Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்?

Featured Replies

எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்?

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன.

கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்.

இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

சுய இன்பத்தில் ஈடுபடாமல் விட்டு 13 மாதம் சாதனை படைத்துள்ளேன். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் என் வாழ்வு இதை விட சிறப்பாக இருந்ததில்லை.

சுய இன்பத்தில் ஈடுபடாமல் இருப்பதால் எனக்கு வியப்பூட்டும் அளவிற்கு நல்லது நடந்துள்ளது. என்னுடைய இருபதாவது வயதில் இப்பழக்கத்தை நான் சில வாரங்கள் விட்டுள்ளேன், சில நேரங்களில் சில மாதங்கள் இருந்துள்ளேன். நான் மட்டும் தனியே இல்லை. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் (பெரும்பாலும், ஆனால் ஆண்கள் மட்டும் அல்ல) "நோஃபேப்" என்ற இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். இந்த இயக்கம் மக்களை சுய இன்பம் மற்றும் ஆபாச படங்கள் பார்ப்பதில் இருந்து விடுபட ஊக்கப்படுத்தும் இயக்கமாகும்.

ஆபாசப்படங்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நான் 19 வயது முதற்கொண்டே யோசிக்கத் தொடங்கிவிட்டேன். என் தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களைப்போல் தேவைப்படும்போதெல்லாம் ஆபாசப்படங்களை பார்க்க முடியும் என்ற நிலையில் நான் வளர்ந்தேன். எனக்கு 14 வயதாகும் போது நான் இன்டர்நெட்டில் 'லிங்கரி' என்ற சொல்லைத் தேடியது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து தான் ஆபாசப் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் பதின்ம வயதின் பிற்பகுதியில், நான் என் அறையில் தனியாக இருந்ததாலேயே நான் ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நான் இதற்கு அடிமையாகிவிட்டேனோ என்று அஞ்சத் தொடங்கினேன். நான் ஏதோ இழந்துவருவதைப் போல உணர்ந்தேன். வாழ்வில் பெண்களை சந்திக்க முடியாதவன், இன்டர்நெட் துணையுடன் சுய இன்பத்தை தனியே அனுபவிக்கும் நிலையைக் கொண்டவன் போல் உணர்ந்தேன்.

19 வயதில் நான் ஒற்றையாக கன்னி கழியாமல்தான் இருந்தேன். என்னுடைய உறவுகள் தீவிரமடையவில்லை, பாலுறவு பற்றி அதிகம் தெரியாதவனாகத்தான் இருந்தேன். வீட்டில் தங்கி சுய இன்பத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானது என்றும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும் என்றும் நினைத்தேன். பெண்களுடன் சாட் செய்ய நான் முயற்சித்த போதெல்லாம், இரவில் அது பற்றி நினைக்காமல், நிர்வாணமான பெண்களின் படங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதை அவர்கள் மட்டும் அறிந்தால் என்னை எவ்வளவு கேவலமானவனாக நினைப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடிந்தது.

என் வாழ்வில் ஆபாசப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கவலைப்பட்டு இரவெல்லாம் உறங்காமல் தவித்த நாள் உண்டு.

பண்டைய குண்டலினி முறை

என் வாழ்வில் ஆபாசப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கவலைப்பட்டு இரவெல்லாம் உறங்காமல் தவித்த நாள்கள் உண்டு. இதுபற்றி நண்பர்களிடம் பேசியதில்லை- அந்தரங்கம் பற்றி எளிதாக பகிர்ந்து கொள்ளக் கூடிய நட்பு வட்டம் அல்ல எனது நண்பர்கள் வட்டம்.

என்னுடைய 20வது பிறந்த நாளைக்குப் பின், நான் அனைத்தையும் விட்டுவிட முடிவு செய்தேன். என் தாயார், ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் புத்தக அலமாரியை புரட்டியபோதே இது தெரிந்தது. அப்போதுதான் தியானம் பற்றி அறிந்து கொண்டேன். காமத்தை விலக்குதல் மூலம் என்னுடைய சக்தியை மேம்படுத்தி,தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்று நான் கண்டுபிடித்தேன். பண்டைய குண்டலினி முறைபோன்றது தான் இந்த யோசனை. இதுபற்றி என் தாயிடம் கேட்பதற்கு மிகவும் தயங்கினேன்., ஆனால் இதுபற்றி மேலும் கண்டறிய எண்ணினேன். இப்படித்தான் இது தொடங்கியது.

காமத்தை விலக்குதல் மூலம் என்னுடைய சக்தியை மேம்படுத்தி,தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்று நான் கண்டுபிடித்தேன். பண்டைய குண்டலினி முறைபோன்றது தான் இந்த யோசனை.

முதலில், என் வாழ்நாள் முழுவதும் சுயஇன்பப் பழக்கத்தை கைவிட்டுவிடுவது என்றுதான் எண்ணினேன். ஆனால் ஒருமாதம் வரைதான் என்னால் தாக்குபிடிக்க முடிந்தது என்பது எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. எனவே நான் நடக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க விரும்பினேன்.

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நோஃபேப் இயக்கம் 90 நாள் நோன்பு பற்றி பரிந்துரைக்கிறது. இன்டர்நெட் ஆபாசப்படங்களின் தாக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து டெட் சொற்பொழிவு ஒன்றிலிருந்து கேட்டறிந்தேன். ஆபாசப்படங்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான போதைப் பொருளை எடுத்துக் கொள்வதற்கு சமமானது என்று இந்த சொற்பொழிவு கூறியது. அளவுக்கு அதிகமாக ஆபாசப்படங்களை பார்ப்பதால் இளைஞர்களுக்கு விறைப்புத் திறன் குறைந்து வருகிறது என்றும் சொன்னது. ஏராளமானோர் நோஃபேப் ஐ கடைபிடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு தங்கள் விறைப்புத் திறன் குறித்த பயம் தான். எனக்கு அந்த பயம் இல்லை என்பது வேறு விஷயம்.

மக்களின் முழுமையான ஆன்லைன் துணைக் கலாசாரம் குறித்து கண்டறிவது பெரும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. நான் எப்போதுமே நான் செய்வது சரியானதுதான் என்று எண்ணியதுண்டு, ஏராளமானோர், ஆபாசப்படங்களைப் பார்த்து ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் சுய இன்பத்தின் கேடுகளால் நான் நினைத்ததை விட கூடுதல் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்று எண்ண வைத்தது.

நோஃபேப் இயக்கம்

நோஃபேப் இயக்கம் 2011 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அலெக்சாண்டர் ரோட்ஸ் என்பவர், ஒரு விவாத இழையைத் தொடங்கினார். சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அவர் அதில் விளக்கினார். இந்த இழை வைரல் ஆனது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களானார்கள். "ஃபேப்ஸ்டிரானட்ஸ்" என்று இந்த இழையின் உறுப்பினர்கள் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆபாசம் இல்லா வாழ்க்கை குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அலெக்சாண்டர் இணையதளம் ஒன்றையும் தொடங்கினார்.

ஆபாசப்படம் பார்ப்பதால் தங்களுக்கு ஏற்பட்ட விறைப்புத் தன்மை இழப்பு குறைபாடு இந்த நோஃபேப் மூலம் சரியாகிவிட்டதாக ஏராளமானோர் நம்பத் தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையில் நோஃபேப்பிங், எனக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது, தெளிவாக இருக்க உதவுகிறது, ஊக்கமளிக்கிறது என்று உணர்கிறேன். என் காமவெறி கட்டுக்குள் இருப்பது எனக்கு தெரிவதால் நான் ஆசுவாசமடைந்துள்ளேன், பெண்களுடன் நான் நன்றாக பேசுகிறேன்.

சுய இன்பத்தில் ஈடுபடக்கூடாது என்றும் ஆபாசப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் எனக்கு நானே தடை விதித்துக் கொண்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் இதை சாதித்துள்ளேன். முதல் வாரம் எப்போதும் போல் மிகவும் கடினமாக இருந்தது. பார்க்கும் அனைத்தும் காமத்தை நினைவு படுத்தின. அழகான பெண்ணை டிவியில் பார்த்தாலோ, யூடியூபில் பார்த்தாலோ எனக்கு விறைக்கும். சில நேரங்களில் என்னை ஒரு பெண் புறக்கணித்தபோது, எனக்கு சுய இன்பம் செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்ததுண்டு.

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வேலையின் மீது கவனம்

ஒவ்வொரு முறை நான் தவறும்போதும், அதன் பின் சில நாட்களில் மிகவும் மோசமாக உணர்வேன். தோற்றுப் போனதற்காக, பலவீனமாக இருந்ததற்காக, கட்டுப்பாடு இல்லாமல் போனதற்காக என்னை நானே அடித்துக் கொண்டதுண்டு. என் மனப்போக்கு நிலைப்படுத்த சில நாட்கள் பிடிக்கும் அதன் பின் மீண்டும் நான் என் உபவாசத்தை தொடருவதுண்டு.

சமீபத்தில் நோஃபேப் நோன்பு இருந்த ஒரு வருடம் என் பணிச்சுமை காரணமாக முடிவுக்கு வந்தது. பெரிய பணி ஒன்றை நிறைவு செய்து, தளர்ந்து போய், என்னை நானே இளைப்பாறிக்கொள்ள விரும்பியதுண்டு. யாருடனும் உறவில் இல்லை. என் குடியிருப்பு தோழர்கள் அறையில் இல்லையென்றால் செய்வதறியாமல் சோபாவில் முடங்கிப் போவதுண்டு.

இவ்வளவு நாள் உபவாசம் இருப்பதால் என் வேலையின் மீது கவனம் செலுத்த முடிந்தது. இப்போதெல்லாம், நான் என் அறையில் நீண்ட நேரம் தனிமையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்க முடிகிறது, சுய இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. நோஃபேப் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது.

நான் மீண்டும் என் விரதத்தை தொடங்க உள்ளேன். என் சாதனையை மீண்டும் நானே உடைக்க எண்ணுகிறேன். இந்த முறை 18 மாதம் சுய இன்பத்தில் ஈடுபடாமல் ஆபாசப்படம் பார்க்காமல் இருக்கப் போகிறேன். என் நீண்டகால இலக்கு, சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்குத்தான்.

(லூக் சில்ட்டனிடம் தெரிவித்த கருத்துகள்).

https://www.bbc.com/tamil/science-43962188

  • கருத்துக்கள உறவுகள்

சுய இன்பம் சார்ந்த குற்றவுணர்வும், வெட்கவுணர்வும்,  அதனால் உடல் பாதிக்கப்படும் என்ற அச்சவுணர்வுமே இன்னல் பயப்பவை.. எப்போதும் அதிலேயே நாட்டம் வைத்தல் வளரும் பருவத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தி மற்ற துறைகளில் வளர்ச்சிக்கு இடையூறு ஆகலாம். எனவே வேறு விடயங்களில் மனதைச் செலுத்துதல் நல்லதே. ஆனால் அவ்வப்போது அதன்பால் ஈர்ப்பு கொள்வது இயற்கையான ஒன்றே. அளவுக்கு மிஞ்சினால்(தான்) அமிர்தமும் நஞ்சு. எனவே இதற்காக உளவியலும் உடற்கூறியலும் அறியாத அரைகுறை மருத்துவர் எவரையும் அணுக வேண்டியதில்லை.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நவீனனின் இப்பதிவு இளையோருக்கு மிகவும் தேவையான விடயம் என்பதைக் கூற மறந்து விட்டேன். அதே சமயம் காமத்தை விலக்கி சக்தியை மேம்படுத்துதல் என்பது நவீன (!) மருத்துவமும் உளவியலும் ஏற்றுக் கொள்ளாதது என்பதைக் கூற விழைகிறேன். காமத்தை சிற்றின்பம் எனக் கொண்டோர் அதனை ஏற்கலாம். சிற்றின்பம் என பக்தி இலக்கியங்கள் சுட்டுவது கூட வைதீக மரபுகளை உள்வாங்கியதன் விளைவே.

"மலரினும் மெல்லிது காமம் சிலர்தன்

செவ்வி தலைப்படு வார்" 

எனும் வள்ளுவத்தின் வழி பேரின்பம் என்பதே தமிழர் மாண்பு. சங்க கால மரபும் அதுவே.  ( இந்த அளவு போற்றியது காமத்தை. சுய இன்பத்தை அல்ல, தோழர் ! )

 

Edited by சுப.சோமசுந்தரம்

https://www.nofap.com

இந்த இணையத்தளம் தான் அதில் குறிப்பிடப்படும் தளம்.

அதனோடிணைந்த கருத்துகளமும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2018 at 12:29 PM, சுப.சோமசுந்தரம் said:

சுய இன்பம் சார்ந்த குற்றவுணர்வும், வெட்கவுணர்வும்,  அதனால் உடல் பாதிக்கப்படும் என்ற அச்சவுணர்வுமே இன்னல் பயப்பவை.. எப்போதும் அதிலேயே நாட்டம் வைத்தல் வளரும் பருவத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தி மற்ற துறைகளில் வளர்ச்சிக்கு இடையூறு ஆகலாம். எனவே வேறு விடயங்களில் மனதைச் செலுத்துதல் நல்லதே. ஆனால் அவ்வப்போது அதன்பால் ஈர்ப்பு கொள்வது இயற்கையான ஒன்றே. அளவுக்கு மிஞ்சினால்(தான்) அமிர்தமும் நஞ்சு. எனவே இதற்காக உளவியலும் உடற்கூறியலும் அறியாத அரைகுறை மருத்துவர் எவரையும் அணுக வேண்டியதில்லை.

à®à¯à®²à®®à¯ à®à®¿à®µà®°à®¾à®à¯ à®à®¿à®µà®à¯à®®à®¾à®°à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®°à¯ 

சுய இன்பத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
கடந்த 11 தலைமுறையாக...  "சிட்டுக் குருவி லேகியம்"  விற்கும்....
டாக்டர் காளிமுத்து, சேலம் டாக்டர்  சிவராஜ் எல்லாரும்  தமிழ்நாடு முழுக்க,  சூறாவளி  பயணம் செய்து,
தங்கள் மருத்துவ  கண்டு பிடிப்புகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதை.... தவறென்று சொல்லப் படாது.  ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/9/2018 at 7:59 PM, தமிழ் சிறி said:

à®à¯à®²à®®à¯ à®à®¿à®µà®°à®¾à®à¯ à®à®¿à®µà®à¯à®®à®¾à®°à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®°à¯ 

சுய இன்பத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
கடந்த 11 தலைமுறையாக...  "சிட்டுக் குருவி லேகியம்"  விற்கும்....
டாக்டர் காளிமுத்து, சேலம் டாக்டர்  சிவராஜ் எல்லாரும்  தமிழ்நாடு முழுக்க,  சூறாவளி  பயணம் செய்து,
தங்கள் மருத்துவ  கண்டு பிடிப்புகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதை.... தவறென்று சொல்லப் படாது.  ?

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

சுய இன்பம் தவறென்றால், உடலுறவும் தவறுதானே?!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவிதமான இன்பங்களும் கூடாததே.

கையைவிட்டுடுங்கோ.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

அது எப்புடி....  சுய இன்பத்துக்கு, ஒரு  கை  போதும்.
ஓரினச்  சேர்க்கைக்கு, நாலு கை  வேணும். அவ்.... 

(இந்தக் கருத்தை, நிர்வாகத்தினர்  ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும், பதில் சொல்ல வேண்டியது எனது கடமை.) 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2018 at 3:38 AM, குமாரசாமி said:

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

பிறந்தோ வளர்ந்தோ கொஞ்ச‌காலமே
அனுபவித்துவிடு உடல் தரும் சுகங்களை

இப்படி சுருக்கமாக மற்றவர்களுக்கு புரியாத படி எழுதினால் அது தான் 
கு.சா குறள் அடுத்த சந்ததி படிக்கும்tw_tounge:

  • 5 months later...
On 5/11/2018 at 10:46 PM, தமிழ் சிறி said:

அது எப்புடி....  சுய இன்பத்துக்கு, ஒரு  கை  போதும்.
ஓரினச்  சேர்க்கைக்கு, நாலு கை  வேணும். அவ்.... 

(இந்தக் கருத்தை, நிர்வாகத்தினர்  ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும், பதில் சொல்ல வேண்டியது எனது கடமை.) 

ம்ம்ம். ஒரு எக்ஸ்பேர்ட்டின்  கடமை தான்!

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2018 at 7:02 PM, ஏராளன் said:

சுய இன்பம் தவறென்றால், உடலுறவும் தவறுதானே?!

திருமணமாகாதவருக்கு சுய இன்பம் தவறில்லை... 

உண்மையான காதலை உணர்ந்தால் சுய இன்ப எண்ணம் தோன்றாது...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மியாவ் said:

திருமணமாகாதவருக்கு சுய இன்பம் தவறில்லை... 

உண்மையான காதலை உணர்ந்தால் சுய இன்ப எண்ணம் தோன்றாது...

எல்லா அழிவுக்கும்  முக்கிய காரணம் 
நாம் சைவ மதத்தை மறந்து (எமது முன்னையோரை).
இந்து மதம் என்ற சாக்கடையினுள் வீழ்ந்ததுதான்.
இந்துமதம் முழுதும் புராணத்தால் ஆனது 

சைவ மதம் சிவம் சக்தி எனும் இரு புள்ளிகளை உணர்வது.

சுய இன்பம் என்பது உண்மையிலேயே கேடானது 
இதை எமது மூதையோர் ஆழமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் 
ஆண்மையை கெடுக்கும். ஆண்சக்தி எனும் டெஸ்டரோனை அழித்து 
ஒரு சோம்பேறி மனநிலையை உருவாக்கும்.

காமசூத்த்ரா வர முன்னரே காமத்தை பல கோணமாக பிரித்து 
மேய்ந்து எழுதியவர்கள் தமிழ் முனிவர்கள். 
ஒருவர் 18 மணித்தியாலம் வரை உடலுறவு வைத்து காட்டியும் இருக்கிறார் 
18 மணித்தியாலம் உடலுறவு வைப்பது என்பது ... அந்த 18 மணிநேரமும் பெண்ணையும் 
ஒரு இன்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் அப்படி பல சூத்திரம் அறிந்தவர்கள்.
முற்றும் வெறும் சுவாச பயிற்சியால் சாதித்தவர்கள். 

சைவம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மார்க்கம் 
எமது நாயனார்கள் காலத்து முன்புதான் உண்மையான சைவத்தை காணமுடியும் 
பின்பு அவர்களும் வைஷ்ணவர்கள்போல் சிலை வைத்து பாடி புராணம் புனைய 
தொடங்கிவிட்டார்கள்.

இறைக்க இறைக்க ஊறும் ....
திருமணமானவர்கள் செய்வதில்லையா?
போன்ற விசர் கதை பேசி இளைஞர்களை கெடுத்துவிடார்கள் 

விந்தை கட்டி வைக்க வேண்டும் உடல் வெப்பநிலையை ஒரு 
சீராக பேணவேண்டும் குளிப்பு தயிர் வெந்தயம் போன்ற உணவுகளை உண்டு 
உடல் வெப்பம் அடையாமல் பார்க்க வேண்டும்.
எமது விதை பை எமது உடலில் இருந்து அதானல்தான் பிறிம்பாக 
தூங்கும்படி அமைந்து இருக்கிறது. விந்து ஒரு வித கட்டி நிலையில்தான் இருக்கும் 
உணர்ச்சி பொங்கி வெப்பம் போகும்போதுதான் முழு திரவ வடிவம் ஆகி வெளியேறும்.
வெளியேறா விட்டாலும் திரவ வடிவம் ஆகிய விந்து மீண்டும் திண்ம நிலை பெறாது.

ஆண்கள் ஒவ்வரு நாளும் ஓடி விளையாட வேண்டும் இல்லையேல் உடல்பயிற்சி செய்ய வேண்டும். 

ஒரு முழுமையான உடல் உறவை திருப்திகரமாக ஒரு பெண்ணுடன் 
அடைவது என்றால் புகை மது எல்லாம் கைவிடவே வேண்டும்.

எமது முன்னையோர் சுவாசத்தை பல முறைகளாக பிரித்து இருக்கிறார்கள் 
இதில் நாக சுவாசம் என்பது உடல் உறவை மேம்படுத்த இருக்கும் ஒரு சுவாச முறை. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

இறைக்க இறைக்க ஊறும் ....
திருமணமானவர்கள் செய்வதில்லையா?
போன்ற விசர் கதை பேசி இளைஞர்களை கெடுத்துவிடார்கள் 

Bildergebnis für thin man gif

"விந்து... விட்டார்,  நொந்து... கெட்டார்."  என்ற பழமொழி  உள்ளதை  நாம் மறந்து விடக்  கூடாது.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 11:08 PM, குமாரசாமி said:

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

இப்ப என்னமாதிரி ஆன்மீகம் போல நித்தியானந்தா சீடன் ஆகலாமே சாமி:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப என்னமாதிரி ஆன்மீகம் போல நித்தியானந்தா சீடன் ஆகலாமே சாமி:27_sunglasses:

தனிக்காட்டு ராஜா... இன்னும் ஏன், இங்கு  வரவில்லை என்று தேடினேன். ம்ம்ம்.... வந்து விட்டார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா... இன்னும் ஏன், இங்கு  வரவில்லை என்று தேடினேன். ம்ம்ம்.... வந்து விட்டார்.  :grin:

களவும் கற்று மற ஒன்றை தெரிந்து கொண்ட பின் மறந்திட வேணுமாம் ஆனால் இதை மறக்க முடியாது மறைக்கலாம்:)

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2018 at 11:06 PM, குமாரசாமி said:

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

எப்படி சாமி இரண்டும் ஒன்றாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நந்தன் said:

எப்படி சாமி இரண்டும் ஒன்றாகும்

நீங்கள் சம தரையில் சைக்கிள் ஓடுகின்றீர்கள். பதில்லை விளங்காது. ஓடிப்பாருங்கோ தெரியும்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 6:10 AM, குமாரசாமி said:

நீங்கள் சம தரையில் சைக்கிள் ஓடுகின்றீர்கள். பதில்லை விளங்காது. ஓடிப்பாருங்கோ தெரியும்...:grin:

இப்ப இலங்கையில் சைக்கிள் கட்சிதான்  புதிய கட்சி  எப்படித்தான் அரசியல் செய்ய போறாங்களோ தெரியல:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.