Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, விசுகு said:

நாம் ஏன் கனடிய அமெரிக்க பூர்வீகக்குடிமக்களை மறைத்து பேசுகின்றோம்??

சிறீலங்காவில்  தமிழர்களும் அதே நிலைக்குத்தான் வருவார்கள் என்ற முன் நோக்குதலாலா????

விசுகர்! மாற்றுக்கருத்துக்களை மூட்டை மூட்டையாய் கட்டிக்கொண்டு திரியிறவையள்... உதுக்கும் ஒரு காரணம்/கருத்து வைச்சிருப்பினம் கண்டியளோ..tw_blush:

  • Replies 349
  • Views 28.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! மாற்றுக்கருத்துக்களை மூட்டை மூட்டையாய் கட்டிக்கொண்டு திரியிறவையள்.... உதுக்கும் ஒரு காரணம்/கருத்து வைச்சிருப்பினம் கண்டியளோ.tw_blush:

வாடகை  வீட்டுக்கும்

சொந்த வீட்டுக்கும்  வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கமுடியுமா  அண்ணா????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

1990 இறுதியிலேயே முற்றான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் 
இந்த இனத்துக்கு உயிரை கொடுப்பதெல்லாம் ஒரு மொக்கு வேலை என்று.
போராளிகளை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்தது 

பலர் இந்த தரிசனத்தை அடைந்திருக்கின்றார்கள் (என்னையும் சேர்த்துத்தான்). ஆனால் உண்மையிலேயே விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மண்ணுக்காகத் தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்களை முழுவதுமாக மறந்துகொண்டுபோகும் நிலை கூட முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னால் உள்ள தமிழர்களின் பிளவுண்ட அரசியலால்தான் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

..... எதிரியின் நோக்கமே அடித்து பிழிந்து போட்டால் சோறு தந்தாலே போதும் என்று சொல்வார்கள் அப்படியே விட்டு விடலாம் என்பதுதான்...

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

1990களில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோது கொழும்பில் இருந்து 
மீண்டும் யாழ் சென்றுவிடேன் 
போராடத்தில் இணையும் எண்ணம்தான் முக்கிய காரணியாக இருந்தது 
நான் இணைந்தாலும் ... என் மீது ஒரு சந்தேக பார்வை அவர்களுக்கு இருக்கும் 
என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.
ஊரில் போய் நிக்க பவுன் கேட்டு வந்தார்கள் ...
கொடுக்க உண்மையிலே எம்மிடம் பவுன் இல்லை .. பார்க்க அவர்களுக்கும் அது 
புரிந்தது ஓகே என்று விட்டு போனார்கள் ...
கூட கொஞ்ச வாலுகள் திரியும் ... அதுகள் போட்டு கொடுத்து இருந்தார்கள் 
இவர்கள் முன்பு வேறு இயக்கம் நீங்கள் இப்படி கேட்டால் தாரமாட்ட்டார்கள் என்று.
அப்போ பாரதிதான் எமது ஊரில் பவுன் சேர்த்தார் ... ஒருநாள் ரோட்டில் கண்டு முகாமுக்கு வர சொன்னார் 
சென்றேன் இப்போதே பவுன் வேண்டும் இல்லை என்றால் பிடித்து பங்கர் வெட்ட அனுப்புவேன் என்றார். 
தருவதற்கு உண்மையிலேயே பவுன் இல்லை என்றேன் ....அப்படியே கொண்டு சென்று 
பருத்தித்துறையில் ஒரு முகாமில் ஒரு ரூமில் பூட்டிவிட்டார்கள் ..பின்பு இரண்டு நாள் கழித்து 
ஒரு எல்ப் வாகனத்தில் ஏற்றி சென்று காங்கேசன்துறை சீமெந்து பக்டரியில் இறக்கி விடார்கள்  ....
பின்பு என்ன பங்கர் வெட்டுத்தான் .. அங்கே சென்றியில் நிக்கும் பெடியள் எல்லாம் சின்ன 
பெடியள் 15- 17 வயதுக்கு உள்ளேதான் அதிகம் .... எனக்கு அவர்களை பார்க்க பாவமாக இருக்கும்.
இரவு 10-11 மணிக்கு எல்லாம் ஆமியின் சென்றி அருகுகளுக்கு சென்றுவிடுவார்கள் சென்று மிதிவெடி வைப்பது .... நான் இருக்கும்போது இவர்களுக்கும் ஆமிக்கு இடையில் இருந்த இரண்டு வீடுகளை 
சக்கை வைத்து இறக்கினார்கள் அந்த இரண்டு வீடும் ஆமிக்கு அருகில்தான் இருந்தது.
அவன் செல்லடியில் இருந்து துப்பாக்கி எல்லாவற்றாலும் போட்டு சுடு சுடு என்று சுட்டான் 
இவர்களுக்கு ...அதை பற்றி எண்ணம் இல்லை வீடு மட்டமாக இறங்கியதா என்று பார்க்க மீண்டும் 
நான்கு பேர் திரும்பி போனார்கள். 1990 ஆண்டு தீவாளி அன்று பலாலியில்  இருந்து ஆமி கட்டுவன் வரை வந்துவிட்டான் அப்போ மாறி மாறி இங்கு பலரும் வந்தார்கள்.
அப்போ ஈழநாதம் பத்திரிகை பொறுப்பாக இருந்த அழகனும் வந்தார் எனக்கு அவரை தெரியும் 
அவரை இந்திய இராணுவம் கைது செய்து கே கே எஸ்சில் வைத்திருந்தார்கள் அப்போது அவர்களுக்கு சில 
உதவிகளை நான் செய்து இருந்தேன் .. என்ன இங்கே என்று கேட்டார் 
நான் நடந்ததை சொல்ல ...அவர்தான் என்னை போகும்படி கலைத்துவிடடார். 

அப்படியே யாழ் சென்று கொஞ்சம் உதவலாம் என்று யோசித்தேன் 
அப்போதான் யாழ்நகரம் வெளி நகரம் என்று எல்லா இடமும் திரிய நேர்ந்தது 
மக்களின் போக்கும் ....
எமது இனத்தின் சுயநல சிந்தனையும் அப்போதான் கொஞ்சம் கொஞ்சம் 
புரிய தொடங்கியது 
இந்த இனத்துக்கு போராடி நான் இறந்து போனாலும் பின்னாளில் 
போராட்டம் எமக்கு இடைஞ்சலாக இருந்தது என்று இந்த இனம் தூற்றினாலும் 
தூற்றும் ... என்று அப்போது எண்ணினேன்.
இறுதியில் அதுதான் நடந்து.
1990 இறுதியிலேயே முற்றான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் 
இந்த இனத்துக்கு உயிரை கொடுப்பதெல்லாம் ஒரு மொக்கு வேலை என்று.
போராளிகளை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்தது 
போயும் போயும் இந்த இனத்துக்கு இவர்கள் உயிரை கொடுக்க போகிறார்களே என்று.
பின்பு ஊர் திரும்பி ... மீண்டும் கொழும்பு செல்வது என்று முடிவு செய்துவிட்ட்டேன்.

அப்போ பாஸ் நடைமுறை வந்துவிட்டது .. ஊருக்கு போனால் 
வாலுகள் கொஞ்சம் இருக்கிறது எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது 
நான் பாஸுக்கு போனால் தரவே மாட்டார்கள் என்று தெரியும்.
நேராக வல்வெட்டித்துறை போனேன் ... அப்போ சூசையுடன் ஒரு 
கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்ட்து 
காற்றுக்கு என்ன வேலி ? என்றுவிட்டு பாஸ் இல்லாமலேயே வந்தேன் 
பாஸ் செக் பண்ணும் இடத்தில் எல்லோரும் வரிசையில் நிக்கும்போது 
நான் ரோட்டிலே நடந்து போனானேன் யாரும் ஒன்றும் கேட்கவில்லை.
அதன் பின்பு 2005இல் தான் சென்றேன். 

பின்பு அங்கு திரிந்து இங்கு திரிந்து 
நன்பர்கள் ஒரு சித்தப்பா உதவியுடன் ஒரு ஐரோப்பிய நாட்டை எட்டினேன்.
அங்கு இருக்கும்போதுதான் உணர்ந்தேன் எனக்கு என்று ஒரு நாடு மொழி தனித்துவம் 
இல்லாதவன் யாவரும் பரதேசிகள்தான் என்று.
அப்படியே அடுத்த கட்டமாக அமெரிக்கா வந்தேன்.
இங்கு பிரஜாவுரிமை பெற்று ஒரு அமெரிக்கன் போலவே வாழ்கிறேன் 
நான் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது இங்கு பிறக்காத காரணத்தால் 
எனது பிள்ளை வேண்டுமானால் ஜனாதிபதியும் ஆகலாம்.
அந்நிய நாட்டில் எனக்கு கிடைத்த உரிமை கூட ..
சொந்த நாட்டில் என் சொந்தகளுக்கு இல்லை எனும்போது 
ஆயுதம் ஏந்திதான் போராடவேண்டும் என்று இல்லை ...
அடிமையாக எவ்வளவு காலம் கிடப்பது என்ற கேள்விதான் இருக்கிறது.
இதற்கு விடை காணுவது என்பது 
வெறும் தூண்டுதல் அல்ல ...... எதிரியின் நோக்கமே அடித்து பிழிந்து போட்டால் 
சோறுதந்தாலே போதும் என்று சொல்வார்கள் அப்படியே விட்டு விடலாம் என்பதுதான்.
எனக்கான உரிமைக்கு ... நான்தான் குரல் கொடுக்க முடியும். 
 
வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

எல்லாப் பொறுப்பும் தமிழ்-சிங்கள அரசியல் வாதிகளுக்கே சேரும்.tw_angry:

ன்னுடன் ஒரு கோசவா நாட்டுக்காறன் வேலை செய்கிறான்.அவனின் பக்கத்து வீட்டல் முன்பு 2 மாவீரரன் எம்மின தகப்பன் ஒருவர் வசித்திருந்ததால் அவனுக்கு எமது பிரச்சனைகள் அத்துப்படி.இப்ப எப்ப பாத்தாலும்.எங்கள் போராட்டம் வீணாக போய்விட்டது இப்படி இடையில் விட்டிருக்க குடாது அத இது என்று எப்பவும் ரோதனை.ஒரு நாள் கேட்டேன் இப்ப உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுகந்திரம் கிடைத்து விட்டது தானே ஏன் நி இன்னும் இங்கு இருக்கிறாய் என்று.அதற்க்கு தனது எல்லாப்பிள்ளைகளும் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்.நான் மட்டும் அங்கு போய் எப்படி வாழ்வது என்று.இது தான் எமக்கு விடிவு கிடைத்திருந்தாலும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

உண்மை  சுடும் ஐயா

அது தான்  நாம் உண்மையை  தரிசிக்காது 

பொய்களை  மூட்டை மூட்டையாக இறக்கி

உண்மையை  சுற்றி அடுக்கி அதை மறைக்க முயல்கின்றோம்

தமிழர்கள் யாரால் சுயாட்சி கேட்டார்கள்?

யாரால் சத்தியாக்கிரகத்துக்கு தள்ளப்பட்டார்கள்?

யாரால் கத்தி  எடுத்தார்கள்?

யாரால் சயனற் எடுத்தார்கள்?

யாரால் தற்கொடையாளிகளானார்கள்?

ஆயுதங்களை தருவித்தார்கள்??

அவர்களை  விட்டு விட்டு 

நாம  தான்  பிழை  விட்டுட்டமோ??

சரி

நல்லாட்சி  நடக்கும் நாட்டில்

தமிழர்களின் வாக்கில்  வந்த ஆட்சியில் பயங்கரவாத தடுப்பு சட்டம் எதற்கு???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இல்லை, நான் போராடத்தை, தியாகத்தை எங்குமே தரக்குறைவாகவோ, இகழ்வாகவோ குறை சொன்னது இல்லை. ஒற்றுமையின்றி, நிலையில்லா மன மாற்றத்தை மட்டுமே சுட்டுகிறேன்.. இப்படி சடுதியில் மாறும் மனங்களுக்கா இவ்வளவு துயரங்களும், உயிரழப்புகளும்..?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

 1- இல்லை, நான் போராடத்தை, தியாகத்தை எங்குமே தரக்குறைவாகவோ, இகழ்வாகவோ குறை சொன்னது இல்லை.

2- ஒற்றுமையின்றி, நிலையில்லா மன மாற்றத்தை மட்டுமே சுட்டுகிறேன்.. இப்படி சடுதியில் மாறும் மனங்களுக்கா இவ்வளவு துயரங்களும், உயிரழப்புகளும்..?

1 - தெரியும் சகோதரா..

நானும் எய்தவன் இருக்க அம்பை (புலிகளை) நோகும் நிலையையே எழுதினேன்

2- இது சடுதியான மனமாற்றம்  இல்லை சகோதரா

எமது தகுதிக்கும் எமது கொள்ளளவுக்கும் அப்பால்  சென்றும்

எல்லாம் செய்து பார்த்தாச்சு

அதனால் தான் புலிகள் 2009 இல் நாம் வென்றிருப்போம் அல்லது நாம்இல்லாதிருப்போம்

என்றமுடிவுக்கு வந்தனர்.  இல்லையென்றால்  காட்டுப்பகுதிகளை நோக்கி  நகர்ந்து

 இப்பொழுதும் கெரில்லாப்போர்  தொடர்ந்தபடி இருந்திருக்கும்.

ஆயுதங்களை மௌனிப்பது என்பதன் பொருள் 

எமக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை

ஆயுதங்களை மௌனித்து வேறு வழிகளில்பெறுவோம் என்பது தான்.

அந்த வழியை  தீர்மானிப்பதில் தான் 8 வருடங்களாக.........??????

ஆனாலும் சிங்களம் எள்ளளவும் மாறவில்லை

எதையும் தரமுயலவுமில்லை..

முயலப்போவதுமில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

மருதர் 90 வரை இருந்து தன்னால் முடிந்தளவு எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டு வெளியே வந்தார்.

ஆனால் 83  வெடிச்சத்தத்தை நேரடியாகக் காணமல் வெளிநாடு வந்தவர்களுக்கு உண்மைநிலை தெரிந்திருக்காதுதான்.

 இரு தலைமுறை தாண்டும்போது போராட்டம் நடந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் என்பதுதான் இப்போதைய அரசியல் நடப்புகளை வைத்துச் சொல்லக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

சரி

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா. புலம்பெயர்ந்தவர்களது பிள்ளைகள் எல்லாரும் நல்ல யூனிகளில் படிப்பு, சிறந்த நிறுவனங்களில் வேலை, ஆனால் ஊரிலிருப்பவர்களின் பிள்ளைகள் இவர்களின் கனவுகளுக்காக போராட வேண்டும். எப்படி ஐயா இது நியாயமாக இருக்க முடியும்? அதனை விடப் போராடித் தோற்ற பலர் வாழக்கையை கொண்டு நடாத்த, பிள்ளைகளைப் படிப்பிக்க படும் பாட்டை நேரடியாகக் கண்டால் மக்களின் சிந்தனை ஏன் மாறிவிட்டது எனப் புரியும். புலத்திலிருந்து போராட்டத்திற்கு கொடுத்த காசிற்கும் அவர்கள் நேரடியாக அனுபவித்த கஷ்டங்களுக்கும் இடைவெளி மிக அதிகம். போரினால் அவர்கள் இழந்ததும் அதிகம். சில முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் சந்தர்ப்பம் 2011 போயிருந்தபோது ஏற்றப்பட்டது. அவர்களுடன் பேசி அவர்களின் மனா நிலையை அறிந்திருக்கிறேன். நான் இதை யாழில் முன்பு குறிப்பிட்டதும் இல்லை இப்போதும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் உண்மைமுகம் பலருக்கு தெரியாது என்பதால் குறிப்பிடவேண்டி வந்துவிட்டது. அவர்கள் தங்கள் காலில் நிற்கிறார்கள், கவுரவமாக வாழ்கிறார்கள் என்ற மன நிறைவு இருக்கிறது. இதைவிட மேலதிகமாகக் குறிப்பிடவும் விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Thumpalayan said:

தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா. 

இதற்கு  நான் பதில் எழுதுவதைவிட

மருதரும் கிருபனும் எழுதட்டும்.

அதுவே சரி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சரி

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

போராட்டம் தொடர்ந்து நடந்தால்தானே அதைவைத்து புலம்பெயர் நாடுகளில் சொந்த பந்தங்களோடு கால் ஊன்றலாம், பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம், வியாபாரம் பெருக்கலாம், சுய தம்பட்டம் அடிக்கலாம் என்று பல காரணங்கள் இருந்தது :) கால் ஊன்றிய பின்னர் போராட்டம் நின்றால்தான் ஊருக்குப் போகலாம், இன்னும் படம் காட்டலாம் என்ற நினைப்பும் வந்தது! சமாதான காலம் அதுக்கும் உதவி செய்ததுதானே!

புலம்பெயர்ந்தவர்கள் கையில் போராட்டத்தை ஒப்படைத்த புலிகளின் தலைமையை விட இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு!

நிற்க,

தமிழர்கள் உரிமைகளோடு வாழ, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள 90களிலும், 2000 களிலும் புலிகள் பலம் வாய்ந்திருந்தபோது ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தப் பலத்தை ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செல்லப் பயன்படுத்தாமல் அழிந்தபோது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

இப்போது தமிழர்கள் சிங்களவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வெட்டியோடவும், சுழித்தோடவும் பழகிவிட்டார்கள் என்பதால் அரசியல் உரிமைகள் இரண்டாம்பட்சமாகிவிட்டது.  இந்த யதார்த்தையும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

 1- போராட்டம் தொடர்ந்து நடந்தால்தானே அதைவைத்து புலம்பெயர் நாடுகளில் சொந்த பந்தங்களோடு கால் ஊன்றலாம், பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம், வியாபாரம் பெருக்கலாம், சுய தம்பட்டம் அடிக்கலாம் என்று பல காரணங்கள் இருந்தது :) கால் ஊன்றிய பின்னர் போராட்டம் நின்றால்தான் ஊருக்குப் போகலாம், இன்னும் படம் காட்டலாம் என்ற நினைப்பும் வந்தது! சமாதான காலம் அதுக்கும் உதவி செய்ததுதானே!

புலம்பெயர்ந்தவர்கள் கையில் போராட்டத்தை ஒப்படைத்த புலிகளின் தலைமையை விட இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு!

நிற்க,

2 - தமிழர்கள் உரிமைகளோடு வாழ, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள 90களிலும், 2000 களிலும் புலிகள் பலம் வாய்ந்திருந்தபோது ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தப் பலத்தை ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செல்லப் பயன்படுத்தாமல் அழிந்தபோது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

 3- இப்போது தமிழர்கள் சிங்களவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வெட்டியோடவும், சுழித்தோடவும் பழகிவிட்டார்கள் என்பதால் அரசியல் உரிமைகள் இரண்டாம்பட்சமாகிவிட்டது.  இந்த யதார்த்தையும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

உங்கள்  கருத்துக்கள் வேண்டுமேன்றே எழுது போல் தான் தெரிகிறது

யதார்த்தத்தோடு இல்லை

1- என்னைப்பொறுத்தவரை 77 கலவரத்துக்கு   முற்பட்ட  காலப்பகுதியில்  புலம் பெயர வேண்டிய தேவையோ 

வெளியில் சென்று உழைக்க வேண்டியோ தமிழருக்கு இருந்ததில்லை..

புலத்தில் இன்று இருப்பதைவிட  விட வசதியாகவும் கல்வியில் உயர்ந்தும்   இருந்தவர்கள் தான் நாம்.

2- அந்த பலத்தை தந்தவர்கள் ஒரு 10 வீதம் மட்டுமே.  மற்றவர் இதே போல் வேடிக்கையும் மதில் மேல் பூனையாகவும் இருந்தவர்களே.  அவர்களே தோல்விக்கும் பலமிழப்புக்கும்  பதில் சொல்லணும்.  இப்பொழுது அழுது புலம்புவதில் என்ன பயன்??

3- அப்படியானால் எதற்காக வடக்கு கிழக்கு  மக்கள் சுயாட்சிக்காகவும் 

தேசியக்கட்சிகளைத்தவிர்த்து

கூட்டமைப்புக்கும் வாக்களிக்கிறார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா,

நீங்கள் குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம் அலசித் துவைத்து எல்லாம் நைந்து நூலாகி யாழில் பல இடங்களில் உள்ளது.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து 8 வருடம் முடிந்த பின்னர் தாயகத்தில் உள்ள மக்களின் அரசியல் நிலைப்பாடும், புலம்பெயர் நாடுகளில் இன்னமும் அரசியல் பேசுபவர்களின் நிலைப்பாடும் வேறு வேறு கோடுகளில் பயணிப்பதாகத்தான் தெரிகின்றது.

எனவே, தாயக மக்களின் வாழ்வு வளம்பெற இலங்கை அரசியல் இடைஞ்சலாக உள்ளது என்று அங்கு வசிப்பவர்கள் நினைக்குமட்டும் எதிர்ப்பரசியல் காரணமாக கூட்டமைப்புக்கு வாக்கு விழும். ஆனால் மக்கள் தம்பாட்டுக்கு தம்மை முன்னேற்ற எல்லா வழிகளையும் தொடர்ந்தும் முயன்றுகொண்டுதான் இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

யூரூப்பில் கண்டதை இங்கே இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

சமூகத்தின் மீது ... இனத்தின் மீது வந்த ஒரு வெறுப்பாக கூட 
இது இருக்கலாம் ...
நான் அறிவாளி நான் இந்த பள்ளியில் படித்தேன் 
அந்த பாரில் குடித்தேன் என்ற தலைக்கணம் மட்டும் 
எங்கும் அளவு குறையாது இருக்கிறது ... எதாவது படித்து இருந்தால் 
அதை வைத்து என்ன கிழித்தேன் என்ற எண்ணமோ 
எதையாவது கிழிக்க வேண்டும் என்ற எண்ணமோ யாருக்கும் இருக்கவில்லை.
அப்படி இருந்தவர்கள் ஒரு சிலர் தங்களை இயக்கங்களில் சேர்த்து 
இறந்து போனார்கள். 

எப்படி நகர்ந்தாலும் இந்த போராட்டம் 
ஏழைகளின் தலையில்தான் போய் விழும் என்பதை 
அப்போதே என்னால் உணர முடிந்தது.
சின்ன வயதில் கொமினிஷியம் ... பொதுவுடைமை சிர்த்தார்த்தங்கள் 
என்னை கொஞ்சம் ஈர்த்து கொண்டதால் ..பணக்காரவர்க்கம் 
பாட்டாளி வர்க்கத்தை சுரண்டபோகிறது அதற்குத்தான் இந்த போர் 
இறுதியில் உதவப்போகிறது என்ற ஒரு தப்பான எண்ணம் என்னிடம் 
வந்துவிட்ட்து.

இயக்கங்களுக்குள் சண்டை வந்தபோதும் மேல் தட்டு வர்க்கம் 
தப்பி கொண்டது ... மிகுந்த ஏழைக்குடும்ப இளைஞர்கள்தான் மாட்டி கொண்டார்கள் 
இது எல்லாம் எனக்கு கொஞ்சம் வெறுப்பை உண்டுபண்ணியே இருந்தது.

இப்போதும் நெதர்லாந்தில் காசு சேர்த்த 5 பேரை 20 வருடம் உள்ளே போட 
போகிறார்களாம் 2 நாள் முன்பு இங்கு செய்தி இருந்துச்சு ...
இங்கு வேலை செய்தவர்கள் பற்றி இந்த திரியிலேயே என்ன மாதிரி கருத்துக்கள் வருகிறது ?
தாம்தான் அறிவாளிகள் என்பதை நிறுவுவதாக நினைத்து 
ஒரு போதை மகிழ்ச்சியில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இங்கே கண் முன்னேயே 
இருக்கிறது ......... இங்கு அமெரிக்காவில் 6 பேர் இப்போதும் உள்ளே இருக்கிறார்கள்.
எப்படியோ வாழ கூடிய கல்வி வசதி உள்ளவர்கள்.
வெளியில் இருந்து இருந்தால் ? இந்த சமூகம் தூற்ற பின் நிற்க போவதில்லை 
அதன் மூலம்தான் ......... ஒன்றும் செய்யாதவர்கள் தங்கள் அறிவாளிகள் என்று நிறுவ முடியும். 

போராளிகள் மேல் எனக்கு பரிதாப எண்ணம் இருந்ததே தவிர 
இந்த இனம் உருப்படும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை 
அதை இங்கு பல இடங்களில் எழுதியும் இருக்கிறேன். 

போராட முடியும் என்றால் அதட்கு உதவ முடியும் என்றால் 
அதை முடிந்த அளவில் செய்துகொண்டுதான் இருப்பேன் 
அடுத்தவன் தூண்டுறாய் ... நோண்டுறாய் என்று சொல்ல நின்று கேட்பதில்லை.
அதில் உண்மை இல்லை என்பதும் தெரியும் 
போராடியவன்தான் வாழ்வான் ....... சோம்பேறி மிருகங்கள் கூட 
இறுதியில் மனிதனை அண்டி மனிதனின் சுரண்டலுக்கு ஆளாகினது  தவிர 
தமது வாழ்வு என்று வாழ்வதில்லை.
கன்றை கட்டி வைத்து பால் கறந்து கல்லுக்கு ஊத்திவிட்டு 
பசு பால்தரும் ....... என்று சுகமாக எழுதுவதில் வாழ்வதில் இஸ்ட்டம் இல்லை. 

ஆர்கே நகர் தொகுதி தேர்தலை உறுப்பார்த்தாலே 
தமிழனின் எதிரி யார் என்பது ஓரளவு புரியும் 
இன்னமும் தந்து எதிரி யார் என்றே தெரியாத ஒரு இனம் 
எம்மினம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

நன்றி  ஐயா

எந்த ஒரு முயற்ச்சியும்

அல்லது போட்டிகளும்

எனக்கு களைத்துவிட்டது

அல்லது எனக்கு நோய் வந்துவிட்டது என்பதற்காக நின்று போவதில்லை

நேற்று ஒரு வசனம் பார்த்தேன்

ஒரு விமானத்தின் ஓடுபாதை முடியும் போது தான்

அது பறக்கவே தொடங்குகிறது என்று.

எதையும் தோற்றதாகவோ

முடிந்துவிட்டதாகவோ நான் நினைக்கவில்லை

என்னால் முடிந்ததை

என்னிடம்  கேட்பதை  செய்து கொண்டே தான் 

கொடுத்துக்கொண்டே  தான் இருப்பேன்.

35  வருடங்களாக பிரான்சில் வாழும் எனக்கு இதனால் லாபம்  

அல்லது பெயர் வருகிறது என்று எவராவது வரைவிலக்கணம் செய்வார்களாயின்

அவர்களுக்காக பரிதாபப்படமட்டுமே முடியும்

நன்றி.

என்னப்பா இது.  குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்

:100_pray::100_pray::100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கலைஞன் said:

1

2

:100_pray::100_pray::100_pray:

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

"தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா."

இதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ....
இவர்கள்தான் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் என்று 
போலீசில் வழக்கு போடாமல் விட்டார்கள் ... என்று சந்தோசப்பட வேண்டும்.
தமிழேண்டா ! 

எனக்கு முன்கூட்டிய கொஞ்சம் தெளிவு இருந்தால் 
அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கு பாலூட்டினேன் ..... இங்கு தேன் ஊற்றினேன் என்ற 
சுயவிளம்பரமும் .....நான் அறிவாளி என்ற தலைக்கனமும் 
தவிர்த்தால் வேறு ஒன்றும் மிஞ்சாது. எல்லா பழியையும் சுமக்க 
இனத்தை சுமந்தவனே இறுதியில் வரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் முடிவுதான் இதற்கு காரணம் என்று எண்ணாதீர்கள் 
தமிழ் ஈழம் வந்திருந்தாலும் ........
உழைத்தவன் இருப்பு  பந்தலுக்கு வெளியில்தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

நாங்கள் கடந்த பாதைகள்  கனதியானவை சகோதரா.

இதுவும் கடந்து போகும்...

  • கருத்துக்கள உறவுகள்
On 8.4.2017 at 7:41 PM, Maruthankerny said:

"தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா."

இதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ....
இவர்கள்தான் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் என்று 
போலீசில் வழக்கு போடாமல் விட்டார்கள் ... என்று சந்தோசப்பட வேண்டும்.
தமிழேண்டா ! 

எனக்கு முன்கூட்டிய கொஞ்சம் தெளிவு இருந்தால் 
அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கு பாலூட்டினேன் ..... இங்கு தேன் ஊற்றினேன் என்ற 
சுயவிளம்பரமும் .....நான் அறிவாளி என்ற தலைக்கனமும் 
தவிர்த்தால் வேறு ஒன்றும் மிஞ்சாது. எல்லா பழியையும் சுமக்க 
இனத்தை சுமந்தவனே இறுதியில் வரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் முடிவுதான் இதற்கு காரணம் என்று எண்ணாதீர்கள் 
தமிழ் ஈழம் வந்திருந்தாலும் ........
உழைத்தவன் இருப்பு  பந்தலுக்கு வெளியில்தான்! 

சரியான உணமை மருதர். காலவோட்டத்தில் எல்லாம் கரைந்தழிந்து தமிழினம் மறந்து மக்கிப்போய்விடும் என்பதே சிங்கள மற்றும் உலகவல்லாதிக்க சகக்திகளின் அவா. அதனைத் தமிழினம் நிறைவேற்றிவிடும்போலவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2017 at 11:07 PM, கலைஞன் said:

என்னப்பா இது.  குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்

:100_pray::100_pray::100_pray:

மீதியையையும் எழுதினால் நாங்க வாசிக்க  இருக்கிறம்  கெதியா எழுதுங்கப்பாtw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.