் நிலையான கொள்கை புலி எதிர்ப்பு அது எந்த திரியென்றாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிப்பதற்கு நடந்த அனைத்தையும் சரி எனும் தாங்கள் புலிகள் மேல் குற்றம் சுமத்த லாயக்கற்றவர். 

"There are certain criminal cases we know of in which ex-members of our organisations were involved because they have no means and only know how to carry weapons. They are not rehabilitated. They must be provided with the jobs, they must be trained to integrate with the community," he says.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11234087

சித்தரே சொல்லீட்டார் தனது முன்னாள் ஆட்களுக்கு ஆயுத்த்தை தூக்கிறதை தவிர வேற ஒன்றும் தெரியாது என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

புலிகளை அழிப்பதற்கு நடந்த அனைத்தையும் சரி எனும் தாங்கள் புலிகள் மேல் குற்றம் சுமத்த லாயக்கற்றவர். 

இதற்கு மேலும்..... தனக்கு, லாயக்கு இருக்கு எண்டு, நாண்டு கொண்டு நிண்டு.....
ஆர்வம் காட்டுவதை விட.... பேசாமல், மூட்டை முடிச்சுக்களுடன், ஊருக்குப் போய் அரசியல் செய்வது திறம். smileymania.at_02079.gif

56 minutes ago, arjun said:

புலிகளை அழிக்க எந்த வேடம் எடுத்தாலும் நானும் அதற்கு ஆதரவுதான் , அதைதான் சித்தரும் சொல்லுகின்றார் .

அதன் பலன் தான் இப்போ இரண்டு உறுப்பினர்கள் அடுத்து நாலாக உருவாகும் .

நாங்கள் தான் இனி நாட்டில் அரசியல் செய்ய போகின்றோம் அடித்தளம் அந்த அளவு இருக்கு ஆயுதம் இனி வேலை செய்யாது .

விதியானது வலியது 

புலிகளை அழித்தல் என்ற போர்வையில் தமிழ்மக்கள் அழிக்கப்பட்டனர் அவர்களது உரிமையும் போராட்டமும் அழிக்கப்பட்டது. புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை ஆனால் இவ்வாறான காழ்புணர்வு என்பது தமிழர்களை அழிபதற்க்கான சிங்களப்பேரினவாதத்திற்கான ஆதரவு என்றே பதிவாக்கப்படுகின்றது. 

எமக்குள் நாம் இரைதேடும் குணத்தால் பூதமாக முன்னால் நிற்கும் பேரினவாதம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதேபோல் யுத்தம் மற்றும் பொருளாதாரக்காரணங்களாலும் போதிய விழிப்புணர்வு இன்மையாலும் நடக்கும் இச் சிறுவயதுத் திருமணங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கான தீர்வு காழ்புணர்வை வெளிப்படுத்துவதால் எவ்வகையிலும் ஏற்படாது. ஆயுதப்போராட்டத்திற்கு முந்தய அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. அதன் விழைவே ஆயுதப்போராட்டம். இப்போது நீங்கள் கூறும் புலிகளை அழித்தல் என்ற போர்வையில் தமிழர்களை பேரினவாதம் அழித்தது சரி என்பதும் தற்கொலை அரசியலே ! புலிகளும் புளட்டும் என்னும் எல்லா ஆயுதக்குளுக்களும் தமிழர்கள் என்ற பொதுப்பார்வையற்ற குருட்டுத்தனத்தை அரசியல் என்ற சொல்லுக்குள்ளே கூட கொண்டுவரமுடியாது. நாங்கள் தான் இனி அரசியல் செய்யப்போகின்றோம் என்ற கூற்றிலேயே நீங்கள் என்ற ஒரு தரப்பை பிரித்துக்காட்டுகின்றீர்கள். இது அரசியல் அல்ல எமக்குள் நாம் தொடர்ந்து இரைதேடப்போவதையே ஒவ்வொரு எழுத்தும் சுட்டிக்காட்டுகின்றதே தவிர பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலோ அல்லது இத்திரிக்கு தொடர்புடைய சமூக அவலத்தை போக்கும் அரசியலோ இல்லை. 

இத் திரி பயணிக்க வேண்டிய பாதையை திசை திருப்பியதே பேரினவாதத்திற்கான ஆதரவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

புலிகளை அழிக்க எந்த வேடம் எடுத்தாலும் நானும் அதற்கு ஆதரவுதான் , அதைதான் சித்தரும் சொல்லுகின்றார் .

அதன் பலன் தான் இப்போ இரண்டு உறுப்பினர்கள் அடுத்து நாலாக உருவாகும் .

நாங்கள் தான் இனி நாட்டில் அரசியல் செய்ய போகின்றோம் அடித்தளம் அந்த அளவு இருக்கு ஆயுதம் இனி வேலை செய்யாது .

விதியானது வலியது .

அப்படி நட‌ந்தால் அது நல்ல விசயம் ஆனால் நிவாரணம்(பார்சல்கள்) தான் தீர்வல்ல .....என்பதை அந்த முன்னாள் ஆயுதபோராளிகள்  புரிந்து கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

புலிகளை அழிக்க எந்த வேடம் எடுத்தாலும் நானும் அதற்கு ஆதரவுதான் , அதைதான் சித்தரும் சொல்லுகின்றார் .

அதன் பலன் தான் இப்போ இரண்டு உறுப்பினர்கள் அடுத்து நாலாக உருவாகும் .

நாங்கள் தான் இனி நாட்டில் அரசியல் செய்ய போகின்றோம் அடித்தளம் அந்த அளவு இருக்கு ஆயுதம் இனி வேலை செய்யாது .

விதியானது வலியது .

அண்ணை

பொறுப்புடன் கருத்துக்களத்தில் எழுதுங்கள்

பழி வாங்கும் உணர்வும் தீராத கோபமும் ஒரு போதும் தமிழருக்கு நன்மை தரப்போவதில்லை.

உங்கள் அரசியல் பாதையை முடிவை உறுதி செய்யும் முன் 

இவற்றை கைவிடவும்

அல்லது அரசியலை கைவிடவும்

மீண்டும் மீண்டும் அழிவு யுத்தத்துக்கு எதிர் என்றபடி எங்கு செல்கிறீர்கள்?????

ஆனால் என் வாழ்வில் ஒருபோதும் புளட்டை அழிக்க எந்த வேடம் வேண்டுமானாலும் போடுவேன் என்று எழுதமாட்டேன்.

நன்றி.

Edited by விசுகு

அர்ஜுன் வந்து கருத்தெழுதியவுடன் எல்லோரும் அவருக்குப் பின்னேயே செல்வது வியப்பாகவுள்ளது.

7 hours ago, சண்டமாருதன் said:

புலிகளை அழித்தல் என்ற போர்வையில் தமிழ்மக்கள் அழிக்கப்பட்டனர் அவர்களது உரிமையும் போராட்டமும் அழிக்கப்பட்டது. புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை ஆனால் இவ்வாறான காழ்புணர்வு என்பது தமிழர்களை அழிபதற்க்கான சிங்களப்பேரினவாதத்திற்கான ஆதரவு என்றே பதிவாக்கப்படுகின்றது. 

எமக்குள் நாம் இரைதேடும் குணத்தால் பூதமாக முன்னால் நிற்கும் பேரினவாதம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதேபோல் யுத்தம் மற்றும் பொருளாதாரக்காரணங்களாலும் போதிய விழிப்புணர்வு இன்மையாலும் நடக்கும் இச் சிறுவயதுத் திருமணங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கான தீர்வு காழ்புணர்வை வெளிப்படுத்துவதால் எவ்வகையிலும் ஏற்படாது. ஆயுதப்போராட்டத்திற்கு முந்தய அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. அதன் விழைவே ஆயுதப்போராட்டம். இப்போது நீங்கள் கூறும் புலிகளை அழித்தல் என்ற போர்வையில் தமிழர்களை பேரினவாதம் அழித்தது சரி என்பதும் தற்கொலை அரசியலே ! புலிகளும் புளட்டும் என்னும் எல்லா ஆயுதக்குளுக்களும் தமிழர்கள் என்ற பொதுப்பார்வையற்ற குருட்டுத்தனத்தை அரசியல் என்ற சொல்லுக்குள்ளே கூட கொண்டுவரமுடியாது. நாங்கள் தான் இனி அரசியல் செய்யப்போகின்றோம் என்ற கூற்றிலேயே நீங்கள் என்ற ஒரு தரப்பை பிரித்துக்காட்டுகின்றீர்கள். இது அரசியல் அல்ல எமக்குள் நாம் தொடர்ந்து இரைதேடப்போவதையே ஒவ்வொரு எழுத்தும் சுட்டிக்காட்டுகின்றதே தவிர பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலோ அல்லது இத்திரிக்கு தொடர்புடைய சமூக அவலத்தை போக்கும் அரசியலோ இல்லை. 

இத் திரி பயணிக்க வேண்டிய பாதையை திசை திருப்பியதே பேரினவாதத்திற்கான ஆதரவுதான். 

திரி எப்படி திசை மாறியது என்று உங்கள் தெரிய வாய்ப்பில்லை உங்கள் கண்களில் அவை தென்படுவதும் இல்லை .

"காழ்புணர்வு என்பது தமிழர்களை அழிபதற்க்கான சிங்களப்பேரினவாதத்திற்கான ஆதரவு என்றே பதிவாக்கப்படுகின்றது. "

உங்களின் இந்த பதிவுகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது .

எதிரி சிங்களபேரினவாதம் என்பதை அறியாமல் அரசியல் செய்தவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி அது

மாற்றுகருத்தாளர்களுக்கு இடமில்லை ,இந்தியாவுடன் சண்டை ,சர்வதேசம் பயங்கரவாதமுத்திரை குத்திவிட்டது .ஆயுதத்தை மட்டும் நம்பி இருபது வருடங்களாக குழந்ததை குஞ்சுகளை எல்லாம் பல வந்தமாக பிடித்து போர் நடக்குது .போரின் வலியும் வடுவும் நாட்டில் உள்ளவர்களுக்குத்தான் வெளிநாட்டில் இருந்துகொண்டு கிழமைக்கு ஒரு முறை மேடைபோடுபவர்களுக்கும் உண்டியல் தூக்குபவர்களுக்கும் இல்லை .

போரின் போது அன்றாடம் மரணித்த போராளிகளினதும்  அப்பாவி மக்களினதும் கணக்கு உங்கள் கண்களுக்கு தெரியாது ஆனால் இறுதி போரில் இறந்த கணக்கு மட்டும் தான் தெரிகின்றது .அந்த இழப்புகளுக்கு கூட புலிகள் தான் முக்கிய காரணம் .

போர் இன்றும் தொடருமாயின் அதன் விளைவுகளை எப்போதாவது சிந்தித்து பார்தீர்களா ?

நீங்கள் யாரவது போரின் பங்காளிகளாக உங்கள் பிள்ளைகளையும் போராட்டத்திற்கு அனுப்பியிருந்தால் நான் இப்படி எழுதவேண்டிய தேவையே இருக்காது .போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது குடும்பங்களுடன் குதூகலமாக இருந்து கொண்டு நாட்டில் நடக்கும் போரை கொண்டாடும் போலியல்ல நாங்கள் .

மாற்று கருத்து வைப்பவர்களுக்கு முத்திரை குத்தும் தொழிலை தொடர்ந்தும் இப்படியே செய்துகொண்டிருங்கள் .இனத்திற்கு விடிவு வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2016 at 11:12 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலரும் கடின உழைப்புக்கு முன்னிற்காது சுகமாகக் காசு பார்க்கவே வன்னியிலும் யாழிலும் விரும்புகின்றனர். அவர்களாகத் திருந்தினாலன்றி நாம் என்ன செய்ய முடியும் ?? அங்கு பொய் உதவுபவர்கள் கூட வெறுத்துப் பொய் தான் திரும்புகின்றனர்.

உண்மைதான். நான் கூட இதை பலமுறை ஊருக்கு சென்றபோது பார்த்து மன்முடைந்திருக்கிறேன். கஷ்டப்படுகிறார்களே என்று அங்கு செல்லும் ஒவ்வொருவரும் ஒரு தொகை பணத்தை கொடுக்க, நோகாமல் அப்படியே வாழ்க்கையை ஒட்டுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறதே ஒழிய வரும் காசை வைத்து ஒரு சிறு தொழில் தொடங்கி உழைக்க அவர்களுக்கு நாட்டம் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2016 at 3:52 PM, arjun said:

இதில் வந்து என்ன எழுதவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள் ?

முப்பது வருடங்கள் போரை நடாத்தியவர்கள் தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் .

இந்தத்திரி இங்கு பதியப்பட்டதன் காரணம் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதனால் வரப்போகும் கலாச்சார சீரழிவுகளையும் எப்படி தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதற்க்கான எமது அறிவுபூர்வமான, தற்போதைய கள யதார்த்தத்திற்கு இசைவான எமது கருத்துகளை பகிர்வதற்கும் அதன்மூலம் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை உருவாக்குவதர்க்குமேயாகும். இதிலும் வந்து பழைய புராணம்  பாடுவது புலி வாந்தியெடுப்பது உங்கள் காழ்ப்புணர்ச்சியையும், அறிவுபூர்வமான கருத்தாடல்களுக்கு நாட்டமில்லாத அல்லது தெரியாத மனப்போக்கையே காட்டுகிறது. எப்படியோ இது ஒன்றும் யாழ் களத்தில் புதிதல்ல.

 இவர்கள் எல்லாம் புலியில் சேர்ந்து போராடக்கூடாது என்று இளவயதில் திருமணம் முடித்தவர்களும் .அவர்களின் வாரிசுகளுமே. புலிகள் ஏன் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் எமது ஊர்களிலும் வன்னியிலும் போராட்டம் நடந்த காலங்களில் இப்படி நடக்கவில்லையே..

இவற்றிற்கு முக்கிய காரணங்கள் வறுமை, படிப்பறிவின்மை, கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளை படிக்கவைப்பதில் ஆர்வமில்லாத பெற்றோர், அவர்களது வறுமையை தங்களுக்கு சாதகமாக்கி இளவயதில் நடக்கும் திருமணங்களை ஓரமாக நின்று வேடிக்கைபார்க்கும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உண்மைதான். நான் கூட இதை பலமுறை ஊருக்கு சென்றபோது பார்த்து மன்முடைந்திருக்கிறேன். கஷ்டப்படுகிறார்களே என்று அங்கு செல்லும் ஒவ்வொருவரும் ஒரு தொகை பணத்தை கொடுக்க, நோகாமல் அப்படியே வாழ்க்கையை ஒட்டுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறதே ஒழிய வரும் காசை வைத்து ஒரு சிறு தொழில் தொடங்கி உழைக்க அவர்களுக்கு நாட்டம் இருப்பதாக தெரியவில்லை.

சில விடயங்களை பேசுவது 

எம் பல்லைக்குத்தி.........?

கிளிநொச்சியில் காயமடைந்த

வலதுகுறைந்தவர்களை பராமரிக்க என ஒரு இல்லம் திறக்கப்பட்டு

அது ஆட்கள் வராததால் தோல்வியில் முடிந்தது

காரணம் கேட்டபோது வந்த பதில்

உங்க வந்தால் சாப்பாடு மட்டும்  தான் போடுவீர்கள்

வெளியில் இருந்தால் பல பக்கத்தாலும் பணம் வரும் என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2016 at 4:15 PM, arjun said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு,  வெல்லாவெளி,  கொக்கட்டிச்சோலை,  வாகரை,  கிரான், செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன .

மேலே உள்ள செய்தி விசுகருக்கு .

வடக்கிலும் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்கள் பல கிராமங்களில் வாழ்கிறார்கள்தானே. அங்கெல்லாம் இப்படி நடக்கவில்லையே. சும்மா படம் காட்டிறதை விட்டிட்டு அறிவுபூர்வமான கருத்துகளை பதியவும்.

இது உங்களுக்கு .

12936660_615399951950937_215977498071251

கருணாநிதி, ஜெயலலிதா போல் இலவசங்களை கொடுப்பதால் மக்களின் வாழ்வு மேம்படப்போவதில்லை. அவர்களுக்கான் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கவேண்டும். அதுதான் எதிகால  வாழ்வை வளப்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, arjun said:

போர் இன்றும் தொடருமாயின் அதன் விளைவுகளை எப்போதாவது சிந்தித்து பார்தீர்களா ?

செப்டம்பர் 11 நிகழ்வுகள் நடந்திருக்கா விட்டால் பல நிகழ்வுகள் உங்களுக்கு பாதகமாகவே இருந்திருக்கும். மாமரத்தின் ஒரு கிளையையேனும் துண்டித்திருக்க விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சில விடயங்களை பேசுவது 

எம் பல்லைக்குத்தி.........?

கிளிநொச்சியில் காயமடைந்த

வலதுகுறைந்தவர்களை பராமரிக்க என ஒரு இல்லம் திறக்கப்பட்டு

அது ஆட்கள் வராததால் தோல்வியில் முடிந்தது

காரணம் கேட்டபோது வந்த பதில்

உங்க வந்தால் சாப்பாடு மட்டும்  தான் போடுவீர்கள்

வெளியில் இருந்தால் பல பக்கத்தாலும் பணம் வரும் என்பதாகும்.

நிதானம், முக்கியம் விசுகு. 50.gif
இதனை... வைத்து.... எதனை  பேர் பிலிம் காட்டப் போறாங்கள் எண்டதையும்... பார்த்து... ஒட்டு மொத்தமாக... உள்ளே தள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு.பிள்ளையைப் பெத்தவுடனேயே கஸ்டபடாமல் ஈசியாக வளர்த்துப் போட்டு,சீக்கிரமாக அவர்களை திருமணம் செய்து கொடுத்து விட்டு,எந்த வித பிக்கல்,பிடுக்கல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.சின்ன வயசிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என்று நினைப்பதாலேயே இளவயதுத் திருமணங்கள் நடக்கின்றது.

போர்,புலிகள்,பணம்,பொருளாதாராம் எல்லாம் ஒரு சாட்டு...இந்த மக்களுக்கு முதலில் தேவை கவுன்சிலிங்.அதை முறையாக கொடுத்தாலே எல்லாம் சரியாகி விடும்.அடுத்ததாக கட்டாயமாக எல்லோருக்கும் கல்வியறிவை ஊட்ட வேண்டும்.இவை இரண்டும் இருந்தாலே அந்த மக்கள் தானாக முன்னேறுவார்கள்

  • தொடங்கியவர்

சித்தாண்டியில் குழந்தையைக் கைவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை

3465_1460026475_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் லுஜிதா (வயது 20) என்ற ஒரு குழந்தையின் தாய், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 06.04.2016 இரவு தனது வீட்டு பூஜை அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒரு வயதைக் கடந்த கைக்குழந்தையை தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு வந்தே பூஜை அறையில் நைலோன் கயிற்றினால் சுருக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றவரைத் தேடிப் பார்த்தபோது இருளில் கிடந்த வீட்டுக்குள் மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கே. சுகுமாரின் மேற்பார்வையில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

குரல் வளை இறுகியதால் சுவாசம் தடைப்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

http://battinaatham.com/description.php?art=3465

On 4/6/2016 at 0:22 PM, விசுகு said:

சில விடயங்களை பேசுவது 

எம் பல்லைக்குத்தி.........?

கிளிநொச்சியில் காயமடைந்த

வலதுகுறைந்தவர்களை பராமரிக்க என ஒரு இல்லம் திறக்கப்பட்டு

அது ஆட்கள் வராததால் தோல்வியில் முடிந்தது

காரணம் கேட்டபோது வந்த பதில்

உங்க வந்தால் சாப்பாடு மட்டும்  தான் போடுவீர்கள்

வெளியில் இருந்தால் பல பக்கத்தாலும் பணம் வரும் என்பதாகும்.

விசுகு ஓர் கோணத்தில் உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால், வேறோர் கோணத்தில் இதை விளங்க உங்களிடம் ஓர் கேள்வி.

போர் காரணமாக உங்கள் கைகளோ கால்களோ கண்களோபோய்விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் ஓர் நிரந்த உடலியல் உபாதைக்கு உள்ளாகிய ஒருவராகிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் சுயமாக இயங்கமுடியாது. இப்படியான நிலையில்...

நீங்கள் வசதிகள் குறைவு என்றாலும் உங்கள் ஊரில் அல்லது உங்களுக்கு பிடித்தமான இடத்தில் சுதந்திரமாக இருப்பதை விரும்புவீர்களா அல்லது உங்கள் பாசையில் 'வலது குறைந்தவர்கள் இல்லம்' ஒன்றில் உங்களைப்போல் வெவ்வேறு பாதிப்புக்கு உள்ளாகி சுயமாக இயங்க முடியாதவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவீர்களா? 

எனக்கு இப்படியோர் நிலமை ஏற்பட்டால் நானும் நிச்சயம் சுதந்திரமான ஓர் இடத்தில் வாழ விரும்புவனேயொழிய பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கி வாழ விரும்பமாட்டேன். எனவே, "உங்க வந்தால் சாப்பாடு மட்டும்தான் போடுவீர்கள், வெளியில் இருந்தால் பல பக்கத்தாலும் பணம் வரும்" என்பது யதார்த்தபூர்வமானது மட்டுமல்ல நியாயமான எதிர்பார்ப்புமாகும்.

நிரந்த உடல் உபாதைகளிற்கு உள்ளாகியவர்கள், சுயமாக இயங்க முடியாதர்வர்களுக்கு ஆசை, விருப்பங்கள் வாழ்வில் கூடாதா? இவர்கள் உங்களுக்கு இலகு என்பதற்காக பராமரிப்பு இல்லத்தில் வாழவேண்டும் என்று விரும்புவது எவ்வகையில் நியாயம்? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கலைஞன் said:

நீங்கள் கூறுவது உண்மைதான் கலைஞன். புலம்பெயர் நாடுகளிலேயே எழுந்து நடமாட முடியாமல் படுத்தபடுக்கையில் கிடக்கும் முதியவர்களே குடும்பத்தை விட்டு தனியாகப் பராமரிப்பு இல்லத்துக்குப் போக விரும்புவதில்லை. அங்கு சுதந்திரமாக இருப்பவர்கள் எப்படிப்போவார்கள். ரதி கூறியதுபோல் அந்தப பெண்களுக்குக் கவுன்சிலிங்கும் வாழ்வாதாரத்துக்கான சுய தொழிலும் நம்பிக்கையுமே அவர்களை மாற்றும். ஆனாலும் அதுகூட இலகுவான காரியம் அல்ல.

On 4/5/2016 at 6:10 PM, வல்வை சகாறா said:

சிரத்தையுடன் கவனத்தில் கொண்டு சீரமைக்கப்படவேண்டிய விடயத்திற்குள்ளும் போராட்டம் அரசியல் என்று திணிப்பவர்களே கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் முடிந்தால் இத்தகைய நிலைகளில் இருந்து சிறுமிகளை  பாதுகாக்க என்ன வழி என்று தெரிந்தால் சொல்லுங்கள் மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கிடையாதா? எத்தகைய மனோவியல் பாதிப்பை அந்தச் சிறுபெண்கள் எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதை உங்களால் எள்ளளவேனும் உணர முடியுமா? ஒரு இளைய சமூகமே மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்க அச்செய்தியிலும் வந்து மாரித்தவக்கைகளைப்போல் கத்திக்கொள்கிறீர்களே சீ.... போய் உங்கள் முகங்களை கண்ணாடிகளில் பார்த்து நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.

monkey_looking_in_the_mirror.jpg

நான் இங்கு எதையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், இந்தபதிவை பார்த்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் எனது அம்மா. எனது அம்மாவுக்கு 15வயதுடன் இனி நீங்கள் பள்ளிக்கூடம் போகத்தேவையில்லை என்று கூறப்பட்டது.  அம்மாவின் 16 வயதில் 28வயதான எனது அப்பாவுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களின் வாழ்க்கை ஒன்றாக 57வருடங்கள் கழிந்தன. சில குறைகள் அம்மாவுக்கு தனது வாழ்க்கையில் இருந்தாலும் என்றென்றும் அப்பா அவரது அளவுகடந்த அன்புக்கு பாத்திரமானவர்.

நான் க.பொ.ச படித்துக்கொண்டிருந்த காலத்தில் என்னுடன் எட்டாம் வகுப்புவரை ஒன்றாக படித்த சக மாணவின் கையில் குழந்தையுடன் அவளது கணவர் துவிச்சக்கரவண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு செல்வதை கண்டுள்ளேன். 

மேலேயுள்ள செய்தியில் 15வயது அம்மாவின் கையில் கைத்தொலைபேசி உள்ளது. இதுவும் ஓர் செய்தியை கூறுகின்றது. :rolleyes:

On 4/6/2016 at 4:47 PM, ரதி said:

முதலில் அந்த மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு.பிள்ளையைப் பெத்தவுடனேயே கஸ்டபடாமல் ஈசியாக வளர்த்துப் போட்டு,சீக்கிரமாக அவர்களை திருமணம் செய்து கொடுத்து விட்டு,எந்த வித பிக்கல்,பிடுக்கல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.சின்ன வயசிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என்று நினைப்பதாலேயே இளவயதுத் திருமணங்கள் நடக்கின்றது.

போர்,புலிகள்,பணம்,பொருளாதாராம் எல்லாம் ஒரு சாட்டு...இந்த மக்களுக்கு முதலில் தேவை கவுன்சிலிங்.அதை முறையாக கொடுத்தாலே எல்லாம் சரியாகி விடும்.அடுத்ததாக கட்டாயமாக எல்லோருக்கும் கல்வியறிவை ஊட்ட வேண்டும்.இவை இரண்டும் இருந்தாலே அந்த மக்கள் தானாக முன்னேறுவார்கள்

கல்வியறிவு என்று நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள்? எனக்கு வாழ்க்கையில் வாழ்வதற்கு இன்னோர் சந்தர்ப்பம் கிடைத்தால் நான் நிச்சயம் மீண்டும் க.பொ.உயர்தரம் கற்கமாட்டேன். க.பொ.சா கற்ற எட்டு பத்து பாடங்களில் 75% வெற்று குப்பை, அலட்டல், சுத்துமாத்து. இலங்கை பாடவிதானத்தில் க.பொ.ச, க.பொ.உ. கற்று மினக்கடுவதை விட ஒரு கலியாணம் கட்டினால் யதார்த்தமான வாழ்க்கை படிப்பாவது கிடைக்கும்.

அண்மையில் யாழில் பார்த்த ஓர் பதிவு: 

கனடா ஒன்றாரியோவில் இப்படி கூறப்படுகின்றது: 

Age minimum

You need to be at least 16 years old to get married in Ontario.

Under 18 years old: you will need written consent from both your parents. You can get consent forms where you get a marriage licence.

https://www.ontario.ca/page/getting-married

மேலதிக சட்ட சரத்துக்கள் கனடா: 

Age of Consent to Sexual Activity

Frequently Asked Questions

To what kind of sexual activity does this apply?

The age of consent laws apply to all forms of sexual activity, ranging from sexual touching (e.g., kissing) to sexual intercourse.

What is Canada's age of consent?

The age of consent for sexual activity is 16 years. It was raised from 14 years on May 1, 2008 by the Tackling Violent Crime Act.

However, the age of consent is 18 years where the sexual activity "exploits" the young person -- when it involves prostitution, pornography or occurs in a relationship of authority, trust or dependency (e.g., with a teacher, coach or babysitter). Sexual activity can also be considered exploitative based on the nature and circumstances of the relationship, e.g., the young person's age, the age difference between the young person and their partner, how the relationship developed (quickly, secretly, or over the Internet) and how the partner may have controlled or influenced the young person.

Are there any exceptions to this?

The Criminal Code provides "close in age" or "peer group" exceptions.

For example, a 14 or 15 year old can consent to sexual activity with a partner as long as the partner is less than five years older and there is no relationship of trust, authority or dependency or any other exploitation of the young person. This means that if the partner is 5 years or older than the 14 or 15 year old, any sexual activity will be considered a criminal offence unless it occurs after they are married to each other (in accordance with the "solemnization" of marriage requirements that are established in each province and territory, governing how and when a marriage can be performed, including the minimum age at which someone may marry).

There is also a "close-in-age" exception for 12 and 13 year olds: a 12 or 13 year old can consent to sexual activity with another young person who is less than two years older and with whom there is no relationship of trust, authority or dependency or other exploitation of the young person.

Are 16 and 17 year olds also protected against sexual exploitation?

The Criminal Code protects 16 and 17 year olds against sexual exploitation, where the sexual activity occurs within a relationship of trust, authority, dependency or where there is other exploitation. Whether a relationship is considered to be exploiting the 16 or 17 year old will depend upon the nature and circumstances of the relationship, e.g., the age of the young person, the age difference between the young person and their partner, how the relationship developed and how the partner may have controlled or influenced the young person. As well, 16 and 17 year olds cannot consent to sexual activity that involves prostitution or pornography.

http://www.justice.gc.ca/eng/rp-pr/other-autre/clp/faq.html

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் ,

அம்மாக்களுடைய காலத்தில் 15 இல் அல்ல 13 வயதிலேயே திருமணபந்தத்திற்குள் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்போதைய காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்த அடுத்த வருடங்களிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கான உலகம்,... பருவ வயது என்பதையே மறுக்கப்பட்டதாக இருந்தது. பால்யம் தாண்டும் காலத்தில் சட்டென்று தாய்மைக்குள் புகுத்தப்பட்டுஅவர்களுக்கான எக்கனவையும் காணமுடியாதவர்களாக முடக்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களுக்கு தம்மை எருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய காலம் இன்று இல்லை வாழ்க்கைமுறையும் முற்றிலும் மாறுபட்டதாக பெண் என்பவள் சுயபலம் பொருந்தியவளாக வாழ காலம் நிர்பந்தித்திருக்கிறது. ஆனால் இன்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  வாழ்வானது சிறகுகளில் பலம் பொருந்தாத சிறிய குருவிகளில் சுள்ளிவிறகு கட்டியதுபோல் திராணியற்ற வாழ்வுக்கும், வறுமைக்கும், வாழா முறைமைக்கும் இட்டுச் செல்வதை யாரும் மறுக்கமுடியாது. பெற்றோர் பொறுப்பு குறைந்தால் காணும் என்று சிந்திக்கும் அளவுக்கு அப்பெண்பிள்ளை சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று சிந்திப்பதில்லை. தனக்கு ஒவ்வாத வாழ்வாக அவ்வாழ்வு போகும் பட்சத்தில் அச்சிறுமியால் இச்சமூகத்தில் நிமிர்வாக வாழ எவ்வழிகளையும் அச்சிறுமிக்கு கற்பிக்காது இளவயது திருமணம் தம்முடைய புதல்விக்கு எல்லாவகையிலும் சுபீட்சத்தை வழங்கும் என்று எண்ணும் முட்டாள்த்தனத்தை போக்க வேண்டும். இளவயது திருமணங்கள் முறிகின்ற பட்சத்தில் ஒழுக்கநிலை, பக்குவம் அற்ற பிள்ளை வளர்ப்பு, சமுதாய வெறுப்பு, தன்நிலை விரக்தி என்று பல விடயங்களை சிறுமிகள் சந்திக்கும் ஆபத்து இருக்கிறது. இவற்றுக்குள் தன்னைக்காத்து வெளிவருவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. நேற்றைய காலத்தில் எங்கள் அன்னையருக்கு இருந்ததுபோல் ஆதரவும், கூட்டுக்குடும்பப் பராமரிப்பும் இன்றைய காலத்தில் கிடையாது. அத்தோடு ஒரு பெண்ணுக்கான திருமண வயது என்பது அவளுக்கான உடல் உள ரீதியாக முழுமை பெற்றிருக்கவேண்டும்.

சகாறா அக்கா நீங்கள் குறிப்பிடுகின்ற வறுமை நிலை எப்போது தொடக்கம் உள்ளது? இது அண்மைக்காலத்தில் தோன்றிய ஒன்றா அல்லது காலங்காலமாக உள்ள விடயமா? சரியான தகவல்கள் தெரியாமல் ஓர் செய்தி துணுக்கை வைத்து விடயங்களை மட்டுக்கட்டுவது கடினம். உதாரணத்திற்கு இங்கே குறிப்பிடப்படும் 15வயது தாய், அவர் அம்மாவுக்கு 30 வயது என்று சொல்லப்படுகின்றது. 30 வயது அம்மாவின் தாய்க்கு தற்போது எத்தனை வயது? அவரது தாய்க்கு எத்தனை வயது? இந்த மாற்றம் அண்மைக்காலத்தில் வந்ததா அல்லது சந்ததி சந்ததியாக உள்ளதா? திடீரென்று தூக்கத்தால் எழுந்து என்னது மகாத்மா காந்தி செத்துப்போனாரா என்று கேட்பதுபோல் உள்ளது செய்தி??

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,ஊரில இருந்து கொண்டு ஓ/எல்,ஏ/எல் படிக்காமல் 18 வயசில கல்யாணத்தை கட்டிப் போட்டு எப்படி குடும்பத்தை கொண்டு நடத்துவீங்கள்?
கூலி வேலைக்கு போய் குடும்பம் நடத்துவீர்கள் என்டால்,அந்தப் பணம் குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு போதுமாக இருக்குமா?
வெளி நாட்டில் உள்ள உங்கள் உறவுகளிடம் மாதம்,மாதம் பயம் அனுப்பச் சொல்லி நச்சரிப்பீர்கள்.அல்லது அவர்களிடம் பணத்தை மொத்தமாக வேண்டி சுய தொழில் தொடங்குவீர்கள்.[அப்படி கொடுத்து உதவ யாரும் இல்லாத மக்களை பற்றியே நான் கதைக்கிறேன்.]
மத்திய கிழக்குக்கு வேலை வாய்ப்புக்காக போவீர்கள்.கல்யாணம் கட்ட முதல் போய் உழைத்திட்டு வந்தால் பரவாயில்லை.கல்யாணம் கட்டிட்டு,போய்ட்டு வந்து குடும்பமே சீரழிகின்றதைப் பற்றித் தான் கட்டுரையில் சொல்லி இருக்குது.

15 வயசில கல்யாணத்தை கட்டிகின்ற ஒரு பெண் 25,28 வயசுக்குள்ளேயே நாலைஞந்து பிள்ளைகளை பெத்துப் போட்டு 30,35 க்குள் பாட்டியாகின்றதோடு அவர்களது வாழ்க்கை முடிந்து போய் விடும்.15 வயது வரைக்கும் பெற்றோரின் கீழ்,கல்யாணம் கட்டின பிறகு கணவரின் கீழ்,அதன் பின் பிள்ளைகள்,பேரப் பிள்ளைகள் என்பதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிந்து விட வேண்டுமா? அவளுக்கென சொந்த ஆசா,பாசங்கள் இருக்காதா?

உங்கள் அம்மாவின் காலம் வேறு,தற்போதைய காலம் வேறு தவிர,உங்கள் அப்பா நல்ல கணவராக இருந்திருக்கிறார்.நீங்கள் உட்பட பிள்ளைகள் உட்பட அம்மாவை சந்தோசமாக வைத்திருக்கவே முயல்வீர்கள். நீங்கள் எப்பவாவது உங்கள் அம்மாவிடம்,நீங்கள் மனதார சந்தோசமாக இருக்கிறீர்களா எனக் கேட்டதுண்டா?

தவிர,இங்கு நல்ல பெற்றோர் கிடைக்கப் பெற்ற,நல்ல கணவன் கிடைக்கப் பெற்ற பெண்களைப் பற்றி கதைக்கவில்லை. இவை இரண்டும் கிடைக்காமல் சீரழியும் பெண்களைப் ப்ற்றித் தான் கதைக்கிறோம். ஓ/எல்.ஏ/எல் படிப்புகள் வாழ்க்கையோடு சம்மந்தப்படாமல் இருக்கலாம். ஆனால் குறைந்த பட்சம் இந்த படிப்பாவது படித்திருந்தால் கணவன்மாரால் கை விடப்பட்ட பெண்கள் தங்கள் சொந்த காலில் நின்று,தங்கள் பிள்ளைகளையாவது[பெண்] அறிவுமிக்க,சுயமாய் யோசிக்க கூடிய,தங்களுக்கு எது தேவை/நல்லது/கெட்டது போன்றவற்றை ஆண்கள் தீர்மானிக்கின்ற மாதிரி பெண்களும் தீர்மானிக்க் வேண்டும்.தாங்கள்,தாங்களே உழைத்து வாழ வேண்டும்.அப்படி உழைத்து வாழ்ந்து வரும் பெண்கள்,ஆண்களால் கை விடப்பட்டால் கூட தங்கள் சொந்தக் காலில் தாங்களே நிற்பார்கள்.எவரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

உலகம் இப்ப இருக்கின்ற நிலையில் 30 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது.ஆனால் இந்த ம்க்களுக்கு 30 வயதில் வாழ்க்கை முடிந்து விடும்.

இது பற்றி எழுதினால்,இன்னும் நிறைய எழுதலாம்.

ரதி, இங்கு நான் முதலில் குறிப்பிட முனையும் விடயம் இப்படியான சம்பவம் இன்று நேற்றில் இருந்து நடப்பது அல்ல. செய்தியில் ஓர் ஊடகம் தனக்கே உரித்தான ஊடகபாணியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எழுதி இருக்கின்றது. சரியான தரவுகள், ஆதாரங்கள் இல்லாமல் இடத்தை நிரப்பி பரபரப்பை கிளப்பும்வகையில் எழுதப்படும் செய்திகளின் அடிப்படையில் என்னால் கருத்துகூறமுடியாது. இங்கு செய்தியின் மூலம் எதிர்பார்க்கப்படுவது ஐயோ பாவம் அம்மாடி ஓ இப்படியும் நடக்கின்றதா என்று இந்த 'வாவ்' மனநிலையை உருவாக்குவதா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.