Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி

Featured Replies

அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி

 

sumanthiranஅரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலில் எனது ஈடுபாடு ஏற்பட்டது.

இந்த இலக்கில் வெற்றியடைந்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று பல தடவைகள் நான் நினைப்பதுண்டு.

அந்த இலட்சியத்துக்காகவே அரசியலுக்கு வந்தேன் என்பதால், அந்த இலக்கை அடைந்த பின்னர், அதற்கு மேல் அரசியலில், இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பையும் நான் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறெவரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இரா.சம்பந்தன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவார். ஆனால் அவர் அரசியலில் இருந்து விலகுவதென்பதற்கு இடமில்லை.

நான் விலகலாம். விலக வேண்டும் என்ற சிந்தனையும் இருக்கிறது.

வெற்றியடைந்தாலும் அது எனது அரசியல் பயணத்தின் இறுதியாக இருக்கலாம்.  தோல்வியடைந்தாலும் எனது அரசியல் பயணத்தில் இறுதியாக இருக்கலாம் என்ற சிந்தனை என்னிடம் உள்ளது.

இதனை ஒரு முடிவாக நான் கூறவில்லை, அப்படியான சிந்தனையில் தான் இப்போது இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/24/news/28648

  • தொடங்கியவர்

பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை, உருத்திரகுமாரன் ஏன் எம்மிடம் கேட்கின்றார்-சுமந்திரன்

 

 
 

பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை, உருத்திரகுமாரன் ஏன் எம்மிடம் கேட்கின்றார்-சுமந்திரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை, திரு உருத்திரகுமாரன் ஏன் எம்மிடம் கேட்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.கனடாவில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பல வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அந்த பேச்சுவார்த்தைகளில், தமிழீழத்தை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை, எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தை பகிர்வது என்றே பேசினார்கள்.
இவ்வாறு இருக்க நாங்களா தமிழீழத்தை கைவிட்டோம்? இந்த நிலையில் “ஒரு நாட்டுக்குள் தீர்வைப்பற்றி பேசுகின்றீர்கள், இதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் திரு உருத்திரகுமார் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும் அல்லவா என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் “உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வுக்கு தயார்” என்று பிரபாகரன் உரை நிகழ்த்தினார்.அத்துடன், அந்த டிசம்பர் மாதமே போர் நிறுத்தத்தையும் ஒருதலைப் பட்சமாக செய்தார்.
அப்போது யாரும் பிரபாகரனிடம் இந்த கேள்வியை கேட்கவில்லையே. இப்போது மட்டும் ஏன் எங்களிடம் வந்து கேட்கின்றார்கள் எனவும் சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழத்தை தற்போது யாரும் கோரவில்லை. இலங்கையில் யாருக்கும் தமிழீழம் விருப்பமில்லை. யாரும் ஒருவரேனும் விரும்ப மாட்டார்கள். இதற்காகவே புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை முன்வைத்துள்ளோம்.
இந்த அரசியலமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் தவறுமாக இருந்தால், துரோகம் இழைக்குமாக இருந்தால், தனிநாடு சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.நாம் படிப்படியாகத்தான் போக வேண்டும். நாங்கள் தனிநாடு கோரவில்லை. ஆனால் அதிகாரப்பகிர்வை சரியாக செய்யுங்கள். ஒரு சமஸ்டி கட்டமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வுடன் ஒரு ஆட்சியை கேட்கின்றோம் என தெளிவுபடுத்தினார்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உருத்திரகுமாரன் கூறுவதும் சர்வதேச அனுசரணையுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்பையே. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதும் சர்வதேச ரீதியான ஒரு செயற்பாடுதான்.
ஒரு நாடு தனியாக உருவாகுவதற்கு மற்ற நாடுகள் அதை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும். ஆகவே இதறகு சர்வதேசத்தின் பங்கு முழுவதும் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனிடம்-கேட்காத-கேள/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசியலுக்கு, வந்ததால்.... ஸ்ரீலங்காவுக்கு எதிரான, சர்வதேச போர்க் குற்ற விசாரணையை... நீர்த்துப் போகச்   செய்தமையால்,
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை... ஈடு செய்வது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இவ்வாறு இருக்க நாங்களா தமிழீழத்தை கைவிட்டோம்? இந்த நிலையில் “ஒரு நாட்டுக்குள் தீர்வைப்பற்றி பேசுகின்றீர்கள், இதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் திரு உருத்திரகுமார் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும் அல்லவா என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனோ, வி.புலிகளோ எப்போ தமிழீழ கொள்கையை கைவிட்டார்கள் என்று சுமந்திரன் திகதி/நேரம்/ ஆண்டு வாரியாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை, உருத்திரகுமாரன் ஏன் எம்மிடம் கேட்கின்றார்-சுமந்திரன்

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பல வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அந்த பேச்சுவார்த்தைகளில், தமிழீழத்தை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை, எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தை பகிர்வது என்றே பேசினார்கள்.

 

எல்லைக் கோடுகளைக் கொண்டு சிங்களவர்களுக்குத் தெரிந்த தமிழீழம்......! தமிழர் பிரதிநிதியாக இருந்து தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் சுமந்திரனுக்குத் தெரியவில்லையே....!! 

இவர் இருந்தென்ன, இல்லாவிட்டால் என்ன.? Bildergebnis für இருந்தென்ன

Bildergebnis für தமிழீழ வரைபடம் 

 

Bildergebnis für தமிழீழம்

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வியின் படி அரைக்கிணறு தாண்டியதாக சொல்கிறார்.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அவர்களே பிரபாகரனிடம் எதுவும் நாம் கேட்கவேண்டிய தேவை இருக்கவில்லை...ஏனென்றால்

அவர் தமிழருக்காக அரசியல் செய்தார் அவர்  ஏதும் செய்தால் அதில் ஏதும் சுயநலம் இருக்காது என்ற நம்பிக்கையில் யாரும் கேட்பதில்லை, 

நீங்கள் தமிழர்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள் அதில் சுயநலம் இருக்க வாய்ப்பிருக்கிறது அதனால் , உங்களிடம் கேள்வி கேட்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு போதும்
தமிழ் ஈழத்தை
கைவிட்டதா
சொல்லவில்லை

ஆனால் உள்ளக சுயநிர்ணய
அடிப்படையிலான தீர்வு
பற்றித்தான் புலிகலால்
வெளியிடப்பட்ட  
தீர்வு நகல் இருந்தது
பிரபாகரனின்
சம்மதம் இல்லாமல்
அந்த தீர்வு திட்டம்
வெளியாகி இருக்க
சாத்தியம் இல்லை

பனிப் போரின் முடிவின்
பின்னும், இரட்டை கோபுர
தாக்குதலின் பின்னும்
பூகோள அரசியலை
புரிந்து கொண்டு  
நாம் தமிழ் ஈழத்தை
கைவிட்டு விட்டோம்
இலங்கைக்குள் உள்ளக
சுயநிர்ணய கொண்ட
தீர்வுக்கு இணங்கி விட்டோம்
என்று பிரபாகரன்
அறிவித்து இருந்தால்
அதனால் கிடைத்த்து இருக்க
கூடிய அனுகூலங்கள்
அதிகம்

10 hours ago, தமிழ் சிறி said:

இவர் அரசியலுக்கு, வந்ததால்.... ஸ்ரீலங்காவுக்கு எதிரான, சர்வதேச போர்க் குற்ற விசாரணையை... நீர்த்துப் போகச்   செய்தமையால்,
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை... ஈடு செய்வது யார்? 

எப்படி?

இவர் அரசியலுக்கு
வரமால் விட்டு இருந்தால்
போரின், அழிவின்
கூட்டு பங்காளிகளான  
மேற்குலகு
போர்க் குற்ற விசாரணையை
மேற்கொண்டு இருக்குமா ?

 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மேற்கொண்டு இருந்தாலும் நீங்கள் அவர்கள் அதைச் செய்ய விடமாட்டீர்களையா. நீங்கள் சிங்கள அரசின் தரகர். அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே    தமிழ்  அரசியலுக்குள் திணிக்கப்பட்டீர்கள்.   தமிழரை வேரறுக்குமட்டும் நீங்கள் அரசியலிலிருந்து விலக மாட்டீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வைரவன் said:

பிரபாகரன் ஒரு போதும்
தமிழ் ஈழத்தை
கைவிட்டதா
சொல்லவில்லை

ஆனால் உள்ளக சுயநிர்ணய
அடிப்படையிலான தீர்வு
பற்றித்தான் புலிகலால்
வெளியிடப்பட்ட  
தீர்வு நகல் இருந்தது
பிரபாகரனின்
சம்மதம் இல்லாமல்
அந்த தீர்வு திட்டம்
வெளியாகி இருக்க
சாத்தியம் இல்லை

பனிப் போரின் முடிவின்
பின்னும், இரட்டை கோபுர
தாக்குதலின் பின்னும்
பூகோள அரசியலை
புரிந்து கொண்டு  
நாம் தமிழ் ஈழத்தை
கைவிட்டு விட்டோம்
இலங்கைக்குள் உள்ளக
சுயநிர்ணய கொண்ட
தீர்வுக்கு இணங்கி விட்டோம்
என்று பிரபாகரன்
அறிவித்து இருந்தால்

அதனால் கிடைத்த்து இருக்க
கூடிய அனுகூலங்கள்
அதிகம்

 

சரி ஒருவேளை அவர்கள் அப்படி சொல்லியிருந்தால்......
இதர இயங்கங்கள் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள்?
இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்/தலைவர்களின் எதிர்காலம் எப்படியிருந்திருக்கும்?
இந்தியா விடுதலைப்புலிகளுடன் எப்படியான உறவை தொடரும்?

எல்லாவற்றையும் விட....
மாவீரர்களின் குடும்பங்கள் விடுதலைப்புலிகள் மீது என்ன மனநினையை கொண்டிருப்பர்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழமே இறுதியான முடிவென்று வாம் வருவதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் ?
இதற்கு முன்னர் எம்மால் கேட்கப்படட எல்லாக் கோரிக்கைகளும் தொடர்சசியாக வந்த சிங்கள  அரசுகளால் நிராகரிக்கப்பட்ட்தான் விளைவே என்று நான் நினைக்கிறேன்.
50 - 50, சமஸ்ட்டி  என்று தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு இறங்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்ட்டபின்னர்தான் தனி ஈழம் என்று முடிவு எம்மேல் திணிக்கப்பட்ட்து.
ஆக, ஈழத்திற்கு முன்னதான கோரிக்கைகள் சிலவேளை சிங்கள அரசுகளால் ஈர்க்கப்பட்டிருந்தால், ஈழத்திற்கான கோரிக்கை எழுந்திருக்காது என்று குடஸ் சொல்லலாம். ஆனால் அவை எதுவுமே நடவாதத்தால்த்தான் ஈழம் என்பதில் நாங்கள் வந்து நிற்க வேண்டியதாயிற்று. இது வரலாறு.

தலைவர் 2001 இல் கூறியது போல  உள்ளக சுய நிறய உரிமையுடனான அரசியல் தீர்வொன்றை அன்று சிங்களம் ஏற்றிருந்தால், எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

40,000 போராளிகள், ஒன்றரை லட்சம்  மக்கள், கோடிக்கணக்கான சொத்தழிவு , மாவீரரது குருதியால் அங்குலம் அங்குலமாக மீட்கப்படட எமது தாயகம் ..................இவையெல்லாமே எம்மிடம் இப்போதும்  இருந்திருக்குமா என்று யோசிக்கிறேன்.

இப்பொழுது தமிழ் ஈழம் என்ற கோரிக்கையிலிருந்து நாம் விலகி, முற்றான அதிகார பரவலாக்கம் ஒன்றிற்கு எமக்குச்  சந்தர்ப்பம் வந்தால் அதை ஏற்பதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறே , அப்படியொன்றை ஏற்பதன் மூலம் நாம்  இனி இழப்பதற்கும் ஏதும் இருப்பதாகவும் நினைக்கவில்லை. .

என்னைப்  பொறுத்தவரை, தலைவரும், 40000 போராளிகளும், ஒன்றரை லட்ச்சம் மக்களும், சொத்துக்களும், ஆக்கிரமிக்கப்படாத எனது தாயகமும் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வும் எம்மிடம் இருக்குமென்றால் நிசசயம் நல்லதுதான் 

தலைவரும், போராளிகளும், எமது உயிருக்கு நிகரான போராட்டமும்  அழிக்கப்பட்டு , எமது தாயகம் அங்குலம் அங்குலமாக எதிரியின் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு , ஈழம் எனும் கோரிக்கையை மட்டும் நாம் தூக்கி  வைத்திருப்பதைக் காட்டிலும் இவை எல்லாவாற்றையும் வைத்துக்கொண்டு உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்ந்திருக்கலாம் .

இப்படியான ஒரு நிலையை மாவீரர்களது பெற்றோர் கூட இதை நிச்சயம் ஏற்றிருப்பார்கள் என்பது திண்ணம். 

21 hours ago, நவீனன் said:
Quote

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பல வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அந்த பேச்சுவார்த்தைகளில், தமிழீழத்தை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை, எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தை பகிர்வது என்றே பேசினார்கள்.

மரபுவளிப் படையணிகளுடன் காவல் துறை நீதித்துறை உள்ளடங்கலாக தமிழீழ நிழல் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்த புலிகளின் பேச்சுவார்த்தைகள் அவ் அரசுக்கான அங்கீகாரத்தை நோக்கிய நகர்வாகவே இருந்தது. நீங்கள் ஒரு நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்வது என்று போசுவதும் அவர்கள் பேசியதும் வேறு வேறானது. புலிகள் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏற்கும் அல்லது மறுக்கும் திறன் மற்றும் பலம் உடையவர்களாக இருந்து பேசினார்கள். பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றிய போது போர் செய்து நிலங்களை மீட்டார்கள். அதாவது இறுதிவரை எதிர்வினையாற்றினார்கள். நீங்கள் கேட்கும் அதிகாரத்தை மறுக்கும் போது உங்களால் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாது. புலிகள் கேட்டது உரிமை நீங்கள் கேட்பது பிச்சை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. 
 

Quote

தமிழீழத்தை தற்போது யாரும் கோரவில்லை. இலங்கையில் யாருக்கும் தமிழீழம் விருப்பமில்லை. யாரும் ஒருவரேனும் விரும்ப மாட்டார்கள். இதற்காகவே புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை முன்வைத்துள்ளோம்.

எக்காலத்திலம் யாரும் அடிமையாக இருக்க விரும்புவதில்லை. அது மனுட இயல்பும் இல்லை.  தற்போது உரிமைக்காக போராடும் சூழல் இல்லை. அதற்கு அர்த்தம் அடிமை வாழ்வை அனைவரும் ஏற்றுள்ளார்கள் என்றில்லை. கோரவில்லை, விருப்பமில்லை, விரும்பமாட்டார்கள்,  ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளுக்காக போராடும் அரசியல் தலைவனின் வார்த்தைகள் இல்லை. வேறு பெயர் உண்டு.

 

11 hours ago, வைரவன் said:

பனிப் போரின் முடிவின்
பின்னும், இரட்டை கோபுர
தாக்குதலின் பின்னும்
பூகோள அரசியலை
புரிந்து கொண்டு  
நாம் தமிழ் ஈழத்தை
கைவிட்டு விட்டோம்
இலங்கைக்குள் உள்ளக
சுயநிர்ணய கொண்ட
தீர்வுக்கு இணங்கி விட்டோம்
என்று பிரபாகரன்
அறிவித்து இருந்தால்
அதனால் கிடைத்த்து இருக்க
கூடிய அனுகூலங்கள்
அதிகம்

அப்படி பிரபாகரன் அறிவித்திருந்தாலும் இப்போது இருக்கும் நிலைதான். இறுதிப்போரில் புலிகளுக்கு என்ன நடந்ததோ அதுவே வேறுவிதமாக நடந்து இருக்கும். அதேபோல்தான் ராஜீவ் காந்தி மீதான சம்பவம் நடக்காமல் விட்டிருந்தாலும் தமிழருக்கான உரிமை விடயத்தில் எந்த மாற்றமும் இந்தியாவால் ஏற்பட்டிருக்காது. அப்படி செய்திருக்கலாம் அல்லது இப்படிச் செய்திருக்கலாம் என்பது தோல்வியின் பின் ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடு. 

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 25.1.2018 at 5:08 PM, வைரவன் said:

------

எப்படி?

இவர் அரசியலுக்கு
வரமால் விட்டு இருந்தால்
போரின், அழிவின்
கூட்டு பங்காளிகளான  
மேற்குலகு
போர்க் குற்ற விசாரணையை
மேற்கொண்டு இருக்குமா ?

 

"மேயுற மாட்டை... நக்குற மாடு,  கெடுத்த மாதிரி" யான.... இடத்தில், சுமந்திரன் இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. 

 

Bild könnte enthalten: 2 Personen, Meme und Text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Rajesh said:

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!

சுமந்திரன் தண்ணி அடிக்கிறவரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன் தண்ணி அடிக்கிறவரோ? 

மூஞ்சியை... பார்க்க,  அப்படித்தான் இருக்கு.
நான்... இதுவரை பார்த்த, கணிப்புகளில், எப்பவும்,  100 %  சரியான கணிப்புகள் என்று, பலர் சொல்லி இருக்கிறார்கள். tw_naughty:

10 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் தண்ணி அடிக்கிறவரோ? 

என்ன அப்பிடி கேட்டுடீங்கள்? சம்பந்தனும் இதில மகாகுடிமகன் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் தண்ணி அடிக்கிறவரோ? 

எந்த தண்ணி  என்று  கிளியர் பண்ணுங்க??tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எந்த தண்ணி  என்று  கிளியர் பண்ணுங்க??tw_blush:

 

Teacher's Blended Scotch Whisky 40% Vol

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2018 at 10:01 AM, குமாரசாமி said:

சுமந்திரன் தண்ணி அடிக்கிறவரோ? 

அவர் அப்பப்ப மாறி மாறிப்  பேசுற பேச்சைப் பார்த்தால் அப்பிடித்தான் நினைக்கத் தோணுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.