Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குத் தெரிந்த சிங்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்கள் இருக்கும், ஒரு சனி காலை, எனது இளையவளைக் கூட்டிக்கொண்டு ஆங்கிலப் பாடல் வகுப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்ததனால், அங்கிருந்த சொகுசு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு அப்பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். இடையிடையே மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, அங்கே வருபவர்கள் யாரென்று பார்ப்பதிலேயே எனது கவனம் சென்றிருந்தது. 

அநேகமானவர்கள் வெள்ளையர்கள். அவ்வப்போது சீனர்கள்....இப்படியே வந்துபோய்க்கொண்டிருந்த முகங்களினூடு ஒரு மண்ணிற முகம். எங்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்தியராகக் கூட இருக்கலாம். ஆகவே அவரையும் அவரது பிள்ளையையும் அவதானிக்கத் தொடங்கினேன். வரிசையில் நின்றிருந்த பிள்ளைகளுடன் தனது மகளையும் இணைத்துவிட்டு அந்தத் தந்தை தனது மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சிங்களவர் என்று புரிந்தது.

2009 இற்குப்பிற சிங்களம் பேசப் பிடிக்கவில்லை. முன்னரென்றால் சிங்கள் பேசுவது காதில் கேட்டால், நானாகச் சென்று பேசுவதுண்டு. ஆனால் அதெல்லாம் 2009 இற்குப் பிறகு மாறிவிட்டது. அது மறக்கப்படவேண்டிய மொழி என்று வைராக்கியத்துடன் இருந்துவருகிறேன். அப்படியிருந்த நான், அன்று இந்த சிங்களத் தந்தையைக் கண்டவுடன் சரி, பேசிப் பார்க்கலாம் என்று எண்ணினேன்.

அவ்வாறே, எவருமில்லாமல் தனியாக சுவரில் பந்தை எறிந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த அவரிடம் சிங்களத்தில் பேச்சுக் கொடுத்தேன். அவரும் என்னைச் சிங்களவரா என்று கேட்க, இல்லை, நான் தமிழர், ஆனால் சிங்களம் பேச முடியும் என்று  கூறவும் அவரும் சரளமாகப் பேசத் தொடங்கினார். முதலில் சிட்னியில் இருக்குமிட விபரங்களினூடு ஆரம்பித்த சம்பாஷணை பின்னர், இலங்கையில் இருந்தவிடங்கள், படித்த அதே மொரட்டுவைப் பலகலைக் கழகம், விரிவுரையாளர்கள், இலங்கையின் கிரிக்கெட் அணி விளையாடும் சொதப்பல் ஆட்டம், அரவிந்த, அர்ஜுன, ஜயசூரிய என்று பலவிடயங்களையும் அலசி ஆரய்ந்தோம்.

வகுப்பு நடக்கும் அந்த ஒரு மணிநேரமும் எப்படிப் போனதென்றே தெரியவில்லை, பல விடயங்கள் பேசினோம்.

சரி, இனி நேரமாகி விட்டது, பிள்ளைகளைக் கூப்பிடப் போகலாம் என்று எண்ணி சம்பாஷணையை முடிக்கும் தறுவாயில் அவர் இப்படிச் சொன்னார், "ஊங்களைப் போல தமிழர்கள் எல்லோரும் சிங்களம் பேசினால் எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது, அவுஸ்ரேலியாவைப் பாருங்கள், அவர்களது நாடு, ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், ஆகவே இங்கே குடியேற வருபவர்களும் ஆங்கிலம்தான் பேச வேண்டும், ஆகையினால்த்தான் இங்கே எமக்குள் இருந்ததுபோன்ற பிரச்சின எதுவும் இல்லை' என்று வெகு சாதாரணமாகச் சொன்னார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்போது என்ன சொல்ல வருகிறார் இந்தச் சிங்களவர்? எல்லோரும் சிங்க்ளம் பேசினால் பிரச்சினை இல்லை என்கிறாரா? ஆக தமிழ் மொழிமீதான முற்றான ஒரு ஆக்கிரமிப்பையும், திட்டமிட்ட இன மொழி அழிப்பையும் வெகு சாதாரணமாக இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறாரே? இத்தனை ஆண்டுகால போர், லட்சக்கணக்கான தமிழர்கள் தமது உயிரைக் கொடுத்த்உம் கூட இன்றுவரை ஒரு சாதாரணச் சிங்களவரால் எமது பிரச்சினை என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், எமக்கு முடிவுதான் என்ன? 

சிங்களம் பேசுங்கள் என்று இவர் இன்று கேட்டதுபோல, நாளை பெளத்தராக மாறுங்கள், உங்கள் அடையாளத்தை இழந்துவிடுங்கள், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி..அதுதான் சிங்களம், சிங்களவர், பெளத்தம். இப்படியிருந்தால் எமக்குள் பிரச்சினை இல்லை என்கிறார்.

அட, எதுக்கடா இவருடன் பேசினோம் என்றாகிவிட்டது. தெரிந்த மொழி, ஆகவே பேசிப் பார்க்கலாம், எவ்வளவுதூரம் அம்மொழியை நினைவில் வைத்திருக்கிறேன் என்று பார்க்கலாம் என்று பேசப் போனால், சிங்களவராக மாறினால் பிரச்சினையில்லை என்கிறார். அவ்வாறே, நானும், நீங்கள் எல்லோரும் தமிழில் பேசினால் எங்களுக்குள் பிரச்சினையில்லையே என்று கேட்டிருக்கலாம், ஆனால் நாந்தான் கேட்கவில்லையே, தோற்றுவிட்டோம் என்கிற தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்கலாமோ என்னவோ ??

தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்பார்கள். ஆனால் எனக்கோ, தெரிந்த சிங்களத்தால் மானநஷ்ட்டம் !!!!

போதுமடா சாமி, இனி இந்தச் சிங்கள நட்பு வேண்டாம். இனி அவருடன் பேசப்போவதில்லை என்று முடிவிற்கு வந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கதைத்த படியால்தான் அவரது உள்ளக் கிடைக்கையை புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது விரும்பினால் சொல்லிப் பாருங்கள், இப்போது நிறைய சிங்களவர்கள் தமிழ் நன்றாகப் படிக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே பெரும்பான்மை இன மக்களிடம் நிலவும் மனப்பான்மை தான் அவரிடமும் இருக்கிறது..

இங்கே வட இந்தியர்களிடம் பேசிப்பருங்கள், இந்தியாவே அவர்களுடையது, 'இந்தி'தான் அனைவரின் மொழி, அதைத்தான் அனைவரும் பேசவேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.. மற்றவர்களின் சுய விருப்பு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை..இந்த மனநிலையால்தான் மேற்கு பாகிஸ்தான் வங்க தேசத்தில் உருது மொழிய திணித்ததால் 'பங்களாதேஷ்' உருவானது..

தென்னிந்திய மாநிலங்கள் விழிப்புடன் இருந்தபடியால், அவரவர் மொழிக்கேற்ற மாநிலங்கள் உருவாயின..

ஆனால் தொலை நோக்கற்ற அக்கால இலங்கை தமிழ் தலைகள், சோரம் போய், சக தமிழரையும் காட்டிக்கொடுத்து, அந்நியனை சகோதரமென்று நம்பி தன் இனத்தையும் தீராத குருதிக்குழியில் அமிழ்ந்திருக்க செய்துவிட்டனர்..

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நீங்கள் கதைத்தது சிங்களத்திளாயின், நீங்கள் குறை சொல்ல முடியாது.

நானும் அலுவலகத்தில் சிங்கள நண்பர்கள்... சிங்களம் தெரிந்தாலும்... ஆங்கலத்தில் மட்டுமே உரையாடல்.

அவர்கள் சில தமிழ் சொற்களுடன் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

ஏற்கனவே  இங்கு இது பற்றி  அதிகம் பேசியிருக்கின்றோம் என  நினைக்கின்றேன்

நான்  83  கலவரத்துக்கு  பின் சிங்களம் பேசுவதில்லை

இங்கு கடைக்கு  சிங்களவர்கள் வருவார்கள்

நான் கொழும்பில் படித்ததை  சொல்வேன்

ஆனால் அத்தனையும்  பிரெஞ்சில் தான் இருக்கும்

உங்களுடன்  பேசியதில் அவருக்குத்தான் வெற்றி

இது தான் சிங்கள  மனநிலை

கொடியாக  இருங்கள் என்பது தான் அவர்களது குறி.

அநேகமான  தமிழர்கள் தமது மொழியை  தமது  இனத்தை இந்த மாதிரி  நிலைகளில் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்

ஏன்  இந்த  சிங்களவரும் வெற்றியோடு  தான் செல்கிறார்

நீங்கள் மௌனமாக  விலகியது  அவருக்கு அவர் சொன்னதை  நீங்கள்  ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்

இந்த  ஒரு விடயம் தமிழர்கள்  சிங்களவரிடம் தோற்குமிடம்

அவர்களிடமிருந்து தமிழர்கள் கற்கவேண்டிய  இது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ரகு....  உங்களிடம், எம் இனப் பிரச்சினையை... நன்றாக  வாதாடக் கூடிய  திறமை உள்ளதை,
நீங்கள்,  முன்பு பல இடங்களில், யாழ். களத்தில், பதிந்த  பதிவுகள் மூலம்  தெரிந்து கொண்டோம்.

ஆனால்.... இந்த இடத்தில்,  நீங்கள் பின் வாங்கியதை, என்னால் ஏற்றுக்  கொள்ள முடியாது. :mellow:
அந்தச்  சிங்களவர்,  கொஞ்சமாவது திருந்துவதற்கு தன்னும், சில கேள்விகளை கேட்டிருக்கலாம். tw_glasses:

ஹ்ம்ம்... நடந்தது நடந்து போச்சு.  ஆள்....  இனி மாட்டுப் பட்டால்.....  
"நாக்கை புடுங்கிற  மாதிரி"    நாலு கேள்வியை,  திருப்பி கேளுங்கோ.....  என்ன சொல்கிறார் என்று பாப்பம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முடியும் தறுவாயில் நீங்களும் சொல்லியிருக்க வேணும் அந்த சிங்களவரிடம் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

ரகு

ஏற்கனவே  இங்கு இது பற்றி  அதிகம் பேசியிருக்கின்றோம் என  நினைக்கின்றேன்

நான்  83  கலவரத்துக்கு  பின் சிங்களம் பேசுவதில்லை

இங்கு கடைக்கு  சிங்களவர்கள் வருவார்கள்

நான் கொழும்பில் படித்ததை  சொல்வேன்

ஆனால் அத்தனையும்  பிரெஞ்சில் தான் இருக்கும்

உங்களுடன்  பேசியதில் அவருக்குத்தான் வெற்றி.

விசுகு...
யாழ். களத்தில்..... நான் அவதானித்த  அளவில்,
ரகுநாதன், சசி வர்ணம், புங்கையூரான், மணிவாசகன்...   ஆகிய  நால்வர்  மட்டுமே....
சரளமாக,  சிங்கள மொழியை...  பேசக்  கூடியவர்கள் என  நினைக்கின்றேன். :)

அடுத்த முறை... நாம்,  நேரில் சந்திக்கும் போது....
சிங்கள மொழியில்... என்னுடன் பேசினால் தான், நீங்கள் மேலே எழுதியதை நம்புவேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிங்களவரின் உந்தச் சேட்டை இன்னும் இல்லை. அடக்கி.. வாசிக்கினம். தமிழர்கள் பலர் வெளிப்படையாகவே புலி என்கிறார்கள் அவர்களுக்கு முன்னால்.. என்ன தான் செய்ய முடியும். அடங்கித்தானே ஆகனும். மேலும் வட இந்தியர்களும் கூட தமிழர்கள் இந்துக்கள் என்ற பார்வையில்.. தமிழர்களுக்கு ஆதரவளிப்பதை அடிக்கடி அவதானித்திருக்கிறேன். tw_blush:

ஆனால் சொறீலங்காவில் சிங்களவன்.. ஆரியம் பேசிக்கிட்டு இருக்கான்.. ஹிந்தியனுடன். அது லண்டனில் வேகவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நான் நினக்கின்றேன். இவர் சொன்ன அர்த்தம் வேறு என.

அதாவது, தமிழர்கள் தமிழர்களுடன் தமிழில் கதைக்கலாம் அதில் தவறில்லை. ஆனால் எல்லா தமிழர்களுக்கும் உங்களைபோல் சிங்களம் பேசத்தெரிந்திருந்தால், தன்னைபோன்ற சிங்களவர்களுக்கு தமிழர்களுடன் உரையாடுவத்ற்கு இலகுவாக இருக்குமே என்ற அர்த்தத்தில் இவர் கூறியிருக்கின்றா மாதிரியே எனக்கு படுகின்றது.

மேலும் நீங்கள் முதலில் அவருடன் கதைத்தீர்களா? அல்லது அவர் வந்து உங்களுடன் கதைத்தாரா? எந்த ஒரு சிங்களவனும் நீங்கள் ஒர் இலங்கையனா முதலில் கேட்பான். ஆம் என்றால் நீங்கள் தமிழோ முஸ்லீமோ நிச்சயமாக அவன் உங்களுடன் நட்பாகவே கதைப்பான். இது அவர்களின் இயல்பு. இயல்பிலேயே அவர்ககள் நட்பானவர்கள். ஆனல் இனம் என வரும்போது அவர்கள் துவேசம் பிடித்தவர்களே. இது மறுக்க முடியாத உண்மை.

ஏன் தமிழர்கள் துவேசமானவர்கள் இல்லையா. நீங்கள் கூட 2009 க்கு பிறகு தமிழில் பேசமாட்டேன், அல்லது இனிமேல் சிங்களம் பேச மாட்டேன் என முடிவெடுப்பது கூட துவேசத்தின் வெளிப்பாடே. ஏன் நான் கூட 2009 க்கு பிறகு இங்கையன் என சொல்லவே வெட்கப்படுகின்றேன். 2009 ல் உறவுகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது மிகுந்த மன உழைச்சலுகுள்ளானவர்களில் நானும் ஒருவன். தான் ஆட விட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல் தமிழர்கள் எங்கு அடிபட்டாலும் அது எமக்கு ஓர் வலியை ஏற்படுத்தவே செய்யும்.

அதேபோல் சிங்கள‌வர்களும் தாங்கள் இனத்தின் மீதும் நாட்டின் மீதும் ஒருவித வெறித்தனம் மிக்கவர்கள்.

தமிழர்கள் அப்படி அல்ல. காரணம் எங்களுக்கு என ஓர் நாடில்லை.

பல பிக்குகள் யாழில் பலகாலம் வாழ்ந்தவர்கள் சரளாமாக தமிழ் பேசுவார்கள். ஆனால் அடிப்படையில் இவர்கள் இனவாதிகளே. 

ஆக ஒவ்வொறு தமிழனும் சிங்களம் படிக்க வேண்டும் சிங்களவர்களுடன் சரளாமாக பேச வேண்டும். எங்கள் பக்க ஞாயங்களை சாதரண பமரா சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
 
4 hours ago, விசுகு said:

ரகு

ஏற்கனவே  இங்கு இது பற்றி  அதிகம் பேசியிருக்கின்றோம் என  நினைக்கின்றேன்

நான்  83  கலவரத்துக்கு  பின் சிங்களம் பேசுவதில்லை

இங்கு கடைக்கு  சிங்களவர்கள் வருவார்கள்

நான் கொழும்பில் படித்ததை  சொல்வேன்

ஆனால் அத்தனையும்  பிரெஞ்சில் தான் இருக்கும்

உங்களுடன்  பேசியதில் அவருக்குத்தான் வெற்றி

இது தான் சிங்கள  மனநிலை

கொடியாக  இருங்கள் என்பது தான் அவர்களது குறி.

அநேகமான  தமிழர்கள் தமது மொழியை  தமது  இனத்தை இந்த மாதிரி  நிலைகளில் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்

ஏன்  இந்த  சிங்களவரும் வெற்றியோடு  தான் செல்கிறார்

நீங்கள் மௌனமாக  விலகியது  அவருக்கு அவர் சொன்னதை  நீங்கள்  ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்

இந்த  ஒரு விடயம் தமிழர்கள்  சிங்களவரிடம் தோற்குமிடம்

அவர்களிடமிருந்து தமிழர்கள் கற்கவேண்டிய  இது.

மிகவும் கிறுக்கு தனமான கொள்கை இது. நான் என்றால் சிங்களத்திலேயே கதைப்பேன். என் பக்க நியாயங்களை சிங்களத்தில கூறுவேன்.

புலிகள் கூட தாங்களது கொள்கைகளை பாமர சிங்கள மக்களிடம் சரியான முறையில் எடுத்து செல்லவில்லை. இதுவும் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஓர் தோல்வியே.

பிரான்சில் பிழைக்க பிரஞ்சு படிக்கின்றீர்கள்? உங்களின் கொள்கையை சிங்கள்த்தில் விளக்க மாட்டீர்களா?

9 hours ago, ராசவன்னியன் said:

பொதுவாகவே பெரும்பான்மை இன மக்களிடம் நிலவும் மனப்பான்மை தான் அவரிடமும் இருக்கிறது..

இங்கே வட இந்தியர்களிடம் பேசிப்பருங்கள், இந்தியாவே அவர்களுடையது, 'இந்தி'தான் அனைவரின் மொழி, அதைத்தான் அனைவரும் பேசவேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.. மற்றவர்களின் சுய விருப்பு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை..இந்த மனநிலையால்தான் மேற்கு பாகிஸ்தான் வங்க தேசத்தில் உருது மொழிய திணித்ததால் 'பங்களாதேஷ்' உருவானது..

தென்னிந்திய மாநிலங்கள் விழிப்புடன் இருந்தபடியால், அவரவர் மொழிக்கேற்ற மாநிலங்கள் உருவாயின..

ஆனால் தொலை நோக்கற்ற அக்கால இலங்கை தமிழ் தலைகள், சோரம் போய், சக தமிழரையும் காட்டிக்கொடுத்து, அந்நியனை சகோதரமென்று நம்பி தன் இனத்தையும் தீராத குருதிக்குழியில் அமிழ்ந்திருக்க செய்துவிட்டனர்..

நீங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் தமிழர்.

இந்தியர் என்றாலே உடனடியாக ஞாபகத்துக்கு வருபவர் இந்தி பேபவர்கள் அல்ல. சீக்கியர்களே, தலைப்பகைகளுடன். இவர்களே இந்திய ICON
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நீங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் தமிழர்.

இந்தியர் என்றாலே உடனடியாக ஞாபகத்துக்கு வருபவர் இந்தி பேபவர்கள் அல்ல. சீக்கியர்களே, தலைப்பகைகளுடன். இவர்களே இந்திய ICON
 
அது உங்கள் பார்வை, நான் ஒன்றும் சொல்ல இயலாது..  நான் தமிழன், அது மட்டுமே! 5.gif

அமீரகத்தில் "ஞான் பறைஞ்ஞூஞூஞூஞூஞூ..." என்று பறையடித்தால் மட்டுமே இந்தியர்கள், அதற்காக மல்லு பொதுவான ICON ஆகிவிடமுடியுமா?

நீங்கள் கூறும் சீக்கியர், மற்ற வட இந்தியர்களிடமிருந்து உருவத்தால், உடையால் வேறு பட்டவர்கள்.. அதனால் அவர்களின் தனித்தன்மையான உருவகபடுத்துதலே தங்களை போன்றோருக்கு ICON ஆக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ராஜவன்னியன்,

இதுதான் உலகத்தின் பொதுவான பார்வை.

தென்னாசிய நாடுகளில் இருந்து வருபவர்கள் என்றால் அரபிக்காரனோ அல்லது வெள்ளையயோ எங்களை ஒரு கூலிக்காரனாகவே பார்ப்பர்கள்.
அவர்களை பொருத்தவரை நாங்கள் கூலிகள்.

இதுதான் உலகத்தின் பொதுவான பார்வை.

1 hour ago, colomban said:

தவறு கொழும்பான் ஐரோப்பிய மக்களிடம் நண்பர்களாக பழகிப்பாருங்கள். அவர்கள் எங்களை கூலிகளாக கருதுவதில்லை. தேசிய இனங்களை மதிக்கும் தன்மை ஐரோப்பிய மக்களிடம் உண்டு. ஐரோப்பாவை பாருங்கள் தேசுய இன ரீதியிலேயே நாடுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. வரலாற்றில் இடையிடையே  ஆக்கிரமிப்புக்கள் வந்தாலும் அவை காலப்போக்கில் முறியடிக்கப்பட்டு தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து நிற்கின்றன. 

அடிப்படையில் இந்தியா ஒரு நாடு அல்ல. தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்கள் இணைத்து ஒருநாடாக ஆக்கியது.இதுவே ஐரோப்பாவாக இருந்தால் எப்போதோ தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஐரோப்பிய வரலாற்றை வாசித்தீர்கள் என்றால். உங்களுக்கு இது புரியும் 

நாங்கள் எமது வசதிக்காக பலமுள்ள எஜமானருக்கு விசுவாசமாக வாழப்பழகிவிட்டு மற்றவர்கள் எம்மை கூலி என்று கூறுகிறார்கள் என்று எம்மை நாமே தாழ்ததிக் கொள்ளுவதில் என்ன பயன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

மிகவும் கிறுக்கு தனமான கொள்கை இது.

நான் என்றால் சிங்களத்திலேயே கதைப்பேன்.   என் பக்க நியாயங்களை சிங்களத்தில கூறுவேன்.

புலிகள் கூட தாங்களது கொள்கைகளை பாமர சிங்கள மக்களிடம் சரியான முறையில் எடுத்து செல்லவில்லை. இதுவும் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஓர் தோல்வியே.

பிரான்சில் பிழைக்க பிரஞ்சு படிக்கின்றீர்கள்? உங்களின் கொள்கையை சிங்கள்த்தில் விளக்க மாட்டீர்களா?

முதலில்  வார்த்தைகளில்  மரியாதை தேவை  சகோதரா

அடுத்து நித்திரையாக  நடிப்பவனை  எழுப்ப  நான்  ஒரு  போதும் முயன்றதில்லை

நேரத்தின்  மதிப்பு தெரியும்

பிரான்சில்  பிரெஞ்சைப்படிக்கும்படி   என்னை  எவரும்  கட்டாயப்படுத்தவில்லை

அடுத்தது  என்மண்ணிலிருந்து என்னை  தூக்கி  எறிந்தவர்களுக்கு  

நான் பிழைப்புக்காக  செய்வதை  சொல்ல  எந்த  அருகதையுமில்லை

உங்கள் பக்க நியாயம்??

உங்களது  எழுத்தை  இங்கு  பார்த்தாலே  தெரியும்

மாற்றினீர்களா??  மாறினீர்களா?   என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

முதலில்  வார்த்தைகளில்  மரியாதை தேவை  சகோதரா

அடுத்து நித்திரையாக  நடிப்பவனை  எழுப்ப  நான்  ஒரு  போதும் முயன்றதில்லை

நேரத்தின்  மதிப்பு தெரியும்

பிரான்சில்  பிரெஞ்சைப்படிக்கும்படி   என்னை  எவரும்  கட்டாயப்படுத்தவில்லை

அடுத்தது  என்மண்ணிலிருந்து என்னை  தூக்கி  எறிந்தவர்களுக்கு  

நான் பிழைப்புக்காக  செய்வதை  சொல்ல  எந்த  அருகதையுமில்லை

உங்கள் பக்க நியாயம்??

உங்களது  எழுத்தை  இங்கு  பார்த்தாலே  தெரியும்

மாற்றினீர்களா??  மாறினீர்களா?   என்று.

உங்களை யாரும் தூக்கி ஏறியவில்லை. நீங்களாக ஒடி ஒளிந்து கொண்டீர்கள். 

பலர் மேற்கத்தேய நாடுகளில் இருக்கும் சில சட்ட நெளிவு சுளிவுகளை/மனிதாபின நெகிழ்வுகளை  தங்கள் சுய நலத்துக்கக மற்றவர்களை பலிக்கடாவாக்கி தாங்கள் வாழ்வை வளப்படுத்தியவர்கள். இங்கு எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவருரை எடை போட முடியுமா என்ன‌? 

இனியும் இழந்து போக எதுவும் இல்லை தமிழினம்

நன்றி

1 hour ago, tulpen said:

தவறு கொழும்பான் ஐரோப்பிய மக்களிடம் நண்பர்களாக பழகிப்பாருங்கள். அவர்கள் எங்களை கூலிகளாக கருதுவதில்லை. தேசிய இனங்களை மதிக்கும் தன்மை ஐரோப்பிய மக்களிடம் உண்டு. ஐரோப்பாவை பாருங்கள் தேசுய இன ரீதியிலேயே நாடுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. வரலாற்றில் இடையிடையே  ஆக்கிரமிப்புக்கள் வந்தாலும் அவை காலப்போக்கில் முறியடிக்கப்பட்டு தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து நிற்கின்றன. 

அடிப்படையில் இந்தியா ஒரு நாடு அல்ல. தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்கள் இணைத்து ஒருநாடாக ஆக்கியது.இதுவே ஐரோப்பாவாக இருந்தால் எப்போதோ தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஐரோப்பிய வரலாற்றை வாசித்தீர்கள் என்றால். உங்களுக்கு இது புரியும் 

நாங்கள் எமது வசதிக்காக பலமுள்ள எஜமானருக்கு விசுவாசமாக வாழப்பழகிவிட்டு மற்றவர்கள் எம்மை கூலி என்று கூறுகிறார்கள் என்று எம்மை நாமே தாழ்ததிக் கொள்ளுவதில் என்ன பயன்.

1 hour ago, tulpen said:

தவறு கொழும்பான் ஐரோப்பிய மக்களிடம் நண்பர்களாக பழகிப்பாருங்கள். அவர்கள் எங்களை கூலிகளாக கருதுவதில்லை. தேசிய இனங்களை மதிக்கும் தன்மை ஐரோப்பிய மக்களிடம் உண்டு. ஐரோப்பாவை பாருங்கள் தேசுய இன ரீதியிலேயே நாடுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. வரலாற்றில் இடையிடையே  ஆக்கிரமிப்புக்கள் வந்தாலும் அவை காலப்போக்கில் முறியடிக்கப்பட்டு தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து நிற்கின்றன. 

அடிப்படையில் இந்தியா ஒரு நாடு அல்ல. தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்கள் இணைத்து ஒருநாடாக ஆக்கியது.இதுவே ஐரோப்பாவாக இருந்தால் எப்போதோ தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஐரோப்பிய வரலாற்றை வாசித்தீர்கள் என்றால். உங்களுக்கு இது புரியும் 

நாங்கள் எமது வசதிக்காக பலமுள்ள எஜமானருக்கு விசுவாசமாக வாழப்பழகிவிட்டு மற்றவர்கள் எம்மை கூலி என்று கூறுகிறார்கள் என்று எம்மை நாமே தாழ்ததிக் கொள்ளுவதில் என்ன பயன்.

மன்னிக்கவும் துல்பன்
நான் ஐரேப்பிய நாடுகளில் சில வருடம் வாழ்ந்தவன் மேலும் சில ஐரோப்பிய / அமெரிக்க பல்தேசிய கம்பனிகளில் வேலை செய்து அவதானித அனுபவத்திலேயே எழுதினேன்.
மனதளவில் ஐரேப்பியர்கள் நல்லவர்கள் / நட்புடன் பழகுவார்கள் அதுவேறு.
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

இனியும் இழந்து போக எதுவும் இல்லை தமிழினம்.

இதுதான் நிதர்சனம்..

இன்னமும் இன உணர்வு இல்லாமல், அந்நிய அடையாளங்களை(Administrative tag) காவிக்கொண்டு திரிந்தால் இழப்பு மட்டுமல்ல, இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஆக்கிரமிப்பு அந்தளவில் செல்கிறது!

நன்றி, திரு.கொழும்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

உங்களை யாரும் தூக்கி ஏறியவில்லை. நீங்களாக ஒடி ஒளிந்து கொண்டீர்கள். 

பலர் மேற்கத்தேய நாடுகளில் இருக்கும் சில சட்ட நெளிவு சுளிவுகளை/மனிதாபின நெகிழ்வுகளை  தங்கள் சுய நலத்துக்கக மற்றவர்களை பலிக்கடாவாக்கி தாங்கள் வாழ்வை வளப்படுத்தியவர்கள். இங்கு எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவருரை எடை போட முடியுமா என்ன‌? 

இனியும் இழந்து போக எதுவும் இல்லை தமிழினம்

நன்றி

நேரத்தின்  மதிப்பு தெரியும்

நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இதுதான் நிதர்சனம்..

இன்னமும் இன உணர்வு இல்லாமல், அந்நிய அடையாளங்களை(Administrative tag) காவிக்கொண்டு திரிந்தால் இழப்பு மட்டுமல்ல, இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஆக்கிரமிப்பு அந்தளவில் செல்கிறது!

நன்றி, திரு.கொழும்பான்.

எதை இன உணர்வு என்று சொல்கின்றீர்கள் ராஜவன்னியன்? 

தான் தற்காலிகமாக வேலை செய்யும் நாட்டில் தனது அண்டை மாநானிலத்தில் இருந்து வந்து மிகத்திற‌மையாக பொறுமையுடன் எல்லாவற்றையும் சகிப்புத்தன்மையுடன் தாங்கிகொண்டு இன்று  LuLu supermarket அதிபர் போன்று
உழைப்பால் உயர்ந்த  மலையாளிகளை எள்ளி நகையாடும் நீங்களா இன மான உணர்வுள்ளவர்?

அல்லது சகதமிழ் பேசும் மக்களை இழிவான  அடிமை இனமென நினக்கும் மனமேட்டிமையுள்ள‌ தமிழர்களா இனமான உணர்வுள்ளவர்கள்?

50 minutes ago, விசுகு said:

நேரத்தின்  மதிப்பு தெரியும்

நன்றி  வணக்கம்

நேரத்தின்  மதிப்பு தெரியும்

நன்றி  வணக்கம்

இதுக்கு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

எதை இன உணர்வு என்று சொல்கின்றீர்கள் ராஜவன்னியன்? 

தான் தற்காலிகமாக வேலை செய்யும் நாட்டில் தனது அண்டை மாநானிலத்தில் இருந்து வந்து மிகத்திற‌மையாக பொறுமையுடன் எல்லாவற்றையும் சகிப்புத்தன்மையுடன் தாங்கிகொண்டு இன்று  LuLu supermarket அதிபர் போன்று உழைப்பால் உயர்ந்த  மலையாளிகளை எள்ளி நகையாடும் நீங்களா இன மான உணர்வுள்ளவர்?

ஒரு தனிமனிதனின் செயல்களெல்லாம் ஒட்டுமொத்த இனத்தின் பண்பாகக் கொள்ள முடியாது..நீங்கள் சொல்லும் அதே முறையில், இங்கே கீழக்கரை தமிழரின் ETA நிறுவனமும் சிறப்புடன் உள்ளது..அவரும் உழைப்பால் உயர்ந்தவர்தான்!

மலையாளிகளின் பண்பு, அவர்களின் வரலாற்றை படித்தாலே புரியும்.. அவர்களுடன் 20 வருடமாக பழகும் நானும், எனது நிறுவன குழுவும் நன்கு அறியும்..(தான் வாழ, தன்னுடன் பழகும் உறவிற்கே  தெரியாமல் அவரை குழிவெட்டி தள்ளும் குணம்..). ஈழத்தமிழர், தமிழ்நாட்டு நலன்களில் அவர்களின் சரித்திரத்தை படியுங்கள், தெளிவீர்கள்!

13 minutes ago, colomban said:

அல்லது சகதமிழ் பேசும் மக்களை இழிவான  அடிமை இனமென நினக்கும் மனமேட்டிமையுள்ள‌ தமிழர்களா இனமான உணர்வுள்ளவர்கள்?

நீங்கள் மலையக/இந்திய தமிழர்களை நோக்கிய ஈழத்தமிழர்களின் செயல்பாட்டை, பார்வையை குறிக்கிறீர்கள் என அறிகிறேன்..

நிச்சயம் அச்செயல்கள், வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை..அந்த வரலாற்று தவறை இன்னமும் சில ஈழத்தமிழர்கள் காவித்திரிவதை கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளிடம் பாராட்டப்பட வேண்டிய ஒரே விடயம்,  தங்கள் இனத்திற்குள் மிகக் பொறுப்புடன் மேற்கொள்ளும் இன ஒற்றுமை, கூட்டுமுறை.(Network)

அந்த குணம், சுட்டுப்போட்டாலும் தமிழர்களுக்குள் வராது. vil-ddispute.gif  அதுவே நம் பலவீனம், தாழ்வு.

இத்தாலிய மாலுமிகள் விடயத்தில் கொதிதெழுந்த கேரளம் எங்கே..., 700 மீனரவர்கள் கொல்லப்பட்டபின்பும், வால் பிடித்து சோறு கண்ட இடமே சொர்க்கமென கிடக்கும் தமிழகம் எங்கே..! :unsure:  அந்த விடயத்தில் ஈழத்தமிழர்களின் உணர்வு பாராட்டப்பட வேண்டியது..

Edited by நியானி
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை எழுதியதன் நோக்கமே எனது சிங்களவர்களின் சாதாரண மனநிலையை கூறுவதற்கேயன்றி, எங்களுக்குள் அடிபட அல்ல. கொழும்பானோ, விசுகரோ, ராஜவன்னியனோ தனிப்பட்ட கருத்தெழுதி காயப்படுவது கவலையளிக்கிறது.

இந்தத் தலைப்பு இப்படி மாறும் என்று என்று நினைத்திருக்கவில்லை.

மன்னித்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

விசுகு...
யாழ். களத்தில்..... நான் அவதானித்த  அளவில்,
ரகுநாதன், சசி வர்ணம், புங்கையூரான், மணிவாசகன்...   ஆகிய  நால்வர்  மட்டுமே....
சரளமாக,  சிங்கள மொழியை...  பேசக்  கூடியவர்கள் என  நினைக்கின்றேன். :)

அடுத்த முறை... நாம்,  நேரில் சந்திக்கும் போது....
சிங்கள மொழியில்... என்னுடன் பேசினால் தான், நீங்கள் மேலே எழுதியதை நம்புவேன்.
 :grin:

நான்   சிங்களம் படித்தவனல்ல

கேள்வி  ஞானம்  தான்

கிட்டத்தட்ட 35 வருடங்களாக  ஒரு சொல்லை பேசியதோ  கேட்டதோ  இல்லை

நீங்கள் பேசினால் புரிந்து கொள்ளமுடியும்

அதுவும் பிரெஞ்சுக்கு மாற்றித்தான் வரும்  கொஞ்சம்  நேரமாகும்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

நான் இதை எழுதியதன் நோக்கமே எனது சிங்களவர்களின் சாதாரண மனநிலையை கூறுவதற்கேயன்றி, எங்களுக்குள் அடிபட அல்ல. கொழும்பானோ, விசுகரோ, ராஜவன்னியனோ தனிப்பட்ட கருத்தெழுதி காயப்படுவது கவலையளிக்கிறது.

இந்தத் தலைப்பு இப்படி மாறும் என்று என்று நினைத்திருக்கவில்லை.

மன்னித்துவிடுங்கள்.

விசுகு ஐயா / ராஜவன்னியன் போன்ற மூத்த கருத்தாளர்களை நான் 
காயபடுத்துவது எனது எண்ணமல்ல. அப்படி ஏற்பட்டிருந்தால் விசுகு ஐயா / ராஜவன்னியன், ம‌ன்னிக்கவும். என்னுடைய கருத்துக்கள் என் அனுபவத்தை /அவதானிப்பை அடிப்படையாக கொண்டது மட்டுமே.

சரி ரகு இப்ப உங்கட கதைக்கு வருவம், இதே சிங்களத்தியாக இருந்தால் என்ன நடந்திருக்கும். மெல்ல அவளுக்கு உங்களுடைய மொபைல் போன் நம்பரை கொடுத்து    "சுது நோனா அபி ராட்ட செட் வெலா எமதாம சிங்கள இகன கமு" என்று சொல்லி இருப்பீர்களா?  :grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த பேரினவாதம் என்று தான் தலைவர் சொல்லுவாரே...:rolleyes:

4 hours ago, colomban said:

விசுகு ஐயா / ராஜவன்னியன் போன்ற மூத்த கருத்தாளர்களை நான் 
காயபடுத்துவது எனது எண்ணமல்ல. அப்படி ஏற்பட்டிருந்தால் விசுகு ஐயா / ராஜவன்னியன், ம‌ன்னிக்கவும். என்னுடைய கருத்துக்கள் என் அனுபவத்தை /அவதானிப்பை அடிப்படையாக கொண்டது மட்டுமே.

சரி ரகு இப்ப உங்கட கதைக்கு வருவம், இதே சிங்களத்தியாக இருந்தால் என்ன நடந்திருக்கும். மெல்ல அவளுக்கு உங்களுடைய மொபைல் போன் நம்பரை கொடுத்து    "சுது நோனா அபி ராட்ட செட் வெலா எமதாம சிங்கள இகன கமு" என்று சொல்லி இருப்பீர்களா?  :grin: :grin:

மம  கண்டி மினிய....

தெமுலு கொல்ல நங் , மம கதா கரண்ட நா , னே .. :grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான், அது சிங்களத்தியாக இருந்தால் நிச்சயம் பேசியிருக்க மாட்டேன். ஏன், தேவையில்லாமல் பிரச்சனை எனக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.