Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது.

இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

இதற்குப் பிறகு, கீழடியில் மாநில அகழாய்வுத் துறையாவது தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2017-2018ல் பட்டறைப் பெரும்புதூரிலும் கீழடியிலும் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவிடம் விண்ணப்பித்தது. இதற்கென மாநில அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், கீழடியில் ஆய்வுநடத்த முதலில் அனுமதி கிடைத்தது. இதன் பிறகு கீழடியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது தவிர, உறைகிணறு ஒன்றின் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த உறை கிணறு 93 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஆறு உறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்விலும் இதேபோல இரண்டு உறை கிணறுகள் கிடைத்தந. தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பும் முயற்சிகளும் தற்போது நடந்துவருவதாக ஜெகன்னாதன் தெரிவித்தார்.

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்புபடத்தின் காப்புரிமைM K STALIN

இதற்கு முந்தைய காலங்களில் அகழாய்வு முடிந்த பிறகு, ஆய்வுக்கென தனியாக அரசிடம் நிதி கோரி, அதற்குப் பிறகுதான் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பொருட்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. "ஆனால், இப்போது துவக்கத்தில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே ஆய்வுகளுக்கென நிதி தனியாக எடுத்துவைக்கப்பட்டுவிடுகிறது. இதனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுகளை உடனடியாகச் செய்ய முடியும்" என்கிறார் ஜெகன்னாதன்.

இதேபோல, சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூரில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து அங்கும் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கென 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. 2016ல் இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சமூக - கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தொல் பொருட்கள் கிடைத்தன. கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாநில தொல்லியல் துறை நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தவிர, மத்தியத் தொல்லியல் துறை கொடுமணலில் ஒரு அகழாய்வை மேற்கொண்டுவருகிறது.

https://www.bbc.com/tamil/india-44280092

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • Replies 203
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

25,000 ஆண்டுகளுக்கு முன்,  வழக்கில் இருந்த மொழி தமிழ்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Madurai HC bench stays to handover the Keezhadi things to ASI

கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க ஹைகோர்ட் அதிரடி தடை.

மதுரை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தடை விதித்தது.

மேலும் கீழடி ஆய்வை முதலில் மேற்கொண்டவரான அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையை அக்டோபர் 31ம் தேதி தாக்கல் செய்யுமாறும் ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கீழடி அகழாய்வை மத்திய அரசு குழி தோண்டிப் புதைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளையில் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசும், தொல்லியல் துறையும் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்குப் பின்னர் மாலையில் பிரபாகர் பாண்டியன் மனு மீது ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் முக்கிய அம்சங்கள்:

#  கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியில் துறையிடம் கொடுக்கக் கூடாது.

#  அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எந்தப் பொருளையும் பெங்களூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தரக் கூடாது.

#  கொடுத்த ஆக வேண்டும் என்றால், தமிழக தொல்லியல் துறை ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.

#  அகழாய்வு தொடர்பான அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை அக். 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

#  மத்திய தொல்லியல் துறை இயக்குநர் விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 

#  வழக்கு விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கீழடியில் 4வது கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தி முடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 4வது கட்ட அகழாய்வில் கீழடியில் இருந்து பழமையான 7,000 பொருட்கள் கிடைத்தன. பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும். கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களின் காலத்தை நிர்ணயிக்க இந்த ஆய்வு பயன்படும். கீழடியில் 5வது கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், 5வது கட்ட, அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-hc-bench-stays-handover-the-keezhadi-things-asi-331801.html

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®ªà®°à®£à®à¯à®à®³à¯

கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

கீழடி அகழாய்வை தொடர உத்தரவிடக்கோரி, கனிமொழிமதி என்பவர், மதுரையில் உள்ள ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கீழடி ஆய்வு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கீழடியில் 4வது கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தி முடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 4வது கட்ட அகழாய்வில் கீழடியில் இருந்து பழமையான 7,000 பொருட்கள் கிடைத்தன. பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் கிடைத்துள்ளன.

à®à®®à¯à®°à®¿à®à¯à®à®¾à®µà®¿à®²à¯ à®à®¯à¯à®µà¯

கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும்.

கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களின் காலத்தை நிர்ணயிக்க இந்த ஆய்வு பயன்படும். கீழடியில் 5வது கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், 5வது கட்ட, அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

à®à®¤à¯à®¤à®¿à®µà¯à®ªà¯à®ªà¯

ஆய்வில் கிடைத்த விவரங்களை ஹைகோர்ட்டில் அறிக்கையாக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள். கீழடி ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு அதை முதலில் ஆரம்பித்த, அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற ஆய்வாளரை கொண்டு தயாரிக்கவிடாமல் பெங்களூரிலுள்ள ஆய்வாளர்களை கொண்டு தயாரிக்க மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 5வது கட்ட அகழாய்வுக்கு மாநில அரசு, அனுமதி கேட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/5th-phase-keeladi-excavations-will-be-done-after-union-government-show-green-signal-331768.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3000 பà¯à®°à¯à®à¯à®à®³à¯

தங்கம்.. வீடு.. ஆபரணம்.. கீழடியில் அள்ள அள்ள கிடைத்த அதிசய பொருட்கள்!

கீழடி ஆராய்ச்சியில் தோண்ட தோண்ட தங்கமும், பழங்கால பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. மதுரை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை இப்போது ஆய்வு செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள்.

à®à¯à®à®¿ தà®à¯à®à®®à¯

கீழடி அகழாய்வு உலக வரலாற்றையே மாற்றும், முக்கியமாக திராவிட ஆரிய வரலாற்றை தெளிவாக கூறும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

à®à®²à®¿à®ªà¯à®°à¯à®©à®¿à®¯à®¾ à®à¯à®²à¯à®à®¿à®±à®¤à¯

3000 பொருட்கள்:  மொத்தம் 3000 பொருட்கள் இந்த ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

 

கோடி தங்கம்:  அதேபோல் இங்கு பல கோடி மதிப்பில் தங்கங்களும் காணப்பட்டு இருக்கிறது. 16 மீட்டர் தோண்டிய பின் இந்த தங்கம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 50க்கும் அதிகமான சிறு சிறு ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தà®à¯ à®à®³à¯à®³à®¤à¯

இதை இன்னும் தெளிவாக ஆய்வு செய்ய கலிபோர்னியா எடுத்து செல்ல இருக்கிறார்கள். ஆம் அங்கு கார்பண்டேட்டிங் செய்து இதை சோதனை செய்வார்கள். கார்பண்டேட்டிங் செய்வதன் மூலம் தெளிவான முடிவுகளை பெற முடியும் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக கலிபோர்னியாவிற்கு ஆய்வு பொருட்களை அனுப்பி உள்ளனர்.

ஏற்கனவே நேற்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது. வேண்டும் என்றால் மாநில தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திடம் கொடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/keezhadi-excavation-may-re-write-your-history-book-very-soon-331814.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

கீழடி - தமிழக தொல்லியல் அகழ்வில் அதிலும் மதுரை ஒட்டி மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு ஊர்/ சிறு நகரம் கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத் தகுந்தது. ஆனால் திராவிஷ- தமிழ் பகவர்கள் அதை வைத்து பிரிவினை மூட்டுவது அருவருப்பாய் உள்ளது. கிடைட்த்துள்ள ஓரிரு பெர்யர்களில் வடசொல் பொறிப்பும் பெயரும் உள்ளது.

K. Rajan, Professor of History, Pondicherry University, who visited Keezhadi, also asserted that it was an Early Historic site that had many urban components. “It was one of the urban centres on the Vaigai river basin. It was located between the capital city of Madurai and the port city of Azhagankulam of the Pandya country,” he said. Its urban components were indicated by its civic amenities, external trade, existence of a multi-ethnic society, a communication system, use of luxury items, occurrence of expensive pottery, and so on. The discovery of carnelian beads indicated Keezhadi’s external trade links—the carnelian stone came from Gujarat. Luxury items such as pearl micro-beads and ivory dices showed that the Early Historic residents of Keezhadi had surplus wealth. Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் தான் என்று நிரூபிக்கும் விதமாக...  
300 வருட பழமையான கல்வெட்டு கிடைத்துள்ளது.

இதன் மூலம் தமிழ் அறிஞர்களின் இலக்கிய ஆராய்ச்சி மெய்பிக்கபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை.. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்..!

adichanallur33-1554376903.jpg

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது.உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை.

வழக்கு தொடுத்தார்

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது.

என்ன பதில்

அதன்படி தற்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. 

இரண்டு பொருட்களில் செய்யப்பட்ட சோதனைகளில் இது தெரிய வந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்குமா என தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதில் யார் பணிகளை தொடர போவது என்பது தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/madurai/3000-years-old-things-found-in-adichanallur-says-archaeological-survey-of-india-345916.html

டிஸ்கி:

கிந்திய நாகரீகம் எவ்வளவு பழமையானது எண்டு பறைசாற்ற மற்றுமோர் சாட்சி .. 🤔 உள்ளவற்றை கொண்டு போய் ரெல்லியில் வைத்து பாதுகாக்க வேண்டும்  😍

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் மோதலா?- கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ரத்து: தொல்லியல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி ..!

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று தொடங்கப்படவிருந்த 5-ம் கட்ட அகழாய்வுப் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய தொல்லியல் துறை (பெங்களூரு) பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ல் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 3 கட்டங்களாக அகழாய்வு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை விரும்பவில்லை. இதையடுத்து 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையே மேற்கொண்டது. இப்பணியை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான குழு மேற்கொண்டது.

இந்த அகழாய்வு கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப்.30 வரை நடைபெற்றது. இதில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. 4-ம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வு நடத்த, தமிழக அரசு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்காக கொந்தகையைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேர்வு செய்து சுத்தப்படுத்தி வைத்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதமே அகழாய்வு தொடங்க இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் -அதிகாரிகள் மோதலா?

இதற்கிடையே, திடீரென அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைப்பதற்காக ஜூன் 10-ம் தேதிக்கு அகழாய்வுப் பணி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்றும் அமைச்சர் வராததால் அகழாய்வுப் பணி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சருக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலால்தான் அகழாய்வுப் பணி ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் 2.10 ஏக்கரில் ரூ.1 கோடி செலவில் தொல்லியல் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தள்ளிப் போவதால் அருங்காட்சியக கட்டுமானப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணி எப்போது தொடங்கப்படும் என தெரியாததால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: 5-ம் கட்ட அகழாய்வுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாதது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் அகழாய்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிதி ஒதுக்கியுள்ள நிலையில் அகழாய்வை தாமதப்படுத்தி வருகின்றனர்.

அகழாய்வை அதிகாரிகளே தொடங்கிவிடலாம். இதற்குமுன் அதிகாரிகளே அகழாய்வை தொடங்கினர். ஆனால், தற்போது அமைச்சரை காரணம் காட்டி தாமதப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தொல்லியல் ஆர்வலர்கள், நீதிமன்றம் வற்புறுத்தலால்தான் கீழடி அகழாய்வுப் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது.

இந்த அகழாய்வில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக தொல்லியல் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். ஆர்வமுள்ள அதிகாரிகளை நியமித்து தொல்லியல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு ஏதும் வராததால் அகழாய்வுப் பணியைத் தொடங்கவில்லை” என்ற ர்

https://tamil.thehindu.com/tamilnadu/article27768215.ece

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வு பணியில் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு..!

keeladi.png

கீழடியில் நடைபெறும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் ஏராளமான மண்டை ஓடுகளும், பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த 13ஆம் தேதி தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த 5ஆம் கட்ட அகழாய்வுப் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் கிடைக்கும் தொல்பொருட்களும், ஏற்கெனவே கிடைத்த தொல்பொருட்களும் கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணியின் போது ஏராளமான மண்டை ஓடுகளும் பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/19/6/2019/keeladi-excavation-skulls-were-found-5th-stage-excavation?fbclid=IwAR2G-6Bju5uMaG51Dv0gw2QnPhfnUMnD1A80M7Ycg8aVkbAfeHKXZfcqygg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64728598_1384195265056319_11870398099782

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்

கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள் Image captionகோப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு'

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள் Image captionகோப்புப் படம்

நிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன.

முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.

இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-48767513

  • Like 1
Link to comment
Share on other sites

கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. அப்போது, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், மனித உடல், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

keeladi-excavation-continue-for-the-5th-phase

இந்நிலையில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த ஜூன் 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியின் போது தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கான இரட்டை சுவர்களும், நெல்மணிகள் சேமித்து வைக்கும் மண் பானைகள், உணவு சமைக்க பயன்படுத்தும் மண்பாண்ட பொருட்கள், மண் ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

084056_k1.jpg

கண்டறியப்பட்ட இரட்டை சுவர்களில் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம் 10 செ.மீ உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. இருப்பினும் இந்த சுவர், கட்டிடத்தின் மேற்பகுதியா அல்லது என்பதை தற்போது கண்டறிய முயவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெளியூர்களிலிருந்து வந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66205-keeladi-excavation-continue-for-the-5th-phase.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி  ஆய்வு... 5´ம்  கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட் டுள்ளமை,  மிகவும் மகிழ்ச்சியான செய்தி. :)

Link to comment
Share on other sites

  • 1 month later...

கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகள்! - ஆய்வுசெய்ய வரும் தனி அதிகாரிகள்

à®à¯à®´à®à®¿

கீழடியில் தற்போது கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்ய, அதற்கெனத் தனி ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன. அதற்குப்பின், அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இது, கடந்த ஜூன் 13 -ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஜூன் 25 -ம் தேதி, மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுசுவர், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல், மிகவும் தொன்மையான சுடுமண்னாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. தற்போது, விலங்குகள் இருந்ததற்கான சான்றாக, சிறிய எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன.

இதனைத் தனி ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த எலும்புகள், மனிதன் வளர்த்த செல்லப் பிராணியாகவோ அல்லது மனிதன் வேட்டையாடிய விலங்குகளாகவோ இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் முழு ஆய்வுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விலங்குகளின் எலும்புகளை ஆய்வுசெய்ய, சென்னையிலிருந்து சிறப்பு ஆய்வாளர்கள் திங்கள் அன்று வர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/in-keezhadi-bones-of-animals-found

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு

keeladi-excavation  

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் வெளிநாட்டில் அணியும் அகேட் (agate) வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றின் உயரமும் தோண்டத்தோண்ட அதிகரித்து கொண்டே செல்கிறது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.

இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) போதகுரு என்பவரின் நிலத்தில் அகலமான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களைவிட இது அகலமானது.

முருகேசன் நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 7 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் அதிக ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் (agate) வகை கல்லில் செய்யப்பட்டவை.

இதனால் பழந்தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/510503-keeladi-excavation-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழ்வாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழ்வாய்வில், இதுவரை, 700 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

keeladi-3.png

கீழடியில் கடந்த ஜுன் 13ம் தேதி 47 லட்ச ரூபாய் செலவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. வட்டப்பானை, பானை ஓடுகள், பானை  மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் உள்ளிட்டவைகள்  கண்டறியப்பட்டன. குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில பெண்கள் பயன்படுத்தும் அகெய்ட் வகை அணிகலன்களும் எடுக்கப்பட்டன.

இதன் மூலம், பண்ட மாற்ற முறை மூலம் விற்பனை நடந்துள்ளதும், பெண்களின் அழகு சாதன பொருட்கள் வியாபாரத்தில் முக்கிய இடம் வகித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாத காலம் அகழாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/10/8/2019/700-things-has-been-discovered-keeladi?fbclid=IwAR3-DKre_AT7qPvaV5IQKtMH5YqJBsEBziKZg-NP0hf7f4y9JGMJtnr_es4

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A water tank is found near Kizhadi

கீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு

கீழடியில் 5-ஆவது கட்ட அகழாய்வில் புதிதாக குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015- 2017-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் 23 குழிகள் தோண்டப்பட்டு ஏற்கெனவே 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் தற்போது 5-ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராய்ச்சில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோரின் நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் முருகேசனின் நிலத்தில் உறைகிணற்றில் 7 உறைகள் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர்த்து முருகேசன் நிலத்தில் திண்ணை வடிவிலான திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஓரங்களில் பழைய மணல் பூச்சில் சுவர் போன்று அமைந்துள்ளது.

அது பார்ப்பதற்கு சிமெண்ட் கலவையால் ஆன சுவர் போன்று இருக்கிறது. முன்னதாக சுடுமண்ணால் ஆன பாசிமணிகள், இரும்பில் ஆன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டன.

Read more at: https://tamil.oneindia.com/news/sivagangai/a-water-tank-is-found-near-kizhadi-360036.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி... தமிழரின், தாய்மாடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Keezhadi-excavation-stop.jpg

கீழடியில் மழைநீர் தேங்கியதால் பழங்காலச் சுவர்கள் சேதம்; அகழாய்வுப் பணி திடீர் நிறுத்தம்!

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பரிசோதனை செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. அதன்பின் தமிழக தொல்லியல்துறை நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.

இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு பலரது நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வில் அதிக அளவில் சுவர்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. குழிகள் தார்ப்பாய் மூலம் மூடியிருந்தும் மழைநீர் புகுந்தது. இதில் சுவர்கள் சேதமடைந்தன, இதனால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. இதை அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே குழிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

http://worldtamilforum.com/tamilnadu/keezhadi-excavation-works-are-stop/?fbclid=IwAR3Qc6yxQpWjTZrCIm6esQy6pV0r-98cyKaG7gdvLMi5qxh1LbIGpHpcv88

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2018 at 1:42 PM, நவீனன் said:

இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்தில் உயரதிகாரிகளாகப் பணிபுரிய எத்தனைபேரை இந்தியா அனுப்பிவைத்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வது உகந்தது. இல்லையேல் ஐ.நா சபையில் இந்தியர்களை பெரும் பதவியில் அமர்த்தி ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதுபோல், கீழடி ஆய்வில் கண்ட தமிழரின் வரலாறுகளையும் அந்த இந்தியர்களைக் கொண்டு, திசைமாற்றி அழித்துவிடலாம். 😲  

Edited by Paanch
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி - இன்றைய செய்திகள் .👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால தண்ணீர்த்தொட்டி!

கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தண்ணீர்த்தொட்டி

தண்ணீர்த்தொட்டி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

 

கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தற்போது தண்ணீர் தொட்டி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

கீழடி
 
கீழடி நந்தகுமார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கீழடி அகழாய்வு
 
கீழடி அகழாய்வு நந்தகுமார்

கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

 

சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கீழடி அகழாய்வு
 
கீழடி அகழாய்வு

அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர்.

 

https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation

 

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.