Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

ASIAN BRIDE LUXE WESBSITE Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane Photographer: Mya Media Photography

மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதி ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடட்ப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது.

தேசியம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட வியாபாரம் மக்களின் பிணங்களின் மீது வியாபாரம் நடத்துவதைப் பொதுப்புத்தியாக மாற்றியது. கொலையையும், கொள்ளையையும், நயவஞ்சகத்தனத்தையும் நியாயப்படுத்தியது. ஏலவே உலகைச் சிதைத்துக்கொண்டிருந்த நுகர்வுக் கலாச்சாரத்தை புதிய வெறித்தனத்தோடு ஈழத்தை நோக்கி ஏற்றுமதி செய்த சந்ததி இன்றும் தேசியத்தின் பெயரால் பணத்தைச் சுருட்டுவதற்குப் புதிய வழிமுறைகளை நாடிக்கொள்கிறது.

அடையாளங்களையும், போரில் மரணித்துப் போனவர்களையும், போராளிகளையும், போர்க்குற்ற விசாரணையையும் கலாச்சாரத்தையும் விற்றுப் பிழைக்க அது கற்றுக்கொண்டுள்ளது.இரத்தம் தோய்ந்த பணத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இக் கும்பல்கள் தமது வியாபாரத்தை இன்னும் வெற்றிகரமாகவே நடத்தி வருகின்றன.

ESSENTIALS: Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane Photographer: Mya Media Photography ESSENTIALS: Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane Photographer:

தாம் கையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையிலுள்ள சில முகவர்களைப் பயன்படுத்தும் இக் குழுக்கள் அங்கு உதவித்திட்டம் என்ற பெயரில் சிறிய தொகைப் பணத்தை செலவு செய்கின்றன. உதவி என்ற பெயரில் அவர்கள் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரணை அமைத்துக்கொள்கின்றனர். மக்களதும் போராளிகளதும் இரத்ததம் தோயந்த அவலத்தைப் பயன்படுத்தி கொள்ளையிடப்பட்ட பணம் என்று தெரிந்துகொண்டே சில உள்ளூர் முகவர்கள் கொள்ளைக்காரர்களுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது அருவருக்கத்தக்க உண்மை.

இவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட புதிய சந்ததி ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி மனித உழைப்பின்றி பணம் சம்பாதித்துக்கொள்வதை நியாயமானதாகக் கருதுகிறது. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தியாகக் கட்டமைக்கப்படும் ஆபத்தான சூழலே இன்றைய யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியதரவர்க்க சிந்தனையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

இதே போன்ற புதிய சந்ததி ஒன்றின் திருமண விழா தொடர்பாக சண் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான தகவல் கட்டுரை ஒன்று நமது புலம்பெயர் சமூகத்தின் ‘தேசிய’ வியாபாரத்தோடும் தொடர்புடையது.
சண் நாழிதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

‘ஒரு தொழிற்சாலையில் பக்கிங் வேலையில் சேர்ந்துள்ள கிஷோக் தவராஜா ஜோர்ஜ் குலூனி போன்று திருமண வைபவம் ஒன்றை நடத்தியுள்ளார்’ (Kisok Thavarajah, who also had a stint as a packer in a factory, ‘got married like George Clooney’) எனது கணவரே அனைத்துச் செலவுகளையும் பொறுப்பெடுத்துக்கொண்டார், ஜோர்ஜ் குலூனி போன்று திருமண வைபவத்தை நடத்தி முடித்தார் எனக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்டவர் கிஷோக் இன் மனைவியான கிருதிகா ஸ்கந்ததேவா என்கிறது சண் நாளிதழ்.

லண்டனில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தமது நண்பர்கள் உறவினர்கள் சூழ நடத்தப்பட்ட இத் திருமண வைபவத்தின் ஒரு நாளைக்கான செலவுத் தொகை ஒரு லட்சம் பவுண்ஸ்.

கிஷோக், கிருதிகா என்ற இரண்டு தமிழர்களின் திருமணத்திற்கு 400 விருந்தாளிகள் சமூகமளித்திருந்தனர். தலைக்கு £150 விருந்து வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் ‘அறுக்கப்பட்ட’ கேக் இன் விலை £3500. அவர்கள் உட்கார்ந்து திருமணவைபவத்தை நடத்திய மண்டபத்தின் நாள் வாடகை (£60000) அறுபதாயிரம் பவுண்ஸ்.

ASIAN BRIDE LUXE WESBSITE Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane ASIAN BRIDE LUXE WESBSITE
Name of Bride & Groom:
Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva
Hometown(s):
Brixton/Harrow, London
Date of wedding & registry:
16th July 2016
Catering:
Ragamama Ragasaan
Venue:
Grosvenor House, Park Lane

இவ்வளவு செலவுகளையும் ஏற்றுக்கொண்ட கிஷோக்கின் வருடாந்த வருமானம் (£16000 /Year) பதினாறாயிரம் பவுண்ஸ்கள் மட்டுமே என்கிறது சண். திருமணம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் கிஷோக்கிற்கு எட்டுமாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. வங்கி அட்டை மோசடி தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே கிஷோகிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

4,400 பவுண்சை மட்டுமே மோசடி செய்ததாகக் கூறி கிஷோக் சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டார் என்று அவரது நண்பர்கள் கிஷோக்கின் திறமையைப் புகழ்ப்பாடிக்கொள்ள புதிய இளைஞர் கூட்டம் அவதானித்துக்கொண்டிருக்கிறது.
கிஷோக்கின் ஆடம்பர திருமண வைபவத்தின் முன்னான தகவல்கள் சண் பத்திரிகையில் வெளியாகவில்லை.

மணப்பெண் கிருதிகாவின் தந்தை ஸ்கந்ததேவா லண்டனில் செல்வாக்கு மிக்க வர்த்தகர் என்பது மட்டுமல்ல, அறியப்பட்ட ‘தேசிய’ செயற்பாட்டாளர். முன்னர் பீ.ரீ.எப் இன் பொறுப்பாளராகவிருந்த ஸ்கந்ததேவா, இப்போது மாவீரர் துயிலும் இல்லம் என்ற விலையுயர்ந்த தமிழர்கள் சுற்றுலா மையம் ஒன்றை அமைத்துவரும் குழுவின் இணைப்பாளர். இதற்கான ஆரம்ப வைபவம் கூட ஒரு நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த இல்லத்தை அமைப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தேனிசை செல்லப்பா என்பவர் அழைக்கப்பட்டு இசை நிகழ்சிகளை லண்டனின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இவர்கள் நடத்தினார்கள் என்பது அறியப்பட்ட தகவல்.

புலம்பெயர் ‘தேசிய வியாபாரம்’ இன்னும் செத்துப்போகவில்லை என்பதற்கு அந்த இல்லம் ஒரு வாழும் உதாரணம்.

கிஷோக் போன்ற 25 வயது இளைஞர்கள் குறுக்கு வழிகளில் பணம் திரட்டிக்கொள்ள முன்னுதாரணமாக இன்றைய தமிழ்ச் சமூகத்தின் தலைவர்களாக வரித்துக்கொண்டவர்களே காரணம் என்பதற்கு இத்திருமணமும் கிஷோக்கின் கைதும் குறியீடுகள்.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான சுலோகம் தலை கீழாக மாறிவிட்டது, அவர்கள் புதைகுழிகளைப் பண மரங்களாக்கும் நயவஞ்சகர்கள் கூட்டம் எமது சமூகத்தை நீண்ட இருளுக்குள் அமிழ்த்தியுள்ளது. விடுதலையையும் பணத்தையும் குறுக்கு வழிகளின் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்ற பொதுப் புத்தியை புதிய சந்ததியின் மத்தியில் தோற்றுவித்துள்ளது. பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக ‘தேசிய வியாபாரிகளையும்’ பிழைப்புவாதிகளையும் அரசியல் நீக்கம் செய்வது அவசியமாகிறது.

http://inioru.com/background-information-of-the-wed-celebration-held-in-london/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போராளிகளுக்கு என்ன வெட்டி புடுங்குறார் ??

வெறும் பிதட்டல் கட்டுரை.

வெறும் சேறுபூசும் அசிங்கம் மட்டும்தான் இதில் இருக்கிறது 
(அவர்கள் தப்பானவர்களாக இருக்கலாம்)
களவிட்கும் அவர்களுக்கும் ஏதும் தொடர்பு இருந்தால் அதை பற்றி எழுத வேண்டும்.
அல்லது அவர்கள் முன் பின் தெரிந்தால் அதை பற்றி எழுத வேண்டும்.

எதோ அவர்கள்தான் போராளிகளுக்கு வைத்தியம் செய்ய பிறந்த மாதிரியும் 
இவர்கள் சரி பிழை காண பிறந்த மாதிரியும் 
அவிக்கும் இவரை விட 
எனக்கு என்னமோ அவர்கள் மேல் என்றே தெரிகிறது  

  • கருத்துக்கள உறவுகள்

 :222_hear_no_evil:

 :221_see_no_evil:

 :223_speak_no_evil:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

1...இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது

2...  ஏலவே உலகைச் சிதைத்துக்கொண்டிருந்த நுகர்வுக் கலாச்சாரத்தை புதிய வெறித்தனத்தோடு ஈழத்தை நோக்கி

3... இன்றைய யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியதரவர்க்க சிந்தனையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

 

உவையின்ட "புலம்பல் கலாச்சாரம் எப்ப அடங்குமோ "tw_tounge_wink:

யாழ்ப்பாணத்தை சோசலிச பூமியாக்க உவையள் லண்டனிலிருந்து புரட்சி செய்யப்போயினம் போலகிடக்கு

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கான விதையை எங்கிருந்தும் ஊன்றலாம்?

இனியொருவில் வந்தால் ஒரு மார்க்கிஸப் பார்வை இருக்கும். ஆனால் இதில் முக்கியமான விடயம் தவறான பாதையில் பெரும்பணம் ஈட்டுவது தவறில்லை என்று நினைக்கும் நம்மவர்களின் குணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரக்கணக்கான கள்ள தமிழர்களில் பாவம் ஒருவன் மாட்டுப்பாட்டுடடான்.

யாழில் உள்ள உயர் பதவியில் உள்ள / உயர்வான ஆசிரியர்களின் பிள்ளைகள் லண்டனில் காட் அடிப்பதில் புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

80:20 ......நல்லாய்யிருக்கிற 80 வீதத்தைப்பற்றி பார்ப்போம் குட்டிச்சுவரான 20 வீதத்தை பற்றி பேசிப்பிரயோசனமில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 வீதம் என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த திருமணத்திற்கு போனவர்கள் அவரை வியந்து மெச்சியிருப்பார்கள். வெட்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

M.P. க்கு இலண்டன்காரர் மேலுள்ள பழைய கறள் இன்னும் போகவில்லை?

2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த இலங்கை தமிழர்கள்: அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிசோக் தவராஜா. நடராஜா நந்தகுமார், ஜகாமித்ரா விஸ்வநாதன் ஆகிய 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் கடந்த நவம்பர் மாதம், ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெராவை பயன்படுத்தி பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

2 மணிநேரத்தில் Sutton பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து £4,400 தொகையை கொள்ளையிட்டுள்ளனர்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

மேலும், இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்துவந்துள்ளனர். இந்த கொள்ளையிட்ட பணத்தின் மூலம் கிசோக் தவராஜா என்பவர் அனைவரும் வியக்கம்படி ஆடம்பர திருமணம் வேறு செய்துள்ளார்.

ஏற்கனவே பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இவ்வாறு நிலையிலேயே, இந்த திருமணத்தின் மூலம் இவர்கள் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இவர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்களா? என்பதை அறிய பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

dailymail.co.uk

 

http://news.lankasri.com/uk/03/111303

 

 

 

 

Sutton Police

Three men who fitted a card jamming device and camera to an external bank ATM machine in Sutton Town Centre stole a total of £4,400 pounds in just two hours – but were caught red-handed by the Sutton borough’s CCTV system.

Nadarajah Nanthakumar, aged 34, Kisok Thavarajah, aged 25, and Jahamithra Visvanathan, aged 25, had fitted two devices to the cash machine at Barclays, High Street, Sutton.

One was a ‘Lebanese loop’ device designed to prevent bank cards from coming out of the machine and the other was an iPod Nano to record victims keying in their PIN.

Two women on their way to work on Friday, 13 November 2015 stopped at the ATM between 07:35-07:45hrs to check the balance on their accounts.

When they came to use the machine, they found they were unable to retrieve their cards and believed the machine had swallowed them. The both continued to work to return to the bank later that morning to report what had happened only to be informed that a total of £4,400 had been stolen from their accounts - most of their money withdrawn from Barclays in Alexandra Road, Wimbledon.

However, the suspects hadn’t reckoned with Sutton borough’s CCTV cameras – and the persistence of the officers determined to bring the culprits to justice.

Sutton Central PC Colin Farmer, who led the investigation, used the CCTV system to identify a BMW car which he suspected of being connected to the fraud. It was through this vehicle that a number of suspects were identified.

Building a case to put before the Courts involved PC Farmer trawling through many hours of CCTV footage to track the suspects on foot near the Cock & Bull pub in Sutton Town Centre and in their vehicle as it drove away from Sutton Town Centre on the 13 November as they made their way to withdraw the money in Wimbledon.

At Croydon Crown Court on Friday, 23 September, all three were sentenced after pleading guilty to conspiracy to defraud.

Nanthakumar (16.03.1982), of Edgehill Road, Mitcham, and Thavarajah (07.05.1991), of Brixton Road, Lambeth, were sentenced to ten and eight months’ imprisonment respectively. Visvanathan (23.11.1990), of Dalton Avenue, Mitcham, received four months’ imprisonment suspended for two years.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, M.P said:

பல்லாயிரக்கணக்கான கள்ள தமிழர்களில் பாவம் ஒருவன் மாட்டுப்பாட்டுடடான்.

யாழில் உள்ள உயர் பதவியில் உள்ள / உயர்வான ஆசிரியர்களின் பிள்ளைகள் லண்டனில் காட் அடிப்பதில் புலிகள்.

உன்மையாவா எம் பி  மேலதிக தகவல்களையும்  தாங்கோ

இந்த மோசடி பற்றி வேறு விதமாகவே செய்திகள் வருகிறது  அப்படி என்ன நடந்திருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது.. அண்மையில்.. ஒரு சாரி பெஸ்ரிவல்.. அது தாப்பா.. சாமயத்திய வீடு.. பல ஆயிரம் பவுன்ஸ்கள்.. புரண்டு விளையாடிச்சு தாம். ஆனால்.. இத்தனைக்கும்.. வந்தது முதல் அரசாங்கக் காசிலும் கவுன்சில் வாடகையிலும் தான் வாழ்க்கை ஓடுவதாக ஓட்டிக்கொண்டிருக்கினம். tw_blush:

ஆனால்.. இதில் இன்னொரு தன்ர தமிழ் தேசிய வெறுப்பையும் கலந்து செய்தி ஆக்கி இருப்பது கொள்ளைக்காரனிலும் கேவலம். :rolleyes:

இது முன்னர் கனடாவில் அடிதடி என்றவுடன்.. எல்லாம் புலிகள் கற்றுக்கொடுத்தது என்ற பப்பே பாடியவர்களின் தொடர்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அடகோதாரி..... கொள்ளையடிச்சவன் எதோ எங்கன்ட காசை கொள்ளையடிச்சமாதிரி குத்திமுறிய ,அந்த நாட்டு நீதிபதியின்ட தீர்ப்பை பார்த்தியளே ....தண்டனை ஒரு வருடத்திலும் குறைவு.... 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள்ளும் தேசியம்???

ஒவ்வொரு தனி மனிதருடைய தப்புகளுக்குள்ளும் தேசியத்தை செருகுவோரே உண்மையில் வயிறு வளர்ப்பவர்கள்.

இது பெரும்  தேசியக்குற்றமாகும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதற்குள்ளும் தேசியம்???

ஒவ்வொரு தனி மனிதருடைய தப்புகளுக்குள்ளும் தேசியத்தை செருகுவோரே உண்மையில் வயிறு வளர்ப்பவர்கள்.

இது பெரும்  தேசியக்குற்றமாகும்..

இனியொருகாரர் உண்டியல் குலுக்கி வயிறு வளர்க்கவில்லை. மோசடி செய்த மாப்பிளையின் மாமனார் பிரபலமான (முன்னாள்) தேசியச் செயற்பாட்டாளர். 

தேசியக் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காது என்று தெரிந்துதான் பெரும் முதலாளிகள் சுருட்டியதைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிவரும் காலங்களில் கள்ளமட்டை கள்ளக்காசு எல்லாம் தேசிய பட்டியலுக்குள் அடக்கிவிடப்படுவார்கள்.
குப்பன் சுப்பன் எல்லாருக்கும் இனி ஓப்பன் விசா விசா....:cool:  ப்

Edited by குமாரசாமி
ப்

  • கருத்துக்கள உறவுகள்

கள்வரை... தேசியத்துக்குள் முடிச்சு ப் போடுவது சரியாக படவில்லை.
வருட வருமானம் 17´000 பவுண்ஸ் எடுப்பவர், 1,000,000 பவுண்சில் எப்படி திருமணம் செய்தார் என்பதற்கு, 
வருமான வரித்துறை இவரை விசாரிக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது தான்... நம்மவர் தமது சடங்குகளை அதிக ஆடம்பரம் இல்லாமல் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில வியாபாராம் செய்கின்ற ஒருவர் தன்ட மருமகனின்ட எப்படி இவ்வளவு காசு வந்தது என்று தெரியாமல் தன்ட மகளை ஒரு கள்ளனுக்கு கட்டிக் கொடுப்பாராம். இதை நம்புறத்திற்கும் ஒரு கூட்டம் இருக்கு...ஒரு பெரிய களவாணி,சின்னக் களவாணியை மருமகனாக்கியிருக்கு...சின்னது மாட்டிட்டுது.பெரிது எப்ப மாட்டப் போதுகு என்று பார்ப்போம்.

லண்டனில இருக்கிறவர்கள்,அதுவும் ஹரோவில இருக்கிறவர்களுக்கு ஸ்கந்தா எப்படி புலியின்ட பெயராலே காசு சேர்த்தான்,சேர்த்து கொண்டு இருக்கிறான் என்பதும் தெரியும்...யாழ்கள் ஆட்கள் உந்த கள்ளங்களுக்கு வக்காலது வாங்குவதைப் பார்த்தால் உவர்களும் இப்படி ஆட்டையைப் போடுகின்ற ஆட்களோ என்று சந்தேகமாய் இருக்குது.

புத்தன் அன்டைக்கு அந்த காசு எடுக்கும் இயந்திரத்தில் எம்மடவர்கள் யாராவது காட்டைப் போட்டு இருந்தால் அவர்களது காசும் போயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் புலிகள் சார்பில் கூட்டமாக வந்து காசு சேர்க்கும் கதவு தட்டுபவர்களில், ஸ்கந்தாவும் ஒருவர்.

அவர் வருவது முக்கிய காரணத்துக்காக. அவர் அடிப்படையில் ஒரு மோர்கேஜ் புரோக்கர்.

பணம் கேட்க்கும் போது, மக்கள் கை கடிக்குது, இப்ப வசதி இல்லை. கிரெடிட் காட்டுகள் எல்லாம் நிறைந்து விட்டன என்றால், ஸ்கந்தா நிமிர்ந்து உட்க்காருவார்.

உங்களுக்கும் கிரெடிட் காட்டுகள் எல்லாம் நிறைந்து விட்டன என்றால் கூட வட்டி எல்லா கட்டுறியள். வட்டியை குறைத்துக் கட்டுறதும் ஆகுது, போராடடத்துக்கும் உதவுறது ஆகுது. கொன்சாலிடேஷன் லோன் ஆக எடுத்தால் எல்லாம் ஈஸியா போயிடும். அநியாயத்துக்கு எல்லோ வட்டியை கட்டுறியள் என்று மெதுவா கதையை கொடுத்து ஆட்களை மடக்குவார்.

நான் மோர்கேஜ் அலுவல் எல்லாம் ஒரு பிரச்னை இல்லாமல் செய்து தருவன்.  யோசியாதீங்கோ... நாட்டுக்கு தானே செய்யிறியள். சின்ன தொகை தானே என்று மேலும் நீட்டி முழக்க... மக்கள் சிக்குவர்.

கிடைக்கும் தொகையில் இயக்கத்தின் உத்தியாகபூர்வ கொமிசன். மேலதிகமாக வங்கிகள் ஒவ்வொரு டீலுக்கும் தரும் கொமிசன் என பணம் பார்த்தார்.

அந்த பணத்தினை உடனடியாக, ரியல் எஸ்டேட்டினை வாங்கி முதலீடு செய்து பெரும் முதலை ஆனார்.

இன்று அவரது அந்த பணமே கலியாணச் செலவுக்கு... அதேவேளை... எத்தனுக்கு எத்தன்.... இல்லாமலா...

இன்னுமொரு திருட்டுக் கோஸ்ட்டி..... கை நிறையக் காசு தரும், பெரிய்ய்ய்ய வேலை செய்வதாக பூச் சுத்த.... ஊருக்கே பூச் சுத்தியவர் அவிஞ்சு போனார்.

ஊரெல்லாம் அதிசயிக்க மக்களுக்கு கலியாணம், செய்தவர், மருமகன் கம்பி எண்ணப் போக, ஊர் அதிசயத்துப் போனதால், கவலையுடன் இருக்கிறார். .....:rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிக்கும் பணம்...
ஒரு நாளும் நிலைக்காது என்பதுடன், பெருத்த அவமானத்தை கொண்டு வரும் என்பதற்கு...
இந்தச் சம்பவம்,  நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய செயல்பாட்டாளரோடு"  சார்ந்த குடும்பம், குழாம் எனும் போது 
வெறுமனே வெட்கி தலை குனியும் செயல் அல்ல, கூடவே ஆத்திரம், அசிங்கம், அவர் முகங்களில் காரி உமிழும் உணர்வையும்  ஏற்படுத்துகிறது 
இந்த பன்னாடைகளை ஒட்டு மொத்தமாக லண்டன் வாழ் சமூகம் ஒதுக்கி, அவர்கள் குறித்த மேலதிக அறியப்பாடாத அவர்களின் மொள்ள மாறித்தனங்களையும் வெளிக்கொண்டு வருவதே சரியானதை இருக்கும்.

சாதாரணமாக களவுகளையும் மொள்ளமாரி தனத்தை செய்பவரை காட்டிலும் இந்த "தேசிய" சாயம் பூசி ஊரார் பணத்தில் சுக போகம் காணும் மலம் திண்ணிகளை இனம் காண்போம். இதுவும் கூட "தேசிய" கடமையே.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

முன்னர் புலிகள் சார்பில் கூட்டமாக வந்து காசு சேர்க்கும் கதவு தட்டுபவர்களில், ஸ்கந்தாவும் ஒருவர்.

அவர் வருவது முக்கிய காரணத்துக்காக. அவர் அடிப்படையில் ஒரு மோர்கேஜ் புரோக்கர்.

பணம் கேட்க்கும் போது, மக்கள் கை கடிக்குது, இப்ப வசதி இல்லை. கிரெடிட் காட்டுகள் எல்லாம் நிறைந்து விட்டன என்றால், ஸ்கந்தா நிமிர்ந்து உட்க்காருவார்.

உங்களுக்கும் கிரெடிட் காட்டுகள் எல்லாம் நிறைந்து விட்டன என்றால் கூட வட்டி எல்லா கட்டுறியள். வட்டியை குறைத்துக் கட்டுறதும் ஆகுது, போராடடத்துக்கும் உதவுறது ஆகுது. கொன்சாலிடேஷன் லோன் ஆக எடுத்தால் எல்லாம் ஈஸியா போயிடும். அநியாயத்துக்கு எல்லோ வட்டியை கட்டுறியள் என்று மெதுவா கதையை கொடுத்து ஆட்களை மடக்குவார்.

நான் மோர்கேஜ் அலுவல் எல்லாம் ஒரு பிரச்னை இல்லாமல் செய்து தருவன்.  யோசியாதீங்கோ... நாட்டுக்கு தானே செய்யிறியள். சின்ன தொகை தானே என்று மேலும் நீட்டி முழக்க... மக்கள் சிக்குவர்.

கிடைக்கும் தொகையில் இயக்கத்தின் உத்தியாகபூர்வ கொமிசன். மேலதிகமாக வங்கிகள் ஒவ்வொரு டீலுக்கும் தரும் கொமிசன் என பணம் பார்த்தார்.

அந்த பணத்தினை உடனடியாக, ரியல் எஸ்டேட்டினை வாங்கி முதலீடு செய்து பெரும் முதலை ஆனார்.

இன்று அவரது அந்த பணமே கலியாணச் செலவுக்கு... அதேவேளை... எத்தனுக்கு எத்தன்.... இல்லாமலா...

இன்னுமொரு திருட்டுக் கோஸ்ட்டி..... கை நிறையக் காசு தரும், பெரிய்ய்ய்ய வேலை செய்வதாக பூச் சுத்த.... ஊருக்கே பூச் சுத்தியவர் அவிஞ்சு போனார்.

ஊரெல்லாம் அதிசயிக்க மக்களுக்கு கலியாணம், செய்தவர், மருமகன் கம்பி எண்ணப் போக, ஊர் அதிசயத்துப் போனதால், கவலையுடன் இருக்கிறார். .....:rolleyes:

ஆரம்பத்தில்  இது எவருடன் சம்பந்தப்பட்டது என்பது தெரியாது

என்னுடைய கருத்தெல்லாம்

எது நடந்தாலும்  தேசியத்தையும் அதனோடு நின்றவர்களையும் இழுப்பது மட்டும்  தான்

இந்த திருமணத்தில் எனது பதிவு

பிள்ளைகளின் திருமணத்தில் பெற்றோரின் சம்மதமும் விசாரிப்பும் 

1வீதம் என்பதினூடு மட்டுமே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தா மாவிரர் நாளில் முன்னுக்கு நின்ற ஆள். மாவீரர் நாள் 2 பிரிவாக நடக்கிறதுக்கும் இவர் உடந்தை. மாவPரர்நாளுக்கு ரிக்கற் போட்டு பணம் வசூலித்ததிலும் இவர் பங்கு இருக்கிறது. இதை அவர் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது பார்த்த ஞாபகம் இருக்கிறது..தேசியச் செயற்பாட்டாளர்கள் எல்லோரும் நல்லவர்களுமில்லை. செயற்படாமல் இருப்பவர்கள் எல்ருலோரும் தேசியத்திற்கு எதிரானவர்களும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தாவின் தனிப்பட்ட அவலத்தில் எல்லோரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.

அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர் ஊர் உத்தியோகத்தில் பிசி. பிள்ளைகளை கவனிக்க நேரம் இருக்கவில்லை போல் உள்ளது.

கல்வி கற்க என வெளியே சென்று வந்த மூத்தவர் தான் இந்த, திருட்டுக்கு கும்பலின், bmw கார் எடுப்புகளில், காதல் வலையில் வீழந்து... பிடிவாதத்தால் இன்று தந்தையையும்... தாயையும்... குடும்பத்தினையும் அவலத்தில், அவமானத்தில் இழுத்து விடடார்.

சொல்லி வளர்த்து இருக்க வேண்டும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

ஸ்கந்தா மாவிரர் நாளில் முன்னுக்கு நின்ற ஆள். மாவீரர் நாள் 2 பிரிவாக நடக்கிறதுக்கும் இவர் உடந்தை. மாவPரர்நாளுக்கு ரிக்கற் போட்டு பணம் வசூலித்ததிலும் இவர் பங்கு இருக்கிறது. இதை அவர் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது பார்த்த ஞாபகம் இருக்கிறது..தேசியச் செயற்பாட்டாளர்கள் எல்லோரும் நல்லவர்களுமில்லை. செயற்படாமல் இருப்பவர்கள் எல்ருலோரும் தேசியத்திற்கு எதிரானவர்களும் இல்லை.

இப்பத்தயான், ஒக்ஸ்போட் துயிலும் இல்லம் பிளான் ?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.