Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 7:00 PM, nochchi said:


உண்மையிலேயே பலரது அனுபவங்களை கதையாகப் (....!) பதிவுசெய்து செல்கிறது. பாராட்டுகள். 
லண்டனில், எனது நண்பரொருவர் வாடகைக்கெடுத்த வீட்டிலே முன்பிருந்தவர் செய்தஏமாற்றுச் செயல்கரணியமாக அவர் ஒரு கடனைப்பெறமுடியாத நிலையிருந்ததாகக் கூறியிருந்தார். எத்தனை பேரது தரிசனமோ சோமண்ணை.........

வரவுக்கும்...கருத்துக்கும் நன்றி நொச்சி!

இப்படியான சிலருடன் கூட்டு வைத்ததால் ...வாழ்க்கையில் மிகவும் நொந்து போனவர்கள் அதிகம்! அவர்களில் அடியேனும் ...ஒருவன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  காலத்தில் இங்கு வருபவர்களுக்கு எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள் என எழுதி எழுதி கையொப்பமிட்டுக்கொடுப்பதுண்டு.

ஒரு நாள் எனது பகுதி  காவல்த்துறை என்னை  அழைத்திருந்தது

போன போது நீர்  என்ன இங்க அமைச்சரா?

எல்லோருக்கும்  வதிவிடம்  அள்ளி  அள்ளி வழங்குகின்றீர்

என ஒரு கொப்பியை  தூக்கி  எனக்கு முன்போட்டார்

கொப்பியில்  எழுதி அது முடிந்திருந்தது

எனக்கு முன்னுக்கே அதன் நடுவால்  சிவப்பு   பேனாவால் கீறி விட்டு

சொன்னார் இனி  எவருக்காவது கடிதம் எழுதினால் உமக்கு வதிவிடம் பிரான்சில்இருக்காது என்று.

அதன் பின் விட்டது தான் வதிவிடம் வழங்கலை.

 

நன்றியண்ணா

ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை கதையாக கொண்டு வந்து

பழையவற்றை  ஞாபகப்படுத்தி  விட்டீர்கள்

தொடருங்கள்

 ஊர் வழக்கில் எழுத்து இயல்பாக உங்களுக்கு வருகின்றது.  கடனட்டை மற்றும் கசினோ விசயங்களில் அழிந்து போகின்றவர்கள் எமமவர்களில் அதிகரித்துவருகின்றது. பலவிதமான தொடர் துன்பங்களில் இந்த விசயங்களும் இணைந்துகொள்கின்றது.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்ள் 

நன்றாக இருக்கின்றது புங்கை. இங்கு இப்பவும் கடனட்டை மோசடியில் தமிழர்கள் அடிக்கடி அகப்பட்டுக் கொள்கின்றார்கள். கடந்த வாரம் 25 வயதே ஆன இளம் தமிழ் பெண் கடனட்டை மோசடியில் கைதாகி இருந்தார். அவர் படம் எல்லா பத்திரிகைகளிலும் வந்து இருந்தது. அதற்கு முதல் ஒரு தமிழ் தம்பதி.....

உங்கள் மொழி நடையைப் பார்க்க பொறாமையாக இருக்கு. ஊர் வழக்கில் புகுந்து விளையாடுகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...கொழும்பான்!

-----தமிழ் படிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை! சாதாரண தரத்துடன்..தமிழுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்பட்டது!

புங்கை....  சிவராமலிங்கம் மாஸ்ரர், தம்பையா மாஸ்ரர் ஆகியோரின் பெயரை குறிப்பிட  மறந்ததை.... 
மிக வன்மையாக ... கண்டிக்கின்றோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் உதவக்கூடிய இளகிய மனம் படைத்தவர்களும், எவரையும் மொட்டையடித்து எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் சுத்துமாத்துச் செய்து பணம் சம்பாதிப்பவர்களையும் நாம் அதிகம் பார்க்கின்றோம்.

கதையில் சொல்லப்பட்டதைவிட படுமோசமான சுத்துமாத்துச் செய்தவர்களை நேரே கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் படிக்க முடிந்ததது  புங்கை அருமை அப்படியே ஒரு சிலரின் நடத்தையை குறிப்பிட்டூள்ளீர்கள் மத்திய கிழக்கில் ஒருவனுக்கு  என்னால் எப்படியெல்லாம் உதவி செய்ய முடியுமோ உதவி செய்து இருக்கிறேன் ஆனால் நான் சும்மா போண் பண்ணினால் கூட கட் பண்ணுகிறான் ஆனால் சில  காலம்  பழகிய வங்காளி அடிக்கடி போண் பண்ணி கதைக்கிறான் பாருங்கோவன்  நம்மட ஒரு சிலதுகளை நம்பினால் நடுத்தெருவில் நிப்பாட்டி விடுவார்கள்  செய்த உதவிகளை மறந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2017 at 5:43 AM, ரதி said:

எங்கே லண்டனில் நடக்கும் கதை மிச்சத்தை காணோம்:unsure:

மிச்சக் கதை வந்திட்டுது.....!

ரதியைத் தான் காணோம்!:unsure:

On 3/21/2017 at 10:21 PM, ஈழப்பிரியன் said:

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

லண்டனில விடுகிற ....விளையாட்டுக்களை...அவுசில விடுகிறது கொஞ்சம் கஸ்டம் என்பது தான் எனது....அனுமானம்!

லண்டன் ஒரு கடல்..!

அவுஸ் ஒரு கேணி...!:rolleyes:

நன்றி...ஈழப்பிரியன்!

On 3/22/2017 at 2:03 AM, வல்வை சகாறா said:

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

வரவுக்கு நன்றி....சகாறா!

எம்மவர்களின் வருமானம்...ஒரு மணல் குன்றைப் போன்றது!

ஆனால் தேவைகளோ....மரியானா அகழியைப் போல...ஆழமானது!

எவ்வாறு நிரப்புவது.....?

பொய்யும்...களவும்...புனை சுருட்டும்எ...ந்த நேரமும் கபட சிந்தனையும் தான்....எம்மவரில் பலருடையது!

 

ஆள் கடத்தல்காரர்களும்..கஞ்சா கடத்துவனும்....கள்ளக் கார்ட் அடிக்கிறவனும்....திருவிழாக்களின் உபயக்காரர்களாகி...தங்களுக்கென ஒரு நிலையான சமூக அந்தஸ்த்தை ..உருவாக்கிக் கொள்ள எமது சமூகமே வழி வகுத்துக் கொடுக்கிறது!.

காயமே கோவிலாகி ...கடி மனம் அடிமையாகி ...வாய்மையே தூய்மையாகி....மனமணி லிங்கமாகும் வரை.......அனைத்துமே தொடரும்!

எமது மதம் ஒரு அழகிய மதம்!

ஆனால் இப்போது...எமது தெய்வங்கள் கூட.......பணத்திமிரில் மிதக்கின்றன!

 

நல்லூர்க் கந்தன்      - அலங்காரக் கந்தன்!

சந்நிதிக் கந்தன்.........அன்னக்கந்தன்!

கதிர்காமக் கந்தன் ----- அபிஷேகக் கந்தன்!

சிட்னி முருகன் ------????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/03/2017 at 10:21 PM, ஈழப்பிரியன் said:

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

சோமண்ணை அடிப்படையில்...மிகவும் நல்ல மனுசன் தான்!

ஆனால் எமது தேவைகள்...எப்பவுமே அளவுக்கு மிஞ்சியவை! 

ஆனால் அவற்றை...நியாயமான முறையில் அடைவதற்கு...ஆயுட்காலம் போதாது!

அது தான்...குறுக்கு வழியைப் பலர் நாட வேண்டி ஏற்படுகின்றது..ஈழப்பிரியன்!

On 22/03/2017 at 2:03 AM, வல்வை சகாறா said:

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

எங்களது கடவுளர்களும்... இப்படியானவர்களைத் தானே ஊக்குவிக்கிறார்கள்!

எமது ஊரில்..(.அதுவும் கிட்டத் தட்ட வல்வெட்டித் துறையைப் போலத்தான்), சாமிக்கு மிகவும் அருகில் ..அண்மிக்கக் கூடிய வலிமை இவகளிடம் தான் இருந்திருக்கின்றது!

தீர்த்தத் திருவிழாவில், தேர்த் திருவிழாவில்...அர்ச்சகருக்கு அடுத்ததாக இவர்கள் தான் அமர்ந்திருப்பார்கள்! சூரிய ஒளியில், அல்லது டியூப் லைட் வெளிச்சத்தில்...இவர்களது புலிப்பல்லுப் போட்ட...தங்கச் சங்கிலி மின்னுவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும்!

அதர்மம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது சமூகத்தை ஒழுங்காக வழி நடத்துவதற்காகக் கூறப்படும் ஒரு கருத்தாகும்!

நீங்களுமா...அதை நம்பிறீங்கள்? 

On 22/03/2017 at 2:29 AM, suvy said:

எப்படித் துணிச்சலுடன் செய்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டுப் பட்டு விடுவார்கள்....! இது கதையான போதிலும் அங்கங்கு நடப்பவையே.....!

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி...சுவியர்!

நாங்கள் தான்...எமது மன அமைதிக்காக..இவ்வாறு சொல்லி...எம்மைத் திருப்திப் படுத்திக் கொள்கிறோம் போல உள்ளது!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 2:53 AM, Maruthankerny said:

இனி வரும் காலங்களில் கொஞ்சம் கடினம் ...........
இப்போதும் பிடிக்க வேண்டும் என்றால் பிடிக்க முடியும் 
அவர்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

க்ரெடிட் கார்ட் கொம்பனிகள் ....
செலவு என்று ஒரு வருடத்திற்கு இத்தனை மில்லியன் என்று 
ஒவ்வரு வருட தொடக்கத்திலும் ஒரு பட்டியல் போடுவார்கள் 
அவர்கள் பட்ஜட்டுக்குள் சோமண்ணை ஆட்கள் நிற்பதால் .... அவர்களுக்கும் சோமண்ணை 
போன்றவர்களுக்கும்  பிரச்சனை இல்லை.

நீதி நேர்மையோடு இருக்கிற எங்களை போன்றவர்கள் ஒருநாள் பிந்தினாலும் 
ஒரு $35 வாங்கி அதை நிறுவி கொள்வார்கள். 
எங்களுக்கும் அவர்களுக்கும்தான் பிரச்சனை.
காரணம் 
லாபம் ஈட்டிக்கொடுக்கும் பட்ஜெட்டை நிரப்ப வேண்டிய ஒரு 
தார்மீக கடமை எமக்கு உண்டு . 

மிகவும் உண்மை...மருதர்!

ஒரு மனிதன்...நல்லவனாக இருப்பதற்கும்...கெட்டவனாக மாறுவதற்குமிடையில் ஒரு சிறு இடைவெளி தான் உள்ளது!

அதனைக் குளிர் விட்டுப் போகும் நிலை என்று கூடச் சொல்லலாம்!

சிலருக்கு அது இலகுவில் கை வந்து விடுகின்றது!

அங்கலாய்க்கும் மனதை சமாதானப் படுத்த ஒரு காரணத்தை அது தேடுகின்றது! கொம்பனிகள்  அறா வட்டி வாங்குகின்றன! அதனால் வரும் இழப்பு கொம்பனிகளுக்குத் தானே! தனிப்பட்ட மனிதர்கள் பாதிக்கப் பட மாட்டார்கள் தானே என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளுவார்கள்! அட...இலங்கையிலிருந்து எவ்வளவத்தை அள்ளிக்கொண்டு போனாங்கள்! அதோடு ஒப்பிடும் போது நாங்கள் எடுப்பது ஒரு கொஞ்சம் தானே! இப்படியும் சொல்லுகிறார்கள்!

எனினும் இறுதியில்...இவர்களது செயல்களால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்வதும் எங்களைப் போன்றவர்களே! 

On 22/03/2017 at 3:20 PM, Thumpalayan said:

நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை.

இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!

நன்றி...தும்ஸ்!

யாழில் எழுதும் போது ஒரு பிரச்சனை வருகின்றது!

எழுதிக்கொண்டிருக்கும் போது...விரல்கள் விசைப்பலகையைத் தட்டிய படியேயிருக்கும்! நிறுத்தி விட்டு வாசித்தால்..ஒரு மகா பாரதமே கணனித் திரையில் தெரியும்! 

அநேகமானவர்கள்...கதையின் நீளத்தைப் பார்த்ததுமே...நடையைக் கட்டி விடுவார்கள்!

அதற்காகக் கொஞ்சம் குறைக்க வேண்டியுள்ளது! இருந்து....மிகவும் முக்கியமானவற்றை...நீக்காது வைத்திருக்கத் தான் முயற்சிக்கிறேன்!

அவுஸில் ...லண்டனைப் போல வெட்டி..விளையாடுவது என்பது கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறேன்!

அவுஸின் சனத் தொகையே இருபத்தைந்து மில்லியன்! ஆனால் லண்டன் நகரின் சனத் தொகை இருபத்தைந்து மில்லியனிலும் அதிகம்!

அதனால் தான் அங்கு ...சோமண்ணை போன்றவர்களால் வெட்டிப் புடுங்க முடிகின்றது என நினைக்கிறேன்!

மற்றும்..இவர்களைப் போன்றவைகளைத் தேடித் திரிவதும்..அவர்களைச் சடத்தின் பிடிக்குள் கொண்டு வருவதற்குமான செரல்வுகள் மிகவும் அதிகம்!

எங்கள் பாஷையில் சொல்வதானால்....றைற் ஓவ் அண்ட் மூவ் ஒன் ...தான்!

On 1.4.2017 at 4:42 AM, புங்கையூரன் said:

ஒரு மனிதன்...நல்லவனாக இருப்பதற்கும்...கெட்டவனாக மாறுவதற்குமிடையில் ஒரு சிறு இடைவெளி தான் உள்ளது!

அதனைக் குளிர் விட்டுப் போகும் நிலை என்று கூடச் சொல்லலாம்!

சிலருக்கு அது இலகுவில் கை வந்து விடுகின்றது!

 

On 1.4.2017 at 4:42 AM, புங்கையூரன் said:

எங்கள் பாஷையில் சொல்வதானால்....றைற் ஓவ் அண்ட் மூவ் ஒன் ...தான்!

புங்க்ஸ் பிடித்திருக்கு :91_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

சோமண்ணையைப் போலப் பலர் இந்த உலகில் வாழ்கின்றனர்.

கதை சொன்ன விதம் அழகாக இருந்தது புங்கையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.