Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள்

By
 nadunadapu
 -
June 20, 2017
0
18
9771-1-e3f59a0dc3106f973e0c0d0a57231a51-

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என ஆதாரபூர்வமாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக எமது ஊடக விசாரணையில் தெரியவந்ததாவது,

கணவன் மனைவி தனியாக வசித்துவரும் நிலையில் மேற்படி நபர் இவர்களுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.மேலும் வயதான தம்பதிகள் எனும் காரணத்தினால் இவர்களும் அவரை ஆதரித்து வீட்டில் அணைத்து வந்துள்ளனர்.

மேலும் இவரது மூன்று பிள்ளைகளையும் வளர்க்க இவர்களே உதவிசெய்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் மின்னியல் தொழிலை செய்துவரும் குணரஞ்சன் வழக்கம் போல சாம்பசிவம் வீட்டிற்குள் நுளைந்துள்ளார். அங்கு சாம்பசிவத்தின் மனைவியான சரோயினிதேவியே தனிமையில் இருந்துள்ளார்.

சாம்பசிவம் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்ததை அறிந்துகொண்ட குணரஞ்சன் சரோயினிதேவியின் பின்னால் சென்று கதவிற்கு போடும் வார் கட்டையால் தலையிலேயே பலமுறை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சரோயினிதேவியின் தங்கநகைகளை வலுக்கட்டாயமாக கழற்ற முற்பட்ட வேளை அவர் தடுக்க முற்பட்டதால் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதேவேளை கடையிலிருந்து திரும்பிய சாம்பசிவம் வீட்டை நெருங்கிய போது அயல் வீட்டுக்கார பெண் உங்கள் வீட்டில் யாரோ கத்துவது போல கிடக்கின்றது என தெரிவித்துள்ளார்.

பதறிப்போன சாம்பசிவம் கடையில் வேண்டியதை வழியிலேயே போட்டுவிட்டு வீட்டிற்குள் நுளைந்துள்ளார்.

அங் கே தனது மனைவியை குணரஞ்சன் கொல்லமுனைவதை கண்டதும் பதறிப்போய் அவனை தள்ளிவிட்டு மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.

நிலைமை பிழைத்ததை உணர்ந்த குணரஞ்சன் பின்னர் சாம்பசிவத்தையும் கொடூரமாக தாக்க முயன்றுள்ளார்.இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சாம்பசிவத்தின் மேலே ஏறியிருந்து அவரது கழுத்தை வாளால் அறுத்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் அயல் வீட்டுக்கார பெண் உள்ளே நுளைந்துள்ளார்.அவர் தன்னை பார்த்துவிட்டதை உணர்ந்த குணரஞ்சன் அவரையும் கொடூரமாக தாக்கி மூர்ச்சையாக செய்துவிட்டு வீட்டிலே கிடந்தவற்றை சுருட்டிக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் உடைமாற்றிக்கொண்டு அடித்த நகைகள் மற்றும் பணத்துடன் வன்னிப்பகுதிக்கு செல்வதாக கூறி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் ஒருவாறு உயிரை கையில் பிடித்துக்கொண்டு எழுந்த சாம்பசிவம் வெளியில் வந்து அயலவர்களை அழைத்துள்ளார்.

பின்னர் அயலவரின் உதவியுடன் மூவரும் யாழ் போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ் பொலிசாரிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய உடனடியாக களத்தில் இறங்கிய பொலிசார் குணரஞ்சன் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்ட அதேவேளை அவரின் முன்று பிள்ளைகளையும் கைதுசெய்துள்ளனர்.

யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரின் நிலையும் பாதகமாக காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை மூவரும் கடந்துள்ள நிலையில் சாம்பசிவத்தின் மனைவியின் நிலையே பாரதூரமாக காணப்படுவதாக மேலும் தெரியவருகின்றது.

 

http://nadunadapu.com/?p=129349

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு பால் வாத்த கதை போலுள்ளதே. tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நகையை போட்டுகொண்டு இருக்கிற விடயம் இன்றுவரை விளங்கவில்லை.
அது  அழகு என்று சொல்கிறார்கள் எனக்கு அப்படி தெரிவதே இல்லை.

இதனால் பல கொலைகள் நடந்தும் 
ஏன் இதற்கு இவளவு முக்கியத்துவம் என்பது 
எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

எனக்கு நகையை போட்டுகொண்டு இருக்கிற விடயம் இன்றுவரை விளங்கவில்லை.
அது  அழகு என்று சொல்கிறார்கள் எனக்கு அப்படி தெரிவதே இல்லை.

இதனால் பல கொலைகள் நடந்தும் 
ஏன் இதற்கு இவளவு முக்கியத்துவம் என்பது 
எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. 

சொத்து சேர்த்தல், பணவீக்கத்தால் ஏற்படப்போகும் மதிப்பு வீழ்ச்சியை சமாளித்தல் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, இசைக்கலைஞன் said:

சொத்து சேர்த்தல், பணவீக்கத்தால் ஏற்படப்போகும் மதிப்பு வீழ்ச்சியை சமாளித்தல் :unsure:

உடலில் பூட்டிக்கொண்டு திரிவதட்கும் 
உங்கள் காரணத்துக்கும் பொருத்தம் ஒன்றும் இல்லையே.

உடலில் பூட்டி திரிவதால்தானே 
உயிருக்கே உலையாகி போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

உடலில் பூட்டிக்கொண்டு திரிவதட்கும் 
உங்கள் காரணத்துக்கும் பொருத்தம் ஒன்றும் இல்லையே.

உடலில் பூட்டி திரிவதால்தானே 
உயிருக்கே உலையாகி போகிறது?

உடலில் பூட்டிக்கொண்டு திரிவதால் உங்களிடம் செல்வம் உள்ளது என்கிற தகவல் சமூகத்தை சென்றடையும். அதை அறியும் மற்றவர்கள் தங்கள் மகனையோ, மகளையோ அந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்ய முன்வருவார்கள். பெண்பிள்ளைகள் தங்களையும், தாம் பெறப்போகும் குழந்தைகளையும் நன்றாக வளர்க்கக்கூடிய செல்வ வளம் உள்ள சூழ்நிலையை விரும்புவார்கள். tw_blush: ஆனால் அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் அந்த தங்கத்தை களவாடி, தமது சந்ததிகளை வளர்க்க முனைவார்கள். அதில் சில பல கொலைகளும் விழலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரை
கொலை செய்யும் முயற்சி
நடந்து இருக்கு

வயதானவர்கள் மீது
கொடூரம் அரங்கேறியிருக்கு

வலியையும் வேதனையும்
பாதிக்கபப்ட்டவர்கள்
அனுபவிக்கின்றனர்

ஆனால் இங்கு
நகை போட்டதால் தான்
இது நடக்கின்றது என்று
ஒருவர் சப்பை கட்டு கட்டுகின்றார்

பாதிக்கப்பட்டவர் மேல்
கொஞ்சம் கூட இரக்கம்
இல்லாமல்
மனிதாபிமானமற்ற முறையில்
அவர்கள் செயல் தான் காரணம்
என்கின்றார்

கொலை செய்ய
முயன்றவனை விட
அதிகம் வலியை இவர்கள் தான்
ஏற்படுத்துகின்றனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நகை நட்டு சொத்துபத்து உறுதி என்று பலர் பல சமயத்தில் உயிரை விட்டுள்ளார்கள்.எப்பதான் திருந்துவினமோ tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வைரவன் said:

மூன்று பேரை
கொலை செய்யும் முயற்சி
நடந்து இருக்கு

வயதானவர்கள் மீது
கொடூரம் அரங்கேறியிருக்கு

வலியையும் வேதனையும்
பாதிக்கபப்ட்டவர்கள்
அனுபவிக்கின்றனர்

ஆனால் இங்கு
நகை போட்டதால் தான்
இது நடக்கின்றது என்று
ஒருவர் சப்பை கட்டு கட்டுகின்றார்

பாதிக்கப்பட்டவர் மேல்
கொஞ்சம் கூட இரக்கம்
இல்லாமல்
மனிதாபிமானமற்ற முறையில்
அவர்கள் செயல் தான் காரணம்
என்கின்றார்

கொலை செய்ய
முயன்றவனை விட
அதிகம் வலியை இவர்கள் தான்
ஏற்படுத்துகின்றனர்

 

வைரவர்

அவர்கள் இருவரும் யாழில் பழம் திண்டு கொட்டை போட்டவர்கள்; நம்மள மாதிரி புதுசுகள் அல்ல.

அவர்கள் சொல்வது எனக்கு புரியுது, உங்களுக்கு புரியவில்லையா?

இந்த வயதானவர்களுக்கு அவ்வளவு நகையை வீட்டில் வைத்திருந்து ஆபத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார்களே. தவிர்த்து இருக்கலாமே. என்பதே அவர்கள் சொல்ல வந்தது.

நகை மோகம், நகை சீட்டு.... அவரை பார்த்து இவர் வேண்டுவது எல்லாமே அப்படியே ஊரில் போலவே, புலம் பெயர் தேசம் எங்கும் உண்டு.

நகையை வித்து, விலாசத்தினைக் கிரிமினல் பார்ட்டியிடம் கொடுத்து, மறு நாளே வேறு கிளையில் அதனை மீள யாபாரம் செய்யும் அளவுக்கு நகை மோகத்தில் நம்பிக்கை, நகை வியாபாரிகளுக்கு உள்ளது.

அந்த காலத்தில், வங்கி வசதி இல்லாத காலத்தில், நகை சேமிப்பு. இப்போது தேவையில்லையே.
 

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

வைரவர்

அவர்கள் இருவரும் யாழில் பழம் திண்டு கொட்டை போட்டவர்கள்; நம்மள மாதிரி புதுசுகள் அல்ல.

அவர்கள் சொல்வது எனக்கு புரியுது, உங்களுக்கு புரியவில்லையா?

இந்த வயதானவர்களுக்கு அவ்வளவு நகையை வீட்டில் வைத்திருந்து ஆபத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார்களே. தவிர்த்து இருக்கலாமே. என்பதே அவர்கள் சொல்ல வந்தது.

நகை மோகம், நகை சீட்டு.... அவரை பார்த்து இவர் வேண்டுவது எல்லாமே அப்படியே ஊரில் போலவே, புலம் பெயர் தேசம் எங்கும் உண்டு.

நகையை வித்து, விலாசத்தினைக் கிரிமினல் பார்ட்டியிடம் கொடுத்து, மறு நாளே வேறு கிளையில் அதனை மீள யாபாரம் செய்யும் அளவுக்கு நகை மோகத்தில் நம்பிக்கை, நகை வியாபாரிகளுக்கு உள்ளது.

அந்த காலத்தில், வங்கி வசதி இல்லாத காலத்தில், நகை சேமிப்பு. இப்போது தேவையில்லையே.
 

நாதமுனி,

நகை போடுவது பகட்டுக்காக
மட்டும் அல்ல
அது ஒரு பண்பாடும் ஆகும்

உலகில் நகை அணியாத பெண்களை
கொண்ட சமூகம் இருக்கின்றதா?

நாடு விட்டு நாடு திரியும் ஜிப்ஸி இன
மக்களில் இருந்து
கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்
முன்னேறி இருக்கும் நாடுகள் வரை
நகை அணியும் வழக்கம் தொடர்கின்றது
தானே

செய்தியில் சொல்லப்பட்டு இருக்கும்
வயதான பெண்மணி வீட்டில்
இருக்கும் போதுதான் நகை அணிந்து
இருந்து இருக்கின்றார்.
இது எம் சமூகத்தில்
வழமையான ஒன்று தானே

அத்துடன் அவர் அதிகமாக நகை போட்டு
இருந்தவர் என்று ஒரு இடத்திலும்
செய்தியில் சொல்லப்படவும்
இல்லையே

நகை அணிந்து இருந்தமையால் தான்
குற்றம் நடந்தது என்று சொல்வது
குற்றத்துக்கு சப்பை கட்டு கட்டுவதாகாதா
ராசா?

பகல் நேரம் வீட்டில் இருக்கும்
பெண்கள் நகை எதுவும்
அணியக் கூடாது
அது அவர்களை ஆபத்தில் மாட்டிவிடும்
என்பது அபத்தமாக இல்லையா

எழுதியவர்கள் பழம் தின்று
கொட்டை போட்டவர்கள் என்பதற்காக
எழுதியதை பொறுக்க
வேண்டியதில்லையே ராசா

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வைரவன் said:

நாதமுனி,

நகை போடுவது பகட்டுக்காக
மட்டும் அல்ல
அது ஒரு பண்பாடும் ஆகும்

உலகில் நகை அணியாத பெண்களை
கொண்ட சமூகம் இருக்கின்றதா?

நாடு விட்டு நாடு திரியும் ஜிப்ஸி இன
மக்களில் இருந்து
கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்
முன்னேறி இருக்கும் நாடுகள் வரை
நகை அணியும் வழக்கம் தொடர்கின்றது
தானே

செய்தியில் சொல்லப்பட்டு இருக்கும்
வயதான பெண்மணி வீட்டில்
இருக்கும் போதுதான் நகை அணிந்து
இருந்து இருக்கின்றார்.
இது எம் சமூகத்தில்
வழமையான ஒன்று தானே

அத்துடன் அவர் அதிகமாக நகை போட்டு
இருந்தவர் என்று ஒரு இடத்திலும்
செய்தியில் சொல்லப்படவும்
இல்லையே

நகை அணிந்து இருந்தமையால் தான்
குற்றம் நடந்தது என்று சொல்வது
குற்றத்துக்கு சப்பை கட்டு கட்டுவதாகாதா
ராசா?

பகல் நேரம் வீட்டில் இருக்கும்
பெண்கள் நகை எதுவும்
அணியக் கூடாது
அது அவர்களை ஆபத்தில் மாட்டிவிடும்
என்பது அபத்தமாக இல்லையா

எழுதியவர்கள் பழம் தின்று
கொட்டை போட்டவர்கள் என்பதற்காக
எழுதியதை பொறுக்க
வேண்டியதில்லையே ராசா

 

 

 

ஐயா,

பக்கத்து வீட்டுக்காரர்.... நன்றாகப் பழகி, பூராயம் அறிந்து கொலை திட்டமிட்டு உள்ளே வந்திருக்கிறார்.

அந்த பெண்மணி போட்டிருந்த, போடாமல் உள்ளாரா வைத்திருந்த நகைக்காக கொலை முயற்ச்சி நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா?

அவரிடம் நகை இல்லை என்றால் அவர் ஏன் வருகிறார் ?

மேலாக, நகை அணிவது தொடர்கிறதா? எங்கே? இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தான்.

மேலை நாடுகளில், அவனவன், பாண்ட், ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட் என்று பணத்தினை இன்வெஸ்ட் பண்ணுகிறார்கள்.

தங்கத்தில், பகட்டாக ஐரோப்பியர் அணிவதில்லை.

கோவில், கோவிலுக்கு போகையில் தங்கம், கொண்டாட்டத்துக்கு சாத்துதல், என்று நம்வர்கள் தான் அலம்பரை.

மேலும் இங்கே அடுத்தவர்கள் கருத்துக்களை நாசூக்காக மறுத்து எழுதுங்கள். அடுத்தவர்கள் மடையர்கள், நாம் தான் அதிகம் தெரிந்தவர்கள் என்று சொல்வது சபைக்கு அழகல்ல.

நன்றி.

29 minutes ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

உங்களிடம் நகை இருக்கு எண்டு தெரிந்தால், நாங்கள் எப்படியும் உங்கள் முகவரியை பிடித்து விடுவமே அக்கோய். :cool:

மேலும் உங்களிடம் புன்னகை இருக்கும் போது, பொன்நகை எதுக்கு அக்கா. :11_blush:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி  திருப்பி
நீங்கள் கொலை முயற்சியை
இதனால் இன்ன காரணத்தினால்
தான் நிகழ்ந்து இருக்கு என்று
அந்த காரணத்தினை கொண்டு
நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள்

நகை அணிவது எங்கள்
பெண்களின் வழக்கம்
பக்கத்து வீட்டுக்காரனோ
வேறு எவனோ அதை அறிந்து கொண்டு
வந்து கொள்ளையிட்டால் அது அவன்
செய்த குற்றமே அன்றி
அதற்கு அப் பெண் காரணமாக
மாட்டார்

நாளைக்கும் இது போன்று
நிகழும்
இப்படி நிகழ்வதை தடுத்து
குற்றவாளிகளுக்கு தண்டனை
கொடுத்தால் மட்டுமே
இது போன்ற குற்றங்கள்
நிகழாமல் போகும்
அதுக்கு பதிலாக
பெண்களை நகை நட்டு
போட்டுக் கொண்டு
வீட்டில் இருக்காதையுங்கோ
என்று வீம்பாக சொல்வதால்
அல்ல

21 minutes ago, Nathamuni said:

மேலும் இங்கே அடுத்தவர்கள் கருத்துக்களை நாசூக்காக மறுத்து எழுதுங்கள். அடுத்தவர்கள் மடையர்கள், நாம் தான் அதிகம் தெரிந்தவர்கள் என்று சொல்வது சபைக்கு அழகல்ல.

நன்றி.

 

இங்கு
நான் எழுதியதில் எந்த இடத்திலாவது
மற்றவரை மடையர் என்று எங்கு
எழுதியிருக்கின்றேன் என்று
காட்டவும்.
அல்லது எனக்கு எல்லாம் தெரியும்
என்று எழுதி இருப்பதையாவது
காட்டவும்

யாழ் இணையத்தளத்தில்
மற்றவர்களை பார்த்து
 'குரைப்பவர்கள்'
'சொம்பு தூக்கிகள்'
'எடுபிடிகள்'
'அல்லக்கைகள்'
'கேடு கெட்டதுகள்'
என்றெல்லாம் எழுதியிருக்கின்றார்கள்
அதையெல்லாம் கண்டு காணாமல் இருந்து
போட்டு இப்ப எனக்கு மட்டும்
அறிவுரை சொல்கின்றீர்கள்

நல்லா இருக்கு
ராசா

நானும் சொல்வேன்
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வைரவன் said:

திருப்பி  திருப்பி
நீங்கள் கொலை முயற்சியை
இதனால் இன்ன காரணத்தினால்
தான் நிகழ்ந்து இருக்கு என்று
அந்த காரணத்தினை கொண்டு
நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள்

நகை அணிவது எங்கள்
பெண்களின் வழக்கம்
பக்கத்து வீட்டுக்காரனோ
வேறு எவனோ அதை அறிந்து கொண்டு
வந்து கொள்ளையிட்டால் அது அவன்
செய்த குற்றமே அன்றி
அதற்கு அப் பெண் காரணமாக
மாட்டார்

நாளைக்கும் இது போன்று
நிகழும்
இப்படி நிகழ்வதை தடுத்து
குற்றவாளிகளுக்கு தண்டனை
கொடுத்தால் மட்டுமே
இது போன்ற குற்றங்கள்
நிகழாமல் போகும்
அதுக்கு பதிலாக
பெண்களை நகை நட்டு
போட்டுக் கொண்டு
வீட்டில் இருக்காதையுங்கோ
என்று வீம்பாக சொல்வதால்
அல்ல

இங்கு
நான் எழுதியதில் எந்த இடத்திலாவது
மற்றவரை மடையர் என்று எங்கு
எழுதியிருக்கின்றேன் என்று
காட்டவும்.
அல்லது எனக்கு எல்லாம் தெரியும்
என்று எழுதி இருப்பதையாவது
காட்டவும்

யாழ் இணையத்தளத்தில்
மற்றவர்களை பார்த்து
 'குரைப்பவர்கள்'
'சொம்பு தூக்கிகள்'
'எடுபிடிகள்'
'அல்லக்கைகள்'
'கேடு கெட்டதுகள்'
என்றெல்லாம் எழுதியிருக்கின்றார்கள்
அதையெல்லாம் கண்டு காணாமல் இருந்து
போட்டு இப்ப எனக்கு மட்டும்
அறிவுரை சொல்கின்றீர்கள்

நல்லா இருக்கு
ராசா

நானும் சொல்வேன்
நன்றி

ஐயா,

நீங்கள் சொன்ன அவ்வளவும், அடுத்த கள உறுப்பினர் மீதானது அல்ல, மாறாக, வெளியில் உள்ள ஒருவரைப் குறித்து சொல்லப்பட்டவையாக இருக்கும் என்பேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் அடுத்தவர் கருத்துக்கு தகுந்த மரியாதை கொடுத்தால் மாத்திரமே, உங்களுடன் ஆக்கபூர்வமாக அடுத்தவர்கள் ஆர்வமுடன் உரையாடுவார்கள்.

நீங்கள் சிறந்த கருத்துக்களை வைக்கிறீர்கள், ஆனால், அதனை மென்மையாக வைக்காவிடில், அடுத்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். என்னடா, நாம மினக்கட்டு எழுதினோம், யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லையே என்று எழுதாமல் விட்டவர்கள் பலர்.

உங்கள் எழுத்தில் ஆழம் உண்டு, சில விடயங்களை கவனித்தால், யாழில், புகழ் மிக்கவராகி விடுவீர்கள். கருத்துகளில் ஆழம்  இல்லாவிடில் நானும் இப்படி உங்களுக்கு ஆலோசனை சொல்லி மினக்கட மாட்டேன் என்பதை கவனிப்பீர்கள் என்று நினைக்கிறன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஆக்கிரமிப்பு.. பாசிச சன நாயகத்தில் சகஜமப்பா. இதைத்தானே சிலர் விரும்பினார்கள்.. ஆண்டாடு கால காட்டிக்கொடுப்பின் மூலமாக. அதை மீண்டும் அடைந்து விட்டார்கள். தமிழருக்கு பெரும் விடிவை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். என்னே ஒரு சன நாயகம்.. தமிழருக்கு வாய்ச்சிருக்குது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

இந்த தினா வெட்டு வேணாம் இங்கு சுமோ வீட்டுக்கு பக்கத்தில் நடந்தது ஒரு தமிழ் பிள்ளையிடம் நகையை பறிக்க அவவும் இந்த பிடி எல்லாம் கவரிங் நகை என்று குடுக்க போனவன் திரும்ப வந்து அடிச்சதில் மண்டையில் ஏழு தையல் .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பதில் எழுத விருப்பமாக இருக்கு ....
ஆனா ஒன்றும் புரியுதில்லை. 

12 minutes ago, Maruthankerny said:

எனக்கு பதில் எழுத விருப்பமாக இருக்கு ....
ஆனா ஒன்றும் புரியுதில்லை. 

புரிஞ்சதை புரியாத மாதிரியும், புரியாததை புரிந்த மாதிரியும் எழுதித்தள்ள வேண்டியது தானே!

செய்துபாருங்கோ பச்சை பச்சையா விழும்! :10_wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

பணம் மற்றும் நகைகள்  சார்ந்து 

மதிப்பு என்பது முன்போல் இன்றில்லை

காலம் மாறி  வருகிறது

தற்பொழுது நகைகளை  அடுக்கி  செல்பவர்கள் மீது நாம் பரிதாப்படுகின்றோம்

அல்லது பட்டிக்காடு போல் பார்க்கத்தலைப்படுகின்றோம்

இது ஒரு நல்ல முன்னேற்றமான பார்வை

இப்பொழுதெல்லாம  இவ்வாறான செயற்கை நாகரீகங்களை மதிப்பு மரியாதைகளை

புதிய தலைமுறை  விரும்புவதில்லை

மாறாக இவ்வாறு அதிகம் ஆடம்பரமாக  அணிபவர்கள்

ஏதோ தவறான வழிகளில் அவற்றை  அடைகிறார்கள்

அல்லது இவ்வாறு வலை வீசுகிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இறைவன்  எமக்கு தேவையானதை தாராளமாகத்தந்துள்ளான்

அவையே  எமது  இயற்கை  அழகு

அது போதும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நகைகள் மீது ஆசையில்லை 

ஆனால் சில பெண்கள் நகைகள் அணிந்தால் தான் அழகு என நினைக்கிறார்கள்  கொளரவம் எனவும் நினைக்கிறார்கள் பெண்கள் குணம் அப்படி அவள் அணிந்து வந்தாள் கல்யாணத்த்கென்றால் அதை விட பெறுமதியானது அணிய வேண்டும் என்ற நினைப்பு   இந்த நினைப்பு சிலரை கவிழ்த்தும் விடுகிறது  கொல்லையிலும் கொள்ளையிலும் வந்து முடிகிறது 

அவர்கள் குணமடைய  இறைவனை மட்டுமே வேண்டலாம் 

15 hours ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

அட ஒரு தோட்டு குஞ்சு  கூட இல்லாமலா அதுவும் லண்டன்ல இருக்கியள்  எண்ட லண்டன் முருகா என்ன சோதனையடா உது :10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, தனி ஒருவன் said:

எனக்கும் நகைகள் மீது ஆசையில்லை 

ஆனால் சில பெண்கள் நகைகள் அணிந்தால் தான் அழகு என நினைக்கிறார்கள்  கொளரவம் எனவும் நினைக்கிறார்கள் பெண்கள் குணம் அப்படி அவள் அணிந்து வந்தாள் கல்யாணத்த்கென்றால் அதை விட பெறுமதியானது அணிய வேண்டும் என்ற நினைப்பு   இந்த நினைப்பு சிலரை கவிழ்த்தும் விடுகிறது  கொல்லையிலும் கொள்ளையிலும் வந்து முடிகிறது 

அவர்கள் குணமடைய  இறைவனை மட்டுமே வேண்டலாம் 

அட ஒரு தோட்டு குஞ்சு  கூட இல்லாமலா அதுவும் லண்டன்ல இருக்கியள்  எண்ட லண்டன் முருகா என்ன சோதனையடா உது :10_wink:

ஒரு சோடி காப்பும் தோடும் வாங்கி குடுக்கிறது....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

எனக்கு பதில் எழுத விருப்பமாக இருக்கு ....
ஆனா ஒன்றும் புரியுதில்லை. 

எனக்கு பச்சை போட ஆசையாக இருக்கு ஆனால் பயமாயிருக்கு:unsure:

1 hour ago, விசுகு said:

பணம் மற்றும் நகைகள்  சார்ந்து 

மதிப்பு என்பது முன்போல் இன்றில்லை

காலம் மாறி  வருகிறது

தற்பொழுது நகைகளை  அடுக்கி  செல்பவர்கள் மீது நாம் பரிதாப்படுகின்றோம்

அல்லது பட்டிக்காடு போல் பார்க்கத்தலைப்படுகின்றோம்

இது ஒரு நல்ல முன்னேற்றமான பார்வை

இப்பொழுதெல்லாம  இவ்வாறான செயற்கை நாகரீகங்களை மதிப்பு மரியாதைகளை

புதிய தலைமுறை  விரும்புவதில்லை

மாறாக இவ்வாறு அதிகம் ஆடம்பரமாக  அணிபவர்கள்

ஏதோ தவறான வழிகளில் அவற்றை  அடைகிறார்கள்

அல்லது இவ்வாறு வலை வீசுகிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இறைவன்  எமக்கு தேவையானதை தாராளமாகத்தந்துள்ளான்

அவையே  எமது  இயற்கை  அழகு

அது போதும்.

 

கலியாணம் காட்சி என்றால் நகைகளை அடுக்கி கொண்டு தான் எம்மவர்கள் செல்கின்றனர்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, putthan said:

 1- எனக்கு பச்சை போட ஆசையாக இருக்கு ஆனால் பயமாயிருக்கு:unsure:

2 - கலியாணம் காட்சி என்றால் நகைகளை அடுக்கி கொண்டு தான் எம்மவர்கள் செல்கின்றனர்....

2- அதுவும்  முன்பு போல் தற்பொழுது இல்லை

அப்படி  போட்டாலும்அது பவுணாக  இருக்கணும் என்றில்லை

 

1-  இது  புத்தரின்  எழுத்தா  நம்பமுடியவில்லை

அல்லது புத்தருக்கும் வயசாயிடுச்சா??:grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

பலாப்பழம் கரடுமுரடாக இருந்தாலும் ஈதான் அதனை தேடி வரும். tw_blush: பலாப்பழம் ஈயை தேடி போவதில்லை. :unsure: சுவையான, வாசமான பழம் இது என்பதை ஈ அறிந்து கொள்வதே முக்கியம். :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.