Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறவுகளின் வழிகாட்டல் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே.
நேற்று என் நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு அவரின் வீட்டிக்கு போய் இருந்தேன். 
அவரின் தற்போதைய உடல், உள நிலைகள் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது.
அவரின் மன உளைவு,  தேக ஆரோக்கியம் தொடர்பில் கவனகுரைவுகள்,போன்ற அவருக்கு பாதிப்பை கொடுக்கின்ற சில விடயங்களில் இருந்து மீட்கும் என் முயற்சியில் உங்களிடம் இருந்து சில அறிவுரைகள், வழி கோல்களை கேட்டே இதனை பதிகின்றேன்.

நண்பர்பற்றிய ஒரு குறிப்பு:
இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம்.
இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமிழ் பெயர்களை கொண்ட தமிழை அழகாக கதைக்கும் குழந்தைகள். 
என் நண்பர் அவரின் தந்தையார் முகத்தை பார்த்ததே கிடையாது. மிகவும் சிறு வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டார். அவருக்கு ஒரு தம்பி. அம்மா ஒரு காலத்தில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவர். மகன்மார் இருவரையும் தனியாக வளர்த்து ஆளாக்கியவர்.

என் நண்பன் ஊரில் ராணுவ கெடுபிடி தொடங்கிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகள் ரஷ்யா, உக்ரீன், தாய்லாந்து,இந்தியா, கியூபா, சிங்கபூர் இப்படி பல நாடுகளில் கஷ்டப்பட்டு கடைசியில் கனடா வந்து வாழ்க்கை ஆரம்பித்தவர். 
நிறைய வாசிப்பு திறமையும், உலக பொது அறிவு, ஆங்கில சினிமா, இந்திய அரசியல், தமிழ் இலக்கியம் இவற்றில் எல்லாம் நிறைய அறிவும் கொண்டவர்.

அவரின் அம்மாவும், தம்பியும் இங்கே தான் வாழ்ந்து வந்தார்கள். என் நண்பர் ஒரு அம்மா பிள்ளை.
அம்மா, அம்மா என்று எல்லாமே அம்மாவாக இருந்தவர்.
காலத்தின் கொடூரம், தம்பி நோய் வாய்ப்பட்டு (சிறுநீரக கோளாறு), சிகிச்சைகள் பெற்று பலன்கள் அற்று எட்டு  வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர் இறக்கும் போது வயது 34 இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சோகத்தோடு கடந்த நாட்கள் அவை.

தம்பி இறந்து சரியாக 52 ஆவது நாளில் எனது நண்பனின் அம்மாவும் இறந்து விட்டார். இது அனைவருக்கும் பேரிடி!! என் நண்பன் துவண்டு போனான். வாழ்க்கை தடம் புரண்டது போல ஒரு உணர்வு, தனிமை, சோகம் இவனை வாட்ட. ஏற்க்கனவே இருந்த குறைவான மதுப் பழக்கம் முழுமையாக ஆட்கொள்ளத்தொடங்கிற்று!!

மனைவி, மூண்டு குழந்தைகளுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிய வாழ்க்கை. பெரிதாக எங்குமே வரவும் மாட்டார்கள். அப்படியே வந்தாலும் என் நண்பனின் அதீத மதுப் பழக்கம் அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. 

நண்பன் கவலையில் இருக்கிறான், கொஞ்சம் குடிக்கிறான் என்ற பொதுவான என்னப்பாடோடு நண்பர்கள் நாங்களும் இருந்து விட்டோம். 

சில சம்பவங்கள் அவரின் மனைவி மூலம் உறவுகலூடாக பகிரப்பட்டு எங்கள் காதுக்கு எட்டியது. அதாவது என் நண்பன் 
ஒவ்வொரு நாள் இரவுவிழும் வேலை முடிந்து வந்ததன் பின்னர் குளித்து, முழுகி பட்டை திருநீறு அணிந்து சாமி கும்பிட்டு விட்டு ஒரு 750 மில்லி பாட்டில் மதுவை (தினமும்) அருந்துகிறாராம்.

தவிர  இரவு நேரங்களில் குடும்பத்தார் நித்திரை கொண்ட பின்னர் எழுந்து சென்று அவரின் அம்மா உறங்கி இருந்த கட்டிலில் போய் இருந்து கொண்டு அம்மாவை நினைத்து, நினைத்து வாய் விட்டு அழுகின்றாராம்.  
இது அம்மா இறந்த நாள் முதல் நேற்று நான் அவனை சந்திக்கும் போதும் கூட செய்துகொண்டு இருக்கிறான். இதனை கட்டுப் படுத்துவதற்கு மனைவி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. மனைவி மிகவும் பாசமாகவே அவரை கவனித்து வருகிறார். உண்மையில் சொல்லப்ப்போனால் அவரை ஒரு குழந்தையாகவே கவனித்துக் கொள்கிறார்.

எப்படியோ என் நண்பனின் போக்கில்  இன்றுவரை மாற்றங்களும் இல்லாமல் நாட்கள் போகப் போக அவரின் உடல் நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்த சூல்நிலையில் நேற்று நான் அவனை பார்க்க போயிருந்தேன். நண்பன் நிறை போதையில் இருந்தான்.கட்டியிருந்த லுங்கி கூட அவன் இடுப்பில் நிலையாக  நிற்க வில்லை. கவலையோடு அவனை பார்த்து ஏனடா இப்படி இருக்கிறாய். என்று உரிமையோடு கடிந்து கொண்டேன். சொல்லக்கூடிய அறிவுரைகளையும் சொல்லி வைத்தேன்.

திடீரென்று என் கைகளை பிடித்துக்கொண்டு அழத்தொடங்கி விட்டான். 
அம்மாவையும், தம்பியையும் நினைத்து பலவிடயங்கள் சொல்லி சுமார் ஒரு மணிநேரம் அழது தீர்த்து விட்டான். அவன் கூறிய விடயங்கள் தான் இவை...
என்னால் அம்மா இல்லாமல் வாழமுடியாதடா? நான் அனாதையாக ஒற்றையாக இருக்கிறேனே !!
என்னால் நித்திரை கொள்ள முடிவதில்லை, தொழில் இடத்திலும் சென்று மறைந்து நின்று அழுகின்றேன், என்னால் இந்த உணர்வை கட்டுப்படுத்த புடியாமல் இருக்கிறது. இப்போது வேலை இடத்திலும் எல்லோருக்கும் இது தெரிந்து விட்டது. தொழில்சாலை உரிமையாளர் என் நிலைமை நன்கு உணர்ந்து என்னை என் பாட்டில் விட்டுவிட்டார். மற்றும்படி வேலை இடத்தில எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். 
தவிர எனக்கு உடல் நிலையும் முன்னர் போல இல்லை. வாயிற்று சுத்தம் செய்யும் போது  இரத்தபி போக்கு அதீதமாக இருப்பதாகவும். இது தாங்கேனா வலியையும், எரிவையும் தருவதாகவும் சொன்னான். இதனை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுக்க வெட்கமாக இருப்பதாகவும் கூறினான். 
அவன் கூறிய விடயங்களை பார்க்கும் போது சாதாரண ஹெம்மறோய்ட் (Hemorrhoid) போன்ற ஒரு விடயத்தை இவன் கவனிக்காமல் விட்ட படியால் அது பெரிதாக வளர்ந்து அவனுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றே நினைக்கிறன். 
நண்பனின் வைத்தியர் எவ்வளவோ கூறியும் வெட்கத்தில் அதனை காட்டாமல் இன்று வரைக்கும் தவிர்த்துக்கொண்டு பார்மசிகளில் கிடைக்கும் சில முறையற்ற மருந்து, க்ரீம் போன்றவற்றை பாவித்து நாட்களை கடத்துகின்றார்.

நான் நிறைய நேரம் பல விடயங்களை எடுத்து கூறியதன் பின்னர் தன்னை இந்த இக்கட்டான சூழ் நிலைகளில் இருந்து மீட்ட்குமாறு என் கைகளை பிடித்து கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டான்.
பிள்ளைகளையும், தன்னுடைய சூழ்நிலைகளையும் நினைத்து நிறையவே பயந்து போய் உள்ளான்.

இவனுக்கு இருக்கும் 3 பிரச்சினைகள்.
1. அதீத மதுப்பழக்கம் 
2. அன்னையின் இழப்பில் தொடர்ந்தும் உழன்றுகொண்டு பரிதவிப்பது.
3. வைத்திய ஆலோட்சனைகள் பெறாமல், தேகாரோக்கியத்தை கைவிட்டு மிகவும் சிக்கலான ஒரு நிலையில் தற்போது இருப்பது.

குழந்தைகள், மனைவி மக்களிடம் பாசமாகவே இருக்கிறான். அதில் எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லை. 

நான் எனக்கு தெரிந்த வைத்திய நண்பன் ஒருவரிடம் இவனை கூட்டிபோவதாக உள்ளேன்.
முதலில் உடல் நிலை குறித்த விடயங்களும், அதோடு உளவியல் ரீதியாக அணுகி அவனை ஒரு தெளிவு நிலைக்கு கொண்டு வருதலும் அத்தோடு மதுப்பழக்கம் படிப்படியாக அல்லது ஒரேயடியாக குறைப்பது சார்ந்தும் ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறன்.

இதில் உங்களிடம் இருந்து நான் எதிபார்ப்பது,
ஏதாவது ஆலோசனைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள்.
நிச்சயம் அவனுக்குள் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவர என்னால் முடியும் என்று மிகுந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

இவனுக்கு இருக்கும் 3 பிரச்சினைகள்.
1. அதீத மதுப்பழக்கம் 
2. அன்னையின் இழப்பில் தொடர்ந்தும் உழன்றுகொண்டு பரிதவிப்பது.
3. வைத்திய ஆலோட்சனைகள் பெறாமல், தேகாரோக்கியத்தை கைவிட்டு மிகவும் சிக்கலான ஒரு நிலையில் தற்போது இருப்பது.

குழந்தைகள், மனைவி மக்களிடம் பாசமாகவே இருக்கிறான். அதில் எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லை. 

சசிவர்ணம் உங்கள் நண்பரின் நிலையிலேயே... இங்கு வாழும் பலர் தமது வாழ்கையை இழந்து உள்ளார்கள். அதனால்... பலர் தமது குடும்பத்தை, பிள்ளைகளுடன் தவிக்க விட்டு, இவ்வுலகத்தை விட்டு சென்றவர்களும் அதிகம்.

1) அவருக்கு... உள்ள  அதிக மதுப்பழக்கத்தை முற்றாக உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும்... மூன்று சிறிய வயதில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதியாவது, அதிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று கூறுங்கள். அத்துடன் அவர் இல்லாமல், மனைவி பிள்ளைகளுடன் எடுத்த படங்களை... அவரின் பேர்ஸ், காரின் முன்பக்கம், அவர் அதிகமாக பழகும் அறைகள், முக்கியமாக அவர் மதுப் போத்தல் வைத்து எடுக்கும் அலமாரி போன்ற இடங்களில் வைக்க முயற்சி செய்து பாருங்கள். படங்கள் வெவ்வேறு இடங்களில், வேறு  கோணங்களில் எடுத்த படம் என்றால் இன்னும் நல்லது.

2) தாயின் மரணம்... தவிர்க்க முடியாதது. இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்க வந்தவர்கள் அல்ல என்பதை அவருக்கு எடுத்துக் கூறுங்கள். தாயின் மரணத்தை.... மது அருந்துவதற்கு, ஒரு சாட்டாக வைத்து... மது அருந்துபவர்களும் உள்ளார்கள்.

3) 40 வயதுக்கு மேல்... எம்மவர்கள் இலவச மருத்துவ வசதி உள்ள நாட்டில் கூட இந்தத் தவறை மீண்டும், மீண்டும் செய்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒரு தடவை தன்னும்... வைத்தியரிடம் சென்று தமது இதயத்துடிப்பு, கொலஸ்ரோல் போன்றவற்றை பரிசோதிப்பது மிக முக்கியம்.

அத்துடன்.... மதுவை நிறுத்துவதற்கு, சில ஆலோசனை மையங்கள் அங்கும் இருக்கும், அதனை இணையத்தில் தேடி ஆலோசனை பெறுவதும் பலன் தரும். உங்கள் நண்பர் மீண்டும் முன்பு போல் பழைய மனிதனாக வர பிரார்த்திக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

சசிவர்ணம் உங்கள் நண்பரின் நிலையிலேயே... இங்கு வாழும் பலர் தமது வாழ்கையை இழந்து உள்ளார்கள். அதனால்... பலர் தமது குடும்பத்தை, பிள்ளைகளுடன் தவிக்க விட்டு, இவ்வுலகத்தை விட்டு சென்றவர்களும் அதிகம்.

1) அவருக்கு... உள்ள  அதிக மதுப்பழக்கத்தை முற்றாக உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும்... மூன்று சிறிய வயதில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதியாவது, அதிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று கூறுங்கள். அத்துடன் அவர் இல்லாமல், மனைவி பிள்ளைகளுடன் எடுத்த படங்களை... அவரின் பேர்ஸ், காரின் முன்பக்கம், அவர் அதிகமாக பழகும் அறைகள், முக்கியமாக அவர் மதுப் போத்தல் வைத்து எடுக்கும் அலமாரி போன்ற இடங்களில் வைக்க முயற்சி செய்து பாருங்கள். படங்கள் வெவ்வேறு இடங்களில், வேறு  கோணங்களில் எடுத்த படம் என்றால் இன்னும் நல்லது.

2) தாயின் மரணம்... தவிர்க்க முடியாதது. இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்க வந்தவர்கள் அல்ல என்பதை அவருக்கு எடுத்துக் கூறுங்கள். தாயின் மரணத்தை.... மது அருந்துவதற்கு, ஒரு சாட்டாக வைத்து... மது அருந்துபவர்களும் உள்ளார்கள்.

3) 40 வயதுக்கு மேல்... எம்மவர்கள் இலவச மருத்துவ வசதி உள்ள நாட்டில் கூட இந்தத் தவறை மீண்டும், மீண்டும் செய்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒரு தடவை தன்னும்... வைத்தியரிடம் சென்று தமது இதயத்துடிப்பு, கொலஸ்ரோல் போன்றவற்றை பரிசோதிப்பது மிக முக்கியம்.

அத்துடன்.... மதுவை நிறுத்துவதற்கு, சில ஆலோசனை மையங்கள் அங்கும் இருக்கும், அதனை இணையத்தில் தேடி ஆலோசனை பெறுவதும் பலன் தரும். உங்கள் நண்பர் மீண்டும் முன்பு போல் பழைய மனிதனாக வர பிரார்த்திக்கின்றேன்.


உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் 
மிக்க நன்றி தமிழ்சிறி அண்ணா, குறிப்பாக அந்த "அவன் இல்லாத" புகைப்பட விடயம் மிகுந்த ஆழமானதொரு சிந்தனை.

சசி ,

உங்கள் நண்பருக்கு உடனடியாக தேவைப்படுவது மன நலம் தொடர்பான கவுன்சிலிங் மற்றும் மதுப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும் அமைப்புகளின் உதவி. நண்பரின் மனைவி மூலம் அவர்களின் குடும்ப வைத்தியரை அணுகி இது தொடர்பாக எவரை நாட வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்யுங்கள். முயற்சியை இன்றே இப்பவே தொடங்குங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் வேறு வீட்டுக்கு மாறினால் நல்லது, அல்லது அந்த வீட்டின் உள் அலங்காரங்கள் அறைகள் போன்றவற்றை மாற்றுங்கள்.  கவுன்சிலிங்தான் இப்ப அத்தியாவசியமானது. அவருக்கும் தான் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் நல்லா ஒத்துழைப்பார். நேரம் கிடைக்கும்போது நெருங்கிய நன்பர்கள் வீடுகளுக்குப் போய் வருவதும் மதுப் பழக்கத்தைக் குறைக்க உதவும்....!

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குழந்தை மனைவியை வைத்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் 

இந்த உலகில் யாரும் ஆயிரம் வருடங்களுக்கு வாழ முடியாது பிறப்பு இருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமா உண்டு அவரை நாளைக்கு உனக்கும் இப்படி நடந்து விட்டால் உன் குழந்தை குடும்பத்தை யார் கவனிப்பது என்று நிதானமாக இருக்கும் போது  கேளுங்கள்  

அடிக்கடி  ஊர் சுற்றி பார்க்க வெளியில் அழைத்து செல்லுங்கள் 

நன்றாக தியானம் இருக்க செய்து பாருங்கள்   ஒரு சில மணி நேரம் அவர் வணங்கும் கடவுளை நினைத்து. 

 

மனத்தாங்கல் (depression) மனநோயன்று, இவர்களால் சில வேளைகளில் அதிக சக்தியுடன் நாட்களை கடக்கவும், சக்தியே இல்லாமல் வீட்டில்  முடங்கி கிடக்கவும் முடியும். ஆனால் இவர்கள் அனேகமாக அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அதிகம் சிந்திப்பவர்கள் தம்மை முதலில் பஞ்சி பிடித்தவர்கள் என்று உணர்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரிய  வரும்போது. அதற்கான காரணத்தை தேடுவார்கள். தாம் நினைப்பதுதான் காரணமென்று நம்பி அதனுள்ளே வாழ விரும்புவார்கள்.  சில  சந்தர்பங்களில் அவர்கள் கண்டறிந்த காரணம் உண்மையாக இருக்கலாம். இதே வேளையில் மதுவிற்கும் அடிமையானால் - மது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே அமைதியை தரும். பின்னர் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். 

தமது உயிருக்கு உயிரானவர்களின் இழப்பு / தவறுகள் பலரை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கு.  இப்படியான நிலையில் உள்ளவர்களை மனைவியும் பிள்ளைகளும் நன்கு பராமரிக்க வேண்டும். இவர்களுக்கு தம்மை சுற்றி ஒருவருமே துணைக்கு இல்லை என்ற எண்ணம் வரவே விடக்கூடாது.

கவுன்சிலிங்தான் இப்போதைய உடனடித் தேவை.

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பரைப் போன்றே நாடு விட்டு நாடு வந்து படிக்கும் பலர் நடக்கக் கண்டிருக்கிறோம். 

இதற்கு முதன்மைக் காரணம்..

தாம் தனித்துவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு தான். 

இப்படியானவர்களுடன் நன்கு நெருக்கமான.. நம்பிக்கைக்குரிய.. அன்பான நட்பு எப்போதும் கூட இருப்பின் அவர்கள் இயல்புக்குத் திரும்ப வழிகள் உண்டு.

இதனை நீங்களும்.. அவர்களுக்கு நெருக்கமான உறவுகளும் வழங்கினால்.. அவரை அவர் குடும்பத்தை மீண்டும் மகிழ்ச்சிப் பாதைக்கு அழைத்து வருவதில் சிரமம் இருக்காது. தொடர்ந்து தனிமைக்குள் அவர்களைத் தள்ளினால்.. அவர்கள் கதி.. நிர்க்கதிதான். 

மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகமாக உள்ள போது அவன் அடையும் திருப்தி என்பது.. தனிமைபடுத்தப்படும் போது அதுவே விரக்தியாகிறது. அதில் இருந்து மீள முடியாமல்.. அதனை மறக்க மறைக்க..மது.. புகை.. மாது.. கணணி விளையாட்டு.. திரைப்படம் என்று அடிமையாகின்றனர். 

எங்களுடன் படித்த ஒருவரும்.. இப்படித்தான்.

மிக நல்லக் கெட்டிக்காரன். ஆனால்.. நாடு விட்டு நாடு வந்த தனிமை.. அவர் புகைக்கு அடிமையானார். நண்பர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில்.. எங்களை எதேச்சதையாகச் சந்தித்தார். நாங்கள் இருந்த அதே விடுதிக்கு அருகில் வீடு எடுத்து இருந்ததால்.. சமைப்பது.. படிப்பு விடயமாக உரையாடுவது.. ஊர் விசயங்களை பகிர்ந்து கொள்வது.. அரசியல் கதைப்பது.. கால்பந்து.. கிரிக்கெட் விளையாடுவது.. நகர மத்திக்கு துவிச்சக்கர வண்டியில் போவது.. சாப்பிங்குக்கு துவிச்சக்கர வண்டியில் போவது என்று நல்ல நண்பர்களாக இருந்தோம். இன்னொரு மாணவனும் எங்களுடன் இணைந்தார். எல்லோரும் கூடிச் சமைப்பது.. கலந்துரையாடி சாப்பிடுவது.. இணைந்தே.. விளையாட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்ப்பது என்று நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் இருந்த மனம் வெளிக்காட்டி உணராத வகைக்கு தனிமையை தவிர்த்து வாழ்ந்த போது.. புகைப்பழகத்தில் இருந்து தானே விடுபட.. தானே கவுன்சிலிங் எல்லாம் போய்.. கடைசியில் எல்லாம் விட்டிட்டு இருந்தார்.

மீண்டும் ஓர் நாள்..திடீர் என்று.. ஒரே கவலையில் இருந்தார். கேட்டால்.. ஊரில் இருந்த காதலியிடம் இருந்து நெருக்குதல். அவளின் பெற்றோர் அவளை இன்னொருவரை திருமணம் செய்யச் சொல்லிச் சொல்வதாகவும்.. இவருக்காக காத்திருப்பது வீண் என்றும். யுனிக்கும் போகாமல்.. மீண்டும் புகைக்குள் மூழ்கல். விரக்தியில்.. மூழ்கினார். 

எங்களிடம் வந்து அழுதார்.. என்ன செய்ய என்று. அவருக்கு வேண்டிய அறிவுரைகளைச் சொல்லும் அனுபவம் நமக்கில்லை என்றாலும்.. ஒரு திறமையான மாணவனின் படிப்பு பாழாகக் கூடாது என்பது தான் எங்களுக்கு முதன்மையாகப் பட்டது. அந்தக் காதலிக்கு இரண்டு சந்தர்ப்பம் வழங்கச் சொல்லிச் சொன்னம்.

1. படிப்பு முடித்து தான் உன்னோடு என் வாழ்க்கை.. எந்தச் சந்தர்ப்பதிலும்.. என்னை நம்பி இருந்தால்.. உன்னை கைவிட போவதில்லை.

2. அதுவரை உன்னால் உன் பெற்றோரை சமாளிக்க முடியவில்லை என்றால்.. நீயே நான் உன் வாழ்க்கையில் தேவையில்லை என்று கருதினால்.. உன் பெற்றோர் வழியில் சென்றுவிடு. இந்தப் பிரிவுக்கு நான் பொறுப்பல்ல.

நீண்ட நாள் தொலைபேசி உரையாடல்களின் பின்.. காதலி சந்தர்ப்பம் இரண்டைத் தெரிவு செய்ய.. ஆடித்தான் போனார் நண்பர். ஆனாலும்.. அவருக்குள் இந்த நிபந்தனைகள் தொடர்பில்.. திருப்தி இருந்ததால்.. ஏலவே..மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொண்டதால்..பாதிப்பு அதிகம் இல்லை.

படிப்பை முடித்தார்.. பின் மேற்படிப்பையும் தொடர்ந்தார்.. இன்று நல்ல நிலையில்.. நல்ல தொழிலோடு இருக்கிறார். நாடு விட்டு நாடு போயிருந்தாலும் ஒரு சக நண்பனை.. மனிதனை.. தகுந்த நேரத்தில் கூட இருந்து அவனின் தகாத காலத்தைக் கழிக்க உதவிய திருப்தி எமக்குள் இன்று. 

அந்த வகையில்... நீங்களும் உங்கள் குடும்பமும் நினைத்தால்.. இவர்களை தனிமைச் சூழலுக்குள் இருந்து விலக்கி.. சமூகச் சூழலுக்குள் கொண்டு வந்தால்.. நிச்சயம் நல்ல பெறுபேறு கிட்டும். இரு குடும்பங்கள் என்பதால்.. பிரச்சனைகளுக்கு வழி குறைவாகவே இருக்கும். பிரச்சனைகளுக்குரிய மார்க்கங்களில் சிந்தித்து.. சமயோசித முடிவுகள் எடுத்துச் செயற்பட்டால் இந்த நிலைமை மாற அதிக பிரச்சனை இருக்காது என்றே நம்புகிறோம்.

இது பொதுவான ஒரு கருத்து. எனி தனிப்பட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்துத்தான் இறுதி முடிவுகளை எடுக்கலாம். எடுக்க வேண்டும்.tw_warning:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Sasi_varnam said:

நண்பர்பற்றிய ஒரு குறிப்பு:
இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம்.
இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமிழ் பெயர்களை கொண்ட தமிழை அழகாக கதைக்கும் குழந்தைகள். 
என் நண்பர் அவரின் தந்தையார் முகத்தை பார்த்ததே கிடையாது. மிகவும் சிறு வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டார். அவருக்கு ஒரு தம்பி. அம்மா ஒரு காலத்தில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவர். மகன்மார் இருவரையும் தனியாக வளர்த்து ஆளாக்கியவர்.

என் நண்பன் ஊரில் ராணுவ கெடுபிடி தொடங்கிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகள் ரஷ்யா, உக்ரீன், தாய்லாந்து,இந்தியா, கியூபா, சிங்கபூர் இப்படி பல நாடுகளில் கஷ்டப்பட்டு கடைசியில் கனடா வந்து வாழ்க்கை ஆரம்பித்தவர். 
நிறைய வாசிப்பு திறமையும், உலக பொது அறிவு, ஆங்கில சினிமா, இந்திய அரசியல், தமிழ் இலக்கியம் இவற்றில் எல்லாம் நிறைய அறிவும் கொண்டவர்.

அவரின் அம்மாவும், தம்பியும் இங்கே தான் வாழ்ந்து வந்தார்கள். என் நண்பர் ஒரு அம்மா பிள்ளை.
அம்மா, அம்மா என்று எல்லாமே அம்மாவாக இருந்தவர்.
காலத்தின் கொடூரம், தம்பி நோய் வாய்ப்பட்டு (சிறுநீரக கோளாறு), சிகிச்சைகள் பெற்று பலன்கள் அற்று எட்டு  வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர் இறக்கும் போது வயது 34 இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சோகத்தோடு கடந்த நாட்கள் அவை.

தம்பி இறந்து சரியாக 52 ஆவது நாளில் எனது நண்பனின் அம்மாவும் இறந்து விட்டார். இது அனைவருக்கும் பேரிடி!! என் நண்பன் துவண்டு போனான். வாழ்க்கை தடம் புரண்டது போல ஒரு உணர்வு, தனிமை, சோகம் இவனை வாட்ட. ஏற்க்கனவே இருந்த குறைவான மதுப் பழக்கம் முழுமையாக ஆட்கொள்ளத்தொடங்கிற்று!!

இப்படியான ஒரு சில சம்பவங்களை/நண்பர்களை நான் வாழும் இடத்தில் சந்தித்திருக்கின்றேன். பாரதூரங்களை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. கனடாவைப்பற்றி எனக்கு தெரியாது. உளவியல் சம்பந்தப்பட்ட சிகிச்சை உடனடியாக தேவை என்பது மட்டும் நான் சொல்வேன். தாமதிக்காது ஆவன செய்யுங்கள்.

யாழ்கள உறவுகளே!  இதே உளம் சார்ந்த பிரச்சனைகள் நமக்கும் வரலாம். ஏனெனில் நாம் அப்படியான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது ரிலாக்ஸ்..

 

Relax please

எழுந்து உட்கார் இமயம் கூட உனக்கு மட்டம்தான் 
என்ன நடந்தது இப்போது எல்லாம் 
உன் கால் தூசுக்குக் கீழ் தைரியம் உன் ரத்தமன்றோ 
துடைத்துப் போடு துயரத்தை துணிவுடன் அணுகு வந்த துயரத்தை 
வாசலிலேயே பிடித்து நிறுத்து வசந்தமாக உணர் 
எல்லாமே ஓடிப் போகும் உன் முன்பு!

ஒவ்வொரு துயரத்தையும், சோகத்தையும், வலியையும் துடைத்துப் போட நமக்கு உதவுவது மன தைரியம்தான். என்னதான் நடந்தாலும் தைரியமாக இருந்து அதை சந்திக்க வேண்டும். மனதை திடமாக வைத்துக் கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்

சோகத்தில் இருப்பவர்களிடம், துயரத்தில் இருப்பவர்களிடம் நான் இருக்கிறேன் உனக்கு, இதெல்லாம் என்ன பெரிய பிரச்சினை, தைரியமாக அணுகு, எல்லாம் சரியாய்ப் போகும் என்று சொல்லுங்கள், அது அவருக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்கும்.

கவலையில் இருப்பவர்களிடம் அருகில் அமர்ந்து பேசுங்கள். ஆதரவாக நாலு வார்த்தை பேசுங்கள். அவரது கவலைகளில், கஷ்டத்தில் பங்கு கொள்ளுங்கள், நான் இருக்கிறேன் செல்லமே என்று ஆறுதலாக சொல்லுங்கள். முடிந்தவரை அவருக்குத் துணையாக இருங்கள். ஆறுதல் சொல்வதை விட ஆறுதலாக இருப்பதுதான் மிகச் சிறந்தது. நான் இருக்கிறேன் உனக்கு என்று அவருக்கு உணர்த்துங்கள். அதிலேயே பாதி துயரம் பறந்தோடி விடும்.

வார்த்தைகளை விட நல்ல ஆறுதல் தரும் மருந்து உலகில் எதுவுமே இல்லை. உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கஷ்டம் என்றால் அது உங்களுக்கும் கஷ்டம்தான்.இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் அணுசரணையாக நாலு வார்த்தை பேசுங்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் அவரது மனதுக்கு மருந்தாக அமையும், இதமாக அமையும், ரிலாக்ஸ் செய்ய உதவும்.

கவலைப்படாதே 
உன் கைகள் தனியாக இல்லை 
என் கரம் கோர்த்தே இருக்கிறது 
உன் துயரம் உனக்கு மட்டுமல்ல 
நானும் அதில் பங்கு கொள்கிறேன் 
கண்ணீரைத் துடைத்துப் போடு 
கவலையை இறக்கி வை 
தைரியத்துடன் எதையும் சந்தி 
எல்லாம் கலைந்து போகும் 
எல்லாம் சரியாகும் வாழ்க்கை அழகானது 
அவ்வப்போது அதில் நிழல் படிவது சகஜம்தான் 
நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள் 
உன் சிரிப்பால் சுற்றியுள்ளவர்களை குஷிப்படுத்து 
என் ஆதரவுக் கரம் உன் தலை தடவி ஆறுதல் சொல்லும்- எப்போதும்.

http://tamil.oneindia.com/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நிழலி, சுவே, ஜீவன், முனிவர் ஜீ ,தமிழ் சிறி அண்ணர்,  நெடுக்ஸ், குசா அண்ணா, 
அனைவரின் கரிசனைக்கும், வழியூட்டளுக்கும் நன்றிகள் பல. பச்சைகள் தீர்ந்துவிட்டன.

இன்று அவரின் மனிவியியோடு சிறிது நேரம் கதைத்தேன். அவரும் சில நிமிடங்களிலேயே அழத்தொடங்கி விட்டார். அவரின் பேச்சிலும் நம்பிக்கை அற்று, சிறிது கோபமும் விரக்தியுமே  எஞ்சி இருந்தது. இவரைத்தானே நம்பி நான் என் சொந்தங்கள், பந்தங்களை விட்டு வந்தேன், எனக்கென்று வேறு யாருமே இங்கு இல்லையே என்று அவர் பெரிதும் நொந்து கொண்டார்.

தவிர எனது நண்பன் தனது உடல் நலனில் கொஞ்சம் கூடி அக்கறை எடுக்காது இருப்பது பற்றியும் ஒரு வேலை சாப்பாடைக்கூட இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை என்றும், அதிகாலை 4 மணிக்கு எழும்பி மது அருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளதையும், வீட்டிலே எல்லா வேலைகளையும் தான் ஒரு ஆளாகவே செய்வதாகவும் மிகவும் கவலையாக சொல்லிக்கொண்டு இருந்தார். 


நான் அவருக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, எங்கள் வீட்டுக்கு பிள்ளைகளையும் கூட் டிக்கொண்டு அவனோடு அடிக்கடி வந்து செல்லுங்கள் என்று கேட்டு இருக்கிறேன்.
தவிர மருத்துவ உதவி, இதர விடயங்கள் பற்றியும் கூறி இருக்கிறேன். 

அவரும் ஏதாவது செய்யுங்கள் அண்ணா, இல்லாவிட்டால் நானும் பிள்ளைகளும் நடு ரோட்டிற்கு தான் வரவேண்டி ஏற்படும் என்று  கண்ணீர் சிந்தினார்.

எனது மனைவியும் அவருடன் சில நிமிடங்கள் ஆறுதலாக பேசினார். அவர்களின் சம்பாசனையில் நண்பனின் மூத்த மகள் எந்த நிமிடமும் பூப்படையலாம் என்ற அனாவசிய அயர்ச்சியும்  வெளிப்பட்டது !!! 


இந்த வியாழன் எனது மருத்துவ நண்பரை பார்க்க போகவுள்ளேன்.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கையே!!!

  • கருத்துக்கள உறவுகள்

சசி, உங்கள் நண்பர் உளவளத் துறையிலுள்ளவருடன் தகுந்த ஆலோசனைகளை தாமதியாமல் பெற்றுக்கொள்ளவேண்டும்.

மேற்குலக counselling ஐ கற்றுத் தேர்ந்த தமிழராக இருந்தால் இலகுவில் நம்பிக்கைகொள்ளவும், மனம் விட்டுப்பேசவும் முடியும்.

முன்னர் கனடா வந்தபோது சந்தித்த மீராபாரதியும் இந்தத் துறையில்தான் இருக்கின்றார் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சசி என்ன செய்யலாம் என்று இங்கு உறவுகள் எழுதி உள்ளனர்,

எனது வேண்டுகோள் அல்லேலூயாக்காரர்களிடம் இவரை காட்டிவிடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட பெரிய பிரச்சனைகளில் இருந்து மீண்ட ஆட்கள் ரொரன்ரோவில் இருக்கினம். உங்களது நண்பர் மதுவை கைவிட தயாரானால் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக களையப்படும். Bellwood  என்ற இடம் மிக மிக சரியான இடம். கவுன்சிலிங்கில் இருந்து அனைத்தையும் சரியாக செய்வார்கள். சில காலத்துக்கு தான் அரசு உதவி செய்யும் என நினைக்கிறேன். ஒரு 3 மாத கால program ஒன்றை தேர்தெடுத்தால் போதும் என நினைக்கிறேன். 3 மாதமும் அங்கு தான் தங்க வேண்டும். உறவினர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

தமிழ் தொலைக்காட்சியில் ஒரு  இலங்கை முஸ்லிம் பெண் ஒருவர் கவுன்சிலிங்(அல்க்ககோல் சம்பந்தமாக) செய்கின்றவர். அவரின் பெயர் நினைவில் இல்லை.

 

http://www.bellwood.ca/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.