Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்தவர்கள் மட்டும் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20170624_075417.jpg

விடுமுறை நாட்களில் காலை       வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய  மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த  மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில்  வாங்கி சமைத்தாலும்  நமது முறையில்  

இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை  தெரிந்தவர்கள் மட்டும் :113_tongue:tw_blush:

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்

உது, தலபொத்து மீன் (Sail Fish) தானே தனிமுனி?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

சமையல் கலை  தெரிந்தவர்கள் மட்டும் :113_tongue:tw_blush:

எனக்கு தெரியாதுப்பா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனி ஒருவன் said:

இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம்

கண்ட துண்டமாய் வெட்டிப்போட்டு.....

வெங்காயத்தை கீறலாய் வெட்டி.......

சட்டியிலை எண்ணை விட்டு....

வெங்காயத்தை வதக்கிப்போட்டு.....

கண்ட துண்டமாய் வெட்டினதை...

வதக்கின வெங்காய சட்டீக்கை போட்டு....

அப்பிடி இப்பிடி இரண்டு பிரட்டு பிரட்டிப்போட்டு....

கையோடை உப்பையும் தூளையும் போட்டு....

இரண்டு சிரட்டை தண்ணியையும் கலந்து...

கொதிக்க விட்டு....

இறக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு மாசத்திற்கு மரக்கறி...மீண்டும் மச்சம் சாப்பிடத் தொடங்கின பின்பு வந்து சொல்கிறேன்.:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

நான் இரண்டு மாசத்திற்கு மரக்கறி...மீண்டும் மச்சம் சாப்பிடத் தொடங்கின பின்பு வந்து சொல்கிறேன்.:cool:

ஏன் இப்ப மரக்கறி? விரத விசேசங்களும் இல்லையே? ஓ...ஊர்க்கோயிலுக்கு விரதமோ? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஏன் இப்ப மரக்கறி? விரத விசேசங்களும் இல்லையே? ஓ...ஊர்க்கோயிலுக்கு விரதமோ? :mellow:

ஊர்க் கோயில் இல்லை லண்டன் கோயில்:mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஊர்க் கோயில் இல்லை லண்டன் கோயில்:mellow:

அப்ப வருசம் 365 நாளும் விரதம் தான்... <_<

  • கருத்துக்கள உறவுகள்

 புட்டு பிரியர் என்றால் ........

மீனை துண்டுகளாக்கி  உப்பு   மஞ்சள் சேர்த்து நீர் விட்டு  அவித்து aவைக்கவும் பின் ஆறவிட்டு  மீன்  துண்டுகள் முள் நீக்கி உதிர்த்து கொள்ளவும் ...வெங்காயத்தை சிறு  சிறு துண்டுகளாக வெட்டி கடுகு சிறிது சீரகம்   உப்பு தேவையான மஞ்சள் சிறிதுமிளகாய் தூள் ,நறுக்கிய கறிவேப்பிலை ..  கடடை தூள் ( நொறுக்கிய செத்தல்)  உதிர்த்தமீனை சேர்த்து வறை செய்யவும் .

பின் குழைத்த பிட்டு மாவிற்குள் சேர்த்து ..  புடடாக   குழலில்  அவிக்கவும்  ... பொரித்த மீனுடன்  இரண்டுக்கடி கடித்து உண்ண மிக நன்றாக இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

20170624_075417.jpg

விடுமுறை நாட்களில் காலை       வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய  மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த  மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில்  வாங்கி சமைத்தாலும்  நமது முறையில்  

இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை  தெரிந்தவர்கள் மட்டும் :113_tongue:tw_blush:

செத்த  மீன் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/26/2017 at 5:19 PM, Nathamuni said:

உது, தலபொத்து மீன் (Sail Fish) தானே தனிமுனி?

அட ஆமாப்பா  இங்கேயும் அதே பெயர் தான் தளப்பத்து :10_wink:

On 6/26/2017 at 6:45 PM, MEERA said:

எனக்கு தெரியாதுப்பா ?

விலகுங்க அடுத்தாள் வரட்டும்  அந்தக்கால யாழ் இணைய  ச்மையல் கட்டு மணமே தனி மணம் ஆனால் இப்ப  யாரும் வதக்கி கூட  ஆக்கிறதில்லை  சும்மா அவிச்சி எடுக்காங்கள்  வாசனை இல்லாமல் tw_blush:

On 6/26/2017 at 7:29 PM, குமாரசாமி said:

கண்ட துண்டமாய் வெட்டிப்போட்டு.....

வெங்காயத்தை கீறலாய் வெட்டி.......

சட்டியிலை எண்ணை விட்டு....

வெங்காயத்தை வதக்கிப்போட்டு.....

கண்ட துண்டமாய் வெட்டினதை...

வதக்கின வெங்காய சட்டீக்கை போட்டு....

அப்பிடி இப்பிடி இரண்டு பிரட்டு பிரட்டிப்போட்டு....

கையோடை உப்பையும் தூளையும் போட்டு....

இரண்டு சிரட்டை தண்ணியையும் கலந்து...

கொதிக்க விட்டு....

இறக்கவும்.

ஏதோ ஆள வெட்டுமாதிரியே இந்தாள் சொல்லுது  யோவ் நான் சொன்னது புது வகையான சமையலை  குழம்(ப)பான  கறிக்கு ஐடியா சொல்லுது :10_wink::10_wink:

On 6/26/2017 at 8:00 PM, ரதி said:

நான் இரண்டு மாசத்திற்கு மரக்கறி...மீண்டும் மச்சம் சாப்பிடத் தொடங்கின பின்பு வந்து சொல்கிறேன்.:cool:

என்னம்மா ஏதேனும் விரதமா என்ன ?? 

15 hours ago, நிலாமதி said:

 புட்டு பிரியர் என்றால் ........

மீனை துண்டுகளாக்கி  உப்பு   மஞ்சள் சேர்த்து நீர் விட்டு  அவித்து aவைக்கவும் பின் ஆறவிட்டு  மீன்  துண்டுகள் முள் நீக்கி உதிர்த்து கொள்ளவும் ...வெங்காயத்தை சிறு  சிறு துண்டுகளாக வெட்டி கடுகு சிறிது சீரகம்   உப்பு தேவையான மஞ்சள் சிறிதுமிளகாய் தூள் ,நறுக்கிய கறிவேப்பிலை ..  கடடை தூள் ( நொறுக்கிய செத்தல்)  உதிர்த்தமீனை சேர்த்து வறை செய்யவும் .

பின் குழைத்த பிட்டு மாவிற்குள் சேர்த்து ..  புடடாக   குழலில்  அவிக்கவும்  ... பொரித்த மீனுடன்  இரண்டுக்கடி கடித்து உண்ண மிக நன்றாக இருக்கும்.  

நன்றி அக்கா உங்கள் தகவலுக்கு  அடுத்த  தடவை கிடைத்தால் ம் பார்க்கலாம் ஒரு கை 

15 hours ago, நந்தன் said:

செத்த  மீன் தானே

என்ன கண்டு பிடிப்புடா சாமி நல்ல காலம் கருவாடு என்று சொல்லல  tw_confused:tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ மீன் என்ன விலை ? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுசிறுதுண்டுகளாக வெட்டி உப்பு மஞ்சள் போட்டுக் கழுவிவைக்கவும். சட்டியைச் சூடாக்கி கடுகைவெடிக்கும்வரைவிட்டபின்சிறுதுண்டுகளாக வெட்டிய வெஙகாயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை  பெருஞ்சீரகம் வெந்தயம் (சிறிதளவு) சேர்த்து வதக்கவும். அதற்குள் மீனைப்போட்டு சிறிதுநேரம் மெதுவாகக் கிளறி  உப்பு புளி தூள் சேர்த்து தண்ணீரைவிட்டுக் கொதிக்கவிடவும். பால் தேவைப்படின் தேங்காய்ப்பாலின் கெட்டிப்பாலை நன்றாகக் கொதித்தபின்னர் விடவும். நற்சீரகம் உள்ளி மிளகு என்பவற்றைக் குத்திப்போட்டுச் சிறிது நேரத்தில் இறக்கவும். விரும்பினால்.தக்காளிப்பழமும் சேர்க்கலாம்( இது எனது துணைவியாரின் செயல்முறை) 

இதனை அறக்குளா மீன் என்று அழைப்பார்கள். பொரிக்கவும்  நல்லது. மெல்லிய துண்டுகளாக வெட்டிப்பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கோடிக்கை முன்று கல்லை வைக்கவும்.அதில் சிரட்டை கரி வைக்கவும். அடுப்பிற்க்கு மேல் கம்பி வலை வைக்கவும்.மீனை செதில் எல்லாம் அகற்றி துப்பரவாக்கி உப்பு மிழகாய்துள் பிரட்டி கம்பி வலைக்கு மேல் வைத்து அடுப்பை கொழுத்தி குந்தி இருந்து ஊதவும்.மீனை ஆறு தடவை இரண்டு பக்கமும் பிரட்டவும்.பின் பக்கத்தில் உள்ள பேக்கரியல் போய் ரோஸ் பான் தேவைக்கு ஏற்ப்ப வாங்கி வரவும்.பேந்தன்ன மிச்சத்தையும் நான் சொல்ல வேனுமமா

2 hours ago, nochchi said:

இதை பார்த்தால் தலபத்து மீன போன்று இருக்கு நுணா. அறுக்குளா மீன் தானே King fish?

தலபத்து மீன் எனில் இதனை வழக்கமா மீன் குழம்பு வைக்கும் முறையில் சமைப்பது இல்லை. இதை பொதுவாக சிங்கள் முறையில் கொரக்கா புளி போட்டு சமைப்பர். அல்லது பொரிக்கவும் நல்லா இருக்கும்.

இறைச்சியை சாப்பிடுவது போல இது கொஞ்சம் மென்மை அற்று இருக்கும். இங்கு டொரண்டோவில் இறாத்தல் ஒன்று 6.99 விற்பார்கள். நான் அடிக்கடி வாங்குவது உண்டு. ஒமேகா 3 உள்ள மீன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நிழலி, நான் நினைக்கிறேன்....நன்றாக வளர்ந்த சீலா மீனைத் தான் .....அறக்குளா  என்று எமது ஊரில் அழைப்பார்கள்! நான் சீலா மீன் என்று சொல்வது முரல் மீனை அல்ல! சிறிய வகை சீலா மீனை...ஊரில் 'ஊழி' மீன் என்று கூறுவார்கள்! இதன் பெரிய வகையே அறக்குளா என நினைக்கிறேன்!

 நான் நினைக்கிற அறக்குளா மீன் இது தான்!

Frozen-Barracuda.jpg

  • கருத்துக்கள உறவுகள்

English                              Tamil                                  Malayalam

English Tamil Malayalam
Anchovies Nithili Netholi
Barracuda Cheela/Seela/ Vanjiram Sheelavu 
Black King Fish Kadal Veraal,Nei Meen Neimeen
Black Pomfret Karu Vaaval Karutha Avoli
Bluefin trevally Neela thuduppu choorai Vatta
Cat Fish Kelluthi, Keliru Kaari
Cod Panna,Kalava Mullan, Sarghan, Chemmun, Pana Mahi Mahi
Conger Eel Vilangu Pambu Meen, Malanjil, Malungulu
Crab Nandu Nandu
Cuttle Kanavai Kanava
False trevally/White Fish Neer Suthumbu, Guthippu Parava, Kuthuppu, Kadu
Herring (Five Spot) Koimeen or Nunalai Kannan Mathi
Gar Fish or Pipefish Mural Kolaan
Giant Sea Perch Koduvai Chemali Narimeen, Nudde Men, Koduva
Great Barracuda Ooli, Cheela Neduva, Cheela, Thiruthakkadian
Indian Anchovy Poruva, Poorava Kozhuva
Indian Goat Fish/Yellow striped goat fish Kendal,Sen Navarai,Sennagarai Manakkam
Indian Threadfin  Kaala, Rani Meen Kaala
Jinga Prawn Kal Eral  Konju, Chameen
King Fish / Wahoo / King Mackarel Cheela/Seela/ Vanjiram Aiykoora
Lady Fish Kilangan, Kelangan Poozhan, Poovan
Lobster Singi Eral Konjan
Long Face emperor bream VelaiMeen Velameen 
Mackerel Ayilai/Asalai, kaanangeuthi Aiyla
Milk Fish Paal Kendai PooMeen
Mullet Chiryakandai, Madavai, Velisa, Manalai Mullet, Kanambu
Murrel Chaer-veraal Korava, Vattudi
Oyster,Clam Kallikkai,Chippi Kakka, Miriuga, Muni
Parrot Fish Kizhi Meen, Pachai Elimeen Pacha Pheesam, Kizhi Meen, Keli Meen
Paste Shrimp Channa Kooni  
Pearl Spot/ Green Chromide Palinja, Seththai Kendai Kari Meen
Pomfret Vaaval Avoli
Pony fish,Tooth pony Kaaral podi/kaarai Thali Mulen, Karal
Red Mullet Madavai Kanambu, Mallan
Red Snapper Seppili Pahari, Chemballi
Reba Coala Kendai Rohu
Round Sardine Keerimeen Kallakeedam
Salmon Kala meen Kora / Kaala
Sardines Chaalai or Mathi Chaalai Mathi/Chaala
Sea Bream Velai Meen Kurali, Vilmeen
Seer Fish / Queen Fish Cheela/Seela/ Vanjiram Ney Meen
Shark Sura Sraavu, Choraku
Shrimp Iraal Konju
Silver Pomfret Vella Vaaval Akoli, Avoli
Silver Carp Velli Kendai, Kannadi Kendai Rohu, Rohitham
Silver Moony Parrandan Moolen, Purrandee Aakoli
Saw Fish (Skates, Small toothed saw fish) Uluvai, Vezha,Vela Vakusravu
Small Headed Ribbon Fish Saavalai Vala, Thalayan
Snake Head Viral Meen Korava, Varaal
Sole Fish Naaku Meen, Virahi Nangu
Squid Kanavai, Oosi Kanavai Kanava
Starry Emperor bream Velai Meen, Kulli Kozhi Meen Valiya Vilmeen
Surgeon Fish Kozhimeen Paalla, Kurichil
Sword Fish Thalapaththu or Myil Meen  Vaala meen
Threadfin bream Sankara Meen Killi Meen
Tilapia Jilapi,Thilapi Thilopia/Kerala Karimeen
Tuna Choorai Choora
Ray Fish, Whip Tail Sting Ray Thirukkai,Therachi Kottiva, Therandi
White Fin Wolf Herring Karu Vaalai Mulluvala, Vala

கிங் பிஷ் தான் அரக்குலா என்பது 
ஷீலா மீன் வேறு ....
தமிழில் இருப்பது தமிழ்நாட்டு தமிழ் 

கூடுதலான மலையாள பெயர்களையே யாழ்ப்பாணத்தில் 
பாவிக்கிறோம்.

இதுதான் அரக்குலா அல்லது கிங் பிஷ் 

Image result for arakula fish

பிரான்ஸ் க்ரே கூஸ்  வோட்கா ஒன்றை உடைச்சு வைச்சுட்டு 
இப்பிடி பொரித்து வைத்து பார்த்தால் 
அதன் அழகோ ... அழகு 

Related image

இது இலங்கை வாழ மீன் .........
சுத்தி நிறைய முள் இருக்கும் 
கஸ்ரப்பட்டு முள்ளை நீக்கினால் 
ருசியோ ருசிதான் !

Image result for hirunika premachandra photo

On ‎6‎/‎27‎/‎2017 at 7:28 PM, புங்கையூரன் said:

நிழலி, நான் நினைக்கிறேன்....நன்றாக வளர்ந்த சீலா மீனைத் தான் .....அறக்குளா  என்று எமது ஊரில் அழைப்பார்கள்! நான் சீலா மீன் என்று சொல்வது முரல் மீனை அல்ல! சிறிய வகை சீலா மீனை...ஊரில் 'ஊழி' மீன் என்று கூறுவார்கள்! இதன் பெரிய வகையே அறக்குளா என நினைக்கிறேன்!

 நான் நினைக்கிற அறக்குளா மீன் இது தான்!

Frozen-Barracuda.jpg

 புங்கை,

கொழும்பு / தெஹிவளை போன்ற பகுதிகளில் அறுக்குளா மீனை seer fish என்று சொல்லி விற்பர். நான் உருவத்தில் எலிப்புழுக்கை சைஸ்  என்பதால் உடம்பு வைக்கும் என்று சொல்லி சொல்லி அப்பா அடிக்கடி வாங்கி கொண்டு வருவார்.   இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் இதனை king fish என்று தான் பெயரிட்டு விற்கின்றனர். நல்லா மீன் சாப்பிட்டு பழகின என் நாக்கும் அதை அறுக்குளா என்று தான் சொல்லுது.

சீலா மீன் அளவில் பெரிதாக வளர்ந்தாலும் அது அறுக்குளா என்று சொல்லி விற்க முடியாது. மீன் வாங்கி
பரிச்சயமானவர்கள் இலகுவில் கண்டு பிடித்த விடுவார்கள். சுவையில் இரண்டுமே திறம். "சீலை யை வித்தாவது சீலா வாங்கு" என்று சொல்லுவார்கள் ஊரில்.

இதில் மீன்களுக்கு தமிழ் பெயர்களை இதனது இருக்கின்றார்கள். மருதுவும் இதை பாருங்கள்

Tamil names

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/27/2017 at 10:44 PM, Maruthankerny said:

ஒரு கிலோ மீன் என்ன விலை ? 

மீன் தட்டுப்பாடு நிலவினால் 1500 ரூபாவுக்கு மேல் போகும் கிலோ   இப்ப குறைவுதான் கொஞ்சம் மீன்  கிடைக்கிறது பக்கத்து முஸ்லீம் ஊரில் அதிகாலை விடிவதற்குள் பல கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்துவிடும் 

On 6/27/2017 at 11:58 PM, nochchi said:

இதனை அறக்குளா மீன் என்று அழைப்பார்கள். பொரிக்கவும்  நல்லது. மெல்லிய துண்டுகளாக வெட்டிப்பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.

ஆனால் இது அறுக்குளா இல்லை அண்ண அறுக்குளா வேற  வகை

On 6/28/2017 at 1:23 AM, சுவைப்பிரியன் said:

வீட்டுக்கோடிக்கை முன்று கல்லை வைக்கவும்.அதில் சிரட்டை கரி வைக்கவும். அடுப்பிற்க்கு மேல் கம்பி வலை வைக்கவும்.மீனை செதில் எல்லாம் அகற்றி துப்பரவாக்கி உப்பு மிழகாய்துள் பிரட்டி கம்பி வலைக்கு மேல் வைத்து அடுப்பை கொழுத்தி குந்தி இருந்து ஊதவும்.மீனை ஆறு தடவை இரண்டு பக்கமும் பிரட்டவும்.பின் பக்கத்தில் உள்ள பேக்கரியல் போய் ரோஸ் பான் தேவைக்கு ஏற்ப்ப வாங்கி வரவும்.பேந்தன்ன மிச்சத்தையும் நான் சொல்ல வேனுமமா

ஹாஹாஹா அந்த காலத்தில் மீனை சுட்டு தின்றதை இப்ப  பாபிக்கியு என்று சொல்லி திரியுது கொஞ்ச சனம் நம்ம சனம் தான் முழுவதையும் கண்டு பிடிக்கிது ஆனால் முறை மாறும் போது பிரபலமாகிறது 

On 6/28/2017 at 2:09 AM, நிழலி said:

இதை பார்த்தால் தலபத்து மீன போன்று இருக்கு நுணா. அறுக்குளா மீன் தானே King fish?

தலபத்து மீன் எனில் இதனை வழக்கமா மீன் குழம்பு வைக்கும் முறையில் சமைப்பது இல்லை. இதை பொதுவாக சிங்கள் முறையில் கொரக்கா புளி போட்டு சமைப்பர். அல்லது பொரிக்கவும் நல்லா இருக்கும்.

இறைச்சியை சாப்பிடுவது போல இது கொஞ்சம் மென்மை அற்று இருக்கும். இங்கு டொரண்டோவில் இறாத்தல் ஒன்று 6.99 விற்பார்கள். நான் அடிக்கடி வாங்குவது உண்டு. ஒமேகா 3 உள்ள மீன்

ம் நிழலி  இது தளப்பத்து தான் அறுக்குளா வேறு  கொறுக்கா தான் சூப்பர் அதில் ஊற வைத்தால் ருசி அதிகம் 

On 6/28/2017 at 4:58 AM, புங்கையூரன் said:

நிழலி, நான் நினைக்கிறேன்....நன்றாக வளர்ந்த சீலா மீனைத் தான் .....அறக்குளா  என்று எமது ஊரில் அழைப்பார்கள்! நான் சீலா மீன் என்று சொல்வது முரல் மீனை அல்ல! சிறிய வகை சீலா மீனை...ஊரில் 'ஊழி' மீன் என்று கூறுவார்கள்! இதன் பெரிய வகையே அறக்குளா என நினைக்கிறேன்!

 நான் நினைக்கிற அறக்குளா மீன் இது தான்!

என்ன குழப்பம் புங்கை இது வந்து  நீங்கள் இணைத்த படம் வந்து சீலா மீனில் பெருத்ததை ஊளா என்பார்கள்  அறுக்குளா இல்லை 

2 hours ago, நிழலி said:

 புங்கை,

கொழும்பு / தெஹிவளை போன்ற பகுதிகளில் அறுக்குளா மீனை seer fish என்று சொல்லி விற்பர். நான் உருவத்தில் எலிப்புழுக்கை சைஸ்  என்பதால் உடம்பு வைக்கும் என்று சொல்லி சொல்லி அப்பா அடிக்கடி வாங்கி கொண்டு வருவார்.   இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் இதனை king fish என்று தான் பெயரிட்டு விற்கின்றனர். நல்லா மீன் சாப்பிட்டு பழகின என் நாக்கும் அதை அறுக்குளா என்று தான் சொல்லுது.

சீலா மீன் அளவில் பெரிதாக வளர்ந்தாலும் அது அறுக்குளா என்று சொல்லி விற்க முடியாது. மீன் வாங்கி
பரிச்சயமானவர்கள் இலகுவில் கண்டு பிடித்த விடுவார்கள். சுவையில் இரண்டுமே திறம். "சீலை யை வித்தாவது சீலா வாங்கு" என்று சொல்லுவார்கள் ஊரில்.

இதில் மீன்களுக்கு தமிழ் பெயர்களை இதனது இருக்கின்றார்கள். மருதுவும் இதை பாருங்கள்

நிழலி சொல்வது போல இந்த மீனின் பெயர் ஊளா என்கிறார்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டது  ஆனால் நல்ல சுவை  

2 minutes ago, தனி ஒருவன் said:

ம் நிழலி  இது தளப்பத்து தான் அறுக்குளா வேறு  கொறுக்கா தான் சூப்பர் அதில் ஊற வைத்தால் ருசி அதிகம் 

சிங்கள மக்கள் செய்யும் 'அம்புல்  தியால்' முறைப்படி செய்து அன்றே உண்ணாமல் அடுத்த நாள் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சிங்கள பெண்களை போன்று சுவையாக இருக்கும் tw_sweat_smile:

வீடியோ இல்லாமல்

http://www.mysrilankanrecipe.com/ambul-thiyal-tamarind-claypot-fish/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

சிங்கள மக்கள் செய்யும் 'அம்புல்  தியால்' முறைப்படி செய்து அன்றே உண்ணாமல் அடுத்த நாள் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சிங்கள பெண்களை போன்று சுவையாக இருக்கும் tw_sweat_smile:

ஆனால் நிழலி இந்த மீனின் குடல் தான் ருசியென்பேன் ஆஹா என்ன ருசி  அதை விட  வேறொன்றும் இல்லை   அப்படியே தாளித்து  ம்ம்ம் சொல்ல சொல்ல வாய் ஊறுகிறது சிங்களவர்கள்  அதிகம் வேண்டி செல்வது இந்த மீனின் குடலை 

3 minutes ago, நிழலி said:

சிங்கள பெண்களை போன்று சுவையாக இருக்கும்

tw_confused:tw_confused::10_wink::10_wink:

சிங்கன் வைத்திருப்பது அறுக்குளா மீன் 

Tamil_News_large_1741098.jpg

On 27.6.2017 at 10:39 PM, நிழலி said:

இதை பார்த்தால் தலபத்து மீன போன்று இருக்கு நுணா. அறுக்குளா மீன் தானே King fish?

தலபத்து மீன் எனில் இதனை வழக்கமா மீன் குழம்பு வைக்கும் முறையில் சமைப்பது இல்லை. இதை பொதுவாக சிங்கள் முறையில் கொரக்கா புளி போட்டு சமைப்பர். அல்லது பொரிக்கவும் நல்லா இருக்கும்.

இறைச்சியை சாப்பிடுவது போல இது கொஞ்சம் மென்மை அற்று இருக்கும். இங்கு டொரண்டோவில் இறாத்தல் ஒன்று 6.99 விற்பார்கள். நான் அடிக்கடி வாங்குவது உண்டு. ஒமேகா 3 உள்ள மீன்

சிங்கள  மீன் சுவையில் மயங்கின நிழலி nochchiக்கு எழுதிய பதிலில் நுணா என்று  தடுமாறிவிட்டார்.tw_blush:

56 minutes ago, நவீனன் said:

சிங்கள  மீன் சுவையில் மயங்கின நிழலி nochchiக்கு எழுதிய பதிலில் நுணா என்று  தடுமாறிவிட்டார்.tw_blush:

நீங்கள் சொல்லும் இந்த வினாடி வரைக்கும் நான் நுணா என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இருவரின் அவதாரும் ஒரே நிறமாகவும் கொஞ்சம் ஒரே மாதிரியாகவும் இருக்க இந்த நிழலி லைட்டா தடுமாறிப் போயிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

மீன் தட்டுப்பாடு நிலவினால் 1500 ரூபாவுக்கு மேல் போகும் கிலோ   இப்ப குறைவுதான் கொஞ்சம் மீன்  கிடைக்கிறது பக்கத்து முஸ்லீம் ஊரில் அதிகாலை விடிவதற்குள் பல கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்துவிடும் 

1500 ரூபவா ?
கேட்கவே நடுக்கமாக இருக்கு.

ரோட்டு கரையில் பந்தல் போட்டு படுத்து கிடக்கும் 
வேலையில்லா பட்டதாரிகளை ......... கொண்டுபோய் கடலுக்குள் 
தள்ளிவிடலாமே ?

ஒரு 5 கிலோ மீனோடு வந்தாலே 7500 ரூபா ஆகிடுமே ? 

  • கருத்துக்கள உறவுகள்

மீனை துண்டாக வெட்டி, உப்பு, தேசிக்காய் புளி, மிளகாய்த்தூள் போட்டு பிரட்டி.... வெங்காயத் துண்டுகள், குடை மிளகாய் துண்டுகள் உடன் இந்த ஆயில் தேவையில்லா fryer ல் ஒரு 30 நிமிடம் போட்டு எடுங்கள்.

எண்ணெய் குளிப்பு பிடிக்காத என் போன்றோருக்கு வரப்பிரசாதம் இந்த fryer. 

மீனில் உள்ள எண்ணெய் மட்டுமே போதும். சிக்கினும் இவ்வாறே பொரித்து சாப்பிடலாம்.

கத்தரிககாய் கூட, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் பொரித்து குழம்பு வைக்கலாம்.

டயட் காரருக்கு இந்த  fryer முக்கியமானது.

முக்கியம்: சுற்றிவருவதாலும், ஒரு மெதுவாகச் சுழலும் நாக்கினால், திருப்பப்படுவதாலும் சில வகை மீன்கள் உதிரலாம். முள்ளு பாத்து சாப்பிடவேண்டும்.

சமன், மக்ரல், திலாப்பியா, அறக்குளா, தலபத்து, றால், கணவாய் அசரமாட்டினம்.

http://www.tefal.co.uk/actifry?utm_source=google&utm_medium=cpc&utm_campaign=Actifry_Decision&gclid=EAIaIQobChMIoNr2y8zl1AIVzbXtCh14tAyWEAAYASAAEgI48_D_BwE&gclsrc=aw.ds&dclid=CLCi7LTN5dQCFUqB7Qodd20DXg

சரி முனிவர்,

மீனைப் போட்டிருக்கிற இடம்.... கொல்லைப்புறமோ?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.