Jump to content

கனடா கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் நடிகை ரம்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னை: நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார். தனக்கும், கணவர் இந்திரனுக்கும் இடையிலான திருமண பந்தத்தை முறித்து அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திரன்- ரம்பா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-rambha-files-divorce-265684.html

சென்னை: நான் விவாகரத்து செய்யப் போகிறேனா.. நிச்சயம் இல்லை என்று கடந்த 2012ம் ஆண்டு மறுத்திருந்தார் நடிகை ரம்பா. அப்போதே அவர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் அடிபட்டன. ஆனால் அவர் அதை மறுத்தார். அதன் பின்னர்தான் அவருக்கு 2வது குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்ய மனு போட்டுள்ளார் ரம்பா.

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் வலம் வந்தவர் ரம்பா. அதேசமயம், நல்ல நடிப்பையும் பல படங்களில் இவர் காட்டியவர். சுந்தர்.சியால் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலமாக பிரபலமான ரம்பா, தமிழ்த் திரையுலகின் கவர்ச்சிக் கன்னியாகவும், ரசிகர்களின் கனவு நாயகியாகவும் வலம் வந்தவர்.

2010ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கநடாவைச் சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்ற இலங்கைத் தமிழரை திருப்பிதியில் நடந்த திருமணத்தின் மூலம் கைப்பிடித்தார். இத்தம்பதி்கு 2011 ஜனவரி 14ம் தேதி பொங்கல் நாளன்று முதல் பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பை விட்டு விட்டு கணவருடன் இனிய இல்லறத்தில் புகுந்த ரம்பா கனடாவில் செட்டிலானார். இந்த நிலையில் 2012ம் ஆண்டு அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை, விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று செய்தி பரவியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் ரம்பா.

இதுகுறித்து அப்போது அவர் கூறுகையில் நானும் என் கணவரும், எங்களது மகள் லாவண்யாவுடன் நிம்மதியாக குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும் எனது கணவரின் பிறந்த நாளன்று வதந்தி கிளப்பியவர்கள் யாரோ என்றும் கவலை தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு ரம்பா - இந்திரன் தம்பதிக்கு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் தற்போது விவாகரத்து செய்ய முடிவெடுத்து மனு செய்துள்ளார் ரம்பா. இதனால் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா தனது கணவரை விட்டுப் பிரிந்தார். விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரம்பாவும் விவாகரத்து கோரியுள்ளது திரையுலிகினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

 

Posted

நடிகை ரம்பா கணவருடன் சேர்த்து வைக்ககோரி மனு!

Actress%20Ramba%20New_16480.jpg

கணவருடன் சேர்த்து வைக்ககோரி நடிகை ரம்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

Rambha%20New_16518.jpg

கடந்த 2010-ம் ஆண்டு, கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை, நடிகை ரம்பா திருமணம் செய்தார். இதையடுத்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நடிகை ரம்பாவும், இந்திரன் பத்மநாதனும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டு, கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/70502-actor-rambha-has-moved-to-court-to-reunite-with-her-husband-and-live-with-him.art

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னங்கடா இது கொழப்பிறாங்க.

சேர்த்து வைக்க கோட் எதுக்கு?

ஒரு போனைப் போட்டு, இருவரும் கதைத்தால் முடியுமே... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

என்னங்கடா இது கொழப்பிறாங்க.

சேர்த்து வைக்க கோட் எதுக்கு?

ஒரு போனைப் போட்டு, இருவரும் கதைத்தால் முடியுமே... 

கனடாவை சேர்ந்த தொழிலதிபர், இந்திரன்...
ரம்பாவுடன் சேர்ந்து... வாழவிருப்பம் இல்லை என்றால்....
கோட்டுக்கு போனால்... தீர்வு கிடைக்கும் என்று, ரம்பா நினைத்திருக்கலாம்.

ஏன்... முனி, இரண்டு வருசத்திலை... இரண்டு பிள்ளையள் பெத்த பின்,  அவையளுக்குள்ளை மனக் கசப்பு வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவை சேர்ந்த தொழிலதிபர், இந்திரன்...
ரம்பாவுடன் சேர்ந்து... வாழவிருப்பம் இல்லை என்றால்....
கோட்டுக்கு போனால்... தீர்வு கிடைக்கும் என்று, ரம்பா நினைத்திருக்கலாம்.

ஏன்... முனி, இரண்டு வருசத்திலை... இரண்டு பிள்ளையள் பெத்த பின்,  அவையளுக்குள்ளை மனக் கசப்பு வந்தது?

செய்தி இரண்டையும் பாருங்க!

நான் போட்டது... விவாகரத்து கேட்கிறா எண்டு.

நவீனன் போட்டது... சேர்த்து வைக்கக் கேட்கிறாவாம் எண்டு.

அது தான் கேட்டனான்... 'சேரவேண்டும் என்றால், ஏன் கோட்டு' எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரம்பாவை லவ் பண்ணுன ஒரு  கேடியை கல்யாணம் கட்டியிருந்த்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும் வாழ்க்கை  இந்த பொண்ணுங்களே இப்படித்தானே  :unsure:

இன்று ஒரு funny போட்டோ பார்த்தேன் நாம லவ் பண்ணுற பொண்ணுக்கு நம்மள விட மொக்கையான மாப்பிள்ளை கிடைத்தால்  அது சந்தோசத்திலும் சந்தோசமாம் :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Nathamuni said:

செய்தி இரண்டையும் பாருங்க!

நான் போட்டது... விவாகரத்து கேட்கிறா எண்டு.

நவீனன் போட்டது... சேர்த்து வைக்கக் கேட்கிறாவாம் எண்டு.

அது தான் கேட்டனான்... 'சேரவேண்டும் என்றால், ஏன் கோட்டு' எண்டு.

நடுவில ஒருத்தர் தேவைப்படுகிறார்

நம்ம இசையை அனுப்பலாமா?

அல்லது நிழலியானந்தா?????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, விசுகு said:

நடுவில ஒருத்தர் தேவைப்படுகிறார்

நம்ம இசையை அனுப்பலாமா?

அல்லது நிழலியானந்தா?????

ஏன் நடுவில ஆட்டையை போடவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

ஏன் நடுவில ஆட்டையை போடவா?

அழைப்பின் தாகம் அது தானே..???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த இந்திரன் பத்மநாதன் KP இன் மகன் என்று கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த இந்திரன் பத்மநாதன் KP இன் மகன் என்று கேள்வி

ஐயோ, எண்ட கடவுளே....

இதென்ன புதுக்கதை....:rolleyes:

Posted
13 minutes ago, Nathamuni said:

ஐயோ, எண்ட கடவுளே....

இதென்ன புதுக்கதை....:rolleyes:

இது பழைய கதை..:rolleyes:

அவர்களது  திருமணம் நடந்த காலத்தில் தமிழ் இணையங்களில் இந்த செய்தி வந்தது. ஆனால் இந்திரன் தரப்பில் இருந்து இது பொய் என்று மறுத்து இருந்தார்கள். எங்காவது தேடினால் கிடைக்கும் இணையத்தில்.

Posted
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த இந்திரன் பத்மநாதன் KP இன் மகன் என்று கேள்வி

 

12 minutes ago, Nathamuni said:

ஐயோ, எண்ட கடவுளே....

இதென்ன புதுக்கதை....:rolleyes:

டிசம்பர் 16 வரையிலும் கே பி மகனை சந்திக்ககூடாதெண்டு நீதிமன்றமே கூறியதாக உதயன் சொல்லுது. :grin:
நல்ல காலம் எனது அப்பாவின் பெயர் பத்மநாதன் இல்லை. tw_rage:

கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரி ஜே.வி.பி இன் பிரசார செயலா ளர் விஜித ஹேரத் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை கொழும்பு மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ளப்படவுள்ளது.

http://onlineuthayan.com/news/19382

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசு நாம குடுக்கிறமா ...?   அவுங்க நம்மள சந்தோச படுத்துறாங்களா?    உறவு முறையை சினிமா தியோட்டரோடு... அத்தோட போய்விட விடவேண்டும்...சினிமா கூத்தாடிகளை கலியாணம் கட்டினா இதான் கதி ...!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காசு நாம குடுக்கிறமா ...?   அவுங்க நம்மள சந்தோச படுத்துறாங்களா?    உறவு முறையை சினிமா தியோட்டரோடு... அத்தோட போய்விட விடவேண்டும்...சினிமா கூத்தாடிகளை கலியாணம் கட்டினா இதான் கதி ...!!

 

ஆடின பாதமும், பாடிய வாயும் சும்மா இராது என்று சும்மாவா சொன்னாங்க 

:rolleyes:

இலங்கைத்தமிழரில் திரை உலகக் காதல் கொண்டவர்களில்...

வித்யா நடிகர் விஜய்... இந்தக் காதல், விஜய் நடிக்க ஆரம்பிக்கு முன்னர் ஆரம்பித்ததால்... தப்பிப்பிழைக்கிறது.

மாதுரி என்னும் நடிகையினை, லண்டனில் இருந்து போன அரவிந்தன் கலியாணம் செய்தார். விசா கிடைக்கவில்லை.. பிரிந்து விட்டனர். அந்த நடிகையும் பின்னர் விபசார வழக்கில் சிக்கினார்.

லண்டனை சேர்ந்த முரளி என்பவர் நடிகை பானுப்பிரியாவுடன் வாழ்ந்து விலகினார்

முதல் மரியாதைக்கு படத்தில் நடித்த ரஞ்சனி என்னும் (மலேசிய ) நடிகையினை கேதீஸ் என்பவர் கட்டி, இருவருமாக வாழ்தம்ஸ்டோவ் பகுதில் ட்ராவல் agency நடத்தி... சரி வரவில்லை... பிரிந்தனர்.

நடிகை ரம்பா.... இந்திரன் இப்போது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

நடுவில ஒருத்தர் தேவைப்படுகிறார்

நம்ம இசையை அனுப்பலாமா?

அல்லது நிழலியானந்தா?????

 

9 hours ago, MEERA said:

ஏன் நடுவில ஆட்டையை போடவா?

200.gif#20  

நடுவில... ஆட் டையை போடுறது என்றால் என்ன?  ப்ளீஸ்...  ரெல் மீ. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொழிலதிபருக்கு முதல் ரம்பாவை இயக்கியவர்களுக்கு தான் ரம்பாவின் பலம் பலவீனம் தெரியும் என்பதால்.. கனடாவில் இருந்து ரீவி நிகழ்ச்சிகளுக்காக பிள்ளை குட்டியோடு.. ஓடோடி வந்த ரம்பாவை... இந்திரமானவர்... தொடர்ந்து தக்க வைக்க கடுமையா உழைச்சுக் களைச்சிட்டார் போல. அது தான்.. இந்தப் பிரச்சனை. 

கறவை வாங்கு போதே யோசிச்சு வாங்கனும். வாங்கினாப் பிறகு.. உதையது.. உளறுது... கறக்குதில்லை என்று.. அழுதால் பாட்டுக்காரன் நிலைமை தான். 

முனிவர்ஜீ... பார்த்தியளே... கட்டாமல் வாழ்ந்தவன்.. சங்கதி.. கோட்டுக்கு வருவதில்லை. கட்டி வாழ்ந்தவன் சங்கதி கோட்டுக்கு மட்டுமில்ல.. சந்திக்கும் வரும்.  உங்கின சில பேர் உங்களையும்.. உந்த சகதிக்க தள்ள நிற்கினம். tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, nedukkalapoovan said:

தொழிலதிபருக்கு முதல் ரம்பாவை இயக்கியவர்களுக்கு தான் ரம்பாவின் பலம் பலவீனம் தெரியும் என்பதால்.. கனடாவில் இருந்து ரீவி நிகழ்ச்சிகளுக்காக பிள்ளை குட்டியோடு.. ஓடோடி வந்த ரம்பாவை... இந்திரமானவர்... தொடர்ந்து தக்க வைக்க கடுமையா உழைச்சுக் களைச்சிட்டார் போல. அது தான்.. இந்தப் பிரச்சனை. 

கறவை வாங்கு போதே யோசிச்சு வாங்கனும். வாங்கினாப் பிறகு.. உதையது.. உளறுது... கறக்குதில்லை என்று.. அழுதால் பாட்டுக்காரன் நிலைமை தான். 

முனிவர்ஜீ... பார்த்தியளே... கட்டாமல் வாழ்ந்தவன்.. சங்கதி.. கோட்டுக்கு வருவதில்லை. கட்டி வாழ்ந்தவன் சங்கதி கோட்டுக்கு மட்டுமில்ல.. சந்திக்கும் வரும்.  உங்கின சில பேர் உங்களையும்.. உந்த சகதிக்க தள்ள நிற்கினம். tw_blush:

made-in-canada.jpg

ரம்பா.... கனடாவுக்கு, வரும் போது... பிள்ளைகள் இல்லாமல் தனியத் தான் வந்தவ.
இப்போ உள்ள பிள்ளைகள் இருவரும்...
"மேட் இன் கனடா"  நெடுக்ஸ். :grin:

Posted

கணவரை பிரியவும் இல்லை, சேர்த்து வைக்கக் கோரவும் இல்லை: ரம்பா

 

 

 சென்னை: தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் தொழில் அதிபர் கணவரான இந்திரன் பத்மநாதனை நடிகை ரம்பா பிரிந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்திரனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி ரம்பா சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று கூறப்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் கணவருடன் சேர்ந்து வாழ அவர் ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

வதந்தி

 வதந்தி

என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என சகோதரர் மூலம் தற்போது தான் தகவல் கிடைத்தது. நான் விவாகரத்து கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற்கான பதிவு இருக்கும் அல்லவா?

நீதிமன்றம்

நீதிமன்றம்

நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் மூத்த மகளை பள்ளியில் இரு்து அழைத்து வர கிளம்புகிறேன். என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என ரம்பா தெரிவித்துள்ளார்.

ரம்பா

ரம்பா

ரம்பா தனது கணவரை பிரிந்துவிட்டார் என்று முன்பும் கூட வதந்தி காட்டுத்தீயாக பரவியது. இது குறித்து அறிந்த ரம்பா அதிர்ச்சி அடைந்தார் தனது திருமண வாழ்வு நல்லபடியாக உள்ளதாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம் ரம்பாவுக்கும், இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர் கணவருடன் கனடாவில் செட்டிலாகிவிட்டார்.

Read more at: http://tamil.filmibeat.com/heroines/no-issues-is-well-my-married-life-says-rambha-042948.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கன்ட சாத்திரியாரிட்ட கேட்டா  விளக்கமாய் எல்லாம் சொல்வார்........ரம்பா விவாகரத்து கேட்டா பலர் சந்தோசப்படுவினம் போல கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப என்ன கிசுகிசுவை கிளப்பி விட்டு தான் இன்னும் இருப்பில இருக்கன் என்று காட்டிறாவா... ராம்பா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nedukkalapoovan said:

முனிவர்ஜீ... பார்த்தியளே... கட்டாமல் வாழ்ந்தவன்.. சங்கதி.. கோட்டுக்கு வருவதில்லை. கட்டி வாழ்ந்தவன் சங்கதி கோட்டுக்கு மட்டுமில்ல.. சந்திக்கும் வரும்.  உங்கின சில பேர் உங்களையும்.. உந்த சகதிக்க தள்ள நிற்கினம். tw_blush:

 

நெடுக்கர் அந்தக்காலத்தில் யானைகளை பிடிக்க இலை தளை குழைகளை போட்டு குழி கிண்டி வைத்திருப்பார்களாம் யானையைபிடிக்க அந்த பெரிய யானை குழிக்குள்ள விழுந்த பிறகு அடிமையாம்:unsure::11_blush: 

 வாழ்நாள் முழுக்க நாமும் நடுக்காட்டில எத்தனை நாளைக்குத்தான் தனியா காட்டுல சுத்துற அப்படியும் சுத்துனா தனியன் யானை பொல்லாததது என்று சொல்கிறார்களப்பா மத்த யானைகள் :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கர் தயாரான முனிவரையும் குழப்பிவிடுவார் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, முனிவர் ஜீ said:

நெடுக்கர் அந்தக்காலத்தில் யானைகளை பிடிக்க இலை தளை குழைகளை போட்டு குழி கிண்டி வைத்திருப்பார்களாம் யானையைபிடிக்க அந்த பெரிய யானை குழிக்குள்ள விழுந்த பிறகு அடிமையாம்:unsure::11_blush: 

 வாழ்நாள் முழுக்க நாமும் நடுக்காட்டில எத்தனை நாளைக்குத்தான் தனியா காட்டுல சுத்துற அப்படியும் சுத்துனா தனியன் யானை பொல்லாததது என்று சொல்கிறார்களப்பா மத்த யானைகள் :11_blush:

floppy

உண்மை தான்... தனியன் யானைக்கு, மதம் பிடித்தால்.... ஊரையே துவம்சம் பண்ணி விடும். tw_dizzy: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.