Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016

Featured Replies

  • தொடங்கியவர்

விஜயகாந்த், ஜிகே.மணி, சீமான்.. தேர்தல் களத்தில் உருண்ட + உருளும் பெரும் தலைகள்...!

சென்னை: தேர்தல் என்றாலே பெரும் தலைவர்கள் சில உருள்வது சகஜம்தான். இந்த சட்டசபைத் தேர்தலிலும் சில பெரும் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். உருண்ட மற்றும் உருண்டு கொள்ள தலைவர்களின் பட்டியல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - உளுந்தூர்ப்பேட்டை

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் - காட்டுமன்னார்கோவில்

பாமக தலைவர் ஜி.கே.மணி - மேட்டூர்

நாம் தமிழர் தலைவர் சீமான் - கடலுார்

அமைச்சர் கோகுல இந்திரா

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் - விருகம்பாக்கம்

பாஜக வானதி சீனிவாசன் - கோவை தெற்கு

பாஜக எச். ராஜா - தியாகராய நகர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - நெய்வேலி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் - திருச்செந்துார்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா - ராமநாதபுரம்

மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு

சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி - பெரம்பலுார்

விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் - பண்ருட்டி

தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி - பல்லாவரம்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/many-vips-bite-the-dust-254081.html

கட்சிவாரி முடிவுகள்

கட்சிகள் முன்னிலை முடிவுகள்
admk.png அ.தி.மு.க., 37 95
dmk.png தி.மு.க., 26 64
congress.png காங்கிரஸ் 1 7
bmk.png பா.ம.க., 1  
bjp.png பா.ஜ.க., 0  
dmdk.png தே.மு.தி.க., 0  
mtmk.png ம.தி.மு.க.,    
vc.png விசி 0  
ptm.png புதிய தமிழகம் 1  
vote.png மற்றவை    
  • Replies 161
  • Views 23.5k
  • Created
  • Last Reply
7 hours ago, நவீனன் said:

மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!

கடைசி நிலவரப்படி நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. அதாவது இதுவரை இக்கட்சிக்கு 1,01,985 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமாகா (0.8%), சிபிஐ (0.7%), மதிமுக (0.7%), சிபிஎம் (0.7%), விடுதலைச் சிறுத்தைகள் (0.6%) உள்ளன. நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சிகளை விட கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-gets-decent-votes-254047.html

இருக்கும் 25 பாடங்களில் 10 பாடங்களிற்கு பரீட்சை எழுதி பெறும் புள்ளிகளை மொத்த பாடங்களான 25 ஆல் வகுத்து பெறும் விகிதத்தினையும் 20 பாடங்களுக்கு பரீட்சை எழுதி பெறும் புள்ளிகளை மொத்த பாடங்களான 25 ஆல் வகுத்து பெறும் விகிதத்தினையும் ஒப்பிட்டு எழுதுவது சரியா?

சீமான் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 232 இல் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தமிழகத்து மொத்த வாக்காளர் எண்ணிக்கையால் வகுத்து வரும் விகிதத்தின் எண்ணிக்கையும், குறைந்த எண்ணிக்கையான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையை தமிழகத்து மொத்த வாக்காளர் எண்ணிக்கையால் வகுத்து வரும் விகிதத்தின் எண்ணிக்கையும்  ஒப்பிடுவதில் என்ன 'லொஜிக்' இருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிங்களாண்ணே.. கூட்டணில...  நின்று அடுத்தவன் வாக்கையும் வாங்கிட்டு.. எங்கட சதவீதமுன்னு காட்டிறதை.. ஏன் நீங்க கவனத்தில எடுக்கிறீங்க இல்ல. பிரபாகரனை முன்னிறுத்திறான் என்பதற்காகவே இங்கு சிலருக்கு சீமானைக் கண்ணில் காட்டக் கூடாது என்றாகிவிட்டது. இவர்கள் தான் ஒட்டுக்குழுக்களை கொண்டு எமக்கு சனநாயகம் போதிக்க வெளிக்கிட்டிருக்கினம். இப்ப.. ஒற்றுமை மண்ணாங்கட்டி என்று கொண்டு. 35 வருசமா இனத்தை காட்டிக்கொடுத்து..அழிச்சவனிடம் ஒற்றுமை தேடிற நாங்க.. சீமானை ஒதுக்கனுன்னு உளத்தில் ஆசையும் வைச்சிருக்கம். ஏன் புலியும்.. பிரபாகரனும் அங்கு உயிர் வாழ்வதால் என்பது மட்டும் தான் காரணம். வேறு எதுவும் இல்லை.

ஹிந்து வின் சனநாயகம் நாம் தமிழரின் சதவீதத்தையே மறைக்கும் சனநாயகம் என்றால்.. யாழ் களத்தில் சிலரின் சனநாயகம் என்பதை அதனை விடக் கேவலமாக உள்ளதுtw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடலூரில் சீமான் படுதோல்வி: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடைந்தார். அவர் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
1463658268-7158.jpg
 
 
தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக குதித்த நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டார்.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி முகத்திலேயே இருந்தனர்.
 
கடலூரில் போட்டியிட்ட சீமான் படுதோல்வியடைந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாம் இடமும், தமாகா வேட்பாளர் சந்திரசேகரன் மூன்றாவது இடம், பாமக வேட்பாளர் தாமரைக் கண்ணன் நான்காம் இடமும், நாம் தமிழர் சீமான் ஐந்தாவது இடமும் பிடித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசு பொருள் ஆகி இருப்பதே வெற்றி தான். இன்று சின்னத்திரைகளில் தோன்றிய திமுக அதிமுக கருத்தாளர்கள் கூட நாம் தமிழரை உச்சரிக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள்.  தேர்தல் சமயத்தில் நாம் தமிழரை ஒரு கட்சியாகக் கூட இனங்காட்ட விளையாத ஹிந்து.. சன் ரிவி.. ஜெயா ரிவி.. உட்பட பிரபல்ய ஊடக ஆதிக்க சக்திகள் எல்லாம் இப்ப நாம் தமிழரைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு புதிய கட்சிக்கு.. இது கூட ஒரு ஊக்கமே ஆகும். 

900000 இலட்சம் வாக்கு வாங்கிய விஜய்காந்தோட கூட்டணிக்கு அழைந்தவர்கள்.. ஏங்கியவர்கள்... முதல் தேர்தலிலேயே... 500,000 வாக்குகள் பெற்றிருக்கும்.. நாம் தமிழரை புறக்கணிக்க முடியுமா.. எனி..???!tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

அப்படிங்களாண்ணே.. கூட்டணில...  நின்று அடுத்தவன் வாக்கையும் வாங்கிட்டு.. எங்கட சதவீதமுன்னு காட்டிறதை.. ஏன் நீங்க கவனத்தில எடுக்கிறீங்க இல்ல. பிரபாகரனை முன்னிறுத்திறான் என்பதற்காகவே இங்கு சிலருக்கு சீமானைக் கண்ணில் காட்டக் கூடாது என்றாகிவிட்டது. இவர்கள் தான் ஒட்டுக்குழுக்களை கொண்டு எமக்கு சனநாயகம் போதிக்க வெளிக்கிட்டிருக்கினம். இப்ப.. ஒற்றுமை மண்ணாங்கட்டி என்று கொண்டு. 35 வருசமா இனத்தை காட்டிக்கொடுத்து..அழிச்சவனிடம் ஒற்றுமை தேடிற நாங்க.. சீமானை ஒதுக்கனுன்னு உளத்தில் ஆசையும் வைச்சிருக்கம். ஏன் புலியும்.. பிரபாகரனும் அங்கு உயிர் வாழ்வதால் என்பது மட்டும் தான் காரணம். வேறு எதுவும் இல்லை.

 

பிரபாகரனையே கேவலப்படுத்தி அரசியல் செய்யும் சீமானின் தோல்வியை மிகவும் சந்தோசத்துடன் வரவேற்கின்றேன்.பிரபாகரனை உளமாற நேசிக்கும் எவராலும் சீமானை இம்மியளவு கூட ஆதரிக்க முடியாது!
 

Quote


ஹிந்து வின் சனநாயகம் நாம் தமிழரின் சதவீதத்தையே மறைக்கும் சனநாயகம் என்றால்.. யாழ் களத்தில் சிலரின் சனநாயகம் என்பதை அதனை விடக் கேவலமாக உள்ளதுtw_blush:

 

இப்படியே சம்பந்தமில்லாமல் புலம்ப வேண்டியது தான். இப்படியே புலம்பிக்கொண்டு இருங்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

பிரபாகரனையே கேவலப்படுத்தி அரசியல் செய்யும் சீமானின் தோல்வியை மிகவும் சந்தோசத்துடன் வரவேற்கின்றேன்.பிரபாகரனை உளமாற நேசிக்கும் எவராலும் சீமானை இம்மியளவு கூட ஆதரிக்க முடியாது!

நீங்க பிரபாகரனை எந்தளவு நேசிக்கிறீங்க என்பதற்கு 1% ஆதாரமும் இல்லை. சீமானுக்கு குறைந்தது 500,000 மக்கள் அடையாளமாக அவரின் நம்பிக்கைக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அது இன்னும் பரவும். நாம் அடுத்தவன் எந்தளவுக்கு நேசிக்கிறான் என்று அளவிடுவதை விட நாம் எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதற்கான அடையாளத்தை தலைவரின் கொள்கை வெல்ல அமுலாக்குவது தான் விசுவாசம். 

தலைவரின் மண்ணில் வாழ்ந்த நமக்குள்ள தலைவர் மீதான நேசிப்பும்.. தமிழகத்தில் இருக்கும் நேசிப்புக்கும் இடையில் இடைவெளி இருக்குது. அதனைப் புரிந்து கொண்டு தான் நகர வேண்டியும் இருக்கிறது. தலைவரை நிந்திப்பவனை விட 1% நேசிப்பவன் மேல். 

தோற்ற போதும் திமிராச் சொல்கிறார் சீமான் என் தலைவன்.. பிரபாகரன் என்றுதான். உங்களைப் போன்றோர் தேர்தலுக்காக அரசியலுக்காக.. பிரபாகரனை புலிகளை பற்றிப் பேசுறான் என்று கூவினீர்களே இப்ப அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்..?!

எங்களைப் பொறுத்த வரை சீமானின் இன நேசிப்பு உங்களினதை விட அதிகம் என்பது தான் உண்மை. பின்னாடி நீங்க கடந்து வந்த சரிநிகர் பாதையும் வைச்சு கவனிச்சுப் பாருங்க. நீங்க.. நேசிச்ச விதம் என்னென்று எமக்குத் தெரியும். சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. நீங்க எல்லாம் தலைவரை நேசிச்சு எழுதிக்.. கிழிச்சதையும் நாம் கண்டு தான் வந்திருக்கிறம். tw_blush:

  • தொடங்கியவர்

வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்த அதிமுக...!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது அதிமுக.

அதிமுக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுக கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பயங்கர பந்தாவுடன் வலம் வந்த தேமுதிக படு கேவலமான நிலைக்குப் போயுள்ளது அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி திமுக - அதிமுக கூட்டணிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்:

ADMK gets 42% votes, DMDK cornered with 2.3 % votes

அதிமுக கூட்டணி - 40.8% அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.

 

திமுக கூட்டணி திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி) காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்) புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்) மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8% திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.

வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம். மேலும் விவரங்களுக்கு http://eciresults.nic.in/PartyWiseResultS22.htm?st=S22

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-gets-42-votes-dmdk-cornered-with-2-3-votes-254035.html

8 minutes ago, nedukkalapoovan said:

எங்களைப் பொறுத்த வரை சீமானின் இன நேசிப்பு உங்களினதை விட அதிகம் என்பது தான் உண்மை. பின்னாடி நீங்க கடந்து வந்த சரிநிகர் பாதையும் வைச்சு கவனிச்சுப் பாருங்க. நீங்க.. நேசிச்ச விதம் என்னென்று எமக்குத் தெரியும். சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. நீங்க எல்லாம் தலைவரை நேசிச்சு எழுதிக்.. கிழிச்சதையும் நாம் கண்டு தான் வந்திருக்கிறம். tw_blush:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

  • தொடங்கியவர்

5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்!

 Seeman011.jpg

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார். அதேபோல், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களையும் முதன்முதலாக அறிவித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரங்களை அவர் மேற்கொண்டார்.

சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக எம்.சி.சம்பத்தும், தி.மு.க வேட்பாளராக இள.புகழந்தியும், த.மா.கா வேட்பாளராக சந்திரசேகரும், பா.ம.க வேட்பாளராக தாமரைக்கண்ணனும் களமிறங்கினர்.

கடலூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் இன்று (19-ம் தேதி) மாலை அறிவிக்கப்பட்டது. இதில், எம்.சி.சம்பத் (அ.தி.மு.க) 70922 வாக்குகளும், இள.புகழேந்தி (தி.மு.க) 46509 வாக்குகளும், சந்திரசேகர் (த.மா.கா) 20608 வாக்குகளும், தாமரைக்கண்ணன் (பா.ம.க) 16905 வாக்குகளும், சீமான் (நாம் தமிழர் கட்சி) 12497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலில் களமிறங்கிய சீமான், தேர்தல் முடிவின்படி தோல்வியடைந்ததோடு, 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/64388-seeman-gets-5th-place-in-tn-election.art

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இப்படியே சம்பந்தமில்லாமல் புலம்ப வேண்டியது தான். இப்படியே புலம்பிக்கொண்டு இருங்கள். :cool:

ஹிந்துவின் சனநாயகமும் உங்களது சனநாயகமும் ஒன்றென்று சொல்ல வந்தம். கொஞ்சம் நியத்தையும் தரிசிக்க பழகிக்கனும். ஒரு பக்கமாகவே சிந்திக்கக் கூடாது. நாம் தமிழர் கட்சியை.. பெரும் திராவிடக் கட்சிகளோடு ஒப்பிடுவதே தவறு. அந்தளவுக்கு அது சிறிது. பெரும்.. புகழ்வாய்ந்த சிவாஜி கணேசனே கட்சி அமைத்து முதல் தேர்தலிலேயே தோற்றவர் தான். கருணாநிதியும்.. ஜெயலலிதாவும் புதிசா கட்சி அமைச்சு அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. அடுத்தவர் அமைச்ச கட்சியை தட்டிப்பறித்து வந்தவர்கள். அவர்கள் எம் இனத்தை ஏய்த்து வாழ்வதை வரவேற்க சீமானை நிந்திக்கும் உங்கள் மனநிலை தான் புலம்பல் தனமானது. tw_blush:

7 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

ஆமாம் அன்றே காட்டிச் சென்றவர்கள் ஏன் வழிகாட்டாமல் ஓடினீர்கள். ஓ அப்ப கால இடைவெளியில் கிடைத்த வெற்றிகள் உங்களுக்கு.. வசதியாக அமையவில்லைப் போலும். இப்போ தோற்ற பின் அமுலாகிட்டுது. சரி அமுலாகின தத்துவங்களை வைச்சு இப்ப அடுத்ததா என்ன தத்துவம் எழுதப் போகிறீர்கள்.. எழுத ஒன்னுமே இல்லைப் போல. ஏனெனில் எனி எழுதி எதுவும் சாத்தியமாகாது (சோரம் போவதைத் தவிர)என்று தத்துவம் பேச அப்ப மறந்திருப்பீர்கள். இப்ப எநினைத்திருப்பீர்கள். ஆனால்... இப்ப.. பத்திரிகையே இல்லைப் போல. 

இதனை விட சீமானின் தோல்வி சாதாரணம். அதுவும் ஒரு உந்து சக்தியான தோல்வி. சரிந்து விழும் தோல்வியே அல்ல.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிமுகாவை ஏதோ தாங்கள் ஊட்டி வளர்த்தது போல் சிலர் துள்ளிக்குதிக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

Screenshot%2026_zpsa76kwqyt.png

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சியாக இருந்த (தே.மு.தி.க) வீழ்ச்சி பற்றியோ, அல்லது 8 சீட்டு மட்டுமே கிடைத்த காங்கிரஸ் பற்றியோ கதைக்காமல், நேற்று முளைத்த நாம் தமிழர் கட்சியின் (முதல் முயற்சி / தோல்வி) பற்றி
மட்டுமே கதைப்பது பொருத்தமானாதா? 

  • தொடங்கியவர்

நடிகர் கருணாஸ் வெற்றி... சரத்குமார் தோல்வி

Karunas01.jpg

சென்னை: திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.

திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கருணாஸ் 76,786 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திவாகரன் 68,090 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Sarathkumar02.jpg

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் சரத்குமார் 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88,357 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் சரத்குமார் 62,356 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில்குமார் 6,330 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/64382-actor-karunas-win-sarath-kumar-fail.art

சசி ,

நாம்  தமிழர் மட்டும் தான்  ஈழத்தமிழனை  விற்று  அரசியல் செய்கின்றார்கள் மற்ற கட்சிகள்  தமிழ் நாட்டு அரசியல் செய்கின்றார்கள் .

நாம் தமிழர் தமிழ்நாட்டு  அரசியல் செய்தால் அவரை  விமர்சனம் செய்ய பலர்  வந்திருக்கமாட்டார்கள் .அவர் கெட்ட கேட்டுக்கு  வெளிநாடுகளில்  கிளை வேறு எம்மவர்  வைத்திருக்கினம் .

  • தொடங்கியவர்

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தோல்வி!

Vijayakanth08.jpg

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் களமிறங்கினார். அவருக்கு போட்டியாக, அ.தி.மு.க சார்பில் குமரகுருவும், தி.மு.க சார்பில் வசந்தவேலு, பா.ம.க சார்பில் பாலுவும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உளுந்தூர்பேட்டை தொகுதியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், குமரகுரு (அ.தி.மு.க) 81,973, வசந்தவேலு (தி.மு.க) 77,809, விஜயகாந்த் (தே.மு.தி.க) 34,447, பாலு (பா.ம.க) 20,223 வாக்குகள் பெற்று, தி.மு.க வேட்பாளர் வசந்தவேலுவைவிட 4164 வாக்குகள் அதிகமாக பெற்று அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு வெற்றி பெற்றுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இருப்பினும், இந்த முறை விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த்துக்கு 2-வது இடம்கூட கிடைக்காமல், 3-வது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/64381-vijayakanth-failed-in-ulundurpet.art

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அம்மா வித்தது ...தனி தமிழீழம் என்று தீர்மானம் போட்டது ..அவ்வளவு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லிவிட்டு கடந்த தேர்தலில் விடுதலை போராளிகள் என்று மாற்றியது ...? ஓ.... Whole Sale விற்பனை என்பதால் சிலரின் கண்ணில் படலை ..சீமான் சில்லறை வர்த்தகம் செய்வதால் 
கண்ணை குத்துது போல  

Ci1AhiuU4AEoBxC.jpg

மூட்டை முடிச்சுகளுடன் ட்விட்டரை விட்டு வெளியேறும் உடன்பிறப்புகள் #கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா ஆடினீங்க...

  • தொடங்கியவர்

அ.தி.மு.க வெற்றிக்கான 6 காரணங்கள்

flo1.jpg

 

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது.  எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...


கூட்டணி கணக்கு:

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும்,  2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.

ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க,  கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர,  திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால்,  ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி,  அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது,  கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும்,  அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.

சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...

‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’ - இப்படி 2011-ம் ஆண்டு  அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.

இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...'  போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

தி.மு.க மீதான பொது எதிர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம்,  'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர,  'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக,  மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

ஜெயலலிதா மீதான அபிமானம்

தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி,  இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள்  ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க,  தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடுபடாத மதுவிலக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர்,  மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால்,  மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.

தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள்,  மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.

ஒரு ஆண்,  தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

http://www.vikatan.com/news/politics/64379-six-reasons-for-admks-victory.art

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

31 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை...............................................


நிழலி சார் அவர்களே , அண்ணன் சீமானை விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை , அண்ணன் சீமான் ஒரு போதும் தேசிய தலைவரை அசிங்கப் படுத்தியது இல்லை, ஆதாரம் இருந்தால் காட்டுங்கோ பாப்போம் , ஊடக பலம் பண பலம் ஒன்றும் இல்லாமல் இன்று 4,56,130 வாக்குகள் 1.1 % நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது , உங்களுக்கு தனிப் பட்ட முறையில் சீமானை பிடிக்காமல் இருக்கலாம் ,ஆனால்  அவரின் தியாகத்துக்கு நீங்க அவருக்கு பக்கத்தில் நிக்கவே தகுதி இல்லாதவர் ,

 

  • தொடங்கியவர்

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!

nami.jpg

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

 மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும்  வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.
      
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில்  அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64389-namitha-tells-the-reason-election-victory-admk.art

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சார் அவர்களே , அண்ணன் சீமானை விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை , அண்ணன் சீமான் ஒரு போதும் தேசிய தலைவரை அசிங்கப் படுத்தியது இல்லை, ஆதாரம் இருந்தால் காட்டுங்கோ பாப்போம் , ஊடக பலம் பண பலம் ஒன்றும் இல்லாமல் இன்று 4,56,130 வாக்குகள் 1.1 % நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது , உங்களுக்கு தனிப் பட்ட முறையில் சீமானை பிடிக்காமல் இருக்கலாம் ,ஆனால்  அவரின் தியாகத்துக்கு நீங்க அவருக்கு பக்கத்தில் நிக்கவே தகுதி இல்லாதவர் ,

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!

nami.jpg

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

 மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும்  வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.
      
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில்  அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64389-namitha-tells-the-reason-election-victory-admk.art

வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ....அடுத்த அம்மா 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ வென்று,கருணாநிதி தோத்தது ஒரு மற்றரே இல்லை...சீமான் தான் கேட்ட தொகுதியில் தோத்து 5ம் இடம் வந்தாரே அது தான் மேட்டர்.அவருடைய தொண்டர்கள்,அவர்களது குடும்பம் கூட சீமானுக்கு வோட்டுப் போடவில்லை போல இருக்கு...நேற்று வரைக்கும் ஒரு சோகமான நாள். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்...இவ எங்கட மக்களுக்காக ஒன்றும் செய்ய மாட்டார் என்றாலும், அவருடைய மக்களுக்காவது எதாவது செய்யட்டும்...பாவம் அந்த சுய நலமிக்க தமிழ்நாட்டு மக்கள்

பி;கு;இசையை நினைக்கத் தான் கவலையாக இருக்குது.இனிமேலாவாவது யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடப்பார் என்று நினைக்கிறேன். இனி மேல் யாழின் பல் வேறு திரிகளில் இசையின் ஆக்கங்களை எதிர் பார்க்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.