Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

Featured Replies

புலிகள் என் மெளனமாக இருக்கிறார்கள்?????? அரசாங்கம் சொல்வதை தவிர எமக்கு வேர எந்த செய்தியும் கிடைக்கிதில்லையே?

  • Replies 145
  • Views 21.5k
  • Created
  • Last Reply

அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை இல்லாது செய்து முழுஅளவிலான போருக்கு புலிகளைத் தூண்டுகிறது எண்டு யாரும் வந்து இனிச் சொல்ல மாட்டார்கள்.

வாகரையை விட்டுக்கொடுத்ததுடன் அந்த அத்தியாயம் முடிந்து விட்டது.

விரைவில் மௌனம் கலையும். இளந்திரையன் ஊடகங்ளிடம் மீண்டும் வருவார். வந்து வெற்றிகளிற்கு விளக்கம் கொடுப்பார்.

Edited by மின்னல்

அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை இல்லாது செய்து முழுஅளவிலான போருக்கு புலிகளைத் தூண்டுகிறது எண்டு யாரும் வந்து இனிச் சொல்ல மாட்டார்கள்.

வாகரையை விட்டுக்கொடுத்ததுடன் அந்த அத்தியாயம் முடிந்து விட்டது.

விரைவில் மௌனம் கலையும். இளந்திரையன் ஊடகங்ளிடம் மீண்டும் வருவார். வந்து வெற்றிகளிற்கு விளக்கம் கொடுப்பார்.

இலங்கைப்படைகளின் ஒரு தாக்குதலுக்கு பிறகு நாங்கள் இதைத்தான் எதிர் பர்த்தோம் அதர்க்கு பதில் அமைதியக இருக்குது

புலிகள் என் மெளனமாக இருக்கிறார்கள்?????? அரசாங்கம் சொல்வதை தவிர எமக்கு வேர எந்த செய்தியும் கிடைக்கிதில்லையே?

புலிகளின் ஊடகம் என்று சொல்லும் ரி.ரி.ன்\ஐ.பி.சி\புலிகளின்குரல் இவைய்கூட செய்திகலை இருட்டடிப்பு செய்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஊடகம் என்று சொல்லும் ரி.ரி.ன்\ஐ.பி.சி\புலிகளின்குரல் இவைய்கூட செய்திகலை இருட்டடிப்பு செய்கின்றன

இராணுவ முக்கியத்துவம்மிக்க செய்திகளை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. எங்கே பின்வாங்கினோம் என்று சொன்னால் சிங்களப்படைகள் அங்கு தாக்குதல் நடாத்த சாத்தியம் உண்டல்லவா..

செய்திப் பஞ்சம்தான் சிலருக்கு முக்கியமாகிவிட்டது.. இவ்வார நிலவரத்தில் ஏதாவது விளக்கங்கள் கிடைக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முக்கியத்துவம்மிக்க செய்திகளை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. எங்கே பின்வாங்கினோம் என்று சொன்னால் சிங்களப்படைகள் அங்கு தாக்குதல் நடாத்த சாத்தியம் உண்டல்லவா..

செய்திப் பஞ்சம்தான் சிலருக்கு முக்கியமாகிவிட்டது.. இவ்வார நிலவரத்தில் ஏதாவது விளக்கங்கள் கிடைக்கும்..

பாவம் மக்கள்...இப்படியும் இந்தக்காலத்திலும் சொல்ல கேட்க வேண்டிய நிற்பந்தம். எங்க பின்வாங்கினது என்று அமெரிக்க செய்மதிகள் காட்டாதாக்கும்.. லேசர் கைட் ஏவுகணை அடிக்கிறவனுக்கு...எங்க பதுங்கினது என்று காட்ட யாரும் உதவாயினமாக்கும்...! அவன் பின்னால போய் வெருகல் பகுதியில கொழுத்திட்டுப் போன வாகனங்களைக் கைப்பற்றி படம் காட்டுறான்.. நாங்கள் மக்களுக்கு 40 வருசத்துக்கும் முன்னால அளந்த கதைகளையே அளக்கிறம்..!

மூடிமறைக்கப்படுகிறது என்பதை வெளில சொல்லுங்கோ. மக்களின் பாதுகாப்பு வேண்டிப் பின்வாங்கினம். என்றதை வெளிப்படையாச் சொல்லுறது. அதைச் சொல்லுறதும் இராணுவ முக்கியமோ..??! மெளனமா இருக்கிறதுதான் அவையை நம்பிய மக்களை நட்டாற்றில விட்டது போல இருக்கு..!

நேற்று முந்தினம் எதுவும் இழக்க என்றவரைக் காணேல்ல...என்னாச்சு ஆளுக்கு...! :D

அங்கால கண்காணிப்புக் குழுவுக்கு எனி கெலிகொப்டர் இல்லை என்றாச்சு. வேணும் என்றால் மாட்டுவண்டில போய் புலியைப் பார்..நமக்கு வேற வேலை இருக்கு என்று சிங்களவன் கொலரை இழுத்துவிட்டிட்டு அலரிமாளிகையில பொங்கல் பொங்கிட்டு இருக்கிறான்..! வெற்றிப் பொங்கல்...??? :lol::D

Edited by nedukkalapoovan

இராணுவ முக்கியத்துவம்மிக்க செய்திகளை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. எங்கே பின்வாங்கினோம் என்று சொன்னால் சிங்களப்படைகள் அங்கு தாக்குதல் நடாத்த சாத்தியம் உண்டல்லவா..

செய்திப் பஞ்சம்தான் சிலருக்கு முக்கியமாகிவிட்டது.. இவ்வார நிலவரத்தில் ஏதாவது விளக்கங்கள் கிடைக்கும்..

இராணுவ இரகசியம் ஒன்றும் வேண்டம் நடப்பதைய் சொன்னால் காணும்

பாவம் மக்கள்...இப்படியும் இந்தக்காலத்திலும் சொல்ல கேட்க வேண்டிய நிற்பந்தம். எங்க பின்வாங்கினது என்று அமெரிக்க செய்மதிகள் காட்டாதாக்கும்.. லேசர் கைட் ஏவுகணை அடிக்கிறவனுக்கு...எங்க பதுங்கினது என்று காட்ட யாரும் உதவாயினமாக்கும்...! அவன் பின்னால போய் வெருகல் பகுதியில கொழுத்திட்டுப் போன வாகனங்களைக் கைப்பற்றி படம் காட்டுறான்.. நாங்கள் மக்களுக்கு 40 வருசத்துக்கும் முன்னால அளந்த கதைகளையே அளக்கிறம்..!

மூடிமறைக்கப்படுகிறது என்பதை வெளில சொல்லுங்கோ. மக்களின் பாதுகாப்பு வேண்டிப் பின்வாங்கினம். என்றதை வெளிப்படையாச் சொல்லுறது. அதைச் சொல்லுறதும் இராணுவ முக்கியமோ..??! மெளனமா இருக்கிறதுதான் அவையை நம்பிய மக்களை நட்டாற்றில விட்டது போல இருக்கு..!

நேற்று முந்தினம் எதுவும் இழக்க என்றவரைக் காணேல்ல...என்னாச்சு ஆளுக்கு...! :D

அங்கால கண்காணிப்புக் குழுவுக்கு எனி கெலிகொப்டர் இல்லை என்றாச்சு. வேணும் என்றால் மாட்டுவண்டில போய் புலியைப் பார்..நமக்கு வேற வேலை இருக்கு என்று சிங்களவன் கொலரை இழுத்துவிட்டிட்டு அலரிமாளிகையில பொங்கல் பொங்கிட்டு இருக்கிறான்..! வெற்றிப் பொங்கல்...??? :lol::D

இதுதான் உன்மை

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசங்களைப் பிடித்ததனால் புலிகளின் முதிகெலும்பு முறிந்துவிட்டது என்று சிங்கள இராணுவம் மகிழவில்லை. புலிகளின் ஆயுத ஆளணி இழப்புக்கள் பெரிதாக இல்லை. எனவே கிழக்கில் இராணுவம் நிம்மதியாக இருக்கப்போவதில்லை. அத்தோடு பிற இடங்களிலும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை. ஆயிரக்கணக்காக இராணுவம் கொல்லப்படும்போது, மயிர்க்கூச்செறிய வந்து உங்கள் புளுகுகளை அவிழ்த்துவிடத்தான் போகின்றீர்கள்.

இதை பருங்கள்

பல நோக்கங்களைக் கொண்ட கிழக்கு படை நடவடிக்கை

-விதுரன்-

நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப்போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது.

கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது.

கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக்கத்தை வலுப்படுத்த முடியுமென்பதும் இனவாதிகளின் திட்டமாகும். இதற்காகவே வடக்கு- கிழக்கை தனித்தனியாகப் பிரித்தவுடன் கிழக்கில் தமிழரின் பலத்தை குறைக்கும் நடவடிக்கையில் அரசு மிகத் தீவிரம் காட்டுகிறது.

கிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாது செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இஷ்டப்படி செயற்பட முடியுமென்பதும் அரசின் திட்டமாகும். அத்துடன், புலிகளை இராணுவ ரீதியில் கிழக்கில் பலமிழக்கச் செய்த பின் அங்கு அரசியல் காய்நகர்த்தல்களும் ஆரம்பமாகியுள்ளன.

திருகோணமலையிலுள்ள பாரிய எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு வழங்கிய அரசு தற்போது திருமலை சம்பூரில் அனல் மின் நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் தொடங்கவுள்ளது. புத்தளம் நுரைச்சோலை பகுதியில் இவ்வாறானதொரு அனல் மின் நிலையத்தை அமைக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டும் இன்று வரை கடும் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் மூதூர் கிழக்கை கைப்பற்றிய அரசு, சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. மூதூர் கிழக்கை படையினர் கைப்பற்றும் வரை இவ்வாறானதொரு திட்டம் பற்றியே சிந்திக்கப்படாத நிலையில் அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவசர அவசரமாக அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சுவீகரித்துச் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளன.

இதற்கு இந்தியாவும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் இலங்கையுடன் இந்த அனல் மின் நிலையம் தொடர்பாக ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்துவிரட்டியடிக்க

  • கருத்துக்கள உறவுகள்

"nedkalapovaan wrote"

ஜஙரழவந யெஅநஸ்ரீ'நெனரமமயடயிழழஎயn' னயவநஸ்ரீ'துயn 21 2007இ 09:05 யுஆ' pழளவஸ்ரீ'251868'ஸ

பாவம் மக்கள்...இப்படியும் இந்தக்காலத்திலும் சொல்ல கேட்க வேண்டிய நிற்பந்தம். எங்க பின்வாங்கினது என்று அமெரிக்க செய்மதிகள் காட்டாதாக்கும்.. லேசர் கைட் ஏவுகணை அடிக்கிறவனுக்கு...எங்க பதுங்கினது என்று காட்ட யாரும் உதவாயினமாக்கும்...! அவன் பின்னால போய் வெருகல் பகுதியில கொழுத்திட்டுப் போன வாகனங்களைக் கைப்பற்றி படம் காட்டுறான்.. நாங்கள் மக்களுக்கு 40 வருசத்துக்கும் முன்னால அளந்த கதைகளையே அளக்கிறம்..!

மூடிமறைக்கப்படுகிறது என்பதை வெளில சொல்லுங்கோ. மக்களின் பாதுகாப்பு வேண்டிப் பின்வாங்கினம். என்றதை வெளிப்படையாச் சொல்லுறது. அதைச் சொல்லுறதும் இராணுவ முக்கியமோ..??! மெளனமா இருக்கிறதுதான் அவையை நம்பிய மக்களை நட்டாற்றில விட்டது போல இருக்கு..!

கருத்துக்களம் திறந்திருக்கின்றது என்பதற்காக கண்டபடி எழுதுவதால் ஏதும் லாபம் உமக்குண்டோ???

இது ஒரு தமிழ்களம் என்பதால்......

ஒரு தமிழனாக உமது கருத்தை வைக்கலாம்......

தமிழனின் எதிரியாக இருந்து கொண்டு கருத்துக்களை வைக்கலாம்.....

சிலர் துரோகியக இருந்து கொண்டு அது ஏதோ பெருமைக்குரிய விடயமா (எண்ணிபார்க்கும் அறிவே உள்ளவர்கள்) நினைத்து கருத்தை வைக்கிறார்கள்.... அவர்களின் நிலையிலிருந்தாவது ஒரு கருத்தை வைக்கலாம்.........

நீர் ஏன் உம்மை ஒரு அறிவாளியாக எண்ணிகொண்டு மூட்டாள்தனமன எந்த ஒரு உப்போ புளியோ இல்லாததை எழுதுகின்றீர்????

நீர் மேல எழுதியதை இன்னொருமுறை படித்துவிட்டு ஏதாவது ஒரு கருத்து அதில் இருப்பின் இதை எனக்காக ஒருமுறை சுட்டடிக்கட்டவும்.

புலிகள் பின்வாங்குவதை படம்பிடிக்கும் அமெரிக்க சற்றலைட்கள் ஏன் ஆப்ஸ்கானித்தானில் அமெரிக்க இராணுவத்தை அப்பப்ப பதம் பார்க்கும் தலிபான்களை காட்டிதில்லை?????

வாகரையை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது என்ற செய்தி வெளிவராத புலிகளுக்கு ஆதரவான அல்லது ஈழதமிழர்களது ஒரு ஊடகத்தை உம்மால் உதாரணத்துக்கு காட்டமுடியுமா????

வாகரையை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தவிடயமறியாத ஈழதமிழர் வாழும் ஒரு பகுதியை உம்மால் சொல்ல முடியுமா???????

""மூடிமறைக்கபடுகிறது என்பதை வெளியில சொல்லுங்கோ"' வெளியில சொல்வதென்றால் பின் ஏன் மூடிமறைக்க வேண்டும்?????? புலிகள் என்ன கள்ளன் போலிஸ் விளையாட்டா விளையாடுகிறார்கள்??????

சிங்கள படை மாடுகளை திறந்து விட்டிருக்குது அதுகளே இப்ப இப்ப கொஞ்சம் சிந்திக்குதுகள் சில சிங்கள ஊடகங்கள் ஏன் புலிகள் இன்னும் அடிக்கவில்லை என்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.

இந்த கேள்விகளுக்கு உடனடியா பதில் கொடுப்பதென்றால்........

ஏன் இவ்வளவு நாளும் மௌனம் கொள்ள வேண்டும்?????? ஆரம்பத்தில் இருந்தே திட்டத்தை விலாவாரியா விளக்கியிருக்கலாமே????

அவனும் அதற்கான முன்ஏற்பாடுகளை செய்துகொண்டு வாகரையை நோக்கி புறம்படுமுன்னமே ஒரு சிறிய படை நகர்வையேனும் வடக்கிலும் செய்து பாத்திருப்பான்.

அல்லது ஏதாவது பேசுவோம் வாங்கோ எண்டு ஒருக்கால் ஜெனிவாவிற்கு அழைத்துகொண்டு போயிருப்பான்.

மக்களை நம்பி புலிகளும்....... புலிகளை நம்பி மக்களும்.

இது ஒப்பந்தத்தில் உருவானதல்ல பிறப்பினால் உருவானது!

நம்பிய மக்களை நட்டாற்றில் விடுவதென்றால்............ அது புலிகள் நினைத்தாலும் முடியாதாது.

மக்களும் புலிகளும் ஒரு மரத்தின் வௌ;வேறு வேலைகளை செய்யும் இருவேறு கிளைகள். ஒன்றை விட்டு ஒன்றென்பது

நீரற்ற சமூத்திரமாகும்! இன்று புலிகள் நளை மக்கள். நாளைய புலிகள் இன்றைய மக்கள்கள்!

ஆக்கிரமிப்பும் அடக்கு முறையும் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கெதிரான போர் நடக்கும். இது நீருக்குள் வாளும் இனங்களில் தொடங்கி...... காட்டுவிலங்குகள்...... பறவைகள்..... மனிதர்கள் என்று எப்போது உருவம் கொண்டார்களோ அப்போதிருந்தே நடக்கிறது.

"""" இது நீர் சுடுக்காலபோனாலும் நடக்கும் நெடுக்காலபோனலும் நடக்கும்." பேசாமல் நல்ல மனிதர் போகும் பாதையில் போக வழியைபார்த்தால் நன்கு என்பது எனது தாழ்வான வேண்டுகோள். தப்பெனபடின் வேண்டுகோள் விடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!

வாகரை வீழ்ந்துவிட்டதா, இனி யாழ்ப்பானம் போலத்தான்

வாகரை வீழ்ந்துவிட்டதா, இனி யாழ்ப்பானம் போலத்தான்

உமக்கு என்ன மப்பே யாழ்ப்பாணம் எப்போதோ வீழ்ந்து விட்டது. :D:D :P

வாகரை வீழ்ந்துவிட்டதா, இனி யாழ்ப்பானம் போலத்தான்

இவர் இந்தியன் என்ற போர்வையில் உள்ள நம்ம ஊர் ************* !

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களுக்கு வாகரை கூறும் செய்தி

-சி.இதயச்சந்திரன்-

வாகரை வைத்தியசாலையில் சிங்கக்கொடியை ஏற்றிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

மக்களிற்கான பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு பல்வேறு மனித நேய அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்க மறுத்து, போரின் மூலம் வாகரையை கைப்பற்றுவேனெனத்தான் எடுத்த முடிவினை நிறைவேற்றி விட்டார் அவர்.

வாகரையை அரச இராணுவம் கைப்பற்றினால் முழு அளவிலான யுத்தம் வெடிக்குமென முன்பு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியதை தற்போது கவனத்திற்கொள்ள வேண்டும்.

சம்பூர் வாகரை ஆக்கிரமிப்புக்கள் சுத்தமான போர் நிறுத்த ஒப்பந்த மீறலென்பது சர்வதேசத்திற்கு நன்கு புரியும். புலிகளின் இராணுவ இலக்குகள் மீது வான்வெளி குண்டுவீச்சுத்தாக்குதல் தொடுப்பதும் போர் நிறுத்த மீறலே.

அரசால் கைப்பற்றப்பட்ட அம்பாறை, கஞ்சிகுடிச்சாற்றில், மோதல் நடைபெறுகிறது. அக்காட்டுப்பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.

வாகரையை நோக்கிய மும்முனைத் தாக்குதலில் கல்லாறு மகிந்தபுர படைமுகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படை நகர்த்தலானது திசை திருப்பும் நடவடிக்கை என்பதை புலிகள் உணர்ந்திருப்பார்கள்.

புலிகளின் படையணிகளைப் பரவலாக்கி, மாங்கேணியிலிருந்து இறுதி நகர்வொன்றை மேற்கொள்ளும் தந்திர உத்தியை அரசு பயன்படுத்தியுள்ளது.

பனிச்சங்கேணி பாலத்தடியில் நிலைகொண்ட அரச படைகள், எதிர்ப்பு ஏதுமின்றி வாகரைக்குள் புகுந்துள்ளன. வாகரைக்கு வடக்கு புறமாகவுள்ள கதிரவெளிப் பகுதிகளிலிருந்து புலிகள் பின்னகர்ந்து சென்றுள்ளார்கள்.

பிரதேசங்களை இழப்பதும், மறுபடி கைப்பற்றுவதும் போராட்ட நகர்வுகளில் வழமையான தொன்றாக இருக்கும். அதேவேளை, அடுத்தவாரம், புலிகளின் உயர்மட்ட குழுவுடன் கலந்துரையாடவிருக்கும் சர்வதேச கண்காணிப்புக் குழுவிற்கு இறுக்கமான பல சங்கடங்கள் உருவாகப்போகிறது.

புலிப்பாய்ச்சலிற்கான சகலவிதமான நியாயப்பாடுகளையும் ஜனாதிபதி மஹிந்த உருவாக்கிக்கொடுத்துள்ளார். சர்வதேச நாடுகளின் கணிப்பில், புலிகளின் போராடும் பலம் சிதைந்து விட்டதென்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புலிகளின் தொடர்ச்சியான கட்டுப்பாட்டு பிரதேசங்களின் இழப்புக்களை, உள்ளூர மகிழ்ச்சியுற்ற நிலையில் இழப்புக்களை உள்ளுர மகிழ்ச்சியுற்ற நிலையில் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆயினும் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மகிந்தவின் அதீத ஆக்கிரமிப்பு முனைப்பினை இனிமேலும் பார்த்துக் கொண்டு இருப்பார்களா வென்று தெரியவில்லை.

பிரித்தானிய தென்னாபிரிக்க நிறவெறி அரசிற்கு முண்டு கொடுத்தாலும், வெள்ளை இன மக்களிடையே காணப்பட்ட முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டு சட்டவரைவிற்குள் நிகழ்த்திக் காட்டினார்.

துண்டுப் பிரசுரங்களை மட்டும் விநியோகித்து அம்மக்களை அணிதிரட்ட முடியாது.

அரசின் ஆக்கிரமிப்பு வன்முறைகள், உச்சத்தை தொட்டிருக்கும் இந்நிலையில், சர்வதேசத்தின் அடுத்த நகர்விற்கு முன், புலம்பெயர் மக்களின் உறுதியான பங்களிப்பின் தேவை அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் விடுதலைப் புலிகளின் சுயநிர்ணய உரிமைப் போரின் அடுத்த நகர்வினை சர்வதேசம் எதிர்கொள்ளப் போகிறது.

தமிழகத்திசை காட்டி, இந்தியாவை தடுத்து நிறுத்தினாலும், சர்வதேசத்தின் அரசு சார்பான நிலைப்பாட்டினை புலம்பெயர் மக்கள் சக்தியாலேயே மாற்ற முடியும். மாற்றமுடியாவிட்டாலும், தீவிர ஆதரவினை தணிக்கும் நிலையையாவது அந்நாட்டு அரசுகளுக்கு இவை அளிக்கலாம்.

தற்போதைய அரசியல் களத்தில் அனுசரணையாளர்களைக் காணவில்லை. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினூடாக தமது பார்வையை உள்நுழைய விட்டுள்ளார்கள்.

புத்தாண்டிற்கு முன் தாயகத்தில்புதிய ஒளி பரவலாம்.

அதற்கு முன், வேண்டாத விருந்தாளிகள், புதிய நிகழ்ச்சி நிரலுடன் களமிறங்கத் தயாராகி வருகின்றனர். சுமந்தவளே பெறவேண்டுமென்பதே தமிழர்களுக்கு எழுதப்படாத விதியாகிறது.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (21.01.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/21.htm

வாகரை கைப்பற்றலை மகிழ்வுடன் கொண்டாடிய மகிந்த

[ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 18:17 ஈழம்] [அ.அருணாசலம்]

வாகரையை கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச படைகள் கைப்பற்றியதை அறிந்ததும் படை அதிகாரிகளை பாராட்டிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய அமைப்புக்களின் ஒருங்கிணைந்த குழுவுடனான சந்திப்பின் போதே மகிந்த வாகரை வெற்றியை கொண்டாடினார்.

இது தொடர்பாக அங்கு அவர் கருத்துக் கூறுகையில்,

கிழக்கு முழுவதும் மிக விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அரசின் பயங்கரவாதத்திற்கான எதிரான போரை முன்னெடுப்பதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் எனவும் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றின் பத்தி எழுத்தாளர் தெரிவிக்கையில்,

கடந்த 1995 டிசம்பர் 5 ஆம் நாள் யாழ். நகரை கைப்பற்றிய படையினர், விடுதலைப் புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டதாக விழா எடுத்திருந்தனர்.

ஆனால் 7 மாதங்களின் பின்னர் 1996 ஜூலை 4 ஆம் நாள் யாழ். நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய போதும் யாழ். நகரத் தளபதி உட்பட பல படை அதிகாரிகள் பலியாகியிருந்தனர்.

இந்த குண்டு வெடிப்பின் பின்னர் 14 நாட்கள் கழிந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 'ஓயாத அலைகள் - 01' நடவடிக்கையில் முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்டதுடன் அது சிறிலங்காவின் வரலாற்றில் மிகப்பெரும் அழிவாகவும் பதிவாகியது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி : புதினம்

B) B) B) B) யாழ் களத்திலை கற்றுக்குட்டிகள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. புலிகளைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்னர், போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்துவிட்டு விமர்சனம் செய்யவும். இண்டைக்கும் நேற்றைக்கும் வந்த செய்திகளைப் படிச்சுப்போட்டு, அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யினமாம். புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டுப்போட்டு, வன்னிப்பகுதியைப் பிடிக்கேல்லையோ? யாழ்ப்பாணத்தை வி;ட்டதாலை அவர்கள் பலவீனம் அடைஞ்சிட்டினம் எண்டு எங்கட சனங்களே கதைச்சவை. பிறகு ஆனையிறவு பிடிச்சவுடனை புலிகள் எண்டால் புலிகள்தான். அவங்கள் நினைச்சால் எதுவும் செய்வினம் எண்டு பெரிசாக் கொண்டாடேல்லையோ. அதை மாதிரித்தான் இப்பவும், வாகரையை விட்டவுடனை அவர்கள் பலவீனம் அடைஞ்சிட்டினம் எண்டு கொஞ்சப் பேர் நினைச்சுக் கொண்டிருக்கினம். அவையின்ர நினைப்பில மண் விழுகிற காலம் கெதியிலை வரப்போகுது எண்டு தெரியாமல் இருக்கினம். வன்னிக்காட்டுக்குள்ள இருக்கேக்குள்ளேயே முல்லைத்தீவு, மாங்குளம், ஆனையிறவு எண்டு வெற்றிகளை அள்ளிக் குவிச்சவைக்கு, வாகரை எந்த மூலைக்கு? B) B) B) B)

They have lost some battles, but not war

சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.

இது வரை நடந்தவற்றை நோக்கும் பொழுது சில விடயங்கள் புலப்படும்

புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Surface to Air missiles - SAM) உள்ளன. சமாதானக் காலத்தில் இன்னும் அதிகமாக கூட பெற்றிருக்கலாம்

புலிகளிடம் சில இலகுரக விமானங்கள் உள்ளன. இதனை பெரும் செலவிட்டு வாங்கியிருக்கும் புலிகள் அதனை இது வரை பயன்படுத்தவில்லை

பெரிய அளவிலான கடற்படை தாக்குதலை புலிகள் நடத்தவேயில்லை

புலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கும். முகமாலையில் தாக்குதல், அடுத்த சில தினங்களில் ஹபரணையில் தாக்குதல், காலியில் தாக்குதல் என புலிகள் நடத்திய தொடர் தாக்குதலுக்கு பிறகு இராணுவ பலம் புலிகள் வசம் சாய்ந்து விட்டதாக ஊடகங்கள் எழுதின. சிறீலங்கா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினாலும் புலிகள் இது வரை பெரிய பதில் தாக்குதல் எதுவும் நடத்த வில்லை.

இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒரு விடயம் புலப்படும் - தங்களுடைய பலத்தை புலிகள் தக்கவைத்து கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரயோகிக்கலாம்.

They have lost some battles, but not war. ஆனால் இந்தப் போரை யாருமே வெல்ல முடியாது என்பது தான் உண்மை.

இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியது - சர்வதேச சமூகத்தின் அமைதி. சிறீலங்கா இராணுவம் முகமாலையில் தோற்ற பொழுது பாய்ந்தோடி வந்த சர்வதேச சமூகம், தற்பொழுது அமைதி காத்து வருகிறது. அதன் இரட்டை வேடம் தெளிவாக புலப்படுகிறது.

http://thamizhsasi.blogspot.com/2007/01/bl...7309653505.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சபேசனின் வெப் ஈளத்தில் இருந்து - 20/01/2007.

கதிரவெளியும் சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிப்பு!

நேற்று வாகரையின் மத்திய பகுதியை கைப்பற்றிய சிறிலங்காப் படைகள் இன்று கதிரவெளியையும் கைப்பற்றிக்கொண்டன.

ஈச்சலம்பற்றில் இருந்தும் வாகரையில் இருந்தும் இரு முனைகளில் முன்னேறிய சிறிலங்காவின் படையணிகள் கதிரவெளியை ஆக்கிரமித்தன. இதன் மூலம் வாகரைப் பிரதேசம் சிறிலங்காப் படையினரின் முற்று முழுதான ஆக்கிரமிப்புக்குள் வந்துள்ளது. இன்றைய ஆக்கிரமிப்பும் விடுதலைப்புலிகளின் எதிர்ப்புக்கள் இன்றியே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் படையணிகள் திருக்கோணமடு காட்டுப் பகுதிக்குள் பின்வாங்கியுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

வாகரைப் பிரதேசம் முற்றுமுழுதான கைப்பற்றப்பட்டதை ஒரு பெருவெற்றி என்று சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. வாகரையை சிறிலங்கா படைகள் நான்கு மாதங்களுக்கு மேலாக சண்டை இட்டுக் கைப்பற்றி உள்ளன. இந்த சண்டைகளில் 250இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பல நூறு படையினர் காயமடைந்தும் உள்ளார்கள். இப்படி பெரும் இழப்புக்களுக்கு மத்தியிலேயே வாகரை கைப்பற்றப்பட்டுள்ளது.

உண்மையில் வாகரை இழக்கப்பட்டதானது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை விடுதலைப்புலிகளுக்கு இராணுவரீதியான பாதிப்பு எதையும் பெரிதாக ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை இது பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும். வாகரையை இழந்ததன் மூலம் திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் பல மைல் தூரம் பின்தள்ளப்பட்டு விட்டனர். தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தின் 95 வீதமான பகுதி சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் இணைக்கின்ற ஏ15 பாதை முற்று முழுதாக இன்று சிங்களப்படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

அதேவேளை சிறிலங்காப் படைகளுக்கு ஒரு விடயம் அச்சம் கலந்த ஆச்சரியத்தை கொடுப்பதாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் எவ்வித எதிர்ப்பையும் காட்டாது வாகரையில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அத்துடன் எவ்வித ஆளணி, தளபாட இழப்புக்களும் இன்றியே விடுதலைப்புலிகள் பின்வாங்கிச் சென்றுள்ளனர். பல முனைகளில் முன்னேறி வாகரையை சுற்றிவளைத்து உள்நுழைந்த சிறிலங்காப் படைகளுக்கு இது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

வாகரைப்பிரதேசத்தில் இருந்தபடி விடுதலைப்புலிகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள படை முகாம்களை நோக்கி அடிக்கடி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். நீண்டதூர வீச்செல்லை கொண்ட ஆட்லறிகளையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த ஆயுத தளபாடங்களில் எதையுமே சிறிலங்காப் படைகளால் வாகரையில் காணமுடியவில்லை. ஒரேயொரு ஆர்பிஜி கைப்பற்றப்பட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவிக்கிறது.

அனைத்து கனரக ஆயுதங்களுடனும் விடுதலைப்புலிகளின் படையணிகள் மாயமாக மறைந்துவிட்டது சிறிலங்காப் படைகளுக்கு ஒரு மர்மமாகவே இருக்கும். விடுதலைப்புலிகள் தமது பலத்தை அப்படியே தக்கவைத்தபடி வாகரையில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்ற செய்தி சிறிலங்காப் படைகளுக்கு இனிப்பானதாக இருக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் உன்மை

புலிகள் செய்திகளை வெளியிடாவிட்டால் உங்களுக்கென்ன? உங்களுக்குதான் இராணுவச்செய்திகள் போதுமே... குடுக்கும் கூலிக்கு சரியாகத்தான் வேலை செய்கின்றீர்கள். ஏன் புலிகள் யுத்தத்தில் தோல்வி அடையக்கூடாதா? அப்படி நினைப்பவர்கள் யாராவது இருந்தால் போய் போராட்டம் செய்து பாருங்கள். பின்வாங்கினால் கூட உங்களைமாதிரி ஆக்களுக்கு காரணம் தேவைப்படுது... போராடுபவனுக்குதான் அதன் அர்த்தம்புரியும் உங்களைமாதிரி வெட்டிவேலை இல்லாமல் தொட்டதுக்கெல்லாம் குறைபடுவர்களுக்கு புரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில இருக்கிறவன் கூட கேட்காத கேள்விகளை இங்கே சண் ரீவியும் ஜெயாடீவியும் பார்த்துவிட்டு கேள்விகேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கு? காசுகுடுத்தா மட்டும் (?) கேள்விகேட்டுடலாம் எண்டு நினைப்பா?

கபரணை முகமாலை மூதூர் தாக்குதல்களில் இராணுவத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. போரிடும் முனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இதை நிவர்த்தி செய்ய மாதங்கள் எடுக்கும். மகிந்தவின் எல்லாத்திட்டமும் தவிடு பொடி...

ஆனா அதுக்கு எல்லாத்துக்கும் பிறகு நடந்த வாகரையை ஆக்கிரமிப்பிலும் கடும் இழப்புகளை இராணுவத்துக்கு குடுத்திருக்கு.

அதாவது ஏற்கனவே பலவீனமான இராணுவத்திற்கு கடும் இழப்புகளை குடுத்திருக்கிறியள்.

ஆச்சரியத்தக்க வகையில் பாரிய எதிர்ப்புகள் இல்லாது புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் புலிகள் பலம் பேணப்படுகிறது என்றியள்.

பிறகு குத்துக்கரணம் அடிச்சு கடும்மையான இழப்புகளோடுதான் இராணுவம் வாகரையை பிடிச்சது என்றியள்.

லங்கா புவத்தின்ரை வியாதி உங்களுக்கு தொத்திவிட்டுது போலை கிடக்கு.

மொத்தத்தில என்ன சொல்ல வாறியள்?

சிங்களவன் தான முன்வந்து புலிகள் ஓடுகிறார்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று செய்யிற பிரச்சாரத்துக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யிறம் எண்டோ?

சிங்களவனுக்கு இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு விளக்கம் குடுக்கிறியளோ?

இன்னும் பலமாக இருக்கிறம் ஊர் உலகத்தில எடுக்கக்கூடிய உதவிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து எங்களோடு மோது. நாங்கள் மோதிப்பாக்கத்தான் போராட்டம் தொடங்கினாங்கள் எண்டா?

விமானம் இருக்கு நீண்டு வீச்சு எல்லை எறிகணை இருக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை இருக்கு வேறு என்ன கோவணம் இருக்கு தலையில கட்ட எண்டு எழுதுங்கோவன்

எங்கள் மீது நடத்தப்படும் இத்தை படுகொலைகள் அநியாயங்கள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இராணுவ நடவடிக்கைகள் பொருளாதாரத் தடைகள் எல்லாவற்றையும் அனுசரணையாளர்களும் சர்வதேசம் பார்த்துக் கொண்டு ஏன் இருக்கிறது?

சமாதானம் என்ற மாயiயில் எமது போராட்டத்தின் வீச்சை குறைக்க முடியவில்லை வன்முறையில் குறைக்க சிறீலங்கா முயற்சிக்கிறது வெற்றியானால் நல்லம் என்று பாத்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம். அதற்கு ஏற்றவாறு புலிகள் நடந்து கொள்கிறார்கள். இன்னும் பலமாக இருக்கிறம் சிங்களவன் எவ்வளவு அடிச்சாலும் எல்லாத்தையும் வைச்சிருக்கிறம் இன்னும் சிங்களவனுக்கு குடுத்து அடிக்கச் சொல்லும் இழப்புகள் எதுவும் எங்களுக்கு இல்லை என்று விளக்கம் குடுக்கிறியளா?

வெளிநாட்டில இருக்கிற ****களிட்டை இராணுவ ஆய்வு செய்யச் சொல்லி யாரும் கேட்டவையோ? எங்களிடம் திருப்பி திருப்பி கேட்க்கப்படுகிற கடமை என்ன? சிறீலங்காவின் இன அழிப்பை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்துங்கோ எமது சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்துக்குரிய கருத்தியல் தளத்தை உருவாக்க முயற்சியுங்கோ என்று தானே.

**** உந்த "புலிகளின் பலம் இன்னும் பேணப்படுகிறது" என்ற விளக்குமாத்து இராணுவ ஆய்வு எப்படி அதுக்கு உதவும்? நாங்கள் போராட வெளிக்கிட்டது பலமாக இருக்க முடியும் அடிக்க முடியும் எண்டதாலா இல்லாட்டி நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதாலா? நாம் பலமாக இருக்கிறம் என்று எழுதி அங்கீகாரம் வேண்டிவிடலாமா? இல்லை நாங்கள் பலவீனமாகிவிட்டால் எமது போராட்டம் நியாயம் தார்மீகம் அற்றது ஆகிவிடுமா?

சிறீலங்காவும் சர்வதேசமும் எங்களை இராணுவரீதியில் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தத்தான் முயற்சிக்கிறார்கள் என்று தெரியுது எல்லா. சதி செய்து பிளவு ஏற்படுத்தப்பாக்கிறார்கள். சிறீலங்காவுக்கு உதவிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள். தடை செய்து அரசியல் இராஜதந்திர பொருளாதார அழுத்தத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். பிறகு என்ன மயிருக்கு எப்ப பாத்தால் இழவு விழுவார் நாங்கள் பலமாக இருக்கிறம் இன்னும் ஏதோ எல்லாம் வைச்சிருக்கும். அடிச்சாலும் எல்லாத்தை கொண்டுபோய் ஒளிச்சு வைச்சிருக்கிறம் என்று வே* ஆட்ட எழுத்து எழுதுறியள்.

2 நாள் போகவில்லை ஆய்வார்கள் எல்லாரும் மாறி மாறி தங்கடை சூ*தை திறக்க வெளிக்கிட்டிட்டினம்.

எப்ப நீங்கள் எல்லாம் திருந்தப் போறியள்? ****ளே உங்களுக்கு எத்தினை வயசு?

**** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது -- மோகன்

நாகரிகமற்ற நல்ல கருத்து!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.