Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது - ஜெயமோகன்

Featured Replies

`` `ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை  தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’

``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.

1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது?

இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது.

இலங்கை அரசு, தமிழர்களை  மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

அரசு தனக்கு எதிரான போரை, போராகத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்கினார்கள், அவர்கள் போரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காந்தி ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரைத் தொடங்கவில்லை? ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தின் வாளை அதன் உறையிலிருந்து உருவவிடக் கூடாது என்பதில் காந்தி தெளிவாக இருந்தார். புலிகளின் முதன்மையான தவறு, அவ்வளவு வலிமையற்ற மக்களை ஆயுதத்தோடு அரசுக்கு எதிராகக் கொண்டு நிறுத்தியது. இதை ஏற்றுக்கொண்டுதான் நாம் மேலும் இதுகுறித்துப் பேச முடியும்.

மேலும், ‘இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்குமுறை தொடர்ந்ததால்தான் ஆயுதப் போராட்டம் வந்தது’ என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான். நீண்டகாலம் அங்கு ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. அதனால், குமரன் பத்மநாபா போன்ற ஆயுதத் தரகர்கள் பலன் பெற்றார்கள் என்பதுதான் உண்மை. இது பெரும் உரையாடலாகத் தொடரவேண்டிய விஷயம்!”

http://www.vikatan.com/thadam/article.php?aid=121686

  • தொடங்கியவர்

ஜெயமோகனது பதிலுக்கு  தமிழ்நதியின் எதிர்வினை

வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன்.

“முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.”

இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான் இவ்வாறு மொண்ணைத்தனமாக பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய படுகொலை பற்றிக் கூட இவர் அறிந்திருக்க மாட்டார் போல. இதற்குப் பிறகும் ஜெயமோகனைத் தூக்கிப் பிடிக்கும் இலக்கியவாதிகளது மனச்சாட்சி நாசமாய்ப் போகட்டும்!

அதேபோல, ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழ்நதி வாஸந்தி லெவலில்தான் எழுதுகிறார். வாஸந்தி எழுதியதை விட முக்கியமான எதையும் தமிழ்நதி எழுதிவிடவில்லை. அதனால் அவரை முக்கியமான எழுத்தாளராக நான் கருதவில்லை”என்று பதிலளித்திருக்கிறார்.

வாஸந்தி அவர்களின் எழுத்தை குறைவாக மதிப்பிட்டு இந்த எதிர்வினையை ஆற்றவில்லை. ஜெயமோகனுக்கு வாஸந்தி பற்றி என்ன அபிப்பிராயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, என்னைத் தரந்தாழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஜெயமோகனின் காழ்ப்புணர்வை அம்பலப்படுத்துவதற்காகவே இதை எழுதுகிறேன்.

ஜெயமோகனிடமிருந்து இப்படியொரு காழ்ப்புணர்வு வெளிப்பட்டேயாகும் என்று எனது நாவல் வெளியான நாளிலிருந்து நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்திய தேசியத்தை வானளாவ உயர்த்திப் பிடிக்கிற இந்துத்துவவாதியாகிய ஜெயமோகன், என்னைப் பற்றி இவ்வாறு சொல்லாமலிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பேன். தவிர, கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு அனுமானத்தின் அடிப்படையில் கதைக்கக்கூடிய ஜெயமோகன் ‘பார்த்தீனியத்தை’யும் வாசித்திருக்க வாய்ப்பில்லை.

வானத்திற்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதிவிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பில், ஈழத்தைப் பற்றிய அடிப்படை அரசியல் அறிவற்று ஜெயமோகனால் எழுதப்பட்ட ‘உலோகம்’ என்ற ‘திக்திக் க்ரைம்’ நாவலைக் குறித்து எனது வலைத்தளத்தில் என்னால் ‘கிழித்து’எழுதப்பட்ட கட்டுரையை அவர் படிக்காமலிருந்திருக்க மாட்டார்.

தவிர, மே 2012-இல், ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்?’(கற்பழிக்கிறதாம் கருமாந்திரம்) என்ற தலைப்பின் கீழான தனது கட்டுரையில், ‘இந்திய இராணுவம் ஈழத்தில் வன்புணர்வு எதனையும் செய்யவில்லை’என வரலாற்றுப் பிரக்ஞையே இல்லாமல் நிறுவ முயன்று, தனது சகபாடிகளாலேயே மூக்குடைபட்டிருந்தார். இந்தியாவின் வல்லாண்மையை ஈழத்தில் நிலைநாட்டுவதற்காக, இந்திய இராணுவம் அங்கு என்னென்ன அட்டூழியங்களைச் செய்தது என்பதை, குறிப்பாக, அவர்களால் அங்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை எனது நாவல் முடிந்தளவுக்கு பதிவு செய்து, ஜெயமோகனது மூக்குக்கு மேலதிகமாக சேதாரம் விளைவித்திருக்கிறது. இந்நிலையில், அவர் தனது விமர்சனமற்ற தேசபக்தியை, இத்தகைய நேர்காணல்களிலேனும் வெளிப்படுத்தாமல் எங்கே கொண்டுபோய் வெளித்தள்ளுவார், பாவம்!

2014-இல் நாஞ்சில் நாடன் அவர்களால் இதே விகடனில் இடப்பட்ட பட்டியலில் எனது பெயரும் இருந்தது. அந்தப் பட்டியலுக்கு எதிர்வினையாற்றிய ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.

இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.”

‘பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனதாக’அவரால் கூறப்பட்ட பெண்களிலொருத்தி நாவலொன்றை எழுதியிருப்பதையும், அந்நாவல் வாசகர்களால் பரவலாக வரவேற்கப்படுவதையும், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்நாவல் தமிழில் முக்கியமான வரவு என எழுதுவதையும், ஆனந்த விகடனில் பட்டியலிட்ட நாஞ்சில் நாடன் அவர்களே எனது நாவலுக்கு நடத்தப்பட்ட விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு ‘அப்போது எழுந்த சர்ச்சைக்கு தமிழ்நதி தனது எழுத்தினால் பதிலளித்திருக்கிறார்’என்று உரையாற்றுவதையும் ஜெயமோகனால் எங்ஙனம் ஜீரணித்துக்கொள்ள இயலும்?

ஜெயமோகன் போன்ற அடிப்படைவாதி ஒருவரால் விதந்தோதப்பட்டால் அது எனக்கு நேரும் இழுக்கு. பொறுக்கவியலாத அவமானம்!

கீழ்வரும் தகவலையும் ஜெயமோகனின் அன்பர்கள், தொண்டரடிப்பொடிகள் அவரிடம் சேர்ப்பியுங்கள்.

‘பார்த்தீனியம்’வெளியாகி மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது பதிப்பு கண்டுவிட்டது. அது அரசியல் பிரக்ஞையுள்ள வாசகர்களால் எனக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம். ஜெயமோகன் போன்ற ஒருவரின் அங்கீகாரம் என்போன்ற சுயமரியாதை மிக்க படைப்பாளிக்குத் தேவையற்றது.

ரொம்ப மகிழ்ச்சி!!!

-----------

தமிழ்நதியின் முக நூல் பதிவை அவரது அனுமதியுடன் பிரசுரிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுயவிளம்ர தரிகளை 
எழுத்தாளர்கள் என்று மொஞ்சி கொண்டு இருந்தால் 
கடைசியில் உங்களுக்கு கிடைக்கும் அவல்  இதுதான்.

இந்த கேவலமானவர்கள் ....
அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்களின் சலத்தை குடித்தாவது புத்தி பெறலாம். 

நான் இங்கு அப்பப்ப முளைக்கும் காளான்களுக்கு எதிராக 
எழுதுவதட்கு இதுவே முதல்காரணம்.

ஒரு சுயநலவாதியை எந்த சந்தர்ப்பத்திலும் திருத்த முடியாது 
நாடு அழிந்தாலும் ...... வல்லுணர்வு பற்றி பாலியல் எழுதி வியாபாரம் 
செய்யாவே இவர்கள் முன் நிட்ப்பார்கள். 

சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை சொந்த பெயரை கூட 
இழந்து நிட்கிறது ..... வந்ததெல்லாம் இனவாத உச்சியில் இருந்தே வந்தது.
ஒன்றும் இல்லாத ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை போன ஜே ஆர் படு வெற்றி கண்டார். 

இந்த வெங்காயம் இப்ப எமக்கு இலங்கை வராலறு படிப்பிடகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமைகளை எழுத்தாளர்களாக்கி.. அவர்களின் ஏவல்களை (நாவல்கள் அல்ல) வாசிப்பதன் வாயிலாக தாங்களும் சிறந்த படிப்பாளிகள் என்று சொல்லி சொந்தச் செலவில் தமக்குத் தாமே குஞ்சம் கட்டி அழகு பார்க்க ஒரு கூட்டம் உள்ள வரை.. இதுங்க பிதட்டல்களும் ஊடக அச்சில் ஏறும். ஹிந்திய தேசிய அடிமைச் செருப்பை தேய தேய அணிவதே இவர்களின் வாழ்கை இலட்சியம். இவர்களின் சிந்தனையில் வேற எதனை எதிர்பார்க்க முடியும்.   :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி பழைய செய்தி அல்லவா?...நான் இன்னும் உலோகம் வாசிக்கவில்லை.கிருபன் வாசித்தாயிட்டா?

  • தொடங்கியவர்
45 minutes ago, ரதி said:

இந்த செய்தி பழைய செய்தி அல்லவா?...நான் இன்னும் உலோகம் வாசிக்கவில்லை.கிருபன் வாசித்தாயிட்டா?

இது பழைய செய்தி அல்ல ரதி. விகடன் குழுமத்தில் இருந்து வரும் 'தடம்' சஞ்சிகைக்கு அண்மையில் வழங்க்கிய பேட்டியில் தெரிவித்து இருந்த பதில் இது
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.8.2016 at 10:16 PM, நிழலி said:

இலங்கை அரசு, தமிழர்களை  மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

அந்த எழுத்தாளருக்கு இடதுசாரி ஜே.வி.பிகள்  தமிழர்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்கு இந்தியன் என்ற மமதை கோணம் மட்டுமே  இருக்கின்றது.
இந்தியாவிற்கு சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருப்பது இறைவன் கொடுத்த வரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ‌வெல்லாம் கண்ணைமூடித்து அண்ணாந்து கொண்டு துப்புறான் அவனப்போல கன‌‌துக்கு பதில் சொல்லி சொல்லி முடியல 
தங்களை பிரபலமாக்க முனைகிறார்கள் பல சில்லறை எழுத்தாளர்கள் 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அந்த எழுத்தாளருக்கு இடதுசாரி ஜே.வி.பிகள்  தமிழர்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்கு இந்தியன் என்ற மமதை கோணம் மட்டுமே  இருக்கின்றது.
இந்தியாவிற்கு சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருப்பது இறைவன் கொடுத்த வரம்.

அதெண்டால்.... உண்மை.
காலம் முழுவதும் இந்தியா...... அவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். :)

ஒரு இந்திய அதிகாரவர்க்க அடிவருடியிடம் இப்படி ஒரு பதில் வருவதையிட்டு ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஜெயமோகனின் எழுத்துக்களுக்கு செம்புதூக்கும் இலங்கைத்தமிழர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். 

இந்திய தேசீயமும் அது சார்ந்த அதிகாரவர்க்கமும் இனம் என்ற கோட்பாட்டிற்கே எதிரானது. தமிழனை இனமாக அது எக்காலத்திலும் எற்றுக்கொள்ளாது. பல சாதிகளாக தீண்டத்தகாதவர்களாக, சாதி இந்துக்களாக தீண்டத்தகாதவர்களாகவே இந்திய தேசீயம் அணுகும் தவிர இனமாக அணுகாது. இனமாக அணுகுவது இந்திய மரபுக்கு முரணானது. இந்திய அதிகாரவக்கக் கட்டுமானத்திற்கு எதிரானது. இலங்கையில் உள்ள தமிழனை ஒரு இனமாக இந்திய அதிகாரவர்க்கம் எப்போதும் அடிப்படையில் ஏற்காது. பின்னர் அதன் பார்வையில் இனப்படுகொலை என்பது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும்?

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா இல்லையா ? இனப்படுகொலையில் இந்திய அரசின் கரங்கள் இருக்கா இல்லையா என்ற கோள்வைியை ஒரு இந்திய தேசீயவாதியிடம் கேட்பதும் அதன் பதிலுக்கு ஆச்சரியப்படுவதும் எவ்வளவு ஒரு கேவலமான  விசயம் !! சாதிவாரியாக இனங்களை சமூகங்களை பிரித்து மில்லியன் கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களாக நிலுவையில் வைத்து ஆழும் இந்திய அழும்வர்கத்தின் அடிவருடியான ஜெயமோகன் போன்றவர்கள் மனதகுல விரோதிகள், மானிதநேயத்திற்கு அடிப்படையில் எதிரானவர்கள். இப்படியானவர்களின் எழுத்துக்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை இரத்தக் கறை படிந்தவை என்ற புரிதலும் அவற்றை புறந்தள்ளிவிடும் பக்குவமும் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

போர் நடந்து பல வருடங்கள் ஆகியும் லட்சக்கணக்கில் தமிழர் மண்ணில் இராணுவம் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள் ஜே.வி.பி போராடிய இடங்கள் எங்காவது இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

ஒரு இந்திய அதிகாரவர்க்க அடிவருடியிடம் இப்படி ஒரு பதில் வருவதையிட்டு ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஜெயமோகனின் எழுத்துக்களுக்கு செம்புதூக்கும் இலங்கைத்தமிழர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். 

இந்திய தேசீயமும் அது சார்ந்த அதிகாரவர்க்கமும் இனம் என்ற கோட்பாட்டிற்கே எதிரானது. தமிழனை இனமாக அது எக்காலத்திலும் எற்றுக்கொள்ளாது. பல சாதிகளாக தீண்டத்தகாதவர்களாக, சாதி இந்துக்களாக தீண்டத்தகாதவர்களாகவே இந்திய தேசீயம் அணுகும் தவிர இனமாக அணுகாது. இனமாக அணுகுவது இந்திய மரபுக்கு முரணானது. இந்திய அதிகாரவக்கக் கட்டுமானத்திற்கு எதிரானது. இலங்கையில் உள்ள தமிழனை ஒரு இனமாக இந்திய அதிகாரவர்க்கம் எப்போதும் அடிப்படையில் ஏற்காது. பின்னர் அதன் பார்வையில் இனப்படுகொலை என்பது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும்?

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா இல்லையா ? இனப்படுகொலையில் இந்திய அரசின் கரங்கள் இருக்கா இல்லையா என்ற கோள்வைியை ஒரு இந்திய தேசீயவாதியிடம் கேட்பதும் அதன் பதிலுக்கு ஆச்சரியப்படுவதும் எவ்வளவு ஒரு கேவலமான  விசயம் !! சாதிவாரியாக இனங்களை சமூகங்களை பிரித்து மில்லியன் கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களாக நிலுவையில் வைத்து ஆழும் இந்திய அழும்வர்கத்தின் அடிவருடியான ஜெயமோகன் போன்றவர்கள் மனதகுல விரோதிகள், மானிதநேயத்திற்கு அடிப்படையில் எதிரானவர்கள். இப்படியானவர்களின் எழுத்துக்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை இரத்தக் கறை படிந்தவை என்ற புரிதலும் அவற்றை புறந்தள்ளிவிடும் பக்குவமும் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி...முந்தியும் இவர் இப்படி ஒரு பேட்டி கொடுத்து எல்லோரும் பேசினதாக ஞாபகம்...அல்லது அது வேற யாருமோ?

  • தொடங்கியவர்
8 minutes ago, ரதி said:

நன்றி நிழலி...முந்தியும் இவர் இப்படி ஒரு பேட்டி கொடுத்து எல்லோரும் பேசினதாக ஞாபகம்...அல்லது அது வேற யாருமோ?

இவர் முந்தி கொடுத்த பேட்டி ஒன்றில் (காலச்சுவட்டுக்கு என்று நினைக்கின்றேன்) இந்திய படையினர் இலங்கையில் தமிழ் பெண்களை வன்புணர்வு செய்யவில்லை என்றும் படுகொலைகளில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். அப் பதில் ஈழத்தவர்களால் கண்டிக்கப்பட்டு இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்...என்னுடைய ஆதங்கம் என்ன என்டால் இப்படியானவர்கள் காலத்திற்கு,காலம் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்...நாங்களும் அந்த நேரத்தில் கோபத்தில் திருப்பி அவர்களை பார்த்து கத்தி விட்டு பின் அதை மறந்து எங்கள் வேலைகளைப் பார்க்க போய் விடுவோம்....இவர்களுக்கு எதிராக உருப்படியாக எங்களால் எதுவும் செய்ய முடிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? தடம் இதழில் உங்களது பேட்டி படித்தேன். அது பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். இந்த பேட்டி இலக்கியத்தை விடவும் உங்களை சுற்றியுள்ள சர்ச்சைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சோட்டா கவர்மெண்ட்க்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ற வரிகளை ரசித்தேன்.

ஈழப்போரை பற்றி கூறியுள்ள பதில் குழப்பத்தை தந்தது. தனக்கு எதிராக உள்ளவர்களைதான் அரசு கொன்றது. அது எப்படி இனபடுகொலையாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இறுதிபோரில் கொல்லப்பட்டது புலிகள் மட்டுமல்ல. ஐ.நாவின் கணக்குபடியே இறுதி சில மாதங்களில் மட்டும் நாற்பதாயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். பாதுகாப்பு வளையம் என்று கூறி, மக்களை குழுமசெய்து, பிறகு அந்த இடத்தில் கொத்துகுண்டுகள் வீசப்பட்டது என்று தப்பித்துவந்தவர்கள், செய்தியாளர்கள் என பலரும் உறுதிசெய்துள்ளனர். இதை எப்படி நக்சைலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை பகுதியாகவோ, முழுமையாகவோ திட்டமிட்டு கொலை செய்தால், அது இனபடுகொலை என்று ஏற்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. புலிகள் மக்களை கேடயமாக்கினர் என்று கொண்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமான ஒரு அரசு, இப்படி திட்டமிட்டு மக்களின் சாவு எண்ணிக்கையை பற்றி கவலைபடாமல் குண்டு வீசி கொல்லுமென்றால் அதை இனபடுகொலை என்று கூறுவதில் என்ன பிழை? ஒரு வேளை புலிகள், சிங்கள மக்களை கேடயமாக்கியிருந்தால், அரசு இதேவிதமாக குண்டுகளை வீசி மக்களை கொன்றிருக்குமா?

ஏப்ரல் 29ம்தேதி, புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனையில் குண்டு வீசப்பட்டது. அதைபற்றி கேட்டபோது, கோத்தபய ராஜபக்சே, அந்த மருத்துவமனை லெஜிட்மேட் டார்கெட்தான் என்று பேட்டியளித்தார். 2009 வருடம் மார்ச் மாதம் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் ஏராளமான மக்கள் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சையளித்தால் காப்பாற்றலாம். மருந்துபொருட்கள் இல்லை. எனவே மருந்துபொருட்களை அனுப்பி உதவுங்கள் என்று அங்கு பணிபுரிந்த தமிழ் மருத்துவர் வரதராஜா இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்புகிறார். அங்கு தகுதியான மருத்துவர்கள் இல்லை எனவே மருந்துபொருட்கள் அனுப்பமுடியாது என்று இலங்கையின் சுகாதார அமைச்சர் பதில் அளிக்கிறார். உணவு பொருட்களையும், மருந்தையும் போர் கருவியாக பயன்படுத்தினால், அது மனிதகுலத்திற்க்கு எதிரான குற்றம் என்று ஐ.நாவின் சர்வதேச குற்றவியல் சட்டம், ரோம் உடன்படிக்கைபடி கூறுகிறது. இது போல் ஆவணமாக்கப்ட்ட ஆதாரங்கள் ஏராளம்.

மேலும் அங்கு நடந்த ஆயுத போராட்டத்தால் குமரன் பத்மநாபா போன்ற ஆயுத தரகர்கள் பலன்பெற்றனர் என்று கூறியுள்ளீர்கள். குமரன் பத்மநாபா புலிகள் அமைப்பை சேர்ந்தவர். புலிகளுக்கு மட்டும் ஆயுத கொள்முதல் செய்தவர். இவரை போன்றவர்கள் பலன் பெறதான் போரே நடந்தது என்கிற தொனி அந்த பேட்டியில் உள்ளது ஆயுத விற்பனைக்காகதான் ஈழப்போர் நடக்கிறது என்கிற வரிகளை சுஜாதா போன்றவர்கள் வேண்டுமானால் மேலோட்டமாக எழுதி செல்லலாம்.

எப்படியிருப்பினும் கண்ணுக்குமுன் நடந்த ஒரு மனிதபேரவலத்தை, வலியை பிரதிபலிப்பதாக அந்த பதில் அமையவில்லை.

அன்புள்ள

செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்,

சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சிக்கலான அனுபவம் நிகழ்ந்தது. கேரளத்தில் ஒரு சர்வதேச நாடகவிழாவுக்கு சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினர் ஆகையால் அங்குவந்த அனைவரிடமும் விரிவாகப் பேச வாய்ப்பு கிடைத்தது. அவ்விவாதங்கள் தனிப்பட்ட முறையிலானவை என்பதனால் உடனடியாக எழுதவில்லை.

அதில் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன். அவர் இந்தியாவில் 1947க்குப்பின் நடந்த மதக்கலவரங்களின் பட்டியலைச் சொன்னார். அனைத்துமே இனஅழித்தொழிப்புக்காக இந்தியர்களால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்றார்.

ஏன், குடும்பக்கட்டுப்பாடே இஸ்லாமியரை இல்லாமலாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று வாதிட்டார் அவர். நான் அவரை ஒரு கட்டத்தில் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கண்ணீர் மல்கினார். தொண்டை அடைத்தது. உண்மையிலேயே நம்பித்தான் அதைச் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டேன்.

அடுத்த நாளே மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இனஅழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது இன அழித்தொழிப்புக்காக இந்திய அரசு கண்டுபிடித்த வழிமுறையாம்.

இவர்களுடன் விவாதிப்பதே முடியாத காரியம். ஏனென்றால் உறுதியான, உணர்ச்சிபூர்வமான நம்பிக்கை அது. போரிடும் தரப்புகள் மட்டுமே அப்படி உச்சகட்ட ஒற்றைப்படையாக்கத்தை நிகழ்த்தும். அதற்கு அப்பால் சென்று சிந்திப்பது அந்த உணர்ச்சிவளையத்துக்குள் இருப்பவர்களுக்கு எளிதல்ல.இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.

இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.

இந்தியாவில் நடந்த அனைத்து மதக்கலவரங்களிலும் இஸ்லாமியரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதயோ, கணிசமான மதக்கலவரங்கள் இஸ்லாமியர் தங்கள் மத உணர்வுகள் புண்பட்டதாகச் சொல்லி ஆரம்பித்தவை என்பதையோ இவர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள். மணிப்பூரில் ஆயுதந்தாங்கிய ராணுவங்களை அரசு எதிர்ப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதையோ ,அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தாக்குதல்களை இந்திய ராணுவத்தின்மேல் தொடுத்திருக்கிறார்கள் என்பதையோ பேசமாட்டார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் எப்போதுமே பாகிஸ்தானியர்களின் கண்களில்படாது. அவை வேறுவழியில்லாத எதிர்ப்புகள் மட்டுமே என வாதிடுவார்கள்.

இவர்கள் கண்ணில் இவர்களுக்கு சாதகமான அமைப்பு உண்மையிலேயே நிகழ்த்தும் இனஒழிப்பும் தென்படாது. குர்துக்கள் ஐம்பதாண்டுக்காலமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை இஸ்லாமியர் கருத்தில் கொள்ளமாட்டார்கள். சிறுபான்மையினரான குக்கி இனக்குழுவை மணிப்பூர் அங்கமிகள் கொன்று ஒழிப்பது இன ஒழிப்பு அல்லவா என நான் கேட்டபோது அந்த மணிப்பூர் நண்பர் சீறி எழுந்துவிட்டார். திபெத்தில் இன ஒழிப்பு நிகழ்கிறதா என்று கேட்டால் நம்மூர் மாவோயிஸ்டுகள் கொதிப்பார்கள். ஏன், விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை துரத்தியது இனத்தாக்குதலா என்று கேட்டால் வெகுண்டு எழுவார்கள்.

ஆக, இந்த இனஅழித்தொழிப்புக் குற்றச்சாட்டு எப்போதும் அகவயமானது. மிகையுணர்ச்சிகளால் முன்வைக்கப்படுவது. அதை ஐயப்பட்டாலோ விவாதித்தாலோ அப்படிக் கேட்பவர்களை எதிரிகளாகக் கட்டமைப்பது. நேரடியான, அப்பட்டமான ஃபாஸிஸம். பிறிதொன்றுமில்லை. அது சில குழுக்களின் சொந்த லாபத்துக்காகச் செய்யப்படுவது. மிகையுணர்ச்சியுடன் முன்வைக்கப்படும் எதையும் பாய்ந்து ஏற்றுக்கொண்டு கூச்சலிடும் எளிய மனங்களை தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்.

இனஅழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’ [ http://www.preventgenocide.org/genocide/officialtext-printerfriendly.htm] அத்தகைய ஒரு செயல்பாடு ஈழத்தில் எண்பதுகளுக்கு முன்னர் தொடர்ந்து நடந்தது என்றும் 2009க்குப்பின்னர் நீடிக்கிறது என்றும் நான் நினைக்கவில்லை. பாகிஸ்தானிகள் ஒவ்வொருநாளும் இந்தியாவில் பல்லாயிரம் இஸ்லாமியர் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என நம்புவதுபோல இலங்கையிலும் அதெல்லாம் நிகழ்கிறது என நம்புபவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

அப்படியென்றால் அங்கே நிகழ்ந்தது என்ன? முதலில், அங்கிருந்தது இனப்பாகுபாடு மற்றும் இன ஒடுக்குமுறை. அது எண்பதுகளில் இலங்கையில் இருந்ததைவிட அதிகமாக இன்று மலேசியாவில் உள்ளது. இனரீதியாக சமத்துவம் மறுக்கப்படுதல். சட்டங்களின் மூலம் ஓர் இனத்தின் வளர்ச்சி தடுக்கப்படுதல். அங்கே பிரச்சினையின் தொடக்கம் அது.

இதில் இங்குள்ளோர் மறந்துபோன ஒன்றுண்டு, அது எப்போதும் சுட்டிக்காட்டப்பட்டாகவேண்டும். சாஸ்திரி- சிரிமாவோ ஒப்பந்தபடியும் பின்னர் இந்திராகாந்தி காலத்திலும் இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளியினரான மலையகத்தமிழர் கூட்டம்கூட்டமாக குடியுரிமை மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக கப்பல் ஏற்றி அனுப்பப்பட்டனர். இங்கே மத்திய அரசு உருவாக்கிய மலைக்குடியிருப்புகளில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். Tantea போன்ற அமைப்புக்கள் அவர்களுக்காக உருவாக்கப்பட்டன. இன்றும் ஊட்டியில் அவர்கள் அப்படியே பரிதாபகரமாக மலைச்சேரிகளில் வாழ்கிறார்கள். ஆர்வமிருப்பவர்கள் சென்று அவர்களின் கதைகளைக் கேட்கலாம்.

இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத்தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் சி.ஜி.பொன்னம்பலம்தான் நாடாளுமன்றத்தில் அக்கோரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச்செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான். ஏனென்றால் அந்த ஏழைமக்கள் ‘தோட்டப்பறையர்கள்’ ‘கள்ளத்தோணிகள்’. ஆனால் அப்போதே தாங்கள் இன அழித்தொழிப்புக்கு ஆளானோம் என இப்போது நம்மிடம் சொல்கிறார்கள்.

எழுபதுகளில் ஜனதா விமுதிப்பெருமுனே என்னும் இடதுசாரிக் கிளர்சியமைப்பை முழுமையாகவே சிங்கள அரசு கொன்று அழித்தபோது சிங்கள அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தமிழ்க்கட்சிகள். இன்று இன அழித்தொழிப்புக்கு தாங்கள் அப்போதே ஆளானோம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

இனஒடுக்குமுறைக்கு தாங்களும் பலியாகத் தொடங்கியபோது, கல்வியில் சிங்களருக்கு இடஒதுக்கீடு போன்ற சில சட்டங்கள் வந்தபின்னர்தான் மெல்ல யாழ்ப்பாணத் தமிழர்கள் அதற்கு எதிராகத் திரண்டனர். போராட்டங்கள் தொடங்கியதுமே மிகவிரைவிலேயே ஆயுதப்போர் ஆரம்பித்தது.

யாழ்ப்பாணச்சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட அப்போரில் இருந்து அங்குள்ள மலையக மக்கள் கடைசிவரை முழுமையாகவே விலகி நின்றனர் என்னும் வரலாற்று யதார்த்தம் நம் முன் உள்ளது. ஏனென்றால் அந்த இட ஒதுக்கீட்டால் மலையகத்தமிழர்களுக்கு நன்மையே விளைந்தது.

மட்டக்களப்பு மக்களும் அப்போரில் இரண்டாமிடமே வகித்தனர். கருணா தலைமையில் மட்டக்களப்பு மக்களின் விலக்கமே இறுதியில் முழுமையான தோல்விக்கும் காரணமாகியது.

இத்தனை சின்னஞ்சிறிய சமூகம் போரை முன்னெடுக்கமுடியுமா, வெல்லமுடியுமா என்பதேதும் சிந்திக்கப்படவில்லை. இந்திய உளவுத்துறை அப்போருக்கான முழுமுதல்காரணம் என்பதை வரலாறு அறிந்தோர் மறுக்கமாட்டார்கள். பின்னர் சர்வதேச ஆயுதக்கடத்தல் அரசியல். போர் அம்மக்கள்மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்பதை நான் பேசிய ஒவ்வொரு ஈழத்தமிழரும் இன்றுஅந்தரங்கமாகச் சொல்கிறார்கள். கால்நூற்றாண்டுப்போருக்குப்பின் அந்தப்போராட்டம் முழுமையான தோல்வியை அடைந்தது.

அதன் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதன் தியாகங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதன் விளைவு சகோதரப்போரும், உள்பூசல்களும், கொலைகளும்தான். கடைசியாக முழுமையான அழிவு. ஒரு சமூகமே சிதறி அழிந்தது. இன்று அதற்கு அந்தப்பொறுப்பற்ற போர்வெறியும் அரசியல்பிழைகளும் எவ்வகையிலும் காரணமல்ல என்றும் முழுக்கமுழுக்க சிங்கள அரசின் இனவெறியே காரணம் என்றும் நிறுவும்பொருட்டே இனப்படுகொலை என்கிறார்கள்.

இன்று இந்த வரலாற்றை எப்படி கொஞ்சமேனும் சமநிலையுடன் எதிர்கொள்வது, எப்படி ஆராய்வது என்பதே கேள்வி. அதை உணர்ச்சிக்கொந்தளிப்பான புராணமாக ஆக்கிக்கொள்வது அல்ல. இன்று கொந்தளிப்பவர்கள் பலர் செய்தித்தாளில் அரைகுறையாக வாசித்து, மேலோட்டமாக அறிந்து தீவிரத் தரப்புகள் எடுப்பவர்கள். நான் குறைந்தது இருபத்தைந்தாண்டுக்காலமாக அதற்கு ஏதோ ஒருவகையில் அணுக்கமாக இருந்துகொண்டிருந்தவன்.

அங்கே அரசு நிகழ்த்தியதை இனஅழித்தொழிப்பு என்று வாதிடுவது நம் உணர்ச்சிகரவாதம். அங்கே மலையகத்தமிழர் சிங்களர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன? போர் உச்சகட்டமாக நடந்துகொண்டிருந்தபோதுகூட அவர்கள் தாக்கப்படவில்லையே, அல்லது அவர்கள் தமிழர்களே அல்லவா?

போர் எப்போதுமே உச்சகட்ட ஒற்றைப்படைப் பிரச்சாரம், அதிதீவிரமான உணர்வுநிலைகள் வழியாக நிகழ்வது. அதன் கசப்புகளும் காழ்ப்புகளும் முழுக்க இன்று கடந்தகாலமாக ஆகிவிட்டன. அப்போரில் இரு தரப்புமெ எல்லா எல்லைகளையும் மீறிவிட்டன. பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் கொல்லப்பட்டனர். அந்தப்பட்டியல் மிகமிகப்பெரிது. அது எப்போதுமே அப்படித்தான். எந்த போருமே விதிவிலக்கு அல்ல.

இறுதியாக போர்முனையில் எளியமக்கள் கொன்றழிக்கப்பட்டனர். ஆம்,அது அரசவன்முறை. ஆனால் அந்த மக்களை போர்முனைக்குக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றது சிங்கள அரசல்ல. அந்தமக்களை கொன்றது இனப்படுகொலை என்றால் அவர்களை கேடயமாகப் பயன்படுத்தியவர்கள், அவர்கள் தப்ப முயன்றபோது தாக்கியவர்கள் அதில் எந்தப்பொறுப்பும் அற்றவர்களா என்ன?

அப்படியென்றால் அங்கு நிகழ்ந்தது என்ன? அது போர்க்குற்றம். புலிகள் எளிய மக்களை போர்முனைக்குக் கொண்டுசென்றார்கள். ஆனால் அந்த மக்கள் சிங்கள அரசின் குடிகள். அவர்களை அவர்களின் அரசு தாக்கியதென்பது போர்க்குற்றம். அதன்பின் கைதானவர்களை சட்டப்படி நடத்தாமல் கொன்றதும் போர்க்குற்றமே. போர்க்குற்றத்துக்காக சிங்கள அரசு சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமா என்றால், ஆம்.

ஆனால் அதைச் சொல்லும்போது புலிகளின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட்டு சொல்ல முடியாது. சொன்னால் அதற்கு எந்தவிதமான மதிப்பும் இருக்காது. புலிகள் ஓர் அரசு அல்ல, சிங்கள அரசு ஜனநாயகபூர்வமாகத் தேர்வுசெய்யப்பட்டது. பிற அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது அது. ஆகவே அது சர்வதேசச் சட்டங்களை கடைப்பிடிக்கக் கடமைப்பட்டது. ஆகவே அதை விசாரிக்கமுடியும்.

அது ஏன் இன்னமும் நிகழவில்லை? அந்தக்கோரிக்கைக்கு ஃபேஸ்புக்குக்கு வெளியே ஏன் மதிப்பே இல்லை? ஏனென்றால் அங்கே நிகழ்ந்தது இனஅழித்தொழிப்பு என்று வாதிடப்படுவதுதான்.

அப்படி வாதிடும்போது அதற்கு எந்த சர்வதேசமன்றத்திலும் மிக எளிமையான நேரடிப்பதிலே சிங்கள அரசால் சொல்லப்பட முடியும். அது இன அழித்தொழிப்பு என்றால் 2009க்குப்பின் எத்தனை வன்முறைகள் நடந்தன? மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள், மறுவாழ்வு அளிக்கப்படுகிறது என அரசு சொல்லமுடியும். எங்கும் அதுசெல்லுபடியாகும். இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைபாடே அங்கு இன அழிதொழிப்பு நிகழவில்லை என்பதுதான்.

மேலும் அது இனஅழித்தொழிப்பு என்றால் அது போர்நின்றதும் நின்றுவிடாது. இன்றும் அது அங்கே நிகழ்கிறது என்று சொல்லும்போது அங்கு இப்போது மக்களால் தேர்வுசெய்யப்பட்டு நிகழும் அரசை, அங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் சிந்தனையாளர்களையும் இனஅழித்தொழிப்புக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என சித்தரிக்கிறார்கள். அதற்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?

உண்மையில் இதை திருப்பித்திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த்தேசியர்களும் மட்டுமே. சர்வதேச அளவில் எவராலும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவில்கூட அதற்கு ஆதரவாக ஒரு சிறு குரலை உருவாக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கு புறவயமான ஆதாரங்கள் இல்லை.

இனப்படுகொலை என்றேல்லாம் நான் நம்புகிறேன், மேடைகளில் கொந்தளிப்பேன், ஃபேஸ்புக்கில் சண்டைபோடுவேன் என்பதற்கெல்லாம் எந்த பொருளும் இல்லை. அது பொதுவாக உலகின்முன் நிறுவப்படவேண்டும். உலகம் அத்தகைய ஒரு நிலைபாட்டை முழுமையாகவே புறக்கணிக்கும். காரணம், அது ஒரு மிகையுணர்ச்சி வெளிப்பாடு மட்டுமே.

ஆனால், போர்க்குற்றம் என்பதே குற்றச்சாட்டு என்றால் அது எங்கும் நிற்கும். எத்தனை ஆண்டுக்காலம் கழித்தும் அது நீடிக்கும். போர்க்குற்றம் எப்போதுவேண்டுமென்றாலும் விசாரிக்கப்படலாம். அதற்கு இன்னமும் கூட ஆதாரங்கள் சேகரிக்கப்படலாம் அதை மானுட உரிமைக்குழுக்கள்கூட ஐநாவில் முன்வைத்துக்கொண்டே இருக்கலாம்.

அதனால் நடைமுறைப்பயன் உண்டா என்றால் நேரடியாக இல்லை. ஏனென்றால் உலகிலுள்ள அத்தனைநாடுகளும் ஈழத்தில் சிங்கள அரசு செய்ததை தாங்களும் செய்பவையே. அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய சிங்களர்களையே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்தது சிங்கள அரசு என்னும்போது வேறென்ன பார்க்கவேண்டும்? இந்தோனேசியாவில், தாய்லாந்தில், மலேசியாவில் எல்லாம் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் எவையும் தண்டிக்கப்பட்டதில்லை

ஆனால் அப்படி ஒரு கோரிக்கை அல்லது குற்றச்சாட்டு இருந்துகொண்டிருக்கும் வரை சர்வதேச அளவில் ஒரு கட்டாயம் இருப்பதனால் சிங்கள அரசு எங்கும் சற்றுத் தயங்கும். இன ஒதுக்குமுறையை நேரடியாகச் செய்யமுடியாது. அது ஒன்றே அம்மக்களுக்கு லாபம்

ஆனால் ஏன் அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்? ஏன் இன அழித்தொழிப்பு என்றே முழங்குகிறார்கள்?

இந்த ஈழவிவகாரத்தில் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் அகதிகளாக முழுக்குடியுரிமை பெறாது வாழ்பவர்களின் தனிப்பட்ட இலக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவர்களுக்கு இலங்கையில் இனஅழித்தொழிப்பு இன்னமும் நிகழ்கிறது, எனவே அங்கே திரும்பிச்செல்லமுடியாது என்ற வாதம்தான் அந்நாடுகளில் குடியுரிமை பெற அவசியமானது. அதற்கான குரல்களையே தமிழகத்திலும் எழுப்புகிறார்கள்.

இந்திய முஸ்லீம்கள் இன அழித்தொழிப்புக்கு ஆளாகிறார்கள் என்னும் வாதம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அவசியமானது. அதைப்போன்றதே இதுவும். உண்மையில் இதனால் இலங்கை மக்களுக்கு பெரும் நெருக்கடியும் இழப்பும்தான் ஏற்படும். அவர்களின் அரசியலை அவர்களே தீர்மானிக்கவிட்டுவிடுவதையாவது நம்மவர்கள் செய்யலாம்.

இங்கும் ஐரோப்பாவிலும் வசதியாக அமர்ந்தபடி டக்ளஸ் தேவானந்தாவும் விக்னேஸ்வரனும் எல்லாருமே இன அழித்தொழிப்புக்குத் துணைநிற்கும் துரோகிகள் என முழங்குகிறார்கள். சென்றகாலங்களில் இப்படிப்பட்ட ‘துரோகி’ முழக்கங்களால்தான் தமிழ்ச்சமூகம் பிளவுண்டது. தனிமைப்படுத்தப்பட்டது. அந்த மூடத்தனமாக வேகம் இப்போதும் இங்கே நீடிக்கிறது.

பாருங்கள், இன்றும் என்ன சொல்கிறார்கள். ‘இனஒழிப்பு என்பது என் தரப்பு, அதை மறுத்து அந்த அழிவை அரசபயங்கரவாதம் என்பவன் தமிழ்விரோதி, சிங்கள ஆதரவாளன்’ இந்த மூர்க்கம் அல்லவா இத்தனை அழிவுக்கும் ஆதாரம். இத் இருக்கும் வரை எதிரிகளை ஏன் வெளியே தேடவேண்டும்?

இத்தகைய கூச்சல்கள் வழியாக இவர்கள் இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெரிய அநீதி இழைக்கிறார்கள். அதற்கான எதிர்ப்பு அவ்வப்போது தீவிரமாக இலங்கைத்தமிழ் தரப்பிலிருந்து வெளிப்படவும் செய்கிறது. சமீபத்தில் இலங்கை ஜெயராஜ் ‘இலங்கையில் இனப்படுகொலை நிகழும்போது கொழும்பில் கம்பன் விழா நடத்துகிறார்’ என ஆஸ்திரேலியப் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களால் குற்றம்சாட்டப்பட்டபோது மிகக்கடுமையான மொழியில் ‘உங்கள் பிழைப்புக்காக எங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்’ என பதில்கொடுத்தார்.

உண்மையில் ‘தொப்புள்கொடி’ உறவுகள் மேல் இத்தனை ஆர்வமும் பற்றும் நம்மிடம் உள்ளதா என்ன? இருந்திருந்தால் இங்குள்ள அகதிமுகாம்கள் கால்நூற்றாண்டாக இத்தனைபரிதாபகரமான நிலையிலா இருந்திருக்கும்? மாறிமாறிவந்த அரசுகள் அவர்கள்மேல் அடிப்படை மனிதாபிமானத்தையாவது காட்டினவா?

தனிப்பட்ட முறையிலும் என் நண்பர்களுடன் இணைந்தும் அகதிகளாக உள்ள ஈழமாணவர்களுக்கு உதவ பல பணிகளை முன்னெடுக்கையில் காண்பது முற்றிலும் வேறு யதார்த்தம். இங்கு எவருக்கும் அந்த மக்களின் மேல் எந்த அனுதாபமும் இல்லை. மிகச்சிறிய அளவில்கூட நிதி வசூலாவதில்லை. அவர்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வைத்திருக்கிறோம் நாம். உண்மையில் இனஅழிப்பு நடப்பது இங்கே அகதிமுகாம்களில்தான் என்றுகூட சொல்லிவிடத் தோன்றுகிறது.

இந்தமண்ணில் பிறந்து இங்கே வளர்ந்த இலங்கை வம்சாவளியினருக்கு இங்கே குடியுரிமை கிடையாது. அகதியாகப்பிறந்து அகதியாக வாழும் அம்மக்களுக்கு இங்குள்ள அரசு அளிக்கும் கல்விச்சலுகைகள் இல்லை. எந்த அரசுசார் உரிமைகளும் இல்லை. படித்தபின் வேலையும் இல்லை. திபெத், கிழக்கு வங்காள மக்களை பத்தாண்டுகளுக்குள் குடியுரிமை கொடுத்து ஏற்றுக்கொண்ட இந்தியா அவர்களை இன்னமும் அகதிகளாகவே வைத்துள்ளது

சென்ற இருபதாண்டுக்காலத்தில் பெருவல்லமையுடன் தமிழக அரசியல்கட்சிகள் பல மத்திய அரசை கட்டுப்படுத்தியிருக்கின்றன. தமிழக அரசியல்வாதிகள் பலர் தேசிய அளவில் செயல்படுகிறார்கள். நினைத்திருந்தால் பத்துநாளில் முடியவேண்டியபணி.

சென்ற நான்காண்டுகளாக இதைத் திரும்பத்திரும்ப எழுதிவருகிறேன். பல மக்கள் பிரதிநிதிகளுக்கு நானே நேரில் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஆதரவாக ஒருகுரலும் எழுந்ததில்லை. இங்கே நிகழும் கொந்தளிப்புகளைப்பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் சாகவே இல்லை என நான் சொல்லிவிட்டேன் என்று எனக்கு நாளொன்றுக்கு இருபது கடிதங்கள். எதற்கு எப்படி விளக்கம் சொல்வது?

கொந்தளிப்பவர்கள் இங்குள்ள அகதிகளை நாம் இன அழித்தொழிப்பு செய்வதற்கு எதிராக ஏதாவது செய்யலாம். ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு ஆயிரம் ரூபாய்வீதம் அம்மக்களுக்குச் செல்லும் என்றால் எவ்வளவு பெரிய தொகை! இத்தனை ஆண்டுகளில் இத்தனைகுழுக்கள் இங்கிருக்க இவர்களுக்கு உதவ ஒரு மையநிதியமைப்பை உருவாக்கியிருக்கலாம். வங்காளிகள் அதைச்செய்து தங்கள் மக்களை அந்தமானிலும் அஸாமிலும் மறுகுடியமர்வுசெய்தனர். குடியுரிமை பெற்றுக்கொடுத்தனர். இங்கே கூச்சல்கள் அதிகம், செயல் என எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் அவர்களை இந்தியக்குடிமக்கள் ஆக்கவேண்டுமென ஒரு பெரும் மனு உருவாக்கி மக்களவை உறுப்பினர்களுக்கு அளித்து கட்டாயப்படுத்தலாம்.

அல்லது குறைந்தது நண்பர் முத்துராமன் போல களத்தில்நின்று சேவைசெய்பவர்களுக்கு ஏதேனும் பண உதவிகள் செய்யலாம். விஷ்ணுபுரம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட சந்திரசேகர் அறக்கட்டளை ஈழ அகதி மாணவர்களின் படிப்புக்காக மட்டுமே செயல்படுவது. நண்பர் முத்துராமன் அதை முன்னின்று நடத்துகிறார்.

ஜெ

பி.கு குமரன் பத்மநாதன் என்னும் பெயர் பிழையாக தடத்தில் அச்சாகி உள்ளது. புலிகளின் ஆயுத விவகாரங்கள் அனைத்தையும் கையாண்டவர், பிரபாகரனுக்கு ஒருபடி மேலாக இருந்த தலைவர், இலங்கையில் இப்போது நலமாக, சுதந்திரமாக இருக்கிறார். ஏன் எந்தப்போரும் அவரை ஒன்றும் செய்யவில்லை?

http://www.jeyamohan.in/89564#.V6biqHh4WrU

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதில் விவாதிக்கா இ=ஒன்றும் இல்லை ......
இது ஒரு சைக்கோ யுத்தி .

வானம் நீலம் இல்லை ......
என்று கூறிவிட்டு 
பின்பு மிகுதி 11 நிறமும் இல்லை இல்லை என்று விபரிப்பது 

இவர் சொல்வது உண்மைதான் என்று மேலோட்ட்மாக பார்ப்பவர்கள் 
நம்பி விடுவார்கள். காரணம் 11 நிறம் பற்றி சொல்வது உண்மைதான் 
1 பொய்யை 11 உண்மையால் மறைப்பது.

பின்பு 12ஆவது நிறமாக இருக்கலாம் என்று சொல்லுவார் 
ஆனால் வானம் நீலம் இல்லை என்று சொல்லுவார்.

இது சி ஐ எ உளவு நிறுவன பயிட்சி புத்தகத்தில் இருக்கிறது.

மலையக தமிழரை இந்திய அனுப்பியது இன கொடுமை 
ஆனால் அதை ஜீ ஜீ பொன்னம்பலம் ஆதரித்ததால் 
அது இன கொடுமை இல்லை.

நல்ல காலம் ...
ஈப்பி சாப்பி ஓட்டினது ஓடடாத குழு கருணா குழு எல்லாம் 
தாக்கியது இவருக்கு தெரியவில்லை போல .

இந்த மூதேவிகள் தமிழில் எழுதவே இனி அனுமதிக்க கூடாது.
சுதந்திரம் என்பது அடுத்தவன் சுதத்ந்திரத்தில் தலையிடாதா வரைதான் 
அது உனது சுதந்திரம்.  

  • தொடங்கியவர்

அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள் - – ஷோபாசக்தி

ன்புள்ள ஜெயமோகன்,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன்.

‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான சூசைப்பிள்ளைகள்’ என்றும் நான் கூறமாட்டேன். நீங்கள் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டுவது போல புலிகள் இழைத்த யுத்தக் குற்றங்களையும், புலிகள் நடத்திய முஸ்லீம் இனச் சுத்திகரிப்பையும் நியாயப்படுத்துபவர்களும் அவர்களிற்குள் உள்ளார்கள்.

இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே என்பது என் தரப்பு. இதை நீண்டநாட்களாகவே நான் சொல்லிவருகிறேன். மாறாக அங்கு நிகழ்ந்தது இனப் படுகொலை அல்ல என்பது உங்களது தரப்பு. எனினும் இந்த விசயத்தில் உங்களோடு வாதிட்டு நிற்பது எனது நோக்கமில்லை. ஏனெனில் நடந்தது இனப்படுகொலையே அல்ல என உங்களைப் போலவே பலமாக வாதிடும் பல ஈழத் தமிழர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று நடந்தது இனப்படுகொலையே எனச் செல்லும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திலும் இனப்படுகொலையே எனச் சொல்லும் தரப்பும் அதை மறுக்கும் தரப்புமிருக்கிறார்கள். நீங்கள் தடம் நேர்காணலில் சொல்லியது போலவே இது பெரும் உரையாடலாகத் தொடரப்பட வேண்டிய விஷயம்.

எனவே இந்த விடயத்தில் உங்களோடு வாதிடுவதை விடுத்து உங்களது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்த எனது சில அய்யப்பாடுகளைக் கீழே கேள்விகளாக எழுதுகின்றேன்:

1. இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’.

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் இன அழித்தொழிப்புக்கான அய்க்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது. ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே அய்.நா. வரையறை சொல்கிறது. இவ்வளவற்றையும் இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தியிருக்கிறது. இவைகுறித்து ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் நூல்களுமுண்டு ( முறிந்த பனை, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – 2011 ஏப்ரல்,  தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 , Palmyra fallen)…

இவ்வாறிருக்க, அய்.நா. வரையறையை மேலோட்டமாக  சுட்டிக்காட்டி நிழ்ந்தது இனப்படுகொலை அல்ல என நீங்கள்   நிறுவ முயல்வது சரிதானா? உண்மையில் உங்களது வாதம் அய்.நா. வரையறைக்கு எதிரானதல்லவா?

2. இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத்தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் சி.ஜி.பொன்னம்பலம்தான் நாடாளுமன்றத்தில் அக்கோரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச்செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான்.

என்று சொல்லியிருக்கிறீர்கள். இது தவறான தகவல்.

இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அல்ல. 1948-ல் இந்தச் சட்ட மசோதாவை, டி.ஸ். சேனநாயக்க தலைமையிலான யூ.ன்.பி. அரசே நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. முதலாவது மசோதாவை இடதுசாரிக்கட்சிகளும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர் தலைமை தாங்கிய தமிழ் காங்கிரசும் எதிர்த்தார்கள். இரண்டாவது தடவை இந்த மசோதா முன்மொழியப்பட்டபோது அப்போது UNP அரசில் அமைச்சராகிவிட்ட ஜி.ஜி.பொன்னம்பலம் மசோதாவை ஆதரித்தார். இத்தோடு ஈழத்தமிழ் அரசியலில் அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பின்னால் அவரால் ஈழத் தமிழர்களிடம் அரசியல் ஆதரவை மீளப்பெறவே முடியவில்லை.

ஜி.ஜி. பொன்னம்பலம் அந்த மசோதாவை ஆதரித்ததால் அவரது கட்சியில் இயங்கிவந்த முன்னணித் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம்,  கு.வன்னியசிங்கம், எம்.வி.நாகநாதன் போன்றவர்கள் உடனடியாகவே கட்சியைவிட்டு வெளியேறி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிற்கு மாற்றாகத் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார்கள். இந்தக் கட்சிதான் அடுத்த சில தசாப்தங்களிற்கு ஈழத் தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரே கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமையில்தான் இன்று தமிழ் மக்களிடம் பெரும்பான்மை அரசியல் ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது.

வரலாறு இப்படியிருக்க ‘பொன்னம்பலமே நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார், இந்திய வம்சாவழித் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்று வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான்’ என்று நீங்கள் எழுத எப்படி நேர்ந்தது?

3. எழுபதுகளில் ஜனதா விமுதிப்பெருமுனே என்னும் இடதுசாரிக் கிளர்சியமைப்பை முழுமையாகவே சிங்கள அரசு கொன்று அழித்தபோது சிங்கள அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தமிழ்க்கட்சிகள். இன்று இன அழித்தொழிப்புக்கு தாங்கள் அப்போதே ஆளானோம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இதுவும் குழப்பமான கூற்றுத்தான். 1970 -ல் இலங்கையில் சுதந்திரக் கட்சி – இடதுசாரிகள் கூட்டாட்சி அமைந்தது. இந்த ஆட்சியிலேயே ஜனதா விமுக்தி பெரமுன அழிக்கப்பட்டது. இந்தியா இராணுவமே நேரடியாக இலங்கையில் இறங்கி இந்த அழிப்பிற்கு இலங்கை அரசிற்கு துணைநின்றது. ஆனால் இந்தக் கூட்டாட்சி அரசு அமைந்ததிலிருந்தே அதைக் கடுமையாகத் தமிழ்க் கட்சிகள் எதிர்த்து நின்றன. தமிழர்களின் முக்கியமான மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின.

ஜே.வி.பி. அழிக்கப்பட்டபோது தமிழ்க்கட்சிகள் இலங்கை அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது? அவ்வாறு ஆணித்தரமாக ஆதரித்த தமிழ் கட்சிகள் எவை?

4. மலையகத் தமிழர் சிங்களர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன?

என்று கேட்கிறீர்கள்.

இலங்கையில் நிகழ்ந்த நாடுதழுவிய எல்லா இன வன்செயல்களின் போதும் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள்தான். அவர்களில் கணிசமானோர் மலையகத்திலிருந்து அகதிகளாக 1970-களில் வன்னிக்குச் சென்று குடியேறினார்கள். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையினராக இந்த மக்கள் இருந்தார்கள். 1983 வன்செயல்களைத் தொடர்ந்து கணிசமானோர் நிரந்தரமாகவே தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்கள். இவ்வாறு நிர்ப்பந்தித்து குடிபெயரச் செய்வது இன அழித்தொழிப்பின் ஒரு கூறில்லையா?

5. இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையென திருப்பித் திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த் தேசியர்களும் மட்டுமே .

-என்கிறீர்கள்.

இன்று இலங்கையில் தமிழ் மக்களிடையே மிகப் பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் பெற்றிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனின் முன்வைப்பில் வடக்கு மாகாணசபையில் சென்ற வருடம் பெப்ரவரி 10ம் தேதி ‘இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை மீதான தீர்மானம்’ ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கும் ஈ.பி.டி.பி. கட்சியும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தது. எனவே “நிகழ்ந்தது இனப்படுகொலை எனச் சொல்வது புலம் பெயர் தமிழரில் ஒருசாராரும் தமிழகத் தமிழ்த் தேசியர்களுமே” என நீங்கள் சொல்வது தவறாகாதா?

6. “சர்வதேசம் இதை இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளாது”  எனத் திரும்பத் திரும்ப நீங்கள் நிறுவ முயல்கிறீர்கள். அதை நானும் மிகத் தெளிவாகவே அறிவேன். ஒரு சர்வதேச ஊடகத்தின் முன்னே நிகழ்ந்தது இனப்படுகொலை என நான் சொல்லும்போதே அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்தே சொல்கிறேன்.

இனப்படுகொலை விசாரணை மட்டுமல்ல, போர்க்குற்ற விசாரணைகள் கூட இலங்கை அரசுமீது நிகழாது என்பதையும் நானறிவேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்தியது போர்க்குற்றமே என நாங்கள் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எந்த நாடும் எந்த சர்வதேச அமைப்பும் அதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அய்.நா. உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் தீவிரமான சாய்வுகளுடனேயே இயங்குகின்றன. அவை ஈராக்கிலும் லிபியாவிலும் பொஸ்னியாவிலும் காட்டும் அக்கறைக்கும் இலங்கை மீதும் மியன்மார் மீதும் காட்டும் பாராமுகத்திற்கும் வலுவான அரசியல் – பொருளியல் காரணிகளுள்ளன.

எனினும் திரும்பத் திரும்ப நீதி கேட்டு ‘நிகழ்ந்தது இனப்படுகொலை’ என நாங்கள் உலகை நோக்கிச் சொல்லவேண்டியவர்களாயிருக்கிறோம். இது நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதி கோரிய குரல் மட்டுமல்ல. இனி இலங்கையில் இன்னொரு இனப்படுகொலை நிகழாதிருப்பதற்கான குரலும் கூட.

ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நான் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்? அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் எவ்வாறு முன்வைக்காமலிருக்க முடியும்? என்னைப் போன்றவர்களது குரல் நீங்கள் சொல்வது போன்று வெறும் உணர்சிவசப்பட்ட குரல் மட்டும்தானா? சென்ற ஆண்டு வட மாகாணசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை தீர்மானம்’ ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் கூட்டுக் குரலில்லையா?

அன்புடன்
– ஷோபாசக்தி
07-08-2016

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியின் விளக்கங்களோடும் கேள்விகளோடும் பூரணமாக உடன்படமுடிகின்றது.

ஜெயமோகன் வெண்முரசு தொடர் எழுதுவதில் முழுமையாக ஈடுபடுவதால், தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்போவதில்லை.  அப்படியே கடந்துவிடுவார்.

ஜெயமோகனின் பல நூல்களை வாசித்து, அவருடைய இந்திய, இந்துத்தவ தளத்தை புரிந்துகொள்ள முடிந்தது. எங்களது போராட்டத்தின் நியாயத்தை அவர் விளங்கிக்கொள்ளவில்லை என்பதற்காக அவருடைய எழுத்துக்களை படிக்காமல் இருக்கப்போவதில்லை.!

----

இலங்கை -கடிதங்கள்

ஜெ

கிரிதரன் நவரத்தினம் எழுதிய இந்தப் பதிவுதான் என் பார்வை

ஆர்.சிவக்குமார்

எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.

*****************************************
விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’

ஜெயமோகன்: “முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

*******************************************

இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.

ஜெயமோகன் தன் அறிவுக்குட்பட்டு, இனப்படுகொலை பற்றிய தனது புரிதலுக்கேற்பப் பதிலை அளித்திருக்கின்றார். ஆனால் இது பற்றிய ஜெயமோகனின் பதிலை இணையத்தில் குறிப்பிட்டுக் கொதித்தவர்களெல்லாரும் , ஜெயமோகனின் முழுப்பதிலையும் குறிப்பிடாமல் , தங்களுக்குச்சார்பான ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு குமுறுகின்றார்கள். ஜெயமோகன் இலங்கையில் நடந்ததை மட்டுமல்ல, காங்கோ, பொலிவியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கையில் நடைபெற்ற தமிழ், ஜேவிபி போராட்டங்கள் பற்றியெல்லாம் இனப்படுகொலைகள அல்ல என்று ஜெயமோகன் கூறியிருக்கின்றார்.

அவற்றைப்பற்றி எதுவுமே குறிப்பிடாமல், இலங்கைத்தமிழர்களுக்கெதிரான அரச படுகொலைகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பலர் குமுறி வெடித்திருக்கின்றார்கள்.

உண்மையிலென்ன செய்திருக்க வேண்டும்?

ஜெயமோகன் கூறிய முழுப்பதிலையும் குறிப்பிட்டு, அந்தப்பதிலின் ஒவ்வொரு வரியும் ஏன் தவறு என்று தம் கருத்தை நிரூபித்து வாதிட்டிருக்க வேண்டும்? அவ்விதம் செய்வதற்குப் பதில், ‘ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்று கூறிவிட்டார்.’ என்று கொதித்தெழுகின்றார்கள்.

இவ்விதம் கொதித்தெழுவதற்குப் பதில் இனப்படுகொலை பற்றிய அறிவினைச் சிறிது அதிகரித்துக்கொண்டு வாதிட்டிருக்கலாம். அவ்விதம் செய்யாமல், அல்லது செய்வதற்குப் போதிய ஆர்வமற்று ‘ஜெயமோகன் ஒழிக’ என்று குரலெழுப்புவது மிகவும் எளிதானது. எனவேதான் அவ்விதம் எதிர்வினையாற்றுகின்றார்கள்.

முதலில் ஜெயமோகன் கூறியவை பற்றிப்பார்ப்பதற்கு முன்னர் இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபை 1948இல் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தைச்சிறிது பார்ப்போம். அது பின்வருமாறு கூறுகின்றது:

“1948: The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG) was adopted by the UN General Assembly on 9 December 1948 and came into effect on 12 January 1951 (Resolution 260 (III)). Article 2:

Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life, calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group; [and] forcibly transferring children of the group to another group. (Article 2 CPPCG)”

இதன் சாரத்தினைப் பின்வருமாறு கூறலாம்:

இத்தீர்மானத்தின்படி தேசிய, இன, மதக் குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் கொலை செய்வது மட்டும் இனப்படுகொலை அல்ல. அக்குழுக்களை , அல்லது அக்குழுக்களின் அங்கத்தவர்களை உடல் ரீதியாக, உள ரீதியாகத் துன்புறுத்துவதும் இனப்படுகொலைதான். அது மட்டுமல்ல அக்குழுக்களை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் எண்ணத்துடன், திட்டமிட்டு அந்தக்குழுக்கள் மத்தியில் பிறப்பு வீதத்தைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதும், குழந்தைகளைப் பலவந்தமாக ஒரு குழுவிலிருந்து இன்னுமொரு குழுவுக்கு மாற்றுவதும், இதற்கான வாழ்வியற் சூழலினை திட்டமிட்டு உருவாக்குவதும். இனப்படுகொலைக்குரிய குற்றங்கள்.

ஐக்கிய நாடுகள் சபை 1946இல் ஏற்றுக்கொண்ட இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம் வருமாறு:

“United Nations General Assembly Resolution 96 (I) (11 December) Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind, …and is contrary to moral law and to the spirit and aims of the United Nations. … The General Assembly, therefore, affirms that genocide is a crime under international law…whether the crime is committed on religious, racial, political or any other grounds…[10]

இதன் சாரத்தைப்பின்வருமாறு கூறலாம்: “:இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்தமாக மனிதக் குழுக்களின் வாழும் உரிமையை மறுப்பதாகும். ுகொலை என்பது தனிப்பட்ட மனிதரொருவரின் வாழும் உரிமையை மறுப்பதாகும்.”

இவ்விரண்டு தீர்மானங்களின்படி மிக எளிதாக ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தடுமாற்றத்தினைபோக்கியிருக்கலாம். ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித் தடுமாறியதற்குக் காரணம் அரசுகள் எல்லாம் கிளர்ச்சி செய்பவர்களைத் தம்முடன் போர் செய்பவர்களாகக் கருதிக்கொல்கின்றார்கள். அவையெல்லாம் இனப்படுகொலைகளா என்று குழம்பியதுதான்.

ஐக்கியநாடுகளின் இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம், குற்றங்கள் பற்றிய தீர்மானங்களின்படி அவையெல்லாம் கூட இனப்படுக்கொலைகள்தாம். எனவே இலங்கையில் நடைபெற்றதும் இனப்படுகொலைதான். ஜெயமோகனின் தர்க்கத்தின்படி அவையெல்லாம் அரசுகளின் கிளர்ச்சிகளுக்கெதிரான போர் நடவடிக்கைகள். அந்த அடிப்படையில்தான் அவர் இலங்கைத்தமிழர்கள் மீதான அரச படுகொலைகளையும் அணுகுகின்றார்.

ஜெயமோகனின் அவையெல்லாம் இனப்படுகொலைகளா? என்னும் வினாவுக்குரிய விடையாக இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை பற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அவையும் இனப்படுகொலைகளே.

இவ்விதம் தர்க்கபூர்வமாக ஜெயமோகன் கூறியதற்கெதிராக வாதிடுவதற்குப்பதில், அவர் கூறியதில் இலங்கைத்தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை மட்டும் பிரித்தெடுத்தும் கொண்டு, ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உணர்ச்சியில் குமுறியிருப்பதைப்பார்த்தால் ஒன்றினைக் கூறத்தோன்றுகிறது. தர்க்கம் செய்யும்போது ஆத்திரப்படாதீர்கள். கூறியவற்றை உங்களுக்குச் சார்ப்பாகத்திரிபு படுத்திக்கருத்துகளை வெளியிடாதீர்கள். முறையாக வரிக்கு வரி உங்கள் பக்க நியாயங்களை எடுத்துரையுங்கள். தர்க்கத்தில் உங்கள் பக்க நியாயங்களை வெளிப்படுத்துங்கள்.

இனப்படுகொலை பற்றிய பலரின் வரைவிலக்கணங்களைப் பின்வரும் இணையத்தளத்தில் வாசியுங்கள். அது பற்றிய புரிந்துணர்வினை அதிகரிக்க அது உதவும்.

https://en.wikipedia.org/wiki/Genocide_definitions

================================

அன்புள்ள ஜெ,

வணக்கம்.  ஈழம், இன்ப்படுகொலையா, போர் குற்றமா என்ற
விவாதத்தில் ஒரு முக்கிய விசியம் பேசப்படவில்லை. விடுதலை
புலிகளின் treasury உலகெங்கும் (முக்கியமாக அய்ரோப்பியா,
கனடா, ஆஸ்த்ரேலியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்)
பல நூறு பிணாமிகள். முகவர்கள் வசம் இன்றும் சிக்கியுள்ளன.
போர் நடக்கும் போது, தினமும் பல லச்சம் / கோடி ரூபாய் செலவு
ஆகியிருக்கும். ஆயுதம், மருந்து, டீசல், தளவாடங்கள் வாங்க, கடத்த
உலகெங்கும் மிக பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைய புலிகள்
நிர்மாணித்து, shell companies, off shore accounts, front companies மூலம்
நடத்தி வந்ததை அறிவீர்கள். போர் முடிந்த இந்த 7 ஆண்டுகளில்
குமரன் பத்தமாநபனை மட்டுமே பிடிப்பட்டார். அவர் வசம் இருந்த
நிதி ஒரு பகுதி தான். இன்னும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான
நிதிகள் உலகெங்கும் சிதறி கிடக்கின்றன. இதை வைத்து கொண்டு,
வாழ்க்கையை அனுபவிக்கும் பினாமிகள் இன்று வரை கள்ள மவுனம்
காக்கின்றனர். ஈழத்தில் இன்று வறுமையில், வேலையின்மையில் வாடும்
மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி இது. நியாயமாக அவர்களின்
வாழ்வாதாரத்திற்க்காக,  மறுவாழ்விற்க்காக அய்.நா அல்லது செஞ்சிலுவை
சங்கம் மூலம் செலவு செய்யப்பட வேண்டிய நிதி அது. புலிகளின்
பினாமிகளை நோக்கி கேட்க்கப்ட வேண்டிய கேள்விகள் இவை.
ஆனால் ஈழ ஆதரவு உணர்ச்சி போராளிகள் யாரும் இந்த மிக முக்கிய,
தேவையான  விசியத்தை பேசுவதே இல்லை. பல  வருடங்களாக
நான் இணையத்தில் பல ‘போராளிகளிடம்’ கேட்டு சலித்துவிட்டேன்.
பழசை மட்டும் தான் பேசுகிறார்கள். ராஜபக்சேவை தண்டிபதில்
காட்டும் ஆவேசத்தை இதில் காட்டுவதில்லை. இதை பற்றியும் எழுதுங்கள்.
 
அன்புடன்
K.R.அதியமான்
சென்னை – 96

==========================================

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது பதில் கட்டுரைக்கு நன்றி. உங்களது பதிலில் எனக்குள்ள சில கேள்விகளையும், விளக்கங்களையும் முன்வைக்கவிரும்புகிறேன்.

  1. இனஅழித்தொழிப்பு 80களுக்கு முன்பும், 2009க்கு பிறகும் இலங்கையில் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். 1956ல் பண்டாரநாயகே பதவிக்கு வந்த உடன், சிங்களா ஒன்லி என்கிற சட்டம் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுகிறது. அதற்க்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து, அதற்கு பிறகு நடந்த கல்ஓயா கலவரத்தில் 150 தமிழர்கள் வெட்டிக்கொல்லபடுகின்றனர். பிறகு தொடர்ந்து 1958ல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைதான் இரு சமூகங்களுக்கும் இடையேயான நிரந்தர பிளவை ஏற்படுத்துகிறது. 1958 மே 25ம்தேதி பொலன்னறுவை பண்ணையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட எழுபது தமிழர்கள் கரும்புதோட்டத்தில் வெட்டுகொல்லப்பட்டனர். 1958ம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பலியானார்கள்.  பிற்பாடும் தொடர்ந்து 74, 77, 78 என பல படுகொலைகள் இனரீதியாக நடந்தே வந்திருக்கிறது.

  2. இனஅழித்தொழிப்பு என்று ஏற்றுகொள்ளபடவேண்டும் என்றால் அது தொடர்ந்து நடைப்பெற்றிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். ரூவாண்டாவில் 1994ல் டுட்சி இனத்துக்கு எதிராக மிகப்பெரிய இனஅழித்தொழிப்பு நடைப்பெற்றது. உது இனத்தை சேர்ந்த மிதவாத தலைவர்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு அங்கு அதே மாதிரியான படுகொலைகள் நடக்கவில்லை. எனினும் 94ல் நடைபெற்றது இனபடுகொலை என்று சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  3. மலையக தமிழர்கள், அடிப்படையில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். ஈழத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடியினர். ஒரே மொழி பேசினாலும் இவையிரண்டும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள். எனவே மலையக தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெறவில்லை என்பதால் அது இனபடுகொலையல்ல என்று எப்படி கூற முடியும்?  மேலும், 2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்து, 1970களில் அகதிகளாக வடக்குபகுதிகளில் குடியேறிய மலையக தமிழர்களும் இந்த போரில் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என்பதே. 2009ல் கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மலையக தமிழர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

  4. ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்முஸ்லிம்கள் என இந்த மூன்று பிரிவினரிடையே 1915 முதலே பல கருத்துவேறுபாடுகளும் உள்குத்துக்களும் நடந்தேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில காட்டிகொடுப்புகளும், பலிகளும், பின்பு புலிகள் 1990 அக்டோபரில் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியதும் நடந்தது. பிறகு, 2002ல் புலிகள் அமைப்பு, முஸ்லிம்களிடம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டனர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கிமிடம், பிரபாகரன், வட-கிழக்கு பகுதி தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியதே என்று வாக்குறுதி கொடுத்ததும் நடந்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் மலையக தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் புலிகளிடம் நெருங்கி வந்ததும், தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று பிரபாகரன் சொன்னதும் நடந்தது.

  5. பொதுமக்களை, போர்முனைக்கு கொண்டு சென்றது புலிகளின் தவறு. ஆனால், ஒரு பகுதியை, யுத்தத்திலிருந்து பாதுகாக்கபட்ட பகுதி என்று அரசுதான் அறிவிக்கிறது. அதில் மக்களை குழும செய்கிறது. பிறகு அந்த பாதுகாப்பு வளையத்தில், குண்டு மழைபொழிந்து மக்களை கொல்கிறது. 2009ம் வருடம் ஜனவரி மாதம் 21ம் தேதி, சுதந்திரபுரம் என்ற இடத்தில் இதே போல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கிறது அரசு. அதை நம்பி ஐ.நாவின் ஊழியர்கள் (11வது கான்வாய்) உணவு பொருட்களை எடுத்து செல்கிறார்கள். ராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற சில மணித்துளிகளிலேயே குண்டு வீசபடுகிறது. குறுந்தகவல்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்த சொல்லி ஐ.நா ஊழியர்கள் கதறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபடுகிறார்கள். அந்த ஊழியர்கள் குண்டுவீச்சை நிறுத்தும்படி கோரிய குறுந்தகவல்கள் உட்பட இவையெல்லாம் மிக விரிவாகவே சார்லஸ் பேட்ரி (ஐ.நா உள்ளக ஆய்வு குழு) அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்லஸ் பேட்ரி அறிக்கையை வெளியிடுவதற்க்கே, ஐ.நா மிகவும் தயங்கியது. பிறகு முக்கியமான சில இடங்களை கறுப்பு மை கொண்டு அழித்துவிட்டு, வெளியிட்டது. இணையத்திலும் கிடைக்கிறது.  NFZ1, NFZ2 NFZ3 என அனைத்து பாதுகாப்பு வளையங்களிலும் இதே ரீதியான படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்முறை என பல ஆதாரங்கள் இது புலிகளுக்கு மட்டும் எதிரான போர் அல்ல என்பதை நிருபிக்கிறது.

  6. இலங்கையில் நடந்தது போர்குற்றம் என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் ஐ.நா அமைத்த நிபுணர் குழு ஏற்கனவே அறிக்கை சமர்பித்து விட்டது. எனினும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. போரின்போதே ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தும் பான் கீ மூன் செவிசாய்க்கவில்லை. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்று மறுத்து விட்டார். 2009 ஜூனில், ஐ.நாவின் சட்டகுழு ஆர்டிக்கிள் 99படி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்தது. அதையும் பான் கீ மூன் ஏற்கவில்லை.

    இந்த சூழலில், இனபடுகொலை என்று குரல் கொடுப்பதால்தான், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும்? போர்குற்றம் என்றால் வெறும் அம்புகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, எய்தவர்கள் தப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதியே இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல, இதன்பின்னே உள்ளவர்கள், இதற்கு உதவியவர்கள் என அனைவரும் தண்டிக்கபடவேண்டும் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இனபடுகொலை என்கிற வாதம், முன்வைக்கபடுகிறது. இனபடுகொலை என்று சொல்பவர்களின் நோக்கத்தை ஆராய்வதை விட தரவுகளின் அடிப்படையில் இது இனபடுகொலையா என்று ஆராய்வதுதானே சரியாக இருக்க முடியும்?

    கண்ணுக்கு முன்னே குழந்தைகள் வெடித்து சிதறியதையும், வாழ்க்கைதுணைகள் செத்து மடிந்ததையும், தாய்தந்தையர் கொல்லப்பட்டதையும் பார்த்து அலறி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குபடி கோரும் அந்த தமிழர்களின் குரல் வரலாற்றில் இப்படி மறக்கடிக்கப்படவேண்டியதுதானா? நடந்த கொடுமைகளுக்கு நீதி வழங்காமல், எப்படி அவர்கள் தமது கடந்தகால இழப்புகளை மறந்து ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ முடியும்?

    இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்கிறார்கள். மிகமோசமாக நாம்தான் அவர்களை கைவிட்டுள்ளோம் என்கிற உங்களது வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். எங்களாலான உதவிகளை, இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர் குழந்தைகளின் கல்விக்காக செய்துவருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறேன்.

அன்புடன்
செந்தில்குமார்
 
  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக ஒரு இந்திய எழுத்தாளர் தமிழரது இனப்படுகொலை பற்றி எழுதியது பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. பாவம் நம்மவர். நம்பி நம்பியே ஏமாறுகிறார்கள். அதிலும் தாமே வளர்த்துவிட்டு குத்து வாங்குகிறார்கள். இவர் போன்றவர்கள் சார்ந்து ஏற்கனவே தெரிந்தும் அனுபவமும் உள்ளவர்களை இது ஒன்றும் செய்யாது. பாவம் அம்பை நாம் நொந்தென்ன பயன்??
ஆகக்குறைந்தது தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்யும் நிலை இருந்திருந்தாலாவது நாம் சிலவற்றை எதிர்பார்க்கலாம்....

அந்த அம்பு நமக்கும் உதவியிருக்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டியது தான். இத்தனை வருடங்களுக்கு பின்பும் இனப்படுகொலை பற்றி இந்த வாரம் அதிகம் பேசிக்கொள்கிறார்களே.....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணியை ஆதரிக்கும் நாங்கள் எப்படித் தேசியம் கதைக்கலாம் என சொல்லுகின்ற அதே ஆட்கள் தான் இவர்களைப் போன்றவர்களது நூல்களை வாசித்துக் கொண்டு தேசியம் கதைக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 9 August 2016 at 3:16 PM, ரதி said:

இலங்கையணியை ஆதரிக்கும் நாங்கள் எப்படித் தேசியம் கதைக்கலாம் என சொல்லுகின்ற அதே ஆட்கள் தான் இவர்களைப் போன்றவர்களது நூல்களை வாசித்துக் கொண்டு தேசியம் கதைக்கினம்

நூல்களை வாசித்தால் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமல்ல.

இலங்கை அணி எதிரி நாட்டின் அணி. இந்தத் தெளிவு இருந்தால் போதும்.

....

ஜெயமோகன் போன்ற ஆயிரம் விச வேர்கள்… : சபா நாவலன்

jeyamoham‘தடம்’ இதழில் ஜெயமோகன் வழங்கிய நேர்காணலில் இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் யுத்தம் இனப்படுகொலை அல்ல என்று கூறியிருந்தார். பின்னதாக அவர் தனது இணையப் பக்கத்தில் தனது நேர்காணலை நியாயப்படுத்துவதற்கு ஒரு நீண்ட பதிலை வழங்கியிருந்தார். ஜெயமோகனின் இந்த இரண்டு ஆக்கங்களும் முக நூலில் ஆங்காங்கு பதியப்பட்ட கண்டனங்களோடு நின்று போய்விட்டது. ஜெயமோகன் போன்ற பெறுமானங்களற்ற வணிகர்களுக்கெல்லாம் பதில் தர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் அவர் போன்ற எதிர்காலத்தில் முளைவிடத் துணியும் அப்பட்டமான பிழைப்புவாதிகளை எதிர்கொள்வதற்காகவேனும் கருத்துக்கள் பதியப்படவேண்டும்.

ஜெயமோகன் என்ற எழுத்தாளரையும் அவரது அருவருக்கத்தக்க இலக்கிய முகத்தையும் பொதுவாகவே ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆக, அவரது முன்னைய தொடர்ச்சியை மீண்டும் இங்கு விலாவாரியாக விளக்கவேண்டிய தேவையில்லை. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்ற தலையங்கத்தில் ஜெயமோகன் வழங்கும் விளக்கங்கள் உலகம் முழுவதும் வாழுகின்ற ஒடுக்கப்பட மக்கள் மீதான வெளிப்படையான தாக்குதல். அவரது ஆதாரங்கள் எந்த அடிப்படையுமற்ற பொய்கள்.

இந்தியாவின் உட்புறத்திலேயே நடைபெறும் எதிர்ப்புப் போராடங்கள் அனைத்தையும் தான் சார்ந்த அதிகாரவர்க்கத்தின் பக்கத்திலிருந்து கொச்சைப் படுத்துவதில் ஆரம்பித்தே ஜெயமோகன் தனது கருத்தை முன்வைக்கிறார். அவரது நேர்காணலும், பின்னைய பதிவும், ஈழத்தில் சுய நிர்ணைய உரிமை கோரி பல பரிமாணங்கள் ஊடாக நகர்ந்துசெல்லும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவை மட்டுமல்ல மாறாக, உலகின் அதிராகவர்க்கத்தின் ஓலம் போன்றே அது ஒலிக்கிறது.

இது போன்ற பதிவுகள் ஜெயமோகனிடமிருந்து மட்டுமன்றி, ‘இடதுசாரி; எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட டயான் ஜெயதிலக, ‘முன்னை நாள்’ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்களிடமிருந்தும் இணைய வெளிகளுக்குள் உள் நுளைந்திருக்கின்றன.

இன்று சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அரசியலை பிழைப்பு வாதிகள் கையகப்படுத்தியிருக்கிறார்கள். அதே போன்று இந்திய பார்ப்பனீய அதிகாரவர்க்கத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்பது அடிப்படைவாதிகள் பிடியில் சிக்குண்டுள்ளது.

ஜெயமோகனைப் பொறுத்தவரை போராட்டங்களின் தவறுகளைப் பயன்படுத்தி அதன் நியாயத்தையே நிராகரிக்கும் உக்தியைத் தான் சார்ந்த அதிகாரவர்க்கத்தின் சார்பிலிருந்து கையாள்கிறார்.

“இந்தியாவில் நடந்த அனைத்து மதக்கலவரங்களிலும் இஸ்லாமியரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதயோ, கணிசமான மதக்கலவரங்கள் இஸ்லாமியர் தங்கள் மத உணர்வுகள் புண்பட்டதாகச் சொல்லி ஆரம்பித்தவை என்பதையோ இவர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள். மணிப்பூரில் ஆயுதந்தாங்கிய ராணுவங்களை அரசு எதிர்ப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதையோ ,அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தாக்குதல்களை இந்திய ராணுவத்தின்மேல் தொடுத்திருக்கிறார்கள் என்பதையோ பேசமாட்டார்கள்.” – என்பது ஜெயமோகனின் வாதம்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை சாரியானது போன்ற தோற்றப்பாட்டைத் தந்துவிடும்.

இஸ்லாமியர்களின் மீதான உளவியல் தாக்குதலை இந்தியப் பார்ப்பனீய அதிகாரவர்க்கம் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. இதன் மறுபக்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் பயனடையும் அதிகாரவர்க்கம் வன்முறைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தூண்டிவிடுகிறது. அதனைச் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொளும் இந்திய ஆளும்வர்க்கம் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களைத் தொடுக்கிறது.

இதற்குச் சமாந்தரமான பொறிமுறையே ஈழத்தில் தேசிய இன ஒடுக்குமுறையிலும் கையாளப்படுகிறது. அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதம், பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அனகாரிக தர்மபால காலத்தில் உச்சமடைந்தது எனலாம்.

அதனைப் பயன்படுத்திக்கொண்ட தொடர்ச்சியான சிங்கள பௌத்த ஆளும் வர்க்கம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான உளவியல் தாக்குதலை ஆரம்பித்தது. இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு, அங்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிங்கள பௌத்தர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒரு ஓரமாக வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்ற முழக்கத்துடன் முன்னிலைக்கு வந்த அனகாரிக தர்மபால இன்று சிங்களை பௌத்தத்தின் தந்தையாக இலங்கை அரசால் போற்றப்படுகிறார்.

1983 ஆம் ஆண்டு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்கள பௌத்தர் ஒருவர் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே அந்த ஆண்டு தமிழர்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்டதற்குக் காரணம் என நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். இவற்றின் தொடர்ச்சிக்கு ஆயிரம் உதாரணங்களை இன்றுவரைக்கும் காணலாம்.

ஜெயவர்தனவின் நோக்கம், சிங்கள பௌத்தர்களின் சிந்தனையைத் திசைமாற்றி அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொள்வதே. இதற்கு எதிரான அரசியல் ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்துச் சிங்கள மக்களையும் அழிக்கவேண்டும் என்ற உணர்சிகர முழக்கங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட, ஜெ.ஆர் சொல்வது சரி என்ற போலியான விம்பம் சிங்கள மக்கள் மத்தியில் தோறம்பெற ஜெயவர்தனவின் பலம் அதிகரித்தது.

இராணுவ ஒடுக்குமுறை பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களின் துணையுடன் தொடர்ந்தது. இத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆயுதம் தாங்கிய தற்காப்பு யுத்தம் ஒன்றைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதுவே சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமான போராட்டம்.

இப் போராட்டத்தின் அரசியல் தவறுகள் சிங்கள பௌத்தத்திற்கு வலுச் சேர்ப்பதாக மாறியதை அப் போராட்டத்தின் நியாயமே தவறு என்கிற கோணத்தில் ஜெயமோகன் கூறுவதற்கு அவர் சார்ந்த அதிகாரவர்கமே காரணம்.

இவ்வாறு போராட்டங்களையும் அதற்கான நியாயங்களையும் அவற்றின் அரசியல் தவறுகளை முன்வைத்து நிராகரிக்கும் ஜெயமோகன், வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இனப்படுகொலைக்கான வரையறையிலிருந்து ஆரம்பிக்கிறார்.

வரைமுறை பின்வருமாறு கூறுகிறது: மனோரீதியான அல்லது உடல்ரீதியான தீங்கு விளைவித்தல், …..(Genocide is defined in Article 2 of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (1948) as “any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical,racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm tomembers of the group; deliberately inflicting on the group conditions of life calculated to bring about itsphysical destruction in whole or in part1; imposing measures intended to prevent births within the groupforcibly transferring children of the group to another group.”

ஜெயமோகன் முட்டாள் தனமாக இவற்றைக் கூறவில்லை. உள் நோக்கம் பொதிந்த அப்பட்டமான பொய்களையும் புனைவுகளையும் முன்வைத்து இந்த நூற்றாண்டின் அவலம் மிக்க இனப்படுகொலை ஒன்றையே மூடிமறைக்கும் முயற்சியை மிகவும் திட்டமிட்ட வகையில் தந்திரமாகச் செய்து முடிக்கிறார். ஐ.நாவின் வரையறையின் அடிப்படையில் கணிப்பிட்டால் கூட கடந்த அறுபது வருடங்களாக இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.

வன்னிப் படுகொலைகளின் போது கூட சிங்கள பௌத்த விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என்ற சுலோகம் இராணுவத்தினருக்காக வெளியிடப்பட்ட பிரச்சாரப் பாடல்களில் கூட முன்வைக்கப்பட்டது. 90 வீத சிங்களவர்களைக் கொண்ட இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் கொலைவெறிக்கு விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அப்பாவித் தமிழர்களும் சாரிசாரியாகக் கொல்லபட்டார்கள். இலங்கையின் அதிகாரவர்க்கம் அந்த நாட்டைச் சிங்கள பௌத்த நாடு என்கிறது. தமிழர்கள் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவை இயல்பானவை அல்ல. திட்டமிட்ட இனவழிப்பிற்கான ஆதாரங்கள். கல்லோயாவில் ஆரம்பித்த இக் குடியேற்றங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

மைத்திரி – ரனில் அரசு தோன்றிய பிறகு தமிழர் நிலங்களில் பௌத்த கோவில்கள் திடீரென முளைவிடுகின்றன. தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாகவுள்ள ஒரு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் முழுமையாக வாழும் பகுதிகளில் இப் பௌத்த விகாரைகளின் தோற்றத்தோடு குடியேறும் பௌத்த துறவிகளுக்கு அரச படைகளின் ஆதரவு தாராளமாகக் கிடைக்கிறது. பௌத்ததிற்குத் தமிழர்கள் எதிரானவர்கள் அல்ல. சிங்கள பௌத்த நாடு என வரையறுக்கப்பட்டு அறுபது வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் இனப்படுகொலைகளின் இடையே புதிய அச்சுறுத்தல்களாகவே இவை கருதப்படும்.

1956 இல் ஆட்சிக்குவந்த பண்டாரநாயக்க அரசிலிருந்து இன்றுவரை தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான முழக்கங்கள் பௌதீக அழிப்பை நோக்கமாகக் கொண்டே முன்வைக்கபடுகின்றன. 1958 ஆம் ஆண்டு அரச ஆதரவு சிங்களக் காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1977. 1983 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த அரசுகளின் ஆதரவுடன் சிங்கள குண்டர்கள் தமிழர்கள் மீது இனப்படுகொலையக் கட்டவிழ்த்துவிட்டனர். 1981 ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சர் காமினி திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

சிங்கள பௌத்த அதிராகவர்க்கத்தின் திட்டமிட்ட இத் தாக்குதல்கள் இனப்படுகொலைகளே என்பது ஐ.நாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டதே.

ஜெயமோகன் தனது கருத்தை நிறுவுவதற்குத் துணைக்கழைக்கும் இந்தியாவும், மேற்கு ஏகபோக நாடுகளும் ஒரு புறத்தில் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டன. மறுபுறத்தில் தமது நலன்களை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசிற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களையும், விடுதலை இயக்கங்களையும் கையாண்டன. பொதுவாக ஆயுதபலம் மிக்க அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கி அவற்றைக் கையாள ஆரம்பித்தன. தேசிய இன விடுதலைக்கான போராட்டம் இனவாதம் கலந்த ஒன்றாக மாற்றமடைய அதனைச் சுற்றிப் பிழைப்புவாதிகள் குடிகொள்ள ஆரம்பித்தனர்.

ஜெயமோகன் இப் பிழைப்புவாதிகளை முன்னிறுத்தி இனப்படுகொலையையும், ஆறாக வடிந்த இரத்ததையும் புனிதப்படுத்தப் முனைகிறார்.

ஈழப் போராட்டத்தின் அரசியல் தவறுகளும், அதனைச் சுற்றி தோற்றம் பெற்ற வியாபாரிகளும், இன்னும் ஆயிரம் ஜெயமோகன் போன்ற விச வேர்களை எமது சமூகத்தில் ஆழத்தில் பரவ அனுமதிக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. இன்று சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு ஜெயமோகன் போன்றவர்களை மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை எம் முன்னே உள்ளது

http://inioru.com/the-poisoned-roots-such-as-jeyamohan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.