Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள்

Featured Replies

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள்

Ddfdfd-urani.jpg(ஆர்.வி.கே)

நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று  மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் நாட்டின் அரச நிறுவனங்கள் பாடசாலைகள் பல்கலைகழகங்கள் போன்ற இடங்களில் நல்லிணக்க வார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. IMG_7811.jpg

இந்நிலையில் தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கமைய வலிவடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன்பிடி துறைமுகப்பகுதிகள் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.

கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய அசாதாரன நிலமைகளால் வலிவடக்கில் இருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டதன் காரணமாக பகுதி பகுதியாக வலி வடக்கில் மக்கள் ஒரளவு மீளக்குடியமர்த்தப்பட்டிருந்துடன் மக்களது காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தது.IMG_7747.jpg

இருந்த போதிலும் மீள குடியமர்ந்த மக்கள் தமது தொழில்களை செய்வதற்கான நிலங்கள் மற்றும் தமது மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கான மயிலிட்டி,ஊரணி ஆகிய துறைமுக பகுதிகளும்  விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறாயினே தமது வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வந்திருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி வடக்கில் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது மீன்பிடி தொழிலை செய்வதற்கும் தமது படகுகளை நிறுத்துவதற்கும் ஏற்வகையில் ஊரணி துறைமுகப் பகுதியையும் மக்களிடம் மீள கையளிப்பதற்கான பணிப்புரையை விடுத்திருந்தார் அதற்கமைய இன்று இப் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.IMG_7938.jpg

யாழ்.மாவட்ட இராணு கட்டளை தளபதி மேஜர் ஜெனறல் மகேஸ் சேனநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நல்லிணக்க விடையங்களுக்கு செயலாளராக உள்ள சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரச அதிபர்,கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள்,பிரதேச செயலர்,பொதுமக்கள் மீள்குடியேற்ற குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். IMG_7948.jpgIMG_7783.jpg

http://www.virakesari.lk/article/15422

ஊரணி என்றால் கே.கே.எஸ் பக்கம் உள்ள ஊரணியா? ?

5 minutes ago, கலைஞன் said:

ஊரணி என்றால் கே.கே.எஸ் பக்கம் உள்ள ஊரணியா? ?

மூன்று இடத்தில் ஊரணி பெயர் உள்ளது வடகிழக்கில் உள்ளது ஒன்று kks மற்றது மட்டக்க்களப்பு  அடுத்து வல்வையில் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊரணி எனப்படும் பகுதி காங்கேசந்துறையிலிருந்து, பலாலி நோக்கி அதாவது தல் செவன விடுதியின் வடக்குப்புறத்தில் அமைந்திருக்கும் கடற்கரப்பிரதேசம், கடந்த கோடை விடுமுறையில் என் தேசத்துக்குப் போனபோது கவனித்தேன்.

அதாவது, தல் செவன சுற்றுலா விடுதியின் வடக்குப்பக்கம் இன்னுமொரு சுற்றுலா விடுதி இருக்கு அதுவும் தல் செவன வளாகம்தான் அது முடிவடையும் இடத்துக்கு சிறிது தள்ளி ஒருசில தென்னை மரங்கள் உள்ள கடற்கரை வெளி வரும் அதன் முடிவிடம்தான் ஊரணியின் எல்லையாக இருக்கலாம்.

என்னிடம் படங்கள் இருக்கு ஆனால்  அதை இணைக்கும்விதம் எனக்குத் தெரியாது.  

  • தொடங்கியவர்
நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு
 
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் 27 வருடங்களாக அனுமதிக்கப்படாமலிருந்த 300 மீற்றர் கடற்பகுதி மக்களிடம்   இன்றையதினம்  கையளிக்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போது ஊறணி கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை இப்பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வு  இன்று காலை 9.30 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்றது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேன நாயக்க,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி , யாழ். அரசா ங்கஅதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை செயலாளர் ஸ்ரீமோகனன் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
 
இந்நிகழ்வின் போது யாழ்.இராணுவக்கட்டளைத்தளபதி மகேஸ்சேனநாயக்க நிலப்பகுதி விடுவிக்கும் பத்திரத்தை செயலாளர்சிவ ஞானசோதியிடம் கையளித்தார். அதனை அவர் அரசாங்க அதிபர் வேதநாயகத்திடம் வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் ஊறணி, மயிலிட்டி, நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு வருகை தந்த மக்கள் இப்பகுதி விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதுடன் இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்க ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்த துடன் மயிலிட்டி உட்பட மற்றைய பகுதிகளையும் விடுவிக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக்கொ ண்ட இராணுவத்தளபதி மற்றும் அமைச்சின் செயலாளர் தாம் விரைவில் ஏனைய பகுதிகளை   விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
16111146_600220140170401_2141623654_n.jpg
15995526_600220143503734_1076213978_n.jpg
15995914_600220136837068_608096884_n.jpg
14-1-2017%2015.1.40%203.jpg
15996291_600220133503735_1371535818_n.jpg16111633_600220180170397_774548096_n.jpg

http://www.onlineuthayan.com/news/22666

3 hours ago, கலைஞன் said:

ஊரணி என்றால் கே.கே.எஸ் பக்கம் உள்ள ஊரணியா? ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, TNT said:

மூன்று இடத்தில் ஊரணி பெயர் உள்ளது வடகிழக்கில் உள்ளது ஒன்று kks மற்றது மட்டக்க்களப்பு  அடுத்து வல்வையில் உள்ளது 

அம்பாறை மாவட்டத்திலும் ஊறணி  உள்ளது  பெரிய ஊறணி, சின்ன ஊறணி

மட்டக்களப்பிலும் உள்ளது  ஊறணிtw_blush:

20 minutes ago, முனிவர் ஜீ said:

அம்பாறை மாவட்டத்திலும் ஊறணி  உள்ளது  பெரிய ஊறணி, சின்ன ஊறணி

மட்டக்களப்பிலும் உள்ளது  ஊறணிtw_blush:

நன்றி தகவலுக்கு 

5 hours ago, கலைஞன் said:

ஊரணி என்றால் கே.கே.எஸ் பக்கம் உள்ள ஊரணியா? ?

இது காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடையில் உள்ள ஊரணி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு

சிறைக்கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பது போல்

எமது நிலங்களை  விடுவிக்கிறார்கள்

எமது நிலம் அப்படி என்ன தப்புச்செய்தது சட்டப்படி....???

3 minutes ago, விசுகு said:

எமது நிலம் அப்படி என்ன தப்புச்செய்தது சட்டப்படி....???

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

இது மட்டுமே இங்கு நான் சொல்ல வந்த விடயம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

இது மட்டுமே இங்கு நான் சொல்ல வந்த விடயம்.

நான் எழுதியதற்கும்

உங்களது கூற்றுக்கும் சம்பந்தமில்லையே...

இன்று என்ன எல்லா இடத்திலும் சம்பந்தமே இல்லாத தொல்லைகள்..

1 minute ago, விசுகு said:

நான் எழுதியதற்கும்

உங்களது கூற்றுக்கும் சம்பந்தமில்லையே...

இன்று என்ன எல்லா இடத்திலும் சம்பந்தமே இல்லாத தொல்லைகள்..

இல்லை விசுகு 
நீங்கள் இடங்கள் விடுவிக்கப் பட்டதாக எழுதி இருந்தீர்கள் - இல்லை என்பதை நிரூபிக்க எழுதவேண்டியதாய் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு
 
நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் 27 வருடங்களாக அனுமதிக்கப்படாமலிருந்த 300 மீற்றர் கடற்பகுதி மக்களிடம்   இன்றையதினம்  கையளிக்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போது ஊறணி கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை இப்பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வு  இன்று காலை 9.30 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்றது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேன நாயக்க,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி , யாழ். அரசா ங்கஅதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை செயலாளர் ஸ்ரீமோகனன் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
 
இந்நிகழ்வின் போது யாழ்.இராணுவக்கட்டளைத்தளபதி மகேஸ்சேனநாயக்க நிலப்பகுதி விடுவிக்கும் பத்திரத்தை செயலாளர்சிவ ஞானசோதியிடம் கையளித்தார். அதனை அவர் அரசாங்க அதிபர் வேதநாயகத்திடம் வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் ஊறணி, மயிலிட்டி, நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு வருகை தந்த மக்கள் இப்பகுதி விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதுடன் இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்க ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்த துடன் மயிலிட்டி உட்பட மற்றைய பகுதிகளையும் விடுவிக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக்கொ ண்ட இராணுவத்தளபதி மற்றும் அமைச்சின் செயலாளர் தாம் விரைவில் ஏனைய பகுதிகளை   விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
16111146_600220140170401_2141623654_n.jpg
15995526_600220143503734_1076213978_n.jpg
15995914_600220136837068_608096884_n.jpg
14-1-2017%2015.1.40%203.jpg
15996291_600220133503735_1371535818_n.jpg16111633_600220180170397_774548096_n.jpg

http://www.onlineuthayan.com/news/22666

5 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை விசுகு 
நீங்கள் இடங்கள் விடுவிக்கப் பட்டதாக எழுதி இருந்தீர்கள் - இல்லை என்பதை நிரூபிக்க எழுதவேண்டியதாய் போச்சு.

இது என்ன????

படங்களும் இருக்கே???

2 minutes ago, விசுகு said:

இது என்ன????

படங்களும் இருக்கே???

இது சம்பிரதாயம்
நிலைமை வேறு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இது சம்பிரதாயம்
நிலைமை வேறு

நன்றி

அது எனக்கு தெரியவில்லை.

இந்த ஊரணியில் உள்ள ஊரணி கனிஷ்ட வித்தியாலயத்தில் எனது நண்பன் ஒருவன்தான் இப்பொது அதிபராக உள்ளான் . அவனுடன் கதைத்தபோது அவன் சொன்னான், இன்னும் அந்தப் பாடசாலை இயங்கக் கூடிய நிலையில் இல்லை. இப்போதுதான் திருத்த வேலைகள் நடக்குதாம். எப்படியும் ஒரு 4 அல்லது 5 மாதத்தில் அந்தப் பாடசாலை முழுமையாக இயங்கக்கூடிய நிலைக்கு வரும். மற்றும்படி இன்னும் மக்கள் முழுமையாக அங்கை குடியேறவில்லை. ஒரு சில குடும்பங்கள்தான் இப்பொது அங்கை இருக்கிறார்கள்.

34 minutes ago, ஜீவன் சிவா said:

google மேப் ல பார்த்தல் சில வீடுகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதில் இப்பொது யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது என்ன????

படங்களும் இருக்கே???

விசுகு இவர் இப்படித்தான் அரசாங்கத்தை நோக விட மாட்டார்.

இவரது கருத்தின்படி,

அரசு விடுவிக்கப்படாத ஒரு பிரதேசத்தை விடுவித்ததாக அறிவித்துள்ளது.  **

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் உள்ள திரியில் செய்தியை இணைத்தவரிடமும் மூலத்திடமும் கேள்வி கேட்டவர் இங்கு கருத்து எழுதியவரிடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று  மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளார்.

தமிழ்ச்சனங்களின்ரை சொந்த காணி ,இடங்களை திருப்பி குடுக்கிறதுக்கும்....தேசிய ஒருமைப்பாடு/நல்லிணக்கத்துக்கும் என்ன சம்பந்தம்???? இதுக்கை வேறை 14 நாட்கள் நல்லெண்ணை வாரமாம்...

ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்ல வருகின்றார்கள்.

:grin:அசரீதி:- டேய் குமாரசாமி சனம் நல்லாயிருந்தால் உனக்கு பத்தியப்படாதே :cool: 

தமிழனின் பூர்வீக சொத்துக்களை அபகரித்த மிலேச்ச சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும், அவற்றை விடுவிப்பதாக விளம்பரம் செய்வதே ஒரு மகா கொடுமையான ஆட்சியுள்ள நாட்டில் மட்டுமே நடக்கும்.

இந்த இலட்சணத்தில் ஏமாற்றும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுக்கு "நல்லாட்சி" என்றும் "நல்லெண்ணம்" என்றும் அடைமொழி வேறு!

இந்த தமிழின விரோத கும்பல்களின் கூத்துக்களும் அடிவருடிகளின் ஜால்றாக்களும் முற்றாக ஒழியும் நாளே மண்ணின் பூர்வீக தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர நாளாகும்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

அரசுக்கும்  அதை விடுவிக்க போராடிய தமிழரசு கட்சிக்கும் நன்றிகள் மிக்க நன்றிகள் tw_blush:

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

விடு விச்சதா போட்டோ எல்லாம் போட்டிருகாங்கள்  :unsure:

4 hours ago, முனிவர் ஜீ said:

அரசுக்கும்  அதை விடுவிக்க போராடிய தமிழரசு கட்சிக்கும் நன்றிகள் மிக்க நன்றிகள் tw_blush:

7 hours ago, போல் said:

தமிழனின் பூர்வீக சொத்துக்களை அபகரித்த மிலேச்ச சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும், அவற்றை விடுவிப்பதாக விளம்பரம் செய்வதே ஒரு மகா கொடுமையான ஆட்சியுள்ள நாட்டில் மட்டுமே நடக்கும்.

இந்த இலட்சணத்தில் ஏமாற்றும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுக்கு "நல்லாட்சி" என்றும் "நல்லெண்ணம்" என்றும் அடைமொழி வேறு!

இந்த தமிழின விரோத கும்பல்களின் கூத்துக்களும் அடிவருடிகளின் ஜால்றாக்களும் முற்றாக ஒழியும் நாளே மண்ணின் பூர்வீக தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர நாளாகும்! 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நவீனன் said:
நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு
 
நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிப்பு
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் 27 வருடங்களாக அனுமதிக்கப்படாமலிருந்த 300 மீற்றர் கடற்பகுதி மக்களிடம்   இன்றையதினம்  கையளிக்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போது ஊறணி கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை இப்பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் நல்லிணக்க வாரத்தையொட்டி ஊறணி கடற்பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வு  இன்று காலை 9.30 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்றது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேன நாயக்க,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி , யாழ். அரசா ங்கஅதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை செயலாளர் ஸ்ரீமோகனன் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
 
இந்நிகழ்வின் போது யாழ்.இராணுவக்கட்டளைத்தளபதி மகேஸ்சேனநாயக்க நிலப்பகுதி விடுவிக்கும் பத்திரத்தை செயலாளர்சிவ ஞானசோதியிடம் கையளித்தார். அதனை அவர் அரசாங்க அதிபர் வேதநாயகத்திடம் வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் ஊறணி, மயிலிட்டி, நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு வருகை தந்த மக்கள் இப்பகுதி விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதுடன் இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்க ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்த துடன் மயிலிட்டி உட்பட மற்றைய பகுதிகளையும் விடுவிக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக்கொ ண்ட இராணுவத்தளபதி மற்றும் அமைச்சின் செயலாளர் தாம் விரைவில் ஏனைய பகுதிகளை   விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
16111146_600220140170401_2141623654_n.jpg
15995526_600220143503734_1076213978_n.jpg
15995914_600220136837068_608096884_n.jpg
 
சிவஞனசோதி சேர்!

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின் உங்களை காண்பதில் மட்டட்ற மகிழ்ச்சி ஐயா. 1987/1988 களில் உங்களிடம் படித்த மாணவன் எனும் பெருமை இன்னும் உள்ளது. கணித பாடம் என்றால் என்னவென்றால் தெரியாத என்னை O/L இல் C எடுக்க வைத்தது நீங்கள்தான். A/L இல் உங்களிடம் கணக்கியல் படித்து திறமை சித்தி பெற்றேன் பின்பு அதுவே தொழிலாகி போனது. 

இதே போல் இன்னும் பல இடங்களை விடுவிப்பீர்கள்  மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவீர்கள் என என்ற நிறைய நம்பிக்கையுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22666

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.