Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான்

Featured Replies

உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான்
உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான்

உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் மாணவிகள் மீதான தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் இன்றைய தினம் மல்லாகம் நீதிவானை சென்று சந்தித்த நிலையில் அந்த மாணவிகளை பாடசாலைக்கு செல்லுமாறு நீதவான் அறிவுறுத்தி அனுப்பினார்.

 

 

எனினும், குறித்த மாணவிகள் மீளவும் பாடசாலைக்கு வந்து பாடசாலை வளாகத்தினுள் செல்ல முயற்சித்த வேளை அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது வாயில் கதவை சாத்தியதால் அங்கு பெரும் களேபரம் இடம்பெற்றது.

1473316925_u1.jpg

இந்தநிலையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரிக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் நேரடியாக வருகை தந்து மாணவிகளை பாடசாலைக்கு அழைத்து சென்று கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றார்.பாடசாலைக்கு வெளியில் மாணவர்களின் பெற்றோர்பெருமளவில் உள்ளதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.  

1473316946_u2.jpg

1473316967_u3.jpg

http://onlineuthayan.com/news/17313

  • தொடங்கியவர்
மாணவிகளை புகைப்படமெடுக்கும் பொலிஸார்-அச்சத்தில் பெற்றோர்
மாணவிகளை புகைப்படமெடுக்கும் பொலிஸார்-அச்சத்தில் பெற்றோர்
யாழ்ப்பாணம் உடுவில் மகளில் கல்லூரியில்  பாதுகாப்பு கடடையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மாணவிகளை புகைப்படம் எடுப்பதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 
 
தமது எதிர்ப்பையும் மீறி தமது பிள்ளை புகைப்படம் எடுப்பது, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
1473322739_u1.jpg
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரி அதிபராகப் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நிலையில், நேற்று போராட்டம் கைவிடப்பட்டது. 
 
இந்த நிலையில், பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என அறிவித்த போதிலும் இன்று கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://onlineuthayan.com/news/17323

  • தொடங்கியவர்
உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது
 
08-09-2016 03:51 PM
Comments - 0       Views - 37

article_1473330183-article_1473312959-Ud-எம்.றொசாந்த்

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது.

'நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்' என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.

திங்கட்கிழமை (12) விடுமுறை என்பதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) முதல் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தமையால், பாடசாலைக்குச் சென்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், ஆளுநர் சபையைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அதிபர் மற்றும் மாணவிகளுடன் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக தென்னிந்திய திருச் சபையால் நியமிக்கப்பட்ட பற்ரீசியா சுனித்தா, நேற்றுப் புதன்கிழமை (07) தனது பதவியை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

60 வயது பூர்த்தியாகியமையால் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னைய அதிபர் சிரானி மில்ஸை பாடசாலையின் ஆளுநர் சபை (தென்னிந்தியத் திருச்சபை) நீக்கியது. ஆனால், அவரைத் தொடர்ந்தும் அதிபராக கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரி பாடசாலையின் மாணவிகள் கடந்த 3 ஆம் திகதி முதல் போராட்டம் செய்து, தங்கள் போராட்டத்தை கடந்த 6 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/181459/உட-வ-ல-மகள-ர-கல-ல-ர-ப-ப-ரச-ச-ன-ம-ட-வ-க-க-வந-தத-#sthash.H24lBX7Z.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அதிபரை நம்பி போராடிய மாணவிகளின் கதி??

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நந்தன் said:

அதிபரை நம்பி போராடிய மாணவிகளின் கதி??

அவ்வளவு தான்????:(


ஒரு பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளையளால எனக்கு இந்த டீச்சர் தான் வேணும்,எனக்கு இந்த அதிபர் தான் வேணும் எண்டு கோரிக்கை வைத்து போராட்டம் பண்ண முடியுமா..
Partiality காட்டினாலே மிஞ்சி மிஞ்சி நிர்வாகத்திட்ட சொன்னா நிர்வாகம் எச்சரிக்கை குடுக்கும்..அதுக்கும் மிஞ்சி ஏது செய்தால் பேர்த் சேர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு போய் வேற பள்ளிக்குடத்தில சேரலாமே ஒழிய உப்பிடி கொடி பிடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணேல்லாது..அப்பிடி பார்த்தால் எல்லா பள்ளிக்கூடங்களிலயும் வருசத்துக்கு நாலு ஆர்ப்பாட்டம் நடக்கும்..பள்ளிக்கூட நிர்வாகத்துக்க அரசியல் தலையீடு தப்பெண்டா..நிர்வாக முடிவுக்கை மாணவர்களின் தலையீடும் தப்பு தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இப்ப சிலோனிலை எல்லாம் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சனையளாய்க்கிடக்கு....:mellow:

  • தொடங்கியவர்

யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்

 

யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்



நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக மாறியுள்ள உடுவில் மகளீர் கல்லூரியையும், அங்கு கல்வி பயிலும் மாணவிகளையும், தென்னிந்திய திருச்சபையின் உள்முரண்பாடுகளில் சிக்கி இருப்பவர்களும், அரசியல், கட்சி முரண்பாடுகளில் முரண்டு பிடிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்வதனை உணர முடிகிறது.

உண்மையில் இலங்கையின் அரசாங்க, தனியார்  சேவைகளில் கல்வி, மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார் முறைமைகளில் 60 வயதை அடைந்தவர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. எனினும் அரசாங்கம், அல்லது தனியார் கம்பனிகளின் நிர்வாகங்கள், விரும்பினால் சேவை நீடிப்பை வழங்க முடியும். வழங்காவிடின் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் உரிமை 60 வயதை அடைந்தவர்களுக்கு இல்லை.

இந்த வகையில், சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிந்திய திருச்சபையின் ஆளுநர் சபை உடுவில் மகளீர் கல்லுரியின் முன்னைய அதிபரை ஓய்வுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு எதிராக போராடுவதற்கோ, சேவை நீடிப்பை வழங்குமாறு கோரி மாணவிகளை வீதியில் இறக்குவதற்கோ போராட்டத்தின் பின்னால் இருப்பவர்களுக்கு சட்டரீதியான வலு இல்லை.

மறுபுறம் முன்னைய அதிபர் சிறந்த சேவையாளர், வல்லவர், திறமையாக கல்லூரியை நடத்தியவர் என்பது எவ்வளவு உண்மையோ, ஓய்வு பெறும் வயதை அடைந்த ஒருவர் இவற்றுக்கு அப்பால் நிர்வாகம் விரும்பவில்லை என்றால் தானாக ஓய்வு பெறுவதே ஜனநாயக விழுமியம் கூட.

தவிரவும் தனக்கு அடுத்த நிலையில் உப அதிபராக இருப்பவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பது உயரிய விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு உரித்தானது என்பதும் மறுக்க முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட முடியும். பிரித்தானிய தொழிற்கட்சியில் இரண்டு தடவைகள் பிரதமராக இருந்த ரொணி பிளையர் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் கடைசி 2 வருடங்களுக்கான பிரதமர் பதவியினை, தனது கட்சியில் அடுத்த நிலையில் இருந்த கோடன் பிறவுனுக்கு கொடுத்து தானாக விலகியிருந்தார். காரணம் கட்சியின் அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளருக்கான பயிற்சியாகவும், அவரது தலைமைத்துவத்தை மக்கள் உணருவதற்கான வாய்ப்பாகவும் அந்தக்காலம் அமையும் என்பதனை பிரித்தானிய ஜனநாயக விழுமியங்கள் ரொணி பிளையருருக்கு கற்றுக் கொடுத்திருந்தன.

இவற்றிற்கு அப்பால் வடக்கில் இன்று கல்வியில் இருந்து மதம் சார்ந்த நிறுவனங்கள், ஆலையங்கள், பொது அமைப்புக்கள் என அனைத்திலுமே அரசியல் புகுந்து விளையாடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்னைய காலங்களில் ஆளும் அரசாங்கங்களுக்கு ஆதரவாக அல்லது மிண்டு கொடுக்கின்றவர்களாக இருப்பவர்களும், கட்சிகளுமே தமது அரசியல் செல்வாக்கை, அரச மற்றும் பொது நிறுவனங்கள் மக்கள் சார்ந்த அமைப்புக்களின் நடவடிக்கைகளில் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து தொழிற்படுபவர்களாக இருப்பவர்களும் கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது அரசியல் செல்வாக்குகளை அனைத்து மட்டங்களிலும் பிரயோகிக்கும் நிலை 2015களிற்கு பின் பலம் பெற்று வருகின்றது. குறிப்பாக கல்விச் சமூகத்தில் பாடசாலை மாணவர்களை தமது அரசியலுக்காக பகடைக்காய்களாக மாற்றுவதும், பந்தாடுவதும் கூட ஒரு வகையான சிறுவர் துஸ்பிரயோகமே...

இவ்வாறான செயற்பாடுகளுக்கு  வழிவிட்டு பிரச்சனைகளை உருவாக்கிய பின், பொலிசார், ராணுவத்தினர் தலையிடுகிறார்கள், தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள், மாணவிகளை படம்பிடிக்கிறார்கள் என வெறுப்பை வெளியிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை பெற்ற ஆட்சியாளர்களும், அந்த ஆட்சியாளர்களின், அரசாங்கங்களின் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு  படையினரும், சிறுபான்மை இனங்களின் முரண்பாடுகளை தமக்கு சாதகமாகவே பயன்படுத்துவார்கள் என்பதனை இலங்கையின் ஒரு நூற்றாண்டு அரசியல் மூலம் புரிந்து கொள்ளாவிடின் யார் என்ன செய்வது?

இதே வேளை ஒரு நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது என்ற பெயரில், பெண்கள் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய புரிதலில், இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்திற்கு ஈடானது என்பதனை சுட்டி நிற்கிறது.


விசேடமாக பாடசாலை வளாகத்தில் ஆண் பொலிசாரை குவித்ததும், மாணவிகளை படம் பிடித்தமுறைமைகளும், அவர்களை பின்தள்ளிய விதங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதனை நல்லாட்சி அரசாங்கமும், மத்திய, மாகாண கல்வி அமைச்சுக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியதோடு, பாடசாலை, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் மாணவர், ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகங்களின் போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவான புரிதலையும் கொண்டு இருக்க வேண்டும் என்பதனை உடுவில் மகளீர் கல்லூரியின் போராட்டம் புலப்படுத்தி நிற்கிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135759/language/ta-IN/article.aspx

2 hours ago, நவீனன் said:

இதே வேளை ஒரு நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது என்ற பெயரில், பெண்கள் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய புரிதலில், இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்திற்கு ஈடானது என்பதனை சுட்டி நிற்கிறது.

அநீதி, அடக்குமுறை, அடாவடித்தனம் தொடர்கின்றது!

மீண்டுமொரு முறை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் அங்கமான நீதித்துறையின் அநீதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

1 hour ago, போல் said:

அநீதி, அடக்குமுறை, அடாவடித்தனம் தொடர்கின்றது!

மீண்டுமொரு முறை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் அங்கமான நீதித்துறையின் அநீதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தயவு செய்து உடுவில் பாடசாலையின் பிரச்சனை என்ன என்று தெரிந்து பதில் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 55 வயதில் ஆசிரிய தொழிலில் ஓய்வு. இவருக்கோ 60.

அடுத்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் என்ற வகையில் மாணவிகளின் கோரிக்கையில் நியாயம் இல்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க திருச்சபையிலிருந்து வரும் நன்கொடைப் பணத்திற்கான பங்குச் சண்டை என்று கதை உலாவுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து உடுவில் பாடசாலையின் பிரச்சனை என்ன என்று தெரிந்து பதில் தரவும்.

எனக்கும் உதே கேள்விதான் மண்டையை போட்டு உலுப்புது.....:grin:


முற்றத்திலை நிக்கிற ஸ்கூட்டரை உங்கடை செல்லக்காலாலை மிதிச்சு ஸ்டார்ட் பண்ணி அப்பிடியே........உதிலை கிடக்கிற உடுவிலுக்கு போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லலாமெல்லே....:cool:

10 hours ago, நவீனன் said:

இதே வேளை ஒரு நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது என்ற பெயரில், பெண்கள் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய புரிதலில், இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்திற்கு ஈடானது என்பதனை சுட்டி நிற்கிறது.

அநீதி, அடக்குமுறை, அடாவடித்தனம் தொடர்கின்றது!

மீண்டுமொரு முறை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் அங்கமான நீதித்துறையின் அநீதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

6 hours ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து உடுவில் பாடசாலையின் பிரச்சனை என்ன என்று தெரிந்து பதில் தரவும்.

ஜீவன் சிவா, எப்பதான் கொஞ்சமாவது மூளையைப் பாவித்து எதுக்கு கருத்து எழுதப்படிருக்கு என்று விளங்கி, கருத்துக்களைப் பதியப் போறீங்கள்?

இங்கு நான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாணவிகள் மீது ஆண் போலீசாரால், ஆண் காவலாளிகளால், வெளியாரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், தாக்குதல்களைப்  பற்றித் தான் கருத்து எழுதியுள்ளேன். அதை அறிந்த நீதித்துறை கூட வெறும் எச்சரிக்கைகளுடன் தனது பொறுப்புகளில் இருந்து தவறிவிட்டது. இந்த அவலட்சணத்துக்கு லைக் போடவும் சிலர் இருப்பது அதைவிட கவலைக்கிடமான செயல்.

தமிழருக்கு எதிரான விடயங்களில் குற்றச்சாட்டுகள் இல்லாமலே நடவடிக்கை எடுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் நிர்வகிக்கப்படும் (அ)நீதித்துறை, தமிழர் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மட்டும் நொண்டிச்சாட்டுக்களை கூறி, மாணவிகளின் வாய்மூல முறைப்பாடுகளைக் கூட புறக்கணித்து, பொறுப்பற்று நடந்துள்ளது.

இந்தப் போக்கு இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் நிர்வகிக்கப்படும் (அ)நீதித்துறையால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது தாயகத்தில் உள்ள மக்களுக்கு தெரியும். இதனால் தான் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் நிர்வகிக்கப்படும் இந்த (அ)நீதித்துறையை தமிழ் மக்கள் நம்ப முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகளை பள்ளிக்கூடத்துக்கு வெளில விட்டு சொறீலங்கா பொலிஸ் படமெடுக்க விட்டிட்டு.. பள்ளிக்கூட நிர்வாகம் கேற்றைப் பூட்டி யாருக்கு என்னத்தைப் படிப்பிக்குது.

வரவர.. மாமியார் கழுதை போலானார். புலிகள் இல்லாத 7 வருடத்திலேயே.. இவ்வளவு. நம்மவர்.. பலருக்குப் பல மமதைகள் தலைக்கேறிக்கிட்டே போகுது. tw_angry:

வருந்தத் தக்க நிகழ்வுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து உடுவில் பாடசாலையின் பிரச்சனை என்ன என்று தெரிந்து பதில் தரவும்.

உங்களுக்கு முழுவிபரம் தெரியுமா?

எழுதலாமே....

அத்தோடு

இதற்கு முன்னர் எதற்காக 60 வயதுக்கு  மேற்பட்டோர் கூட அதிபராக தொடர்ந்தனர் என்பதையும் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உங்களுக்கு முழுவிபரம் தெரியுமா?

எழுதலாமே....

அத்தோடு

இதற்கு முன்னர் எதற்காக 60 வயதுக்கு  மேற்பட்டோர் கூட அதிபராக தொடர்ந்தனர் என்பதையும் எழுதவும்.

அரச பாடசாலைகளில் 55 வயது ஓயவு மீறமாட்டினம். இங்கே மிசன் நிர்வாகமும் இருப்பதால் இந்த சிக்கல் என்று நிணைக்கிறேன்.

உடுவில் மாணவிகள் மீதான தாக்குதலுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படாதா?

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் இன்று வெள்ளிக்கிழமை (09) தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தி மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(07) மதியம் கல்லூரிக்கு வருகைத் தந்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் டீ.எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்களாலும் குழப்பியடிக்கப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகள், அதனைத் தடுக்க முற்பட்ட இளைஞர்கள் மீதும் மாணவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கும் கடுமையான அச்சுறுத்தல் விடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் மீது தொடர்ச்சியான சித்திரவதைகளும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்து நீடித்து வந்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைத்தார்.

எனினும், மாணவிகளை அடித்து துன்புறுத்தியவர்கள் மீது உடனடிச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்து வரும் நிலையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/117022

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

என்னப்பா இப்ப சிலோனிலை எல்லாம் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சனையளாய்க்கிடக்கு....:mellow:

இப்ப சிலோனே வித்தியாசம்தான் 

 

8 hours ago, nedukkalapoovan said:

மாணவிகளை பள்ளிக்கூடத்துக்கு வெளில விட்டு சொறீலங்கா பொலிஸ் படமெடுக்க விட்டிட்டு.. பள்ளிக்கூட நிர்வாகம் கேற்றைப் பூட்டி யாருக்கு என்னத்தைப் படிப்பிக்குது.

வரவர.. மாமியார் கழுதை போலானார். புலிகள் இல்லாத 7 வருடத்திலேயே.. இவ்வளவு. நம்மவர்.. பலருக்குப் பல மமதைகள் தலைக்கேறிக்கிட்டே போகுது. tw_angry:

வருந்தத் தக்க நிகழ்வுகள். 

நெடுக்கர் எங்க சனம் எல்லாம் இப்ப  மாறிட்டுதே 

உடுவில் மகளிர் கல்லூரி சம்பவங்கள் மிகவும் வேதனையைத் தருகிறது

யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்தசனிக்கிழமை முதல் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் வேதனையையும் மனவருத்தத்தையும் தருவாகயாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

இந்த ஆண்டின், கடந்த இரண்டாந் தவணை வரை இந்த பாடசாலையின் நிர்வாகத்தை திறம்படநடாத்தி வந்த திருமதி சிராணி மில்ஸின் சேவை நீடிப்பு காலத்தை ஏன் இந்த நிர்வாகசபையால் வழங்க முடியவில்லை?

இதற்கு முன்னர் இப்பாடசாலையில் 60 வயதிற்குமேற்பட்டவர்கள் பலர் அதிபர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு சிலர் 68 வயது வரைஅதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். ஆனால் சிறப்பாக பாடசாலையை நடத்தி வந்த திருமதிசிராணி மில்ஸிற்கு ஏன் இந்த சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து எமக்குமனவருத்தத்தை தருகிறது.

திருமதி சிராணி மில்ஸ் ஒரு தசாப்த காலத்திற்கு மேல்இப்பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார்.

திறமையாக பலரும் மெச்சும்அளவிற்கு அவர் பாடசாலையை நிர்வகித்துள்ளார்.

அமெரிக்கன் மிஷனரியினர், யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை உருவாக்கியதன்நோக்கத்திற்கு புறம்பாக இந்தக் கல்லூரியின் நிர்வாகசபை செயற்படுகின்றதோ என்றசந்தேகம் எமக்கு எழுகின்றது.

இந்தப் பாடசாலையை நிர்வகிப்பதற்கு அமெரிக்காவில்இருந்து வருடாந்தம் பெருந்தொகையான பணம் கோடிக்கணக்கில் அனுப்பப்படுகின்றன.

இந்தப்பாடசாலையை சரியான வழியில் நிர்வகிக்காவிட்டால் இந்தப் பாடசாலையின் எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிடும்.

ஏற்கனவே இப்பாடசாலையின் மூன்றாம் தவணையை ஆரம்பிப்பதற்கு அறிவிக்கப்பட்ட திகதிஇந்த மாதம் 05ம் திகதியில் இருந்து பின்னர் திடீர் என 08ம் திகதியாகமாற்றியதற்கான காரணம் என்ன?

இந்தத் தடுமாற்றத்திற்கு என்ன காரணம்? எனப் பலகேள்விகள் எழுகின்றன.

இப்படி மாணவர்களைக் காரணம் இன்றிக் குழப்புவதாக நிர்வாக சபைசெயற்படுவது தவறென நாம் கருதுகின்றோம் என இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/education/01/117051

  • கருத்துக்கள உறவுகள்

உடுவில் மாணவிகளை வீடியோ எடுக்கும் பொலிசார்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

அமெரிக்க திருச்சபையிலிருந்து வரும் நன்கொடைப் பணத்திற்கான பங்குச் சண்டை என்று கதை உலாவுகின்றது.

இது.... உண்மை என்றால், 
பெரியவர்கள்... தங்கள்  பண ஆசைக்காக, 
சிறியவர்களின்....  வாழ்க்கையை, பாழாக்கப் படாது. 

ஒரு முறை... போராடப் பழக்கப் பட்ட   மாணவர்களை, 
மீண்டும்.... அவர்களது,  கற்றல் வாழ்க்கையிலிருந்து... வழமைக்கு  திரும்ப எடுப்பது.. கஸ்ரம்.

தயவு செய்து... இந்தப் பிரச்சினையை, உடனே... முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
இந்தக்  கல்லூரி நிர்வாகத்தில், சம்பந்தம் இல்லாமல்... இருக்கும், 
சுமந்திரனின் மனைவி,  தனது பதவியை விட்டு வெளியேறினால்..... பிரச்சினை அடங்கி விடும் என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

16 hours ago, போல் said:

ஜீவன் சிவா, எப்பதான் கொஞ்சமாவது மூளையைப் பாவித்து எதுக்கு கருத்து எழுதப்படிருக்கு என்று விளங்கி, கருத்துக்களைப் பதியப் போறீங்கள்?

என்ன செய்யிறது கடவுள் உங்களை மூளையுடனும் என்னை மூளை இல்லாமலும் படைத்துவிட்டான். எனக்கு இல்லாத, உங்களுக்கு இருக்கும் மூளையை வைத்து நமது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

கொஞ்சம் இந்த திரி பக்கம் எட்டிப் பாத்தால் மூளைக்கு நல்லதாம் என்று மூளை உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

இப்படிக்கு மூளை இல்லாத ஜீவன் அல்லது மூளையை பாவிக்க தெரியாத ஜீவன்.

 

 

20 hours ago, குமாரசாமி said:

எனக்கும் உதே கேள்விதான் மண்டையை போட்டு உலுப்புது.....:grin:


முற்றத்திலை நிக்கிற ஸ்கூட்டரை உங்கடை செல்லக்காலாலை மிதிச்சு ஸ்டார்ட் பண்ணி அப்பிடியே........உதிலை கிடக்கிற உடுவிலுக்கு போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லலாமெல்லே....:cool:

நான் ஒண்டும் செய்தி சேகரிப்பாளன் இல்லை. அப்படி அரசியலில் நான் ஈடுபட்டால், அல்லது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் அடுத்த பிளைட்டில நோர்வேதான். அப்புறம் வாழ்க்கையில இந்தப் பக்கம் எட்டியும் பாக்கேலாது.

9 hours ago, விசுகு said:

உங்களுக்கு முழுவிபரம் தெரியுமா?

எழுதலாமே....

இல்லை விசுகு 

சில விடயங்கள் என்னால் பகிர முடியாதவை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாக கூறமுடியும் - இங்கு அரசியல், இனவாதம், அரசாங்கம் இல்லை. தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தில் சுமந்திரன் இருப்பதினால் அது அரசியல் முலாம் பூசப்படுகின்றது - அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பல தனியார் பள்ளிகளில் அறுபது வயது கடந்தபின்னரும் பல அதிபர்கள் கடமையாற்றியுள்ளனர். அவர்களது நிர்வாகத்திறன் காரணமாக அதை எல்லோருமே அனுமதிப்பதுதான். இந்தப் பாடசாலையில் பழைய மாணவர்களாலும் மிசனறிகளாலும் வழங்கப்பட்டும் பணம் பெருவாரியாக உள்ளதாகவும், இந்த அதிபர் அதைப் பள்ளியின் நலனுக்கு மட்டுமே கண்டிப்புடன் செலவுசெய்ய அனுமதிப்பதாலும் இவரை நீக்குவதற்கு சில அரசியல்வாதிகளின் துணையுடன் திருச்ச்சபையின் உறுப்பினர்கள் முயன்றுள்ளனர் என்றும் சிலரின் உந்துதலாலேயே மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாகவும் கூட செய்தி ஊரில் அடிபடுகிறது.

21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த அதிபர் அதைப் பள்ளியின் நலனுக்கு மட்டுமே கண்டிப்புடன் செலவுசெய்ய அனுமதிப்பதாலும்

அதிபர் திருமதி சிராணி மில்ஸ் பற்றி மிகவும் நல்ல அபிப்பிராயம் சகலரின் மத்தியிலும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.