Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தெரிந்தால் நீங்களும் இனிமேல் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வாசலில் சிவப்பு மிளகாய்

முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.

வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.

ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன?

எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார்.

அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.

எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.

இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை! 

Manithan.com

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்  அண்ணை..... வாசலில் தேசிக்காய் கட்டி  தூக்கினால்...
பக்கத்து வீட்டுக்காரன் அதை புடுங்கிக் கொண்டு போய்... 
சொதி  வைத்துவிடுவானோ... என்று பயமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனில் களவெடுக்கும் காப்பிளிக்கு சொல்லபட்டு கிடக்கு  நிறை பணக்கார வீடுகளில் மட்டுமே இந்த எலுமிச்சை தொங்கும் என்று .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை..... வாசலில் தேசிக்காய் கட்டி  தூக்கினால்...
பக்கத்து வீட்டுக்காரன் அதை புடுங்கிக் கொண்டு போய்... 
சொதி  வைத்துவிடுவானோ... என்று பயமாக உள்ளது. 

சூப் வைத்துக் குடிப்பவன் யேர்மன்காரன் அவனைச் சொதி  வைத்துக் குடிக்கப் பழக்கிய தமிழ் சிறி அவர்களுக்கு ஒரு போடுங்க. :grin:

முதலாவது காட்டன் (cotton) கயிறு விட்டமின் சி இனை உறிஞ்சும் வல்லமை கொண்டது அல்ல
இரண்டாவது ஒரு எலுமிச்சையில் ஒரு நாளுக்கு தேவையான விற்றமின் சி யில் 38 வீதமும் மிளகாயில் 25 வீதமும் தான் உள்ளது. வீட்டை காக்கும் அளவுக்கு அதில் இல்லை

மூன்றாவது விற்றமின் சி ஆனது சூடு பட்டால் (அதாவது வெப்பத்தில்) செயல் இழந்து விடும். அது ஆவியாகி பயன் தரும் என்பது எல்லாம் இல்லை. இதனால் தான் விற்றமின் சி இருக்கும் மரக்கறிகளை அவிக்காமல் சுடு நீரில் சில நிமிடங்கள் வைத்து விட்டு உண்ண வேண்டும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24.9.2017 at 11:46 AM, Paanch said:

வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும்.

இன்று பல மருத்துவ கட்டுரைகளில் தேசிக்காயின் மகத்துவத்தையும் அதன் பலன்களையும் விபரமாகவே தெரியப்படுத்துகின்றார்கள்.
படுக்கை அறையில் தேசிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தால் காற்று சுத்தமாக்கப்படும் என சொல்கிறார்கள். நறுமணமாகவும் இருக்குமென சொல்கிறார்கள்.

தடிமல் இருமல் வரும் காலங்களில் தேசிக்காயை அவித்து அதை  படுக்கையறையில் வைத்தால் கொஞ்ச நிவாரணம் ஏற்படும்  எனவும் சொல்கிறார்கள். நாம் சுவாசிக்கும் காற்றால் பல நோய்கள் வருகின்றதென்றால் அதை தடுக்க நமது முன்னோர்கள் தேசிக்காயை வாராவாரம் வீட்டில் கட்டித்தொங்க விட்டிருக்கலாம்.
குளிர்காலங்களில் ஐரோப்பியர்கள் தேசிக்காய் தோலையும் தோடம்பழ தோலையும் வீட்டின் ஒரு மூலையில் அல்லது கீற்ரருக்கு அருகில் வைத்திருப்பார்கள். ஏன் நாங்கள் ஊரிலெல்லாம் தடிமல் வரும்போது எலும்பிச்சை மர இலையை அவித்து வேவு பிடித்த ஞாபகங்கள் எல்லாம் வரவில்லையா?

அத்தோடு விற்றமின் சி நிறைந்த தேசிக்காய் தேனீர் சூடு காட்டித்தான் குடிக்கின்றார்கள். குளிர்காலத்துக்கென விற்றமின் சி சூப்களும் நிறையவே இருக்கின்றன.....எல்லாம் சூடுகாட்டித்தான் .........

Lemon and chilly were tied to Bullock carts and other such modes of transport in the past. The reason being, when they used to travel through dense forests, there was a possibility of coming across snakes and other venomous creatures. There was no measure available to check whether a snake bite was poisonous or non-poisonous. In such cases lemon and chilly used to act as a parameter to check whether the bite was poisonous.

In case of a poisonous bite, the taste buds on the tongue won't be able to differ or identify sour and spicy taste which would alarm the person and help him in taking curative action accordingly.

The irony is people still continue the practice for their BMW's and AUDI's. I hope they don't have to use it for the real reason it was meant for.

Quora இணையத்தில் இருந்து

முற்காலத்தில் மாட்டுவண்டிகளில் கட்டுவளிப் பயணங்களின் போது தேசீக்காயும் மிளகாயும் கொண்டுபோவார்கள். பாம்பு போன்ற விச ஜந்துக்கள் கடித்தால் விசத்தின் வீரியத்தை அறிய தேசீக்காயும் மிளகாயையும் சுவைக்கக் கொடுப்பார்கள். விசம் தீண்டியவர்களின் நாக்கால் புளிப்பையும் உறைப்பையும் உணரமுடியாது. இதனடிப்படையில் விசம் தீண்டியவரை காப்பாற்ற விரைவாக மருத்துவம் செய்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

தேசிக்காய் தேனீர் சூடு காட்டித்தான் குடிக்கின்றார்கள்.

நானும் தினசரி ஒரு பிளேன் டீ குடிக்கிறன் தேசிக்காய் சிறுதுண்டு போட்டு tw_blush:

16 hours ago, குமாரசாமி said:

இன்று பல மருத்துவ கட்டுரைகளில் தேசிக்காயின் மகத்துவத்தையும் அதன் பலன்களையும் விபரமாகவே தெரியப்படுத்துகின்றார்கள்.
படுக்கை அறையில் தேசிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தால் காற்று சுத்தமாக்கப்படும் என சொல்கிறார்கள். நறுமணமாகவும் இருக்குமென சொல்கிறார்கள்.

தடிமல் இருமல் வரும் காலங்களில் தேசிக்காயை அவித்து அதை  படுக்கையறையில் வைத்தால் கொஞ்ச நிவாரணம் ஏற்படும்  எனவும் சொல்கிறார்கள். நாம் சுவாசிக்கும் காற்றால் பல நோய்கள் வருகின்றதென்றால் அதை தடுக்க நமது முன்னோர்கள் தேசிக்காயை வாராவாரம் வீட்டில் கட்டித்தொங்க விட்டிருக்கலாம்.

இவற்றுக்கெல்லாம் வேறு காரணங்கள் இருக்கலாம், காலப் போக்கில் சண்டமாருதன் குறிப்பிட்டுள்ளவாறு தவறான புரிதலுடன் தொடரலாம், ஆனால் விஞ்ஞான ரீதியில் காற்றை தேசிக்காய் தூய்மைப்படுத்தும் என்று நிறுவவில்லை.

தேசிக்காயில் இருக்கும் சிற்றிக் அசிட் அசுத்தங்களை அகற்ற பயன்படும் ஒரு நல்ல இயற்கையான கிளீனர். அதை பாத்திரங்களை கழுவ, சமயலறை பொருட்களின் கறைகளை அகற்ற பயன்படுத்தலாம்.

Quote

குளிர்காலங்களில் ஐரோப்பியர்கள் தேசிக்காய் தோலையும் தோடம்பழ தோலையும் வீட்டின் ஒரு மூலையில் அல்லது கீற்ரருக்கு அருகில் வைத்திருப்பார்கள். ஏன் நாங்கள் ஊரிலெல்லாம் தடிமல் வரும்போது எலும்பிச்சை மர இலையை அவித்து வேவு பிடித்த ஞாபகங்கள் எல்லாம் வரவில்லையா?

அத்தோடு விற்றமின் சி நிறைந்த தேசிக்காய் தேனீர் சூடு காட்டித்தான் குடிக்கின்றார்கள். குளிர்காலத்துக்கென விற்றமின் சி சூப்களும் நிறையவே இருக்கின்றன.....எல்லாம் சூடுகாட்டித்தான் .........

விற்றமின் சீ ஆனது நீரில் கொதிக்கும் போது 70 பாகையின் பின் நீருடன் கலந்து விடும். நீரில் விற்றமின் சீ soluble ஆகக் கூடியது. ஆனால் அதிக சூட்டில் அவிக்கும் போதோ அல்லது எண்ணெய் விட்டு பொரிக்கும் / வதக்கும் போதோ அதில் உள்ள விற்றமின் சீ அழிந்து விடும்.

ஐரோப்பியர்கள் மற்றும் பெர்சியர்கள் தேசிக்காய் தோடம்பழம் போன்றவற்றையும் அவற்றின் தோலையும் குளிர்காலங்களில் ஹீட்டருக்கு பக்கத்தில் வைப்பது அவற்றை காய வைப்பதற்கு. காய்ந்த பின் அதனை சின்னஞ் சிறு துண்டுகளாக வெட்டி தேனீரில் போட்டுக் குடிப்பார்கள்.

16 hours ago, குமாரசாமி said:

. ஏன் நாங்கள் ஊரிலெல்லாம் தடிமல் வரும்போது எலும்பிச்சை மர இலையை அவித்து வேவு பிடித்த ஞாபகங்கள் எல்லாம் வரவில்லையா?

எலுமிச்சை மட்டுமல்ல இப்பிலிப்பி இலை, மாதுளம் இலை எல்லாம் போட்டு வேதி பிடிச்சு இருக்கிறம். இவை எல்லாம் நிவாரணிகள் மட்டும்தான். முக்கியமாக நீராவி பிடிக்கும் போது அதன் சூடு மூக்கடைப்பை அகற்றி சுவாசிக்க உதவும். ஆனால் இவை தடுப்புகள் அல்ல.

நான் இந்த திரியில் இட்ட பதில் தேசிக்காயிலும் பச்சை மிளகாயிலும் ஆவியாகி காற்றை சுத்தப்படுத்தும் என்பதற்கானது. விற்றமின் சீ யும் சரி இவற்றில் இருக்கும் எந்த சத்தும் சரி காட்டன் நூலால் உறிஞ்சப்பட்டு பின் ஆவியாகி வீட்டுக்குள் நுழைந்து குசலம் விசாரிச்சு மருத்துவம் பார்க்காது.

http://www.ijstr.org/final-print/nov2013/Effect-Of-Heating-On-Vitamin-C-Content-Of-Some-Selected-Vegetables.pdf

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை போலி விஞ்ஞான விளக்கங்களை அதிகம் பேருக்கு கடத்த உதவுகின்றது. கூடப் படித்த நண்பர்களின் வாட்ஸப் குழுமங்களில் பகிரப்படும் இப்படியான போலி விஞ்ஞான விளக்கங்களைப் பார்த்து வெறுத்துவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

விற்றமின் சீ ஆனது நீரில் கொதிக்கும் போது 70 பாகையின் பின் நீருடன் கலந்து விடும். நீரில் விற்றமின் சீ soluble ஆகக் கூடியது. ஆனால் அதிக சூட்டில் அவிக்கும் போதோ அல்லது எண்ணெய் விட்டு பொரிக்கும் / வதக்கும் போதோ அதில் உள்ள விற்றமின் சீ அழிந்து விடும்.

முதலில் வெட்பம் என்று என்றீர்கள்....இப்போது வெட்பத்தின் அளவுகோல் எல்லாம் போட்டு அசத்துகின்றீர்கள். இருந்தாலும் தகவல்களுக்கு நன்றி.

அது சரி விற்றமின் சி கலந்த பொரியல் எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை போலி விஞ்ஞான விளக்கங்களை அதிகம் பேருக்கு கடத்த உதவுகின்றது. கூடப் படித்த நண்பர்களின் வாட்ஸப் குழுமங்களில் பகிரப்படும் இப்படியான போலி விஞ்ஞான விளக்கங்களைப் பார்த்து வெறுத்துவிட்டது.

முதல்லை  கரி/உமிச்சாம்பலாலை பல்லுத்தீட்டினால் கூடாது எண்டு சொன்னாங்கள் ரூத் பேஸ்ட் வாங்கீட்டம்
தேங்காய்/ தேங்காய்ப்பால் கூடாது சாப்பிட்டால் காட் அட்ரைக் வருமெண்டாங்கள் விட்டுட்டம்..
மஞ்சள் கூடாது எண்டாங்கள் அதையும் விட்டுட்டம்..
பிள்ளை கனக்க பெறக்கூடாது எண்டாங்கள் அதையும் விட்டுட்டம்.
கிணத்து தண்ணியை இரண்டு கையாலையும் அள்ளி மனம்குளிர குடிச்சம்....வேண்டாம் கொதிக்கவைச்சு குடியுங்கோ எண்டாங்கள் அதையும் செய்யுறம்.
காலையிலை பச்சைமுட்டை குடிச்சவனை பார்த்து அவிச்சமுட்டையே சாப்பிடாதே அதிலை விசம் எண்டுறான்..விட்டுட்டம்.
வேப்பங்குச்சியாலை பல்லுதீட்டினால் முரசுக்கு சேதாரம் எண்டாங்கள் அதையும் விட்டுட்டம்.
பச்சையாக மரக்கறி சாப்பிட்ட எங்களை...அவிச்சு சாப்பிடுங்கோ எண்டுறாங்கள்...அவிச்சு சாப்பிடுறம்.
பருத்தியிலை நெய்த சீலையை விட்டுட்டு சிலுக்கு சாறி எண்டாங்கள் அதையும் .....:grin:

இது எல்லாவற்றுக்கும் அடிபணிந்ததின் பலன்..

மும்மாரிக்கு பதிலாக...மூன்று மாத்திரை மூன்று நேரமும் எடுக்குமளவிர்க்கு மனிதன் பயணித்துக்கொண்டிருக்கின்றான்.
 
இப்ப சந்தோசமா??? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

.
மும்மாரிக்கு பதிலாக...மூன்று மாத்திரை மூன்று நேரமும் எடுக்குமளவிர்க்கு மனிதன் பயணித்துக்கொண்டிருக்கின்றான்.
 
மூன்று மாத்திரைகளுக்கு மேலும் எடுக்கிறவர்கள் இருக்கிறார்கள் ஐயா...! :shocked:

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

மன்னிக்கோணும்..... மேலை இருக்கிற அவ்வளவு விசயத்தையும் வெள்ளைக்கார விஞ்ஞானியள் ஆரும் சரியெண்டு சொன்னவையோ? அப்பதான் நாங்கள் நம்புவம்.tw_blush:
ஊரிலை தேங்காய் , தேங்காய்ப்பால் கூடாது எண்டு சொல்லிச்சினம்.....ஆனால் இஞ்சை என்னடாவெண்டால் இப்ப...இப்ப கடையள்ளை ஒரு ஏரியாவை தேங்காய் அயிட்டத்துக்கெண்டே ஒதுக்க வெளிக்கிட்டுட்டாங்கள் எண்டால் பாருங்கோவன். உடம்புக்கு நல்லது எண்டுவேறை சிபாரிசு பண்ணுறாங்கள்.தேங்காய் சொட்டு கூட நறுக்கி விக்கிறாங்கள்.

வருத்தத்துக்கு மூண்டு குளிசை எடுத்தால் அதின்ரை பக்கவிளைவுகளையும் விக்கனங்களையும் குறைக்கிறதுக்கு இன்னும் மூண்டு குளிசை சேர்த்தெல்லே எடுக்க வேணும்.:(

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை... காலால் மிதிக்க கூடாது என்று, முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா?

  • 2 weeks later...

இன்னும் ஒரு கதை :grin:  இதையும் நம்பத் தயாரான மக்கள் உள்ளனர். 

***

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! 

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! 
விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..! 
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!
இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்..!

***

ஆய்வாளர் வரிக்கு வரி சிரிக்க வைக்கிறார். உச்சக் கட்டமாக வெள்ளிக் கிழமைகளில் பூமி 5டிகிரி ஏறி 3 டிகிரி இறங்குவதாகவும் அந்த நேரத்தில் இரசாயனப் பகுப்பு அதிகம் நடக்கும் என்பதை வாசிக்கத் தலையே வெடிக்கும் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா வாசலில் எழுமிச்சை கட்டிடம் ஆனா கெட்ட கிருமி கொல்லைப்புற வாசல் வழியா வராதா?

  • கருத்துக்கள உறவுகள்

நாரங்காய்யில் இதைவிட citrus உள்ளதே. இதனுடைய சாறு மிகவும் ருசியானது. முன்ணேஸ்வரம் பகுதியில் இம்மரத்தை அதிகமாக காணலாம்.

மேலும் இது பெரியளவில் முக்கியத்துவம் பெறுவதில்லை

Image result for நாரங்காய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für GlücksbringerBildergebnis für hufeisen in wohnung hängen

Bildergebnis für Hufeisen auto

கூடுதலான வெள்ளைக்காரங்கள் பழைய குதிரைலாடத்தை வீட்டுவாசல்லை கட்டிதொங்கவிட்டிருப்பாங்கள்....

இல்லாட்டி வாகனத்திலை முன்னுக்கு கொழுவி விட்டிருப்பாங்கள்...

கேட்டால் ஏதோ அதிஸ்டமாம்.....

அதை கேட்டுட்டு நான் விழுந்து உருண்டு பிரண்டு கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறனான்.:grin:
உலகம் இவ்வளவு முன்னேறியும் இவங்கள் இப்பவும் உந்த மூடநம்பிக்கையளை நம்புறாங்கள்...அய்யொ அய்யொ சொல்லி வேலையில்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

Image result for horseshoes above doorways

Related image

சவாரி வண்டில் மாட்டின் லாடமும் இதே வேலைகளை செய்யுமோ எண்டு கேட்க்கனும்.:unsure:

உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்துவிட்டார் . ஊழ்வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார். 

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல. தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல. 

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, tulpen said:

உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்துவிட்டார் . ஊழ்வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார். 

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல. தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல. 

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

இவர் இப்ப என்ன சொல்ல வாறார்?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இவர் இப்ப என்ன சொல்ல வாறார்?:rolleyes:

அவர் சித்த்னாகிவிட்டார் போல் உள்ளது கதை பேச்சு பார்க்க அப்படித்தான் தெரியிது  நேற்றுவரை நல்லாத்தானே இருந்தார் .????

20 hours ago, பெருமாள் said:

அவர் சித்த்னாகிவிட்டார் போல் உள்ளது கதை பேச்சு பார்க்க அப்படித்தான் தெரியிது  நேற்றுவரை நல்லாத்தானே இருந்தார் .????

ஹா ஹா ஹா கோயிலுக்கு போறதயே  ரைம் வேஸ்ட் என்டு நினைக்கிற் என்னை போய் சித்தர் என்டுகிட்டு. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.