Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோமவன்ச அமரசிங்க காலமானார்

Featured Replies


சோமவன்ச அமரசிங்க காலமானார்
 

article_1465965861-aa.jpgமக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இன்று புதன்கிழமை (15) ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது.

- See more at: http://www.tamilmirror.lk/174723/ச-மவன-ச-அமரச-ங-க-க-லம-ன-ர-#sthash.IS4b1Nl6.dpuf

கம்யூனிசம் என்ற பெயரில் சிங்கள இனவெறியை கக்கிய ஒருவர் மரணமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் செஞ்சட்டை போராட்டக் காரரர்களில் மிஞ்சி இருந்த ஒருவரான சோமவன்ச அமரவீர கடந்த இரவு காலமானார். அவரது வயது 73.

பிரேமதாசா காலத்தில், லண்டன் தப்பி ஓடி அகதியாய் வாழ்ந்து, சந்திரிகா காலத்தில் திரும்பி வந்து, தீவிர அரசியலில் புகுந்தாலும், கடந்த வருடம், JVP யில் இருந்து ராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலகினார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஜே வி பி என்ற அடையாளத்தில் தன்னை பிரபல்யப்படுத்த முனைந்தவரே தவிர இவர் ஜே வி பியின் உண்மையான கொள்கைகளுக்காக உயிர் கொடுத்து பாடுபட்ட ஒருவர் கிடையாது. அது ரோகணவோடு முடிந்து போன கதை. இவர்கள் ரோகணவை வைத்துக் குளிர்காய்ந்தவர்கள்.. இவரும் விமல் வீரவன்சவும் ஒரே ரகம். ரோகண போட்ட பிச்சையில் தம்மை அரசியலில் நிலை நிறுத்த முற்பட்டார்கள். ஆனால் விமல் அதில் வெற்றி பெற்றார் இனவாதம் பேசி. இவர் பேசியும் பேசாமலும் இருந்து அரசியலில் நிலைக்க முடியாமல்.. சரிந்து விட்டார். ரோகணவிற்கும் அவரின் ஜே வி பிக்கும் இவர்களுக்கும் வெகு தூரம். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

 ரோகணவிற்கும் அவரின் ஜே வி பிக்கும் இவர்களுக்கும் வெகு தூரம். 

ரோகணாவும் திறம் என்றில்லை தானே

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

ரோகணாவும் திறம் என்றில்லை தானே

இவர்கள் அவரை விட மோசம். அப்பாவி சிங்கள மாணவர்களை உசுப்பேத்தி அழித்துவிட்டு தாங்கள் நல்லா.. வாழ்ந்து இப்ப சரிந்திருக்கிறார்கள். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 றோகண சுடப்படுவதற்கு முன் அரசியலில் நின்றபோது கூறியது, தான் தேர்தலில் வென்றால் 24 மணித்தியாலத்தில் புலிகளை தூக்கில் போடுவேன்.  இந்த அமரசிங்க தப்பி வெளிநாடு செல்வதற்கு நமது தமிழ் அரசியல் தலைவர் ஒருவரே உதவினார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, போல் said:

கம்யூனிசம் என்ற பெயரில் சிங்கள இனவெறியை கக்கிய ஒருவர் மரணமானார்.

சிங்கள அரசியலில் இனவாத வாந்தியெடுக்காவிட்டால் நிலைத்திருப்பது வலு கஸ்டம்.

  • தொடங்கியவர்
சோமவன்ச அமரசிங்கவின் இறுதி ஊர்வலம் 18ஆம் திகதி
 

article_1465989168-111.jpgகாலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அன்னாரின் பூதவுடல் இலக்கம்35, சிங்கபுர, தலங்கம தெற்கு எனும் முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் பொரளை கனத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

சோமவன்ச அமரசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது.

- See more at: http://www.tamilmirror.lk/174769/ச-மவன-ச-அமரச-ங-கவ-ன-இற-த-ஊர-வலம-ஆம-த-கத-#sthash.fTxk3rDn.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

போங்கள்

மீண்டும் வராதீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அலவி மொலானாவும் இறந்து விட்டதாக செய்தி வந்து இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொதுவுடமைவாதிகள் முதல் இந்திய அனைத்துலகச் செங்கொடிவாதிகள் வரை எமது போராட்டத்தையும் விடுதலையையும் எதிர்த்தே வருகிறார்கள்.(இன்றுவரை) இவரொரு தூசுமாதிரி. றோகணாவும் மிக மோசமான இனவாதியே. புரட்சிகர அமைப்பு(?) ஒன்றின் தலைவன் கிளிநொச்சியில் 1977இல் உரையாற்றியபோது தானொருபோதும் தமிழரது தேசத்தை ஏற்கமாட்டேன் என்று உரைத்தவர். கட்சியில் மட்டும் "விடுதலை" என்ற பதத்தை போட்டுவைத்திருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போன்றவர்களது மறைவுகளாவது....ஈழத் தமிழர்களின் வாழ்வை ஒரு நிரந்தரமான விடியலை நோக்கி நகர்த்தட்டும்!

 

7 hours ago, முனிவர் ஜீ said:

அலவி மொலானாவும் இறந்து விட்டதாக செய்தி வந்து இருக்கிறது 

ஹிந்திய தூதரகத்திலேயே படுத்து கிடக்கும் அலவி மொலானாவும் மண்டையப் போட்டுடாரே!

முன்னாள் கள்ளக் கடத்தல் வியாபார மன்னன்!!! ஹிந்திய தூதரகத்துக்காரருக்கு வருமானம் குறையப் போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.