Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

Featured Replies

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்
 
பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என தாம் முன்னெச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

”சரியான தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் பலவீனமே. எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் எதிர்க்கட்சியின் இடையூறுகள் அதிகரிக்கும். வினைத்திறனான முறையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்,” என பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பெட்ரோலியத்துறை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டது.

காணொளியில் காண்க…

http://newsfirst.lk/tamil/2017/07/நாட்டை-சிறந்த-முறையில்-ந/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

46 minutes ago, alvayan said:

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

இருந்தால் தானே கொடுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

2 hours ago, குமாரசாமி said:

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிட்கு ஒரு பிரச்சனை எண்டால் அரசுடன் கைகோக்கவேண்டும். தமிழர்க்கு ஒரு பிரச்சனை எண்டா அவர்களை அம்போ எண்டு கைவிட்டிட்டு நாட்டை விட்டு ஓட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர்தான் ஒரு சிறந்த எதிர்கட்சி தலைவருக்கு உதாரணம்.:10_wink:

என்னதான் இருந்தாலும் மகித்தாவுக்கு  இருக்கிற செல்வாக்கு சுமத்திரனுக்கோ சம்பந்தனுக்கோ சிங்கள மக்களிடம் ஒரு பொழுதும் கிடைக்கப்போவதில்லை.... என்பதை இந்த உத்தமர்கள் உணர வேண்டும்.... 

  • தொடங்கியவர்

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு
  •  

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன்.

தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்­தன் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு உட­ன­டி­யா­கத் தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென எனக்கு முன்­னர் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன வலி­யு­றுத்­தி­னார். உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லையோ அல்­லது மாகாண சபைத் தேர்­த­லையோ அவர் கோர­வில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லையே மகிந்த அணி­யி­னர் குறி­வைத்­துள்­ள­னர். அதையே அவர் கோரி­னார்.

அரசை முடக்­க­வேண்­டும்; ஆட்­சி­யைக் குழப்­ப­வேண்­டும்; ஆட்­சி­யைக் கவிழ்க்­க­வேண்­டும் என்­பதே மகிந்த அணி­யின் தொடர்ச்­சி­யான நோக்­க­மாக – அழுத்­த­மாக இருக்­கின்­றது. இது மக்­கள் ஆணைக்­குப் புறம்­பான செய­லா­கும்.

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் போட்­டி­யிட்­டார். அதில் அவர் தோல்வி அடைந்­தார். தலைமை அமைச்­சர் பத­விக்­கா­க­வும் அவர் கள­மி­றங்­கி­னார். அதற்கு மக்­கள் ஆணை வழங்­க­வில்லை. மாற்­றுத் தரப்­புக்கே மக்­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய ஆணையை வழங்­கி­னர்.

எனவே, தேர்­தல் ஊடாக ஆட்­சி­யைக் கவிழ்ப்­பதை விடுத்து, உரிய காலத்­துக்கு முன்­னர் அதைச் செய்ய முற்­ப­டு­வது மக்­கள் தீர்ப்­புக்கு எதி­ரான செய­லா­கும்.

குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்­னர் ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டு­மா­னால் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அதை அர­ச­மைப்­புக்கு உட்­பட்ட ரீதி­யில் செய்­ய­லாம். இப்­படி எதை­யும் செய்­யாது – மக்­கள் ஆணைக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் மகிந்த அணி உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன என்­னி­ட­மி­ருந்து எத்­த­கைய ஆத­ரவை எதிர்­பார்க்­கின்­றார்?

ஜன­நா­ய­கக் கட்­ட­மைப்பு வலுப்­பெ­ற­வேண்­டு­மா­னால் தொழிற்­சங்க கட்­ட­மைப்பு அவ­சி­யம். அவற்­றின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்­டும்.

எனி­னும், அர­சி­யல் நோக்­கங்­க­ளோடு முறை­யற்ற விதத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை முடக்­கும் வகை­யில் தொழிற்­சங்­கப் போராட்­டங்­களை நடத்தி அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­களை ஏற்க முடி­யாது.

இத­னைத் தடுப்­ப­தற்கு அரசு தைரி­ய­மான முடி­வு­களை எடுத்து அவற்றைத் தைரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்-­­என்­றார்.

http://uthayandaily.com/story/14311.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்று கொடுப்பதற்கும் உங்களுக்கு அந்த எழும்பு வேண்டுமுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழும் மேலை நாடுகள்பற்றி அறிந்த, அனுபவித்த வரையில் இங்கு அரசுகள் மக்களுக்காகவே செயற்படுகின்றன. தேசியத்துக்குப் பாதகம் ஏற்பாடாது, அரசானது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சிகளும் பூரண ஆதரவுநல்கிச் செயற்படுகிறார்கள். அதனை நீங்களும் அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்த மேலைநாடு உலகத்திலேயே மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகளில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. சீறீலங்காவின் சிங்கள அரசு அப்படியல்ல. மக்களை இனரீதியாகப் பிரித்து ஆட்சிசெய்கிறது. தமிழர்களை ஓரம்கட்டிச் சிங்களவரை அரவணைத்து சட்டங்களையும் இயற்றுகிறது. தேசியத்திற்குப் பிரச்சனை என்று வரும்போது முடிவெடுக்க முடியாமல் தங்கள் சிங்கள மதகுருமாரை நோக்கி ஓடுகிறது. இதனை அறிந்துதான் அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயா கூறிவிட்டு, அவரே அரசுக்கு ஆதரவு நல்க முயற்சிப்பதானது, சிங்கள அரசுசார்ந்து செயற்படும் அவருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

9 hours ago, Paanch said:

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

4 hours ago, Sasi_varnam said:

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

சரி ...சரி.... நீங்கள் தான் இப்ப சூடா  இருக்கிற சட்டிய தூக்கி வைக்கிறேன், குட்டிய தூக்கி வைக்கிறேன் எண்டு ஊரில நிக்கிறியள். அல்லாட காவல்ல எல்லாம் நல்லபடி நடக்கும்.

On 28/07/2017 at 8:23 PM, nunavilan said:

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

தெரியுதில்லை 

அதுக்குத்தான் மாற்றம் தேவை என்று மாற்றங்களும் + நிர்ப்பந்தங்களும் நடக்கின்றன. இதுக்குள்ளே நீங்கள் வேற புதுசா பழைய கதையுடன்.

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்

****

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்.

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

16 minutes ago, nunavilan said:

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு... ஒரு கருணாநிதி போல்....
ஈழத்துக்கு ... கிடைத்த அரசியல் வியாதி தான்... சம்பந்தன்.

சம்பந்தனை எந்தக்  காலத்திலும்... நம்ப முடியாத  சுயநல அரசியல்வாதி அவர். 
இதில்.... மாற்றுக கருத்துக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் சந்தோசப்படுகின்றேன்.
ஆனால் சந்தோசப்படும் மக்கள் எப்படி சந்தோசமாக  இருக்கின்றார்கள்?
எந்த விதத்தில் சந்தோசமாக இருக்கின்றார்கள்.
எல்லாம் காசு.

காசு இருந்தால் அம்மாவை தவிர எல்லாவற்றையும் வாங்கலாம்.

அது தான் ஈழத்தில் வசிக்கும் எம்மவரிடமும் நடக்கின்றது.

வெளிநாட்டு பணவரவு இருப்பவனுக்கு தடையற்ற வீதியும்...தடையற்ற உணவுவகைகளும் இருந்தாலே போதுமானது.

அடிப்படை உரிமைகள் அவனுக்கு அவசியமற்றது. சொந்தம் உறவுகள் எல்லாம் அவசியமற்றது.

காசு.

காசு வருது அனுபவி ராசா அனுபவி....

இதுதான் இன்றைய இலங்கைத்தமிழர்களின் அரசியல்.

ஏன் நீங்களே உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்தீர்கள்.

இது அங்கிருக்கும் எல்லோராலும் முடியுமா?

உங்கள்/உங்களைச்சார்ந்தவர்களின் நிலையை வைத்து பிறரை/பிறரின் அரசியலை எடை போடாதீர்கள்.
இன்றைய சுகபோகத்தை விரும்பி எதிர்கால சந்ததியினரை நட்டாற்றில் தள்ளிவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

அதற்காக உங்கிருப்பவர்களை இரத்தக்களரி காணச்சொல்லவில்லை.

இனியாவது அரசியல் பம்மாத்துக்களை இனம் காணுங்கள் என்றுதான் சொல்கின்றோம். :(

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் போது தானே இத்தனை அ ட்டூழியங்களும் அரங்கேறுகின்றதே. இந்தச் சட்டம் உண்மையான குற்றவாளிகளை தப்புவித்து அப்பாவிகளை தண்டிக்க உதவுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் திருமலையில்

கண்னியாவை சூள இப்ப அல்லா இருக்கிரார். 

கடர்கரைசேனைக்கும் அல்லா வந்திட்டாடடர்.(விகரையை தவிர வேறு மதத்தினர் புதிதாககட்ட முடியது) ஆனால் இவர்களுக்கு அனுமதி எப்படி கிடைத்தது ?

தோப்பூர் 12 டிவிசன் கொண்டு தனி முஸ்லிம் அலகு ஆகுகிறது.

Just now, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Norway இல் பயங்கரவாத தடை சட்டத்தை வைத்தா இப்படியனவர்களை தண்டிக்கிறார்கள்?

(Please excuse me for spelling mistakes) 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ அப்பிடி யார் சொன்னது? நாட்டுக்கு இப்போ பணப்பிரச்சினை. கைகொடுப்பது அமைச்சரின் கடமை. 

6 hours ago, putthan said:

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

எங்கு இது நடந்தது ??

3 minutes ago, Dash said:

எங்கு இது நடந்தது ??

இன்னமும் வாசிப்பு வேண்டும் தலைவா.

பல இடங்களில் நடந்தது + நடக்க இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.