Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்…

Featured Replies

நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்…

pointer.png?resize=800%2C409

பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாணவனை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். குறித்த மாணவனுக்கு நெஞ்சு, வாய் பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

நேற்றரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு இரவு சென்ற, இரண்டாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்களே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

இது குறித்து வவுனியா வைத்தியசாலை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/63400/

34 minutes ago, நவீனன் said:

“நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள இராணுவ காடையர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தும் சமூக விரோத செயல்களை வவுனியா வளாகத்துக்கும் விஸ்தரித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

சிங்கள மாணவ காடையர்களுக்கு உரிய பாடங்களை புகட்டவிட்டால் இது தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சதாரண கருத்து முரண்பாடுக்கே இப்படி என்றால் புலிகளின் டீ‍சேர்ட் போட்டு போய் இருந்தால் என்ன நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

சிங்கள இராணுவ காடையர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தும் சமூக விரோத செயல்களை வவுனியா வளாகத்துக்கும் விஸ்தரித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

சிங்கள மாணவ காடையர்களுக்கு உரிய பாடங்களை புகட்டவிட்டால் இது தொடரலாம்.

நீங்கள் இங்க காட்டினால அவங்க  அவங்கட ஏரியாவில் உள்ள பல்கலைக்கழத்தில் காட்டுவாங்க சந்தோசமா ராசா

6 hours ago, colomban said:

சதாரண கருத்து முரண்பாடுக்கே இப்படி என்றால் புலிகளின் டீ‍சேர்ட் போட்டு போய் இருந்தால் என்ன நடந்திருக்கும்.

வேறென்ன பார்ஷல் தான் 

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் இங்க காட்டினால அவங்க  அவங்கட ஏரியாவில் உள்ள பல்கலைக்கழத்தில் காட்டுவாங்க சந்தோசமா ராசா

நீங்கள் 2 கன்னத்தையும் மாறி மாறி காட்டி சந்தோசமா அடிவாங்கியே சாகுங்கோ ராசா!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

நீங்கள் 2 கன்னத்தையும் மாறி மாறி காட்டி சந்தோசமா அடிவாங்கியே சாகுங்கோ ராசா!

இதுவரைக்கும் செத்து மடிஞ்சது போதும் சும்மா உசுப்பேத்துறவிட்டிட்டு நடக்கிறத பாருங்க  இன்றைக்கு அடிச்சிக்குவானுகள் நாளைக்கு ஓர் ஆர்ப்பாட்டம் என்றால் சேர்ந்துக்குவானுகள் அவனுகள் இது யூனில நடக்கிறது தெரியும் தானே  உங்களுக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு    இனத்தின் தோல்வி

எப்படியெல்லாம்  சமாளித்து வாழ  வேண்டியதுள்ளது...tw_cry: 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஒரு    இனத்தின் தோல்வி

எப்படியெல்லாம்  சமாளித்து வாழ  வேண்டியதுள்ளது...tw_cry: 

எனது நண்பன் வயதுக்கு மூத்தவன் பயங்கர கெட்டிக்காரன் மேற்கில் உள்ள பல்கலைக்கு தெரிவாகி போனான் இறந்துதான் வந்தான் என்ன நடந்ததென்று இன்னும் தெரியல இன்று பல் நூறு பேர் அங்கே படிக்கிறாற்கள் அதிகமானவர்கள்பெண்கள் இங்கே கை வைத்தால் அங்கே கால் வைப்பார்கள் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபாகரனால் முடியாதது எவராலும் முடியும் என நான்  எதிர்பார்க்கவில்லை

ஆனால்  அடித்தால் 

பேசாமல் இருந்தால் தப்பி  விடலாம் என்பது 

சிறு புழுக்களுக்கு கூட உடன்பாடில்லாத விடயம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

பிரபாகரனால் முடியாதது எவராலும் முடியும் என நான்  எதிர்பார்க்கவில்லை

ஆனால்  அடித்தால் 

பேசாமல் இருந்தால் தப்பி  விடலாம் என்பது 

சிறு புழுக்களுக்கு கூட உடன்பாடில்லாத விடயம்

சாதரண எடுக்க முடியாததுதான் ஆனால் அரசியல் பலம் , ஆட்பலம் இல்லாமல் எவனுக்கும் இங்கே கைவைக்க முடியாது குறிப்பா தமிழ் மக்கள் ஒரு முஸ்லீம் ஊரே அடி வேண்டியது நிலமை அப்படி இருக்கு இலங்கையில் இதனை மீறினால் அன்றாடம்கஸ்ரப்பட்டு உழைக்கும் ஏழைகள் வீடுகள் வாகனங்கள் தீக்கிரையாகும் இது நடக்கும் இது தேவையா என்ற நிலையில் நாங்கள் 

இங்க கன பேர் சொல்லுறார்கள் கோழைகள் என்று அப்படி நீங்களும் நினைத்து கொள்லுங்களேன் :104_point_left:

நீங்கள் கோழை  என்றால் நான்??

என்னை நோக்கி  4 விரல்கள்  நீட்டப்படுவதை அறிவேன் நான்.

அதேநேரம்

புலத்திலிருப்பவன்  உசுப்பேத்துகிறான் என்பவர்களும் யோசிக்கணும்

புலத்திலுள்ளவனும்

கோழை  என்று விட்டு 

தான் உண்டு தன் சோலியுண்டு என்று  காசை  மீதப்படுத்தி

ஊர்  வந்து  படம்  காட்ட முடியும் என்பதை...

எங்களுக்கெல்லாம் விதியா என்ன

40 வருடமாக நேரத்தையும்

இரவு பகல் பாராது உழைத்த பணத்தையும் விரயமாக்க.....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதற்காகவே தற்போது தமிழ் மக்களை விழிப்படைய செய்து கொண்டிருக்கிறோம் நிட்சயமாக அரசியல் தீர்வை அரசாங்கம் தராது அப்படி பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல் வாதிகளும் இல்லை அவர்களை நம்பி  பலனும் இல்லை இனி அரசாங்கத்த பிடித்துதான் நாங்கள் வளர வேண்டும் நம்பிய அரைசியல் வாதிகள் அவர் குடும்பங்கள் சொந்தங்கள் வளர்ந்ந்து விட்டது ஆனால் அன்றாடம் உழைக்கும் மக்கள் வாழ்க்கை இன்று அப்படியே தான் இருக்கிறது 

இங்குள்ள மக்களை அவர்கள் பால் விட்டு விடுங்கள்  உதவலாம் உதவாமல் போகலாம் அவரவர் மன நிலையை பொறுத்தே  பிறந்தவர்கள் வாழத்தானே வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நீங்கள் கோழை  என்றால் நான்??

என்னை நோக்கி  4 விரல்கள்  நீட்டப்படுவதை அறிவேன் நான்.

அதேநேரம்

புலத்திலிருப்பவன்  உசுப்பேத்துகிறான் என்பவர்களும் யோசிக்கணும்

புலத்திலுள்ளவனும்

கோழை  என்று விட்டு 

தான் உண்டு தன் சோலியுண்டு என்று  காசை  மீதப்படுத்தி

ஊர்  வந்து  படம்  காட்ட முடியும் என்பதை...

எங்களுக்கெல்லாம் விதியா என்ன

40 வருடமாக நேரத்தையும்

இரவு பகல் பாராது உழைத்த பணத்தையும் விரயமாக்க.....

வீணாக வாங்கி கட்டுறேன்.,  அரசியல் செய்திகள் பிரிவில் கருத்து இனிமே அதிகமா சொல்லகூடாது  எண்டு ஒரு கிழமைக்கு முன்னம் சின்னதா ஒரு முடிவு எடுத்திருந்தேன், ஆனால் அது முடியவில்லையே..

விசுகு அண்ணா உங்கள் கருத்து முற்று முழுக்க தவறு..

சத்தம்போடாமலே தாயக உறவுகளுக்கு உங்களால் முடிந்த பலதை செய்தவராக அடையாளம் காணப்பட்ட நீங்கள்,

செய்தவற்றை இப்போது சத்தம்போட்டு சொல்வதுபோல் இது இல்லையா?

விசுகு அண்ணா  உங்கள் வாயிலிருந்து வரகூடிய வார்த்தைகளா இவை?

TKR  தாயகத்தின் வலியை,அங்கே உள்ள நிலமையை பற்றி மட்டுமே பேசுகிறார், யாரையும் காயப்படுத்த அல்ல என்று நினைக்கிறேன்...

அதுக்காக அவருக்கு சார்பாக பேசுகிறேன் என்று அர்த்தமல்ல,அவருக்கு  எதிராகவும் ஒருநாள் பேசுவேன்..

அவரும் நீங்களும் எனக்கு எதிராக ஒருநாள் பேசுவீர்கள்...

கருத்துக்களோடு கருத்தால் மோததானே யாழுக்கு வந்திருக்கிறோம் என்ற அடிப்படையில்!

4 hours ago, விசுகு said:

பிரபாகரனால் முடியாதது எவராலும் முடியும் என நான்  எதிர்பார்க்கவில்லை

ஆனால்  அடித்தால் 

பேசாமல் இருந்தால் தப்பி  விடலாம் என்பது 

சிறு புழுக்களுக்கு கூட உடன்பாடில்லாத விடயம்

4 hours ago, விசுகு said:

எங்களுக்கெல்லாம் விதியா என்ன

40 வருடமாக நேரத்தையும்

இரவு பகல் பாராது உழைத்த பணத்தையும் விரயமாக்க.....

புலம் பெயர்ந்த, விசுகு, யாழ்கள மோகன், சாந்தி உட்பட  சிலர் (பெரும்பாலானவர்கள் இல்லை), யாழ் களத்திலுள்ள சககருத்தாளர்கள் சிலர் (பெரும்பாலானவர்கள் இல்லை), கடந்த பல வருடங்களாக ஈழத்து தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை மீட்பதற்கு, விடுதலைக்கு, நீதி நியாயங்களை பெற்றுக்கொள்வதற்கு, ... பல்வேறு வழிகளில் தமது உழைப்பையும், நேரத்தையும் எவ்வித சுயநலனுமின்றி செலவிட்டுவந்துள்ளனர், இன்னமும் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தாயக மக்களின் செயற்பாடுகளில் நியாயமான எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானது. அது மனித இயல்பு. அதை கொச்சைப்படுத்துவது, அவர்கள் கருத்தை செவிமடுக்க மறுப்பது (ஏற்கச் சொல்லவில்லை), அல்லது அவர்கள் கருத்துச் சொல்லும் உரிமையற்றவர்கள் என்பது போன்றவை மிகவும் கவலையானது. இது தமிழினத்தின் பலத்தை சிதைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இன்னும் பலர் கடந்த பல வருடங்களாக ஈழத்து தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை மீட்பதற்கு, விடுதலைக்கு, நீதி பெற்றுக்கொள்வதற்கு, ... சார்பான தமது கருத்துக்களை (தமது ஓய்வு நேரங்களில் அல்லது நேரத்தை ஒதுக்கி) யாழ்களம் போன்ற ஊடகங்களில் பதிவுசெய்து வருகின்றனர். (உதாரணமாக நிழலியின் கருத்துக்களை தமிழகத்தின் "தமிழ் இந்து" பத்திரிகை கருத்துக்களத்தில் அவதானித்துள்ளேன்). இவ்வாறான கருத்துக்கள் ஈழத் தமிழினத்துக்கு எதிரான அல்லது திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை பதியும் தீய நோக்கமுடைய சிலரின் சதி முயற்சிகளை முறியடித்ததையும் அவதானித்துள்ளேன்.

இவர்களுக்கும் சில நியாயமான எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானது. அது மனித இயல்பு. அதை கொச்சைப்படுத்துவது, அவர்கள் கருத்தை செவிமடுக்க மறுப்பது (ஏற்கச் சொல்லவில்லை), அல்லது அவர்கள் கருத்துச் சொல்லும் உரிமையற்றவர்கள் என்பது போன்றவை மிகவும் கவலையானது. இதுவும் தமிழினத்தின் பலத்தை சிதைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஈழத்தமிழர் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக எதிர்மறை மனோநிலை (Negative Attitude, Negative Thinking) உடையவர்களும், அடிமை  மனோநிலை (Slave Mentality) உடையவர்களும், ஏமாற்றும்/வஞ்சக/துரோக மனோநிலை (Deceptive or Treacherous/Traitorous Mentality) உடையவர்களும், சலுகைகளுக்கு சோரம் போகும் மனோநிலை (Henchman/Stooge/Myrmidon Mentality) உடையவர்களும் கணிசமாக உள்ளனர். இவர்களில் சிலர் தமிழின விரோதிகளுக்கு / தமிழின படுகொலைகாரர்களுக்கு சார்பாக செயற்படுபவர்களாகவும், விதண்டாவாதம் செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களின் சுபாவங்கள், சிந்தனைகள் நேர்முக/சாதக மனோநிலை (Positive Attitude, Positive Thinking, Self-confident Attitude) உடையவர்களாகவும், சுயவுரிமை / சுயகௌரவ மனோநிலை (Entitlement Mentality) உடையவர்களாகவும்,  நேர்மை/நம்பகத்தன்மை (Honest/Trustworthy) உடையவர்களாகவும், வீரர்களாகவும் (Heroes) மாறுவது ஈழத்தமிழரின் பலத்தை அதிகரிக்கும். இந்த நல்ல மாற்றங்களையே துரதிர்ஷ்டவசமாக எம்மத்தியில் இருக்கும் இந்த வகையினரிடமிருந்து நாம் எதிர்பாக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

வீணாக வாங்கி கட்டுறேன்.,  அரசியல் செய்திகள் பிரிவில் கருத்து இனிமே அதிகமா சொல்லகூடாது  எண்டு ஒரு கிழமைக்கு முன்னம் சின்னதா ஒரு முடிவு எடுத்திருந்தேன், ஆனால் அது முடியவில்லையே..

விசுகு அண்ணா உங்கள் கருத்து முற்று முழுக்க தவறு..

சத்தம்போடாமலே தாயக உறவுகளுக்கு உங்களால் முடிந்த பலதை செய்தவராக அடையாளம் காணப்பட்ட நீங்கள்,

செய்தவற்றை இப்போது சத்தம்போட்டு சொல்வதுபோல் இது இல்லையா?

விசுகு அண்ணா  உங்கள் வாயிலிருந்து வரகூடிய வார்த்தைகளா இவை?

TKR  தாயகத்தின் வலியை,அங்கே உள்ள நிலமையை பற்றி மட்டுமே பேசுகிறார், யாரையும் காயப்படுத்த அல்ல என்று நினைக்கிறேன்...

அதுக்காக அவருக்கு சார்பாக பேசுகிறேன் என்று அர்த்தமல்ல,அவருக்கு  எதிராகவும் ஒருநாள் பேசுவேன்..

அவரும் நீங்களும் எனக்கு எதிராக ஒருநாள் பேசுவீர்கள்...

கருத்துக்களோடு கருத்தால் மோததானே யாழுக்கு வந்திருக்கிறோம் என்ற அடிப்படையில்!

நீங்கள் எனக்கு சார்ப்பாகவோ பேச வேண்டிய அவசியம் இல்லை நான் இங்கு நடக்கும் சம்பவங்களை சொல்ல முனைகிறேன் அவ்வளவுதான் நாளைக்கு இங்கே நடப்பதை நீங்கள் விளங்காமல் எழுதினால் அதற்கும் கருத்து எழுதுவேன் எதிராக இங்கு பொய்களை சொல்லி வாழ வேண்டிய அவசியம் இல்லையே எது உன்மையோ அதை உரைப்போம் பக்கச்சார்பு இல்லாமால் உசுப்பேத்துவதை விட்டு விட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எனக்கு சார்ப்பாகவோ பேச வேண்டிய அவசியம் இல்லை நான் இங்கு நடக்கும் சம்பவங்களை சொல்ல முனைகிறேன் அவ்வளவுதான் நாளைக்கு இங்கே நடப்பதை நீங்கள் விளங்காமல் எழுதினால் அதற்கும் கருத்து எழுதுவேன் எதிராக இங்கு பொய்களை சொல்லி வாழ வேண்டிய அவசியம் இல்லையே எது உன்மையோ அதை உரைப்போம் பக்கச்சார்பு இல்லாமால் உசுப்பேத்துவதை விட்டு விட்டு 

ஆம், நான் விசுகு அண்ணாவிற்கு சொன்ன அதே கருத்தைதான் நீங்களும் எனக்கு சொல்லி இருக்கிறீர்கள், நீங்கள் சொல்வது சரி.. பக்க சார்பின்றி மனசில் பட்டதை சொல்வதுதான் கருத்து, பக்க சார்புடனும் ஒரே கருத்தை எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் பெயர் ஜால்ரா!, அங்கே நாங்கள்....

நட்பை மட்டும் வளர்த்துவிட்டு நியாயத்தை கண்டுக்காமல் நகர்ந்துவிடுகிறோம். எமது இனத்திற்கு எதிரிகள் அதிகரித்ததுக்கு காரணமே எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் பேசாமல் & அறியாமல் சுய விமர்சனங்களுடன் மட்டும் நின்றுவிட்டபடியால்தான் என்பது என் மனசுக்கு தோன்றும் காலம் கடந்த பட்டுணர்வு!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

ஒரு    இனத்தின் தோல்வி

எப்படியெல்லாம்  சமாளித்து வாழ  வேண்டியதுள்ளது...tw_cry: 

அவர்களுக்கு 3 தெரிவுகள் உள்ளன.1 சமாளித்து.2 எதிர்த்து அலக்களிவது அல்லது அழிவது.மற்றது நாட்டை விட்டு வெளியேறி வீரர்களாக வாழ்வது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களத்தில் தாயகத்தில் இருந்து கருத்தெழுதுபவர்கள் வெறும் இரன்டு பேர் மட்டுமே.ஏன் அப்படி என்று யாராவது யோசித்தது உண்டா.காரனம் பலருக்கு யதார்த்தாம் தெரிவதில்லை.அந்தப் பலரில் விசுகரும் ஒருவர் என்பது கவலையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

அவர்களுக்கு 3 தெரிவுகள் உள்ளன.1 சமாளித்து.2 எதிர்த்து அலக்களிவது அல்லது அழிவது.மற்றது நாட்டை விட்டு வெளியேறி வீரர்களாக வாழ்வது.

மனசு உறுத்துற கருத்து, இது எனக்கும் சேர்த்து பொருந்தும்.

2 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த களத்தில் தாயகத்தில் இருந்து கருத்தெழுதுபவர்கள் வெறும் இரன்டு பேர் மட்டுமே.ஏன் அப்படி என்று யாராவது யோசித்தது உண்டா.காரனம் பலருக்கு யதார்த்தாம் தெரிவதில்லை.அந்தப் பலரில் விசுகரும் ஒருவர் என்பது கவலையாக உள்ளது.

புலத்தில் இருந்து  இருபதினாயினம்பேர்  களத்தில் உறுப்பினர்களாயிருப்பதைவிட, தாயகத்திலிருந்து 2 பேர் சிங்களவன் மத்தியில் வாழ்ந்துகொண்டே இந்த தமிழர்காய் குரல் கொடுக்கும் யாழில் இணைந்திருப்பதுதான் கெத்து என்று சொல்ல அடிக்கடி முனைந்தேன், அதை யாரும் புரிந்து கொள்வதாய் இல்லை, நீங்களாவது சொல்லுங்கள் சுவைபிரியன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நட்பை மட்டும் வளர்த்துவிட்டு நியாயத்தை கண்டுக்காமல் நகர்ந்துவிடுகிறோம். எமது இனத்திற்கு எதிரிகள் அதிகரித்ததுக்கு காரணமே எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் பேசாமல் & அறியாமல் சுய விமர்சனங்களுடன் மட்டும் நின்றுவிட்டபடியால்தான் என்பது என் மனசுக்கு தோன்றும் காலம் கடந்த பட்டுணர்வு!

உடன்படுகிறேன் உங்கள் கருத்துக்கு :104_point_left:

18 minutes ago, சுவைப்பிரியன் said:

அவர்களுக்கு 3 தெரிவுகள் உள்ளன.1 சமாளித்து.2 எதிர்த்து அலக்களிவது அல்லது அழிவது.மற்றது நாட்டை விட்டு வெளியேறி வீரர்களாக வாழ்வது.

எக்காரணம் வந்தாலும் நாட்டை விட்டு வெளியேற கூடாது என நினைக்கிறன் நான்  நீங்கள் கூறிய காரணம் சாலப்பொருந்தும்  இதுல பெரிய உன்மை என்ன வென்றால் அரசியல் வாதியே அப்படி இருக்க சாதரண பொது மக்கள் நாங்கள்  எப்படி பாடு பட வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறன்

13 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த களத்தில் தாயகத்தில் இருந்து கருத்தெழுதுபவர்கள் வெறும் இரன்டு பேர் மட்டுமே.ஏன் அப்படி என்று யாராவது யோசித்தது உண்டா.காரனம் பலருக்கு யதார்த்தாம் தெரிவதில்லை.அந்தப் பலரில் விசுகரும் ஒருவர் என்பது கவலையாக உள்ளது.

ஒவ்வொருவர்க்கும் ஒவ்வோர் ஆதங்கம் என்ன செய்வது நாங்கள் யாரையும் பிழையாக நினைத்து கொள்வதும் கிடையாது  இங்கு நடைமுறை யதார்த்தம் வேறு  உங்களுக்கு புரிந்திருக்கிறது அந்த வகையில் நிறைவா இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, valavan said:

மனசு உறுத்துற கருத்து, இது எனக்கும் சேர்த்து பொருந்தும்.

நாங்கள் யாரையும் கோழை என்றோ வீரன் என்றோ விளிக்கவில்லை ஈழத்தவர்கள் என்றுமே வீரர்கள்   அதை உலகம் அறிந்தது இன்று எம் பிள்ளைகளை புலத்தில் பல சாதனைகள் படைக்கும் போது எங்களுக்கு பெருமை எங்க உறவுகள் என்று சொல்லி மார்தட்டிகொள்வோம் எங்கே சென்றாலும் அங்கே வெற்ரி கொண்டு வாழ்பவன் தமிழன் ஆனால் இங்க பல சூழ்ச்சிகள் , துரோகங்களால் வீழ்ந்ததால் அடி படுகிறோம் அடிபட்டுக்கொண்டிருக்கிறோம் அடிமையாக வாழ வேண்டிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்  வேற எதுவும் சொல்ல முடியாது இந்த வாழ்கைகை எம் மீது திணிக்கப்பட்டு விட்டது வாழ்ந்தாக வேண்டிய சூழ் நிலையில் நாங்கள்  

23 minutes ago, valavan said:

மனசு உறுத்துற கருத்து, இது எனக்கும் சேர்த்து பொருந்தும்.

புலத்தில் இருந்து  இருபதினாயினம்பேர்  களத்தில் உறுப்பினர்களாயிருப்பதைவிட, தாயகத்திலிருந்து 2 பேர் சிங்களவன் மத்தியில் வாழ்ந்துகொண்டே இந்த தமிழர்காய் குரல் கொடுக்கும் யாழில் இணைந்திருப்பதுதான் கெத்து என்று சொல்ல அடிக்கடி முனைந்தேன், அதை யாரும் புரிந்து கொள்வதாய் இல்லை, நீங்களாவது சொல்லுங்கள் சுவைபிரியன்!

பச்சை இட முடிய வில்லை மிக்க நன்றிகள் :100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்ப/இடைக்காலத்தைப்போல்  புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருப்பவர்களுக்கு காசை கொடுத்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். மனதில் நினைப்பதை....மேலைத்தேய நாட்டு அரசியலுடன் ஒப்பிட்டு எதையும் கதைக்கக்கூடாது.

மூச் 

Ähnliches Foto

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எக்காரணம் வந்தாலும் நாட்டை விட்டு வெளியேற கூடாது என நினைக்கிறன் நான்  நீங்கள் கூறிய காரணம் சாலப்பொருந்தும்  இதுல பெரிய உன்மை என்ன வென்றால் அரசியல் வாதியே அப்படி இருக்க சாதரண பொது மக்கள் நாங்கள்  எப்படி பாடு பட வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறன்

அப்படிச்சொல்லுங்கோ எண்டை சிங்கக்குட்டி ...வீர மறவர்களுக்கு....
இங்கிருக்கும் கோழைகளுக்கும் கல்வித்தகுதி ,தொழிட்தகுதி என்று மூன்று மாதங்களில் Skill Migration செய்து ஆஸிக்கோ ,கனடாவுக்கோ ஆள் மாறும் தகுதியிருந்தும். நாட்டை விட்டு  ஒரு இன்ச் அரக்கமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து புலத்திலேயே குந்தியிருக்க மேலே குறிப்பிட்ட இங்கிலிஸ் வசனங்கள் தான் காரணமாக இருக்குமோ ....?  இரும்போடு தலையை மோதினால் வீரம் என்றும் சொல்லலாம் ,அடி முட்டாள்தனம் என்றும் சொல்லலாம் 
நஷ்ட்டம் தலைக்கு மட்டுமேயன்றி இரும்பிட்கல்ல  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஆரம்ப/இடைக்காலத்தைப்போல்  புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருப்பவர்களுக்கு காசை கொடுத்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். மனதில் நினைப்பதை....மேலைத்தேய நாட்டு அரசியலுடன் ஒப்பிட்டு எதையும் கதைக்கக்கூடாது.

மூச் 

மேலைத்தேய நாடுகளுக்கும் 30 ஆண்டுகால போர் நடந்த நாட்டுக்கும் அதுலயும் தோற்று விட்ட இனம் நாங்கள்  கதைக்காலாம் ஆனால் யதார்த்தர்த்ததை புரிந்து கொண்டு உரைப்பது நல்லது என்று நாங்கள் சொல்ல வருகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பச்சை இட முடிய வில்லை மிக்க நன்றிகள் :100_pray:

கவலையே வேண்டாம், பச்சை எதிர்பார்த்த கருத்து அல்ல அது, என்னை கேட்டால் இந்த பச்சைபோடும் சிஸ்டமே யாழில் இல்லாமல் ஆக்க படவேண்டும் , அந்த பச்சைபுள்ளி என்ற தகுதி எதிர்பார்ப்பு கருத்துக்கள்கூட சில சமயம் சகஜமாக கருத்தாடல் செய்யும் உணர்வுகளுக்கு சிறு தடையாய் இருக்கிறது என்று நம்புகிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.