Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

Featured Replies

49 minutes ago, Nathamuni said:

இணையவரே,

மனிதனை அவன் சார்ந்த சூழலே உருவாக்கிறது. இங்கு வாழும் எமது சிந்தனை இங்கே உள்ள சூழலுக்கு ஏற்ப மாடுபடுகிறது.

இங்கே பிள்ளைகளுக்கோ, எமக்கோ ஒரு வேளை உணவில்லை எனில் அரசு கைவிடாது. 

அங்கே அதுவா நிலை. பெற்றோர்கள் போராடித் தான் ஒரு பிடி சோறும் தருகிறார்கள்.

குளித்துவிட்டு பாடசாலைக்கு போக மறத்ததால் அடித்தேன் என்கிறார் தாய்.

'துள்ளும் வயதில் துடுக்கடக்கி, பள்ளிக்கு அனுப்பிலனே தந்தை எனும் மாபாதகனே' என்கிறது முது மொழி.

அந்த பிள்ளைக்கு அடி விழும் போது தமது சொந்தபிள்ளையை நினைத்தே பலர் கலங்குகின்றனர்.

ஆனால், தாயின் நோக்கத்தில், சுயநலம் இல்லாவிடில், அவரில் தவறில்லை என்பேன்.

அந்தப்பிள்ளை சாப்பாடு இல்லாமல் பலவீனமாக இருப்பதாகவும் தெரியவில்லை.

போயிலை காயவிடு, மிளகாய் புடுங்கு, கல்லை உடை போன்ற வேலைகளை செய்யவில்லை என்று அடி விழுந்தால்... உங்கள் நியாயத்துடன் நான் ஒத்துப் போவேன். 

 

நாதமுனி, 

ஏனோ தெரியவில்லை இந்த வீடியோவைப் பார்க்கும்போது அந்தத் தாய் மீது எனக்கு கோபம் உண்டாகவில்லை. அத் தாய்க்குப் பல பிரச்சனைகள் இருக்கலாம். அவர்கள் வாழும் சூழலை வைத்துப் போர்க்கும்போது ஏழ்மையானவர்களாக தோன்றியதாலாக இருக்கலாம். வேறு பிரச்சனையைப் பிள்ளைமீது காண்பிப்பது போன்றும் தோன்றியது. ஆனால் இவை எந்தக் காரணமும் சிறுமி மீதான வன்முறையை நியாயப்படுத்தாது. 6 வயதுச் சிறுமியைப் பல மடங்கு வலுவான ஒருவர் அடிப்பதென்பது அவரது அதிகாரத்தை இயலாத சிறுமி மீது திணிப்பதாக அல்லவா ஆகும். பல மடங்கு வயதும் அனுபவமும் கூடிய தாயால் வேறு வழியில் பிள்ளையை வழிக்குக் கொண்டு வர முடியாமல் அடிப்பதை ஆதரிப்பது எமது சமுதாயத்தின் இயலாமையை அல்லவா காட்டுகிறது.

நீங்கள் குறிப்பிடும் சூழலுக்கு ஏற்ற சிந்தனையுடைய இந்தச் சமுதாயம் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது ? ஒவ்வொரு நாளும் போராடி வாழ வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது ? இந்த நிலையிலிருந்து வெளியே வர வேண்டுமானால் சமுதாய மாற்றங்கள் தேவை. 

  • Replies 74
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அந்தக் சிறுமி, அந்தத் தாயின் மூர்க்கத் தனமான தாக்குதலால்... 
இறந்து விடவும் சந்தர்ப்பம்,   அங்கு அதிகம்  காணப் பட்டுள்ளது. விசுகு.
அதற்குப் பிறகு.... நாம் இங்கு விவாதிப் பாதை விட...  பக்கத்து வீட்டுக்காரர், தன்னால் தடுக்க முடியவில்லையே... என்று, 
வாழ்நாள் முழுக்க, நடைப்பிணமாகவே... வாழ வேண்டி வந்திருக்கும்.

(உண்மையில்... இந்தக் காணொளியை, முழுமையாக பார்க்க மனம் வராததால் இடையில்... நிறுத்தி விட்டேன்)

காவல்துறைக்கு போய் தடுப்பதை விட

பொது வெளியில் எழுதி தடுத்துவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை சிறி

அதேநேரம் இறுதியாக காவல்த்துறை தான் செயற்பட்டிருக்கிறது

இதை அவர் நேரே செய்திருப்பின் இதைவிட  விரைவாக நடந்திருக்கும்..

தற்பொழுதெல்லாம் தாயகத்தில் பல விடயங்களில் வளர்ச்சி தெரிகிறது

அண்மையில் எனது ஊரில் வீதியில் குட்டி போட்ட மாட்டுக்கு  ஊசி  போட

ஒரு தொலைபெசியில் வைத்தியர் சில நிமிடங்களில் வந்தது தெரிய வந்தது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

காவல்துறைக்கு போய் தடுப்தைவிட

பொது வெளியில் எழுதி தடுத்துவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை சிறி

அதேநேரம் இறுதியாக காவல்த்துறை தான் செயற்பட்டிருக்கிறது

இதை அவர் நேரே செய்திருப்பின் இதைவிட  விரைவாக நடந்திருக்கும்..

தற்பொழுதெல்லாம் தாயகத்தில் பல விடயங்களில் வளர்ச்சி தெரிகிறது

அண்மையில் எனது ஊரில் வீதியில் குட்டி போட்ட மாட்டுக்கு  ஊசி  போட

ஒரு தொலைபெசியில் வைத்தியர் சில நிமிடங்களில் வந்தது தெரிய வந்தது.

 

//இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே, சிறுமியைத் தாக்கிய தாய், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.//

விசுகு....
ஒரு காவல் நிலையத்தில்....   தனக்கு,  சம்பந்தம் இல்லாத விடயத்தை....  பதிவு செய்தால், 
எவ்வளவு இழுபறி இருக்கும் என்பதையும் அந்த அயல் வீட்டுக்காரர் யோசித்து இருந்ததால் தான்.... 
பொது வெளியில் நடந்ததை, தனது ஒளிப்பதிவுக் கருவியில் பதிவு செய்து... 
உடனடி உதவியை... நாடிய போது,  சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி  கண்களில் பட்டு, காவல் துறையின் மூலம்,
நீதிமன்றத்துக்கு,  இப் பிரச்சினை உடனடியாக தெரியவந்துள்ளது.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

அதை  நானும் பார்த்தேன்  சிறி

ஆனால் ஒரு குடும்ப விவகாரத்தை இவ்வாறு பொது வெளியில் கொண்டுவரும் உரிமை எவருக்கும் இல்லை சிறி.

அது இதைவிட பாரதூரமான குற்றமாகும்......

உண்மையில் அந்த நபர் இந்த வீடியோவை காவல்த்துறையிடமாவது இரகசியமா தந்திருக்கணும்

அதுவும் இல்லை இங்கு..

 

விசுகு அண்ணா.. சட்டப்படி அது தவறு அல்ல.. பக்கத்து வீட்டுக்குள் அல்லது அந்த வளவுக்குள் செல்லாதவரையில் சரி.. (தார்மீக ரீதியில் சரியா என்பது வேறு விவாதம்). சட்டம் இப்படி இருப்பதால்தான் பிரபலங்கள் அவர்களது மாடியில் இருக்க, தூர நின்று படமெடுத்துப் போடுகிறார்கள். இல்லாவிட்டால் நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடைக்குமா? :D:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

விசுகு அண்ணா.. சட்டப்படி அது தவறு அல்ல.. பக்கத்து வீட்டுக்குள் அல்லது அந்த வளவுக்குள் செல்லாதவரையில் சரி.. (தார்மீக ரீதியில் சரியா என்பது வேறு விவாதம்). சட்டம் இப்படி இருப்பதால்தான் பிரபலங்கள் அவர்களது மாடியில் இருக்க, தூர நின்று படமெடுத்துப் போடுகிறார்கள். இல்லாவிட்டால் நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடைக்குமா? :D:

அடப்பாவி

இப்படியா என் வாயைப்பொத்துவது???:D:

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் உள்ளவர் போன்று எத்தனையோ அம்மாக்கள், அப்பாக்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கின்றார்கள்.  அந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலால் அல்லது இயலாமையால் என்ன செய்கின்றேன் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். கத்தியைக் கொண்டுவந்த சின்னக் குழந்தைகூட பயத்தையோ, பதைபதைப்பையோ காட்டாததால் இது அவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வாக இருந்திருக்கலாம்.

ஆனால் காணொளி எடுத்தவர் அதைத் தடுக்காமல் விட்டது, எமது சமூகத்தில் எவ்வளவு தூரம் அயலவர்களே அந்நியமாகிவிட்டார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இசைக்கலைஞன் said:

விசுகு அண்ணா.. சட்டப்படி அது தவறு அல்ல.. பக்கத்து வீட்டுக்குள் அல்லது அந்த வளவுக்குள் செல்லாதவரையில் சரி.. (தார்மீக ரீதியில் சரியா என்பது வேறு விவாதம்). சட்டம் இப்படி இருப்பதால்தான் பிரபலங்கள் அவர்களது மாடியில் இருக்க, தூர நின்று படமெடுத்துப் போடுகிறார்கள். இல்லாவிட்டால் நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடைக்குமா? :D:

சரி

இது ஐரோப்பாவில்...

Une Jeune Femme Refuse De Coucher Avec Son Conjoint... Résultat, Elle Est Défigurée

Une Jeune Femme Refuse De Coucher Avec Son Conjoint... Résultat, Elle Est Défigurée

16-54-57-dorr.jpg
Source :   Letribunaldunet Cet article à été mis à jour à 14:56 Commentaires...
 

Elle a vu sa vie s'écrouler, sous ses yeux, impuissante sans pouvoir faire le moindre geste. Âgée de 32 ans, Stephanie Littlewood est une jeune femme, mère d'un enfant. Elle vit à Leeds en Angleterre. Jusqu'à ce jour où tout a basculé, elle menait une existence paisible avec son enfant et son partenaire.

288-11.jpgLes faits se sont déroulés le 2 avril dernier en Grande-Bretagne.Ce soir-là, WayneHoban, 24 ans,voulaitfaire l'amour avec sa compagne, âgée de 22 ans.Mais Stéphanie lui a répondu qu'elle était exténuée.Furieux de ce refus, le jeune homme ivre, s'est mis dans une colère noire.Il a poussé la jeune femme violemment à plusieurs reprises sur son lit :"Jeme suis réfugiée sous la couette, en larmes, puis il est parti" déclarela victime.268-12.jpg

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன எழுதியிருக்கு?

41 minutes ago, இசைக்கலைஞன் said:

விசுகு அண்ணா.. சட்டப்படி அது தவறு அல்ல.. பக்கத்து வீட்டுக்குள் அல்லது அந்த வளவுக்குள் செல்லாதவரையில் சரி.. (தார்மீக ரீதியில் சரியா என்பது வேறு விவாதம்). சட்டம் இப்படி இருப்பதால்தான் பிரபலங்கள் அவர்களது மாடியில் இருக்க, தூர நின்று படமெடுத்துப் போடுகிறார்கள். இல்லாவிட்டால் நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடைக்குமா? :D:

உண்மை. வீடியோ எடுத்தவர் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து எடுக்கவில்லை. தனது ஜன்னல் வழியாக வீடியோ எடுக்க உரிமையுண்டு. ஆனால் அதனை உரியவரின் அனுமதி இல்லாது வெளியிட்டதுதான் குற்றம். சமூக வலைத்தளங்களில் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டிருந்தால் சட்டப் பிரச்சனையிலிருந்து தப்பியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தகவல் தெரிந்தோ, தெரியாமலோ இணைக்கப்பட்டுள்ளது... :unsure: 

 

http://www.mirror.co.uk/news/uk-news/sickening-pictures-show-battered-bruised-8890138 

These are the horrific injuries a vile woman-beater inflicted on his partner after she 'turned down sex'.

Thug Wayne Hoban, 24, has been jailed for 16 months after the horrific attack which left Stephanie Littlewood unconscious, with a broken jaw and missing three teeth...

 

சிறுவர்களை நல்வழிப்படுத்த பல வழிகள் இருக்கலாம் அதற்கென சில வரையறைகளும் இருக்கின்றன.
தாய் அடித்து பிள்ளை இறந்தால்.. அது ஒரு கொலை குற்றமாகத்தான் பார்க்கப்படும்.
தவறுகள் நடக்கும் போது காணொளிகள் எடுப்பது அந்த தவறு மீள நடக்காமல் இருக்க ஒரு வகை செய்ய உதவும்.
உதாரணம் முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரங்கள்.
மகா பாதகத்தை செய்யும் இராணுவ வீரனிடம் சென்று உத்தரவு வாங்கி பதியப்பட்டதள்ள நாங்கள் பார்த்த ஆவணங்கள்.. 
எல்லோரும் சொல்வது போல மாற்றம் ஒன்றே மாறாதது.
அந்த தாயாருக்கும் அவரை போல இருக்கும் பல பெற்றோர்களுக்கும் சில படிப்பினைகள் தேவைப்படும் காலம் இது. எதுவும் வரம்பு மீறி போகக் கூடாது. 

பல மாதங்களுக்கு முன்னர் இதே போலத்தான் ஒரு பெரும்பான்மை இணைத்து தந்தையார் பிள்ளைக்கு பாடம் புகட்ட எண்ணி  தரையில் அறைந்து கொன்றார்!.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

-------- சிறுவர்களை நல்வழிப்படுத்த பல வழிகள் இருக்கலாம் அதற்கென சில வரையறைகளும் இருக்கின்றன.
தாய் அடித்து பிள்ளை இறந்தால்.. அது ஒரு கொலை குற்றமாகத்தான் பார்க்கப்படும்.
தவறுகள் நடக்கும் போது காணொளிகள் எடுப்பது அந்த தவறு மீள நடக்காமல் இருக்க ஒரு வகை செய்ய உதவும்.
உதாரணம் முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரங்கள்.
மகா பாதகத்தை செய்யும் இராணுவ வீரனிடம் சென்று உத்தரவு வாங்கி பதியப்பட்டதள்ள நாங்கள் பார்த்த ஆவணங்கள்.. 
எல்லோரும் சொல்வது போல மாற்றம் ஒன்றே மாறாதது.
அந்த தாயாருக்கும் அவரை போல இருக்கும் பல பெற்றோர்களுக்கும் சில படிப்பினைகள் தேவைப்படும் காலம் இது. எதுவும் வரம்பு மீறி போகக் கூடாது. 

மிகக் சரியாக.... நிதானமாக, பல பக்கங்களையும்..... ஆராய்ந்து எழுதிய கருத்து... சசி வர்ணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடித்தான் எல்லாரும் தாறுமாறாக விவாதித்தாலும் அல்லது நியாயப்படுத்தினாலும்......
அந்தப்பெண் சிறுமியை ஈவிரக்கமில்லாமல் துன்புறுத்தியது சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது....குழந்தைகளுக்கு தண்டனைகள் கொடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றது. காலுக்கு கீழ் இரண்டு அடியாவது அடித்திருக்கலாம். ஆனால் பித்தபிரமை பிடித்தவர் போல் சிறுமியின் கைகளை திருகி.....தலைமுடியை பிடித்து இழுத்து வேதனைப்படுத்தி........ இதையெல்லாம் பார்க்க அகோரமாக இருக்கின்றது.
நானும் யாழ்/ ஊரில் இருந்துதான் வந்தவன். நான் செய்யாத குளப்படிகள் இல்லை....வாங்காத அடிகள் இல்லை. ஆனால் இப்படியொரு கொடூர/கொலை வெறி மாதிரி ஒரு சம்பவத்தை நான் சந்திக்கவில்லை.

அதிலும் ஒரு பெண்பிள்ளையை பிடித்து.....தாயை இழந்த பிள்ளையை பிடித்து.......என்னமோ தெரியவில்லை.
மனம் வேதனைப்படுகின்றது.

இப்படி ஒரு சம்பவம் ஜேர்மனியில் நடக்குமாக இருந்தால்....
துன்புறுத்தியவர் 6மாதம் கேட்டுக்கேள்வியில்லாமல் சிறைவாசம்.அதன் பின்னர்தான் விசாரணை.

பாதிக்கப்பட்ட பிள்ளையை அரசாங்கம் பொறுப்பேற்று வளர்த்தெடுக்கும்.
 

உந்த விசயத்திலை எங்கடை ஆக்களும் உள்ளுக்கை....வெளியிலை....எண்டு திரியினம்.

இந்த சம்பவத்தை காணொளியில் பதித்தவர் பாராட்டுக்கு உரியவர். அவர் மீது சட்ட சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பது பேதைமை.

அண்மையில் கிளிநொச்சி பொதுச் சந்தை தீயின் போதும், ஈற்றில் தீ மேலும் பரவாமல் இருக்கவென  இரண்டு கடைகளை பாரிய ஜேசிபி வாகனங்கள் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.  உண்மையில் இவ்வாறு கடைகளை இடிப்பதுவும் சட்டப்படி குற்றமே!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!-

குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை வெவ்வேறு விதமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து “அதிரடி” இணையத்திற்குக் கிடைக்கப்பெற்ற முழுமையான விபரங்கள் “அதிரடி” வாசகர்கள் ஊடாக அனைத்து மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இதன்படி தாக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு தாக்குதல் நடாத்திய பெண் மூன்றாவது மனைவியாவார்.

குறித்த சிறுமியின் தந்தை மேற்படி பெண்ணை மூன்றாவதாக திருமணம் முடிக்கும்போது, அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் இருந்துள்ளன. அதில் ஒரு குழந்தை தான் தாக்கப்பட்ட சிறுமியாவார்.

குறித்த நபர் தாக்குதல் நடாத்திய பெண்ணை மூன்றாவது திருமணம் முடித்து கொண்டு வந்ததன் காரணமாக, கோபமடைந்த அந்நபரின் இரண்டாவது மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

இரண்டாவது மனைவி வீட்டிலிருந்து வெளியேறிய சமயம் அந்த நபரின் முதலாவது மனைவியின் (காலமாகிவிட்டார்) இரு பெண் குழந்தைகளில் ஒரு பிள்ளையை தன்னுடன் அழைத்துச் சென்றதோடு, புத்தி சுவாதீனமில்லாத மற்றைய ஒரு பெண் குழந்தையை இவருடனேயே விட்டுச் சென்றுள்ளார்.

இரண்டாவது மனைவி வீட்டைவிட்டுச் சென்றுவிட்ட நிலையில், சிறுமியைத் தாக்கிய குறித்த பெண் வந்து ஒருமாதகாலப் பகுதியிலேயே முதலாவது மனைவியின் பிள்ளைமர்மமான முறையில் மரணமடைந்துள்ளார் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது மனைவியின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்த அந்தப் பிள்ளை மூன்றாவது மனைவி (தாக்குதல் நடத்திய பெண்) வந்து ஒரு மாதத்தில் மரணமடைந்தது பல குழப்பங்களையும், பல மர்மங்களையும் நம்முள் எழுப்புகின்றது என்பது பிரதேசவாசிகளின் ஆதங்கமாகும்.

மேலும் தாக்கப்பட்ட சிறுமியானவர் குறித்த (தாக்கிய) பெண்ணிற்கும், வேறொரு நபருக்கும் பிறந்த குழந்தையாவார். இந்தப் பெண்ணை இரண்டு குழந்தைகளுடனேயே மூன்றாவது திருமணம் செய்துள்ளார் குழந்தையின் தந்தை என குறிப்பிடப்படும் கோழி என்கின்ற ராசு.

இந்த நபருக்கும் சிறுமிமீது தாக்குதல் நடாத்திய குறித்த பெண்ணிற்கும் தற்போது ஒரு குழந்தை உள்ளது.

பெற்ற பிள்ளையையே இவ்வளவு கொடுமைப்படுத்தும் இந்தப் பெண், முதல் மனைவியின் பெண் பிள்ளையை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருப்பார் என்பது பிரதேசவாசிகள் கருத்தாகும்.

மேலும், அந்த மரணத்திலும் பல மர்மங்கள் இருக்கலாமெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் தாக்கப்பட்ட சிறுமி தாக்குதல் நடத்திய பெண்ணின் சொந்த குழந்தையாவர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் “அதிரடியில்” தொடரும்…

தொடர்புபட்ட செய்தி

http://www.athirady.com/tamil-news/news/874985.html

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்திக்கு பிறகு திரி ஒன்று இப்படி பத்தி எரிவது பலரின் வயிறு பற்றி எரிந்திருப்பதைக் காட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!-

குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை வெவ்வேறு விதமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து “அதிரடி” இணையத்திற்குக் கிடைக்கப்பெற்ற முழுமையான விபரங்கள் “அதிரடி” வாசகர்கள் ஊடாக அனைத்து மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

கண்ணால் காண்பதும் பொய்யே.! காதால் கேட்பதும் பொய்யே.! 

திரைப்படங்களும், அனைத்தும் கற்பனை என்று முதலிலேயே அறிவிப்புத் தந்தாலும், அதில் வரும் கொடூரக் காட்சிகளைக் கண்டும், கேட்டும் மனம் கனத்துத்துத்தான் விடுகிறது, இது மனிதமனத்தில் உள்ள ஈரத்தை வெளிப்படுத்தும் செயலாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

கண்ணால் காண்பதும் பொய்யே.! காதால் கேட்பதும் பொய்யே.! 

திரைப்படங்களும், அனைத்தும் கற்பனை என்று முதலிலேயே அறிவிப்புத் தந்தாலும், அதில் வரும் கொடூரக் காட்சிகளைக் கண்டும், கேட்டும் மனம் கனத்துத்துத்தான் விடுகிறது, இது மனிதமனத்தில் உள்ள ஈரத்தை வெளிப்படுத்தும் செயலாகும். 

அடுத்தவன்  வீட்டு விவகாரம் என்றால் நமக்கு சக்கரையாச்சே..

இனி  இப்படி ஆயிரம் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அடுத்தவன்  வீட்டு விவகாரம் என்றால் நமக்கு சக்கரையாச்சே..

இனி  இப்படி ஆயிரம் வரும்...

ஒரு சிறு திருத்தம் விசுகு அவர்களே..!

தமிழ் மக்கள் விவகாரம் மீடியாக்களுக்கு சக்கரையாச்சு..!!

  • தொடங்கியவர்

 

சின்னஞ்சிறு பிஞ்சுகளை சித்திரவதை செய்ய வேண்டாம்

 

 

""அந்த காணொ­ளியை பார்த்­த­தி­லி­ருந்து என்னால் உணவு உட்­கொள்ள முடி­ய­வில்லை. தொண்டை அடைத்­துக்­கொள்­வதைப் போன்று உள்­ளது"" இவ்­வாறு நண்பர் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை என்­னிடம் கூறினார்.

ஆம்.. அந்­த­ள­வுக்கு அந்தக் காணொ­ளியை பார்க்­கும்­போது மனது பதை­ப­தைக்­கின்­றது. அந்த காட்­சியை பார்க்­காமல் இருப்­பது நல்­லது என்றும் ஒரு­சிலர் கூறு­கின்­றனர். ஆனால் எமது தொழில் தர்­மத்தின் பிர­காரம் அதனை பார்த்­தா­க­வேண்டும்.

ஆறு வயது பிள்­ளையை அவளின் சிறிய தாய் தாக்கும் காட்சி நேற்று முன்­தினம் மாலை முழு நாட்­டையும் உலுக்­கி­விட்­டது என்று கூறலாம். யாழ். நீர்­வேலி பகு­தியில் இடம்­பெற்ற இந்த சம்­ப­வத்தை நினைக்­கும்­போது நெஞ்சு பதை­ப­தைக்­கின்­றது.

சரி தற்­போது சம்­ப­வத்தை பார்ப்போம்....

நீர்­வேலி பகு­தியில் நேற்று முன்­தினம் காலை வீடொன்றில் சிறு­மி­யொ­ரு­வரை அவ­ரது சிறிய தாயார் மிக மோச­மாக சித்­தி­ர­வதை செய்து தாக்­கி­யுள்ளார். வீட்டின் பின்னால் குறித்த சிறுமி குளிக்கச் சென்ற போது சிறு­மியின் சிறிய தாயார் அச் சிறு­மியை கத்­தி­யாலும் கைக­ளி­னாலும் மிக மோச­மாக தாக்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அச் சிறுமி மீது ஷம்­போவை போட்டு மிக மோச­மான வகையில் தாக்­கி­யுள்ளார்.

இதன்­போது சிறுமி அழு­குரல் எழுப்­பிய போதும் அத­னையும் பொருட்­ப­டுத்­தாது சிறிய தாய் தொடர்ச்­சி­யாக மூர்க்­கத்­த­ன­மாக சிறு­மியை தாக்­கி­யுள்ளார். சிறு­மியின் அலறல் சத்தம் கேட்ட நிலையில் அருகில் இருந்த ஒருவர் இச் சம்­ப­வத்தை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இந்த காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் தீயாக பர­வவே கோப்பாய் பிர­தேச செய­லக சிறுவர் நன்­ன­டத்தை அதி­காரி விரை­வாக செயற்­பட்­டி­ருந்தார். தொடர்ந்து கோப்பாய் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்­தனர்.

இந்த பெண் சிறு­மிக்கு என்ன உற­வா­னவர்? மற்றும் சிறு­மியை ஏன் தாக்­கினார்? போன்ற விட­யங்கள் ஒரு­பு­ற­மி­ருக்க இவ்­வாறு ஒரு சின்­னஞ்­சிறு பிஞ்சுக் குழந்­தையை மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கு­வ­தற்கு அந்த பெண்­ணுக்கு எவ்­வாறு மனது இடம்­கொ­டுத்­தது? அந்­த­ள­வுக்கு கல்­நெஞ்சம் படைத்­த­வர்கள் எம­து­ச­மூ­கத்தில் உள்­ள­னரா?

உணர்­வுகள் உள்ள ஆற­றிவு படைத்த மனித பிற­வியில் இவ்­வா­றான மனி­தர்­களும் இருக்­கின்­ற­னரா? என்ற கேள்வி இங்கு எழு­கின்­றது.

தாக்­கு­த­லுக்கு உள்­ளான சிறு­மியின் தாயார் இறந்­து­விட்­ட­தா­கவும் அவ­ரது தந்தை இரண்டாம் தார­மாக இந்த பெண்ணை திரு­மணம் செய்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இரண்டாம் தார­மான குறித்த பெண்­ணுக்கு ஒரு பிள்ளை உள்­ளது. முதல் மனை­வியின் பிள்­ளை­யையே சிறிய தாயான இந்தப் பெண் இவ்­வாறு மூர்க்­கத்­த­ன­மாக சித்­தி­ர­வதை செய்து தாக்­கி­யி­ருக்­கின்றார்.

இந்த சம்­ப­வ­மா­னது நாம் எவ்­வா­றான சமூ­கத்தில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்? எவ்­வா­றான மன­நி­லையில் உள்ள மக்கள் சமூ­கத்தில் உள்­ளனர் என்ற கேள்­வி­க­ளுக்கு ஆழ­மான பதில்­களை தரு­வ­தாக அமைந்­துள்­ளது.

என்­னதான் தவறு செய்­தி­ருந்­தாலும் ஒரு குழந்­தையை இவ்­வாறு மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கு­வ­தற்கு எவ­ராலும் முடி­யாது. அதுவும் குறித்த பெண் அந்த பிள்­ளையை அச்­சு­றுத்­த­லுடன் அழைக்­கும்­போது சிறுமி அடிக்­க­வேண்டாம் என்று கைகூப்­பிக்­கொண்டும் பயந்து நடுங்­கிக்­கொண்டும் வரு­கின்றாள்.

ஆனால் அவை எத­னையும் பொருட்­ப­டுத்­தாமல் சிறிய தாய் கொடூ­ர­மான முறையில் சிறு­மியை சித்­தி­ர­வதை செய்­கின்­றமை தாங்­கிக்­கொள்ள முடி­யாத காட்­சி­யாக உள்­ளது. இந்­நி­லையில் இவ்­வாறு சிறு பிள்ளை மீது தாக்­குதல் நடத்­து­வதை ஊட­கங்கள் மூலம் காட்­டு­வது மன­துக்கு கஷ்­ட­மாக இருந்­தாலும் இதன் பின்னர் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறக் கூடாது எனும்­போது இது தவிர்க்­கப்­பட முடி­யா­த­தாக உள்­ளது.

குறிப்­பாக இந்த காணொ­ளியை பதிவு செய்து அதனை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­ட­வ­ரையும் விரைந்து செயற்­பட்ட கோப்பாய் பிர­தேச சிறுவர் பாது­காப்பு அதி­கா­ரி­யையும் பாராட்­ட­வேண்டும்.

காணொ­ளியை பதிவு செய்­தவர் குழந்தை அடி வாங்­கு­வ­தி­லி­ருந்து பாது­காத்­தி­ருக்­கலாம் என்று ஒரு கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் கள நிலை­மை­களை பார்க்­கும்­போது அது சாத்­தி­ய­மற்ற ஒரு விட­ய­மா­கவே உள்­ளது.

எவ்­வா­றெ­னினும் இவ்­வா­றான செயற்­பாட்டின் மூலம் சமூக விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முடிந்­துள்­ளது என்­ப­தனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

இதே­வேளை தனது பிள்­ளை­களை பார்த்­துக்­கொள்­வ­தற்­காக என்று கூறியே ஆண்கள் இரண்­டா­வது திரு­மணம் செய்­து­கொள்­கின்­றனர். ஆனால் அதுவே பார்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய பிள்­ளை­க­ளுக்கு எம­னாக மாறி­விடும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

எனவே இந்த நிலைமை குறித்து சமூக மட்­டத்தில் சிந்­த­னைகள் அவ­சி­ய­மாகும். அது­மட்­டு­மின்றி குறித்த சிறு­மிக்கு தேவை­யான அர­வ­ணைப்பை அர­சாங்கம் செய்­து­கொ­டுக்­க­வேண்டும். சின்னஞ் சிறார்கள் அன்­பாக வளர்க்­கப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள்.

ஐரோப்பா உள்­ளிட்ட மேற்கு நாடு­களில் சிறு­பிள்­ளை­க­ளுக்கு பாரிய பாது­காப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் சிறுபிள்ளைகளை பெற்றோர் அடிக்க முடியாது. அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று மிகவும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படவேண்டும். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றது. ஆனால் சிறு பிள்ளைகள் பாதுகாப்பு விடயத்தில் வலிமையான சட்ட ஏற்பாடுகள் அவசியம் என்பதனை இந்த நீர்வேலி சம்பவம் மிகவும் வலுவாக உணர்த்தியுள்ளது.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=24/09/2016

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2016 at 4:39 PM, நவீனன் said:

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

 

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:



யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதவாது ,

நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது.



தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136236/language/ta-IN/article.aspx

 

பாவம் சிறுமி. உந்த தாய்க்கு (சிறிய தாய் என்றாங்கள்.. மாற்றான் தாயோ.. எதுஎப்படியோ.. குழந்தைகளைப் பராமரிக்கும்...) சாறி பேய்க்கு டவுட்டு வந்திட்டு.. யாருக்கு பிள்ளையைப் பெத்தன்.. அல்லது யாருக்கு பிள்ளை பிறந்தது என்று. இது சாதாரண வியாதி அல்ல. இது உளநல வைத்தியரிடம் கையளிக்கப்பட வேண்டிய வியாதி. இந்த தாயிடம் இருந்து சமூகப் பொறுப்புள்ளவர்கள் குழந்தைகளை மீட்பதோடு.. இந்தத் தாயை... சரியான உளநல ஆய்வுக்கும் ஆலோசனைக்கும் உட்படுத்த வகை செய்ய வேண்டும். :rolleyes:

பொலிஸ்.. கோட் கேசென்று போட்டு வெளில விடுவது ஆபத்தானது. தகுந்த உள நல பராமரிப்புக்கு இந்த பெண் உட்படுத்தப்பட வேண்டும். இப்படி.. பல பெண்கள் உலகில் உள்ளனர்... வெளில தெரியாமல். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துப் பகிர்ந்த அனைவரும் தங்களின்  சொந்த அனுபவத்தையோ, பார்த்த, கேட்டுத்தெரிந்த அனுபவத்தின் பொருட்டோ தாய் செய்தது சரி, தவறு. இந்தக்காணொளியை இணைத்தது சரி, தவறு என்று கருத்திட்டார்கள். அந்த பிள்ளைக்கு நாளாந்தம் நடந்து வரும் கொடுமைகளை தடுக்க முடியாத தன் இயலாமையையும், ஏனோ, தானோ  என்று விலகமுடியாமல், சட்டத்தைப்பற்றி சிந்திக்க அவகாசம் இல்லாமல் தன்னால் இயன்றதை செய்ய முற்பட்டதையும் தெளிவாகக் காண முடிகிறது. மற்றவர்களின் ஏனோ, தானோ என்கிற மனப்பான்மையே, அந்தத் தாயை இவ்வளவு கொடுமை செய்யுமளவுக்கும், குழந்தை அந்த கொடுமைகளை தொடர்ந்து அனுபவிப்பதற்கும் காரணியாக இருந்திருக்கலாம். ஒருவேளை காணொலிக்காரர் தட்டிக்கேட்டிருந்தால், அவரும் அவமானப்பட்டு, அந்தக்குழந்தை இன்னும் தீவிர கொடுமையை அனுபவிக்கவும் நேரிட்டிருக்கலாம். அதற்கு குறிப்பிட்ட நபரே காரணமாகலாம். தன் இயலாமையையும், குழந்தை அனுபவிக்கும் கொடுமையின் தன்மையையும் பதிந்து உதவி தேடி இருக்கிறார்.  இது அடுத்த வீட்டுப் பிரச்சனை,.... இல்லை நானும் இது போன்று அனுபவித்தனான் எனும் சாக்குப் போக்குகளே இன்று எத்தனையோ   அபலைகளையும், கொலைகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது   தாயின் பக்கம்: மிகுந்த மன உளைச்சல், விரக்தி.அவசர உளவளத்துணை தேவைப்படும் நபர். தோல்வியடைந்த முதல் வாழ்க்கை, முறையற்ற இரண்டாவது தெரிவு, வாழ்க்கை சுமை, சமுதாயத்தின் புறக்கணிப்பு. இந்தக் குழந்தையை அடிக்கும் மூர்க்கத்தனம் மூலம்   இவற்றிலிருந்து வடிகால் பெற முயற்சிக்கிறாரா? என எண்ணத் தோன்றுகிறது.    அவருக்கு போதிய அறிவோ, சிந்திக்கும் திறனோ, வழிப்படுத்தலோ இல்லாமையும் காரணம். மூவரின் தவறுக்கு இந்தக்குழந்தை தண்டனை பெறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.  மலர் விட்டு மலர் தாவும் வண்டுகள் போல வாழும் ஆண்கள், பெண்களுக்கு இந்தக்காணொளி ஒருபாடம், இதைப்போல பல கொடுமைகளை இழைக்கிறவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு, கண்டும், காணாமலும் போகிறவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி. இல்லை அந்த நபர் இப்படி செய்தது தவறு என்று வாதிடுவோமானால், சர்வதேசம் எமது அழிவுகளை அங்கீகரித்து மௌனம் காத்தது சரி, சேனல் 4 செய்தது தவறு என்றும் ஆகிவிடும்.     குழந்தை பக்கம்: அவர் அனுபவிக்கும் துயரங்கள் இதுதான் முதற்தடவைபோற் தெரியவில்லை. தப்பி ஓடாமல், காலுக்குள் இருந்து மிதிபடுவது, கதறுவது. அருகிலிருக்கும் குழந்தை பதட்டப்படாமல் அதைபார்ப்பதும், கத்தி கொண்டுவந்து கொடுப்பதும் அங்கு சாதாரணமாகிப்போன சம்பவம்போல்த் தெரிகிறது. இத்தனை உடல், மனக்காயங்களோடு படித்து, முன்னேற அந்தக்குழந்தையால் முடியுமா? பாடசாலை எந்தளவுக்கு அந்தக் குழந்தையை அரவணைக்கும்? மேலும்  ரணப்படுத்துமா? குழந்தையின் இந்த சூழலைப் பயன்படுத்தி தமது தேவையை நிறைவேற்ற எத்தனை வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்? அவளின் துயரம் தொடர வேண்டுமா? சொந்தத் தாயிடம் கிடைக்காத அன்பு, இரக்கம். தன்னை பாதுகாக்கவோ, தப்பிக்கவோ முடியாத குழந்தை எப்படி வெளி உலகை எதிர்கொள்ளும்?  ஒருவேளை அந்தத்தாய் இந்தக்காணொளியை பார்க்க நேரிட்டால், தன் மிருகத்தன்மையை உணர்ந்து திருந்த வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் நிறைய ஆற்றுப்படுத்தல்களும், உதவிகளும் தேவை. பல சந்தர்ப்பங்களில்  முதலமைச்சரும் தனது  உரைகளில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"அம்மா என்றால் அன்பு. அம்மா என்றால் இறைவன், அம்மா என்றால் ஆசான்" என்று கேட்டதுண்டு.  இப்பவெல்லாம் அம்மா என்றால் அம்மாவும் ஏன் என்று கேட்ப்பதில்லை, இறைவனும் உஹும்.

இப்படியான சம்பவம் நடப்பதுக்கு நாங்களும் ஒரு காரணமாக இருக்க கூடும் ஏனெனில் யுத்தம் முடிந்தபின் அந்தமக்களுக்கு தேவையான உளவள ஆற்றல்களை மேம்படுத்துவதுக்குரிய திட்டங்கள்சரியான முறையில் செயட்படுத்த வில்லை . மற்றையது வெளிநாட்டு தொடர்போ அல்லது உதவிகள் அற்ற குடும்பங்களில்  ஒரு நாள் வாழ்வாதரத்தை எப்படி அவர்கள் பெறுகிறார்கள் அந்த மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை இங்கிருந்து விடுமுறைக்கு சென்று வரும் நம்மவர் சிந்திப்பதில்லை போதாக்குறைக்கு அத்தியாவசிய பொருட்க்களின் விலையையும் ஏகத்துக்கு ஏற்றி விட்டு வருகினம் சத்து குறைபாடு ,வாழ்க்கையை கொண்டோடும் நாளந்த பிரச்சினை (நாங்கள் இருந்த காலம் திரி போசா மா ,பள்ளியில்  பிஸ்கட்,கூப்பன் அரிசி என்பன இருந்தன இப்போ அவைகள் இல்லையென கேள்வி ) இவைகளை விடுவம் சரி அவர்கள்கொஞ்சநஞ்ச சந்தோசமாக இருக்க தமிழ்நாட்டு கலை சார்பு பட்டவர்கள் போனாலும் இங்கிருந்து அம்பு விடுகிறம். இப்படியான ஒரு சூழலில் எப்படி பொருண்மியம் பெருகும் ? உதாரணமாய் அவர்களின் நிலத்தில்  பார்தினியம் களை எப்படி பல்கி பெருகி உள்ளது என்று கவனித்தால் தெரியும் மிளகாய் காய்கறி விற்க்கும் விலைக்கு கொஞ்ச விளைபொருளாவது அங்கு விளைவிக்கமுடியாது என்பதை மறுக்க முடியாது. (பிரான்சில் புறநகர் பாரீசில் நம்மவர் வீடுகளில் அனேகமாக ஒரு நாலு மிளகாய் மரமாவது பார்த்துஉள்ளன் லண்டனில் கதை வேறு காலநிலை பிரச்சினை )  

கொஞ்சகாலம் போனபின் இதை மறந்துவிட்டு வேறு ஒரு செய்தியில் தொங்கிகொண்டு இருப்பம் ஆனால் இந்த காணொளியை விட மோசமாக எமது எதிர்கால செல்வம்கள் சிதைக்கபட்டு கொண்டு இருப்பினம் அப்படி சிறுவயதில் வதைபடும் குழந்தைகள் வளர்ந்து நற்குணம் உடையவர்களாக வாழும் வாய்ப்பு குறைவு அப்படியான எதிர்கால சந்ததியை நாம் விரும்பி உருவாக்குவது போல் நாம் நடந்து கொள்ள கூடாது.

  • தொடங்கியவர்
சிறுமியைக் காப்பாற்றிய கடைசி நாள் ஒளிப்பதிவு
 
 

article_1475039163-By-line.jpg

’வாடி கெதியா, எரும மாடு... வாடி கெதியா... கெதியா வா, தேவடியாள்’, கையில் நீண்ட தடியுடன், உரத்த குரலில் அந்தச் சின்னஞ்சிறுமியை நோக்கி அள்ளி வீசப்பட்ட அந்தவார்த்தைகளால், உள்ளங்கி மட்டுமே அணிந்திருந்த நிலையில், சற்றுத் தூரத்திலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வந்த அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து பந்தாடிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி, அந்த வீடியோவைப் பார்த்த சகலரின் கண்களையும் ஒருகனம் நனைத்துவிட்டது.  

article_1475039199-0.jpg

சுமார் 4 நிமிடங்கள் 41 வினாடிகளுக்குள் காட்சிகளை அடக்கிக்கொண்ட அந்த வீடியோவிலிருந்து ‘அடியே உனக்கு அம்மாவ பற்றி விளங்காது. சரியா?... அவள் மாதிரி நினைக்காத... நினைக்காத... கெதியா வா... யாரும் இல்ல... கெதியா வா... உன்ன பிடிக்கிறத்துக்கு ஆக்களில்ல. கெதியா வா. சொன்னா கேக்கனும். கெதியா வா...’ எனக் கடுந்தொனியில் அந்தப் பெண், தான் நின்றிருந்த இடத்துக்கு குறித்த 9 வயதுடைய சிறுமியை அழைக்கின்றார்.  

இழுத்து வாராத தலைமுடியுடன், உள்ளங்கி மாத்திரம் அணிந்து கொஞ்சத்தூரத்தில் நின்றிருந்த மெலிந்த உடல் கொண்ட அச்சிறுமியும், தனது கைகளின் விரல்களைப் பிசைந்தபடியே, மெது மெதுவாக, நடக்கப் போகும் விளைவை எதிர்கொள்ளத் தயாரானவளாக அப்பெண்ணுக்கு அருகில் செல்ல முயற்சிக்கின்றாள். காட்சியின் கொடூரம் நடந்தேறுகின்றது.

article_1475039216-1.jpg

உச்சக் கோபத்தில், மதியிழந்துக் காணப்பட்ட அப்பெண், சிறுமிக்கு அருகில் சென்று, குளித்த நிலையில் தண்ணீரில் பாதி நனைந்த உடலுடன் நின்ற அச்சிறுமியின் கைகளைப் பிடித்து முறுக்கி, பற்றைத்தரையில் தள்ளி, ‘உன்ர தடிப்பு உன்னோட இருக்கனும். ஓடுவியா? ஓடுவியா?’ எனக் கேட்டு, தலைமுடியைப் பிடித்து இழுத்து தலையில் குட்டுவதுடன் காதைத்திருகி, அடி வயிற்றில் அல்லது தொடைகளில் கொடூரமாகக் கிள்ளுகிறார். தொடர்ந்து, சிறுமியின் மீது சரமாரியாக மூர்க்கத்தனமான தாக்குதல்களை, அப்பெண் மேற்கொள்ளும் காட்சிகள், அந்த ஒளிப்பதிவில் பதிந்தன.

article_1475039232-3.jpg

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியிலுள்ள வீட்டுக் காணியொன்றில் கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில், அன்றைய தினமே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு, வைரலாகப் பரவிய ஒளிப்பதிவில், காட்சியாகப் பார்க்கப்பட்டவையே இவையாகும்.

இந்த வீடியோவை இலட்சம் பேர் பார்வையிட்டும் 30,000க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பகிர்ந்ததன் எதிரொலியாக இச்சிறுமியும் சிறுமியின் சகோதரர்கள் மூவர் என நான்கு சிறார்கள், மீட்கப்பட்டு, சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடியோ வெளியாகிய அன்றைய தினம் மாலை வேளையே இக்கொடூரத்தைப் புரிந்த பெண், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டார்.  

மறுநாள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணை, கோப்பாய் பொலிஸார் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

-

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரிமை 6க்கு அமைய 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளும் உயிர்வாழும் உரிமையுடையவர்கள். கருத்துச் சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தைப் பேணல், பொருத்தமான தகவல்களைப் பெறல், இம்சை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், கல்வி கற்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் சிறுவர்களுக்கும் உள்ளது என்ற ஐக்கிய நாடுகளின் சாசனத்தை, இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த உரிமைகள் அனைத்தும் வயது, பால், இனம், நிறம், சாதி, மொழி மற்றும் மத வேறுபாடுகளின்றி வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் விதிமுறைகளாகும்.  

எனினும், இவை எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் இந்த உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றனவா என்பதும் இலங்கை போன்ற நாடுகளில் கேள்விக்குறியே.  

மூன்று தசாப்தங்களைக் கொண்ட போர்ச்சூழலும் ஓர் ஒழுங்கமைப்பைக் கொண்டிராத சமூகப் பின்னணிக் காரணங்களும், பின்தங்கிய பொருளாதார நிலைமைகளும் இவற்றையெல்லாம் இன்று பின்தள்ளச் செய்துள்ளன. இதனால் நம் நாட்டில் சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் தாராளமாக மலிந்து கிடக்கின்றன.

யுத்தம் காரணமாகக் கணவனை இழந்த மனைவியோ, மனைவியை இழந்த கணவனோ, தமது இறுதிக் காலத் தனிமையைப் போக்குவதற்காகவும் முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளைப் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கும் பொருட்டும் மறுமணம் புரிகின்றனர். எனினும், மறுமணத்தின் போது வாழ்க்கைத் துணையாக வருபவர், முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளை ‘மாற்றான் பிள்ளைகள்’ என நோக்கி, அவர்களுக்கே வினையாக மாறும் போது அவ்விடத்தில் அப்பிள்ளைகளுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதுவே இந்தச் சிறுமி விடயத்திலும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

article_1475039257-4.jpgarticle_1475039267-5.jpgarticle_1475039275-6.jpg

ஓட மாட்டேன்’ எனக் கூறிய சிறுமியிடம் ‘எவ்வளவு கத்துக் கத்தினேன்’ எனக் கேட்டு அப்பெண், பக்கத்தில் நின்றிருந்த சிறுவன் வைத்திருந்த கூறிய கத்தியொன்றைப் பறித்து, ‘பரதேசி’ எனச் சிறுமியை விளித்து முதுகில் பலமாகத் தாக்குகின்றார். அவ்வேளையில் சிறுமி எழுப்பிய அபயக் குரலை வீடியோவில் கேட்டுக் கண்கள் கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அபயக் குரலையும் பொருட்படுத்தாத அப்பெண், சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஷம்போவை ஊற்றி முகத்தில் தேய்ப்பதுடன், முதுகு மற்றும் கன்னத்தில் பலமாக அறைகின்றார். அத்துடன், அந்த ஒளிப்பதிவும் முற்றுப்பெறுகின்றது.  

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, சிறுமி தனது பிள்ளையெனவும் முன்பு எப்போதும் பிள்ளையை அடித்ததில்லையெனவும் பெண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகத் தந்தையிடம் நீதவான் வினவியபோது, தனக்கு 3 மனைவிகள் எனவும் இதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றையவர் தம்மைவிட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் தற்போதுள்ளவர் மூன்றாவது மனைவியெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அவர்கள் குறித்த தாய், அச்சிறுமியின் தாயில்லையெனவும் முதற்தாரத்தின் பிள்ளையே அச்சிறுமி எனவும் வாதிட்டனர்.  

வழக்கை விசாரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க. அருமைநாயகம், சிறுமியைத் தாக்கிய பெண்ணை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், குறித்த சிறுமியின் தந்தையையும் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.  

மேலும், வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சிறுமியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கத்தி தொடர்பான உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அவற்றை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

வீடியோ வெளியாகி சில மணித்தியாலங்களில் அது குறித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அச்சிறுமியைப் பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும், நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனினும், பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி எனும் தகவலைத் தவிர துல்லியமான தகவல்கள் எதுவும் ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, நீர்வேலி கிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் தேடுதல் நடத்தி, வீடியோவில் காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும் நீதிமன்றத்தின் துரித செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கப் பேருதவியாக அமைந்திருந்தது.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணைத் திருமண பந்தத்தில் இருந்து ஒதுக்கி விடுவதோடு, எந்தக் குழந்தையையும் வளர்ப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.  

திருமண பந்தத்தில் இணைந்து வாழும் கணவன் - மனைவிக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பிள்ளைகள் சுதந்திரமாக வாழும் உரிமை மறுக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் தாய் - தந்தை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இதனால் இவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு உரிமை, மூச்சற்றுப் போகின்றது.

இவ்வாறு நம் நாட்டைப் பொறுத்தவரையில் இன்றுவரை கணிசமானளவு சிறார்கள் தமக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உயிர்வாழ்கின்றனர்.  

‘வாழ்வதற்குத் தகுதியற்ற உயிர்கள் நீடிப்பதில் பலனில்லை’ எனக் கூறிய சர்வாதிகாரியான ஹிட்லரை, ஒரு கொடூரனாக வரலாறுகள் காட்டிய போதும் அவன், குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவன் எனக் கூறப்படுகின்றது. எனினும், சிறுவர்கள் தொடர்பில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் நெஞ்சத்தைப் பதறச் செய்கின்றன. மனிதநேயம் துளி கூட அற்றுப்போன அரக்கர் சமூகத்தில்தானா நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது.

பாதுகாக்கப்பட வேண்டியவர்களாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுதல், அச்சுறுத்தல், அடித்தல், உதைத்தல், கொலை முயற்சி, கொலை செய்தல், உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படல், பெற்றோரே விஷம் வைத்தல் மற்றும் ரயிலின் முன் தள்ளிவிடுதல் எனச் சிறுவர்கள் குறித்தான கொடூரச் செய்திகள் ஏராளம் ஏராளம். நம் கண்களுக்கு அப்பால் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த அவலங்கள் களையப்பட வேண்டும். தனி மனிதனாக இணைந்து சமூகமாகிய நாம் இவற்றை இல்லாதொழிப்பதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும்.

பாடசாலை செல்லாமையினாலேயே குறித்த சிறுமியைத் தாக்கியதாக சிறுமியைத் தாக்கிய பெண், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆக, கண்டிப்பு எனும் பெயரிலேயே இந்தக் கொடூரத்தை இவர் புரிந்துள்ளார். சிறுவர்களைக் கண்டித்தல் என்பது வேறு. தாக்குதல் என்பது வேறு. அன்பான சொற்களால் கூடச் சிறுவர்களைக் கண்டிக்கலாம். ஆனால், சிறுவர்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.  

இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்த நபர், ‘இந்தச் சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதியே அங்கு நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுமி கடைசியாகத் தாக்கப்பட்ட இந்த ஒளிப்பதிவே இன்று அச்சிறுமிக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இச்சிறுமியைப் போன்றே இன்னும் இன்னும் எத்தனையே இளம் சமூகத்தினர் எம்மால் பாதுகாக்கப்படுவதற்காகக் காத்துக்கிடக்கின்றனர். 

எனவே, சமூக வலைத்தளங்களை தினம் தினம் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் சிறார்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்வில் ஒளியூட்டுவதற்கும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/182759/ச-ற-ம-ய-க-க-ப-ப-ற-ற-ய-கட-ச-ந-ள-ஒள-ப-பத-வ-#sthash.PWonbjtz.dpuf

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது 6வயது மகளை மோசமாக தாக்குவதனை வீடியோ எடுத்தவரின் வாக்கு மூலம்.

 

நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது 6வயது மகளை மோசமாக தாக்குவதனை வீடியோ எடுத்தவரின் வாக்கு மூலம்.
யாழ். நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது மகளுக்கு தடியினாலும் , கைகளினாலும் , கத்தியிலானும் , மிக மோசமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன 
 
கடந்த வியாழக்கிழமை குறித்த சம்பவம் நடைபெற்று இருந்தது. குறித்த வீடியோ காட்சி பகிரப்பட்டத்தை அடுத்து , அது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. 
 
 
அதேவேளை அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
 
 
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளும் தாயை பொலிசார் அன்றைய தினம் இரவு கைது செய்து மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். 
 
அதனை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்ட தாயை எதிர்வரும் 7ம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , அவர்களின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார். 
 
வீடியோ எடுத்தவரின் வாக்கு மூலம். 
 
எனது அலுவலகத்திற்கு அருகிலையே சிறுமியின் குடிசை வீடு அமைந்துள்ளது. அந்த குடும்பம் மிகவும் ஏழ்மை குடும்பமாக உள்ளதனால் தினமும் சண்டைகள் சச்சரவுகள் இடம்பெறும். அது வழமையான ஒன்றாகவே இருக்கும். 
 
 
கடந்த வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் நான் குளித்துக் கொண்டு இருந்த வேளை சிறுமியின் அவல குரல் கேட்டது. நானும் வழமையாக அந்த வீட்டில் நடக்கும் சச்சரவு தான் என எண்ணிக் குளித்துக் கொண்டு இருந்தேன்.
 
ஒரு கட்டத்தில் சிறுமியின் அவல குரல் , பெரிதாக கேட்க தொடங்க நான் எனது அலுவலக மதிலால் எட்டி அந்த குடிசை யை பார்த்தேன். அங்கு அந்த சிறுமியை , அந்த பெண் தடியினால் மிக மூர்க்க தனமாக தாக்கிக் கொண்டு இருந்தார். சிறுமி நிலத்தில் வீழ்ந்து அவல குரல் எழுப்பிய வண்ணம் இருந்தது.
 
என்னால் என்ன செய்வது என்ற தெரியவில்லை.  மதிலால் பாய்ந்து சென்று சிறுமியை காப்பாற்ற எண்ணினேன். ஆனால் அந்த குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து நான் அவ்வாறு சென்றால் என் மீது பழி சுமத்த பட கூடும் எனும் எண்ணம் தோன்றியதனால் உடனே அலுவலகத்திற்குள் சென்று புகைப்பட கருவியை எடுத்து அந்த சிறுமி தாக்கப்படுவதை ஒளிப்பதிவு செய்தேன். 
 
அந்த ஒளிப்பதிவை நேரே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுப்போம் என முதலில் எண்ணினாலும், அது எனக்கு வேறு விதத்தில் ஆபத்தாக அமையுமோ எனும் அச்சம் காரணமாக அந்த வீடியோ ஒளிப்பதிவை எனது முகநூலில் பதிவேற்றம் செய்தேன். 
 
அதன் ஊடாக பலரின் பார்வைக்கு சிறுமி தாக்கப்படும் காட்சி சென்றது. அத்துடன் பல ஊடகங்களிலும் பகிரப்பட்டன.  அதன் மூலம் சிறுமி  காப்பற்றப்பட்டு உள்ளார்.  என சிறுமி தாக்கப்படுவதை ஒளிப்பதிவு செய்த நபர் தெரிவித்தார். 
 
 
சிறுமியின் குடும்பமும் , பின்னணியும்.
 
பருத்தித்துறை வீதியில் நீர்வேலி கந்தசுவாமி ஆலய சந்திக்கு அருகில் உள்ள தென்னமரங்கள் சூழ்ந்த ஒரு காணியின் நடுவே சிறிய குடிசை. அதுவே அந்த சிறுமி வாழ்விடம். 
 
 
அந்த குடிசை தனியே படுத்து உறங்குவதற்கு மாத்திரமே பயன்படுத்த படுகின்றது. சமையல் எல்லாம் குடிசையின் வெளியில் திறந்த வெளியிலையே.. 
 
அங்கு சிறுமியின்  தாய் , தகப்பன் , தங்கை , மற்றும் தம்பி ஆகியோர் வசிக்கின்றார்கள்.  மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். சிறுமி நீர்வேலியில் உள்ள பிரபலமான கல்லூரியில் தரம் நான்கில் கல்வி கற்று வருகின்றார்.
 
தினமும் தனது வாழ்விடத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்தே சென்று தனது கல்வியை தொடருவார். பாடசாலை மீண்டும் வீடு அதுவே சிறுமியின் வாழ்கை. 
div%3E%3Cdiv%20style= 
சிறுமியின்  தகப்பனின்  பின்னணி, 
 
சிறுமியின் தகப்பன் 60 வயதுடைய நபராபர். அவரது தற்போதைய தொழில் சிரட்டை விற்பனை. இவர் பிறந்தது திருகோணமலை. பின்னர் அங்கிருந்து கடந்த 1988ம ஆண்டு யாழ்ப்பணத்திற்கு தொழில் தேடி வந்து , யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துக் கொண்டார். 
 
திருமணத்தின் பின்னர் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. அவர்களில் நால்வர் சுகவீனம் காரணமாக சில வருட இடைவெளிகளில் மரணமடைந்தனர். அதன் காரணமாக மனைவி மனநோயால் , பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சில காலத்தின் பின்  கடந்த 2005ம ஆண்டு மரணடைந்தார். 
div%3E%3Cdiv%20style= 
மனைவி மரணமடைந்த சில மாதங்களில் சிறுமியின் தகப்பனார் 49 வயதில் , இரண்டாம் தரமாக ஒரு பெண்ணை மணம் முடித்தார். அந்த பெண்ணை மணம் முடித்ததும் முதல் மனைவியின் பிள்ளையின் தொடர்புகள் அற்று போனது.
 
பின்னர் இரண்டாம் மனைவியின் ஊடாக இவர் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனார்.  இரண்டாம் திருமணம் முடித்து ஒரு வருட காலப்பகுதிக்குள் மூன்றாம் திருமணத்தை , தனது 50 ஆவது வயதில் செய்து கொண்டார்.
div%3E%3Cdiv%20style= 
மூன்றாம் திருமணம் காரணமாக இரண்டாம் மனைவிக்கும் இவருக்கும் இடையில் சண்டை சாச்சரவுகள் ஏற்பட தொடங்கின. அதனால் கடந்த 2007ம ஆண்டு இரண்டாம் மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.
 
அதன் பின்னர் மூன்றாம் மனைவியுடன் , வாழ்ந்தார். மூன்றாம் மனைவி ஊடாக , இரு பெண் பிள்ளைகளுக்கும் , ஒரு ஆண் பிள்ளைக்கும் தகப்பன் ஆனார். அத்துடன் அவரது மூன்றாம் மனைவி தற்போது , ஆறு  மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
 
பாடசாலை செல்ல மறுத்ததால் தான் அடித்தேன். 
 
கடந்த வியாழக்கிழமை தாய் சிறுமியை தாக்கியதை அடுத்து கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். 
div%3E%3Cdiv%20style= 
அதன் போது சிறுமியின் சார்பில் , நான்கு பெண் சட்டத்தரணிகள் உட்பட ஆறு சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையானார்கள். 
 
நீதிமன்ற விசாரணையின் போது எதற்காக சிறுமியை இவ்வளவு மூர்க்க தனமாக தாக்கினீர்கள் ? என பதில் நீதிவான் தாயிடம் கேட்ட போது , பாடசாலை செல்ல மாட்டேன். என அடம் பிடித்துக் கொண்டு இருந்ததால் தான் தாக்கினேன். இதுவரை எனது பிள்ளையை நான் கை நீட்டி அடிக்க வில்லை. அன்றைய தினம் மாத்திரமே அடித்தேன். என பதில் நீதிவானுக்கு பதில் அளித்தார். 
 
அதன் போது சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மோகனதாஸ் சிறுமி , குறித்த பெண்ணின் மகள் இல்லை , சிறுமியின் தகப்பனின் இரண்டாம் தாரத்தின் பிள்ளை என அயலவர்கள் தெரிவித்த கருத்தை மன்றில் சுட்டிக்காட்டினார். 
 
அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் நீதிவான் உத்தரவு இட்டார் அத்துடன் , குறித்த வீடியோ காட்சியை மொரட்டுவா பல்கலைகழகத்திற்கு அனுப்பி ஆய்வுக்கு உடப்டுத்தும்மாறும் , சிறுமியின் தகப்பனார் பற்றியும் விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்குமாறும் , சிறுமி தாக்கப்பட்டது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெறுமாறும். பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.
div%3E%3Cdiv%20style= 
அத்துடன் , சிறுமியின் தாயாரை எதிர்வரும் 7ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , சிறுமி மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார். 
 
 
சிறுமிக்கு உதவி கரம் நீட்ட பலர் தயார்.
 
சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்ட பலர் சிறுமியை மீட்குமாறும். அந்த சிறுமிக்கு உதவ தாம் தயார் எனவும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக , கருத்துக்களை வெளியிட்டனர்.
 
தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக இந்த பிரச்சனை அனுகப்படுவதனால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே உதவிகளை மேற்கொள்ள முடியும்.
 

தற்போது அந்த சிறுமியினுடையதும் , சிறுமியின் சகோதர்களுடைய வாழ்வு சிறக்க வேண்டும். என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அத்துடன் இந்த சிறுமி போன்று வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதும் அனைவரதும் பிரார்த்தனை ஆகும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136426/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 ஓர் குடும்பம், உறவுகள் என  பின்னப்பட்டு வாழ்ந்த எமது சமுதாயம் போரினால் உறவுகளை, துணையை, சொந்தஇடம், தொழில் என எல்லாவற்றையும் இழந்து தனி மரங்களாக, பெரும்பாலும் பெண்கள் தனிமையில், தன்னம்பிக்கை அற்றவர்களாக வாழவேண்டிய நிலைமையில் உள்ளார்கள். இதனாலேயே கணவனை இழந்தவர்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும் வேறொரு துணையை நாடுகிறார்கள். ஒரு பிரச்னையிலிருந்து வெளியேற இன்னோரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து வெளியேற முடியாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை, அதற்குரிய  காரணிகளை பிள்ளைகளிலே காண்கிறார்கள். அல்லது குழந்தைகளை தனியே விட்டு தொழிலுக்கு செல்வதால் பிள்ளைகளின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. இதனால் இன்று குழந்தைகள் காரணமில்லாமல் தாக்கப்படுகிறார்கள். இந்தக் குழந்தைகளும் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை அற்றவர்களாக, பயந்தவர்களாக, எதிலும் ஈடுபாடு அற்றவர்களாக, அல்லது சமூக விரோதிகளாக உருவாகுகிறார்கள். எங்களது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கையும், கல்வியறிவும், ஆன்மீக அறிவும் ஊட்டப்படவேண்டும். முன்புபோல் ஒவ்வொருவரும் தான் சார்ந்த சமுதாயத்தில் விழிப்புணர்வுடனும், அக்கறையுடனும், பொறுப்புடனும்  வாழ்ந்தாலேயன்றி, இவற்றிலிருந்து நாம், நமது சமுதாயம்  மீழுவது கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.