Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

Featured Replies

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

இதனால் சடுதியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி குறித்த நபர்மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்தில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/police-shot-on-eelam-refugee

கிளிநொச்சியை சேர்ந்த கரன் 38 வயது என்பவரே சுட்டு கொல்லபட்டதாக தெரியவருகிறது.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

  • தொடங்கியவர்

சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.

mullaitivu-swiss.jpg

புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது. 

IMG_0656.JPG

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.

IMG_0657.JPG

கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

viber-image.jpg

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். 

இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25476

Edited by நவீனன்

வீரகேசரி என்னவிதமான பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்கின்றது என தெரியவில்லை. கொல்லப்பட்டவரது குடும்பத்தினரின் கவலையையும் கண்ணீரையும் புகைப்படம் எடுத்து வியாபாரம் செய்கின்றது. கேவலமான ஊடக போக்கு இது

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

வீரகேசரி என்னவிதமான பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்கின்றது என தெரியவில்லை. கொல்லப்பட்டவரது குடும்பத்தினரின் கவலையையும் கண்ணீரையும் புகைப்படம் எடுத்து வியாபாரம் செய்கின்றது. கேவலமான ஊடக போக்கு இது

நிழலி தற்போது ஒவ்வொரு பத்திரிகை , இணையத்தளங்கள் வியாபாரம் மட்டுமே செய்கிறது அதாவது புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதும்  சுருக்கமா சொல்ல  போனால் அண்ரொயிட் போண் இருந்தால் ஊடகவியலாளர் விபத்து நடந்தால் கூட முதலுதவி வழங்கப்படாமல் போட்டோ எடுத்த பின்னரே தூக்கிச்செல்கிறார்கள் உடனே முகநூலிலும்  அப்டேற் பண்ணுகிறார்கள் இதுதான் உங்க உள்ள ஊடக தர்மம் 

எங்கையா சொறிலங்கா பொலிசு என்று கூவிற ஆட்களை காணல சுட்டதுல பயத்துல இருக்குறாங்கள் என்னவோ ?? யார் சுட்டாலும் தோட்டாக்கள் பாயும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

இலங்கை / இந்திய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்....
ஐரோப்பிய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்.....
நிறைய வித்தியாசங்கள் உண்டு. :cool:

நீங்களோ எதுவும் அறியாத துர்ப்பாக்கிய நிலையில்........!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

Bildergebnis für 7.5 cm maßband

தனிக்காட்டு  ராஜா....
இங்கு....  சாதாரணமாக  ஒருவர் தன்னுடன்,  நடு விரல் அளவை  விட,  நீளமான கத்தியை (7.5 சென்ரி மீற்றர்)...  தனது கால்சட்டையிலோ.  Ruck Sack போன்ற பைகளிலோ எடுத்துச்  செல்வது  தண்டனைக்குரிய குற்றம். அப்படி கொண்டு செல்வது  பொலிஸாருக்கு தெரிந்து... தகுந்த விளக்கம் கொடுக்கா விட்டால்.... தண்டனைப் பணம் அல்லது நீதிமன்றத்தில்  நிறுத்தி விடுவார்கள்.

துப்பாக்கியால் சுட்டுக்  கொன்ற ஒருவருக்கு கிடைக்கும் தண்டனையை விட...
கத்தியால் குத்திக் கொன்றவருக்கு... கிடைக்கும் தண்டனை மிக அதிகம்.
கத்தியால்... குத்திக் கொல்லப் பட்டவர்  மிகுந்த வேதனையை அனுபவித்தே... இறந்து இருப்பார் என்பதால் இந்த நடைமுறை உள்ளது.

செய்தியில்... உள்ளதன் படி பார்த்தால். // அதன் போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.// 
பொலிஸாரின்   பிடியில் உள்ள அகதிகள்  மீது,  அந்த தமிழ் இளைஞர் இரண்டு கத்திகளை கொண்டு தாக்க முயன்றுள்ளார் போலுள்ளது. தமது பிடியில் உள்ளவருக்கு ஏதாவது நடந்தால்... போலீசார் பல விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால்.... போலீசார் முந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்நிய நாட்டு நடைமுறைகள் தெரியாமல், அந்தத் தமிழர்  பலியாகியது பெரும் சோகம்.
அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேல் உள்ளது லண்டனில் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

மேல் உள்ளது லண்டனில் 

என்ன... பெருமாள், லண்டன் போலீசார்....  அடி  வாங்கிக் கொண்டு, இந்த ஓட்டம்  ஓடுகின்றார்கள்.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன... பெருமாள், லண்டன் போலீசார்....  அடி  வாங்கிக் கொண்டு, இந்த ஓட்டம்  ஓடுகின்றார்கள்.  :unsure:

லண்டனில் 18 வயதுக்கு குறைவான பாடசாலை  பிள்ளைகள் போலிசை தாக்கும் விடியோவை தேடிக்கொண்டு உள்ளன் .

மற்றைய நாட்டு பொலிசை விட லண்டன் போலிசுக்கு  அதிகாரம்கள் குறைவு ஆனாலும் வீதிபாதுக்காப்புக்கு ஆபத்தாய் உள்ள கும்பலை நகரபன்ன முறைப்பாடு பண்ணஅவர்கள் போனில்கேட்ப்பார்கள் ஆபத்தான பொருள் வைத்து இருந்தார்களா ? ஆம் சிறு கத்தி வைத்துள்ளார்கள் என்றால் காணும் ஒன்றுக்கு பத்து வாகனம்களில் வந்து அந்த எரியாவையை ஒரு புரட்டு புரட்டுவார்கள் அப்போது கட்டாயம் கத்தியும் மாட்டுப்படும் .அவர்கள் கேட்க்கும்போது கத்தி இல்லை காணவில்லை என்றால் படத்துள் இருக்கும் போலிஸ வரும் கடைசியில் அந்த கும்பலை கலைக்க படாத பாடு படும் .

இந்த சம்பவத்தில் போலிசை கூட்டிக்கொண்டு போனவர்கள் எப்படியானவர்கள் என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இலங்கை / இந்திய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்....
ஐரோப்பிய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்.....
நிறைய வித்தியாசங்கள் உண்டு. :cool:

நீங்களோ எதுவும் அறியாத துர்ப்பாக்கிய நிலையில்........!tw_blush:

துப்பாக்கி பிரயோகம் செய்ய வித்தியாசம்  இருக்கலாம் இலங்கை இந்திய நாடு போல் ஐரோப்பிய நாடுகள் இல்லையே பிறகெப்படி ஒருவரை சுடலாம்.  நான் அறிந்தது இந்த நிலைக்காகவே நான் எழுத வந்தேன் அகதி அந்தஸ்து கோரிய ஒரு அகதி இரு பிள்ளைகளின் தகப்பன்  என்ற வகையிலும் இதுவே  இலங்கையென்றால் எப்படி இங்கே இந்த திரியில் பொங்கியிருப்பார்கள் என  இனி அந்த குடும்பம் நிலை உதவியென காசை பெற்றுக்கொடுக்கலாம் ஆனால் உயிர் வராதே ஆழ்ந்த அனுதாபங்கள்  ஐரோப்பிய நாட்டில் மனித உரிமை மதிக்கப்படுகின்ற நாடு மனிதனை மதிக்கின்ற நாடு எனவும் நான் நினைத்து இருந்தேன் ஆனால் நடந்தது வேறு  நானும் அறியாத துர்ப்பாக்கிய நிலமை போல் அவர்கள் குடும்பமும் பேட்டி கொடுத்து அந்த நிலையை அறிய முடியாமல் அழுதுகொண்டிருக்கிறது  அவர் செய்தது குற்றம் என்றால் அந்த பொலிஸ் செய்ததும் அதை விட குற்றமே

ஆனாலும் இலங்கை  பொலிசார் செய்த இந்த செயல் யாழிணைய செய்தியில்   வரவில்லை என்றாலும் சொல்லியாகவே வேண்டும் 

,#யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார்.

சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது கணவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மழலை கிடைக்கவுள்ள சந்தோசத்திலும் தனது மனைவியின் வேதனையை கண்டு பதைபதைத்து அந்த நிசப்த நேரத்தில் தனது ஊரிலுள்ள முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அழைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளார்.

ஓட்டோவும் இருவரையும் சுமந்தவாறு யாழ்.போதனா வைத்தியசாலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென அந்த முச்சக்கர வண்டி இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் நின்றுள்ளது. சாரதியும் தன்னால் இயலுமானவரை அதனை மீளியக்க முயன்று தோற்றுப்போக அவர்களது வைத்தியசாலை நோக்கிய பயணம் கேள்விக் குறியானதுடன் குறித்த பெண்ணின் பிரசவமும் மரணத்தின் தறுவாய்க்கு சென்றது.

அப்போதுதான் ஆபத்பாண்டவராக வட்டுக்கோட்டையின் பாதுகாப்பை கண்காணித்து தமது வாகனத்தில் தற்செயலாக குறித்த முச்சக்கர வண்டியருகே பொலிஸாரது வாகனம் சென்றடைந்தது. அப்போதுதான் அந்த பரிதவிப்பை கண்டுள்ளார் வட்டுக்கோட்டை பிரதேச பொலிஸ் அதிகாரி.

கண்டிப்பான தனது கடடையிலும் மனிதாபிமானத்தை கையிலெடுத்த அந்த அதிகாரி சடுதியாக தனது வாகன சாரதிக்கு குறித்த பெண்ணை ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பாக தனது இரண்டு பொலிஸாரையும் கூடவே அனுப்பிவைத்துள்ளார் அந்த பொறுப்பு மிக்க பொலிஸ் அதிகாரி.

படங்கள் இருக்கிறது தேவையானால் இணைக்கலாம் 

5 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für 7.5 cm maßband

தனிக்காட்டு  ராஜா....
இங்கு....  சாதாரணமாக  ஒருவர் தன்னுடன்,  நடு விரல் அளவை  விட,  நீளமான கத்தியை (7.5 சென்ரி மீற்றர்)...  தனது கால்சட்டையிலோ.  Ruck Sack போன்ற பைகளிலோ எடுத்துச்  செல்வது  தண்டனைக்குரிய குற்றம். அப்படி கொண்டு செல்வது  பொலிஸாருக்கு தெரிந்து... தகுந்த விளக்கம் கொடுக்கா விட்டால்.... தண்டனைப் பணம் அல்லது நீதிமன்றத்தில்  நிறுத்தி விடுவார்கள்.

துப்பாக்கியால் சுட்டுக்  கொன்ற ஒருவருக்கு கிடைக்கும் தண்டனையை விட...
கத்தியால் குத்திக் கொன்றவருக்கு... கிடைக்கும் தண்டனை மிக அதிகம்.
கத்தியால்... குத்திக் கொல்லப் பட்டவர்  மிகுந்த வேதனையை அனுபவித்தே... இறந்து இருப்பார் என்பதால் இந்த நடைமுறை உள்ளது.

செய்தியில்... உள்ளதன் படி பார்த்தால். // அதன் போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.// 
பொலிஸாரின்   பிடியில் உள்ள அகதிகள்  மீது,  அந்த தமிழ் இளைஞர் இரண்டு கத்திகளை கொண்டு தாக்க முயன்றுள்ளார் போலுள்ளது. தமது பிடியில் உள்ளவருக்கு ஏதாவது நடந்தால்... போலீசார் பல விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால்.... போலீசார் முந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்நிய நாட்டு நடைமுறைகள் தெரியாமல், அந்தத் தமிழர்  பலியாகியது பெரும் சோகம்.
அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

ம் ஓரளவு சட்ட திட்டங்கள் அறிவேன் இருந்தாலும் ரபர் தோட்டாக்கள் , காலுக்கு கீழ் சுடும் சட்டங்கள் இருக்கின்ரனவா இல்லையா ஐரோப்பிய நாட்டில்  நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு  பொலிசாரால் கத்தி வைத்திருப்பவரை சமாளிக்க முடியாதென்பதும் இறந்தவரின் துரதிஸ்ரமே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிபதை தவிர ஒன்றுமில்லை.

லண்டனில் கூட சில மாதங்களுக்கு முன் ஒருவருக்கு தண்டனை கொடுத்தது என நினைக்கிறேன் ஏதோ காதல் தகராற்றில் நடந்த கொலைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

Asylwerber erschossen: Polizei verteidigt sich

Infolge einer bedrohlichen Situation hat ein Polizist in Brissago, Schweiz, einen Asylsuchenden erschossen. Die Polizei hat nun über den Vorfall informiert.

In der Tessiner Grenzgemeinde Brissago hat ein Polizist während eines Einsatzes in der Nacht einen Asylsuchenden erschossen.

Der 38-jährige Mann aus Sri Lanka war mit zwei Messern bewaffnet. Die Tessiner Behörden verteidigen das Vorgehen des Polizisten.

"Es gab für den Polizisten keine andere Handlungsmöglichkeit in dieser Situation", betonte Matteo Cocchi, Kommandant der Tessiner Kantonspolizei, am Samstagnachmittag vor den Medien in Noranco. Es sei ein Moment großer Gefahr gewesen. Rückendeckung erhielt der Polizist auch vom zuständigen Regierungsrat Norman Gobbi, der mit Cocchi vor die Medien trat.

Mit Messer herumgefuchtelt

Dem Einsatz war ein Streit vorausgegangen. Die Polizei wurde kurz vor 2 Uhr nachts wegen einer Auseinandersetzung unter mehreren Personen alarmiert. Mehrere Polizisten begleiteten zwei Asylsuchende aus Sri Lanka in ein Gebäude, wo sich ihnen eine "noch nicht geklärte" Situation bot.

Laut den Behörden stürmte daraufhin ein dritter Asylsuchender auf die beiden Asylbewerber ein, welche die Polizisten begleiteten. Der 38-jährige Mann, der ebenfalls aus Sri Lanka stammte, fuchtelte mit zwei Messern herum. Einer der Polizisten feuerte mit seiner Pistole auf den Angreifer.

Dies sei zum Schutz aller Anwesenden geschehen, schreibt die Tessiner Polizei. Die Kugel verletzte den Asylsuchenden so schwer, dass er noch vor Ort verstarb. Die anderen Beteiligten wurden nicht verletzt. Das Motiv für das aggressive Verhalten des 38-jährigen Sri Lankers ist laut Cocchi noch unbekannt.

In dem privaten Gebäude sind gemäß seinen Angaben rund ein Dutzend Asylsuchende aus Sri Lanka seit mehreren Jahren untergebracht. Es steht direkt neben dem Rathaus von Brissago.

Polizist befragt
Die Staatsanwaltschaft hat eine Untersuchung eingeleitet und klärt namentlich ab, ob der Polizist zur Verantwortung gezogen wird. Auch die kriminaltechnischen Ermittlungen sind am Samstag aufgenommen worden. Um Neutralität zu garantieren, sind Spezialisten aus dem Kanton Zürich damit beauftragt worden.

Der Polizist, der geschossen hatte, sowie weitere beteiligte Personen sind mündlich befragt worden. Aufgrund der Erkenntnisse hätten sich keine Maßnahmen gegen die Befragten aufgedrängt, schreibt die Polizei.

(20 Minuten)

இரவு இரண்டு மணி அளவில் மற்றைய இலங்கைத் தமிழர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மற்றையவர்கள் போலீசாரை அழைத்துள்ளனர் போலீசார் இவருடன் தகராறில்  சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றுள்ளனர்.
இறந்தவர் இரண்டு கத்திகளுடன் எவரையும் தாக்கும் நிலையில் கத்தியைச் சுழற்றிக் கொண்டு முன்னேறியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றின்படி அவர்களுக்கு வேறு இந்தத் தெரிவும் அப்போது இருக்கவில்லை.
பலருடைய உயிரைக் காப்பாற்ற அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி மீது விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது
போலீசாரும் அந்த இடத்தில் இருந்தவர்களும்  ( தமிழர்களும்) விசாரிக்கப்பட்டுள்ளனர். 

image.png

image.png

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஓரளவு சட்ட திட்டங்கள் அறிவேன் இருந்தாலும் ரபர் தோட்டாக்கள் , காலுக்கு கீழ் சுடும் சட்டங்கள் இருக்கின்ரனவா இல்லையா ஐரோப்பிய நாட்டில்  நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு  பொலிசாரால் கத்தி வைத்திருப்பவரை சமாளிக்க முடியாதென்பதும் இறந்தவரின் துரதிஸ்ரமே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிபதை தவிர ஒன்றுமில்லை.

லண்டனில் கூட சில மாதங்களுக்கு முன் ஒருவருக்கு தண்டனை கொடுத்தது என நினைக்கிறேன் ஏதோ காதல் தகராற்றில் நடந்த கொலைக்கு 

ரொராண்டோ பேருந்து ஒன்றில் ஒரு சிரியா பெடியன் சின்ன கத்தியை காட்டினான் என்று ஒரு பொலீஸ்காரர் சுட்டு கொன்றுவிட்டார்.. அதாவது ஆறு தரம் சுட்டார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

ரொராண்டோ பேருந்து ஒன்றில் ஒரு சிரியா பெடியன் சின்ன கத்தியை காட்டினான் என்று ஒரு பொலீஸ்காரர் சுட்டு கொன்றுவிட்டார்.. அதாவது ஆறு தரம் சுட்டார். :rolleyes:

தகவலுக்கு நன்றி சிரியா என்றதும் சில நேரம் சுட்டிருப்பார்கள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களை சுடுவது போல் இருக்குமென நினைக்கிறன் கல் எறிந்தற்க்காக சுட்ட சம்பவங்களும் உண்டு இசை  எல்லைப்பகுதியில் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
On 08/10/2017 at 12:11 PM, தனிக்காட்டு ராஜா said:

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

எவ்வளவு ஆத்திரப்பட்டாலும், மன அழுத்தம் சார்ந்த நெருக்கடிக்குள் இருந்தாலும் வெறுங்கையோடு நிற்கும் போது பாதுகாப்பு அதே கத்தியோ கல்லோ பொல்லோ துவக்கோ எதை தூக்கினாலும் அவரை எதிர்கொள்ளும் அணுகுமுறை மாறிவிடுகின்றது. உதாரணமாக இரவில் டோர்ச் லைற்றுடன் செல்லும்போது ஒருவர் தாக்கும் போது லைற்றின் முன்பகுதியால் அதை தடுத்தால் தற்பாதுகாப்பு அதே லைற்றை திருப்பி பின்பகுதியால் அடித்தால் குற்றம். அதற்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

தகவலுக்கு நன்றி சுவைப்பிரியன் தமிழனுக்கு தோட்டாக்கள் மட்டுமே பதில் சொல்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தகவலுக்கு நன்றி சிரியா என்றதும் சில நேரம் சுட்டிருப்பார்கள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களை சுடுவது போல் இருக்குமென நினைக்கிறன் கல் எறிந்தற்க்காக சுட்ட சம்பவங்களும் உண்டு இசை  எல்லைப்பகுதியில் :unsure:

அதில் விசயம் என்னவென்றால் அந்த பெடியன் நின்றது பேருந்துக்கு உள்ளே. எல்லோரும் இறங்கிவிட்டார்கள். ஒரு தரம் சுட்டால் வேறு விடயம். ஆனால் பல தடவை சுட்டார். காணொளி கீழே.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம். :unsure:

https://www.youtube.com/watch?v=Pi4In494rAg

இது ஒரு வகையான Adrenaline rush + இனவெறி என நினைக்கிறேன்.. :unsure: 

இதுக்குத்தான் சொல்வது.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சுதந்திரமான தாய்நாட்டில்) எல்லாம் செளக்யமே..tw_cry:

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

On 9.10.2017 at 9:00 PM, சுவைப்பிரியன் said:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

சுவிஸ் பொலிஸ் இவ்வடயத்தில் தவறு இழைத்தாரகளோ இல்லையோ நிச்சயமாக அந்த தமிழர் மீது உள்ள  இனவெறுப்பினால் அதாவது துவேசத்தினால் சுட்டிருக்க மாட்டாரகள்.  இந்த சிறு சம்பவத்தையும் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா பொலிசார் மற்றும் முப்படையினரும் செய்த  கொடுமைகளையும்  ஒரே தட்டில் போட்டு சமப்படுத்தும்  முட்டாள்தனத்தை நினைத்து  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?  

இரண்டிற்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசததை உணர விசேட அறிவு தேவையில்லை. சாதாரணமாக உடல் மன ஆரோககியம் கொண்ட எலலா மனிதராலும் இதை உணர முடியும்.( every healthy human being knows that)

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  TULPEN.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

அதே போல கூலிக்கு எவனோ இலங்கையில் கஞ்சா கடத்தை இலங்கை பொலிசார்தான் துணை என்று சொல்லும் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் , அறிவாளிகளையும் இதற்குள்ள சேர்த்துக்கொள்ளுங்க ஊரில  காசுக்கு என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் ...................................................................................... புத்தி ஜீவிகளுக்கும் சொல்லி விடுங்கோ அவங்க நினைக்கிற மாதிரி இலங்கையும்  இல்லை ஈழமும் இல்லை , ஈழத்தமிழர்களும் இல்லையென்று  எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை மாட்டிக்கிட்டவன் நல்லவன் மாட்டாதவரைக்கும் நல்லவன் இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்  

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

சுவிஸ் பொலிஸ் இவ்வடயத்தில் தவறு இழைத்தாரகளோ இல்லையோ நிச்சயமாக   முட்டாள்தனத்தைஅந்த தமிழர் மீது உள்ள  இனவெறுப்பினால் அதாவது துவேசத்தினால் சுட்டிருக்க மாட்டாரகள்.  இந்த சிறு சம்பவத்தையும் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா பொலிசார் மற்றும் முப்படையினரும் செய்த  கொடுமைகளையும்  ஒரே தட்டில் போட்டு சமப்படுத்தும் நினைத்து  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?  

இரண்டிற்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசததை உணர விசேட அறிவு தேவையில்லை. சாதாரணமாக உடல் மன ஆரோககியம் கொண்ட எலலா மனிதராலும் இதை உணர முடியும்.( every healthy human being knows that)

நன்றி துல்பன் உங்கள் விளக்கத்திற்க்கு.:)

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதே போல கூலிக்கு எவனோ இலங்கையில் கஞ்சா கடத்தை இலங்கை பொலிசார்தான் துணை என்று சொல்லும் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் , அறிவாளிகளையும் இதற்குள்ள சேர்த்துக்கொள்ளுங்க ஊரில  காசுக்கு என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் ...................................................................................... புத்தி ஜீவிகளுக்கும் சொல்லி விடுங்கோ அவங்க நினைக்கிற மாதிரி இலங்கையும்  இல்லை ஈழமும் இல்லை , ஈழத்தமிழர்களும் இல்லையென்று  எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை மாட்டிக்கிட்டவன் நல்லவன் மாட்டாதவரைக்கும் நல்லவன் இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்  

இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் இலங்கை பொலிசாரின் வண்டவாளம் தெரியும்.சமீபததில் வித்தியா கொலையின் முக்கிய குற்றவாளியையே தப்ப வைக்க பொலிஸ் உத்தியோகததர் முயன்றதும் தெரியும்.லஞ்சததில் திளைபபதும் குறறவாளிகளுககு உறுதுணை புரிவதும் ஒன்றும் இரகசியம் அல்ல. ஆனால் எதிர்காலத்தில் இலங்கை பொலிசாரும் நேர்மையான காவல்துறையாக மாற வேண்டும் என்ற தங்களின் விருப்பததை பாராட்டுகிறேன். எனது விருபபும் அதுவே. எமது அடுத்த தலைமுறையிலாவது இலங்கை பொலிசார் நேர்மையான பொலிசாராக மாறுவார்கள் என்று நம்புவோம். (அதாவது எமது பாட்டனார் நம்பியது போல)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.