Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

Featured Replies

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இந்து சமய மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

http://inioru.com/நெற்றியில்-விபூதியுடன்/

உலகம் முழுவதும் கோவில் கட்டி தேர் இழுக்கும் மக்களுக்கு இது சமர்பணம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Dash said:

உலகம் முழுவதும் கோவில் கட்டி தேர் இழுக்கும் மக்களுக்கு இது சமர்பணம்

ஏன் சார் பக்கத்து நாட்டு ஹிந்து வெறியர்களுக்கு இதை சொல்லுங்க சார் அவங்க ஓட்டு இயந்திரத்தை கக்கிங் பண்ணுவதில் மும்முரமாய் இருக்காங்க  போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, Dash said:

உலகம் முழுவதும் கோவில் கட்டி தேர் இழுக்கும் மக்களுக்கு இது சமர்பணம்

எனக்கும் என் குடும்பத்துக்கு மட்டும்  என்று நினைக்கும் ஒரு அரசியலின் மத்தியில் யார் என்ன செய்ய முடியும்?

sampanthan-45_zpsbwg2ndcb.jpg

6 hours ago, பெருமாள் said:

ஏன் சார் பக்கத்து நாட்டு ஹிந்து வெறியர்களுக்கு இதை சொல்லுங்க சார் அவங்க ஓட்டு இயந்திரத்தை கக்கிங் பண்ணுவதில் மும்முரமாய் இருக்காங்க  போல் உள்ளது .

அவர்களிடம் ஏன் கூறவேண்டும், அங்கு இருப்பது எமது இனம் நாம் தான் எமக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

6 hours ago, குமாரசாமி said:

எனக்கும் என் குடும்பத்துக்கு மட்டும்  என்று நினைக்கும் ஒரு அரசியலின் மத்தியில் யார் என்ன செய்ய முடியும்?

sampanthan-45_zpsbwg2ndcb.jpg

இவரைய் நம்பிஏதாவது பிரியோடனம் இருக்கா ???

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்க மாட்டார்கள் ஆனால் தமிழ் பாடசாலையில் இஸ்லாம் கற்பிக்க வேண்டும்.

என்ன கொடுமை இது?

இப்படியான பிள்ளைகளின் தொடர்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம் பாடசாலைகளில் தமிழ் படிப்பித்தார்கள் எப்படி..........??:103_point_down:

"அப்பா அப்பா என்று வாப்பாக்குச் சொல்கிறது."

"அம்மா அம்மா என்று உம்மாக்குச் சொல்கிறது."

நான் 8ஆம் வகுப்புவரை படித்ததும் இப்படியான ஒரு பள்ளிக் கூடத்தில்தான்.மொத்தப் பாடசாலையிலும்  சைவ மாணவர்களை விரல் விட்டு எண்ணலாம். எனது வகுப்பில் நான் மட்டும்தான் சைவம். வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசலுக்குப் போவது தவிர காலையில் ஓதுவதிலிருந்து இஸ்லாம் பாடங்கள் வரை எல்லாம் அவர்களுடந்தான். இஸ்லாமா சைவமா உயர்ந்தது என்று அடிக்கடி எனக்கும் அவர்களுக்கும் வாதம் நடக்கும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். அதேநேரம் இஸ்லாமியப் பாடங்களில் மதத் துவேசம் நிறைந்து கிடந்தது அப்போது பாரதூரமானதாகத் தெரியவில்லை.

நான் நாலாம் வகுப்பு வரை படித்தது குருணாகல் சாகிரா பாடசாலையில். இப்பவும் காலையில் சொல்லும் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' பாடலை நினைவுபடுத்தி பாட முடியும் என்னால்.

அப்பா அரச சேவையில் முக்கிய பொறுப்பில் இருந்தமையால் எனக்கு சைவ புத்தகம் ஒவ்வொரு வருடமும் கிடைத்தது. ஆனால் படிப்பிக்க ஆரும் இருக்கவில்லை. அதே நேரம் இஸ்லாம் படிக்கும் தேவையும் வரவில்லை.

எண்ணையும் எழுத்தையும் படிப்பித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். என் ஆரம்ப கல்வியை இஸ்லாமிய ஆசிரியர்களே படிப்பித்தார்கள். இன்றும் நான் அவர்களை பெருமையுடன் நினைத்து பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று முசுலீம் பாடசாலைகளில் அனேகமாகக் கணக்கு, கலைகள், விளையாட்டுகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

30 அல்லது 35 வ‌ருடங்களுக்கு முன்பு இலங்கை முஸ்லீம் மக்களிடம் இப்பொழுது இருப்பதுபோல் மதவாதம் / அடிப்படைவாதம் இருக்கவில்லை. இப்பொழுது அப்படியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, colomban said:

30 அல்லது 35 வ‌ருடங்களுக்கு முன்பு இலங்கை முஸ்லீம் மக்களிடம் இப்பொழுது இருப்பதுபோல் மதவாதம் / அடிப்படைவாதம் இருக்கவில்லை. இப்பொழுது அப்படியல்ல.

இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலும் 30/40 வருடங்களுக்கு முன் இப்படி மதவாதம் இருந்ததில்லை என நினைக்கின்றேன்..இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தவிர....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

நான் 8ஆம் வகுப்புவரை படித்ததும் இப்படியான ஒரு பள்ளிக் கூடத்தில்தான்.மொத்தப் பாடசாலையிலும்  சைவ மாணவர்களை விரல் விட்டு எண்ணலாம். எனது வகுப்பில் நான் மட்டும்தான் சைவம். வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசலுக்குப் போவது தவிர காலையில் ஓதுவதிலிருந்து இஸ்லாம் பாடங்கள் வரை எல்லாம் அவர்களுடந்தான். இஸ்லாமா சைவமா உயர்ந்தது என்று அடிக்கடி எனக்கும் அவர்களுக்கும் வாதம் நடக்கும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். அதேநேரம் இஸ்லாமியப் பாடங்களில் மதத் துவேசம் நிறைந்து கிடந்தது அப்போது பாரதூரமானதாகத் தெரியவில்லை.

அப்படியிருந்தும் இணையவன் மதம் மாறாமல் இருக்கின்றார் அதே போன்று அந்த சிறுவனும் இஸ்லாம் படித்தாலும் சைவனாக வாழ்வான்.

ஆங்கிலம் படித்து தமிழனாக வாழும் புலம்பெயர்ந்த எம் வாரிசுகளை போன்று....

அங்கு ஒரு சிலர் ஆனால் புலம் பெயர்ந்த பிரதேசத்தில் அடுத்த சந்ததி மொழியை மறந்து தான் வாழப்போயினம்......

8 hours ago, putthan said:

இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்குச் சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கிறது. 

ஒரு மதத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இன்னொரு மதம் சக மனிதனாக ஏற்றுக் கொள்ளும் என்றால் அதில் குறை பிடிப்பதற்கு எமக்குத் தகுதியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, இணையவன் போலவே எனது அனுபவங்களும்.
கம்பளை சாஹிராவில் படிக்கும் காலங்களில் சைவ சமயம் ஒரே ஒரு வருடம் தான் படித்த ஞாபகம்.
அதுவும் சங்கீத டீச்சர் எங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போய் இசை கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையில் வைத்து சில தேவாரங்கள், சமயக் குறவர்கள் அவர்கள் கதைகள் என படிப்பித்த ஞாபகம்.
நான் அப்போதெல்லாம் திருக்  குரானின் பல பக்கங்களை அராபிக்கிலே வாசிப்பேன்.
அது தவிர அரபிக் எழுத்துக்களில் எனக்கு ஒரு ஈர்ப்பு ...வளைந்தும் , நெளிந்தும், சுருண்டும் எந்த எழுத்தை பார்த்தாலும் ஒரு நவீன ஓவியம் போல தோற்றமளிக்கும். மிகவும் ஈடுபாடோடு அவற்றை சித்திரமாய் வரைவேன்.  
எனக்கு தெரிய அவர்கள் இஸ்லாத்தை படி என்று வற்புறுத்தவும் இல்லை..
சைவ சமயத்தை படி என்று தட்டிக்கொடுக்கவும் இல்லை.
கொழும்பான் சொன்னது போல சில வேளைகளில் கால ஓட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் மனதில் பாரிய விரிசல் வளர்ந்து விட்டது என்றே நினைக்கிறன்.
    
  • கருத்துக்கள உறவுகள்

இங்கபாருங்கோவன்..இங்க மட்டும் என்ன நடக்குதாம்? :unsure:

நான் முன்னே பதிவு செய்து இருக்கிறேன்.

இங்கிலாந்தில் GCSE (ஓ/எல் ) RE (Religions Education)பரீட்ச்சையில், இந்து சமய பரீட்ச்சையை தவிர்த்து, இஸ்லாமிய பாடப் பரீடசையினை சில தமிழ் மாணவர்கள் எடுக்கின்றனர். இலகுவாக A* எடுக்கலாம் என்ற காரணத்தால்.

மேலும் இங்கு இந்து சமய பாடத்திட்டம், ஒரு தெளிவில்லாத, முழுமை இல்லாத ஓன்றாக இருப்பதும் ஒரு காரணம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

மேலும் இங்கு இந்து சமய பாடத்திட்டம், ஒரு தெளிவில்லாத, முழுமை இல்லாத ஓன்றாக இருப்பதும் ஒரு காரணம்...

இதை சொன்னால் குழப்பவாதி எனும் பட்டம் குடுத்து ஆளுக்கு காத்து புடுக்கி விடுவினம் .இந்து சமயம் பாடத்தை விடுங்கோ தமிழ் பாடம் எல்லாத்தையும் விட கொடுமை இப்பவே தமிழ் வகுப்புகளுக்கு பிள்ளைகளை கொண்டு போகும்போது சித்திரவதை கூடத்துக்கு கொண்டு போவது போல் முகத்தை வைச்சிருக்கினம் கேட்டால் நாங்கள் ஊரில் படித்த தமிழைவிட கடுமையாக்கி சொல்லி குடுக்கிறார்கள் என்று பலரின் நிலைப்பாடு இப்பவே இப்படி என்றால் அடுத்த தலைமுறை தமிழ் ஆர்வமாய் படிக்காது என்று 100வீதம் உறுதியாய்  கூறமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

அங்கே ஒரு வாரம் படித்ததை, ஒரு சனியன்று, ஒரு மணி நேரத்தில் படிப்பதென்றால் ?

இந்து சமையத்தினை, குழப்பி அடித்து வைத்தவர்கள், கென்யா, உகாண்டாவில் இருந்து வந்து இந்தியர்ககள். அவர்களின் அரை வேக்காட்டு இந்து மத அறிவு.

ஒரு பாடப் புத்தகத்தில், லண்டன் விம்பிள்டன் கோவிலில் நடக்கும் ஒரு கலியாண படம்...  இங்கே இந்துக்கள் கலியாணம் செய்கிறார்கள்.

இவர் தான் அய்யர். கலியாணம் செய்து வைக்கிறார்...மணமக்கள் இனி சந்தோசமாக வாழ்வார்கள்... 

கிழிஞ்சுது போங்கோ.... tw_cry:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2017 at 2:43 PM, இணையவன் said:

நான் 8ஆம் வகுப்புவரை படித்ததும் இப்படியான ஒரு பள்ளிக் கூடத்தில்தான்.மொத்தப் பாடசாலையிலும்  சைவ மாணவர்களை விரல் விட்டு எண்ணலாம். எனது வகுப்பில் நான் மட்டும்தான் சைவம். வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசலுக்குப் போவது தவிர காலையில் ஓதுவதிலிருந்து இஸ்லாம் பாடங்கள் வரை எல்லாம் அவர்களுடந்தான். இஸ்லாமா சைவமா உயர்ந்தது என்று அடிக்கடி எனக்கும் அவர்களுக்கும் வாதம் நடக்கும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். அதேநேரம் இஸ்லாமியப் பாடங்களில் மதத் துவேசம் நிறைந்து கிடந்தது அப்போது பாரதூரமானதாகத் தெரியவில்லை.

On 20/12/2017 at 2:56 PM, நிழலி said:

நான் நாலாம் வகுப்பு வரை படித்தது குருணாகல் சாகிரா பாடசாலையில். இப்பவும் காலையில் சொல்லும் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' பாடலை நினைவுபடுத்தி பாட முடியும் என்னால்.

அப்பா அரச சேவையில் முக்கிய பொறுப்பில் இருந்தமையால் எனக்கு சைவ புத்தகம் ஒவ்வொரு வருடமும் கிடைத்தது. ஆனால் படிப்பிக்க ஆரும் இருக்கவில்லை. அதே நேரம் இஸ்லாம் படிக்கும் தேவையும் வரவில்லை.

எண்ணையும் எழுத்தையும் படிப்பித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். என் ஆரம்ப கல்வியை இஸ்லாமிய ஆசிரியர்களே படிப்பித்தார்கள். இன்றும் நான் அவர்களை பெருமையுடன் நினைத்து பார்க்கின்றேன்.

மட்டர்களுக்கு எல்லாம் மட்டமாக தான் இந்து, இஸ்லாமிய மத அறிவு போல கிடக்குது. 

:grin: 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லீமுடன்,  மதவாதமாவது மண்ணாங்கட்டியாவது என்று சகஜமா பழகினேன்... ஒரு சில வாரம்தான், ஆரம்பிச்சிட்டார் மனுஷன்  குரான் அது இது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையுமே படைத்தவன் ஒருவனே ,அது அல்லாஹ்தான் என்றார்.

அதைவிட நபிகள்நாயகம் சல்லலாவு சல்லமோ பிரகாஷ்ராஜ் சொல்றமாதிரி செல்லமோ ஏதோ ஒருத்தர் சொன்ன திருவாக்கியங்கள்,எடுத்துக்காட்டுகள்னு ஆரம்பிப்பார், அவை எந்த வடிவில் இருக்குமென்றால்

‘நபிகள் நாயகம் ஒருநாள் வெளியே போனார்கள் மழை வந்தது உடனே குடையை விரித்தார்கள் ஆதாரம்: சொல்லுவார்

அவரின் அம்மாவுக்கு ஒருநாள் வியர்த்தது காலடியில் இருந்து விசிறிவிட்டார்கள் ஆதாரம்....சொல்லுவார்

இஸ்லாம் பெண்களை உயர்வாக மதிக்கிறது மரியாதை செய்கிறது என்று என்னோட கதைச்சுக்கொண்டே  கடந்து செல்லும் பெண்களை பின்னாடி பார்ப்பார்...

எதிரில் இருப்பவன் வேற்றுமதக்காரன், அவனுக்கும் உணர்வுகள்,நம்பிக்கைகள்,வழிபாட்டுமுறைகள்னு ஏதும் இருக்குமே, நாங்கள் அந்த இடத்தில் பொதுவான விஷயங்களை பேசவேண்டும் என்ற குற்ற உணர்வு ஏதுமில்லாமே போய்கிட்டு இருப்பார்,

அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரி என்பார், அதுக்கு அப்புறம் ஐஎஸ்-ஐஎஸ் பிரச்சனைபத்தி வலிந்து ஆரம்பிப்பார், அவர்கள் யூதகூலிகள், முஸ்லீம்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே அவர்களால் உருவாக்கப்பட்டது என்பார், அமெரிக்காவில் மிகவேகமாக அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அதனை தழுவுகிறார்கள் 2030இல் அமெரிக்காவில் முஸ்லீம்களே பெரும்பான்மை என்பார்...

முழு உலக முஸ்லீம்களுக்கு எதிரான யூதர்கள் ஆரம்பித்த ஒரு இயக்கத்தில் இஸ்ரேலை அடியோடு வெறுக்கும் முஸ்லீம்கள் ஏன் போய் சேர்கிறார்கள் என்று கேட்டேன்...

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவுது என்றால் அமெரிக்கா எப்படி உங்களுக்கு எதிரியாகும்?

உலகில் முஸ்லீம்களின் மிக நெருங்கிய நண்பனா இருக்கவேண்டுமே என்றும் கேட்டேன்...

அடுத்தமத பெண்களின் உடையலங்காரத்தை அசிங்கம் அசிங்கமா விமர்சிக்கும் அவரை...

அரை நிர்வாணமாக பெண்கள் அலையும் அமெரிக்காவுக்கு, டிரம்ப் இங்கே நீங்கள் வராதீர்கள் என்று தடைபோட்டும் அமெரிக்காவுக்கு போகணும் என்று படை எடுக்கிறீங்களே அது ஏன் என்றேன்...

என்னோடு பேச்சை குறைத்துக்கொண்டார், எதிரே எங்காவது சந்தித்துக்கொண்டால் மறுபக்கம் முகத்தை திருப்பி துப்பிவிட்டு செல்வார்...

அத்துடன் அவருடனான எனது மத நல்லிணக்கம் முடிவுக்கு வந்து  சில மாதங்கள் ஆச்சு.

அவர்களை பொறுத்தவரை பள்ளிக்கூடமும், பள்ளிவாசலும் ஒன்றேதான்,தங்களுடைய மதம்பற்றி விளக்கங்கள் அள்ளிவிடுவார்களே தவிர பிறமதங்களிருந்து சிறு துரும்பைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அதுக்காகதான் இதை சொன்னேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2017 at 1:21 AM, இணையவன் said:

இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்குச் சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கிறது. 

ஒரு மதத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இன்னொரு மதம் சக மனிதனாக ஏற்றுக் கொள்ளும் என்றால் அதில் குறை பிடிப்பதற்கு எமக்குத் தகுதியில்லை.

ஆனால் இணையவன் எந்த மதத்திலும் சமனாக சக மனிதனை பார்த்ததாக சரித்திரம் இல்லை சலுகைகள் கொடுக்கப்ப்ட்டு தம் மதங்களுக்கு ஆட்களை சேர்ப்பார்கள் ஆனால் பிறகு அவர்களையும் புறக்கணிப்பார்கள் பொருளாதார றீதியாக.....இன்றைய மத்திய கிழக்கு சிறந்த உதாரணம் ஒரே மதத்தினர் ஆயுதரீதியாக தங்களுக்குள் அடிபட்டு கொள்வது......இந்தியா அடுத்த உதாரணம்.....சிறிலங்கா.....

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2017 at 2:52 AM, Sasi_varnam said:

.
கொழும்பான் சொன்னது போல சில வேளைகளில் கால ஓட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் மனதில் பாரிய விரிசல் வளர்ந்து விட்டது என்றே நினைக்கிறன்.
    
அன்று இருந்த இஸ்லாமியருக்கும் இன்றைய இஸ்லாமியர்களுக்கும் பாரிய வேறுபாடு ....இன்று இஸ்லாம் சர்வதேச‌ பணபலத்துடனும் அரசியல் செல்வாக்குடனும் திகழ்கிறது .....அன்று கிறிஸ்தவம் இருந்த நிலையில் இஸ்லாம் இன்று 

  • கருத்துக்கள உறவுகள்

90 களுக்கு பிறகு இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பல அடிப்படைவாத கொள்கைகளை கொண்ட குழுக்கள் ஊடுருவியுள்ளனன. இவர்களில் பலர் ஐசிஸ் போன்ற தீவீரவாத்தி கோட்பாட்டை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். இத்தகையா அடிப்படைவாத குழுக்கள் பல ஜமாத்தாக தாங்களுக்குள் பிரிந்து பலரை தாங்கள் வசப்படுத்தி கொள்கின்றார்கள். கூடுதலாக இவற்றை கிழக்கு மாகாணப்பகுதியில் காணலாம். 

ஹாப்பி x-mas / new year என்றால் கூட திரும்ப பதில் சொல்ல மாட்டார்கள். அல்லா   கோவித்துகொள்வாராம். பல பெண்கள் அமைப்புக்கள் இலங்கை முஸ்லீம் திருமண சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என குரல் கொடுக்கின்றார்கள் ஆனால் இந்த முல்லாக்கள் விடுவதில்லை.

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, valavan said:

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லீமுடன்,  மதவாதமாவது மண்ணாங்கட்டியாவது என்று சகஜமா பழகினேன்... ஒரு சில வாரம்தான், ஆரம்பிச்சிட்டார் மனுஷன்  குரான் அது இது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையுமே படைத்தவன் ஒருவனே ,அது அல்லாஹ்தான் என்றார்.

அதைவிட நபிகள்நாயகம் சல்லலாவு சல்லமோ பிரகாஷ்ராஜ் சொல்றமாதிரி செல்லமோ ஏதோ ஒருத்தர் சொன்ன திருவாக்கியங்கள்,எடுத்துக்காட்டுகள்னு ஆரம்பிப்பார், அவை எந்த வடிவில் இருக்குமென்றால்

‘நபிகள் நாயகம் ஒருநாள் வெளியே போனார்கள் மழை வந்தது உடனே குடையை விரித்தார்கள் ஆதாரம்: சொல்லுவார்

அவரின் அம்மாவுக்கு ஒருநாள் வியர்த்தது காலடியில் இருந்து விசிறிவிட்டார்கள் ஆதாரம்....சொல்லுவார்

இஸ்லாம் பெண்களை உயர்வாக மதிக்கிறது மரியாதை செய்கிறது என்று என்னோட கதைச்சுக்கொண்டே  கடந்து செல்லும் பெண்களை பின்னாடி பார்ப்பார்...

எதிரில் இருப்பவன் வேற்றுமதக்காரன், அவனுக்கும் உணர்வுகள்,நம்பிக்கைகள்,வழிபாட்டுமுறைகள்னு ஏதும் இருக்குமே, நாங்கள் அந்த இடத்தில் பொதுவான விஷயங்களை பேசவேண்டும் என்ற குற்ற உணர்வு ஏதுமில்லாமே போய்கிட்டு இருப்பார்,

அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரி என்பார், அதுக்கு அப்புறம் ஐஎஸ்-ஐஎஸ் பிரச்சனைபத்தி வலிந்து ஆரம்பிப்பார், அவர்கள் யூதகூலிகள், முஸ்லீம்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே அவர்களால் உருவாக்கப்பட்டது என்பார், அமெரிக்காவில் மிகவேகமாக அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அதனை தழுவுகிறார்கள் 2030இல் அமெரிக்காவில் முஸ்லீம்களே பெரும்பான்மை என்பார்...

முழு உலக முஸ்லீம்களுக்கு எதிரான யூதர்கள் ஆரம்பித்த ஒரு இயக்கத்தில் இஸ்ரேலை அடியோடு வெறுக்கும் முஸ்லீம்கள் ஏன் போய் சேர்கிறார்கள் என்று கேட்டேன்...

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவுது என்றால் அமெரிக்கா எப்படி உங்களுக்கு எதிரியாகும்?

உலகில் முஸ்லீம்களின் மிக நெருங்கிய நண்பனா இருக்கவேண்டுமே என்றும் கேட்டேன்...

அடுத்தமத பெண்களின் உடையலங்காரத்தை அசிங்கம் அசிங்கமா விமர்சிக்கும் அவரை...

அரை நிர்வாணமாக பெண்கள் அலையும் அமெரிக்காவுக்கு, டிரம்ப் இங்கே நீங்கள் வராதீர்கள் என்று தடைபோட்டும் அமெரிக்காவுக்கு போகணும் என்று படை எடுக்கிறீங்களே அது ஏன் என்றேன்...

என்னோடு பேச்சை குறைத்துக்கொண்டார், எதிரே எங்காவது சந்தித்துக்கொண்டால் மறுபக்கம் முகத்தை திருப்பி துப்பிவிட்டு செல்வார்...

அத்துடன் அவருடனான எனது மத நல்லிணக்கம் முடிவுக்கு வந்து  சில மாதங்கள் ஆச்சு.

அவர்களை பொறுத்தவரை பள்ளிக்கூடமும், பள்ளிவாசலும் ஒன்றேதான்,தங்களுடைய மதம்பற்றி விளக்கங்கள் அள்ளிவிடுவார்களே தவிர பிறமதங்களிருந்து சிறு துரும்பைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அதுக்காகதான் இதை சொன்னேன்!

நியூயார்க் தாக்குதலுக்கு முன்னர், என்னுடன் IT துறையில் SAP என்னும் வேறு மென்பொருள் பகுதியில் ஒருவர் வேலை செய்தார். பர்மிங்காம் பகுதியை சேர்ந்த, இங்கே பிறந்து வளர்ந்த நபர்.

எப்போது தனது மதத்தினைப் பற்றி பீத்திக் கொள்வார். மதம் சம்பந்தமான புத்தகங்கள பரிசாக கொடுப்பார்.

மேனேஜர் வெள்ளை.... அவர்கள் வழக்கப் படி, மறுக்காது... நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்டார்.

சில நாட்கள் பின்னர் அதனை வாசித்து விட்டாயா என்று கேடடார்.  வெள்ளைக்கு மண்டைக்குள ஏறி, இஞ்சை பாரப்பா... நான் சேர்ச்சுக்கே போறது கிடையாது.... என்னிடம் உதுகளை தந்து..... வாசித்தாயா என்று கேட்டால்.... நான் எண்ணத்தை சொல்லுறது என்றார்..

அசராமல்.... நம்மாளு ... 'வாசித்தாயானால்... பள்ளிக்கு ஓதுவதக்கு போவாய்' என்றார்....

அவரோ ஒண்றுமே சொல்லாமல் நகர்ந்தார்...

சிறிது நாட்கள் கழித்து.... நான் வேலைக்கு செல்லும் போது.... கையில் காப்புடன்... நம்மாளை போலீசார் அழைத்து செல்வதை கண்டேன். அப்போது தீவிரவாதம் குறித்த கவலைகள் இல்லாததால்.... எனக்கு குழப்பமாகி விட்டது.

பின்னர் தெரிய வந்தது.... அவர்தான் நிறுவனத்தில் காணாமல் போன.... மடிக்கணணிகளை எல்லாம் ஆட்டையை போட்டவர்.... கவனிக்கப் பட்டு... அன்று ஒன்றை தள்ளிக் கொண்டு போன போது அமத்தி இருக்கிறார்கள்.

தினமும் £750 உழைத்த ஒரு பன்னாடை..... மதம் குறித்து பீத்திக் கொண்ட பரதேசி.... அதற்கு வெடி வைக்குற வேலையினை செய்து விட்டானே என அதே மதித்தினை சேர்ந்த இன்னொருவர் கவலைப்பட்டார் 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அவர்களை பொறுத்தவரை ஒரு புனிதமான கொள்கை வைத்திருக்கிறார்கள் அதாவது உலகில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இல்லாத நாடுகள் அனைத்தும் மதசார்பற்றநாடுகளா இருக்கணும், இஸ்லாமியநாடுகள் அனைத்தும் 100% இஸ்லாமிய தேசங்களாய் இருக்கவேண்டும். சமீபத்தில் அமீரகம் சென்றிருந்த இந்திய பிரதமர் மோடிக்கு அங்குள்ள அரசர் அங்கே ஒரு இந்துகோயில் அமைக்க அனுமதியளித்தார், சமூக வலைதளங்களில் அதற்கு எதிராய் பெரும்பாலும் பொங்கியெழுந்தது இந்திய முஸ்லிம்களே, ‘ஆண்டவன் இதற்கான தண்டனையை அரசருக்கு அளிப்பார் சீக்கிரம்’’என்று குமுறினார்கள். அதேநேரம் இந்தியாவில் அவர்கள் விரும்பியபடி எத்தனை மசூதிகளும் கட்டிக்கொள்வார்கள் கேட்டால் இந்தியா மத சார்பற்றநாடு என்பார்கள்! என்ன ஒரு வில்லதனம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.