Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது : விக்கினேஸ்வரன்

Featured Replies

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது : விக்கினேஸ்வரன்

 

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

C.-V.-Vigneswaran.jpg

கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று  முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் பதிலளிக்யைில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி.க்கும் தமக்கும் நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். 

ஆனால் என்னதாக இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது. பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும். சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.

 

என்னவாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்புக் கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும் என்பதுதான் என்னுடைய அவதானிப்பாக உள்ளதென  அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/31991

  • கருத்துக்கள உறவுகள்

த. தே. கூட்டமைப்பின் வங்குரோத்து தன்மையை காட்டுகிறது. ஈ.பி. டி. பியுடன் கூட்டு வைப்பதன் மூலம் அவர்களை விட கூட்டு வைக்கும்  இவர்கள் இழிந்தவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கட்டும்....சில சமயங்களில் இது ஒரு நல்ல செயலாகவும் இருக்ககூடும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நல்லது நடக்கட்டும்....சில சமயங்களில் இது ஒரு நல்ல செயலாகவும் இருக்ககூடும்

பூமியே அழிந்தாலும்.. அதுவும் நல்லதுக்கென்று நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கலாம்.

கூட்டமைப்பு.. சரத் பொன்சேகா முதல்.. மைத்திரி வரை கூட்டு வைச்சு என்னத்தை வெட்டிக்கிழித்தார்கள். இப்ப கொலைகார கும்பலான ஈபிடிபியுடன் கூட்டு வைத்து அதுவும் நகர சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் மக்களுக்காக வெட்டிக்கிழிக்க..??!

கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க கொலை கொள்ளைக் கும்பல்கள் கூட்டு வைக்கின்றனவே தவிர.. இதனால் மக்களுக்கு நன்மை என்பது இலவு காத்த கிளியின் கதை தான். tw_blush:

கூட்டமைப்பு  வெகு விரைவில் கருணா அவர்களுடனும் கூட்டுறவு வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய்களை ஆட்டு மந்தைக்குள் கொண்டு வந்தால் என்ன நடக்கும் - பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதிக்கு கடந்தகாலங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போனபோது வாங்கிய அடியை மறந்திட்டினம்போல.

தவிர இதே தீவுப்பகுதியில் ஈ பீ டி பி கொலைக்கும்பல் வேண்டாதவர்களைக் கொலைசெய்து லொறி ரயர் போட்டு எரித்ததற்கான சாட்சிகள் இப்போதும் புலம்பெயர்தேசங்களில் வாழ்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இதே விக்கியர்
இந்திய இராணுவ காலத்தில்
பலரை படுகொலை செய்த
தமிழ் பெண்களை பலாத்தகாரம்
செய்த
இந்திய இராணுவத்துக்கு
கூட்டிக் கொடுத்த
சேர்ந்து கொள்ளையடித்த
மண்டையன் குழு தலைவர்
பிரேமசந்திரன்
த.தே. கூ. அமைப்பின்
சார்பில் ஏன்
தேர்தலில் நின்றவர்
தானே?
(தலைவரும் இப்படி பட்டவரை
மன்னித்ததும் விட்டவர்)

கிழக்கில் ராசிக் குழு
இயங்கும் காலம்
முழுதும் சுரேஸ் சின்
கிழக்கு
அலுவலகம் அங்கும்
இயங்கியது
என்பதை முன்னால்  
நீதியரசர் அறிவார் தானே?

முதலில்
முதியவர் விக்கியர்  
வடக்கு மாகாணசபையை
செயல் திறன் அற்ற சபையாக
மாற்றி விட்டார்  
இப்ப
உள்ளூராட்சி சபைகளையும்
ஆக்குகின்றார்

 

இரகசியமாக கைக்கூலிகளாக இயங்கிய தமிழினப் படுகொலைகாரக் கும்பல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மாவை-சுமந்திரன் கும்பலின் ஏமாற்றல் கூத்துக்கள் அடுத்த தேர்தலில் முழுமையாக முறியடிக்கப்படும்.

அதே நேரத்தில் சுயநல அரசியல் நடத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் தம்மை திருத்திக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை இவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்  என்பதில் தான் இவர்கள் எதிர்காலம் தங்கியுள்ளது.  

கிடைத்திருக்கும் உறுப்பினர் பதவிகளை இவர்கள் திறமையாக கையாண்டால் நல்ல எதிர்காலம் அமையும்.

46 minutes ago, Elugnajiru said:

தீவுப்பகுதிக்கு கடந்தகாலங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போனபோது வாங்கிய அடியை மறந்திட்டினம்போல.

தமிழினப் படுகொலைகாரர்களின் கைக்கூலிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

பூமியே அழிந்தாலும்.. அதுவும் நல்லதுக்கென்று நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கலாம்.

கூட்டமைப்பு.. சரத் பொன்சேகா முதல்.. மைத்திரி வரை கூட்டு வைச்சு என்னத்தை வெட்டிக்கிழித்தார்கள். இப்ப கொலைகார கும்பலான ஈபிடிபியுடன் கூட்டு வைத்து அதுவும் நகர சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் மக்களுக்காக வெட்டிக்கிழிக்க..??!

கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க கொலை கொள்ளைக் கும்பல்கள் கூட்டு வைக்கின்றனவே தவிர.. இதனால் மக்களுக்கு நன்மை என்பது இலவு காத்த கிளியின் கதை தான். tw_blush:

முதல்மைச்சர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது அவ்ருக்குத்தான் தெரியும்.பத்திரிகைகள் தங்களது இஸ்டத்திற்க்கு தலைப்பை போடுகிறார்கள்.

டக்கிள‌சின் கட்சிக்கு அந்த மக்கள் வாக்களித்துள்ளார்கள்,ஆகவே அவர்களுடன் கூட்டு வைப்பதில் தப்பில்லை.
டக்கிளஸ் கோஸ்டி செய்தவற்றை யாரும் மறக்கமுடியாது ஆனால் மன்னிக்கலாம்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயயாட்சி என்ற கொள்கையில்  சிங்கன் உடும்புபிடியா இருப்பார் இனி.
சிங்களவ்ருடன் ஐக்கியமாக இருந்து ஒன்ன்றும் கிடைக்கப்போவதில்லை என்பதை முஸ்லிம் கலவரங்கள் மூலம் நன்றாகவே உணர்ந்துள்ளோம் இருந்தும் வேறு வழியின்றி தாயக மக்கள் அவர்களுடன் தான் வாழவேண்டிய நிலை.

18 hours ago, satan said:

த. தே. கூட்டமைப்பின் வங்குரோத்து தன்மையை காட்டுகிறது. ஈ.பி. டி. பியுடன் கூட்டு வைப்பதன் மூலம் அவர்களை விட கூட்டு வைக்கும்  இவர்கள் இழிந்தவர்களே.

சுதந்திரன் பத்திரிகையில் விளக்கம் கொடுப்பினம் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வைரவன் said:

இதே விக்கியர்
இந்திய இராணுவ காலத்தில்
பலரை படுகொலை செய்த
தமிழ் பெண்களை பலாத்தகாரம்
செய்த
இந்திய இராணுவத்துக்கு
கூட்டிக் கொடுத்த
சேர்ந்து கொள்ளையடித்த
மண்டையன் குழு தலைவர்
பிரேமசந்திரன்
த.தே. கூ. அமைப்பின்
சார்பில் ஏன்
தேர்தலில் நின்றவர்
தானே?
(தலைவரும் இப்படி பட்டவரை
மன்னித்ததும் விட்டவர்)

கிழக்கில் ராசிக் குழு
இயங்கும் காலம்
முழுதும் சுரேஸ் சின்
கிழக்கு
அலுவலகம் அங்கும்
இயங்கியது
என்பதை முன்னால்  
நீதியரசர் அறிவார் தானே?

முதலில்
முதியவர் விக்கியர்  
வடக்கு மாகாணசபையை
செயல் திறன் அற்ற சபையாக
மாற்றி விட்டார்  
இப்ப
உள்ளூராட்சி சபைகளையும்
ஆக்குகின்றார்

 

2009 வரை இலங்கை இராணுவத்திற்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடித்த புளட்டிற்கு சம்பந்தன் மன்னிப்பு வழங்கியவர் தானே!

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

2009 வரை இலங்கை இராணுவத்திற்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடித்த புளட்டிற்கு சம்பந்தன் மன்னிப்பு வழங்கியவர் தானே!

 

அங்கதான் தமிழன் கொடி கட்டி பறக்கிறான் .....எல்லாத்தையும் மறந்து மன்னித்துவிடுவான்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

2009 வரை இலங்கை இராணுவத்திற்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடித்த புளட்டிற்கு சம்பந்தன் மன்னிப்பு வழங்கியவர் தானே!

 

இந்திய இராணுவ காலத்தில்
பலரை படுகொலை செய்த
தமிழ் பெண்களை பலாத்தகாரம்
செய்த
இந்திய இராணுவத்துக்கு
கூட்டிக் கொடுத்த
சேர்ந்து கொள்ளையடித்த
ராசிக் குழுவின் செல்ல பிள்ளை
மண்டையன் குழு தலைவர்
பிரேமசந்திரனை
எங்கள் தேசியத் தலைவர்
பிரபாகரனே
ஆயுதங்களுக்கு ஒய்வு
கொடுக்கும் காலம் வர
முதலே
கைலாகு கொடுத்து
மன்னிக்கும்
போது சம்பந்தன்
ஆயுதங்களுக்கு ஓய்வு
கொடுத்த காலத்தின் பின்
டக்கியை மன்னிப்பது
சரிதானே

இருவரும் காலத்துக்கு
ஏற்று
எது சரிவருமோ
அதை செய்தனர்

ஆனால் விக்கியர்
2009 வரை இலங்கை இராணுவத்திற்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடித்த புளட்டிற்கு
மன்னிப்பு கொடுக்கும் போதும்
மண்டையன் குழு தலைவரின்
கட்சி கூட்டமைப்பில்
இருக்கும் போதும்
பம்மிக் கொண்டு
இருந்து விட்டு
இப்ப ஈபிடிபி யுடன்
ததேகூ இணைந்து விட்டது
என முதலை
கண்ணீர் வடிக்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

இந்திய இராணுவ காலத்தில்
பலரை படுகொலை செய்த
தமிழ் பெண்களை பலாத்தகாரம்
செய்த
இந்திய இராணுவத்துக்கு
கூட்டிக் கொடுத்த
சேர்ந்து கொள்ளையடித்த
ராசிக் குழுவின் செல்ல பிள்ளை
மண்டையன் குழு தலைவர்
பிரேமசந்திரனை
எங்கள் தேசியத் தலைவர்
பிரபாகரனே
ஆயுதங்களுக்கு ஒய்வு
கொடுக்கும் காலம் வர
முதலே
கைலாகு கொடுத்து
மன்னிக்கும்
போது சம்பந்தன்
ஆயுதங்களுக்கு ஓய்வு
கொடுத்த காலத்தின் பின்
டக்கியை மன்னிப்பது
சரிதானே

இருவரும் காலத்துக்கு
ஏற்று
எது சரிவருமோ
அதை செய்தனர்

ஆனால் விக்கியர்
2009 வரை இலங்கை இராணுவத்திற்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடித்த புளட்டிற்கு
மன்னிப்பு கொடுக்கும் போதும்
மண்டையன் குழு தலைவரின்
கட்சி கூட்டமைப்பில்
இருக்கும் போதும்
பம்மிக் கொண்டு
இருந்து விட்டு
இப்ப ஈபிடிபி யுடன்
ததேகூ இணைந்து விட்டது
என முதலை
கண்ணீர் வடிக்கின்றார் 

புலிகள் இருந்த போது EPRLF தமிழ் மக்களிடம் பகிரங்க பொது மன்னிப்பை கேட்ட பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்தது, 

புளட் எனக்கு தெரிந்த வரை அப்படி செய்யவில்லை, அத்துடன் புளட்டும் விக்கியரும் ஒரே நேரத்தில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்தனர். 

EPDP யின் இவரது புகழ் பாடலை கேளுங்கள்

ஏற்கனவே புலிகளால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டிருந்த EPRLF யை விக்கியர் ஏன் குறை கூற வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/03/2018 at 12:46 PM, putthan said:

நல்லது நடக்கட்டும்....சில சமயங்களில் இது ஒரு நல்ல செயலாகவும் இருக்ககூடும்

நானும்  இப்படி  நினைப்பதுண்டு

ஏமாற்றங்களும்  

கானல்  நீருமே  கண்ட  மிச்சம்

டக்கி மாமா

ஒரு  பெரும்   பணம்  படைத்த வியாபாரி

அவர்   கூட்டமைப்பை  விழுங்கி விடுவார்

(அரசு ஆளுக்கு  2 கோடி     கொடுத்தால் டக்கி மாமா ஆளுக்கு  20 கோடி  கொடுப்பார்

கூட்டமைப்பினர் வாலாட்டித்திரிவர்)

அத்துடன்  எல்லாவற்றிற்கும்  சுபம்

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

புலிகள் இருந்த போது EPRLF தமிழ் மக்களிடம் பகிரங்க பொது மன்னிப்பை கேட்ட பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்தது, 

புளட் எனக்கு தெரிந்த வரை அப்படி செய்யவில்லை, அத்துடன் புளட்டும் விக்கியரும் ஒரே நேரத்தில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்தனர். 

 


புளொட் இணைந்தது
விக்கியர் இணைய முன்
இரண்டு நாட்களுக்கு முதலா
அல்லது பிறகா என்பது அல்ல
விடயம்.
விக்கியர் புளொட்
கூட்டாக இருக்கும் போது
இருப்பவர்

அவர்கள்
2009 இற்கு முன்
செய்தவை பற்றி
அவருக்கு ஒரு
கேள்வியும் இல்லை
அது பற்றி
கோபமும் இல்லை

ஆனால் டக்கியின்
ஆதரவு ததேகூ இற்கு
என்பதுதான் பிரச்சனை
(கவனிக்க: ஆதரவு மட்டுமே
புளொட் மாதிரி
இணைவு அல்ல)
அதுக்கு மட்டும்
எதிராக அறிக்கை
அரசியல்
உண்ட வீட்டுக்கு
இரண்டகம்

ஏனென்றால்
பச்சோந்தி அரசியல்
செய்பவர் விக்கியர்

தமிழ் தேசியவாதியாக
வேடம் போட்டு
தன் கையாலாகாத
தன்மையை மூடி
மறைக்க முற்படுவர்

இன்னொரு விஷயம்

ஈபிஆர்எல் எப் உம்
ரெலோவும்
மக்களிடம் பகிரங்க
மன்னிப்பு கேட்டதாக
எந்த பதிவும் இல்லை
சான்றும் இல்லை


அம்புட்டுதான்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வைரவன் said:


புளொட் இணைந்தது
விக்கியர் இணைய முன்
இரண்டு நாட்களுக்கு முதலா
அல்லது பிறகா என்பது அல்ல
விடயம்.
விக்கியர் புளொட்
கூட்டாக இருக்கும் போது
இருப்பவர்

அவர்கள்
2009 இற்கு முன்
செய்தவை பற்றி
அவருக்கு ஒரு
கேள்வியும் இல்லை
அது பற்றி
கோபமும் இல்லை

ஆனால் டக்கியின்
ஆதரவு ததேகூ இற்கு
என்பதுதான் பிரச்சனை
(கவனிக்க: ஆதரவு மட்டுமே
புளொட் மாதிரி
இணைவு அல்ல)
அதுக்கு மட்டும்
எதிராக அறிக்கை
அரசியல்
உண்ட வீட்டுக்கு
இரண்டகம்

ஏனென்றால்
பச்சோந்தி அரசியல்
செய்பவர் விக்கியர்

தமிழ் தேசியவாதியாக
வேடம் போட்டு
தன் கையாலாகாத
தன்மையை மூடி
மறைக்க முற்படுவர்

இன்னொரு விஷயம்

ஈபிஆர்எல் எப் உம்
ரெலோவும்
மக்களிடம் பகிரங்க
மன்னிப்பு கேட்டதாக
எந்த பதிவும் இல்லை
சான்றும் இல்லை


அம்புட்டுதான்

 

EPRLF மன்னிப்பு இதில் இருக்கிறது

http://thesamnet.co.uk/?p=22106

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2018 at 11:56 PM, vanangaamudi said:

ஓநாய்களை ஆட்டு மந்தைக்குள் கொண்டு வந்தால் என்ன நடக்கும் - பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் நினைச்சதை அப்படியே எழுதி விட்டீர்கள்.நரிகூட்டமும்   ஒநாய்க்கூட்டமும் ஒன்று சேர்ந்து விட்டது மொத்தமாய் முழு மந்தையையும் அழிக்கப்போகுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.